Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal
Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal
Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal
Ebook370 pages2 hours

Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொருவரது வாழ்வு ஏற்றம் பெறுவதிலும், இறக்கம் அடைவதிலும் நவக்கிரகங்களின் பங்கு கட்டாயம் உண்டு. போதாத வேளை என்றால், ‘கிரகங்கள் படுத்தற பாடு தாங்க முடியலே’ என்பர். வசதியான நிலைக்கு வந்த ஒருவரைப் பார்த்து, ‘ம்ம்ம்... எல்லா கிரகமும் அவன்கிட்ட கொண்டு போய்க் கொட்டொ கொட்டுன்னு கொட்டுது’ என்பர்.
கொட்டிக் கொடுப்பதாகட்டும்; வாரிச் சுருட்டிக் கொள்வதாகட்டும். கிரகங்கள் நமக்கு என்ன அருள்கின்றனவோ, அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், திருமணம், உத்தியோகம், வெளிநாடு வாய்ப்பு, தாம்பத்தியம், அரசியல், புகழ், - இப்படி எதற்கும் கிரகங்களின் ஆசியும் அனுகூலமும் தேவை.
இன்றைக்கு நவக்கிரக வழிபாடு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. நவக்கிரகங்கள் ஆராதித்த கோயில்களாகத் தேடிச் சென்று வழிபடுகிறார்கள். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரத் தலங்களைத் தேடிச் சென்று ப்ரீதி செய்து வருகிறார்கள். எல்லாமும், நம்மைப் பிடித்த தொல்லைகள் விட்டுத் தொலைய வேண்டும் என்கிற ஒரே பிரார்த்தனைதான்.
ஜோதிடம் என்பது பொய்யல்ல. ஒருவரது ஜாதகத்தை வைத்துப் பார்க்கின்றபோதே, அவருக்கு என்னென்ன சாதகங்கள் இருக்கின்றன; பாதகங்கள் இருக்கின்றன என்பதை அட்சர சுத்தமாகச் சொல்லிவிடலாம். சாதகங்களை மேலும் கூட்டிக் கொள்ளவும், பாதகங்களைக் குறைத்துக் கொள்ளவும்தான் ஜாதகங்களைப் பார்த்து பரிகாரம் மேற்கொள்கிறோம். கோயில்களுக்குப் போய் வழிபாடு நடத்துகிறோம்.
கும்பகோணம் வரும் அனைத்து டூரிஸ்ட்டுகளும் நவக்கிரகத் திருத்தலங்களை தரிசிக்காமல் ஊர் திரும்புவதில்லை. நவக்கிரகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் அனைத்திலுமே தினம்தோறும் அபிஷேகம் என்ன... அலங்காரம் என்ன... கோலாகலம்தான்! ஒரு அபிஷேகம் முடிந்து அரை மணி நேரம்தான் ஆகி இருக்கும். அதற்குள் அடுத்த உபயதாரர் ஒருவர் அபிஷேகத்துக்கு வந்துவிடுவார். நவக்கிரகங்கள் அபிஷேகத்தில் திளைக்கின்றன. தூப-தீப மணத்தில் நித்தமும் ஜொலிக்கின்றன.
நவக்கிரகங்களுக்கென்று எத்தனையோ ஆலயங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும், கும்பகோணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய நவக்கிரகத் திருத்தலங்களுக்குத் தனி மவுசுதான். காரணம் - அந்த அளவுக்குப் புராண முக்கியத்துவத்தையும் தோஷம் போக்கும் தன்மையும் கொண்டு விளங்குகின்றன.
கும்பகோணம் இன்று பெருமளவு வளர்ந்ததற்கு இந்த நகரைச் சுற்றி அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்கள் காரணம் என்பதை அங்குள்ள வியாபார முக்கியஸ்தர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தங்கும் விடுதிகளும் உணவுக் கூடங்களும் இன்று கும்பகோணத்தில் ஏராளம். போக்குவரத்து வசதியும் தோதாக அமைந்துவிட்டது.
சூரியனார்கோவில் (சூரியன்), திங்களூர் (சந்திரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), ஆலங்குடி (குரு), கஞ்சனூர் (சுக்கிரன்), திருநள்ளாறு (சனி), திருநாகேஸ்வரம் (ராகு), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய ஒன்பது திருத்தலங்களைப் பற்றி மிக விரிவாக ‘திரிசக்தி ஜோதிட’த்தில் வந்த கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பே இந்த நூல்.
தல புராணம், கிரகங்களின் சிறப்பு, வழிபட்ட தெய்வங்கள் - ரிஷிகள், உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம், செல்லும் வழி, தொடர்புகொள்ளும் தொலைபேசி எண் - இப்படி அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு வெளியான இந்த நூல், அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும், உற்ற நண்பனாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
நவக்கிரகங்கள் எல்லா நலன்களையும் உங்களுக்கு வாரி வழங்கப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306227
Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

Read more from P. Swaminathan

Related to Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

Related ebooks

Reviews for Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    அவசியம் தரிசிக்க வேண்டிய நவக்கிரக ஆலயங்கள்

    Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சூரியனார்கோவில்

    2. திங்களூர்

    3. வைத்தீஸ்வரன் கோவில்

    4. திருவெண்காடு

    5. ஆலங்குடி

    6. கஞ்சனூர்

    7. திருநள்ளாறு

    8. திருநாகேஸ்வரம்

    9. கீழ்ப்பெரும்பள்ளம்

    அவசியம் தரிசிக்க வேண்டிய நவக்கிரக ஆலயங்கள்

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    ஒவ்வொருவரது வாழ்வு ஏற்றம் பெறுவதிலும், இறக்கம் அடைவதிலும் நவக்கிரகங்களின் பங்கு கட்டாயம் உண்டு. போதாத வேளை என்றால், 'கிரகங்கள் படுத்தற பாடு தாங்க முடியலே' என்பர். வசதியான நிலைக்கு வந்த ஒருவரைப் பார்த்து, 'ம்ம்ம்... எல்லா கிரகமும் அவன்கிட்ட கொண்டு போய்க் கொட்டொ கொட்டுன்னு கொட்டுது' என்பர்.

    கொட்டிக் கொடுப்பதாகட்டும்; வாரிச் சுருட்டிக் கொள்வதாகட்டும். கிரகங்கள் நமக்கு என்ன அருள்கின்றனவோ, அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வர வேண்டும்.

    கல்வி, பொருளாதாரம், திருமணம், உத்தியோகம், வெளிநாடு வாய்ப்பு, தாம்பத்தியம், அரசியல், புகழ், - இப்படி எதற்கும் கிரகங்களின் ஆசியும் அனுகூலமும் தேவை.

    இன்றைக்கு நவக்கிரக வழிபாடு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. நவக்கிரகங்கள் ஆராதித்த கோயில்களாகத் தேடிச் சென்று வழிபடுகிறார்கள். ஜோதிடர்கள் சொன்ன பரிகாரத் தலங்களைத் தேடிச் சென்று ப்ரீதி செய்து வருகிறார்கள். எல்லாமும், நம்மைப் பிடித்த தொல்லைகள் விட்டுத் தொலைய வேண்டும் என்கிற ஒரே பிரார்த்தனைதான்.

    ஜோதிடம் என்பது பொய்யல்ல. ஒருவரது ஜாதகத்தை வைத்துப் பார்க்கின்றபோதே, அவருக்கு என்னென்ன சாதகங்கள் இருக்கின்றன; பாதகங்கள் இருக்கின்றன என்பதை அட்சர சுத்தமாகச் சொல்லிவிடலாம். சாதகங்களை மேலும் கூட்டிக் கொள்ளவும், பாதகங்களைக் குறைத்துக் கொள்ளவும்தான் ஜாதகங்களைப் பார்த்து பரிகாரம் மேற்கொள்கிறோம். கோயில்களுக்குப் போய் வழிபாடு நடத்துகிறோம்.

    கும்பகோணம் வரும் அனைத்து டூரிஸ்ட்டுகளும் நவக்கிரகத் திருத்தலங்களை தரிசிக்காமல் ஊர் திரும்புவதில்லை. நவக்கிரகங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் அனைத்திலுமே தினம்தோறும் அபிஷேகம் என்ன... அலங்காரம் என்ன... கோலாகலம்தான்! ஒரு அபிஷேகம் முடிந்து அரை மணி நேரம்தான் ஆகி இருக்கும். அதற்குள் அடுத்த உபயதாரர் ஒருவர் அபிஷேகத்துக்கு வந்துவிடுவார். நவக்கிரகங்கள் அபிஷேகத்தில் திளைக்கின்றன. தூப-தீப மணத்தில் நித்தமும் ஜொலிக்கின்றன.

    நவக்கிரகங்களுக்கென்று எத்தனையோ ஆலயங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும், கும்பகோணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய நவக்கிரகத் திருத்தலங்களுக்குத் தனி மவுசுதான். காரணம் - அந்த அளவுக்குப் புராண முக்கியத்துவத்தையும் தோஷம் போக்கும் தன்மையும் கொண்டு விளங்குகின்றன.

    கும்பகோணம் இன்று பெருமளவு வளர்ந்ததற்கு இந்த நகரைச் சுற்றி அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்கள் காரணம் என்பதை அங்குள்ள வியாபார முக்கியஸ்தர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தங்கும் விடுதிகளும் உணவுக் கூடங்களும் இன்று கும்பகோணத்தில் ஏராளம். போக்குவரத்து வசதியும் தோதாக அமைந்துவிட்டது.

    சூரியனார்கோவில் (சூரியன்), திங்களூர் (சந்திரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), ஆலங்குடி (குரு), கஞ்சனூர் (சுக்கிரன்), திருநள்ளாறு (சனி), திருநாகேஸ்வரம் (ராகு), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய ஒன்பது திருத்தலங்களைப் பற்றி மிக விரிவாக 'திரிசக்தி ஜோதிட'த்தில் வந்த கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பே இந்த நூல்.

    தல புராணம், கிரகங்களின் சிறப்பு, வழிபட்ட தெய்வங்கள் - ரிஷிகள், உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம், செல்லும் வழி, தொடர்புகொள்ளும் தொலைபேசி எண் - இப்படி அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு வெளியான இந்த நூல், அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும், உற்ற நண்பனாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.

    நவக்கிரகங்கள் எல்லா நலன்களையும் உங்களுக்கு வாரி வழங்கப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

    நன்றி.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. சூரியனார்கோவில்

    சூரிய பகவான்

    நவக்கிரக வழிபாடு என்பது பிற்காலத்தில் வந்ததுதான் என்கிற ஒரு கருத்து உண்டு. அந்த ஆராய்ச்சிக்குள் நாம் போகவேண்டாம். இத்தகைய வழிபாடு, எந்த அளவுக்கு நம் வாழ்வில் பலன் தரும் என்பதை அறிந்து நடந்தாலே போதும்.

    பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதிகள் உண்டு என்றாலும், சில ஆலயங்களில் நவக்கிரக அதிபதிகள் தனியாகக் கோலோச்சுவார்கள். அவர்களின் சாந்நித்தியம் அங்கே சிறந்து விளங்கும். அப்படிப்பட்ட திருத்தலங்கள் நிறைய இருக்கின்றன.

    பொதுவாக, நவக்கிரகத் திருத்தலங்கள் என்று எடுத்துக் கொண்டால் (ஒருங்கிணைந்த), தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களே எல்லோருக்கும் நினைவில் வரும். ஆம்! ஒவ்வொரு தினமும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் கும்பகோணம் வந்து இந்த ஆலயங்களை தரிசித்துச் செல்கிறார்கள். இந்த நவக்கிரக ஆலயங்கள் பற்றியும், கிரகங்களின் சிறப்பு, வழிபாட்டு முறைகள், புராண வரலாறு போன்றவை பிரமிக்கத் தக்கவை.

    இந்த நூலில் நவக்கிரகங்களின் தன்மை பற்றியும், அவர்கள் எழுந்தருளி உள்ள ஆலய வரலாறு பற்றியும் பார்க்க இருக்கிறோம். கிரகங்கள் சம்பந்தப்பட்ட இந்த நூலைப் படித்து, அந்த ஆலயங்களைத் தரிசித்து கிரகங்களின் ஆசியையும் அவர்களின் அருளையும் நிச்சயம் பெறலாம்.

    முதலில், சூரிய பகவான்!

    நவகோள்களின் (நவக்கிரகம்) ஆட்சியால்தான் நாம் எல்லாம் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சூரிய பகவான், சந்திர பகவான் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு பகவான் (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனைச்சரன், ராகு பகவான், கேது பகவான் ஆகியனவே நவகோள்கள்.

    மனிதர்களை மட்டுமல்லாமல், மகான்களையும் ஏன் - தெய்வங்களையும்கூட இந்த நவகோள்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்டிப் படைத்திருக்கின்றன. அப்படி என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? பொதுவாக, கிரகங்கள் எல்லாமே நன்மை பயப்பனதான். நமது வழிபாடுகள் மற்றும் பூர்வ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப, கிரகங்கள் தரும் பலன்கள் மாறுகின்றன. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், பரிகாரங்களைச் செய்து, அதன் வீரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம். எப்படிக் குறித்த காலத்தில் அரசுக்குக் கட்டவேண்டிய ஒரு தொகையைக் காலதாமதமாகச் செலுத்தினால், அதற்கு ஒரு சிறு தொகையை அபராதமாக வசூலிக்கிறார்களோ, அதுபோல் சில பரிகாரங்களைச் செய்தால், ஓரளவு பயன் பெறலாம்.

    நவக்கிரகங்களில் - முதன்மையானவர் சூரிய பகவான். இவரை பிரத்யட்சமாக தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைத்திருப்பதே பாக்கியம். இதனால்தான் சூரிய நமஸ்கார வழிபாடு, சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. நோய் நொடி எதுவும் நம்மைத் தாக்காமல் வழிபடுவதற்கு இந்த நமஸ்கார வழிபாடு பயன்படுகிறது. தினமும் காலை வேளையில் 6 மணி முதல் 7 மணி வரை வெறும் கண்களால், சூரியனை தரிசிப்பதன் மூலம், நம் கண்களுக்கும் தேகத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. இளங்கதிரோடு கூடிய ஒளியானது, நம் உடலில் படுவதால், தேக நலன் மேம்படும்.

    யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிக ஆரண்யகம், சூரிய வழிபாட்டுக்கென 132 நமஸ்கார மந்திரங்களை நமக்குச் சொல்கிறது. அந்த மந்திரங்களை நியமத்தோடு சொல்வதன் மூலம், சூரிய பகவான் மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் 132 நமஸ்கார மந்திரங்களையும் சொல்லி வழிபடுவது என்பது இயலாத காரியம் என்பதால், மந்திர சாஸ்திரமான, 'பிரகத்ஸ்தோத்திர ரத்னாகரம்' என்ற நூல், 12 சூரிய ஸ்லோகங்களைப் பரிந்துரைக்கிறது. இந்த ஸ்லோகங்களைச் சொல்லி, தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், நம் கண்கள் அபார ஒளி பெறும். கண் நோய்கள் அண்டாது. சரீரமும் பலப்படும் என்பது சத்தியமான உண்மை.

    சூரிய நமஸ்காரத்தின் அருமை பெருமைகளைத் தங்களது ஆராய்ச்சியின் மூலம் உணர்ந்த மேல்நாட்டினர் இப்போது 'ஸன்பாத்' நடத்தி வருகிறார்கள். இதன் பிறகாவது, சூரியனின் பெருமை உணர்ந்து, அதற்குரிய நமஸ்கார வழிபாட்டை நாம் தொடங்கவேண்டும்.

    ஆதித்ய ஹ்ருதயமும் சூரிய வழிபாட்டின் மேன்மையைச் சொல்கிறது. அதாவது, 'சூரிய நமஸ்காரத்தின் மூலம் நம் உடலில் ஏற்படும் நோய்கள் மட்டுமன்றி, மன நோயும் அகலும். தவிர, எதிரிகள் அழிவார்கள். வெற்றி என்பது நம் வசமாகும்' என்கிறது ஆதித்ய ஹ்ருதயம்.

    சூரிய பகவானுக்கென்று பிரத்தியேகமாக அமைந்த தனிக் கோயில், கும்பகோணத்துக்கு அருகே சூரியனார்கோவில் என்கிற திருத்தலத்தில் அமைந்துள்ளது. சூரிய பகவான் இங்கே கோயில் கொண்டுள்ளதால், ஊரின் பெயரும் அதுதான்.

    எங்கே இருக்கிறது சூரியனார்கோவில்?

    கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் உள்ள ஆடுதுறையில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம் - அணைக்கரை மார்க்கத்தில் வரும் திருப்பனந்தாளில் இருந்து தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே சுமார் 21 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது சூரியனார்கோவில்.

    சூரிய பகவான் தவிர, ஏனைய எட்டு கிரக அதிபதிகளும் இங்கே தனித் தனி சந்நிதியில் கோயில் கொண்டுள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஆக, இந்த ஒரு ஆலயத்தை தரிசித்தால் அனைத்து கிரக அதிபதிகளின் அருளையும் பெற்றுவிடலாம்.

    தென்னிந்தியாவிலேயே சூரிய பகவானுக்குப் புராண முக்கியத்துடன் தனிக்கோயில் அமைந்திருப்பது இங்குதான் (மைசூரிலும் ஓர் ஆலயம் உண்டு). திருவாவடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் இந்த ஆலயம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சூரிய பகவானின் பெருமைகளை, ஆலயத்தை தரிசிப்பதற்கும் முன்பாக சூரியனார்கோவில் ஆலயம் அமைந்த புராணக் கதையைப் பார்ப்போமா?

    ஆதிகாலத்தில் காலவ முனிவர் என்பவர் இமயமலைப் பிரதேசத்தில் வசித்து வந்தார். ஆகம சாஸ்திரங்களை அறிந்ததோடு அல்லாமல், ஜோதிட சாஸ்திரத்திலும் இவர் தேர்ந்த விற்பன்னராக விளங்கினார். இந்தக் காரணத்தால், பல மன்னர்களும் மகான்களும் காலவ முனிவரிடம் வந்து, தங்களது தவ யோகம் எப்போது ஸித்திக்கும்... நாடாளும் பாக்கியம் எப்போது வாய்க்கும்... குடும்ப நலம் எப்படி இருக்கும் என்பன போன்ற எதிர்காலம் குறித்த கேள்விகளை இவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுத் திரும்புவது வழக்கம்.

    ஒரு நாள் காலவ முனிவரின் ஆசிரமத்துக்குத் துறவி ஒருவர் வந்தார். துறவு வாழ்க்கையில் அப்போதுதான் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், காலவரின் அருமை பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு வெகு தொலைவில் இருந்து வந்திருப்பதாகவும் சொன்னார் அவர். வந்தவரை உபசரித்தார் காலவர். பிறகு, தனது எதிர்காலம் குறித்துக் கேட்டார் துறவி. ஜோதிட சாஸ்திரங்களையும் கிரகங்களின் நிலைகளையும் நன்கு ஆராய்ந்த பின், மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி விசேஷம் எதுவும் இல்லை என்றார் காலவர்.

    புறப்படும் முன்னதாக, ஜோதிடத்தில் தேர்ந்த மகானே, எல்லோருக்கும் எதிர்காலம் குறித்துப் பலன் சொல்கிறீர்கள். ஆனால், உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்றைக்காவது ஆராய்ந்து பார்த்ததுண்டா? என்று கேட்டார் துறவி. காலவர் ஒரு கணம் ஸ்தம்பித்தார். வந்திருப்பவர், சாதாரண ஆசாமி இல்லை என்பது அவரது அறிவுக்குப் பட்டது.

    ஐயா... இது போன்ற கேள்வியை இவ்வளவு தைரியமாக இதுவரை எவரும் என்னிடம் கேட்டதில்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், சாதாரண மனிதர் இல்லை. தயவுசெய்து நீங்கள் யார் என்று கூறுங்கள் என்று கேட்டார் விநயமாக.

    பெரிதாக நகைத்த அந்தத் துறவி, என்ன காலவரே... என்னைத் தெரியவில்லையா? முக்காலமும் உணர்ந்த காலதேவன் நான் என்று சொல்ல... அவரை வணங்கினார் காலவர். அதற்குள் காலதேவன், அங்கிருந்து மறைந்துவிட்டார்.

    அதன் பிறகுதான், பொறுமையாக அமர்ந்து தன் எதிர்காலம் குறித்து ஆராய முற்பட்டார் காலவர். விளைவுகள் தெரிந்து அதிர்ந்தார். அதாவது, முன்வினைப் பயனால், வெகு சீக்கிரமே தனக்குத் தொழுநோய் வரும் என்பதை அறிந்தார். வரப் போகின்ற நோயின் பாதிப்பு, அவருக்குக் கவலையை ஏற்படுத்தியது. அவருடைய முகம் வாட்டமாக இருந்தது.

    அந்த வேளையில், காலவரின் ஆசிரமத்துக்கு வந்த மற்ற முனிவர்கள் அவரது முகத்தில் தெரியும் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு, நடந்த நிகழ்வுகளை அவர்களிடம் தெரிவித்தார் காலவர். முக்காலமும் உணர்ந்த மாபெரும் முனிவர் நீங்கள். முன் செய்த வினை பின்னால் தாக்கும் என்பதை அறியாதவரா நீங்கள்? கவலை வேண்டாம். நவக்கிரகங்களை தவம் புரிந்து வழிபடுங்கள். அவர்கள் நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்துவார்கள் என்று தேற்றிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள் முனிவர்கள்.

    தொடர்ந்து இமயமலைப் பகுதியில் இருக்கப் பிடிக்காமல், அங்கிருந்து விந்தியமலைச் சாரலுக்கு வந்தார் காலவர். ஒரு சுப தினத்தில் பஞ்சாக்னி வளர்த்தார். ஜோதி சொரூபமாகக் கொழுந்துவிட்டு பிரகாசித்தது அக்னி. அதன் நடுவில் நின்று, நவக்கிரகங்களைத் துதித்துக் கடும் தவம் செய்தார். நாட்கள் ஓடின. காலவர் நடத்தும் அக்னியின் ஜுவாலை, நவக்கிரக மண்டலத்தை அடைந்து, அவர்களையே பாதித்தது. அப்போதுதான் தங்களைக் குறித்துக் காலவர் தவம் செய்வதை அவர்கள் அறிந்தனர். உடனே விந்தியமலைச் சாரலுக்கு வந்து காலவருக்கு தரிசனம் தந்தனர் நவக்கிரக அதிபதிகள்.

    செக்கச் செவேல் என்று அக்னி மண்டலத்தில் இருந்து வெளியே வந்த காலவர், நவக்கிரகங்களின் திருவடிகளில் வீழ்ந்தார். கைகள் கூப்பி வணங்கினார். கண்கள் பனிக்க - தனக்கு ஏற்பட இருக்கும் நோயின் பாதிப்பு பற்றிச் சொன்னார். தங்களைக் குறித்து இத்தனை நாட்கள் தவம் இருந்த காலவரின் அதீத பக்தியையும், அவருக்கு வரப் போகும் நோயின் தன்மையையும் அறிந்த நவக்கிரகங்கள், கவலை வேண்டாம் முனிவரே... உங்களது தவம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. என்ன வரம் வேண்டும்... கேளுங்கள். அருள்கிறோம் என்றனர்.

    காலவரின் முகத்தில் மெள்ள மகிழ்ச்சி தெரிந்தது. உலகத்தின் இயக்கத்துக்குக் காரணமான நவக்கிரக நாயகர்களே... என்னைத் தாக்க இருக்கும் தொழுநோயின் பிடியில் இருந்து நான் மீள வேண்டும். அதற்கான வரத்தை அருளுங்கள் என்று சிரம் தாழ்த்திக் கேட்டார்.

    நவக்கிரகங்களும் உளம் பூரித்தனர். தங்களைக் குறித்து தவம் இருந்த முனிவருக்கு இந்த வரத்தை அருளலாம் என்று தீர்மானித்து, அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து அங்கிருந்து மறைந்தனர்.

    இந்தச் செய்தி பிரம்மலோகத்தை எட்டியது. பிரம்மதேவன் சாதாரணப்பட்டவரா? 'நவக்கிரகங்கள் அனைத்தும் மும்மூர்த்திகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்க வேண்டும்? ஒரு முனிவருக்கு வரம் தருவதற்கு இவர்கள் யார்?' என்று சினந்தார். நவக்கிரகங்கள் அனைவரையும் உடனே தம்மிடம் வரவழைத்தார். என்னவோ, ஏதோவென்று நவக்கிரகங்கள் அனைத்தும் பிரம்மலோகம் விரைந்தன.

    பிரம்மனின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. யாரைக் கேட்டுக் காலவ முனிவருக்கு நீங்கள் வரம் கொடுத்தீர்கள்? அவரவர் முற்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு உண்டான பலனை அடுத்து வரும் பிறவியில் அனுபவிக்கவேண்டும் என்பது விதி. கயிலைவாசனின் உத்தரவுப்படி இதற்கான பணிகளைக் காலதேவன் கவனித்துக்கொண்டிருக்கிறான். இடையில் நீங்கள் புகுந்து, எப்படி நோயின் பிடியில் இருந்து காலவரை விடுவிக்க முடியும்? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? என்று உரத்த குரலில் கேட்க... நவக்கிரகங்கள் கலங்கி நின்றனர்.

    பிரம்மதேவனே சொன்னார்: காலவ முனிவர் தொழுநோயால் அவதிப்பட வேண்டிய காலம் முழுவதும் நீங்கள் அனைவரும் அதே தொழுநோயால் அவதிப்படவேண்டும். இதற்காக பூலோகத்தில் பிறந்து இந்த அவஸ்தைகளைப் பட வேண்டும்.

    சாப மொழி கேட்டதும், கிரகங்கள் நடுங்கினர். தேவர்களைப் போல் வளைய வந்த தங்களை, பூலோகத்தில் பிறந்து இப்படி ஒரு சாபத்தை அனுபவிக்கும்படி பிரம்மதேவன் உத்தரவிட்டு விட்டாரே என்று கவலை கொண்டனர். இதற்கு விமோசனம் வேண்டுவதற்காக, எங்களை மன்னிக்கவேண்டும் பிரம்மதேவரே காலவ முனிவர் செய்யும் கடும் தவம் எங்களைப் பெருமளவு வாட்டவே... நாங்கள் அவருக்குத் தரிசனம் தந்து வரம் அளித்தோம். மும்மூர்த்திகளின் கோபத்துக்கு இது ஆளாகும் என்பது புரியாமல் பிழை புரிந்துவிட்டோம். தவிர, காலதேவனின் பணியிலும் நாங்கள் குறுக்கிட்டு விட்டோம். அறியாமல் நாங்கள் செய்த பிழையைப் பொறுத்து, சாப விமோசனம் தந்தருளவேண்டும் பகவானே என்று கோரிக்கை வைத்தனர்.

    செய்த பிழையைத் தவறு என்று ஒப்புக்கொண்டமையால் பிரம்மதேவனும் மனம் இளகினார். சரி. உங்களுக்கு விமோசனம் தருகிறேன். பூலோகத்தில் பரத கண்டத்தில் தென் பாரதத்துக்குச் செல்லுங்கள். புண்ணிய நதியாம் காவிரியின் வடகரையை அடையுங்கள். அங்கே அர்க்க வனம் (வெள்ளெருக்கங்காடு) உள்ளது. அங்கு தங்கி தவம் மேற்கொள்ளுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி, பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை வரை - அதாவது எழுபத்தெட்டு நாட்கள் தவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் உதயத்துக்கு முன்னதாகக் காவிரி நதியில் புனித நீராடி, அங்கே குடி கொண்டுள்ள பிராணவரதேஸ்வரரையும் மங்கலநாயகியையும் வழிபடுங்கள். உதயாதி ஏழு நாழிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி அளவு தயிர் சாதம் வைத்து, அதை நீவிர் அனைவரும் உண்ணவேண்டும். மற்ற நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. இதைச் சற்றும் பிசகாமல் செய்துவந்தால், சாப விமோசனம் உங்களுக்குக் கிடைக்கும் என்றார் பிரம்மதேவன். மகிழ்ந்தன நவக்கிரகங்கள்.

    நவக்கிரக நாயகர்கள் அனைவரும் பிரம்மலோகத்தை விட்டுப் புறப்பட்டனர். காவிரிக் கரையோரம் பூலோகத்தில் அவர்கள் வந்து சேர்ந்த இடமே திருமங்கலக்குடி. சூரியனார்கோவிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

    பூலோகத்தை வந்தடைந்த நவக்கிரகங்கள், காவிரியின் வடகரை வழியாக நடந்து, அர்க்க வனத்தைத் தேடி அலைந்தார்கள். ஆனால், சுலபத்தில் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், உதவி கிடைத்தது. இவர்களுக்கு முன்னால், அகத்தியர் நடந்துகொண்டிருந்தார். அகத்தியரைக் கண்டதும் நவக்கிரகங்களுக்குப் பெருமகிழ்ச்சி. இவரது உதவியால் எப்படியேனும் அர்க்க வனத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று பூரிப்பானார்கள்.

    அகத்தியரிடம் சென்ற நவக்கிரகங்கள், பிரம்மனிடம் தாங்கள் சாபம் பெற்ற கதையையும் அதற்கான விமோசனம் வேண்டி, அர்க்க வனத்தைத் தேடி அலைவதாகவும் விரிவாகவே சொன்னார்கள். அதற்கு அகத்தியர், அர்க்க வனத்தையா தேடுகிறீர்கள்? அங்குதான் நானும் செல்கிறேன். அங்கு உறையும் எம்பெருமான் பிராணநாதரையும் அன்னை மங்கலநாயகியையும் வழிபடச் சென்றுகொண்டிருக்கிறேன். சகல வரங்களையும் அருளும் திருத்தலம் அது. கவலை வேண்டாம். என்னுடன் வாருங்கள் என்று நவக்கிரகங்கள் பின்தொடர அகத்தியர் முன்னே நடந்தார். அந்த வனத்தையும் அவர்களுக்கு அடையாளம் காண்பித்தார்.

    அதன் பின் நவக்கிரக அதிபதிகள் அர்க்க வனத்தில் உள்ள காவிரி நதியில் புனித நீராடினர். பிறகு, பிராணநாதரையும் மங்கலநாயகியையும் மனமுருக வேண்டி வழிபட்டனர்.

    எனினும், பிரம்மதேவன் இட்ட சாபம் சும்மா இருக்குமா? அர்க்க வனத்தை நவக்கிரகங்கள் அடைந்த ஓரிரு தினத்தில், காலவ முனிவரைப் பற்ற வேண்டிய தொழுநோய் பிரம்மனின் சாபத்தால் நவக்கிரகங்களைப் பற்றிக் கொண்டன. உடல் மெலிந்து, சுரத்து இழந்து அவர்கள் மிகவும் அல்லலுற்றனர். நித்ய கடன்களைச் செய்யவே சிரமப்பட்டனர்.

    எனவே, அர்க்க வனத்தில் தவத்தில் இருந்த அகத்தியரைப் பணிந்து, தொழுநோயின் பாதிப்பு எங்களை வாட்டத் தொடங்கிவிட்டது. நாங்கள் எப்படி வழிபட்டால், இந்த சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும்? என்று கேட்டனர். அதோடு, பிரம்மதேவன் சொன்ன சாப விமோசன முறையையும் சொன்னார்கள் நவக்கிரக அதிபதிகள்.

    நவக்கிரகங்களின் நிலையைக் கேட்டு மிகவும் வருந்திய அகத்தியர், விரைவிலேயே உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். நீங்கள் தவம் இருப்பதற்கு இந்த அர்க்க வனத்தில் வடகிழக்குப் பகுதியை அடையுங்கள். உங்களது தவமும் வழிபாடும் விக்னம் (எந்தக் குறையும்) இல்லாமல், நல்லபடியாக நிறைவேறுவதற்கு அங்கே ஒரு விநாயகப் பெருமானை முதலில் பிரதிஷ்டை செய்யுங்கள். பிரம்மதேவன் சொன்னபடி எழுபத்தெட்டு நாட்கள் விரதமிருந்து, காவிரியில் நீராடி, பிராணநாதர் மற்றும் மங்கலநாயகியை வழிபட்டு, எருக்க இலையில் தயிர் அன்னம் வைத்து சாப்பிடுங்கள் என்றார்.

    மகாமுனியே, தவம் இருக்கச் சொன்னதும் சரி, வழிபாடு செய்யச் சொன்னதும் சரி, எருக்க இலையில் வைத்துத் தயிரன்னம் புசிக்கச் சொன்னது ஏன்? என்று புரியாமல் கேட்டனர் நவக்கிரகங்கள்.

    அதற்கு, எருக்க இலையில் தயிரன்னத்தை வைக்கும்போது, அந்த எருக்க இலையின் தன்மை தயிரன்னத்தில் சேர்ந்துவிடும். எருக்க இலைக்குத் தொழுநோயைப் போக்கும் குணம் உண்டு. எனவே, இந்தத் தயிரன்னத்தைச் சாப்பிட நேரும் எவரும், அந்த நோயின் பாதிப்பில் இருந்து மீளுவர் என்றார் அகத்தியர்.

    முனிவர் பெருமானுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர் சொன்னபடி அர்க்க வனத்தின் வடகிழக்குப் பகுதியை (இதுவே இன்றைய சூரியனார்கோவில்) அடைந்தனர் நவக்கிரகங்கள். தங்களின் தவம் எந்தக் குறைபாடும் இல்லாமல் பூர்த்தி ஆகவும், சாபத்தில் இருந்து விரைவில் விமோசனம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் விநாயகப் பெருமானை (இவரே சூரியனார்கோவிலில் உள்ள கோள் வினை தீர்த்த விநாயகர்) பிரதிஷ்டை செய்தனர். அவரைத் துதித்த பின், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கிக் கடுமையாக விரதத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். காவிரியில் நீராடினர். பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட்டனர். எருக்க இலையில் வைத்த தயிரன்னம் உண்டனர்.

    எழுபத்தெட்டு நாள் முடிந்து, எழுபத்தொன்பதாவது நாள் அதிகாலையில் காவிரியில் நீராடினர் நவக்கிரகங்கள். என்னே ஆச்சரியம்! அவர்களின் உடலில் இருந்த தொழுநோய்க்கான அடையாளங்கள் பாதியளவுக்குக் குறைந்திருந்தன. இந்த மகிழ்ச்சியுடன், பிராணநாதரையும் மங்கலநாயகியையும் வழிபட்டனர். நவக்கிரகங்களின் ஆராதனையில் ஆனந்தப்பட்ட பிராணநாதரும் மங்கலநாயகியும் அவர்களுக்குத் திருக்காட்சி கொடுத்தனர். நவக்கிரக நாயகர்கள் அனைவரும் ஈசனையும் உமையையும் போற்றித் துதித்து அவர்களின் திருவடி தொழுதனர்.

    ஈசன் திருவாய் மலர்ந்தார்: நவக்கிரக நாயகர்களே, உங்களுடைய தவமும் வழிபாடும் எங்களை நெகிழ வைத்தன. அதனால், உங்களுக்கு விமோசனம் தருகிறோம். உங்களுடைய உடலில் மீதம் இருக்கும் தொழுநோயின் அடையாளம் யாவும் இக்கணமே முற்றிலும் நீங்கும் என்று சொன்னார். ஈசனின் வாக்குக்கு மறுவாக்கு உண்டா? அடுத்த கணமே, நவக்கிரகங்கள் அனைவரும் தங்களது திருமேனியைப் பார்த்துக் கொண்டனர். ஆம்! உலகுக்கே தலைவனான அந்த பிராணநாதரின் திருவாக்குப்படி, அவர்கள் உடலில் இருந்த தொழுநோய் அடையாளங்கள் யாவும் மறைந்து, தேகமே பிரகாசித்தது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.

    ஈசனின் திருவடியை மீண்டும் வணங்கினர். அப்போது பிராணநாதர், "அர்க்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தவம் செய்த இடத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆலயம் உண்டாகும். அது உங்களுக்கு மட்டுமே ஆன பிரத்தியேகத் திருத்தலமாக விளங்கும். நோய் நொடி போன்ற எந்த ஒரு பிரார்த்தனையோடும் வருபவர்களை, சுதந்திரமாக ஆசிர்வதித்து அருள் புரியுங்கள். சிறந்த பிரார்த்தனைத் தலமாக

    Enjoying the preview?
    Page 1 of 1