Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam
Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam
Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam
Ebook318 pages1 hour

Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவிளையாடல் என்றாலே நமக்கெல்லாம் மதுரைதான் நினைவுக்கு வரும். ஸ்ரீபரமேஸ்வரன் தேர்ந்தெடுத்த இடமாயிற்றே! அம்பிகை ஜனனமெடுத்த ஸ்தலமல்லவா? சோமசுந்தரப் பெருமான் சுயம்பு லிங்கம். கருங்குருவிப் பறவைக்கும் மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசித்த க்ஷேத்திரம். இந்திரன் பழி தீர்த்த பதி. இந்நூலைப் படிக்கும் எவருக்கும் ஆலவாய்க்குப் போய் சுந்தரேசப் பெருமானையும், மீனாட்சியம்மன் கோயிலுள்ள 64 திருவிளையாடல் சிற்பங்களையும், செட்டி பெண்ணுக்கு சாட்சி சொன்ன வன்னி மரம், கிணறு ஆகியவற்றையும் பார்த்து வர வேண்டும் என்று அவா எழுந்ததென்றால் அதில் வியப்பில்லை!
ஐராவதம் சாபம் தீர்ந்தபதி! கால் மாறியாடிய வெள்ளியம்பலம்! எண்ணாயிரம் சமணர்களையும் ஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து கழுவேற்றல், பிராட்டியார் பட்டாபிஷேகம், மீனாக்ஷியம்மன் திக்விஜயம், மீனாக்ஷி சுந்தரேஸ்வராள் திருமண வைபோகம் இதையெல்லாம் சித்திரைத் திருவிழாவில் இன்றும் காணலாம்.
ஆவணி மாதம் புட்டுத் திருநாளில் ஏழையான வந்தியின் பிட்டுக்குக் கூலியாளாக வந்து அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகருக்காக காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி விற்றதற்காக பிரம்படி பட்ட லீலை, நாரைக்கு மோக்ஷம் கொடுத்தது, விறகு விற்றுப் பாடி ஏமநாதபாகவதரை! ஊரைவிட்டே ஓட வைத்தது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, குறையாத அரிசி மூட்டையை பக்தனுக்கு வழங்கியது, ஆசிரியர் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த மூர்க்கனை ஆசிரியர் வடிவில் வந்து சிலம்பப்போர் நடத்தி அங்கம் வெட்டிய லீலை! சம்பந்தர் கூன் பாண்டியன் ஜுரம் தீர்த்தது, வளையல் விற்றருளிய லீலை, சொக்கநாதர் பட்டாபிஷேகம். குதிரைக் கயிறு மாற்றியது, மதுரையில் வெள்ளத்தை வரவழைத்து உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தது.
இன்றும் திருவிழாக் காலத்தில், வளையன் மகளாக பிறந்த கயற்கண்ணி அம்மையாருக்காக வண்டியூர் தெப்பக்குளத்தில் மீன்பிடித்த திருவிளையாடல் நிதர்சனமாக நடத்தப்படுகிறது.
வைகையை ஈசன் குண்டோதரனுக்காக ஏற்படுத்தினார் என்பது அழகுற இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. அனாவசியமான வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஈசனே நடத்திய திருவிளையாடல் ஆனதால் தினமும் ஒரு சர்க்கம் படித்து முடிக்கிற அன்று பாயசம் நிவேதனம் செய்தால் அந்த இல்லத்தில் பிரச்சினைகள் எழாது. குறைகள், நோய்கள் தீர கூன் பாண்டியன் நோயை ஞான சம்பந்தர் தீர்த்த படலத்தைப் பாராயணம் செய்து வரவும். இதே போல் கடன் தீர நவரத்தினம் விற்ற படலத்தைப் பாராயணம் செய்யவும். தானியங்கள் செழிப்பாய் வளர, வியாபாரம் பெருக உலவாக் கோட்டை அருளிய லீலையை மனம் ஒன்றி வாசிக்கவும்.
போட்டிகளில் வெற்றி பெற பாணபத்திரரும், அவர் மனைவி பத்திரையும் வாதில் வென்ற படலத்தையும், சீமந்தம் வர வளையல் விற்ற படலத்தையும், பதவி கிடைக்க பன்றிக்குட்டிகளை வளர்த்து மந்திரிகளாக்கியதையும், சிறந்த எழுத்தாளனாக, புத்தக வியாபாரம் செழிக்க சங்கப்பலகை அளித்ததில் தொடங்கி, நக்கீரருக்கு இலக்கண முறைத்தது, நூல்களின் ஏற்றதாழ்வு கண்டது வரை பாராயணம் செய்து வந்தால் நற்பயன் பெறலாம்.
சித்தர் விளையாடல், ரசவாதம் புரிதல் கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல் மந்திரவாதிகளுக்கும், ஜோதிடர்களுக்கும் வெற்றியைத் தரும். மாபாதகம் தீர்த்தல் பாபங்களைப் போக்கும்.
வெள்ளம் வடிய உக்கிர பாண்டியனுக்கு வளையம், வேல், சண்டாயுதம் கொடுத்ததும், கடலை வற்றடித்ததும் பாராயணம் செய்ய உகந்தவை. திருமணம் நடக்க திருமண காண்டம். பழிகள் தீர இந்திரன் பழி தீர்த்ததும், வெள்ளையானை சாபம் தீர்த்ததும் பாராயணம் செய்யலாம். உக்கிரபாண்டியன் பிறப்பும், தடாதகை பிராட்டியார் பிறப்பும் தொடர்ந்து உருக்கமாகப் பாராயணம் செய்து வந்தால் ஆண், பெண் மலட்டுத் தனத்தை நீக்கும்.
அன்னக்குழிப் படலம் தரித்திரத்தைப் போக்கும். ஏழு கடலழைத்தல் படலம் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத்தரும். வேதப் பொருளுரைக்கும் சர்க்கம் வேதங்கள், மந்திரங்கள் படிப்பவருக்கு உகந்ததாகும்.
பில்லி, சூனியம், காற்று, கருப்பு தொல்லைகள் நீங்க, அண்டாதிருக்க சமணர்கள் அபிசார ஹோமம் செய்து ஏவிய சர்ப்பத்தை, பசுவை, யானையை வதைக்கும் படலங்களை பக்தியோடு படித்து வரவும்.
மேருவிலிருந்து தங்கம் எடுக்கும் சர்க்கம் ஐஸ்வர்யத்தைப் பெருக்கி திருட்டு பயத்தைப் போக்கும். மழை வர வைகையில் வெள்ளம் பெருகிய படலமும், பெருமழையிலிருந்து காத்த படலமும் பாராயணம் செய்து வரவும்.
பகையில்லாமல் இருக்க இந்திரன் முடிதகர்த்த சர்க்கம். மலையத்துவஜனை அழைத்த சர்க்கம் இழுபறி என்று மரணப் படுக்கையில் கிடப்பவருக்கு மோட்சத்தை அளிக்கும். எந்தெந்த ஸ்தலத்தில் என்னென்ன நடனம் என்பதைப் படித்தால் நாட்டியம் நன்றாக வரும். அஷ்டமாசித்தி உபதேசிக்கும் சர்க்கம் படிப்புக்கு உகந்தது. அந்தந்த சர்க்கத்தின் முடிவிலேயே பலன் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நூல் வீட்டிலிருந்தா

Languageதமிழ்
Release dateDec 10, 2020
ISBN9788179504024
Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam

Read more from R Ponnammal

Related to Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam

Related ebooks

Reviews for Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam - R Ponnammal

    1. இந்திரன் பழிதீர்த்தல்

    தேவலோகத்தில் ஆடல் பாடல்கள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் திலோத்தமை என்ற தேவமங்கை அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஆட்டத்தில் மயங்கிய இந்திரன் அப்போது அங்கே வந்த தேவ குருவான பிரகஸ்பதியைக் கவனிக்கவில்லை. அதனால் வணங்க வில்லை. ஆட்டம் முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருந்துவிட்டான். குருவை அலட்சியப்படுத்தியதால் குரு கோபித்துக் கொண்டு தேவர்கள் கண்ணில் படாமல் மறைந்துவிட்டார்.

    ஆட்டம் முடிந்தது. தக்க பரிசளித்து திலோத்தமையை அனுப்பிய பின்தான் குருவை அலட்சியம் செய்தது இந்திரனுக்கு உறைத்தது. குரு இருப்பிடத்தைத் தேடிச் சென்றான். அவர்தான் மறைந்துவிட்டாரே! நடந்தபின் வருந்துவது முட்டாள் தனம். வருந்தித்தான் என்ன பயன்?

    குருவை இழிவுபடுத்துவது பெரிய பாவமாயிற்றே! அதனால் இந்திரனது அறிவு, பலம், படிப்பு எல்லாம் மங்கியது. எப்போது இந்திரனின் பலம் குறையும் என்று காத்திருந்த எதிரிகளான அசுரர்கள், தேவர்கள் மேல் போர் தொடுத்து ஜெயித்து இந்திரனை விரட்டிவிட்டனர். இந்திரன் மற்ற தேவர்களுடன் போய் பிரம்மாவிடம் முறையிட்டான். காப்பாற்றவேண்டுமென்று வணங்கினான்.

    நடந்ததைக் கேள்விப்பட்ட பிரம்மா குருவை அவமானப் படுத்தியவன் கதி அதோ கதிதான்! குருவின் அனுக்கிரகம் இல்லாமல் வெற்றி அடைய முடியாது. உங்கள் குரு கோபித்துக் கொண்டு போய் விட்டதால் ஒரு புதிய குருவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

    புதிய குருவையும் நீங்களே சொல்லுங்கள் என்று வேண்டி னான் இந்திரன்.

    தக்ஷப் பிரஜாபதியின் மகனான விசுவரூபர் என்பவர் சிறந்த அறிவாளி. ஆனால் அசுரருக்கு மருமகனாயிற்றே என யோசித் தார். ஆயினும் வேறு சரியான குரு கிடைக்காததால் அவரையே வைத்துக் கொள்வது என முடிவாயிற்று.

    விசுவரூபரும் தன்னிடமுள்ள ஒரு சிவகவசத்தை இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரனும் அதைப் போட்டுக் கொண்டு எதிரிகளை ஜெயித்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, சொன்னபடி நடந்து வந்தான். கொஞ்சநாள் சென்று விசுவரூபர் யாகங்களில் அவிர்பாகத்தை அசுரர்களுக்கு மறைமுகமாக கொடுத்துவருவதை அறிந்த இந்திரன், அவரது மூன்று தலைகளையும் வெட்டிவிட்டான்.

    தவவலிமையால் வேதபாராயணம் செய்த தலை மீன்கொத்திக் குருவியாகவும், சுரபானம் செய்த தலை புறாவாகவும், உலக விவகாரங்களில் ஈடுபட்ட தலை, நெருப்புக் கோழியாகவும் மாறின.

    உடல் பிசாசாக கருப்பு உருவமும், கோணலான முகமும், கையில் தடியும், துணியும் கொண்டு இந்திரன் எங்கு சென்றாலும் பயமுறுத்தியது.

    இதற்கிடையில் விசுவரூபனை இழந்த அவன் தந்தை கோபம் கொண்டு இந்திரனைக் கொல்ல ஒரு எதிரி உருவாக வேண்டு மென்று எட்டு நாட்கள் ஒரு பெரிய யாகம் செய்தார். அதிலிருந்து ஒரு பெரிய பயங்கரமான அசுரன் உண்டானான். அவனே விருத்திராசுரன். அவன் புயலெனச் சீறிப் புறப்பட்டு இந்திரனைப் போருக்கழைத்து தோற்கடித்து விரட்டிவிட்டான்.

    தோற்றுப்போன இந்திரன் தேவர்களுடன் வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான். நடந்ததைச் சொல்லிக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான்.

    மகாவிஷ்ணு யோசித்தார். "ததீசி என்று ஒரு முனிவர் இருக்கிறார். அந்த நாளில் தேவர்களும், அசுரர்களுமாகப் பாற் கடலைக் கடையும்போது தங்கள் ஆயுதங்கள் பத்திரமாக இருக்க வேண்டி ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.

    ரொம்பகாலமாக அமிர்தம் கடைந்தனர். ததீசி முனிவர் ஆயுதங்களை பாதுகாக்க வகை அறியாமல் விழுங்கி விட்டார். அதெல்லாம் அவர் முதுகெலும்பில் மறைந்து கிடக்கிறது. அதை யெடுத்துப் புது ஆயுதம் செய்தால் விருத்திரனைக் கொல்லமுடியும்" என்றார் மகாவிஷ்ணு.

    எல்லோரும் ததீசி முனிவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டார்கள். அவரும் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி உடலை விடுத்து சிவலோகம் சென்றார். தேவர்களும், வீணாதண்டமென்ற அந்த எலும்பை எடுத்து தேவசிற்பியான விசுவகர்மாவிடம் கொடுக்க அவர் அதைக் கொண்டு உறுதியான, கூர்மையுள்ள ஓர் ஆயுதம் செய்து தந்தார். அதுதான் வஜ்ராயுதம். அதையெடுத்துக் கொண்டு இந்திரன் வெள்ளை யானையிலேறி விருத்திராசுரனை எதிர்த்துச் சண்டையிட்டான்.

    தோற்ற விருத்திராசுரன் கடலில் போய் ஒளிந்து கொண்டான். தேவர்கள் பிரம்மாவிடம் போய் முறையிட்டனர். அவர் அகத்தியரைப் போய் வேண்டிக் கொள்ளச் சொன்னார். அவ்வாறே அவர்கள் அகத்தியரைத் தொழுது நிற்க, அவர் சமுத்திரம் முழுவதையும் குடித்துவிட்டார்.

    அப்போது சமுத்திரம் எப்படி இருந்தது தெரியுமா? மலைகள், புல், பூண்டுகள், செடிகள் கரடுமுரடான பாறைகள், நீர்வாழ் பிராணிகள், அப்பப்பா அதிலே ஒரு உயரமான மலை உச்சியில் விருத்திராசுரன் தவம் செய்து கொண்டிருந்தான். இந்திரன் அவன் அருகில் போய் அவன் தலையை வெட்டி விட்டான்.

    உடனே அவன் பிசாசாக மாறி கையில் உலக்கையுடன் இந்திரனை விரட்டிக் கொண்டுவந்தான். விசுவரூபப் பிசாசும் இதனுடன் சேர்ந்து கொண்டது.

    குளத்தில் தாமரைப் பூவிற்க்கடியிலுள்ள தண்டுக் குழலைப் பார்த்திருக்கிறீர்களல்லவா? அதில் போய் ஒளிந்து கொண்டான் இந்திரன். வெளியே எட்டிப்பார்த்தால் பிசாசுகள்! தாமரைத் தண்டில் இருந்தபடியே செய்த தவறை எண்ணி எண்ணி வருந்தினான். இந்த சமயம் நூறு அசுவமேத யாகங்கள் செய்து இந்திர லோகத்தை ஆண்டவன் நகுஷன். மமதை தலைக்கேறி இந்திராணியை அடைய நினைத்தான். இந்திரன் மனைவி சப்த ரிஷிகள் பல்லக்குத் தூக்கிவர தன் இருப்பிடம் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தாள், விதியாரை விட்டது?

    சப்த ரிஷிகளை பல்லக்குத் தூக்க உத்தரவிட்டான் நகுஷன். ‘ஸர்ப, ஸர்ப’ என அதட்டினான். (ஸர்ப-சீக்கிரம்) காமவேகத்தில் இந்திராணியின் இருப்பிடத்திற்கு சீக்கிரம் போகவேண்டும் என்ற அவசரம்!

    குறுமுனி அகஸ்தியர் இருந்த பக்கம் பள்ளமாய் இருந்ததால், நகுஷன் தனது காலை அவர் தலைமேல் வைத்துக் கொண்டான். பிரம்பால் அவரைக் குத்தி அவசரப்படுத்தினான்.

    அகத்தியர் வாதாபியை விழுங்கி ஏப்பமிட்டவராயிற்றே! ‘அடர்ந்த கானகத்தில் மலைப்பாம்பாய் விழுந்து கிட’ என சபித்து விட்டார்.

    பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அவர் காலடியில் விழுந்து வணங்கி நகுஷன், சாப விமோசனம் தரும்படி வேண்டினான்.

    மனமிரங்கிய அகஸ்தியர் பஞ்சபாண்டவர்களில் தருமனோடு நீ சம்வாதம் செய்வாய்; முடிவில் மோட்சம் கிடைக்கும் என்றார்.

    நகுஷன் மலைப் பாம்பாக பூமியில் விழுந்தான்.

    இந்திரன் குருவிடம் அனுக்கிரகம் பெற்ற நேரத்தில்தான் நகுஷன் பூமியில் பாம்பாய் விழுந்தான்.

    நகுஷன், இந்திரன் இருவருமே கர்வமும், பேராசையும் கொண்டு இழிநிலை அடைந்தார்கள். அவைகள் இல்லாமல் வாழ்ந்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும்.

    அச்சமயம் குரு பிரகஸ்பதியை தினம் துதித்தான் இந்திரன். குருவும் அவனை மன்னித்து அவனுக்குக் காட்சி தந்தார்.

    அவரிடம் தன்நிலையைக் கூறி அழுதான் இந்திரன். பிரகஸ்பதியும் அவனை அணைத்து ஆறுதல் கூறி ‘சிவ வழிபாடு செய்தால் இந்தப் பிசாசு உன்னைத் தொடர்வதை நிறுத்தி விடும்’ என்று கூறினார்.

    இந்திரன் அதுகேட்டு மகிழ்ந்து தாமரைத் தண்டிலிருந்து வெளியே வந்தான். தேவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு பூலோகத்தில் காடு மலைகளில் சிங்கம், புலிகளை வேட்டையாடிய படியே சிவத்தலங்களை வணங்கி, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வந்தான். ஆயினும் பிசாசுகள் அவனைப் பின்தொடர்ந்தே வந்தன!

    கடம்பமரங்களும், வில்வமரங்களும் மண்டிக்கிடக்கும் காடு. அங்கு சிங்கத்தையும், கரடியையும், பன்றிகளையும் கண்டும் வேட்டையாட இந்திரனுக்கு மனம் வரவில்லை. ‘நமக்குத் துன்பம் செய்யாத அவைகளை ஏன் துடிக்கத் துடிக்க வதைக்க வேண்டும்’ என்ற இரக்க எண்ணம்! எல்லா வற்றையும் விட ஆச்சரியம் என்ன தெரியுமா? அவனை உறக்கத்திலும் நிழலைப் போல் விடாது பின்பற்றி வந்த அந்தக் கரும் பேய்களை காணோம்! இந்திரன் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை! இங்கு ஏதோ விசேஷமிருக்க வேண்டுமென தீர்மானித்த இந்திரன் தேவர்களை நாலா புறமும் தேடச் சொன்னான்.

    picture_1.tif

    அப்போது தேவர்கள் அங்கே ஒரு சிவலிங்கத்தையும், குளத்தையும் கண்டுபிடித்தனர். இந்திரன் குருவை வணங்கி இனி நான் செய்யவேண்டியது என்ன? என்று கேட்டான். அதற்கு குரு, முதலில் இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடு. காற்றிலும், மழையிலும், வெயிலிலும் இருக்கும் இந்த சுந்தர லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டி விமானமொன்று அமைத்து வழிபடு. உன் கொலைபழி நீங்கும். ஏனெனில் இந்த மூர்த்தி யிடமும், இந்த தீர்த்தத்திடமும் பெரும் விசேஷமிருப்பதால் தான் உன்னைத் துரத்தி வந்த கொலைப் பேய்களைக் காணவில்லை என்றார்.

    குரு சொற்படி சாஸ்திர சம்பிரதாயங்களோடு குளத்தில் நீராடிய தேவேந்திரன் லிங்கத்தை வழிபட்டான். காடுகளை வெட்டி நிலத்தை சமதளமாக்கினான். லிங்கத்தை தினம் தரிசித்தான். லிங்கத்திற்கு வெயில்படாமலிருக்க தன் வெண் கொற்றக் குடையையே பிடித்தான்.

    அதற்குள் பலவித ரத்தினங்களிழைக்கப்பட்ட விமானத்தை உச்சியில் தங்கக் குடத்துடன் விசுவகர்மா செய்து கொண்டு வந்தார். குரு ஏற்படுத்திக் கொடுத்த நல்ல நாழிகையில் விமானத்தை தேவேந்திரன் பிரதிஷ்டை செய்தான். அதன்பின் விசுவகர்மாவைக் கொண்டு ஐந்து பிரகாரங்கள், பலமண்டபங்கள், அம்மன் கோயில், கோபுரங்கள், சுற்றுப்புற தேவதைகளின் விக்கிரகங்கள், கோயில் கள், குளத்துக்குப் படிக்கட்டுகள் எல்லாம் கட்டுவித்தான்.

    ஒரு வீடு கட்டவே எவ்வளவு நாட்களாகின்றன? இவ்வளவு இடங்களையும் கட்ட எத்தனை காலமாகும்? பூஜைக்குப் பூக்கொண்டு வரப்போன தேவர்கள் பூக்கிடைக் காமல் அல்லாடினர். திரும்பி வெறுங்கையுடன் வந்தனர்! இறைவன் சோதனை!

    தேவேந்திரன் அவர்களை தேவலோகத்திற்கே போய் பூஜைக்கு வேண்டிய மலர்கள், சந்தனம், ஆபரணங்கள், ஆடைகள் எல்லாம் கொண்டு வரப் பணித்தான். தேவர்கள் சென்றனர்.

    இந்திரன் படும் அவதியைக் கண்ட ஈசன் மனமிரங்கி, அந்தக் குளத்தில் பொன்னிறமான தாமரை மலர்களை ஏற்படுத்தினான். திடீரென மலர்களைப் பார்த்த இந்திரன் ஆச்சரியப்பட்டான். இறைவன் கருணையை நினைத்து மனமகிழ்ந்தான். பொற்றாமரை என அக்குளத்துக்குப் பெயர் சூட்டினான். அத்தாமரை மலர்களைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனை செய்ய அமர்ந்தான். இதற்குள் தேவலோகத்திலிருந்து பூஜை சாமான்களுடன் தேவர்களும் வந்துவிட்டனர்.

    ஆடல் பாடல்களுடன், மந்திரங்களுடன், கும்பாபிஷேகம் செய்து, பெரிய ஹோமங்களெல்லாம் நடத்தி, வாத்தியங்கள் முழங்க பெரிய பெரிய அண்டாக்களில் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை போன்ற நைவேத்தியங்களெல்லாம் படைத்து, பலமுறை விழுந்து வணங்கி இந்திரன் செய்த பூஜை கண்டு இறைவன் மகிழ்ந்தார். இந்திரனுக்குக் காட்சி அளித்தார். இந்திரன் பலமுறை அவர் பாதங்களில் பணிந்து எழுந்தான்.

    ஈசனார் மகிழ்ந்து உனக்கு வேண்டும் வரமொன்று கேள் என்றார்.

    என்னைத் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி நீங்கியதே பெரிய வரம்; உங்களை எப்பொழுதும் மறவாமலிருந்து பணிவிடை செய்ய வேண்டும். அதுபோதும் என்றான் இந்திரன்.

    ஆனாலும் சிவபெருமான் நீ கட்டிய கோயில் என்றும் அழியாது. அதோடு என் கோயிலுக்கு நீ வேய்ந்த விமானம் இனி இந்திர விமானம் என்று உன் பெயராலேயே அழைக்கப்படும் என்றார்.

    இன்றைக்கும் கூட அதற்கு இந்திர விமானம் என்றுதான் பெயர். மதுரைக்குப் போனால் மீனாக்ஷி அம்மன் கோயிலில் இதைப் பார்க்கலாம்.

    அவன் பூஜித்த நாளான சித்ரா பௌர்ணமியன்று இன்றும் இந்திரன் பூஜிப்பதாக ஆகமப்படிவிழா நடக்கிறது. இந்திரனை அதன்பின் பிசாசுகள் துரத்தவில்லை. நிம்மதியாக தேவலோகத்தில் போய் சுகபோகங்களுடன் அரசாண்டான். ஆனால் மறக்காமல் ஆண்டுதோறும் தேவர்களுடன் வந்து, சித்ரா பௌர்ணமி அன்று சுந்தரலிங்கத்தை பூஜை செய்து வணங்கி வந்தான்.

    இந்திரனின் பழிதீர்த்து, அவனைத் துரத்திவந்த பிசாசுகளை விரட்டி, அவனுக்குக் காட்சி கொடுத்ததே சிவபெருமானின் முதல் திருவிளையாடல்...!

    இந்த முதலாம் திருவிளையாடலைப் படிப்பவருக்கும், கேட்ப வருக்கும் படிக்கச் சொல்லி தூண்டுபவருக்கும் எதிரிகளை ஜெயிக்கும் வல்லமை கிடைக்கும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்தக் கதை செல்வத்தையும் தரும். பழியையும், பிணியையும் அழிக்கக்கூடியது.

    žžžÅžžž

    2. வெள்ளையானை சாபம் தீர்த்தல்

    ஒரு சமயம் தேவேந்திரன் அசுரர்களை போரில் வென்று மகிழ்ச்சியுடன் ஐராவதம் என்ற வெள்ளையானையில் பவனி வந்தான். அதற்கு நான்கு கொம்புகள். வெள்ளை வெளெரென்றிருக்கும். வெற்றி பெற்ற தம் அரசனுக்கு வழியில் பல தேவர்கள் பல பொருள்களைப் பரிசாக அளித்தனர்.

    துர்வாச மகரிஷி. அவருக்கு கோபம் சட்டென்று வந்து விடும். ‘பிடிசாபம்’ என்று சொல்லிவிட்டாரோ, அவ்வளவு தான்! ஆனால் தவத்திலும், பக்தியிலும் சிறந்த ஞானி. அவர் காசியில் சிவபூஜை செய்து கொண்டிருந்த சமயம் லிங்கத்தின் தலையிலிருந்து ஒரு பெரிய நீலோத்பல மலர் விழுந்தது. அது அபூர்வமான பூ. அதை எடுத்துக்கொண்டு வந்தவர் இந்திரன் பவனி வருவதைக் கண்டு அவனை ஆசீர்வதித்து அவனிடம் அந்த மலரைக் கொடுத்தார்.

    பெரியவர்கள் எதைக் கொடுத்தாலும் இரண்டு கைகளாலும் வாங்க வேண்டும். அதுவும் சுவாமி பிரசாதம் என்றால் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். இந்திரன் என்ன செய்தான்? வெற்றிச் செருக்கில் ஒரு கையால் வாங்கியதோடல்லாமல், தன் தலையில் வைத்துக் கொள்ளாமல், யானையின் தலையில் வைத்தான். அது தலையை அசைத்ததும் பூ கீழே விழுந்தது. யானை அதைக் காலால் மிதித்துத் தேய்த்துக் கசக்கிவிட்டது.

    picture_2.tif

    யாருக்குத்தான் கோபம் வராது. இப்படிச் செய்தால்? கேட்க வேண்டுமா? துர்வாசர் கொதித்து எழுந்து சாபம் கொடுத்தார்.

    சிவப்பிரசாத மலரை காலால் துகைத்ததனால் ஐராவதம் எல்லா யானையையும் போல் மாறி பூமியில் திரியக் கடவது! என சபித்தார் முனிவர். இதற்குள் தேவேந்திரன் யானை மீதிருந்து கீழே இறங்கி முனிவர் காலில் விழுந்தான். தெரியாமல் தவறு செய்துவிட்டேன், மன்னியுங்கள் என வேண்டினான்.

    துர்வாசரும் நீயும், உன் யானையும் மதுரை சென்று பொற்றாமரையில் மூழ்கி சுந்தரேசுவரரை வணங்கினால் சாபம் நீங்கும் எனக் கூறிவிட்டுப் போய்விட்டார். வெள்ளையானை கறுப்பு யானையாகி விட்டது. பூலோகத்தில் மற்ற யானைகளோடு பலகாலம் அலைந்து திரிந்தது. அதன் பெருமைகள் எல்லாம் அதற்கு மறந்து விட்டது. கடைசியில் இப்போது மதுரை இருக்குமிடம் வந்து சேர்ந்தது.

    புழுக்கம் தாங்காமல் குளிக்க பொற்றாமரையில் இறங்கியதும் வெள்ளைவௌர் என்று பழையபடி ஆகிவிட்டது. தன் பூர்வீகம் நினைவுக்கு வந்தது. தான் செய்த தவறை உணர்ந்து நன்கு குளித்தபின் சுந்தர லிங்கத்தை தும்பிக்கையால் நீர்முகர்ந்து அபிஷேகம் செய்து, புத்தம் புது மலரால் பூஜை செய்து மண்டியிட்டு வணங்கியது.

    பின் லிங்கத்துக்கு மேற்கு திசையில் கால்களால் மண்பறித்து குளமொன்று தோண்டியது. அதன் கரையில் சிவலிங்கமொன்றையும், விநாயகர் உருவத்தையும் கொண்டு வந்து வைத்து தினந்தோறும் முன்சொன்ன முறையில் பூஜித்தது. இறைவன் பிரசன்னமானார். அதை முன்போல் இந்திரனுக்கு வாகனமாகப் போய் இருக்கப்பணித்தார். தேவராஜாவும் அமராவதி நகருக்கு வரும்படி கட்டளையிட்டான். ஐராவதம் ஆண்டவனை வணங்கி சுவர்க்கம் அடைந்து தன் கடமையைச் செய்து கொண்டு கர்வமில்லாமல் வாழ்ந்து வந்தது.

    தேவராஜனும் செருக்கின்றி ஆலவாய்ப் பெருமானை வணங்கி வழிபட்டு வந்தான். இன்றைக்கும் யானையால் ஏற்படுத்தப்பட்ட குளம் ‘கஜ புஷ்கரிணி’ என்ற பெயரோடு இருப்பதையும், குளக்கரை மீதுள்ள பிள்ளையாருக்கு ஐராவத விநாயகர் என்றும், சிவலிங்கத்திற்கு ஐராவதேசுவர லிங்கம் என்றும் பெயரிட்டு அழைத்து மக்கள் வழிபடுகிறார்கள்.

    மீனாக்ஷி கோவிலின் கிழக்கு திசையில் சுவர்க்கம் செல்லுமுன் இந்திரேசுவர லிங்கம் என்ற பெயரில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணி வணங்கி விட்டுச் சென்றது ஐராவதம். இந்திரனின் நலம் வேண்டி இவ்வாறு செய்தது. மதுரைக்குப் போனால் மறக்காமல் இந்த லிங்கங்களையெல்லாம் தரிசனம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம். வெள்ளையானையை சாபத்திலிருந்து விடுவிக்க இறைவன் பிரத்யட்சமான கதையே அவரது இரண்டாம் திருவிளையாடல்.

    ஐராவதத்தின் சாபம் தீர்த்த இந்த 2-ஆம் திருவிளையாடலை படிப்பவரும், கேட்பவரும், படிப்பதற்குக் காரணமாக இருந்தவரும் முற்பிறவி பாவம் சாபங்களினின்றும் விடுபட்டு புண்ணியத்தை அடைவார்கள்.

    žžžÅžžž

    3. மதுரை நகர் அமைத்தல்

    இந்திரன் விமானத்தையும், கோயிலையும் நிறுவியபின் திங்கட்கிழமை தோறும் மதுரை வந்து நான்கு சாமத்திலும் சிவலிங்கத்தை அபிஷேக ஆராதனைகளோடு பூஜித்து வந்தான்.

    ஆனால், மதுரை இன்று போல் ‘ஜே ஜே’ என்று வீடுகளும் கடைகளுமாகவா இருந்தது! ஒரே கடம்ப மரங்கள், வில்வ மரங்கள் நிறைந்து காடாக காட்சி அளித்தது.

    அதனால் அதற்குக் கடம்பவனம் என்றொரு பெயர் உண்டு.

    மனிதர் போக்குவரத்தே கிடையாது.

    மணவூர் என்ற ஊரில் தனஞ்சயன் என்று ஒரு வியாபாரி. பெரும்

    Enjoying the preview?
    Page 1 of 1