Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal
Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal
Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal
Ebook701 pages7 hours

Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமிழ்தினும் இனியது நம் தாய்மொழி. இலக்கண இலக்கிய நுால்கள் மட்டுமல்லாமல், சோதிடம், மருத்துவம் முதலான பிற துறை நுால்களும் யாப்பிலக்கணம் கற்று வல்லவரால் செய்யுள் யாப்பில் புனையப்பட்டுள்ளமை, காலந்தோறுமான நுால்களால் புலனாகின்றது.

வேதப்புருடனுக்குக் கண் எனத் தக்கது ‘சோதிடம்’ என்பர். சோதிட நூல்களைக் கற்பதும், பல வகைப்பட்ட அத்துறை சார்ந்த நுால்களைப் புரிந்து கொள்வதும், பிறர் அது குறித்து உரை எடுத்துரைப்பதும் அரிய செயல்களாகும்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580152108331
Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal

Read more from Dr. T. Kalpanadevi

Related to Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal

Related ebooks

Reviews for Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal - Dr. T. Kalpanadevi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பன்முக நோக்கினில் வானியல் சிந்தனைகள்

    Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal

    Author:

    முனைவர். தி. கல்பனாதேவி

    Dr. T. Kalpanadevi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-t-kalpanadevi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கிரகங்களின் உச்ச பலன்கள்

    2. நீசம் - நீசபங்க ராஜயோகம் – பலன்கள்

    3. நவாம்சம் - நவாம்சத்தின் பயன்பாடு.

    4. தேங்காய் சாஸ்திரப்பலன்

    5. ஆந்தை, கருடன், பல்லி பலன்கள்

    6. கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல்

    7. வானியலில் பரிவேடம்

    8. காற்று – காற்றுக்குறி, திசைகள் ஆகியவற்றின் இன்றியமையாமை

    9. காக சாஸ்திரம்

    10. மழைக்குறி சாஸ்திரம் மேகங்கள் பற்றி தரும் வானியல் செய்திகள்

    11. மழைக்குறி சாஸ்திரம் - சாம்பிராணி புகை பற்றி தரும் வானியல் செய்திகள்

    12. மழைக்குறி சாஸ்திரம் சனி பற்றி தரும் வானியல் செய்திகள்

    13. கனவு சாஸ்திரம்

    14. ஓரைகளின் பலன்கள்

    15. விரதம் - விரதத்தின் முக்கியத்துவம்.

    16. தானம் - தானத்தின் முக்கியத்துவம்.

    17. குளிகன் தன்மை – பலன்கள்

    18. துடி, தும்மலின் பலன்கள்

    19. பரிவர்த்தனை யோகம்

    20. இலக்கினங்களின் வகைகள்

    21. இருபத்தியேழு நட்சத்திரங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்து இல்லாமல் அவற்றின் பலன்கள்

    22. இரேகை லட்சணம்

    23. வானியலில் சக்கரங்களின் சிறப்புகள்

    24. கூப சாஸ்திரம்

    25. எட்டு - அட்டமாதிபத்ய தோடம்

    26. சயனம் பலன் அறிதல்

    27. தோடங்கள் அவற்றின் விளைவுகள்

    28. நட்சத்திரங்கள் ஓர் பார்வை

    29. நட்சத்திரங்களின் பெயர்கள்

    30. ஆண்டு

    31. நவக்கிரகங்கள் பற்றிய வரலாறு

    32. இராசி, இராசிகளின் பெயர்கள்

    33. யோகினி

    34. வேதை

    35. கடல் நிலை

    36. முகூர்த்தம் சிறப்புகள்

    37. அஃகம் பலன்கள்

    38. தரிசனம் பலன்கள்

    39. பயிர்கள் விளைவின் நிலை

    ஸ்ரீவாலாம்பிகை துணை!

    ‘சித்தாந்தச் செம்மல்’ ‘சித்தாந்த வித்யாநிதி’

    முனைவர் கி. சிவகுமார், M.A., M.Ed., MPhil., Ph.D.,

    M.A., (தமிழ்), M.A., (மொழியியல்) M.A., (சோதிடவியல்),

    இணைப்பேராசிரியர், துறைத்தலைவர், தமிழ் ஆய்வுத்துறை,

    திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லுாரி,

    விருத்தாசலம் - 606 001. கடலுார் மாவட்டம்.

    மின்னஞ்சல்: sivaarul772@gmail.com

    செல்லிடப்பேசி 94860 55845.

    ***

    அணிந்துரை

    அமிழ்தினும் இனியது நம் தாய்மொழி. இலக்கண இலக்கிய நுால்கள் மட்டுமல்லாமல், சோதிடம், மருத்துவம் முதலான பிற துறை நுால்களும் யாப்பிலக்கணம் கற்று வல்லவரால் செய்யுள் யாப்பில் புனையப்பட்டுள்ளமை, காலந்தோறுமான நுால்களால் புலனாகின்றது.

    வேதப்புருடனுக்குக் கண் எனத் தக்கது ‘சோதிடம்’ என்பர். சோதிட நுhல்களைக் கற்பதும், பல வகைப்பட்ட அத்துறை சார்ந்த நுால்களைப் புரிந்து கொள்வதும், பிறர் அது குறித்து உரை எடுத்துரைப்பதும் அரிய செயல்களாகும்.

    ஏனைய கல்வி போலாது, இதனைக் கற்பதற்குத் தனி ஆர்வம் தேவையாகின்றது.

    ‘தவம் தவமுடையார்க்கு ஆகும்’ எனத் திருக்குறள் கூறுமாறு போல, சோதிடம் கற்றுப் பலன் கூறவும் அவரவர் சாதகத்தில் அதற்கான கிரகக்கூறுகள் அமைதல் இன்றியமையாததாகும்.

    அவ்வகை அமைந்த அரும்பெரும் பேற்றினர் முனைவர் தி.கல்பனாதேவி அவர்கள். சோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சோதிடப் பாடங்கள் பல பயிற்றியவர். தொடர்ந்து ‘முத்துக்கமலம்’ போன்ற இணைய தளங்களிலும், தேசிய கருத்தரங்குகளிலும் சோதிடம் சார் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். ‘பன்முக நோக்கில் சோதிடம்’ குறித்துத் திறனாய்வு செய்து வெளியிடும் ஆற்றலினர்.

    அறிவியல் துறையாம் வானியல் ஈன்ற குழந்தையே சோதிடவியல் ஆகும். கால தத்துவமும், நவகோள்கள், விண்மீன்கள் இவற்றின் இயக்கமும், ஈர்ப்பும் கொண்டு, ஓருயிர் தோற்றத் தறுவாயில் அமைந்த நிலைப்பாட்டினைக் கண்டு, அவ்வுயிர் அனுபவிக்கும் இன்ப துன்ப நிகழ்வுகள் குறித்துச் செவ்வனே எடுத்துரைக்க இயலும்.

    ‘ஸ்ரீ வாலாம்பிகை’ என்னும் புனைபெயரில் இவர் எழுதிய சோதிடக் கட்டுரைகளின் களஞ்சியமாக இந்நுால் இலங்குகின்றது.

    கிரகங்களின் உச்சம், நீசம் குறித்த கட்டுரையில், அக்கிரகங்களின் இராசிகளின் எத்தனையாவது பாகையில் அந்நிலை எய்துகின்றன என விளக்குவதோடு, உச்சம், நீசம் எய்தாத மிதுனம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகளில் உபகிரகங்கள் உச்ச, நீசம் எய்துவதாக இவர் தம் குறிப்பு வேறு எங்கும் காணக் கிடையாத ஒன்றாகும்.

    குளிகனின் இயல்பும், அது இலக்கினம் முதற் கொண்டு இருத்தலால் நேரிடும் பலா பலன்களும் குறித்து இவர் எடுத்துரைப்பது, ஒரு பெரு நுாலாக்கத்திற்குரிய வித்து எனலாம்.

    தேங்காய் உடைபடுதலின் பல்வேறு வகைப்பாடுகளைக் கொண்டு, இன்னின்ன நிகழும் எனச் சகுனமாக உணரும் நம்பிக்கையை மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

    பரிவருத்தன யோகங்கள் குறித்துக் கிரகங்கள், ஸ்தானங்கள் எனப் பல கோணங்களில் விவரித்துள்ளார்.

    மழைக்குறி சாஸ்திரக் கட்டுரைகளில், எந்தக் கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றதோ அதைப் பொறுத்து மழை வரும் நிலையும், நாட்டின் அரசாங்கம், மக்கள், தங்க நகை விலை எனப் பலவற்றின் நிலையும் குறித்து நிர்ணயிப்பதை விவரித்துள்ளார்.

    குஜாதி ஐவரைச் சுற்றிப் பரிவேடன் அமைவதைக் குறித்த கட்டுரை, கிடைத்தற்கரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது எனலாம்.

    காகம் கரைதலை அதன் குரல், ஒலிக்கும் நாழிகை, திசை எனப் பலவும் கொண்டு வகைப்படுத்தி உரைத்துள்ளார்.

    சாந்திராயண விரதம் குறித்து விரதம் குறித்த கட்டுரை விவரிக்கின்றது. இவ்விரதம் அமாவாசை தொடங்கிப் பௌர்ணமியாகிப் பின் அமாவாசை ஆகும் நிலவின் அளவுக்கொப்ப, ஓரிரண்டு உருண்டைகள் என உணவினை அளவிட்டு ஒரு வேளை உண்ணுதலைக் கடைப்பிடித்தல் ஆகிய இயல்பினை உடையதாகும். இக்குறிப்பும் அரியதோர் செய்தியாகும்.

    கூவ சாத்திரப்பகுதியில், கிணறு தோண்டுமிடத்தில், ஒருவரை அருகிருத்தி அவர் அங்கம் தொடும் நிலை கொண்டு, பலன் உணரும் பாங்கினை உணர்த்துகின்றது.

    குழந்தைக்கு உண்டாகும் ஒன்பது வகையான தோஷங்கள், பன்னிரண்டு வகையான இலக்கினங்கள் என்பன அரும் பெருங்கருத்துகள் ஆகும்.

    ‘நட்சத்திரங்களின் ஆயுளை நோக்க நம் ஆயுள் புழுவின் வாழ் நாள் போன்றதாகும். நட்சத்திரங்கள் இளம் பருவத்தில் மிகப் பருத்தனவாக இருந்து, பின் இளைத்துச் சிறுப்பன. அதனால் இவற்றின் ஒளியும் மாறும்’ என்பதும், நட்சத்திரங்களுக்குரிய எட்டுப் பருவங்களை விவரிப்பதும் மிகச் சிறந்த செய்திகள் எனலாம்.

    நட்சத்திரங்கள், கிரகங்கள் குறித்த வேறு பெயர்களை இவர் எடுத்துரைத்திருப்பது, சோதிட ஆர்வலர்க்குப் பெரு விருந்தளிப்பனவாகும்.

    ஓரை, தானம், தரிசனம், இரேகை குறித்த செய்திகளும் குறிப்பிடத் தகுந்தனவாக அமைந்து நல் வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன.

    அரிய தகவல் திரட்டல்களும், முறையான வகைப்பாடுகளும், தெளிவான எடுத்துரைப்பியலும் கொண்டு திகழும் இந்நுால், சோதிடம் அறிய விரும்புவார்க்கும், சோதிடத்தார்க்கும், பொது மக்களுக்கும் பல்லாற்றானும் பயன் பெறும் பாங்கினதாகத் திகழ்கின்றது.

    இவர் மேன் மேலும் இவ்வாறான நுால்களை இச்சமுதாயத்திற்கு வழங்கிப் பெரும் புகழ் பெற இறைவன் பேரருள் புரிவானாக.

    இடம்: விருத்தாசலம்

    நாள்: 22.1.2019.

    வாழ்த்துகளுடன்

    கி.சிவகுமார்

    22.1.2019.

    இல்ல முகவரி

    டாக்டர் தி. கல்பனாதேவி, MA, B.ED, MPHIL, P.HD, D.A, BA, MA, TAMIL, ASTROLOGY,

    தமிழ், ஜோதிடம் உதவிப்பேராசிரியர்,

    மேற்கு மாட வீதி, அச்சிறுபாக்கம் - 603301,

    மதுராந்தகம் வட்டம்,

    காஞ்சிபுரம் மாவட்டம்.

    மின்னஞ்சல் srivalambigai@gmail.com

    அலைபேசி 9865231042. 9489426031.

    ***

    எழுத்தாளர் உரை

    எல்லாம் வல்ல முழு முதற் கடவுளையும், நவ கோடி சித்தர்களையும் மனம், மொழி, மெய்யால் வணங்குகின்றேன். மாதா பிதா, குரு, தெய்வம் ஆகியோர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குின்றேன்.

    மறைந்த எனது தாயார் தி. குணசுந்தரி தாயின் ஆசி என்றென்றும் எனக்கு துணை நிற்க வேண்டும். அவர் இறந்த பின்பு வெளியிடும் நிலை.

    அனைத்து நுால்களையும் பெற்றோர் ஆசியுடன் உயிருடன் இருக்கும் போது வெளியிட எண்ணினேன். அனைத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். எனது துர்ப்பாக்கியம்.

    ‘பன்முக நோக்கினில் வானியல் சிந்தனைகள்’ எனும் இந்நுாலினை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

    சோதிடத்தில் எண்ணற்ற ஐயங்கள், இடர்ப்பாடுகள் பல நிலவுகின்றன.

    கோள்களின் செயல்களை அறுதியிட்டுக் கூறுவது என்பது யாராலும் இயலாத ஒன்று.

    இது பூனை திருப்பாற்கடலைக் குடிப்பது போன்றது. அவ்வளவு கடினமான செயல் ஆகும்.

    இருப்பினும் என்னுடைய ஆர்வத்தினும், அனுபவத்தினும் பொருட்டு என்னால் இயன்ற கட்டுரைகள் வெளியிட்டது, வெளியிடாதது ஆகிய யாவற்றையும் சேர்த்துத் தொகுத்து அனைவரும் பயன் பெற வேண்டும் எனும் நற்சிந்தனையுடன் இவற்றை பதிவாக வைப்பதில் பெரு விருப்பமும், அக மகிழ்வும் கொள்கின்றேன்.

    பல தலைப்புகளிலும், உட்தலைப்புகளுடனும், பல துணை நுால்கள் உதவியுடனும் ஆதார பூர்வமானவையும், பல அனுபவச் செய்திகளும் சேர்த்துத் தொகுத்துத் தரப் பெற்றுள்ளன.

    பல ஆண்டுக்கணக்காக நடைபெற்ற தொடர் பணிகளின் விளைவே இந்நுால். சிறு சிறு மணித்துளிகளாக சேர்க்கப் பெற்று மாலை வடிவாயின என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    தமிழ், சோதிடம், சித்த வைத்தியம் பாரம்பரியப் பெருமையும், புகழும் உடைய பரம்பரை வழியாக விளங்கிய நற்குலத்தில் தோன்றிய ஒரு தமிழ் ஆசிரியர், பிரபல சோதிடராக விளங்கியவர் ஆன எனது முதல் சோதிட குரு திரு ப.திருநாவுக்கரசு என்பவரின் மகள் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன். அன்னாரை பணிந்து வணங்குகின்றேன்.

    சிறு வயது முதலே நான் சோதிட நுால்கள் பயில்வதில் பெரு விருப்பம் உடையவள் என்பதை அறிந்து என்னை தாய் ஸ்தானத்தில் நன்றாக வளர்த்து ஆளாக்கி இத்தகைய இறைப்பணிகளைச் செய்யும் நல்ல உயரிய நிலைக்கு உருவாக்கியவர் என் தந்தையார்.

    எனது ஆய்வு ஐயங்கள், இடர்ப்பாடுகள், வினாக்கள் இவைகட்கு பொறுமையுடன் பதில் அளிப்பவர்.

    இன்று இந்நிலையில் இத்துறையில் நான் வளர்ச்சி அடைவதற்கு முழுமையான காரணம் என் தந்தையார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றும் இல்லை.

    பரம்பரை முன்னோர்களின் ஆசியும், நவகிரகங்களின் ஆசியும், நவ கோடி சித்தர்களின் ஆசியும், சித்தர்களின் தேவியாக விளங்கும் ஸ்ரீவாலாம்பிகையின் ஆசியும், எல்லாம் வல்ல பரம் பொருளின் ஆசியும், இந்த ஸ்ரீவாலாம்பிகை என்னும் புனைபெயருடன் விளங்கும் டாக்டர் தி.கல்பனாதேவி ஆகிய எனக்கு என்றென்றும் துணை நின்று வழி நடத்த வேண்டும்.

    தீட்சை பெற்ற நாள் முதல் இறைவனின் ஆசி தொடர்ந்து வருவதை நான் உணர்கின்றேன். குறைகள் இருப்பின் மன்னித்தருளும் படியும், நிறைகளைப் போற்றி மேலும் மேலும் நான் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனின் ஆசி எனக்கு தொடர்ந்து துணை நிற்கட்டும்.

    பெரு விருட்சமாக இந்த ஸ்ரீவாலாம்பிகை பதிப்பகம் வளர அனைவரும் என்னை ஆசீர்வதிக்கும்படி நுால் ஆசிரியர், பதிப்பாசிரியர் எனும் முறையில் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

    நுாலிற்கு அணிந்துரை வழங்கிய டாக்டர் கி.சிவகுமார் அண்ணா அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த மரியாதையினைச் செலுத்துகின்றேன்.

    மற்றும் இந்நுால் வெளி வர விரும்பும் அனைத்து நல் உள்ளங்கட்கும் எனது அகம் மகிழ்வான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வெளியிட்டு உதவிய அச்சகத்தார்க்கும் எனது மனமார்ந்த நன்றி!

    இங்ஙனம்

    டாக்டர் தி. கல்பனாதேவி.

    வானியல் கவிதை

    வானியல் மண்டலத்தின்

    நிகழ்வுகள்

    என்றென்றும் தொடர்ந்தபடி…

    அரிது! அரிது!

    மானிடராய்ப் பிறத்தல் அரிது!

    எண்பத்து நான்கு

    நுாறாயிர யோனி பேதத்தின்

    சிறந்த பிறவி

    சரத்துள் அடங்கிய மானிடப்பிறவி!

    கர்ம வினையின்

    தொடர்பு மானிடப்பிறவி!

    வானியல் மண்டலத்தின்

    நிகழ்வுகள்

    என்றென்றும் தொடர்ந்தபடி…

    பாரபட்சமின்றி

    சரம், அசரம் அனைத்திற்கும்...

    எத்தனையோ திருநாமங்கள்!

    பெறுகின்றன நவகோள்கள்!

    கோட்சாரத்தில் தான்

    எத்தனை முக்கியத்துவம்!

    வாழ்வினை பிரதிபலித்துக்

    காட்டும் கண்ணாடி கோட்சாரம்!

    என்றுமே மாறாதது

    ஜனன கோட்சாரம்...

    நிகழ்வில் நிகழ்வதை மெய்ப்பிக்கும்

    தற்கால கோட்சாரம்...

    உயிராய் விளங்குவது

    இலக்னம்...

    மெய்யாய் விளங்குவது

    இராசி…

    உயிரும், மெய்யும்

    இணைந்து தொடர்கின்றது…

    நம் வாழ்வின் பயணம்!

    கிரகப் பார்வையில்

    எத்தனை அற்புதங்கள்?

    எத்தனை பலன்கள்?

    நவகிரகங்களின் பொதுப்பார்வையாம்

    ஏழாம் பார்வை!

    குரு, சனி, செவ்வாய்

    பெறுமே அவை தாம்

    சிறப்புப் பார்வையாம்...

    சனியைப் போல் ராகுவும்,

    செவ்வாயைப் போல் கேதுவும்

    பார்வையாம்…

    ஒன்பது எண்ணினில்

    உலகினை அடக்கும்

    எண்ணியல் கணிதம்!

    அங்க அவயங்களை

    பட்டியலிடும்

    சாமுத்திரிகா இலட்சணம்!

    ரேகையினை அழகாய் விளக்கிடும்

    ரேகை இலட்சணம்!

    ரேகை சாஸ்திரம்!

    மனையின் இலட்சணங்களை

    பட்டியலிடும் மனையடி இலட்சணம்!

    மனையடி சாஸ்திரம்!

    சாதகம் இல்லா

    அனைவருக்கும் பிரசன்னம்…

    என்றுமே கை கொடுக்கும்

    ஆரூட இலட்சணம்! ஆரூட சாஸ்திரம்!

    இடி, மின்னல், காற்று, மழை,

    வானவில் போன்ற வானியலின்

    அற்புதங்களை அறிவிக்கும்

    மழைக்குறி சாஸ்திரம்!

    குளம், கிணறு போன்றவற்றின்

    நீர்வளம் காட்டும்

    கூப சாஸ்திரம்!

    முகக்குறி அறிவிக்கும்

    குறி சாஸ்திரம்!

    தேங்காயின் பலன்களை அறிவிக்கும்

    தேங்காய்க்குறி சாஸ்திரம்!

    இன்னும்...

    எத்தனை! எத்தனை!

    வகைப்பாடுகள்!

    உட்பிரிவுகள்!...

    சோதிடத் தாயின் ஆபரணங்கள்

    அனைத்துமே அழகு தான்!

    வானியல் மண்டலத்தின்

    நிகழ்வுகள்

    என்றென்றும் தொடர்ந்தபடி…

    ஆத்மா, மனது, சகோதரன்,

    வித்யா, புத்திரம், ரோகம், காமம்,

    ஆயுள், கருமம், இலாபம், ஞானம், மோட்சம்

    ஆகியவற்றின் காரகனாய் நின்று

    பன்னிரு பாவகத்தினை

    அழகாய் இயக்கி விளக்கிடும்

    நவகோள்கள்!

    வானியல் மண்டலத்தின்

    நிகழ்வுகள்

    என்றென்றும் விண்ணில்

    தொடர்ந்தபடி...

    ***

    சங்க இலக்கியத்தில் வானியல்
    வானியல் பேழை - நம் சங்க இலக்கியம்!

    வானசாத்திரக்கலையில் தமிழன் சித்தன்!

    வானுலவும் நாண்மீன்! கோண்மீன்!

    வைகுறு வானமீன்! பன்மீன்! மழைமீன் வெண்மீன்!

    கடலலை ஒடுக்கும் அகத்தியமீன்!

    வானத்தணங்கு ஊர்ச்சைமீன், சாலிமீன்,

    எனும் வடமீனாம் அருந்ததியே!

    உயர்ந்ததன் மேற்றே உவமை! வானத்து

    மீன்கணற்றதன் சுனை! நாண்மீன்வாய் சூழ்ந்த மதிபோல்

    மிடைமிசைப் பெண்கள் எனும் முல்லை!

    ஓதிம விளக்கொளி போல், ஓங்கல் வானத்து விடிவெள்ளி!

    பசுங்கண்வானம், செக்கர்வானம், மழையில் வானம்... வானழகு!

    வானம், துளி, ஆலி, பெயல், புயல், மின்னல், கொண்மூ,

    காலை கிழக்கு இடி, வான்மழை... யாவும் மழைக்குறியே!

    கார் பருவ ஆவணி அவிட்டநாளின்

    கோள்களின் ஒழுங்குநிலை, சோமனை அரவு தீண்டிய

    சந்திரகிரகணம் இயம்பும் வையை!

    ஆடு தலையாக…. வரும் இராசிமண்டிலத்தில்

    உரோகிணியைக் கூடிய சந்திரனைச்

    சித்தரிக்கும் அரசியின் கட்டில் மேல் விதானச்சித்திரம்!

    அறுமீன் விசும்பின் ஆல் போல் முசுண்டை மலரழகே!

    மதி சேர்ந்த மங்கலம் தரும் மகவெண்மீன்!

    கோள்கால் நீங்கிய கொடுவெண்திங்கள்...

    முதுசெம்பெண்டிர் நிகழ்த்திய வதுவையாம்!

    புறப்பாட்டின் வெண்மீன் தெற்கேகின் வற்கடகாலம்!

    மைம்மீன் புகைதல், துாமம் தோன்றல், கனலிநால் வயிற்தோன்றல்,

    மீன் உதிர்தல், வீழ்தல், எரிமீன் தோன்றல், குளமீன்,

    தாள்மீன் புகைதல்… யாவும் தீ நிமித்தங்களே!

    வானியல் பேழையாம்! நம் சங்க இலக்கியம்!

    1. கிரகங்களின் உச்ச பலன்கள்

    கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத ராசிகள், உச்ச நீச பலன், கிரகங்களும் உச்சமும், சூரியன் உச்சம், சந்திரன் உச்சம், செவ்வாய் உச்சம், புதன் உச்சம், இரு கோள்கள் உச்சம், குரு உச்சம், சுக்கிரன் உச்சம், சனி உச்சம், இராகு உச்சம், கேது உச்சம், உச்ச பங்க நீசயோகம் ஆகியவற்றினைப் பற்றி வானியல் நுால்களின் வழி இங்கு காண்போம்.

    கிரக உச்ச நீச அளவு

    அ.ஜோ.க எனும் நுால் சூரியன் மேஷத்தில் 30 பாகையில் உச்சமும், துலாத்தில் 30 பாகையில் நீசமும் பெறுகிறது. சந்திரன் ரிஷபத்தில் 3 பாகையில் உச்சமும், விருச்சகத்தில் 3 பாகையில் நீசமும், செவ்வாய் மகரத்தில் 28 பாகையில் உச்சமும், கடகத்தில் 28 பாகையில் நீசமும், புதன் கன்னியில் 15 பாகையில் உச்சமும், மீனத்தில் 15 பாகையில் நீசமும், குரு கடகத்தில் 5 பாகையில் உச்சமும், மகரத்தில் 5 பாகையில் நீச்சமும், சுக்கிரன் மீனத்தில் 27 பாகையில் உச்சமும், கன்னியில் 27 பாகையில் நீசமும், சனி துலாத்தில் 20 பாகையில் உச்சமும் மேஷத்தில் 20 பாகையில் நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது.

    உச்சம் நீசம் பெறாத ராசிகள்

    மேலும் இந்நுால் ராசி வீடுகளில் மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம், நீசம் பெறவில்லை. அங்கெல்லாம் உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பரிவேடன், மிதுனத்தில் உச்சமும், தனுசில் நீசமும் பெறுகின்றன. இந்திரதனுசு தனுசில் உச்சமும், மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது. தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும் சிம்மத்தில் நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது.

    உச்ச நீச பலன்

    அ.ஜோ.க எனும் நுால் ஒரு ஜாதகத்தில் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான பலன்களையும் வழங்கும் என்பது பொது விதி என்றும் குறிப்பிடுகின்றது.

    கிரகங்களும் உச்சமும்

    அ.ஜோ.க எனும் நுால் சூரியனுக்கு மேஷமும், சந்திரனுக்கு ரிஷபமும், செவ்வாய்க்கு மகரமும், புதனுக்கு ஆட்சி வீடான கன்னியும், குருவிற்கு கடகமும், சுக்கிரனுக்கு மீனமும், சனிக்கு துலாமும் உச்ச இராசிகளாகும் என்றும் குறிப்பிடுகின்றது.

    *⁴

    சூரியன் உச்சம்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரகமாலை எனும் நுால் மேடராசியில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் அதிக யோக பலனையும், வித்யா செல்வமும், கீர்த்தியும், பெருமையும், உத்தியோகப்பலனும், வியாபார லாபமும், புகழும், செல்வமும், மேன் மேலும் பெருகி தனந்தான்யத்துடனே வாழ்ந்திருக்கச் செய்வார்.

    ஆனால் சனி பகவான் சுக்கிரன், இராகு, கேது, சூரியனுடன் சேர்ந்திருந்தால் கெட்டப் பலனையே செய்வார் என்பதனை,

    "சூரியனும் மேஷத்தி லுச்சமானால்

    சொல்லொணா யோகத்தை மிகவே தந்து..."

    *⁵

    பாடல் சான்று பகர்கின்றது. அ.ஜோ.க எனும் நுால் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தகப்பனாரின் ஆரோக்கியமும் நன்கு இருக்கும். ஆயுள் பாவமும் பலத்திருக்கும் தகப்பனாருடனான உறவு முறை நல்ல முறையில் இருக்கும். மதப்பற்று மிக்கவராக இருப்பார். அரசுத்துறையில் பணி புரிவர். ஆசிரியர், மருத்துவர், காவல் மற்றம் இராணுவத் துறையில் பணியாற்றுவர் என்றும் குறிப்பிடுகின்றது.

    *⁶

    சந்திரன் உச்சம்

    பெ.சோ.சி.கோவை - நவக்கிரகமாலை எனும் நுால் சந்திரன் ரிடபத்தில் உச்சம் பெற்று இருந்தால் சகல வித செல்வமும் பெருகி, தேக ஆரோக்கியமும், ஒளியும், சுக போக யோக போக்கியமும், வித்தையும், புத்தியும், உத்தியோக செல்வமும், வியாபார லாபமும், புகழும் வெகுவாகத் தந்து வாழ்ந்திருக்கச் செய்வர். ஆனால் இராகு கேது சேர்ந்திருந்தால் மனத்துன்பமும், கவலையும் நேரிடச் செய்து எப்போதும் கவலையும், துன்பமும் உண்டாகச் செய்து பரிதவித்திடச் செய்யும். எனவே மற்றக் கிரகங்களின் பார்வை நோக்கமும் கவனித்துத் தான் பலன் ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

    *⁷ அ.ஜோ.க எனும் நுால் சந்திரன் உச்சம் பெற்றிருந்தால் தாயாரின் ஆரோக்கியம் ஆயுளுக்கு நல்லது. ஜாதகர் பெண்களுக்குப் பிரியமானவராக இருப்பர். அறிவும் ஆற்றலும் மிக்கவர். பொறுமைசாலி. கலைஞராக இருப்பர். செயல் திறன் மிக்கவராக இருப்பர். செல்வந்தராக இருப்பர். பெண் மோகம் கொண்டிருப்பர். புத்திர பாக்கியத்திற்கு குறை இருக்காது என்றும் குறிப்பிடுகின்றது.

    *⁸

    பலதீபிகை எனும் நுால் மூன்று முதலான கிரகங்கள் உச்சம், கேந்திரம், ஆட்சியில் இருப்பின் பிரசித்த பூபதியாவான். ஐந்து முதலிய கிரகங்கள் மேற்கண்டபடி இருப்பின் அரசன் அல்லாத அன்னிய வமிசத்தில் பிறந்தவனாயினும் பூமிக்கு இறைவனாய் நாற்படையுடன் கூடி இருப்பான். கேந்திரம், ஆட்சி. உச்சம் ஆகிய இவைகளை அடைந்து மூன்று கிரகங்கள் இருக்கின் பூபதி வம்சத்தில் பிறந்தோராயும், பூபால சிரேஷ்டராயும் இருப்பர். மேற் குறித்த இலக்கணப்படி அன்னிய குலத்திற் பிறந்தோராயினும் இராஜ சமானத்தையும், ஒரு சமயம் இராஜ செல்வத்தையும் அடைவர். இலக்கினேசன் கேந்திரத்திலாவது 9 இல் ஆவது உச்சம், ஆட்சி, வர்க்கோத்தமம் அடைந்தால் குருபதியாவான் அல்லது மகாராஜன் ஆவன் என்றும், சந்திரன் உச்சம் ஆட்சியில் இருக்கும் கிரகங்களால் பார்க்கப் பெற்று கிரணங்களோடு கூடி இலக்கினம் நீங்கலான மற்ற கேந்திரங்களில் இருந்தால் அரசன் ஆவன்.

    சூரியன் தனுசின் முற்பாதியில் இருந்து அதில் சந்திரன் தொடர்பு பெற்று பிறந்த இலக்கினத்தில் சனி பலத்து இலக்கினம் அந்த சனிக்கு உச்ச ராசியானால் அரசனாவான். இவன் பிரதாபாக்னியினால் இவன் சத்துருக்கள் எதிரிகள் அனைவரும் பயந்து துாரத்தே நின்று வணங்குவர்.

    சுக்கிரன், குரு, சனி ஆகிய இவர்கள் மீனத்தும், சந்திரன் உச்சம் இருந்து சூரியன், குசன் ஆகிய இவர்களால் பார்க்கப் பெற்று மேடம், பிறந்த இலக்கினமாயின் அரசன் ஆவான். ஓர் கிரகம் உச்சத்தில் இருந்து மித்துரு கிரகங்கள் தொடர்பாவது, பார்வையாவது பெற்றால் தனாதிபதியாய அரசன். சூரியன் தனது நவாம்சத்திலும், சந்திரன் கடகத்திலும் இருந்தால் தேசாதிபதி.

    மீனத்தில் பூரண சந்திரனிருந்து மித்ரு கிரகத்தாற் பார்க்கப் பெற்றால் உலோகானந்தகரனான அரசன், பூர்ண சந்திரன் உச்சத்தில் இருந்தால் மிகுந்த கியாதியும் சர்வசன பூசிதமும் பெற்ற மகபதி ஆவான் என்றும் அந்நுால் ஏழாவது அத்தியாயம் உச்ச பலன்கள் பற்றித் தெரிவிக்கின்றது.

    *⁹

    செவ்வாய் உச்சம்

    பெ.சோ.சி.கோவை – நவக்கிரகமாலை எனும் நுால் மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் பூமி லாபமும், காணி, கழனி பெருக்கமும் கிடைத்து திரவிய லாபத்துடன் புகழுடன், உறவினர்கள், நண்பர்கள் சேர்க்கையும் பொருந்தி நலமாய் வாழ்ந்திருக்கச் செய்யும். ஆனால் சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் கொடிய இரணகளத்தில் சண்டை சச்சரவு நேரிடும் போது எத்தகையதான சித்தப்பிரமையும், பயங்கரமும், சஞ்சலமும், திகிலும் ஏற்பட்டு எவ்விதம் கலங்கச் செய்யுமோ அவ்விதமாயிருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது.

    *¹⁰

    அ.ஜோ.க எனும் நுால் செவ்வாய் உச்சம் பெற்றவர் மன உறுதி, தைரியம் மிக்கவராக இருப்பர். முன் கோபி. சகோதரர்களுடன் நல்ல உறவு கொண்டிருப்பர். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் ஈடுபாடும் இருக்கும். வீடு, நிலம் போன்ற சொத்து இருக்கும். சண்டை போடுவதில் வல்லவராக இருப்பர். கடவுள் பக்தி உள்ளவர் என்றும் குறிப்பிடுகின்றது. *¹¹

    புதன் உச்சம்

    பெ.சோ.சி.கோவை - நவக்கிரகமாலை எனும் நுால் கன்னியில் புதன் உச்சம் பெற்று இருந்தால் பொன், பொருள், சேர்க்கை, வித்யாலாபம், உத்தியோக மேன்மை, வியாபார லாபம். கீர்த்தி, பெருமை, புத்திரமித்திராதி, களத்திர லாபம் அனைத்தும் உண்டாகும். ஆனால் புதனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் பல துன்பமும், துயரமும், நேரிடும் என்றாலும் சுபக்கிரகங்கள் பார்வையானால் மத்திம பலனாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. *¹²

    மேலும் கன்னியில் புதனுடன், சந்திரனும், சூரியனும் சேர்ந்திருந்தால் வித்யாபிவிருத்தியும், சங்கீத ஞானமும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் சிறந்த வித்வானாக விளங்கி காண்போர் புகழ்ந்துரைக்கும் படி மிக மகிழ்வுடன் மிகுந்த செல்வத்துடன் வாழ்ந்திருந்து பொன், பொருள் ஆகிய யாவற்றுடனும் நன்மையான அனைத்து வித உறவுகளுடனும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. *¹³

    அ.ஜோ.க எனும் நுால் புதன் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் திறமை மிக்கவராக இருப்பர். விரோதிகளை வெல்லக் கூடியவர். கல்வி, அறிவு மிக்கவர், சங்கீதத்தில் நாட்டமுள்ளவராக இருப்பர். குடும்பத்தை மேன்மை படுத்தக் கூடியவர். சிறந்த தலைவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. *¹⁴

    இரு கோள்கள் உச்சம்

    புதன், சந்திரன் உச்சம் - கோவை நுாலினுள் ஸ்திரீகள் ருது ஜாதக நிர்ணயம் பகுதியில் உதய லக்னம் கன்னியாக அதில் புதனும், சூரியனும் இருக்க பாக்கிய ஸ்தானமாகிய ரிடபத்தில் இலாபாதிபதியாகிய சந்திரன் உச்சம் பெற்றிருக்க இராகு, சனி இவ்விருவரும் கும்பத்தில் இருந்தால் அந்த ஜாதகி வெகு சாமார்த்தியமாய் அனைவரும் ஆச்சரியப்படும் படியாக வெகு பொருள் தேடி வௌ்ளி, பொன் ஆபரணாதிகளுடன் அரச வாழ்க்கை வாழ்வர் என்றும் குறிப்பிடுகின்றது. *¹⁵

    குரு உச்சம்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரகமாலை எனும் நுால் குரு கடகத்தில் உச்சம் பெற்றால் அரச யோகமாய், வாழ்ந்திருக்கும் படியான நன்மையையும், பொன், பொருள், ஆகிய அனைத்து வகைச் செல்வமும், புத்திர லாபமும், வித்யாபி விருத்தியும், உத்தியோக வளர்ச்சியும், பெற்று நலமாய் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியன், சனி, ராகு, கேது இவர்கள் பார்த்தாலும், சேர்ந்தாலும், பல விதமாகிய மனத்துன்பமும், கவலையும் உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றது. *¹⁶

    மேலும் மேடத்திலாவது, விருச்சிகத்திலாவது செவ்வாய் இருந்தால் மிகவும் மேன்மையான தன லாப யோகம் இருக்கும். ஆனால் கடகத்தில் குரு உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக விருச்சிகச் செவ்வாயைப் பார்த்தால் பொன், பொருள், பூமி இலாபம், புகழ், தனம் தான்யம், செல்வம் விசேடமாய் பெருகி உறவு, நட்பு, மனைவி, மைந்தருடன் எப்போதும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள். இலக்கினக் கணிதத்தைப் பார்த்துக் கணக்கெடுத்து இராசி கணிதமும் ஆராய்ந்து நட்சத்திர பாகத்தின் படியே திசா புத்தி பிரித்து பலன் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. *¹⁷

    அ.ஜோ.க எனும் நுால் குரு உச்சம் பெற்றிருந்தால் கல்வி அறிவு நுட்பமுள்ளவராக இருப்பர். நல்ல குணமுள்ளவர். பெருமையாக வாழக் கூடியவராக இருப்பர். அட்டமா சித்துக்களையும் வென்றவராக இருப்பர். புத்திர பாக்கியம் இருக்கும். பிறருக்கு உபதேசம் செய்பவராகவோ அல்லது தலைமை ஸ்தானம் பெற்றவராகவோ இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. *¹⁸

    சுக்கிரன் உச்சம்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரகமாலை எனும் நுால் சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைந்திருந்தால் சுக போகமும், செல்வமும், புகழும் பெற்றிருப்பதுடன் உத்தியோக செல்வத்தினாலும், வியாபார செல்வத்தினாலும், பொருள் சேகரஞ் செய்து மேன்மை அடைந்திருக்கும் படிச் செய்வார். ஆனால் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்திருந்தால் துன்பமும், கவலையும், வறுமையும், வியாதியும், எதிரிகளின் கலகமும், பயங்கரமும் பொருந்தி துன்புறச் செய்யும் என்று குறிப்பிடுகின்றது. *¹⁹

    மேலும் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கும் போது குரு ஆட்சியாய் சேர்ந்திருந்தாரானால் அந்த சாதகன் வித்யாபி விருத்தி அடைந்தவனாய் நான்கு வேதம் உணர்ந்த சிறந்த சாஸ்திர ஞானியாய் உவகத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் குருவாய் விளங்கி மிகுந்த புகழுடன் வெகு பொருள் தேடி செல்வந்தனாய் ஒழுக்கக் குணத்துடன் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியனும், செவ்வாயும், சுக்கிரனுடனே சேர்ந்து இருந்தால் மந்த புத்தியும், கெட்ட குணமும் பொருந்திய உலுத்தனாய் எல்லோருக்கும் பகையாகி வறுமையாளனாய் இருப்பதற்காகும் என்றும் குறிப்பிடுகின்றது. *²⁰

    அ.ஜோ.க எனும் நுால் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பர். வசதி நிறைந்த வாழ்க்கையும் மதிப்பும் கௌரவமும் இருக்கும். பெண்களால் விரும்பப்படுவர். களத்திரம் நல்ல முறையில் அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை மிகும். அயல் நாட்டு பயணம் ஏற்படும். தெய்வ வழிபாடும் செய்வர். வாகன யோகம் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. *²¹

    சனி உச்சம்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரகமாலை எனும் நுால் சனி துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் மகா திறமையும், மன தைரியமும், உற்சாகமும் பொருந்தி வித்யாபி விருத்தியும், உத்தியோக மேன்மையும், புகழும், தனந்தான்ய செல்வமும், பெருமையும், பொருள் சேர்க்கையும் புத்திர மித்திராதி களத்திராதி இலாபமும் கிடைத்து ஆனந்தமாய் இருக்கச் செய்யும். ஆனால் அந்த சனியுடன் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்தாலும், பார்த்தாலும் பல விதமாகிய துன்பமும், கவலையும் உண்டாவதுடன் வியாதியும், துயரமும் உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றது. *²²

    அ.ஜோ.க எனும் நுால் சனி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பேச்சு வன்மை மிக்கவராக இருப்பர். வசதியுடன் வாழ்வார். தீர்க்காயுள் உள்ளவர். வாழ்க்கையில் முன்னேற்றம், மதிப்பு இருக்கும். தைரியம் மிக்கவர். இரும்பு எந்திரம் தொடர்பான தொழிலில் சிறப்பு உண்டு. கன்னிப் பெண்களிடம் ஆசை மிகக் கொண்டவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. *²³

    இராகு - கேது: உச்சம் – இராகு - விருச்சிக இராசியில் பலன் – இராகு – சூரியன் - சந்திரன் தொடர்பானால் பலன்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரக மாலை எனும் நுால் இராகு விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் மிகு திறமை, கல்வி வளர்ச்சி, மன மகிழ்ச்சி, பணி வளர்ச்சி, வியாபார இலாபம், தனந்தான்யம் முதலியன பெற்று புகழுடன் வாழ்வர். இராகுவுடன் சூரியனும், சந்திரனும் தொடர்பானால் பல வகையான மன சஞ்சலமும், அதிர்ச்சியும் பயங்கரமும், கொடிய துன்பமும், நோயும் அடைவர் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. *²⁴

    இராகு உச்சம்

    அ.ஜோ.க எனும் நுால் இராகு உச்சம் பெற்றிருந்தால் கல்வியில் சிறப்பு உண்டு. தைரியம் மிக்கவராகவும் இருப்பர். செல்வம், செல்வாக்கு பெற்றிருப்பர். தந்தை வழி உறவினர் சுபீட்சமாகவும், உதவிகரமாகவும் இருப்பர். விளை நிலங்களால் நன்மை உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. *²⁵

    உச்சம் - கேது விருச்சிக இராசியில் பலன் - கேது, சூரியன், சந்திரன் தொடர்பானால் பலன்

    பெ.சோ.சி.கோவை நவக்கிரகமாலை எனும் நுால் கேது விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் கல்வியும், ஞானமும், புகழும், பெருமையும் பொருந்தி கல்வி வளர்ச்சியும், பணி மேன்மையும், வியாபார இலாபமும் பெற்று, அனைத்து வகைச் செல்வமும், சுற்றமும், நட்பும் பெற்று மேன்மையாய் வாழ்வர். கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்ந்திருந்தால் மனக்கலக்கமும், கவலையும் சோம்பலும், மனச்சோர்வும் பொருந்தி மன வெறுப்பாய் இருப்பார்கள் என்பதனை,

    "கேதுபகவான் விருச்சிகராசி தன்னில்

    கெம்பீரமாகவே உச்சமானால்" *²⁶

    என்று இப்பாடல் தெரிவிக்கின்றதால் அறியலாம்.

    விருச்சிக இராசியில் இராகுவாகிலும், கேதுவாகிலும் உச்சமாய் இருக்கும் போது செவ்வாய் ஆட்சியாய் இருந்தால் மிகுந்த செல்வமும், பூமி ஆதாயமும், பொன், பொருள் முதலானவையும் பெற்றுப் புகழுடன் நலமாய் வாழ்வர். சூரியனும், சனியும் இராகு கேதுவுடன் சேர்ந்தால் பல விதமான வம்பும், பகையும், சண்டை சச்சரவும், வழக்கும் துன்பமும், பிறவும் நேரிட்டுக் கலங்குவர். *²⁷

    கோவை நூலினுள் ஜெயமுனி சோதிட சூத்திரம் இராகு விருச்சிகம் இராசியில் உச்சம் என்றும் இடபம் இராசியில் நீசம் என்றும் குறிப்பிடுகின்றது.

    "பாம்பது கன்னி செட்டி பார்தனுமகர கும்பம்

    கோம்பிலா மீனம் நட்பு சோர்விலா மிதுன மாட்சி." *²⁸

    "கேதுயாழ் விடையுங்கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம்

    வாதைசெய் தேளு மீனம் மகர்தனு கன்னி ஆட்சி." *²⁹

    எனும் பாடல்கள் சான்று பகர்கின்றன.

    கேது உச்சம்

    அ.ஜோ.க எனும் நுால் கேது உச்சம் பெற்றவர் சுய நம்பிக்கை மிக்கவராக இருப்பர். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவர். வைராக்கியம் மிக்கவர். ஆன்மீகத் துறையில் அதிக நாட்டம் கொள்வர். அதனால் மேன்மையும் பெறுவர் என்றும் குறிப்பிடுகின்றது. *³⁰

    பலதீபிகை தரும் செய்திகள் கிரகம் உச்ச ஸ்தானத்தில் இருந்தால் நவரத்தினாதிபதி ஆவான். அரசனால் ஸ்தௌத்யம் செய்யப் பெறுவான். செல்வங்கள் யாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவன். உதாரம், வணக்கம், கீர்த்தி, விதரணை, தைரியம், யுக்தி, விக்கிரமார்க்கனைப் போலொத்த வெற்றி வீரம் ஆகியவை உண்டு.

    கிரகம் தன் சொந்த வீட்டில் இருந்தால் பிரபு, சன்மானம் அல்லது பிரபுத்வம், சஞ்சலமின்மை, கிருகத்தில் இருக்கை, புதிதான வாசஸ்தலம், பூமி லாபம், கால அளவிற் பந்துக்களாற் பெற்ற வெகுமானம், சகல வஸ்துக்களையும் அடைதல் முதலிய பேறுகள் உண்டாம்.

    கிரகம் மித்துரு நட்பு இடத்தில் இருந்தால் நண்பர்களால் காரிய சித்தி உண்டு. புதிய நட்பு உண்டு. சற்புத்திர களத்திர தன தானிய சம்பத்துக்களும் உண்டாகும். உலகினர் நன்மை செய்வர்.

    கிரகம் பகை இடத்தில் இருந்தால் இழிவானவன். பிறர் உணவிற்கு எதிர்பார்ப்பவன். பரகிரக வாசம் செய்பவன். எதிரிகளினால் துன்பம் அடைபவன். எப்போதும் நன்மை செய்வான் போல் இருப்பான். மனதில் வைராக்கியம் உள்ளவன்.

    கிரகம் நீச இடத்தில் இருந்தால் தனது விருத்தியினும் தாழ்மைப்படுதல், தைனியம் (தாழ்மை), துராசாரம், கடன் வரவு, நீசம், ஆசிரியம், சங்கடப்பிரதேச வாசம், அடிமையாய் இருத்தல், வழி நடத்தல், அனர்த்தமான காரியஞ் செய்தல் ஆகிய இவை உண்டாகும்.

    கிரகம் மூடத்தில் இருப்பின் விரைவில் மரணம் உண்டாகும். களத்திர, புத்திர தனங்களுக்கு அழிவுண்டு. வியர்த்தத்தில் கலகம், அபவாதம், அவமானம் ஆகிய இவை உண்டாகும்.

    கிரகம் சமஸ்தானத்தில் இருந்தால் விசேட பலனை உண்டாக்காது. துக்கம், சுகம் ஆகிய இவை இரண்டும் சமனாம். ஓர் வகை சஞ்சலமில்லாதிருக்கையும் உண்டாம்.

    கிரகம் வக்ரத்தில் இருந்து பகை, நீச இடங்களில் இருந்தாலும் உச்ச பலனாகும். வர்க்கோத்தமத்தில் இருக்கும் கிரகம் ஆட்சி வீட்டிற்குரிய பலனைக் கொடுக்கும் என்றும் ஒன்பதாவது அத்தியாயம் தெரிவிக்கின்றது. *³¹

    உச்ச பங்க நீச யோகம்

    ஆறு எட்டுப் பன்னிரண்டில் உச்சர் இருந்து, சத்துருவினால் பார்க்கப் பெற்று சராங்கிசம் ஏறி இருந்தாலும், அல்லது சத்துருவைக் கூடி, உச்சமாயிருந்தாலும் இந்த யோகமாகும். இவ்விதம் கிரகங்களின் உச்சத்தினால் விளையும் பலன்களைப் பற்றி அறிந்தோம்.

    சான்றெண் விளக்கம்

    ¹. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.104.

    ². மே, பக். 80 – 81.

    ³. மே, ப.70.

    ⁴. மே, ப.91.

    ⁵. பெ.சோ.சி.கோவை, ப.113.

    ⁶. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.52.

    ⁷. பெ.சோ.சி.கோவை, ப.114.

    ⁸. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.56.

    ⁹. பலதீபிகை, பக். 67 - 69.

    ¹⁰. பெ.சோ.சி.கோவை, ப.114.

    ¹¹. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.64.

    ¹². பெ.சோ.சி.கோவை, ப.114.

    ¹³. மே, ப.121.

    ¹⁴. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, பக்.67.

    ¹⁵ பெ.சோ.சி.கோவை, ப.361.

    ¹⁶. மே, ப.115.

    ¹⁷. மே, ப.121.

    ¹⁸. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.70.

    ¹⁹. பெ.சோ.சி.கோவை, ப.115.

    ²⁰. மே, ப.123.

    ²¹. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, பக்.73 - 74.

    ²². பெ.சோ.சி.கோவை, ப.116.

    ²³. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.79.

    ²⁴. நவக்கிரக மாலை, பா.எ.8, ப.116.

    ²⁵. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, பக்.83.

    ²⁶. பெ.சோ.சி.கோவை, நவக்கிரகமாலை, பா.எ.9, ப.117.

    ²⁷. நவக்கிரகமாலை, பா.எ.24, பக்.123-124.

    ²⁸. ஜெ.மு.சோ.சூ, பா.எ.8, ப.377.

    ²⁹. மே, பா.எ.9, ப.377.

    ³⁰. ரிஷிபானந்தர், அ.ஜோ.க, ப.92.

    ³¹. பலதீபிகை, பக். 82 – 83.

    2. நீசம் - நீசபங்க ராஜயோகம் – பலன்கள்

    நீசம் என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். அவ்விதம் கெட்டு நின்ற கோள் சந்திர கேந்திரம், ஆட்சிக்கிரகத்துடன் நின்றால் நீசம் பங்கம் பெற்றதாகவும், அதனால் வெகு இராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என்றும் இதுவே நீசபங்க ராஜயோகம் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

    கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத இராசிகள், உபகிரகங்கள் பரிவேடன், இந்திர தனுசு, துாமன், துாமக்கேது உச்சம், நீசம், உச்ச நீச பலன், நீச ராசிகள், நீசபகை ஸ்தானம், அகராதிகள் தரும் விளக்கம், சுபக்கிரகங்கள் நீசம், அசுபக்கிரகங்கள் நீசம், இலக்கினாதிபதி நீசம், சூரியன் நீசம், சந்திரன் நீசம், செவ்வாய் நீசம், புதன் நீசம், குரு நீசம், சுக்கிரன் நீசம், சனி நீசம், ராகு நீசம், கேது நீசம், நீசக்கிரகம், நீச பங்க யோகம், நீச பங்க ராஜயோகம், பல கிரகம் நீசம், இராஜயோகம், நீசன் நின்ற இராசியதிபதி குருவின் பார்வை, நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு ஆகியவை தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

    கிரக உச்ச நீச அளவு

    கிரகங்கள் உச்சம், நீசம் பெறும் அளவுகள் பற்றி அ.ஜோ.க எனும் நுால் சூரியன் மேஷத்தில் 30 பாகையில் உச்சமும், துலாத்தில் 30 பாகையில் நீசமும் பெறுகிறது. சந்திரன் ரிஷபத்தில் 3 பாகையில் உச்சமும், விருச்சகத்தில் 3 பாகையில் நீசமும், செவ்வாய் மகரத்தில் 28 பாகையில் உச்சமும், கடகத்தில் 28 பாகையில் நீசமும், புதன் கன்னியில் 15 பாகையில் உச்சமும், மீனத்தில் 15 பாகையில் நீசமும், குரு கடகத்தில் 5 பாகையில் உச்சமும், மகரத்தில் 5 பாகையில் நீச்சமும், சுக்கிரன் மீனத்தில் 27 பாகையில் உச்சமும், கன்னியில் 27 பாகையில் நீசமும், சனி துலாத்தில் 20 பாகையில் உச்சமும், மேஷத்தில் 20 பாகையில் நீசமும் பெறுகின்றன என்று தெரிவிக்கின்றது. *¹

    உச்சம் நீசம் பெறாத ராசிகள் - உபகிரகங்கள் உச்சம், நீசம்

    கிரகங்கள் உச்சம் நீசம் பெறாத ராசிகள் பற்றி அ.ஜோ.க எனும் நுால் ராசி வீடுகளில் மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம், நீசம் பெறவில்லை. அங்கெல்லாம் உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    பரிவேடன், இந்திர தனுசு, துாமன், துாமக்கேது, பரிவேடன், மிதுனத்தில் உச்சமும், தனுசில் நீசமும் பெறுகின்றன. இந்திர தனுசு தனுசில் உச்சமும், மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது. தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும், சிம்மத்தில் நீசமும், கும்பத்தில் உச்சமும் பெறுகின்றன என்றும் இந்நுால் குறிப்பிடுகின்றது. *²

    உச்ச நீச பலன்

    அ.ஜோ.க எனும் நுால் ஒரு ஜாதகத்தில் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான பலன்களையும் அதாவது தீய பலன்களையும் வழங்கும் என்பது பொது விதியாய்க் குறிப்பிடுகின்றது. *³

    நீச ராசிகள்

    அ.ஜோ.க எனும் நுால் நீச ராசிகள் சூரியனுக்குத் துலாமும், சந்திரனுக்கு விருச்சிகமும், செவ்வாய்க்குக் கடகமும், புதனுக்கு மீனமும், குருவிற்கு மகரமும், சுக்கிரனுக்குக் கன்னியும், சனிக்கு மேஷமும் நீச ராசிகளாகும் என்றும் பகர்கின்றது. *⁴

    நீச பகை ஸ்தானம்

    கோட்சார முறையாக ஒரு கிரகம் அளிக்க வேண்டிய இடத்தில் நீசமடைய நேர்ந்தாலோ அல்லது அந்த இடமே அதற்கு பகை வீடாக இருந்தாலோ நல்ல பலன்கள் நிச்சயம் நடக்காது என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது. *⁵

    அகராதிகள் தரும் விளக்கம்

    நீசக்கிரகம் - இராகு, கேது, உச்சத்திற்கு ஏழாமிடக் கிரகம். நீசத் தானம் அடைந்த கிரகம். நீசக்கிரகம், நீசக்கோன் இராகு, உச்சத்திற்கு ஏழாம் இடக்கிரகம், கேது, நீச ஸ்தானம் அடைந்த கிரகம். நீசத்தானம் உச்சத்திற்கு ஏழாமிடம். நீச ஸ்தானம் - உச்சத்திற்கு ஏழாம் இடம். நீசநடை - தீயொழுக்கம். நீச பங்க ராசயோகம். இது ஓர் யோகம், ஒரு யோகம். நீசம் பெற்ற கிரகம், நீசங் கெட்டு இராஜயோகத்தைத் தருவதாகும். விவரம்: நீசக்கிரகம் இருந்த வீட்டுக்கு உடையவன், ஆட்சி அல்லது உச்சம் பெற்றாவது, சந்திரனுக்குக் கேந்திரம் பெற்றாவது நிற்பதாகும். நீசப்படுதல் ஈன குணம் உடைத்தாதல். நீசப்பெலக் குறைவு - பங்கம். நீசம் உச்சத்திற்கு ஏழாம் இடம். ஈனம், உச்சத்திற்கேழாமிடம், கொடுமை. நீச ராசி கிரகங்கள் நீசம் பெறும் ராசி. விவரம்: கிரக நீசத்தில் காண்க என்றும் விளக்கம் தெரிவிக்கின்றது.

    நீசம் நிலை

    பெ.சோ.சி.கோவை எனும் நுால் இலக்கினத்திற்கு மூன்றாம் இடத்திற்கு உடையவர்கள் சனி, ராகு, கேது, செவ்வாயுடன் சேர்ந்தாலும், மூன்றாமிடத்தில் பாபர் இருக்க, இலக்கினம் முதல் ஆறு இராசிக்கு மேல் மூன்று இராசிக்குள்ளே ஒரு இராசிக்கு உடையவன் நீசமாய்ப் போனால் அந்த ஜாதகனுக்கு வீரியம் பூமியிலே விழுந்து போகும் என்றும் குறிப்பிடுகின்றது. *⁶

    இலக்கினாதிபதி நீசம்

    பெ.ஜோ.சி.கோ எனும் நுால் இலக்கின ஸ்தானாதிபதி நீசனானாலும், சூரியனுடனே சேர்ந்திருந்தாலும் நாலில் ஒரு பாகம் பலனாய் இருப்பதற்காகும் என்றும் தெரிவிக்கின்றது. *⁷

    சுபக்கிரகங்கள் நீசம், அசுபக்கிரகங்கள் நீசம்

    சுபக்கிரகங்கள் நீசம்

    பு.ஜோ எனும் நுால் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை பெரியோர்கள் என்று கூறப்படும் சுபக்கிரகங்கள் நீசம் பெற்றுப் பார்த்தாலும், அந்த சாதகன் இந்த நிலவுலகில் செடியின் கண் பிறந்த பிள்ளை என்றும் குறிப்பிடுகின்றது.

    அசுபக்கிரகங்கள் நீசம்

    மேலும் இந்நுால் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அசுபக்கிரகங்கள் நீசம் பெற்றுப் பார்த்தாலும் அந்த சாதகன் கருங்கல்லால் ஆன வாசல், திண்ணை ஆகிய இடத்தில் பெற்றெடுத்த சிசு என்றும் குறிப்பிடுகின்றது என்பதனை,

    பாரப்பா யின்னமொரு செயலைக்கேளு

    பால்மதியைப் பெரியோர்கள் நீசம்பெற்று

    கூறப்பா கொடுங்கண்ணால் நோக்கினாலும்

    குவலயத்தில் செடிமறைவில் ஜெனித்தபிள்ளை

    ஆரப்பா அசுபர்களும் நீசம்பெற்று

    அம்புலியை அரைக்கண்ணாலும் நோக்கினாலும்

    நீரப்பா நீச்சரில்லு வாசல்திண்ணை

    நிலவரமாய்ப் பெற்றெடுத்த சிசுதான் சொல்லே. *⁸

    என்றும் பாடல் தெரிவிக்கின்றது.

    கிரகங்கள் அவை தாம் வாங்கிய பாவம் அல்லது வீட்டின் அடிப்படையில் அனைத்துப் பலன்களையும் சேர்த்து வழங்குவர்.

    சூரியன் நீசம்

    அ.ஜோ.க எனும் நுால் சூரியன் நீசம் பெற்றிருந்தால் (உஷ்ணம்) வெப்பம் தொடர்பு உடைய வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை

    Enjoying the preview?
    Page 1 of 1