Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர்
Ebook62 pages37 minutes

அருணகிரிநாதர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேவாரமும், ப்ரபந்தமும் பக்திக்கும், பண்ணுக்கும் முதன்மை கொடுத்து இயற்றப்பட்டவை. ஆயின் திருப்புகழ் பக்தி, பண், சந்தம் (தாளம்) என மூன்றையும் இணைத்துக் தொகுக்கப்பட்டவை. பல்வேறு தாளக்கட்டுகளுடன் கூடிய சந்தப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ‘திருப்புகழ்’.

Languageதமிழ்
Release dateOct 19, 2022
ISBN9788179506820
அருணகிரிநாதர்

Related to அருணகிரிநாதர்

Related ebooks

Related categories

Reviews for அருணகிரிநாதர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அருணகிரிநாதர் - Bhanumathi Padmanabhan

    2. இளமைப் பருவம்

    ‘நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணா மலையில் செல்வச் சிறப்பும், பக்தி ஒழுக்கமும் நிறைந்த நற்குடிப் பிறப்பாளர்களான தவசீலர் மற்றும் முத்தம்மை தம்பதிகள் பிற சமயப் பொறையின்மையும் அதனால் உண்டாகும் உலக அமைதியின்மையும் நீங்கவும், தங்களுக்கு நன்மக்கள் பிறக்கவும் நாள் தோறும் எம்பெருமானை துதித்து வணங்கி வந்தனர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன் ‘உங்கள் எண்ணம் ஈடேறும்’ என அசரீரியாக அருளினார். இதன்பின் முத்தம்மை ஓர் பெண் மகவிற்குத் தாயானார். ஆதி அந்தமற்ற இறைவனின் அருட்பிரசாதமான இக்குழந்தைக்கு ‘ஆதியம்மை’ எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர்.

    இப்பெண் குழந்தைக்கு நான்கு வயது ஆன நிலையில், முத்தம்மை மீண்டும் கருத்தரித்தார். ஆனி மாதம், மூல நட்சத்திரம், பௌர்ணமி திதி கூடிய நன்னாளில் ஞானமே உருக்கொண்ட ஓர் அழகிய ஆண் மகவினை அம்மையார் ஈன்றெடுத்தார். அருணை அண்ணலின் அருளால் தோன்றிய இவருக்கு ‘அருணகிரி’ என்று பெயரிட்டுப் பெரிதும் போற்றி வளர்த்தனர் பெற்றோர்.

    பிள்ளைகளோடு பெற்றோரும் நாளும் அருணைப் பிரானை

    ஊராகி நின்ற உலகே

    Enjoying the preview?
    Page 1 of 1