Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kongu Nattu Koilgal
Kongu Nattu Koilgal
Kongu Nattu Koilgal
Ebook167 pages34 minutes

Kongu Nattu Koilgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல நல்ல உள்ளங்களை இணைத்து 'இளைய பாரதத்தினாய் வா... வா... வா...' என்ற முழக்கத்தோடு சிறப்பாக இயங்கிவரும் 'இலக்கியச்சாரல்' என்ற அமைப்பின் தலைவர் 'உழவுக்கவிஞர்' உமையவன் கள ஆய்வின் மூலம் அரிதின் முயன்று எழுதிய 'கொங்கு நாட்டுக் கோயில்கள்' என்ற பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட வியக்க வைக்கும் நூலைப் படித்து மகிழ்ந்தேன். இது கவிஞரின் 11ஆம் நூல் என்பது சிறப்புச் செய்தியாகும்.

எல்லோராலும் நன்கு அறியப்பட்ட சிவன்மலை, சென்னிமலைக் கோயில், ஓரளவு அறியப்பட்ட அன்னூர், பண்ணாரி, குருநாத சுவாமி கோயில்களோடு மிகவும் வெளிச்சத்திற்கு வராத மல்லியம்மன், வனபத்ரகாளி, கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோயில்கள் பற்றிய செய்திகள் சேகரித்து வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.

ஒவ்வொரு தலைப்பிலும் அக்கோயிலின் மிக சிறப்பான செய்தியைத் தந்திருப்பது வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் நண்முயற்சியாகும். எடுத்துக்காட்டாக 'பறவை வடிவ', 'தாலிக்குத் தங்கம் தரும்' போன்றவைகளைக் கூறலாம்.

கோயில்களின் இருப்பிடம், தலவரலாறு, அமைப்பு, சன்னதிகள், பூசை முறை, தல விருட்சம், சிறப்புகள் இவைகள் முறைப்படி நன்கு விரிவாக விளங்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. கோயில்களில் நடைபெற்ற அற்புதங்களைக் கூறியிருப்பது அத்தலத்தின் பெருமையை விளக்குவதாக உள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு பற்றிய முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பது போற்றத்தக்கது.

பாதையற்ற துருவத்தில் வாழும் மலைமக்கள் நிலை நம் நெஞ்சை உருக்குகிறது. இந்நூல் வாயிலாக அவர்கட்கு நல்லகாலம் பிறக்கலாம்.

'கொங்கு நாட்டுக் கோயில்கள்' மிகச் சிறந்த ஆலய வழிகாட்டி நூல். இதுபோல் தொடர்ந்து பன்னூல்கள் படைத்து சமயப்பணி செய்ய உமையவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்புடன்

செ. இராசு.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580131905265
Kongu Nattu Koilgal

Read more from Umayavan

Related to Kongu Nattu Koilgal

Related ebooks

Reviews for Kongu Nattu Koilgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kongu Nattu Koilgal - Umayavan

    http://www.pustaka.co.in

    கொங்கு நாட்டுக் கோயில்கள்

    Kongu Naattu Koilgal

    Author:

    உழவுக்கவிஞர் உமையவன்

    Uzavu Kavingar Umayavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/umayavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    காணிக்கை

    அணிந்துரை

    என்னுரை

    1. பறவை வடிவ சுயம்புலிங்கம்

    2. திருமணத் தடை நீக்கும் தெய்வீகத திருத்தலம்

    3. அருணகிரி பாடல் பெற்ற வேல் வடிவ சிவன்மலை

    4. கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை

    5. தீவினை அகற்றும் குருநாதசுவாமி திருக்கோயில்

    6. வனங்கள் சூழ் வன பத்ரகாளியம்மன் திருக்கோயில்

    7. வனங்களின் காவல் தெய்வம் பண்ணாரி மாரியம்மன்

    8. தாலிக்கு தங்கம் தந்த மல்லியம்மன்

    துணை நூற்பட்டியல்

    ஆசிரியர் குறிப்பு

    *****

    காணிக்கை

    என் நண்பனாக, காதலனாக, தோழனாக,

    நலம்விரும்பியாக உற்ற துணையாக,

    என் நெஞ்சிற்கினிய இறைவனாக,

    எல்லாமுமாக ஒவ்வொரு கணமும்

    என் சிந்தையில் வாழும்

    அருள்மிகு மன்னீஸ்வரர் சுவாமிக்கு

    இந்நூலை பக்திப் பெருக்கோடும்,

    பாசத்தோடும் காணிக்கையாக்கி

    அகமகிழ்கிறேன்.

    *****

    அணிந்துரை

    புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,

    'புலவர் பூங்குடில்'

    58/2, பாலக்காட்டுத் தோட்டம்,

    புதிய ஆசிரியர் குடியிருப்புப் பாதை,

    ஈரோடு - 638 011.

    0424 – 2262664

    97900 38380

    95009 38384

    முன்னாள் தலைவர்

    கல்வெட்டு - தொல்லியல் துறை,

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    அமைப்பாளர்,

    கொங்கு ஆய்வு மையம்,

    ஈரோடு - 638 011.

    முன்னாள் தலைவர்

    தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

    பல நல்ல உள்ளங்களை இணைத்து 'இளைய பாரதத்தினாய் வா... வா... வா...' என்ற முழக்கத்தோடு சிறப்பாக இயங்கிவரும் 'இலக்கியச்சாரல்' என்ற அமைப்பின் தலைவர் 'உழவுக்கவிஞர்' உமையவன் கள ஆய்வின் மூலம் அரிதின் முயன்று எழுதிய 'கொங்கு நாட்டுக் கோயில்கள்' என்ற பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட வியக்க வைக்கும் நூலைப் படித்து மகிழ்ந்தேன். இது கவிஞரின் 11ஆம் நூல் என்பது சிறப்புச் செய்தியாகும்.

    எல்லோராலும் நன்கு அறியப்பட்ட சிவன்மலை, சென்னிமலைக் கோயில், ஓரளவு அறியப்பட்ட அன்னூர், பண்ணாரி, குருநாத சுவாமி கோயில்களோடு மிகவும் வெளிச்சத்திற்கு வராத மல்லியம்மன், வனபத்ரகாளி, கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோயில்கள் பற்றிய செய்திகள் சேகரித்து வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.

    ஒவ்வொரு தலைப்பிலும் அக்கோயிலின் மிக சிறப்பான செய்தியைத் தந்திருப்பது வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் நண்முயற்சியாகும். எடுத்துக்காட்டாக 'பறவை வடிவ', 'தாலிக்குத் தங்கம் தரும்' போன்றவைகளைக் கூறலாம்.

    கோயில்களின் இருப்பிடம், தலவரலாறு, அமைப்பு, சன்னதிகள், பூசை முறை, தல விருட்சம், சிறப்புகள் இவைகள் முறைப்படி நன்கு விரிவாக விளங்கப்பட்டிருப்பது பாராட்டுக்கு உரியது. கோயில்களில் நடைபெற்ற அற்புதங்களைக் கூறியிருப்பது அத்தலத்தின் பெருமையை விளக்குவதாக உள்ளது. இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு பற்றிய முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருப்பது போற்றத்தக்கது.

    பாதையற்ற துருவத்தில் வாழும் மலைமக்கள் நிலை நம் நெஞ்சை உருக்குகிறது. இந்நூல் வாயிலாக அவர்கட்கு நல்லகாலம் பிறக்கலாம்.

    'கொங்கு நாட்டுக் கோயில்கள்' மிகச் சிறந்த ஆலய வழிகாட்டி நூல். இதுபோல் தொடர்ந்து பன்னூல்கள் படைத்து சமயப்பணி செய்ய உமையவன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

    அன்புடன்,

    செ. இராசு.

    *****

    என்னுரை

    சொற்கள் மீட்டும் இறை இசை

    கொங்குநாடு வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட தமிழ்நாட்டின் மேலைப்பகுதி. இந்த கொங்குநாடு தமிழகத்திற்கு எண்ணற்ற தகமைசால் அறிஞர்களை ஈன்றளித்துள்ளது.

    இப்பகுதி மக்களால் அன்பு சொட்டச் சொட்ட பேசப்படும் கொங்குத்தமிழ் உலகம் போற்றும் உன்னத வட்டார மொழியாக உள்ளது. தமிழகத்தில் பேசப்படும் பல வட்டார மொழிகளில் மரியாதை கலந்த ஒரு மொழி என்றால் அதில் கொங்கு தமிழுக்கே முதலிடம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கொங்கு நாட்டில் பல நூற்றுக்கணக்கான வரலாற்று புகழ்மிக்க திருத்தலங்கள் அமைந்துள்ளன. அதில் எட்டு கோயில்களின் வரலாற்றை மட்டும் கொங்கு நாட்டுக் கோயில்கள் என்று இந்நூலில் யாத்துள்ளேன். நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்ற, பக்தியால் மயங்குகின்ற அளவு ஒவ்வொரு கோயிலும் சீர்பெறும் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் தன்னகத்தே கொண்டு வரலாற்றின் உறைவிடமாக திகழுகின்றன.

    கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, ஒரு நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை, பழக்க வழக்கத்தை, நனி நாகரிகத்தை, இலக்கியச் சிறப்பை, பழமையின் உன்னதத்தை கல்மேல்பட்ட எழுத்து போல் எக்காலத்திலும் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கும் வரலாற்றுப் பொக்கிசமாக விளங்குகின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1