Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aboorva Slokangal
Aboorva Slokangal
Aboorva Slokangal
Ebook1,260 pages5 hours

Aboorva Slokangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எம்.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பாலிடிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டரி), பி.எல். பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புத்துறையில் இணை இயக்குனராய் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கல்லூரி நாட்கள் முதல் உண்டு. அலுவல் பணி காரணமாய் எழுத முடியாமல் போனாலும், மனைவி லட்சுமி ராஜரத்னத்தை எழுத ஊக்கப்படுத்தினார்.

மகள் ‘ராஜஸ்யாமளா’ பெயரில் 1970களில் இவர் எழுதிய சிறுகதைகள் இருமுறை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசினை வென்றுள்ளன. இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.

பணி ஓய்வு பெற்ற பின், சொந்த பெயரில் நிறைய ஆன்மீக கட்டுரைகள் எழுதினார்.

மனைவி மற்றும் மகள் எழுத்துப் பணிக்கு பக்க பலமாய் இருந்தார். 2011ல் இறைவனடி சேர்ந்தார்.

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580129005305
Aboorva Slokangal

Read more from G.S. Rajarathnam

Related to Aboorva Slokangal

Related ebooks

Reviews for Aboorva Slokangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aboorva Slokangal - G.S. Rajarathnam

    http://www.pustaka.co.in

    அபூர்வ ஸ்லோகங்கள்

    Aboorva Slokangal

    Author:

    ஜி. எஸ். ராஜரத்னம்

    G.S. Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gs-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    விநாயகர் துதிகள்

    1. ஸ்ரீ கணேசாஷ்டகம்

    2. வினையாவும் தீர்க்கும் விநாயகர் துதி

    3. கஷ்டங்கள் போக்கும் கணேச கவசம்

    4. கஷ்டங்கள் போக்கும் கணநாயக அஷ்டகம்

    சுப்ரமண்யர் துதிகள்

    1. சுபிட்சம் அளிக்கும் சுப்ரமண்யன் துதி

    2. குறையாவும் தீர்க்கும் குமரன் துதி

    3. தீராப் பிணி தீர்க்கும் திருச்செந்தூர் ஷண்முகன் துதி

    4. செழிப்பெல்லாம் தரும் செந்தில் வேலன் துதி

    5. தேனான வாழ்வு தரும் திருமுருகன் துதி

    6. அனைத்து வெற்றியும் தரும் ஆறுமுகன் அஷ்டகம்

    7. ஆறுமுகன் சொன்ன அறிவை வளர்க்கும் துதி

    8. கந்தசஷ்டியன்று சொல்ல வேண்டிய சுப்ரமண்ய கத்யம்

    9. ஆனந்த வாழ்வளிக்கும் ஆறுமுக துதி

    10. கஷ்டங்கள் போக்கும் சுப்ரமண்யர் கராவலம்பம்

    11. சுனாமி ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம்

    12. ஸ்ரீகுக பஞ்சரத்னம்

    13. சகல சௌபாக்யமும் தரும் ஷஷ்டிப்ரியன் துதி

    14. கார்த்திகையில் சொல்ல வேண்டிய கந்தன் துதி!

    15. சிவனையும் பார்வதியையும் போற்றி முருகக் கடவுள் சொன்ன துதி

    16. ஆரோக்யம் அளித்திடும் அங்காரகன் துதி

    17. அனைத்து வெற்றியும் தரும் ஆறுமுகம் அஷ்டகம்

    18. கந்தசஷ்டியன்று சொல்ல வேண்டிய சகல வளமும் தரும் சுப்ரமண்ய கவசம்

    சிவ துதிகள்

    1. திருமகள் அருள்கிட்டச் செய்யும் தியாகராஜ அஷ்டகம்

    2. தீபத்திருநாளில் சொல்ல வேண்டிய ஜோதிர்லிங்கத் துதி

    3. நல்லன யாவும் தரும் நடராஜர் துதி

    4. மாலோலனைப் போற்றி மகேசன் பாடிய மந்திர ராஜபத ஸ்தோத்ரம்

    5. கார்த்திகை தீபத்தன்று சொல்ல வேண்டிய லிங்காஷ்டகம்

    6. விபத்தின்றிக் காக்கும் விடைவாகனன் துதி

    7. சீரான வாழ்வு தரும் சிவ சடாட்சரி துதி

    8. வேண்டிய யாவும் தரும் வேதசார சிவஸ்தோத்ரம்

    9. சகல வளமும் தரும் சதாசிவன் துதி

    10. மங்களங்கள் யாவும் கிட்டச்செய்யும் மகிமைமிக்க துதி!

    11. மங்களங்கள் யாவும் தரும் மகேசன் துதி

    12. மார்க்கண்டேய முனிவர் சொன்ன மரண பயம் போக்கும் துதி

    13. ஆதிசங்கரர் அருளிய அற்புத சிவதுதி

    14. நோயற்ற வாழ்வளிக்கும் வைத்யநாத அஷ்டகம்

    15. ஆதிசங்கரர் பாடிய சிறப்புகள் யாவும் தரும் சிவ மானஸ ஸ்தோத்ரம்

    16. கணவன் மனைவி ஒற்றுமைக்கு உமாமகேஸ்வர துதி!

    17. எல்லா நாளும் இனிய நாளாக இருக்க ஆத்ம சுப்ரபாதம்

    18. மகாசிவராத்திரியன்று சொல்ல வேண்டிய ஜம்புநாத அஷ்டகம்

    19. புண்ணியம் தரும் புனித தீர்த்தத் துதி

    20. ஆதி சங்கரர் அருளிய குறையாவும் தீர்க்கும் குரு அஷ்டகம்

    21. சித்ரா பௌர்ணமியன்று சொல்ல வேண்டிய ஆயுள்பலம் அளிக்கும் அற்புத யமாஷ்டகம்

    22. ஐஸ்வர்யமும் ஆயுளும் அருளும் சந்திர சேகராஷ்டகம்

    அம்பாள் துதிகள்

    1. துன்பமில்லா வாழ்வு தரும் துர்க்கை துதி

    2. மங்களங்கள் யாவும் தரும் மகாசக்தி துதி

    3. ஆதிசங்கரர் அருளிய அன்னையாய்க் காத்திடும் அம்பிகை துதி

    4. உன்னத பலங்கள் தரும் உமையவள் துதி

    5. ஆனைமுகனும் பணிந்திடும் அம்பிகை துதி

    6. பதினாறு வகை பேறு அளிக்கும் பரமேஸ்வரி துதி

    7. அன்னபூர்ணா ஸ்தோஸ்திரம்

    8. ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குறைவில்லா செல்வம், செயல்கள் யாவிலும் வெற்றி தரும், மீனாட்சி பஞ்சரத்னம்

    9. முப்பெரும் பேறு தரும் மூகபஞ்சசதி

    10. மங்களங்கள் யாவும் தரும் மகிஷமர்த்தினி ஸ்தவம்

    11. ஆனந்த வாழ்வு தரும் அபிராமி ஸ்தோத்ரம்

    12. அர்ஜுனன் சொன்ன அபூர்வ துர்க்கை ஸ்லோகம்

    13. தேடிவரும் நன்மை பெற ஆடியில் சொல்லவேண்டிய துதி!

    14. துக்கம் போக்கும் துர்க்கா ஸப்த ஸ்லோகி

    15. வியாசர் அருளிய கோரிய பலங்களைத் தரும் ஆர்யா தேவி துதி

    16. ஆபத்துகளை அகலச் செய்யும் விஷ்ணு மாயா ஸ்தோத்ரம்

    17. ஆதிசங்கரர் அருளிய கங்கா ஸ்நான பலன் தரும் அபூர்வ கங்கா ஸ்லோகம்

    18. பயத்தையும் துக்கத்தையும் போக்கும் பவானி துதி

    19. மருந்தாகக் காத்திடும் மாரியம்மன் அஷ்டகம்

    20. மங்களங்கள் யாவும் தரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் துதி

    21. துன்பங்களை போக்கும் சத்ய துர்க்கை ஸ்லோகம்

    22. பயம் போக்கி ஜெயம் தரும் மோஹினீ கவசம்

    23. மாங்கல்ய பலம் தரும் மகத்தான கல்யாண விருஷ்டி ஸ்லோகம்

    24. ஆதிசங்கரர் சொன்ன... எண்ணியவை ஈடேறச் செய்யும் ராஜராஜேஸ்வரி துதி

    நவக்ரகத் துதிகள்

    1. நாள்தோறும் சொல்ல வேண்டிய நவகிரக துதி!

    2. நல்லன யாவும் தரும் நவகிரக துதி!

    3. சனி பெயர்ச்சியன்று சொல்ல வேண்டிய சனி பகவான் துதி

    4. அனைத்து வளமும் தரும் அரசமரத் துதி!

    5. அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு அன்றாடம் சொல்ல வேண்டிய அற்புதத் துதி!

    6. வெற்றிகளைக் குவிக்கும் ஆதித்ய ஹிருதயம்

    7. ஆரோக்யம் அளிக்கும் ஆதித்ய அஷ்டகம்

    8. கல்வி, செல்வம் ஆரோக்யம் தரும் கதிரவன் துதி!

    9. எல்லா இன்னல்களையும் தீர்க்கும் மும்மூர்த்திகளும் சொன்ன அபூர்வ ஆதித்ய ஸ்தோத்ரம்

    10. கல்வி வரம் தரும் கதிரவன் துதி

    11. அனைத்து வளமும் தரும் ஆதித்யன் துதி

    12. அட்சய த்ரிதியையன்று சொல்ல வேண்டிய ஆதித்யன் துதி

    சரஸ்வதி துதிகள்

    1. கல்வி வரம் தரும் கலைமகள் துதி

    2. சரஸ்வதி பூஜையன்று சொல்ல வேண்டிய குரு அஷ்டகம்

    3. சரஸ்வதி பூஜையன்று சொல்ல வேண்டிய சாரதா புஜங்கம்

    4. பரீட்சையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய சரஸ்வதி துதி!

    5. கல்வி வளம் தரும் காளிதாசரின் சியாமளா தண்டகம்

    மகாலட்சுமி துதிகள்

    1. தங்க மழை பொழியும் கனகதாரா

    2. மகாலக்ஷ்மி மந்திர மாலை

    3. உங்கள் வீட்டுக்கு வரலட்சுமியை வரவேற்க ஒரு துதி!

    4. வேண்டிய யாவும் தரும் துளசி கவசம்

    5. அட்சய திருதியையன்று சொல்ல வேண்டிய அலைமகள் துதி

    6. அஷ்ட ஐஸ்வர்யமும் தரும் அஷ்டலக்ஷ்மி திதி

    7. மகாலக்ஷ்மியின் ஆசி உங்களுக்கு வேண்டுமா?

    8. அட்சய த்ரிதியை அன்று சொல்ல வேண்டிய அலைமகள் துதி

    9. திருமகளின் கடாட்சம் பெற திருநீற்றுத் துதி!

    10. கோரிய பலன் தரும் கோமாதா துதி

    11. மங்களங்கள் யாவும் தரும் மகாலக்ஷ்மி அஷ்டகம்

    16. வரலக்ஷ்மி விரதத்தன்று சொல்ல வேண்டிய மங்காத செல்வம் தரும் மகாலக்ஷ்மி துதி

    17. அழியாச் செல்வம் தரும் அட்சய த்ரிதியை ஸ்லோகம்

    18. தங்க நகைகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா?

    19. நீங்கள் தீர்க்க சுமங்கலியாகத் திகழ வேண்டுமா?

    20. புத்தாண்டில் சொல்ல வேண்டிய பொன் மகள் துதி

    21. பதினாறு பேறும் தரும் மகாலட்சுமி துதி!

    மகாவிஷ்ணு, நரசிம்மா & கண்ணன் துதிகள்

    1. ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்

    2. ஸ்ரீதேவி கடாட்சம் தரும் ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்

    3. கடன்சுமை போக்கும் கருணைமிகு லட்சுமி நரசிம்மர் துதி

    4. ராமபிரானை மகாவிஷ்ணுவாக பாவித்து நாரதர் பாடிய மங்களங்கள் யாவும் தரும் மகாவிஷ்ணு துதி

    5. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா?

    6. சர்வ மங்களமும் தரும் சக்கரத்தாழ்வார் துதி

    7. தீபாவளியன்று சொல்ல வேண்டிய சுபிட்சம் தரும் சுபசகுனத் துதி

    8. தேர்வில் வெற்றி பெற உதவும் ஹயக்ரீவர் துதி

    9. கஷ்டங்கள் போக்கும் கஜேந்திரவரதர் துதி

    10. தீபாவளியன்று சொல்ல வேண்டிய கோபிகா கீதம்!

    11. பாக்யங்கள் யாவும் தரும் பஞ்சாயுதத் துதி

    12. நல்லன யாவும் தரும் நரசிம்மர் துதி!

    13. வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு மந்திரம்

    14. ஆயுள், ஆரோக்யம், ஆனந்த வாழ்வு தரும் ஆதிசங்கரர் அருளிய அச்சுதன் அஷ்டகம்

    15. பொன், பொருள், ஆயுள், ஆரோக்யம் தரும் பாண்டுரங்கன் துதி!

    16. கிருஷ்ண மங்கள துதி

    17. கேட்ட வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் துதி

    18. கிருஷ்ண ஜெயந்தியன்று சொல்ல வேண்டிய பாலமுகுந்தாஷ்டகம்

    19. குறையாவும் தீர்க்கும் கிருஷ்ண மங்கள் ஸ்தோத்ரம்

    20. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கேட்டதைத் தரும் கிருஷ்ணர் துதி

    21. குணமளிக்கும் குருவாயூரப்பன் துதி

    22. குறையாவும் தீர்க்கும் குருவாயூரப்பன் துதி

    23. ஆபத்துகளைப் போக்கி ஆனந்தம் தரும் அபூர்வ ப்ரகலாத ஸ்தோத்ரம்

    24. புரட்டாசியில் சொல்ல வேண்டிய புருஷோத்தமன் துதி

    ராமர் துதி

    1. ராமாயணத்தை முழுமையாகப் படித்த பலன் தரும் அற்புத துதி!

    2. நல்லன யாவும் தரும்

    3. நல்லன எல்லாம் தரும் நான்முகன் சொன்ன ஸ்ரீராமர் ஸ்தோத்ரம்

    4. அனுமன் அருளிய காரியம் யாவும் தரும் கோதண்டராமன் துதி

    5. ஆபத்துகளை போக்கும் ஸ்ரீராம ஸ்தோத்ரம்

    6. சீரான வாழ்வு தரும் ஸ்ரீ ராமர் துதி

    ஸ்ரீ ஐயப்பன் துதிகள்

    1. மங்களங்கள் யாவும் தரும் மகாசாஸ்தா துதி.

    2. புண்ணியம் யாவும் தரும் பூதநாதன் துதி

    3. ஆனந்தம் தரும் ஹரிவராசனம் (சபரி மலையில் நடைசாத்தும் பொழுது பாடும் பாடலின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது)

    4. அருள், பொருள், ஆரோக்யம் தரும் ஐயப்பன் துதி

    ஆஞ்சநேயர் துதிகள்

    1. ஆனந்த வாழ்வு தரும் அஞ்சநேயர் துதி

    2. தடையாவும் தகர்க்கும் அனுமத் புஜங்கம்!

    3. அனுமன் சொன்ன அற்புத உயிர்காக்கும் துதி

    4. மங்களங்கள் யாவும் தரும் மாருதி கவசம்

    விநாயகர் துதிகள்

    1. ஸ்ரீ கணேசாஷ்டகம்

    ஸ்ரீ கணேசாஷ்டகம் ஸ்ரீகணேச புராணத்தில் உபாஸனா காண்டத்தில் உள்ளது.

    இதை பாராயணம் செய்வதால் இடையூறுகள் நீங்கி, எல்லாக் காரியங்களும் கைகூடும். வித்தைகளில் தேர்ச்சியும் பிள்ளைப் பேறும் கட்டாயம் கிடைக்கும்.

    கேதுவுக்கு தேவதை ஸ்ரீகணபதி என்பதால், ஜாதகத்தில் கேதுவால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும்.

    ஸ்ரீ கணேசாய நம ஸர்வே ஊசு

    யதோ ஸ்னந்தசக்தேரனந்தாஸ்ச ஜீவா

    யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே

    யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    1. ஸ்ரீ கணேசனுக்கு நமஸ்காரம்.

    எல்லாரும் சொன்னார்கள் எவருடைய அளவற்ற சக்தியிலிருந்து அளவற்ற உயிர்கள் உண்டானதோ, நிர்குணரான எவரிடமிருந்து, அளவிற்கடங்காத குணங்கள் உருப்பெற்றனவோ, எவரிடமிருந்து எல்லா உலகமும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் பிரிவுள்ளதாக இருக்கிறதோ, அப்படிப்பட்ட கணேசனை எப்போதும் நமஸ்கரிக்கிறோம் மேலும் பூஜிக்கிறோம்.

    யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத்

    ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா

    ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம

    2. எவரிடமிருந்து இந்த உலகம் தோன்றியதோ, எவர் இந்த உலகெங்கும் வியாபித்தவரோ, எவரிடமிருந்து உலகத்தைக் காக்கிற பிரும்மாவும், இந்திரன் முதலிய தேவர்களும், மனிதர்களும் உண்டானார்களோ, அப்படிப்பட்ட கணபதியை எப்போதும் நமஸ்கரிக்கிறோம் மேலும் சேவிக்கிறோம்.

    யதோ வஹ்னியானூ பவோ பூர்ஜலம் ச

    யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு

    யத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம

    3. எவரிடமிருந்து அக்னி, சூரியன், ருத்ரன், பூமி, ஜலம் உண்டாயினவோ, எவரிடமிருந்து சமுத்திரங்களும், சந்திரனும், ஆகாசமும், வாயுவும் உண்டாயினவோ, எவரிடமிருந்து ஜடப்பொருள்களும், அசையாப் பொருள்களும், மரங்களும் உண்டாயினவோ, அந்தக் கணபதியை வணங்குகிறோம் பூஜிக்கிறோம்.

    யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா

    யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச

    யத: பக்ஷிகீடா யதோ வீருதஸ்ச

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம

    4. எவரிடமிருந்து அசுரர்களும், கின்னரர்களும், யக்ஷர்களின் கூட்டங்களும் உண்டானோர்களோ, எவரிடமிருந்து சாரணர்களும், வாரணங்களும், கரடி, புலி முதலிய விலங்குகளும் உண்டாயினவோ, எவரிடமிருந்து பக்ஷிகளும், புழுக்களும் உண்டாயினவோ, எவரிடமிருந்து செடி, கொடிகளும் தோன்றினவோ அந்த கணபதியை சதா நமஸ்கரிக்கிறோம். சேவிக்கிறோம்.

    யதோ புத்திரஜ்ஞானதாஸோ முமுக்ஷோர்

    யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு

    யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:

    ஸதா தம் கணேசம் நமாமோ பஜாம:

    5. முக்தியை விரும்புகிறவர்களுக்கு எவர் மூலமாக அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகிறதோ, எவரிடமிருந்து பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய செல்வங்கள் உண்டாகின்றனவோ அவரிடமிருந்து விக்னங்களை அழிக்கும் சக்தி கிடைக்கிறதோ, பல்வேறு முயற்சிகளின் வெற்றிக்குப் பயன் கிடைக்கிறதோ, அந்தக் கணபதியை நமஸ்கரிக்கிறோம். சதா பூஜிக்கிறோம்.

    யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ

    யதோஸ்பக்தவிக்னா: ததாஸ்னேகரூபா:

    யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    6. எவரிடமிருந்து மக்கட் செல்வங்களும், எவரிடமிருந்து கோரிய பொருளும், எவரிடமிருந்து நாத்திகர்களுக்கு பல இடையூறுகளும் தோன்றுகின்றனவோ, எவரால் உலகில் சோகம், மோஹம், மற்றும் போகமும் உண்டாகிறதோ, அந்த கணபதியை எப்போதும் நமஸ்கரிக்கிறோம். சதா சேவிக்கிறோம்.

    யதோஸ்னந்தசக்தி: ஸ ஸேஷோ பபூவ

    தராதாரணேஸ்னேகரூபே ச ஸக்த:

    யதோஸ்னேகதா ஸ்வர்கலோகா ஹி நானா

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    7. அளவற்ற சக்தி, ஏன் உலகையே தாங்கக் கூடிய சக்தி, எவரிடமிருந்து பெற்று ஆதிசேஷன் தோன்றினாரோ, எவரிடமிருந்து பலவகையான சுவர்க்காதி லோகங்களும் உண்டாயினவோ, அந்தக் கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சதா பூஜிக்கிறோம்.

    யதோ வேதவாசோ விகுண்டா மனோபி:

    ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி

    பரப்ரம்ஹரூபம் சிதானந்தபூதம்

    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:

    8. எவரிடமிருந்து மனித மனங்களால் அளவிட முடியாத வேதவாக்கியங்கள் உண்டாகி, சத்து அசத்து என்று விஷயங்களை பாகுபடுத்தும் தன்மையை உணர்த்தும் ஞானம் கிடைக்கிறதோ, எவர் மூலமாக சச்சிதானந்த ரூபமான பரப்ரம்ம ஸ்வரூபத்தை அறிய முடிகிறதோ அந்தக் கணபதியை எப்போதும் வணங்குகிறோம். சதா சேவிக்கிறோம்.

    ஸ்ரீ கணேச உவாச

    புனருசே கணாதீசஸ ஸ்தோத்ரமேதத் படேந்நர

    த்ரிஸந்தியம் தரிதினம் தஸ்ய ஸர்வம்

    கார்யம் பவிஷ்யதி

    ஸ்ரீ கணபதி அருளியது

    எவன் ஒருவன் இந்த ஸ்தோத்திரத்தை மூன்று நாட்கள் காலை, பகல், மாலை வேளைகளில் பாராயணம் செய்கிறானோ, அவனுக்கு எல்லா காரிய சித்திகளும் உண்டாகுமென்று ஸ்ரீ கணபதி அருளினார்.

    யோ ஜபேதஷ்ட திவஸம் ஸ்லோகாஷ்ட கமிதம் சுபம்

    அஷ்டவாரம் சதுர்த்யாம் து ஸோஸ்ஷ்ட ஸித்தீரவாப்னுயாத்

    எவன் எட்டு நாட்களும், சதுர்த்தியன்று எட்டு முறையும் இந்த எட்டு சுலோகங்களையும் பாராயணம் செய்கிறானோ அவன் அட்டமா சித்திகளை அடைவான்.

    ய: படேன்மாஸமாத்ரம் து தஸவாரம் தினே தினே

    ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம் ந ஸம்ஸய

    எவன் நாள் ஒன்றுக்கு பத்து முறை வீதம் ஒரு மாதம் பாராயணம் செய்கிறானோ, அவன் சிறையில் அகப்பட்டவனையும், ராஜதண்டனையால் சிரச்சேத தண்டனை பெற்றவனையும் விடுவித்து விடுவான். இதில் ஐயமேயில்லை.

    வித்யாகாமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ புத்ரமாப்னுயாத்

    வாஞ்சிதான்லபதே ஸர்வானேகவிம்ஸதி வாரத:

    யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானன பரோ நர:

    ஏவமுக்தவா ததோ தேவஸ்சாந்தர்த்தானம் கத: ப்ரபு

    ஸ்ரீ கணேசாஷ்டகம் சம்பூர்ணம்

    எந்த மனிதன் சதா பக்தியுடன் கணபதியை தியானம் செய்து கொண்டு இருபத்தோரு முறை பாராயணம் செய்கிறானோ, அவன் வித்யைகளைக் கோரினால் அந்த வித்யைகளை அடைவான். பிள்ளை வேண்டுமென்று கோரினால் பிள்ளைப் பேறு கிடைக்கும். கோரிய எல்லாப் பொருட்களையும் அடைவான்.

    இவ்வாறு அனுக்ரஹித்துவிட்டு தேவனும் பிரபுவுமான கணபதி அந்தர்த்யானமானார்.

    2. வினையாவும் தீர்க்கும் விநாயகர் துதி

    எச்செயலுக்கும் விக்னங்கள் ஏதும் வராமல் காப்பவர், விக்னராஜன்.

    அவரை கணநாதன் என வேதங்களும் புகழ்கின்றன. உலக உயிர்கள் எனும் கணங்களுக்கு அதிபதியாக தலைவனாக விளங்குபவன் கணபதியே, என்கின்றன புராணங்கள். மும்மூர்த்திகளும் பணிந்த மூலாதாரக் கடவுள் விநாயகர்.

    திரிபுரவதத்துக்கு முன் சிவபெருமானும், பண்டாசுர வதத்தின் போது பார்வதியுமே கூட அவரைப் போற்றியுள்ளார்கள். திருமால், தான் இழந்த சக்கரத்தை மீண்டும் பெற கணேசனை நாடியுள்ளார். வள்ளியை மணக்க, முருகனுக்கு அண்ணன் உதவி தேவைப்பட்டது.

    ராமர், ராவணனை வதம் செய்ய இலங்கைக்குப் போகுமுன் சேது பந்தனம் விக்னமில்லாமல் நடக்க உப்பூர், தொண்டி ஆகிய இடங்களில் உள்ள விநாயகரைத் தொழுதுள்ளார். ஆதிசங்கர மகான், கணேச பஞ்சரத்னம் செய்திருப்பதும், இந்த தொண்டி கணபதியைத் துதி செய்து தான். கண்ணன் சியமந்தக மணியைத் திருடிவிட்டதாக அபவாதம் வந்தது, விநாயகர் சதுர்த்தியன்று அவர் நான்காம் பிறையைப் பார்த்ததனால்தான். பிறகு கணேசரை வணங்கியதால் அபவாதம் விலகியது. ஜாம்பவதியைத் திருமணம் செய்து கொண்டார். சாம்பன் என்ற மகனும் பிறந்தான். தமிழகத்துக்குக் காவேரி வந்ததும், இக்ஷ்வாகு குல தனமான ரங்கநாதர் ஸ்ரீரங்கத்தில் தங்கியதும் கணேசரின் அருளால்தான்.

    இப்படி மூவரும், தேவரும், யாவரும் போற்றிய விக்னேஸ்வரனை பூஜித்து வணங்கிட ஏற்ற எளிய துதி ஒன்று உள்ளது. கணாஷ்டகம் எனும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி கணபதியை வழிபட்டால், அக்கணமே வந்து காத்திடுவான். கவலை யாவும் போக்கிடுவான் கணேசன்.

    ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்

    லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்

    ஒற்றைத் தந்தத்தையுடையவரும், பெரிய சரீரத்தையுடையவரும், உருகிய தங்கத்துக்கு ஒப்பான காந்தியுடையவரும், பேழை வயிற்றினரும், இருக்கும் இடத்திலிருந்தே உலகம் முழுமையையும் பார்வையிடக்கூடிய விசாலமான பார்வையுடையவரும், கருணை பொழியும் அகன்ற கண்களையுடைய வருமான கணநாயகரை, நான் வணங்குகிறேன்.

    மௌஞ்ஜி கிருஷ்ணஜினதரம் நாக யக்ஞோபவீதினம்

    பாலேந்து விலசன் மௌலீம் வந்தே அஹம் கணநாயகம்

    முஞ்ஜைப்புல், மான் தோல் ஆகியவற்றைத் தரித்தவரும், ஆதிசேஷனை (நாகத்தை) பூணூலாக அணிந்தவரும், சந்திரனைத் தன் தலையில் தரித்ததால், பாலசந்திரனாக பிரகாசிப்பவரும், பஞ்சபூதங்களால் ஆன உயிர்கள் அனைத்துக்கும் தலைவனாக, கணங்களின் அதிபனாக இருக்கக்கூடிய வருமான கணநாயகரை நான் வணங்குகிறேன்.

    அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்

    பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம்

    தாயான பார்வதியின் மனதை மகிழ்விப்பவரும், தனது அன்னையர்களான பார்வதி, கங்கையால் காக்கப்பட்டவரும் (ஈசன், பிள்ளையாரின் தலையை வெட்டியபோது, அவரை உயிர்ப்பிக்கும்படி உமை வேண்டி யானைத் தலை பொருத்தச் செய்து காத்தாள். வரேண்ய மகராஜனுக்கு கஜமுகராக கணபதி பிறந்தபோது, பயந்து அவன் கங்கையில் விட கங்கை காப்பாற்றி பராசுவமுனிவரிடம் சேர்த்தாள்.) பக்தர்களுக்குப் பிடித்தமானவரும் எளிதில் அருளக் கூடியவரும், மதம் கொண்ட யானைத் தலையுடன் காட்சி தந்து தீமைகளை விரைந்து ஓட்டுபவரும் கணங்களின் தலைவருமான கண நாதரை நான் வணங்குகிறேன்.

    சித்ர ரத்ன விசித்ராங்கம், சித்ர மாலா விபூஷிதம்!

    சித்ர ரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

    பலவித ரத்னங்களைத் தன் அழகிய உடலில் அணிந்தவரும், பலவிதமான அழகிய மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும், பற்பல உருவங்களில் காட்சியளிப்பவரும், எல்லா தேவர்களும் வணங்கும் தேவநாயகரும், பூத கணங்களின் தலைவருமான மகாகணேசரை நான் வணங்குகிறேன்.

    கஜவக்த்ரம் ஸூரஸ்ரேஷ்டம் கர்ணசாமர பூஷிதம்!

    பாஸாங்குஸதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

    யானையின் முகத்தைக் கொண்டவரும், தேவர்களை ஆபத்துகளில் இருந்து காப்பவரும், சாமரம் போன்ற காதுகளையுடையவரும், பாசம், அங்குசம் ஆகியவற்றை தரித்திருப்பவரும், உயிரினங்களுக்குத் தலைவருமான மகாகணேசரை வணங்குகிறேன்.

    மூஷிகோத்தம மாருஹ்ய தேவாஸுர மஹாஹவே

    யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

    தேவாசுர யுத்தத்தின்போது, சாதாரணமான எலியை வாகனமாகக் கொண்டு போர் புரியச் சென்று தேவர்களுக்கு அபார வெற்றியை அள்ளிக் கொடுத்தவரும், சிறந்த பராக்ரமம் உடையவரும் உயிர்க் கூட்டத்தின் தலைவருமான விநாயகனை வணங்குகிறேன்

    யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரைரஸ்ஸதா

    ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே அஹம் கண நாயகம்

    யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் ஆகியோரால் எப்போதும் புகழ்ந்து துதிக்கப்படும் மகாத்மாவான கணநாயகனே, உம்மை நான் வணங்குகிறேன்.

    ஸர்வ விக்ன ஹரம் தேவம் ஸர்வ விக்ன விரஜிதம்

    ஸர்வ ஸித்தி ப்ரதா தாரம் வந்தே அஹம் கணநாயகம்

    பக்தியில்லாதவர்களுக்கு இடையூறுகளைக் கொடுக்கக் கூடியவரும் இவரே அடியார்களுக்கு ஏற்படும் எல்லா விக்னங்களைத் தீர்ப்பவரும் இவரே. எல்லா சித்திகளையும் அளிப்பவரும் இவரே. அத்தகைய விக்னராஜரான இவரை நான் வணங்குகிறேன்.

    கணாஷ்டகமிதம் புண்யம் பக்திதோ ய: படேன் நர:

    விமுக்தஸ் ஸர்வ மாபேப்யோ ருத்ர லோகம் ஸ கச்சதி

    புண்ணியத்தைக் கொடுக்கும் இந்த கணாஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தை பக்தியோடு படிப்பவர்கள் சகல வினைகளும் நீங்கி எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவர்.

    அதிகாலையில் சொல்ல வேண்டிய ஆனைமுகன் துதி

    தினமும் தூங்கி எழுந்ததும், படுக்கையில் உட்கார்ந்தபடியே 'இன்றைய தினம் எவ்வித விக்னமுமில்லாமல் எல்லா காரியங்களும் சுபமாக நடைபெற வேண்டும்' என்று, மகா கணபதியை வேண்டிக் கொண்டு, பின்வரும் சுலோகங்களைச் சொல்ல வேண்டும். (ஒரு தடவை சொன்னால் போதும்.)

    ப்ராத: ஸ்மராமி கணநாத மனாத பந்தும்

    ஸிந்தூர பூர்ண பரிசோபித கண்ட யுக்மம்

    உத்தண்டவிக்ன பரிகண்டன சண்ட தண்டம்

    ஆகண்டலாதி ஸுரநாயக ப்ருந்த வந்த்யம்

    கண நாதனை, தீனர்களைக் காப்பவனை, சிந்தூரவர்ணமாய் சிவந்த கன்னம் உடையவனை, விக்னங்களைப் போக்குபவனை, விண்ணவர் தலைவனை, அதிகாலையில் நமஸ்கரிக்கிறேன்.

    ப்ராதர் நமாமி சதுரானன வந்த்யமானம்

    இச்சானுகூல மகிலம் ச வரம் ததானம்

    தம் துந்திலம் த்விர ஸநாகி பயஞ்ஜ ஸூத்ரம்

    புத்ரம் விலாஸ சதுரம் சிவயோ: சிவாய

    நான்முகனும் தொழும் நாயகனை, வேண்டிடும் பக்தருக்கும் வரமளிப்பவனை, நாகாபரணம் தரித்தவனை, பார்வதிக்குப் பிடித்த பாலகனை, மங்களங்கள் யாவும் தரவேண்டி, காலையில் வணங்குகிறேன்.

    ப்ராதர் பஜாலம்ப பயதம் நிஜ பக்த சோக

    தாவானலம் ஸுரவரம் வரகுஞ்ச ஜாஸ்யம்

    அக்ஞான கானன விநாசன ஹவ்ய வாஹம்

    உத்ஸாக வர்த்தனமஹம் ஸுதமீ ச்வரஸ்ய

    அண்டுவோர்க்கு அபயமளிப்பவனை அடியார் துயர் அகற்றுபவனை, தேவர்கள் அரசனை, யானை முகனை, அஞ்ஞானமாகிய வனத்தினை தீயாக எரிக்கும் அனலனை, மகிழ்ச்சியைத் தருபவனை, அரனருள் புதல்வனை காலையில் பூஜிக்கிறேன்.

    ச்லோகத்ரய மிதம் புண்யம் ய: படேத் ப்ரயத புமான்

    ப்ராதருத்தாய ஸததம் ஸ ஸாம்ராஜ் ம வாப்னுயாத்

    எவர் காலையில் எழுந்து மனமுவந்து பக்தியுடன் இந்த ஸ்லோகங்களைச் சொல்கின்றாரோ அவர்கள் விநாயகன் அருளால், விக்னங்கள் ஏதும் இன்றி, செயல்கள் யாவிலும் வெற்றி காண்பர். பிள்ளையாரின் அருளால் அனைத்தும் பெறுவர்.

    3. கஷ்டங்கள் போக்கும் கணேச கவசம்

    அசுரர்களின் ஆதிக்கம் அதிகரித்து, விண்ணுலகும் மண்ணுலகும் நடுநடுங்கிக் கொண்டிருந்த காலம் அது.

    ராட்சதர்கள், வேதாளங்கள் போன்ற தீய சக்திகளும் தலையெடுத்து, முனிவர்கள், தவசிகள் என நல்லோர் எல்லோரையும் வாட்டத் தொடங்கின. அப்போது, அமைதி நிலவவும், அச்சங்கள் அகலவும், அனைத்து நன்மைகளையும் பெறவும் உதவக்கூடிய துதி ஒன்றினை உலகிற்கு அளிக்கும்படி, காச்யப முனிவரிடம் சொன்னாள் அம்பிகை.

    அதன்படி, காச்யபர் ‘கணேச கவசம்' எனும் அற்புத ஸ்தோத்திரத்தை அருளினார். அதனை முத்கலர் எனும் முனிவர் கேட்டறிந்து, மாண்டவ்யர் என்கிற மகரிஷிக்குச் சொன்னார்.

    மண்ணுலகம் சிறக்க மகரிஷிகள் சொன்ன அந்த மகத்தான 'கணேச கவசம்,’ இதோ உங்களுக்காக, எளிய தமிழ் விளக்கத்துடன்.

    கணேசனை கருத்தில் வைத்து, கவசத்தைச் சொல்லுங்கள். கவலைகள், கஷ்டங்கள், அச்சங்கள் யாவும் நீங்கி, வளமான வாழ்வு பெறுங்கள்.

    கவசத்தை சொல்லத் தொடங்கும் முன்.

    ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி

    தந்நோ தந்தி ப்ரசோதயாத்

    பாரதத்தை எழுத கஜமுகாசுரனை அழிக்க என வெவ்வேறு சமயங்களில் தந்தத்தினைப் பயன்படுத்திய விநாயகனே, இப்படி ஆக்கவும் அழிக்கவும் வல்லதான தந்தத்தினை உடைய ஏகதந்தரே, உம்மை வணங்குகிறேன்

    என்ற கணபதி காயத்ரியைச் சொல்லி வணங்கி, கணேச கவசத்தை தடையின்றிச் சொல்லி முடிக்க ஆனைமுகனிடம் ஆசிவாங்கிக் கொண்டு, கவசத்தைச் சொல்ல ஆரம்பியுங்கள்

    ஸ்ரீ கணேச கவசம்

    த்யாயேத் ஸிம்ஹகதம் விநாயகமும் திக் பாஹு மாத்யேயுகே

    த்ரே தாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம்

    ஆதி முதல் (சத்ய) யுகத்தில் சிம்மவாகனத்தில் அமர்ந்து திக்பாஹுவாகவும். திரேதா யுகத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஷட்பாஹுவாகவும் விளங்கியவரை தியானிக்கிறேன்.

    த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாங்கராகம் விபும்

    துர்யே து த்விபுஜம் ஸிதாங்கருசிரம் ஸர்வார்த்ததம் ஸர்வதா

    த்வாபர யுகத்தில் யானையின் முகத்தையும் துதிக்கையையும் கொண்டு செம்பவள மேனியுடையவராகவும், நான்காவது யுகத்தில் இருபுஜத்துடன் வெள்ளை வண்ணத்தில் காட்சியளிப்பவராகவும் சகலத்தையும் அளிப்பவராகவும் இருப்பவரை சதா வணங்குகிறேன்.

    ஓம் விநாயக: சிகாம் பாது பரமாத்மா பராத்பர:

    அதிஸுந்தர காயஸ்து: மஸ்தகம் ஸும தோத் கட:

    சிகையை பரமாத்மாவும் பராத்பரனுமான விநாயகன் காக்கட்டும். சுந்தரமான உடலை, மதோற்கடர் காக்கட்டும்.

    லலாடம் கஸ்யப: பாது ப்ருயுகம்து மஹோதர:

    நயனே பாலசந்த்ரஸ்து கஜாஸ்யஸத் வோஷ்ட பல்லவௌ

    நெற்றியை கஸ்யபர் காக்க. புருவத்தைப் பெரு வயிற்றோன் காக்க, கண்களை பாலசந்திரனும், அதரங்களை கஜமுகனும் காக்க.

    ஜிஹ்வாம் பாது கணக்ரீட: சிபுகம் கிரிஜா ஸுத:

    வாசம் விநாயக: பாது தந்தான் ரக்ஷது துர்முக:

    நாவினை கணபதி காக்க. சிபுகந்தன்னை கிரிஜா (மலை மகள்) மகன் காக்க வாக்கை விநாயகர் காக்க பற்களை துர்முகர் காக்க.

    ச்ரவணௌ பாசபாணிஸ்து நாஸிகாம் சிந்திதார்த்தத:

    கணேசஸ்து முகம் கண்டம் பாது தேவோ கணஞ்ஜய:

    காதுகளை பாசபாணியும், மூக்கினை சிந்திதார்த்தனும், முகத்தை கணேசனும், கழுத்தை கணாதிபதியும் காக்க

    ஸ்கந்தௌபாது கஜஸ்கந்த: ஸ்தநௌ விக்ன விநாசனா:

    ஹிருதயம் கணநாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹாந்

    தோள்களை கந்தனின் மூத்தோன் காக்க ஸ்தனங்களை விக்ன விநாயகன் காக்க. இதயத்தை கணநாதனும், பெரிய ஜடரத்தை ஹேரம்பனும் காக்க.

    தராதர: பாது பார்ச்வௌ ப்ருஷ்டம் விக்னஹர: சுப:

    லிங்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதுண்டோ மஹாபல:

    பின்பக்கமிரண்டும் தராதரன் காக்க. மறைவான லிங்கத்தை மகாபலசாலியான விக்கினவாரன் காக்க

    கணக்ரீடோ ஜானு ஜங்கே ஊரு மங்கலமூர்த்திமான்:

    ஏக தந்தோ மஹாபுத்தி: பாதௌ குல்பௌ ஸதாவது

    முழங்கால்களை கணக்ரீடர் காக்க, ஊருவை (தொடைகளை) மங்களமூர்த்தி காக்க. பாதம், குல்பங்களை மகாபுத்திமானான ஏசு தந்தன் காக்க

    க்ஷிப்ரப்ரசாதனோ பாஹூ பாணீ ஆசா ப்ரபூரக:

    அங்குலீச்ச நகான் பாது பத்ம ஹஸ்தோ அரி நாசன:

    புஜங்களை க்ஷிப்ர பிரசாதனும், பாணி (உள்ளங்கை)யை ஆசாப்ரபூரகனும் விரல்களை (நகங்களையும்) தாமரைக்கரமுள்ளவனும் எதிரிகளை அழிப்பவனும் காக்க.

    ஸர்வாங்கானி மயூரேச விஸ்வவ்யாபீ ஸதாவது

    அநுக்தமபி யத்ஸ் தானம் தூம்ரகேது ஸதாவது

    பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளவனும் மயூரேசனுமானவன், எல்லா அங்கங்களையும் காக்க

    ஆமோதஸ்த் வக்ரத: பாது ப்ரமோத: ப்ருஷ்டதோவது

    ப்ராச்யாம் ரக்ஷது புத்தீச: ஆக்னேய்யாம் ஸித்திநாயக:

    மகிழ்ச்சியிலும் கேளிக்கைகளிலும், முன்னும் பின்னும் எங்கும் உள்ளவன் காக்க. கிழக்கினில் புத்தீசன் காக்க. தென்கிழக்கில் சித்திதாயகன் காக்க

    தக்ஷிணஸ்யாம் உமா புத்ரோ நைருத்யாம் து கணேஸ்வர:

    ப்ரதீச்யாம் விக்னகர்தா வ்யாத் வாயவ்யாம் கஜகர்ணக:

    தென் திசையில் உமாபுத்ரனும் தென்மேற்கில் கணேசரும் மேற்கில் விக்னகர்த்தனும் வடமேற்கில் கஜகர்ணனும் காக்க.

    கௌபேர்யாம் நிதிப் பாயா தீசான்யா மீச நந்தன:

    திவாவ்யாதேக தந்தஸ்து ஸந்தயா ஸு விக்ன ஹ்ருத்

    வடக்கில் நிதிபரும் வடகிழக்கில் நந்தனனும் காக்க எல்லா திசைகளிலும் பகலிலும் ஏக தந்தன் காக்க, சந்தி காலங்களிலும் இரவிலும் விக்னஹரன் காக்கட்டும்.

    ராக்ஷஸாஸுர வேதாள க்ரஹ பூத: பிசாசத

    பாசாங்குசதர: பாது ரஜ: ஸத்வ தம: ஸ்ம்ருதீ:

    ராக்ஷசர்கள், வேதாளம், கிரஹங்கள், பூதங்கள், பிசாசுகள் ஆகியவற்றால் ஏற்படும் பிணிகளிலிருந்து பாசம் மற்றும் அங்குசத்தைத் தரித்தவர் காக்க.

    க்ஞானம் தர்மம் ச லக்ஷ்மீம் ச லஜ்ஜாம் கீர்த்திம் ததா குலம்

    வபுர்தநம் சதான்யம் ச க்ருஹதாரான் ஸுகதான் ஸகீன்

    ஸர்வாயுததர: பௌத்ரான் மயூரே சாவதாத் ஸதா

    கபிலோ ஜாவிகம் பாது கஜாஸ்வான் விகடோவது

    சத்வம், ரஜஸ், தமஸ், ஸ்மிருதி, ஞானம், தர்மம், லக்ஷ்மிகரம், நாணம், கீர்த்தி, நற்குலம், பராக்ரமம், தனம், தான்யம், கிருஹம், மனைவி, மக்கள் நண்பர்கள், பூஜா புனிதங்கள் ஆகிய எல்லாவற்றையும், கபில நிறமுடைய விகடர் காக்க

    இந்தக் கவசத்தைச் சொல்வதன் பலன்

    பூர்ஜபத்ரே லிகித்வேதம் ய: கண்டே தாரயேத்ஸுதி:

    நபயம் ஜாயதே தஸ்ய யக்ஷரக்ஷ: பிசாசத:

    இந்தக் கவசத்தை ஓலை நறுக்கில் எழுதி கழுத்தில் அணிந்து கொண்டால் யட்சர்கள், ராட்சசர்கள், பிசாசுகள் ஆகியோரால் பயமேற்படாது.

    த்ரிஸந்த்யம் ஜபதே யஸ்து வஜ்ர ஸார தநுர்பவேத்

    யாத்ராகாலே படேத்யஸ்து நிர்விக்னேன பலம் லபேத்

    மூன்று வேளையும் ஜபித்தால் வஜ்ரம் போன்ற தேக அமைப்பு கிட்டும். பயணம் செய்யும் சமயத்தில் சொல்வதால், எந்தவிதமான இடையூறுகளும் நேராவண்ணம் இந்தக் கவசம் காப்பாற்றும்

    யுத்தகாலே படேத்யஸ்து விஜயம் சாப்னு யாத்ருதம்

    மாரணோச்சாடனாகர்ஷ: ஸ்தம்பமோஹன கர்மணி

    போர்க்காலங்களில் இந்தக் கவசத்தைப் படித்தால் (மனதுக்குள் சொல்லிக் கொண்டாலே) வெற்றி நிச்சயம், மரணம் சம்பவிக்கக்கூடும் என அஞ்சிடும் நேரத்தில் இந்தக் கவசத்தைச் சொன்னால், மரணபயம் விலகி தீர்க்காயுள் கிட்டும்.

    ஸப்த வாரம் ஐபேதேதத்திநாநாமேக விம்ஸதிம்

    தத்தத்பல மவாப்னோதி ஸாதகோ நாத்ர ஸம்ஸய:

    தினமும் இருபத்தொரு முறை வீதம் ஏழு நாட்கள் ஜபித்தால், ஜபித்தவரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறுமென்பதில் சந்தேகமேயில்லை.

    ஏகவிம்சதி வாரம் ச படேத் தாவத் திநாநிய:

    காராக்ருஹ கதம் ஸத்யோ ராக்ஞாவத்யம் சமோசயேத்

    இருபத்தொரு நாட்கள் இடைவிடாது ஜபித்து வந்தால், அநியாயமாக அடைக்கப்பட்ட சிறைவாசத்திலிருந்து விடுபடவும், ராஜ மரியாதை பெறவும் வாய்ப்பு கிட்டும்

    ராஜதர்சன வேலாயாம் படேதேதத் திரிவாரத:

    ஸராஜானம் வசம் நீத்வா ப்ரக்ருதீச்ச ஸவாம் ஜயேத்

    மூன்று தடவை இக்கவசத்தைப் படித்தால், அரசாங்க உதவிகள் கிட்டும்; பணிகள் யாவும் வெற்றி பெறும். அரசுப் பணிகளில் வெற்றியும் சபையில் புகழாரமும் கிட்டும்.

    இதம் கணேச கவசம் கஸ்யபேன ஸமீரிதம்

    முத்கலாயச தே நாத மாண்டவ்யாய மஹர்ஷயே

    இந்த கணேச கவசத்தை காச்யபர் அருளினார். அவர் அருளியதை முத்கலர், மாண்டவ்யருக்கு அனுக்ரஹித்தார்.

    மஹ்யம் ஸ ப்ராஹ க்ருபயா கவசம் ஸர்வஸித்திதம்

    நதேயம் பக்திஹீனாய தேயம் ஸ்ரத்தாவதே சுபம்

    சர்வசித்தியையும் அளிக்கக்கூடிய இந்தக் கவசத்தை, பக்திபிசகாமல் சிரத்தையுடன் காலையிலும் மதியத்திலும் படித்தால், எல்லா நற்பயனும் கிட்டும்.

    யஸ்யாநேந க்ருதா ரக்ஷா ந பாதாஸ்ய பவேத் க்வசித்

    ராக்ஷஸாஸு வேதாள தைத்ய தாநவ ஸம்பவா

    இந்தப் பரம கவசத்தை மனம் ஒன்றிப் படித்தாலோ பிறர் படிப்பதைக் கேட்டாலோ எல்லாத் துன்பங்களும் விலகும். எவரால் இந்தக் கவசம் படிக்கப் படுகிறதோ அவருக்கு ராக்ஷசர்கள், அசுரர்கள், வேதாளங்கள், தைத்தியர்கள், தானவர்களால் ஏற்படக்கூடிய தீவினைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாது

    4. கஷ்டங்கள் போக்கும் கணநாயக அஷ்டகம்

    தமிழின் சிறப்பான எழுத்து 'ழ' கரமும், ஃ என்ற ஆயுத எழுத்தும்தான் ஆயுத எழுத்து முருகனின் வேலைக் குறிப்பதாகச் சான்றோர்கள் கூறுகிறார்கள்

    அதேபோல் 'உ' என்ற எழுத்துக்கும் ஒரு பெருமை உண்டு. அது, விநாயகரைக் குறிக்கும் எழுத்து.

    இதை 'பிள்ளையார் சுழி' என்பர். தடைகளைத் தடுக்க விநாயகரால்தான் முடியும். அவரே தடைகளை அழிப்பவர்.

    விநாயகரை விக்னேசர், விக்னராஜா என்றும் சொல்வார்கள். விக்னத்தை உண்டாக்குவதிலும் அவரே ஈசுவரர் தம்முடைய வெற்றிகளுக்கு அணை போடாவிட்டால், அதுவே வெள்ளமாக அடித்துக் கொண்டு போக வாய்ப்பு உண்டு. அப்படி அல்லாமல் தடைகள் போட்டு, அதை நிவர்த்தி செய்து, வெற்றியை நிரந்தரமாக்குபவர் விநாயகர் தான். விக்னங்கள் போக்கும் விநாயகனைப் போற்றும் ஏராளமான துதிகள் உள்ளன. ஆனால், மிக எளியதும், பலன்கள் பலவும் தரக்கூடியதுமான துதியாக பலராலும் போற்றப் படுவது, கணநாயக அஷ்டகம், கஷ்டங்கள் யாவும் தீர்க்கும் இந்தத் துதி எளிய தமிழ் விளக்கத்துடன் உங்களுக்காகத் தரப்பட்டுள்ளது.

    விநாயகருக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், பாமர மக்களின் வழக்கில் அவர் கணபதி, கணேசர், கணநாயகர் என்றே அதிகமாக வழங்குகிறார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கணபதிக்கு மிக அதிகமான கோயில்கள் உள்ளன.

    இந்தத் துதியில், கணநாயகரின் பெருமைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதைப் படிப்பதால் ஒருவர் கஷ்டங்கள் யாவும் நீங்கி முயற்சிகளில் வென்று தனவானாகவும் மகா வித்வானாகவும் மாற முடியுமென்று இத்துதியிலேயே கூறப்பட்டுள்ளது

    ஏசுதந்தனைப் போற்றும் இந்த எளிய துதியை சொல்லுங்கள். எப்போதும் வெல்லுங்கள்

    கணநாயக அஷ்டகம்

    ஏகதந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சனசந்நிபம்

    லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்

    ஒரே தந்தத்தையுடையவரும், பெருத்த சரீரத்தை உடையவரும், உருக்கி வார்த்த பொன்னைப் போன்ற மேனியையுடையவரும், பானை போன்ற தொந்தியுள்ளவரும், விசாலமான கண்களையுடையவருமான கணநாயகரை நான் வணங்குகிறேன்.

    மௌஞ்ஜிக்ருஷ்ணாஜுனதரம் நாகயக்ஞோப வீதினம்

    பாலேந்து சகலம் மௌலௌ வந்தே அஹம் கணநாயகம்

    மூஞ்சைப்புல் மற்றும் மான்தோல் ஆகியவைகளைத் தரிப்பவரும், நாகப்பாம்பைப் பூணூலாகத் தரித்திருப்பவரும், கேசத்தின் முன்பக்கத்தில் பிறைச்சந்திரனை உடையவரும், சிரோரத்னமுமான கணநாயகரை நான் வணங்குகிறேன்.

    சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்

    காமரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

    உயர்வான பல்வகைத் தோற்றங்களினால் விசித்திரமான பாவங்களை சித்திரங்களில் காட்டக்கூடிய அங்க லாவண்யங்களையுடையவரும், அழகொளிரக் காட்சியளிக்கிறவரும், நினைத்த ரூபங்களைத் தரிக்கக் கூடியவருமான கணநாயகர் என்ற தேவதேவனை வணங்குகிறேன்

    கஜவக்த்ரம் சுரச்ரேஷ்டம் கர்ண சாமரபூஷிதம்

    பாசாங்குசதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

    யானைமுகனும், தேவர்களுள் உயர்வானவரும், முறம் போன்ற காதுகளையுடையவரும், பாசம் என்ற அங்குசத்தைத் தரித்திருப்பவரும், தேவாதி தேவனான கணநாயகனை நான் வணங்குகிறேன்.

    மூஷிகோத்தமாருஹ்ய தேவாசுர மஹாஹவே

    யோத்துகாமம் மஹாவீரம் வந்தே அஹம் கணநாயகம்!

    தேவாசுரப் போர்க்களங்களில் உத்தமமான மூஞ்சூறு வாகனத்திலேறி யுத்த சன்னத்தராக ஆரோஹணித்து வரும் மகா வீரரான கணநாயகரை நான் வணங்குகிறேன்.

    யக்ஷகின்னர கந்தர்வ சித்த வித்தியா தரைஸ்ஸதா

    ஸ்தூயமானாம் மஹாபாஹீம் வந்தே அஹம் கணநாயகம்!

    யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்தியாதரர்களால் எப்போதும் போற்றித் துதிக்கப்படுபவரும், பெருத்த கைகளையுடைய வருமான கணநாயகரை நான் வணங்குகிறேன்.

    அம்பிகாஹ்ருதயானந்தம் மாத்ருபிர் பரிவேஷ்டிதம்

    பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம்

    அம்பிகையின் இதயத்துக்கு ஆனந்தமளிப்பவரும், அன்னையர்களால் சூழப்பட்டிருப்பவரும், பக்தர்களின் மேல் பிரியமானவரும் அவர்களின் அன்பினால் மதோன்மத்தராக விளங்குபவருமான கணநாயகரை நான் வணங்குகிறேன்

    சர்வ விக்னஹரம் தேவம் சர்வ விக்னவிவர்ஜிதம்

    சர்வ சித்தி ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்

    எல்லாத் தடைகளையும் அழிப்பவரும். எல்லாத் தடைகளையும் வராமல் தடுப்பவரும், கோரிய அனைத்து சித்திகளையும் அளிக்கக் கூடியவருமான கணநாயகர் என்ற தேவாதி தேவனை வணங்குகிறேன்.

    கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர

    சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி

    கணநாயக அஷ்டகம் என்ற இந்தப் புனிதமான துதியை எந்த மனிதன் எப்போதும் சொல்கிறானோ, அவன் மகா வித்வானாகவும் பெரும் தனவானாகவும் மாறுவதோடு, தடைகளை கடந்து அனைத்துக் காரியங்களிலும் சித்தியடைகிறான்

    சுப்ரமண்யர் துதிகள்

    1. சுபிட்சம் அளிக்கும் சுப்ரமண்யன் துதி

    ஆறுமுகமும் பன்னிருகரமும் கொண்ட வேலவன், வேதனைகள் தீர்த்து வேண்டியதை அளிப்பதில் வல்லவன்.

    தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமி நாதன் ஆட்சி செய்யும் சுவாமிமலையில், அவன் என்றும் நீங்காமல் வாசம் செய்வதாக, புராணங்கள் சொல்கின்றன.

    தமிழ்க் கடவுளின் பெருமை பற்றிப் பேசும்போது, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள்,

    ‘சீர்கெழு செந்திலும், செங்கோடும்; குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று பாடியுள்ளார்.

    தெய்வானைக் காவலனாக விளங்கும் தேவசேனாபதியான முருகனின் திருமணம் நடந்த திருநாள் என்ற பெருமைக்கு உரியது. பங்குனி உத்திர நன்னாள். மால்மருகனின் மணநாளில் அவனை வழிபடுவது மகத்தான நன்மைகளைத் தரும்

    அதுமட்டுமல்ல, தெய்வத் திருமணங்கள் பல நடந்த சிறப்பான நாள் பங்குனி உத்திரம். அன்றைய தினம் பெரும்பாலான ஆலயங்களில் பெரும் திருவிழாக்கள் நடக்கும்.

    அதேசமயம், பன்னிரு கையனின் கோயில்களில்தான் பக்தர் கூட்டம் அதிகம் குவியும். காரணம், தைப்பூசமும், பங்குனி உத்திரமும் முருகனுக்கு தனிச் சிறப்பு உடையவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்ல, தைப்பூச நன்னாள் போலவே பங்குனி உத்திரத்தன்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள் பலர் உண்டு.

    அறுபடை வீட்டுக் கடவுளை அல்லல்கள் யாவும் நீங்கிட வேண்டி அனு தினமுமே வணங்கலாம். என்றாலும், ஆறுமுகன், அமரர்கோன் மகளை மணம் புரிந்து கொண்ட பங்குனி உத்திரத் திருநாளில் மனம் உருகித் துதித்து வழிபடுவது, பல மடங்கு நன்மையளிக்கும் என்பது ஐதிகம்

    ஆறெழுத்து மந்திரத்துக்கு உரியவனான சரவணன், ஓரெழுத்து மந்திரமான ஓம் எனும் பிரணவத்தின் பொருளை தந்தை பரமனுக்கு உபதேசித்த சுவாமி மலை தலத்தின் புராணத்தில், ஸ்வாமி நாத ஷட்பதி எனும் அபூர்வமான துதி உள்ளது.

    அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனான அந்த சுப்ரமண்யனைப் போற்றும் அந்தத் துதியைச் சொல்வது சுபிட்சமும், சுபமும் கிட்டச் செய்யும் என்று போற்றப்படுகிறது.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் என்ற யதீந்திரனின் சீடரான, ஸ்ரீராமசந்திரன் என்பவரால் இயற்றப்பட்ட மேலான அந்தத் துதி, எளிய தமிழ் விளக்கத்துடன் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

    குருவான ஈசனுக்கே குருவாக விளங்கிய குமரனை மனதார நினைத்து இத்துதியைச் சொல்லுங்கள். குறையாவும் தீர்ப்பான் குமரன். சுபிட்சம் அளிப்பான் சுப்ரமண்யன், ஆரோக்யம் காத்திடுவான் ஆறுமுகன்.

    ஸ்ரீ ஸ்வாமிநாத ஷட்பதி ஸ்தோத்ரம்

    ஸ்ரீ ஸ்வாமிநாதம் ஸுரப்ருந்த வந்த்யம்

    பூலோக பக்தான் பரிபாலயந்தம்

    ஸ்ரீ ஸஹ்ய ஜாதீர நிவாஸிநப்தம்

    வந்தே குஹம்தம் குரு ரூபிணம் ந:

    தந்தையான சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசத்தைச் செய்த ஸ்வாமி நாதரும், தேவகணங்களால் வணங்கப்படுபவரும், பூமியில் வாழும் அடியார்களைக் காத்தருள்பவரும், சஹ்யாத்ரி மலையில் தோன்றிப் பெருக்கெடுத்தோடிவரும் சிறப்பான காவிரிக் கரையிலுள்ள தலத்தை உறைவிடமாகக் கொண்டவரும், பக்தர் தம் மனமாகிய குகையில் வசிப்பவரும் குருமூர்த்தியுமான முருகப் பெருமானைப் போற்றி வணங்கிடுவோம்.

    ஸ்ரீ ஸ்வாமிநாதம் பிஷஜாம் வரேண்யம்

    ஸௌந்தர்ய காம்பீர்ய விபூஷிதம் தம்

    பக்தார்த்தி வித்ராவண தீக்ஷிதம் தம்

    வந்தே குஹம் தம் குரு ரூபிணம் ந

    தீராப்பிணி தீர உதவும் வைத்திய சிரேஷ்டரும், அழகுடன் கம்பீரமான தோற்றமுடைய வரும், அடியார்களின் குறைகளைப் போக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவரும், ஒரு காரியம் முடியும் வரை வைராக்யத்தோடு இருப்பதைப் போல அண்டியவர் குறைகளைக் களைவதையே லட்சியமாகக் கொண்ட வரும் தமது குருவடிவினருமான ஸ்வாமி நாதப் பெருமானை போற்றி வணங்குகிறோம்

    ஸ்ரீ ஸ்வாமிநாதம் ஸுமனோக்ஞ பாலம்

    ஸ்ரீ பார்வதி ஜானி குருஸ்வரூபம்

    ஸ்ரீ வீரபத்ராதி கணைஸ்ஸமேதம்

    வந்தே குஹம் தம் குரு ரூபிணம் ந:

    தன்னைத் தொழுவோரின் மனத்தை ஈர்க்கும் அழகிய குமாரரும், பார்வதியின் நாயகனான பரம சிவனுக்கு குருவாய் அமர்ந்தவரும், வீரபத்திரர் முதலான சிறந்த வீர கணங்களோடு திகழ்பவரும், நமது குரு வடிவானவருமாகிய ஸ்வாமி நாதப் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.

    ஸ்ரீ ஸ்வாமிநாதம் ஸுரஸைன்ய பாலம்

    சூராதி ஸர்வாஸுர ஸுதகம் தம்

    விரிஞ்சி விஷ்ண்வாதி ஸுரஸேவ்யமானம்

    வந்தே குஹம்தம் குரு ரூபிணம் ந:

    தேவர்களின் படையைப் பரிபாலிக்கும் தேவசேனாபதியும், சூரபத்மன் முதலான அசுரர்களை சம்ஹாரம் செய்தவரும், பிரமன், திருமால் ஆகியோராலேயே போற்றப்படுபவரும், நமது குரு வடிவினருமான ஸ்வாமிநாதப் பெருமானைப் புகழ்ந்து வணங்குகிறோம்

    ஸ்ரீ ஸ்வாமிநாதம் சுபதம் சரண்யம்

    வந்தாரு லோகஸ்ய ஸுகல்பவ்ருக்ஷம்

    மந்தார குந்தோத்பல புஷ்பஹாரம்

    வந்தே குஹம்தம் குரு ரூபிணம் ந:

    தன்னைச் சரணடைந்தோர்க்கு எல்லா நற்பலன்களையும் அளிப்பவரும், அடியார்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் கற்பக விருட்சம் போன்றவரும், மந்தாரை, குந்தம், செங்கழுநீர் போன்ற புஷ்பங்களாலாகிய மலர் மாலையை அணிந்தவரும், நமது குருவடிவினருமாகிய ஸ்வாமி நாதரைப் போற்றி வணங்குகிறோம்.

    ஸ்ரீஸ்வாமிநாதம் விபுதாக்ரிய வந்த்யம்

    வித்யாதராராதித பாத பத்மம்

    அஹோ பயோவீவத நித்ய த்ருப்தம்

    வந்தே குஹம் தம் குரு ரூபிணம்:

    சிறந்த வித்வான்கள், மேதைகளால் வணங்கப்படுபவரும், வித்யாதாரர்களால் பூஜிக்கப்பட்ட திருவடி மலர்களை உடையவரும், பால் காவடிகளைக் கொண்டு அபிஷேகம் செய்வதனால் பெரு மகிழ்ச்சியடைபவரும், நமது குருவடிவினருமான குமார சுவாமியைப் போற்றி வணங்குவோம்.

    ஸ்ரீ ராம கிருஷ்ணாக்ய யதீந்த்ர சிஷ்ய

    ஸ்ரீ ராமசந்திரேண க்ருதாத்ம சுத்யை

    ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்யஹி ஷட்பதியம்

    ஜி யாத்ததீய ப்ரியதாயினி ஸ்ரீ

    பூஜ்யர் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சிஷ்யரான ஸ்ரீ ராம சந்திரன் என்ற முருக பக்தனால், குரு கடாட்சத்தாலும், முருகனின் திருவருளாலும் தனது ஆத்ம சமர்ப்பணமாக இந்த ஸ்வாமிநாத ஷட்பதி ஸ்தோத்ரம் இயற்றப்பட்டது. ஸ்ரீ ஸ்வாமிநாதனை இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி வணங்குவோருக்கு, முருகன் அருள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    2. குறையாவும் தீர்க்கும் குமரன் துதி

    முருகனுக்கு உரிய மந்திரம் ஷடாட்சரம். அவருடைய தந்தை சிவபெருமானுக்கு பஞ்சாட்சரம். 'நம சிவாயப் பொருளோனே' என்று பரமனை அழைப்பார்கள்.

    'ஓம் நமோ நாராயணா' என்கிற எட்டெழுத்து, முருகனின் மாமனான திருமாலுக்குரியது.

    'சரவணபவ' என்ற ஆறு எழுத்து, முருகனுடையதாக மக்களால் கூறப்படுகிறது. வேதங்களும் பழைய நூல்களும் 'குமாராய நம' என்றே அவரைத் துதிக்கின்றன. 'நாதா! குமரா! நம! வென்று அரனார் ஓதியதாய், கந்தர் அனுபூதி கூறுகிறது.

    ‘குமரா, நமவென்று கூறினோர் ஓர்கால் அமராவதி ஆள்வர் என்று. போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் கூறுகிறார்.’

    குமாரன் என்பதற்கு அழகன், இளைஞன், இளையவன் மாரன் என்கிற மன்மதனின் அழகையும் விஞ்சிய பேரழகன் என்று பொருள்

    குமரா என்ற சொல்லிலுள்ள 'மரா'வையே (போக்குகிறவன்) நாரத முனிவர் வால்மீகி முனிவர்க்கு உபதேசம் செய்ததாகவும் பெரியோர்கள் கூறுவர்.

    கந்தனின் பிறப்பு, வீரம் பற்றி ராமாயணத்தில் கூட கூறப்பட்டுள்ளது. முருகனும் ராமனும் இடர்களைப் போக்குகிறவர்கள் தானே!

    குமாரனின் பிறப்பைக் குறித்து காளிதாச மகாகவி எழுதிய காவியம், குமார சம்பவம், அதேபோல, குமாரனின் மந்திரப் பெருமைகளையும் மேன்மைகளையும் கூறுவது குமார தந்திரம். சுப்ரம்மண்யோம்... என்று மும்முறை கூறி, தனக்கு நிகரில்லா பிரம்மஸ்வரூபி குமரனே என உணர்த்துகிறது வேதம். குமார தந்திரத்தில், சுப்ரமண்யரின் மூல மந்திரம் என்ற ஸ்தோத்திரம் கூறப்பட்டுள்ளது. மேலான அந்தத் துதியினைச் சொல்வதன் மூலம், குறையாவும் நீங்க குமரன் அருள்வான் என்பது ஐதிகம். உயர்வான அந்தத் துதி, இங்கே உங்களுக்காக எளிய தமிழில் தரப்பட்டுள்ளது. எல்லா நாட்களுமே அதனைச் சொல்ல ஏற்ற நாட்கள் தான், இம்மாதம் வைகாசி விசாகம் (9.6.2006) என்கிற திருநாள் வருகிறது. முருகனுக்கு உரிய இந்நாளில் முழுமனதாக இதனைச் சொல்வது கூடுதல் பலன் தரும்.

    முருகனுக்கு உரிய நட்சத்திரங்கள், கார்த்திகையும் விசாகமும், கார்த்திகைப் பெண்களால் பாலூட்டி சீராட்டப் பட்டதால் கிருத்திகை நட்சத்திரம் அவனுக்கு உரியது. விசாக நட்சத்திரம் அக்னியுடன் தொடர்புடையது. பரமனின் ஆறு அக்னிப் பொறிகளால் தோற்றுவிக்கப்பட்டவன் முருகன். அதனால் விசாகம் அவனுக்கு உரியது. மேலும், ஆறு உருவாக அவதரித்த ஷண்முகனை விசாகத்தன்று தான் அம்பிகை அனைத்துத் தூக்கி, ஓருருவாக ஆறு குழந்தைகளையும் மாற்றி கந்தன் எனப் பேர் சூட்டி சீராட்டியதாகக் கூறுவர். விசாக நட்சத்திரத்தன்று ஓருருவானதால், விசாகன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதே வைகாசி மாத மூல நட்சத்திரத்தன்றுதான், சீர்காழிப்பதியில் ஞான சம்பந்தப் பெருமானுக்கு அம்பிகை திருமுலைப்பால் அருளியதையும் கருத்தில் கொள்ளலாம்.

    நட்சத்திரங்களுக்குள் விசாகம் மிகவும் ப்ரகாசமானது. அக்னி ஸ்வரூபம். முருகனும் அக்னி சொரூபன். அக்னி ஜாதன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு. முருகனை விசாக நம்பி என்றழைப்பார்கள்.

    பழனிமுருகனை, 'வீறு கொண்ட விசாகா' என்கிறார் அருணகிரிநாதர். திருச்செந்தூர் திருப்புகழில், 'இன் சொல் விசாகா கிருபாகரா' என்று கொண்டாடுகிறார்.

    வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் திருநட்சத்திரம், வைகாசி விசாகம்தான். புத்தர் பெருமானின் பிறந்தநாளும் வைசாக பௌர்ணமியன்றுதான். கோயில்களில் வைகாசி விசாகத்தை ஒட்டியே வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    விசாகத் திருவிழா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புகூட சிறப்பாக நடைபெற்றதாகக் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. 'மழநாட்டுப் பாச்சில அவனீஸ்வரத்திற்கு வைகாசி விசாகத் திருவிழா எழுந்தருளுந்திரு அவனி சுந்தரர்க்கு தெவியன் உத்தம சோழ நக்கனாரான வீரநாரா யணத்தெவியன் எழுந்தருளிவித்த’ என்ற கல்வெட்டுச் செய்தி, திருச்சிராப்பள்ளிக்கு அருகில் மணச்ச நல்லூர் பக்கமுள்ள பாச்சில் அவனீஸ்வரம் என்ற கோயிலில் உள்ளது.

    இத்தகைய பேறு பெற்ற விசாகத்திருநாளில் குமாரனின் ஸ்தோத்திரத்தைச் சொல்வோர் குறையாவும் நீங்கப் பெறுவர். அதிலும், மிக உயர்வான சுப்ரமணிய மூல மந்திரத்தைச் சொல்வது, குறை தீர்த்து கோடி நன்மை தரும்.

    ஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம்

    (துதி சொல்வதன் பலன்)

    அதாத: ஸம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்த்வம் சிவம்

    ஜபதாம் ச்ருண்வதாம் ந்ருணாம் புக்தி முக்தி ப்ரதாயகம்.

    சிவகுமாரனாகிய குமரனின் மூல மந்திரத்தின் பெருமை என்னவென்றால், அதை படிக்கும், கேட்கும், சொல்லும் பக்தர்களுக்கு எல்லாவிதமான போக பாக்கியங்களும் நிறைவாழ்வும், முடிவில் முக்தியும் கிடைக்கும்.

    ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸர்வரோக நிவாரணம்

    அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வ லோகைக பாவனம்

    இத்துதியினைச் சொல்வதால், சத்ருக்கள் யாவரும் விலகுவர். எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது இத்துதி. எப்போதும் அஷ்ட ஐஸ்வர்யங்களை அளிக்கவல்லது. எல்லா உலகத்தினரையும் காக்கவல்லது. (மேலான இத்துதியைச் சொல்கிறேன்).

    சராரண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்

    சரணம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ச்ரியம்

    சரவணம் எனும் நாணல்காட்டில் தோன்றியவரும், சரணடைந்தவர்களை உடனே காப்பவருமான சரவண பவனே, உம்மைச் சரணடைகிறேன். உலகளாவிய மேன்மையான புகழை அளியுங்கள். (நாணல் புற்கள் நிறைந்த குளம் - சரவணப்பொய்கை)

    ராஜராஜ ஸகோத்பூதம் ராஜீவாயத லோசனம்

    ரதிகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

    தேவர்களின் அரசனான தேவேந்திரனின் இடர்களைத் தீர்த்தருளியவரும், தாமரை போன்ற கண்களை உடையவருமான சுப்ரமணியரே, அழகிய வடிவினையும், உலகளாவிய மேன்மையையும் எனக்குக் கொடுங்கள்.

    வலாரி ப்ரமுகைர் வந்த்ய வல்லீந்த்ராணி ஸீதாபதே

    வரதாஸ்ரித லோகானாம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

    மிகக்கொடியவனான வலன் என்ற அசுரனைக் கொன்றதால் வலாரி என்று பெருமையாக அழைக்கப்படும் தேவேந்திரன் போன்றவர்களாலேயே பூஜிக்கப்படுமளவு உயர்வானவரும்; வள்ளி, தேவசேனா (தேவேந்திரனின் மகள்) இவர்களின் கணவரும்; வேண்டிடும் பக்தர்க்கு ஐஸ்வர்யம், புகழ் ஆகியவற்றைக் கொடுப்பவருமான உம்மிடம், செல்வமும் புகழும் தரும்படி யாசிக்கிறேன்.

    நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்

    நவவீனா: பூஜிதாங்கரீம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

    நாரதர் போன்ற மஹா யோகிகளாலும் சித்தர்கள், கந்தர்வர்களாலும் சேவிக்கப்படுபவரும்; வீரபாகு போன்ற நவ வீரர்களால் பூஜிக்கப் படுபவருமான தாங்கள், குறைவிலா மேன்மையை அளியுங்கள்.

    பகவன் பார்வதி ஸீனோ ஸ்வாமின் பக்தார்தி பஞ்ஜன்

    பகவத் பதாபஜயோர் பக்திம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

    பார்வதி குமாரனே, ஸ்வாமியே, பகவானே, பக்தர்களின் மேல் மாளாத வாஞ்சையுள்ளவனே, அடியவர்க்கு அருள்பாலிப்பவனே... எனக்கு மேன்மையையும் வற்றாத ஐஸ்வர்யத்தையும் கொடுங்கள்.

    இதம் ஷடாக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரஹ்மண்யஸ்ய ஸந்ததம

    ய: படேத் தஸ்ய பக்தி தோ நித்யம் ஸுப்ரஹ்மண்யம் ஸ்மரன் புத:

    யோ ஜபேத் ப்ராதருத்தாய ஸுர்வான் காமானுவாப்னுயாத்

    சுப்ரமண்யரின் இந்த ஷடாக்ஷர ஸ்தோத்திரத்தை, எவர் தினமும் காலையில் எழுந்து பக்தியுடன் தியானிக்கிறாரோ, படிக்கிறாரோ அவர் குறைகள் யாவும் நீங்கி, எல்லாவிதமான கோரிக்கைகளும் ஈடேறப் பெறுவார்.

    3. தீராப் பிணி தீர்க்கும் திருச்செந்தூர் ஷண்முகன் துதி

    கீதை நாயகன், ருதுக்களுக்குள் தான் வசந்தம் என்று சொன்னார்.

    வசந்த காலம் என்பது இளவேனிற்காலம் அதாவது சித்திரை, வைகாசி மாதங்கள்

    இந்த மாதங்களில்தான் கோயில்களில் வசந்த உற்சவம் கொண்டாடுவார்கள். அதுவும் திருச்சீரலைவாய் என்கிற திருச்செந்தூரில் கேட்கவே வேண்டாம். முருகனே இங்கு விசாகன் என்றுதான் அழைக்கப்படுகிறார். இத்தல முருகனை, ‘இன்சொல் விசாகா க்ருபாகரா' என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் குறிப்பிடுகிறார். விசாக நட்சத்திரம், ஒளி பொருந்தியது. அதே போல் அக்னி ஸ்வரூபமான முருகனும் ஒளிமயமே!

    அபிநவகுப்தர் என்பவர், ஆதி சங்கரருக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால் நோய்கள் அவரைத் தொற்றிக் கொண்டன. அதனால் பெரும் துன்பமுற்ற ஆதிசங்கரர், திருச்செந்திலாண்டவனை வேண்டி விரதமிருந்து பன்னீர் இலை விபூதியை தினமும் உட்கொண்டார். மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே நோய்களின் வாசனை குறைந்து ஆதிசங்கரர் பூரண குணமடைந்து விட்டார்.

    அதனால்தான் ஆதி சங்கரர் தனது புஜங்க ஸ்தோத்திரத்தில், உன்னுடைய இலை விபூதியைக் கண்டால் கை கால் வலிப்பு, காசம், க்ஷயம், குட்டம் முதலிய நோய்கள் கூட விலகிரும். பூதம், பிசாசு தீவினை யாவும் ஓடிவிடும் என்கிறார்.

    விசுவாமித்திரருக்குக் காசநோய் நீங்க ஆறுமுகனே தன் பன்னிரு கரங்களில் விபூதியை வழங்கியதாக தலபுராணம் கூறுகின்றது. பன்னிரண்டு கைகளின் நினைவாக, பன்னிரண்டு நரம்புகள் உள்ள பன்னீர் இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. திருச்செந்தூரில் தேவர்களே பன்னீர் மரங்களாக நிற்கின்றனர் என்கிறது தல புராணம்.

    ஆதி சங்கரர் சுப்பிரமண்ய புஜங்கத்தைப் போன்றே ஷண்முக ஸ்தோத்திரமும் செய்துள்ளார். அவரே இதில் நோயிலிருந்து அடியார்களை விடுவிக்கவும், சம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றவும் கோரியிருக்கிறார்.

    இந்த ஸ்தோத்திரத்தைப் படித்தால் நோய்கள் விலகும், துக்கம் தீரும், சௌக்கியங்கள் பெருகும் என்பது உறுதி.

    ஆதிசங்கரர் அருளிய திருச்செந்தூர் ஷண்முக ஸ்தோத்திரம்

    நாரதாதி தேவயோகி ப்ருந்தஹ்ருந் நிகேதனம்

    பர்ஹிவர்ய வாஹமிந்து சேகரேஷ்ட நந்தனம்

    பக்தலோக ரோகதுக்க பாபஸங்க பஞ்ஜனம்

    பாவயாமி ஸிந்துதீர வாஸினம் ஷடாநநம்

    நாரதர் முதலான தேவரிஷிகளின் இதயங்களை இருப்பிடமாகக் கொண்டவரும், மயில் வாகனரும், சந்திர சேகரன் என்கிற பிறையணிந்த பெருமானின் செல்லப் பிள்ளையும், உலகில் அடியார்களின் வியாதி, துக்கம், பாபங்கள் ஆகியவைகளைப் போக்குபவரும், கடற்கரையில் எழுந்தருளியுள்ளவருமான ஷடானனனைப் (ஆறுமுகன் சரவணபவ என்று ஆறெழுத்துடையவரை) போற்றுகிறேன்.

    தாரகாரி மிந்த்ர முக்யதேவ ப்ருந்த வந்திதம்

    சந்த்ர சந்தனாதி ஸீதளாங்க மாத்ம பாவிதம்

    யக்ஷஸித்த கின்னராதி முக்ய திவ்ய பூஜிதம்

    பாவயாமி ஸிந்துதீர வாஸினம் ஷடானனம்!

    இந்திரன் உள்ளிட்ட முக்கிய தேவர்களால் மகிழ்ச்சியுடன் வணங்கப்படும் தாரகாரியும் (தாரகனை வதைத்தவர்) நிலவைப் போன்ற குளுமையான சந்தனாதிகளால் அபிஷேகிக்கப்படுபவரும், யக்ஷர்கள், சித்தர்கள், கின்னரர்களால் விசேஷமாக பூஜிக்கப்படுபவரும், கடற்கரையில் வசிப்பவருமான ஷடானனனைத் துதிக்கிறேன்.

    சம்பகாப்ஜ மாலதி ஸுமாதி மால்ய பூஷிதம்

    திவ்ய ஷட்கிரீட ஹார குண்டலாத்ய லங்க்ருதம்

    குங்குமாதியுக்த திவ்யகந்த பங்க லேபிதம்

    பாவயாமி ஸிந்து தீர வாஸினம் ஷடானனம்

    சம்பங்கி, மல்லி போன்ற பல பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளினால் ஆராதிக்கப்படுபவரும், அழகான திவ்யமான ஆறு கிரீடங்கள், மாலை (தங்க ஹாரங்கள்) குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்டவரும், வாசனையுள்ள சந்தனம் மற்றும் குங்குமத்தால் பூசப்பட்டவரும், கடற்கரையில் வசிப்பவருமான ஷடானனனைப் போற்றுகிறேன்.

    ஆச்ரிதாகிலேஷ்ட லோக ரக்ஷணாம ராங்ரிபம்

    சக்தி பாணி மச்யுதேந்த்ர பத்ம ஸம்பவாதிபம்

    ஸிஷ்டலோக சிந்திதார்த்த ஸித்தி தான லோலுபம்

    பாவயாமி ஸிந்துதீர வாஸினம் ஷடானனம்

    உலகங்களைக் காக்கும் அஷ்ட கஜங்களினால் ஆச்ரயிக்கப்படுபவரும், திருமால், இந்திரன், பிரம்மா ஆகியோரால் போற்றப்படும் வேலாயுதரும், தன்னை வணங்கும் அடியார்களின் கோரிக்கைகளைப் பெறுவதற்குத் தானே உதவக் கூடியவரும், கடற்கரையில் வசிக்கிறவருமான ஷடானனனைப் போற்றுகிறேன்.

    வீரபாஹ பூர்வ கோடி வீரஸங்க ஸௌக்யதம்

    சூரபத்ம முக்ய லக்ஷகோடி சூரமுக்திதம்

    இந்த்ர பூர்வ தேவ ஸங்க சித்த நித்யஸௌக்யதம்

    பாவயாமி ஸிந்துதீர வாஸினம் ஷடானனம்

    ஆதியில் கோடிக்கணக்கான வீரர்களுடன் கூடின வீரபாகுவுடன் சேர்ந்து லக்ஷம் கோடி அசுர கணங்களோடு கூடிய சூரபத்மனை சம்ஹரித்து இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாத்திற்கு சௌக்கியத்தை அளித்தவரும் கடற்கரையில் வசிப்பவருமான ஷடானனனைப் போற்றுகிறேன்.

    ஜம்பவைரி காமினி மனோரதாபி பூரகம்

    கும்ப ஸம்பவாய ஸர்வதர்ம ஸாரதாயகம்

    தம்பவாப்தி போதமாம்பி கேயமாக ஸித்திதம்

    பாவயாமி ஸிந்து தீர வாஸினம் ஷடானனம்

    இந்திரனின் (ஜம்பன் என்ற அசுரனைக் கொன்றவன்) மனோபீஷ்டத்தை நிறைவேற்றியவரும் கும்பத்திலுதித்த கும்ப முனிக்கு (அகஸ்தியருக்கு அனைத்து தர்மத்தின் சாரத்தை (தமிழை) அளித்தவரும் சம்சாரம் என்ற சாகரத்தில் உழலா வண்ணம் என்னைப் போன்ற மானுடரையும் காத்துரக்ஷிப்பவரும், கடற்கரையில் வசிப்பவருமான ஷடானவனைப் போற்றுகிறேன்

    பூர்ண சந்த்ர பிம்பகோடி துல்ய வக்த்ர பங்கஜம்

    வர்ணநீய ஸச்சரித்ரமிஷ்ட ஸித்திதாயகம்

    ஸ்வர்ணவர்ண காத்ரமுக்ர சித்த ஸிக்ஷகம்

    பாவயாமி ஸிந்து தீர வாஸினம் ஷடானனம்

    கோடிக்கணக்கான முழு நிலவுகளில்

    Enjoying the preview?
    Page 1 of 1