Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vendiyana Arulum Thiruthalangal
Vendiyana Arulum Thiruthalangal
Vendiyana Arulum Thiruthalangal
Ebook140 pages49 minutes

Vendiyana Arulum Thiruthalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணங்கள் நமக்கு பலவித அனுபவங்களைத் தருகின்றன. எனவேதான் முன்னோர்கள் கோயில்கள் இருக்கும் இடங்களைத் தேடிச் சென்றனர்.

ஒவ்வொரு தலங்களுக்குச் செல்லும்போது அந்த ஊரின் அருமை, பெருமைகள், இறைவன் நடத்திய திருவிளையாடல்கள், அந்தந்த இடங்களில் விளையும் மரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

சமயக் குரவர்களாகிய நால்வரால் பாடப்பட்ட தலங்களே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் எனப்படும். இவற்றிலிருந்து சில கோயில்களும், பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடுகள் எனப் புகழ்பெற்ற தலங்களைச் சேகரித்து தந்திருக்கிறேன். எனவே படித்து பயன்பெறலாம் வாருங்கள் வேண்டிய அருளும் திருத்தலங்களுக்குச் செல்லலாமா...

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580145407374
Vendiyana Arulum Thiruthalangal

Related to Vendiyana Arulum Thiruthalangal

Related ebooks

Reviews for Vendiyana Arulum Thiruthalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vendiyana Arulum Thiruthalangal - Ambai Sivan

    https://www.pustaka.co.in

    வேண்டியன அருளும் திருத்தலங்கள்

    Vendiyana Arulum Thiruthalangal

    Author:

    அம்பை சிவன்

    Ambai Sivan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ambai-sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    நூலாசிரியர் குறிப்பு

    1. பக்தர்களை சொக்கவைக்கும் சொக்கநாதர்

    2. மாசுகளை அறுக்கும் மாற்றுரைவரதீஸ்வரர்

    3. வெற்றி அருளும் வேலவன்

    4. அன்பர்களின் அல்லல்களையும் அகத்தியர்!

    5. பாவங்களைப் போக்கும் பள்ளிகொண்டீஸ்வரர்

    6. பார்த்தனுக்கு அருளிய பார்த்தசாரதி

    7. தீராத பிரச்சினைகளைத் தீர்க்கும் திருஆவினன்குடி பெருமான்

    8. கோபம் தணிந்த குமரன்

    9. என்றும் 16

    10. திண்ணனை கண்ணப்பனாக்கிய காளத்திநாதர்!

    11. அகப்பற்றை அறுத்த ஆறுமுகன்!

    12. குன்று தோறாடும் குமரன்

    13. கர்ப்பத்தைக் காக்கும் கர்ப்பிணி அம்மன்

    14. மன நிம்மதி பெற வாருங்கள் தென்காசிக்கு!

    15. அண்ணாமலைக்கு அரோகரா!

    16. தீவினைகளை வேரறுக்கும் திருவரங்க நாதர்!

    17. சர்வ மங்களங்களையும் அருளும் காட்சி காமாட்சி!

    18. விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகன்!

    19. சங்கடங்களை நீக்கும் சங்கரநாராயணர்!

    20. நெல்லையைக் காக்கும் நெல்லையப்பர்!

    21. வேற்காட்டை ஆளும் வேதபுரீஸ்வரர்!

    22. கருவைக் காக்கும் கர்ப்பரட்சாம்பிகை!

    23. தில்லையில் கிடைத்த தேவாரம்!

    24. தந்தைக்கு உண்மைப் பொருளை உணர்த்திய தனயன்!

    25. சிலந்தி நிர்மாணித்த திருவானைக்காவல்

    26. ராமர் வழிபட்ட ராமேஸ்வரம்

    27. கல்யாண வரமருளும் கல்யாண சுந்தரேஸ்வரர்!

    28. அன்பர்களின் அல்லலை நீக்கும் அனுமன்!

    29. ஆணும் பெண்ணும் சமமென்பதை உணர்த்திய அர்த்த நாரீஸ்வரர்

    30. சங்கடங்களை அகற்றும் சதுரங்கவல்லப நாதர்

    31. சைலப்பர் சடையப்பரான வரலாறு

    அணிந்துரை

    ஆன்மிகம் பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் திகழ்கிறது. எல்லா அம்சங்களையும் ஆன்மிகம் வழிநடத்துகிறது. ஒவ்வொரு

    செயல்பாட்டிலும் ஆன்மிகம் இரண்டறக் கலந்துள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசுபாடு போன்றவை உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நம் முன்னோர் செம்மையான தீர்வு நல்கியுள்ளனர்.

    தல விருட்சம் என்பதை மரங்களை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மகத்தான செயல் திட்டம் என்று புரிந்துகொள்வது சாலச் சிறந்தது. வேப்ப மரம், புன்னை

    மரம் போன்ற விருட்சங்கள் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

    நீர்மட்டம் குறையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடே திருக்குளங்கள் எனலாம். தெப்பத் திருவிழாக்கள் நீரின் மாட்சியைப்

    பறைசாற்றுகின்றன என்பது மிகையான எண்ணமன்று.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதையே ஆலய விழாக்கள் வெகு நேர்த்தியாக எடுத்து வைக்கின்றன. தேர் ஊர்வலத்தில் அல்லது சப்பர பவனியில்

    பங்கேற்பது சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

    தென் மாவட்டங்களில் நடைபெறும் கொடை விழா, உறவை வலுப்படுத்தும் நல் விழாவாக விளங்குகிறது. கொடையின்போது மற்ற ஊர்களில் உள்ள

    உறவினர்கள் வந்து குவிவது வழக்கம். வெளியூர்களுக்கு வெவ்வேறு அலுவல்களின் பொருட்டு சென்றவர்கள் எல்லாம் ஒன்றுகூடி மகிழும் ஒப்பற்ற விழாவாக கொடை பிரகாசிக்கிறது.

    சைவத் திருத்தலங்களும், வைணவத் திருத்தலங்களும் இலக்கியம் வளர்த்துள்ளன. வேளாண்மையும், பசிப்பிணி அகற்றுதலும் ஆன்மிகம் சார்ந்த நல்லம்சங்களே.

    ஆன்மிகம், ஆலயம், கூட்டுச்செயல்பாடு போன்றவற்றை அகவயப்படுத்திக் கொள்வதுடன் அவற்ரைப் பிரயோகித்து அகிலத்தை செம்மைப்படுத்த முயலவேண்டும் என உறுதியேற்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உண்டு.

    இதை நிறைவேற்றும் வகையில், சொல்லும் செயலும் இதமாகவே இருக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இயங்கி வரும் இனிய நண்பர் அம்பை சிவன், வேண்டியன அருளும் திருத்தலங்கள் என்ற தலைப்பில் இந்நூலைப் படைத்துள்ளார்.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தோவியங்கள் பண்பார்ந்த பரவசத்தைப் பரிமாறுகின்றன. கெழுதகை நண்பர் அம்பை சிவனின் இம்முயற்சி மட்டுமல்லாமல், எதிர்கால முயற்சிகளும் வாகை சூட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    ஆர்.பி.முருகேசன்,

    மூத்த பத்திரிகையாளர்,

    சென்னை-600 005.

    முன்னுரை

    பயணங்கள் நமக்கு பலவித அனுபவங்களைத் தருகின்றன. எனவேதான் முன்னோர்கள் கோயில்கள் இருக்கும் இடங்களைத் தேடிச் சென்றனர்.

    ஒவ்வொரு தலங்களுக்குச் செல்லும்போது அந்த ஊரின் அருமை, பெருமைகள், இறைவன் நடத்திய திருவிளையாடல்கள், அந்தந்த இடங்களில் விளையும்

    மரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

    சமயக் குரவர்களாகிய நால்வரால் பாடப்பட்ட தலங்களே தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் எனப்படும். இவற்றிலிருந்து சில கோயில்களும், பஞ்சபூத தலங்கள்,

    அறுபடை வீடுகள் எனப் புகழ்பெற்ற தலங்களைச் சேகரித்து தந்திருக்கிறேன்.

    வேண்டியன அருளும் திருத்தலங்கள் எனும் இந்நூலை எழுத ஊக்குவித்து, அணிந்துரை தந்தும் உதவிய மூத்த பத்திரிகையாளரும், எனது வளர்ச்சியில்

    அக்கறை கொண்டவருமான ஆர்.பி.முருகேசன் அவர்களுக்கு என்றென்றும் நன்றி உரித்தாகுக.

    தமிழக மக்கள் சக்தி மாத இதழில் இந்தத் தொடர் எழுத அனுமதித்த ஆசிரியர் பூவண்ணன் அவர்களுக்கு நன்றி.

    இந்தப் புத்தகத்தை இ புத்தகமாக வெளியிடும் ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    என்னை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும் எனது மனைவி ஆனந்தவல்லி, அன்புச் செல்வங்கள் ஸ்நேஹா, சீனிவாசன் ஆகியோருக்கு இந்நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க உலகெலாம்

    அம்பை சிவன்,

    9941679475

    எஸ்-4, சீனிவாசா பிளாட்ஸ்

    25, கொத்தவால் சாவடி தெரு,

    மேற்கு சைதாப்பேட்டை,

    சென்னை - 600 015.

    நூலாசிரியர் குறிப்பு

    நூலாசிரியர் பரமசிவன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எம்.ஏ. தமிழ் படித்து முடித்துள்ளார்.

    இவரது தந்தை அம்பை சங்கரன், தமிழ் வித்வான். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் பள்ளியில் தலைமை தமிழாசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

    தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழக புலவர் குழுவிலும் இடம்பெற்றவர். 15க்கு மேற்பட்ட நூல்களை எழுதியும், 10க்கு மேற்பட்ட நூல்களுக்கு உரை எழுதியும், பல்வேறு நூல்களை தொகுத்தும் பதிப்பித்தும் உள்ளார்.

    நூலாசிரியரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அருகிலுள்ள அம்பாசமுத்திரம். ஊரின் மீதுள்ள பற்று காரணமாக அம்பை சிவன் எனும் பெயரில் எழுதி வருகிறார்.

    1995--ம் ஆண்டு காந்தளகம் பதிப்பகத்தில் பணிபுரிய தொடங்கினார். தொடர்ந்து மும்பை தமிழ் டைம்ஸ் நாளிதழ் ஆரம்பித்து விஜயபாரதம், தமிழக மக்கள் சக்தி,

    தினகரன், தினமலர் என பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் என 20 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார்.

    இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே, அறுபத்து மூவர் என்ற நூலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    1. பக்தர்களை சொக்கவைக்கும் சொக்கநாதர்

    -------

    மூலவர் - சுந்தரேஸ்வரர்

    அம்மன் - மீனாட்சி அம்மன், அங்கயற்கண்ணி

    தல விருட்சம் - கடம்ப மரம்

    தீர்த்தம் - பொற்றாமரைக் குளம், வைகை

    ஊர் - மதுரை

    தாருகா வனத்தில் பல முனிவர்கள் தங்கள் பத்தினியருடன் வசித்து வந்தனர். அந்தப் பெண்களுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1