Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathaga Alangarathil Chiththar Karuthukkal
Saathaga Alangarathil Chiththar Karuthukkal
Saathaga Alangarathil Chiththar Karuthukkal
Ebook261 pages7 hours

Saathaga Alangarathil Chiththar Karuthukkal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்நூலில் சாதக அலங்காரத்தில் உள்ள குறிப்புகளுக்கு விரிவான விளக்கம் தரும் முறைமையில், சித்தர்களின் செய்திகள் செறிவாக வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. இவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுறு செய்திகளாகவும் உள்ளன.

உயிர்களின் தோற்றம், மந்திரம், விதி, அட்டமா சித்தி, தீட்சை, மருத்துவச் செய்தி, காயகற்பம், நவரத்தினம் போன்றவை பற்றிய விளக்கங்கள் அறிய கருத்துகளின் தொகுப்பாக உள்ளன. இத்தொகுப்பு சித்தர் நூல்களை முழுமையாக அறிதல் வேண்டும் என்ற ஆர்வத்தைப் படிப்பவர்க்குத் தூண்டுவதாய் அமைகின்றது. பதினெட்டுச் சித்தர்களையும், வசிஷ்ட்டரையும் சுட்டுகின்றது. இவர்கள் குறித்த தேவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateMay 17, 2022
ISBN6580152108335
Saathaga Alangarathil Chiththar Karuthukkal

Read more from Dr. T. Kalpanadevi

Related to Saathaga Alangarathil Chiththar Karuthukkal

Related ebooks

Reviews for Saathaga Alangarathil Chiththar Karuthukkal

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathaga Alangarathil Chiththar Karuthukkal - Dr. T. Kalpanadevi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகள்

    Saathaga Alangarathil Chiththar Karuthukkal

    Author:

    முனைவர். தி. கல்பனாதேவி

    Dr. T. Kalpanadevi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-t-kalpanadevi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    என்னுரை

    சுருக்கெழுத்துகள்

    1.0 நூல் அறிமுகம்

    1.8 சித்தர்கள் - அறிமுகம்

    இயல் - 2

    சாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகளில் சமயம்

    இயல் - 3

    சாதக அலங்காரத்தில் சித்தர்களின் சித்த மருத்துவக் கருத்துகள்

    இயல் - 4

    சாதக அலங்காரத்தில் சித்தர்களின் சோதிடக் கருத்துகள்

    முடிவுரை

    பின் இணைப்பு

    அருள்மிகு ஆட்சீசுவரர்க்கு
    இந்நூல் காணிக்கை

    சோதிட ரத்தினம் முனைவர் அ. சிவபெருமான்,

    பேராசிரியர், தமிழியல்துறை,

    அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,

    சிதம்பரம்.

    ***

    சாற்றுக்கவி

    பின்னாளில் வருகின்ற செயல்களையும் நாமறிய

    முன்னாலே தெரிவிக்கும் கலைஎதுவோ சோதிடம்

    இதைக்கற்க வேண்டுமென்றால் நமக்குவேண்டும் மா,திடம்

    அதைஇன்று காண்கின்றோம் நல்லதொரு மாதிடம்

    சாதகக் கலையினிலே முனைவர்பட்டம் பெற்றதையே

    சாதகமாய் ஆக்கித்தான் நூலொன்றை வெளியிட்டார்;

    கல்பனா தேவியுமே பிறந்திட்ட ஊர்எதுவோ

    நல்லோர்கள் போற்றுகின்ற அச்சிறு பாக்கமாம்.

    அவ்வூரை ஆட்சிசெயும் ஆட்சிச்சுரர் சுவாமிக்கு

    இவ்வரிய நூலையும் காணிக்கை ஆக்கிட்டார்;

    ஆடற்கலையில் வல்லவன் சிதம்பரம் நடராசன்

    சோதிடத்தில் வல்லவர் கீரனூர் நடராசன்

    அவர்தானும் அருளிட்ட சாதக அலங்காரத்தில்

    உவந்தேதான் கொடுதிட்ட சித்தர் கருத்துகளை

    இவர்தானும் தொகுத்தே நூலாக வெளியிட்டார்

    இனிதானும் இவர்செயும் கனியொத்த நூல்களிலே

    ஆழம்தான் அதிகரிக்க நுட்பம்தான் சிறந்திருக்க

    யாழொத்த தமிழாலே பாராட்டி மகிழ்கின்றோம்

    இங்ஙனம்

    முனைவர் அ. சிவபெருமான்

    Siva-Sign.jpg

    டாக்டர் சாமி செல்வ விநாயகம்,

    இணைபேராசிரியர், தமிழ், ஆங்கிலம் துறை,

    கல்வியியல் கல்லுாரி,

    சாஸ்திரா பல்கலைக்கழகம்,

    திருமலை சமுத்திரம், தஞ்சாவூர்.

    ***

    அணிந்துரை

    கவின்மிகு புலமை மிக்க கற்பனா தேவி தானும்

    அவிரொளி வீசு கின்ற அருந்தமிழ்ச் சொற்க ளாலே

    சவியுற விளங்கு கின்ற சாதகஅலங் காரந் தன்னில்

    நவமிகு சித்தர் கொள்கை நயம்பட விரித்து ரைத்தார்!

    கீரனுார் நடரா சன்தான் கிளர்ந்தெழுந் தமிழி னாலே

    பாரிய கோள்கள் பற்றி பயன்தரு நுாலைச் செய்தான்!

    யாரவர் அதற்கீ டாக இன்னொரு நுாலைச் செய்தார்?

    நேருறு அந்நுால் தானும் நிறையூழி வென்று வாழும்!

    மிகுந்தவோர் துணிவினாலே மேலவள் கற்பனா தேவி

    பகுத்திட ஆய்வு செய்து பெருமைகொள் நுாலைச் செய்தார்?

    தொகுத்திடு கருத்தை எல்லாம் சித்தர்பால் உற்று நோக்கி

    இகபர உண்மை விளங்க இறைமையார் விளக்கம் தந்தார்!

    சித்தர்தம் வாழ்வு தாமும் சித்தினைச் செய்யும் வாழ்வு!

    முத்தியை வழங்கு கின்ற முத்தமிழ்ப் பாடல் திரட்சி!

    எத்திசை நோக்கி நகரும் இயல்புடைக் கோள்கள் பான்மை!

    ஒத்திசைக் கின்ற பொருள்கள் ஒருநுாறு இதனில் உண்டாம்!

    புத்திர தோடம் பாம்பின் பெருங்கடி அரசு மகிமை

    சித்தியை வழங்குகின்ற சிறப்பான பால்ம ரங்கள்

    வித்தகச் சடங்கி யாவை விரிந்திடு தத்துவச் சாயை

    எத்தனைச் செய்தி இந்த ஏட்டினில் உளவாம்? கேளீர்!

    ஒருநுாலை ஆய்வு செய்ய ஒப்பிடு நுால்கள் நுாறு!

    திருநுாலாய் இதனை ஆக்க தளராத உழைப்பு வண்ணம்!

    வருபொருள் சொல்லுகின்ற வான்பொருள் பலவின் கோவை!

    அருந்தமிழ் நுாலொன் றையே ஆக்கினர் அம்மை யாரே!

    யாரையும் பார்த்தே இந்த இயல்நுாலை ஆக்க வில்லை!

    சீருறு நுாலை தன்றன் சிந்தையால் ஆக்கி வைத்தார்!

    பேருமே புகழும் நல்கும் பிறங்கொளி நுாலும் என்றும்!

    ஆருறு புகழோ டியைந்தே அவனியில் என்றும் வாழும்!

    நோயெலாம் நீக்கு கின்ற நெறிதமைச் சித்தர் சொன்னார்!

    தோய்புலன் அவற்றை எல்லாம் திருவுடைப் பிராட்டிச் சேர்த்து

    காய்தலும் உவத்தல் இன்றி கீரனுார் நடரா சனாரின்

    ஆய்தமிழ் நுாலில் கண்டே அழகுற உரைத்தல் ஆனார்!

    சித்தரின் வரலாற் றையே சிறப்புற எடுத்து ரைத்து

    சித்தரின் தத்து வத்தைத் தெளிவுற வரைதல் செய்து

    புத்துயிர் தவழும் மொழியில் பொலிவுற விளக்கல் ஆனார்!

    வித்தகி கற்பனா தேவி விரிநுாலை இயற்றி விட்டார்!

    இனிமேலும் செய்யும் நுால்கள் இயல்புறு ஆழம் நுட்பம்

    நனியுற வேண்டும் என்று நானுமே சொல்ல மாட்டேன்!

    பனிமலர்ப் பிராட்டி நுால்தான் பெருநல நிறைவு கொள்ளும்

    தனிவகை கொண்டே சால்பு செறிந்திடப் பெற்ற தாலே!

    டாக்டர் சாமி செல்வவிநாயகம்.

    img130

    முனைவர் தி. மகாலட்சுமி,

    சுவடி, மொழிபெயர்ப்பு, இதழியலில் பட்டயம்,

    முதுநிலை ஆராய்ச்சியாளர் (ம)

    சுவடிப்புலப் பொறுப்பாளர்,

    தமிழ் இலக்கியம் மற்றும் சுவடிப்புலம்,

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

    சி.பி.டி. வளாகம், தரமணி, சென்னை - 113.

    ***

    அணிந்துரை

    நமக்கு கிடைத்துள்ள மூல நூல்களில் தலை சிறந்த நூல் சாதக அலங்காரம். இந்நூல் சோதிட அறிவைத் தெளிவாகவும் முழுமையாகவும் தரக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்நூலின் சிறப்பு கருதியே இதற்குப் பின்வருவன போன்ற பல பதிப்புகள் வந்துள்ளன.

    தமிழ்ச் சாதக அலங்காரத்திற்கு அம்பலவாணச் சோதிடர் எழுதிய சுருக்கவுரை ஒன்றுண்டு.

    சாதகலங்காரம் மூலமும் ஆதி விரிவுரையும் என்ற நூல் கி.பி. 1900 இல் அ.இ.ரா.முருகைய சோதிடரால் வெளியிடப்பட்டிருக்கின்றது. அடுத்து வி.கே. வேலுநாயகர், கே.எம். தெய்வ சிகாமணி ஆகியோர் எழுதிய உரை நூலுக்கு 1955 இல் முதல் பதிப்பும், 1991 இல் ஐந்தாம் பதிப்பும் வந்துள்ளன.

    கி.பி. 2001 இல் சி. கோவிந்தராசனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இந்நூலினை வெளியிட்டுள்ளது.

    ஜாதக அலங்காரம் மூலமும் உரையும், விரிவுரையும் என்ற என்னுடைய நூலினை நர்மதா 2004 இல் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2006 இல் வந்துள்ளது.

    தமிழ்ச் சோதிட நூல்களில் சாதகக்கணிப்பின் அடிப்படைகள் - தனிப்பார்வை சாதக அலங்காரம் என்ற தலைப்பில் 1988 இல் முனைவர் பட்ட ஆய்வேடு ஒன்று பொன். பாலசுப்பிரமணியம் அவர்களால் மதுரைப் பல்கலைக் கழகத்தின் வழி உருவாகியுள்ளது.

    சித்தர் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவே வந்துள்ளன. அதிலும் சோதிடத்தோடு ஒப்பிடும் முயற்சி என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது இந்நிலையில் சாதக அலங்காரத்தையும், சித்தர்களின் சிந்தனைகளையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்கும் கடின முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது.

    சித்த மருத்துவம், சோதிடம், யோகம், ஞானம், இரசவாதம் போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதனால் தான் சித்தர் இலக்கியங்களில் சோதிட விதிகளை அப்படியே எடுத்து ஆளுதல், சோதிடச் செய்திகளுக்கு ஒப்ப அமைதல், சோதிடக் குறிப்புகளோடு ஒன்றினனாதல் என்ற நிலைகளைக் காண முடிகிறது. இத்தகைய ஒப்புமைச் செய்திகளை விரிந்த நிலையில் ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்துவதற்கு, சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள் என்ற இந்நூல் வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும் அமையும் என்பது இதன் தனிச் சிறப்பாகின்றது.

    இந்நூலில் 53 நூல்கள் பயன் படுத்தப்பட்டுள்ளமையும், அவற்றிலிருந்து 345 குறிப்புகள் எடுக்கப் பெற்றுள்ளமையும் நூலின் செறிவினை வெளிக்காட்டுகின்றது.

    மனிதன் சிந்திக்கத் தொடங்கியபோதே விண்வெளிச் சகுனங்கள் சோதிடமாகத் தோற்றம் பெற்றுவிட்டன. இச்சோதிடம் பதினெண் சித்தர்களாலும் பிறராலும் வளர்ச்சி அடைந்திருக்கின்றது. சித்தர்களால் பல சோதிட நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. இவர்கள் சோதிடத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளனர். அகத்தியர், புலிப்பாணி, போகர், மச்சமுனி போன்றோர் பெயர்களால் பல சோதிட நூல்கள் கிடைக்கின்றன.

    இந்நூலில் சாதக அலங்காரத்தில் உள்ள குறிப்புகளுக்கு விரிவான விளக்கம் தரும் முறைமையில், சித்தர்களின் செய்திகள் செறிவாக வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. இவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பயனுறு செய்திகளாகவும் உள்ளன. உயிர்களின் தோற்றம், மந்திரம், விதி, அட்டமா சித்தி, தீட்சை, மருத்துவச் செய்தி, காயகற்பம், நவரத்தினம் போன்றவை பற்றிய விளக்கங்கள் அறிய கருத்துகளின் தொகுப்பாக உள்ளன. இத்தொகுப்பு சித்தர் நூல்களை முழுமையாக அறிதல் வேண்டும் என்ற ஆர்வத்தைப் படிப்பவர்க்குத் தூண்டுவதாய் அமைகின்றது. பதினெட்டுச் சித்தர்களையும், வசிஷ்ட்டரையும் சுட்டுகின்றது. இவர்கள் குறித்த தேவையான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

    சாதக அலங்காரம் சுட்டும் ஐந்தெழுத்தின் உண்மை என்ற கருத்தே சித்தர்கள் கூறும் பஞ்சாட்சர மந்திரம் என்று இந்நூல் கூறுகின்றது. மேலும் இதில் மந்திரம் பற்றிய தெளிவும், அதன் பெருமையும் சிறப்புற விளக்கப்பட்டுள்ளது.

    சாதக அலங்காரம் அவரவர் தம் வினையின் குணங்கள் அறிந்து அயன் விதித்த கொள்கை என்று கூறும் விதி வழிப் பயன்களை, இந்நூல் அவ்வையின், பட்டினத்தடிகளின் பாடக் கருத்துகளுடன் ஒப்பிட்டு ஆய்கின்றது. சாதகலங்காரம் பிரமன் விதித்த விதிப்பயனிற்கு உரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் நல்ல முறையில் வாழ முடியும் என்கின்றது. இதற்கு ஒத்த கருத்தாக, சிவத்தியானத்தால் விதியை வெல்லலாம் என்ற சிந்தனையை இந்நூல் எடுத்துரைக்கின்றது.

    சாதகஅலங்காரத்தில் உள்ள கர்ப்பதானம் பற்றிய குறிப்பிற்கு, உயிர் கருவாக உருவாவதும், அதன் வளர்ச்சியும் பற்றிய சித்தர்களின் ஆழ்ந்து அகன்ற செய்திகளை இந்நூல் எடுத்தியம்புகின்றது.

    மணி மந்திரம் என்ற தொடரைச் சாதகலங்காரம் சுட்டுகிறது. மணி என்பது சோதிட முறையில் நவமணிகளை நோய் தீர்க்க அணிதல் ஆகும். மணிகளைப் போலவே ஸ்வர்ணம், வௌ்ளி, தாமிரம், பாதரசம் முதலான உலோகங்களைக் கொண்டு சோதிட முறையில் நோய்த் தீர்த்தலும் இவ்வகையில் அடங்கும். இரசமணி, நவரத்தினங்களை அணிவதால் தீரும் நோய்கள் போன்றவற்றை நூல் நன்முறையில் விளக்குகின்றது. மேலுமிது உருத்திராக்க மணியுடன் மந்திரத்தை இணைத்துக் கூறுவதற்கு மணி மந்திரம் என்று பெயர் என்று கூறியிருக்கும் செய்தி சிறப்பாக இருக்கின்றது.

    சாதஅகலங்காரமும், பிற சோதிட நூல்களும் கோட்சாரப் பலன் என்ற நடப்புப் பலனைப் பற்றிப் பேசுகின்றன. இப்பலன் ஊர்வசி வைத்திய சிட்காவில் கூறப் பெற்றுள்ளமையை இந்நூல் சுட்டுவது ஆசிரியரின் முயற்சியை உணர்த்துவதாக அமைகின்றது.

    சோதிடம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது. வீடு, சூழ்நிலை போன்றவை மனிதனை ஆட்டிப்படைப்பதால் மனிதன் என்றும் எந்நிலையிலும் மன வலிமையுடன் இருத்தல் இயலாது. அது போது பலரது மனம் சோதிடத்தையே நாடுகின்றது. எனவே மக்கள் வாழ்வில் இன்றும் சோதிடம் செல்வாக்குப் பெற்றுள்ளது. பயன் பாட்டிலும் சிறப்பிடம் வகிக்கின்றது. இருப்பினும் கற்றறிந்த சான்றோர் பலரிடம் சோதிடவியல் துறையின் மீது அறிவும், ஆர்வமும், சரியான கருத்தும் இல்லாத நிலையே உள்ளது. எனவே சோதிடவியலின் உண்மை நிலையை உணர்த்தச் சோதிடம் குறித்த உயராய்வு நூல்கள் மிகுதியாக வெளி வருதல் வேண்டும் இவை மானுடம் முழுமைக்கும் பயன் தர வல்லதாய் அமைதல் நலம் பயக்கும்.

    அவ்வகையில் சோதிடம் குறித்த ஆழ்ந்தகன்ற ஆய்வினை நிகழ்த்தியுள்ள முனைவர் தி. கல்பனாதேவி மிகுந்த பாராட்டிற்குரியவர். ஒப்பீட்டு முறையில் ஆய்வுக்குட்படுத்தினால் சாதகலங்காரம் குறித்த மேலும் பல விளக்கங்களை, தெளிவுகளை, உண்மைகளை அறிய முடியும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்நூல் அமைகின்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தியில், தெளிவும், செறிவும் உடைய இந்நூலினை எழுதியுள்ள நூலாசிரியர் மேலும் பல சோதிட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட வாழ்த்துகின்றேன்.

    இங்ஙனம்

    முனைவர் தி. மகாலட்சுமி

    img003.jpg

    ஸ்ரீவாலாம்பிகை துணை!

    இல்ல முகவரி

    டாக்டர் தி. கல்பனாதேவி, MA, B.ED, MPHIL, P.HD, D.A, BA, MA, TAMIL, ASTROLOGY,

    தமிழ், ஜோதிடம் உதவிப்பேராசிரியர்,

    மேற்கு மாட வீதி, அச்சிறுபாக்கம் - 603301,

    மதுராந்தகம் வட்டம்,

    காஞ்சிபுரம் மாவட்டம்.

    மின்னஞ்சல் srivalambigai@gmail.com

    அலைபேசி 9865231042. 9489426031.

    என்னுரை

    தமிழ்க்கடவுள் முருகனையும், முருகனது அருள் பெற்ற பாலய சுவாமிகள் திருவடிகளினையும், மனம், மொழி, மெய்களால் வணங்கி மகிழ்கின்றேன். எனையீன்ற பெற்றோர்களின் பாதம் வணங்கி மகிழ்கின்றேன் பேராசிரியர், பரியோர் பெரு மக்களையும் பெரிதும் வணங்கி மகிழ்கின்றேன்.

    சோதிடம், சித்தர்கள் பற்றி எழுதுவதற்காக பெரிதும் அக மகிழ்கின்றேன். சோதிடத்தில் ஆய்வு செய்ய நீண்ட நாட்களாய் விரும்பிய என் தந்தையின் எண்ணத்தினை எனது ஆர்வம், எண்ணமாக எண்ணி முதன் முதலில் எழுதப் பெற்ற சோதிட நூல் இந்நூல்.

    சாதக அலங்காரம் பழைய பதிப்பு நூல்கள் இரண்டும் பயன் படுத்தப் பெற்றுள்ளன. சித்தர்கள் நமக்கு அளித்த என்றும் பயன் தருகின்ற சமயம், மருத்துவம், சோதிடம் ஆகிய அரிய கலைகளைப் பற்றி சாதக அலங்காரம் எனும் சோதிட நூலின் வழி விளக்கமாய், விரிவாய், பல துணை நூல்களின் குறிப்பு ஆதாரங்களுடன் இந்நூல் அமைக்கப் பெற்றுள்ளது.

    பழைய பதிப்பு 3 - ஆம் பதிப்பு நூல் தந்து உதவிய என் தந்தையின் நண்பர் மறைந்த சோதிடர் தருமன் ஆசிரியர் அவர்கட்கு என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    இந்நூலிற்கு பெரிதும் உதவி செய்த மயிலம் ஸ்ரீ.சி.பா.சு.த.கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களுக்கும், திருமதி சாந்தி இலட்சாராமன் அவர்களுக்கும், சாற்றுக்கவி வழங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அ.சிவபெருமான் அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கும் என் உளங் கனிந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

    நூல்கள் தந்து உதவி செய்த மயிலம் ஸ்ரீ.சி.பா.சு.த.கல்லூரி நூலகத்தார்க்கும்,

    Enjoying the preview?
    Page 1 of 1