Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalaya Dharisanam Part-1
Aalaya Dharisanam Part-1
Aalaya Dharisanam Part-1
Ebook173 pages1 hour

Aalaya Dharisanam Part-1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொருவரது வசிப்பிடத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மனிதர்களாகிய நாம் வசிக்கும் இடம் வீடு என்று சொல்லப்படும். அவரவரது வசதிக்கு ஏற்ப ‘வீடு’ என்பது பல வகைப்படும். பொருளாதார வசதியில் குறைந்தோர் வசிக்கும் இடம் குடிசையாக இருக்கலாம். ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வசிக்கும் இடம் அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கலாம். அதிக வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடம் பங்களா எனப்படும் தனி வீடாக இருக்கலாம். இதைத் தவிர ஒண்டுக்குடித்தனம், பிளாட்பாரம் - இப்படியும் பலர் வசித்துதான் வருகிறார்கள். ஆனால், இறைவன் இருக்கும் இடம் மட்டும் ஒன்றே ஒன்றுதான். கோயில் அல்லது ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். தெருமுனையில் உள்ள விநாயகர் மண்டபத்தையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். இதிலிருந்தே தெரிகிறது அல்லவா - வசதியும் வாழ்க்கைத் தத்துவங்களும் மனிதர்களுக்கு மட்டும்தான் என்று.

சமரசம் போதிக்கப்படும் இடம் - திருக்கோயில். இறைவனின் முன் எல்லோரும் சமம். பேதங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் விமரிசனங்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். மூல முதல்வனான பரம்பொருளை இறை அல்லது இறைவன் என்கிறோம். தவிர கடவுள், இயவுள், தெய்வம், ஸ்வாமி, பெருமான் - இப்படிப் பல பெயர்களால் குறிப்பிடுகிறோம். பொதுவாக அடிக்கடி நாம் குறிப்பிடுவது, இறைவன் என்கிற பெயரில். ‘இறு’ என்ற சொல்லில் இருந்து இறைவன் வந்திருக்கலாம் என்பது ஓர் ஆராய்ச்சி. ‘இறு’ என்பதற்கு இறுத்தல் அல்லது தங்குதல் என்று பொருள். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் எனும் சான்றோர், ‘இறைவன் என்கிற சொல்லுக்கு எப்பொருளிலும் தங்குபவன் என்பது பொருள்’ என்கிறார்.

கட + உள் என்பதே கடவுள். மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்பதே கடவுள். உண்மைதானே! ‘கோயில் விளங்கக் குடி விளங்கும்’ என்பர் நம் முன்னோர். கோயில்கள் சிறந்து விளங்கினால்தான், குடிமக்கள் சிறந்து விளங்குவார்கள். மனிதர்களின் அன்றாடக் கடமைகளுள் ஒன்று - ஆலயம் சென்று தொழுவது. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்திச் சொன்ன இந்தக் கருத்தை, இன்றைய ஜனங்களுக்கு நினைவூட்ட வேண்டி இருப்பது, கலிகாலத்தின் சோகம். இன்றைய காலத்தில் கோயிலுக்குச் செல்வது என்பதை ஆத்மார்த்தமாகச் செய்யாமல் ஒரு ‘அஜெண்டா’ போல் ஆக்கிக்கொண்டுவிட்டார்கள் சிலர். தன் நாட்டுக் குடிமக்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக எண்ணற்ற திருக்கோயில்களைக் கட்டினார்கள் மன்னர்கள். பூஜைகளையும் விழாக்களையும் அங்கே நடத்தினார்கள். மன்னர்கள் காலத்தில் பெரும் கூட்டம் கூடும் இடம் இரண்டு. ஒன்று - அரசவை; இன்னொன்று - ஆலயம். நாட்டைக் காப்பவன் அரசன். உலகையே காப்பவன் இறைவன்.

இறைவன் எழுந்தருளி உள்ள இடத்தைக் கோயில் என்றும், ஆலயம் என்றும் நாம் அழைக்கின்றோம். ‘கோயில்’ என்கிற சொல்லை ‘கோ + இல்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘கோ’ என்றால் கடவுள் என்கிற பொருள் உண்டு. ‘இல்’ என்பதற்கு இருப்பிடம் என்பது பொருளாகும். கடவுளின் இருப்பிடம் என்பதே கோயில் ஆனது. ‘ஆலயம்’ என்ற சொல்லுக்கு ‘ஆ + லயம்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘ஆ’ என்றால், ஆன்மா. ‘லயம்’ என்றால், சேருவதற்குரியது என்று பொருள். அதாவது, ஆன்மா சேருவதற்குரிய இடமே ஆலயம் ஆகும் என்று பொருள் சொல்லி இருக்கின்றனர் முன்னோர். நம் ஆலயங்களைப் பற்றி இதற்கு முன் நான் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ‘சக்தி விகடன்’ மற்றும் ‘திரிசக்தி’ இதழ்களில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘ஆலயம் அறிவோம்’ என்ற தலைப்புகளில் ஏராளம் எழுதி இருக்கிறேன். நான் எழுதி இருக்கிறேன் என்று சொல்வது தவறு. எழுதக் கூடிய ஒரு பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான். இதற்காகக் காலம் முழுதும் அந்தக் கடவுளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். அப்படி நான் தரிசித்துள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களுள் முதல் தொகுதியாக ‘ஆலய தரிசனம் - தொகுதி 1’ இப்போது வெளி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொகுதிகள் வர உள்ளன. எனது நூல்களுக்குப் பேராதரவு அளித்து வரும் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனுக்கும், நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரம்.

அன்புடன், பி. சுவாமிநாதன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138306224
Aalaya Dharisanam Part-1

Read more from P. Swaminathan

Related to Aalaya Dharisanam Part-1

Related ebooks

Reviews for Aalaya Dharisanam Part-1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalaya Dharisanam Part-1 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    ஆலய தரிசனம் பகுதி-1

    Aalaya Dharisanam Part-1

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்

    வீரபாண்டி கௌமாரியம்மன்

    கோழிகுத்தி வானமுட்டி பெருமாள்

    தீவனூர் நெற்குத்தி விநாயகர்

    பட்டீஸ்வரம் துர்கை அம்மன்

    சைதாப்பேட்டை சௌந்தரேஸ்வரர்

    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை

    திருப்புறம்பயம் சாட்சிநாதர்

    திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி

    திருலோக்கி சுந்தரேஸ்வரர்

    திருவல்லம் பரசுராமர்

    ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்

    வர்க்கலா ஜனார்த்தன ஸ்வாமி

    ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராகப் பெருமாள்

    என்னுரை

    ஒவ்வொருவரது வசிப்பிடத்துக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மனிதர்களாகிய நாம் வசிக்கும் இடம் வீடு என்று சொல்லப்படும். அவரவரது வசதிக்கு ஏற்ப ‘வீடு’ என்பது பல வகைப்படும். பொருளாதார வசதியில் குறைந்தோர் வசிக்கும் இடம் குடிசையாக இருக்கலாம். ஓரளவு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வசிக்கும் இடம் அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கலாம். அதிக வசதி படைத்தவர்கள் வசிக்கும் இடம் பங்களா எனப்படும் தனி வீடாக இருக்கலாம். இதைத் தவிர ஒண்டுக்குடித்தனம், பிளாட்பாரம் - இப்படியும் பலர் வசித்துதான் வருகிறார்கள்.

    ஆனால், இறைவன் இருக்கும் இடம் மட்டும் ஒன்றே ஒன்றுதான். கோயில் அல்லது ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதியையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். தெருமுனையில் உள்ள விநாயகர் மண்டபத்தையும் கோயில் என்றுதான் சொல்கிறோம். இதிலிருந்தே தெரிகிறது அல்லவா - வசதியும் வாழ்க்கைத் தத்துவங்களும் மனிதர்களுக்கு மட்டும்தான் என்று.

    சிறிய அளவிலான ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் என்றாலும் அது கோயில்தான். மிகப் பெரிய விக்கிரகம் பிரதிஷ்டை ஆகி இருக்கும் இடமும் கோயில்தான்!

    சமரசம் போதிக்கப்படும் இடம் - திருக்கோயில். இறைவனின் முன் எல்லோரும் சமம். நாம் எல்லோரும் அவனுடைய குழந்தைகளே! குழந்தைகள் தாயிடம் பாசம் வைத்திருக்கிறதோ இல்லையோ... தாய்க்குக் குழந்தைகள் மீது நிச்சயம் பாசம் உண்டு. அதுபோல் கருணையே வடிவான இறைவன், என்றென்றும் நம்மை அரவணைத்துக் காத்து வருகிறான்.

    பேதங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் விமரிசனங்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன். மூல முதல்வனான பரம்பொருளை இறை அல்லது இறைவன் என்கிறோம். தவிர கடவுள், இயவுள், தெய்வம், ஸ்வாமி, பெருமான் - இப்படிப் பல பெயர்களால் குறிப்பிடுகிறோம்.

    பொதுவாக அடிக்கடி நாம் குறிப்பிடுவது, இறைவன் என்கிற பெயரில். ‘இறு’ என்ற சொல்லில் இருந்து இறைவன் வந்திருக்கலாம் என்பது ஓர் ஆராய்ச்சி. ‘இறு’ என்பதற்கு இறுத்தல் அல்லது தங்குதல் என்று பொருள். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் எனும் சான்றோர், ‘இறைவன் என்கிற சொல்லுக்கு எப்பொருளிலும் தங்குபவன் என்பது பொருள்’ என்கிறார்.

    கட + உள் என்பதே கடவுள். மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்பதே கடவுள். உண்மைதானே!

    ‘கோயில் விளங்கக் குடி விளங்கும்’ என்பர் நம் முன்னோர். கோயில்கள் சிறந்து விளங்கினால்தான், குடிமக்கள் சிறந்து விளங்குவார்கள். ஆக, தெய்வங்கள் உறையும் இடங்களை நாம் போற்றி வணங்க வேண்டும். மனிதர்களின் அன்றாடக் கடமைகளுள் ஒன்று - ஆலயம் சென்று தொழுவது. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்திச் சொன்ன இந்தக் கருத்தை, இன்றைய ஜனங்களுக்கு நினைவூட்ட வேண்டி இருப்பது, கலிகாலத்தின் சோகம். இன்றைய காலத்தில் கோயிலுக்குச் செல்வது என்பதை ஆத்மார்த்தமாகச் செய்யாமல் ஒரு ‘அஜெண்டா’ போல் ஆக்கிக்கொண்டுவிட்டார்கள் சிலர்.

    தன் நாட்டுக் குடிமக்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக எண்ணற்ற திருக்கோயில்களைக் கட்டினார்கள் மன்னர்கள். பூஜைகளையும் விழாக்களையும் அங்கே நடத்தினார்கள்.

    மன்னர்கள் காலத்தில் பெரும் கூட்டம் கூடும் இடம் இரண்டு. ஒன்று - அரசவை; இன்னொன்று - ஆலயம்.

    நாட்டைக் காப்பவன் அரசன். உலகையே காப்பவன் இறைவன்.

    இறைவன் எழுந்தருளி உள்ள இடத்தைக் கோயில் என்றும், ஆலயம் என்றும் நாம் அழைக்கின்றோம். ‘கோயில்’ என்கிற சொல்லை ‘கோ + இல்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘கோ’ என்றால் கடவுள் என்கிற பொருள் உண்டு. ‘இல்’ என்பதற்கு இருப்பிடம் என்பது பொருளாகும். கடவுளின் இருப்பிடம் என்பதே கோயில் ஆனது.

    ‘ஆலயம்’ என்ற சொல்லுக்கு ‘ஆ + லயம்’ என்று பிரித்துப் பொருள் காணலாம். ‘ஆ’ என்றால், ஆன்மா. ‘லயம்’ என்றால், சேருவதற்குரியது என்று பொருள். அதாவது, ஆன்மா சேருவதற்குரிய இடமே ஆலயம் ஆகும் என்று பொருள் சொல்லி இருக்கின்றனர் முன்னோர்.

    ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் எல்லாமே அடங்கவேண்டும் என்றுதானே நினைக்கின்றோம். மனம் லேசாக வேண்டும் என்றுதானே கோயில்களுக்குப் போகின்றோம். போட்டியும் பொறாமையும் மனதில் இருந்து அறவே அழிந்து போக வேண்டும் என்றுதானே கோயில்களுக்குச் செல்கிறோம்.

    ‘இறைவனைத் தேடிக் கோயில்களுக்குத்தான் செல்ல வேண்டுமா?’ என்று ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான். அதற்கு குரு என்ன பதில் சொன்னார் தெரியுமா?

    ‘தர்ம குணம் நிறைந்த ஒரு வள்ளலிடம்தான் தானம் கேட்டுச் செல்ல முடியும். வள்ளல்கள் அல்லாத பிறரிடம் தானம் கேட்டால் கிடைத்துவிடுமா? தானம் வேண்டும் என்றால், தர்ம குணம் எங்கு இருக்கிறதோ, அங்கு தேடிச் செல்ல வேண்டும்.

    ஒரு பசுவின் உடல் முழுதும் பால் மறைந்திருக்கிறது. ஆனால், அந்தப் பால் எப்படி வெளிப்படுகிறது? பசுவின் மடி மூலமாகத்தானே!

    அதுபோல் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தர்ம குணம் எப்படிச் சிலரிடம் இருந்து மட்டும் வெளிப்படுகிறதோ... பாலானது பசுவின் மடியில் இருந்து மட்டும் வெளிப்படுகிறதோ... அதுபோல் இறைவன் என்பவன் திருக்கோயில்கள் வழியாகவே வெளிப்பட்டு, அருள் புரிந்து நம்மை எல்லாம் ஆசிர்வதிக்கின்றான். இறைவன் பரிபூரணமாக உறைகின்ற இடம் இதுவாகும்’ என்றார்.

    அப்பேர்ப்பட்ட சிறப்புடைய நம் ஆலயங்களைப் பற்றி இதற்கு முன் நான் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ‘சக்தி விகடன்’ மற்றும் ‘திரிசக்தி’ இதழ்களில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘ஆலயம் அறிவோம்’ என்ற தலைப்புகளில் ஏராளம் எழுதி இருக்கிறேன்.

    நான் எழுதி இருக்கிறேன் என்று சொல்வது தவறு. எழுதக் கூடிய ஒரு பாக்கியத்தை இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான். இதற்காகக் காலம் முழுதும் அந்தக் கடவுளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

    அப்படி நான் தரிசித்துள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களுள் முதல் தொகுதியாக ‘ஆலய தரிசனம் - தொகுதி 1’ இப்போது வெளி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொகுதிகள் வர உள்ளன.

    எனது நூல்களுக்குப் பேராதரவு அளித்து வரும் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனுக்கும், நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் என் அனந்தகோடி நமஸ்காரம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    *****

    கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்

    பிள்ளையாருக்குத்தான் எத்தனை எத்தனை திருநாமங்கள்... ஒவ்வொரு ஊரிலும் தான் நிகழ்த்திய ஒவ்வொரு திருவிளையாடலின் அடிப்படையில் அதற்கேற்ப திருநாமம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர், மதுரையில் மொட்டை விநாயகர், விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் நெற்குத்தி விநாயகர், சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார், திருவனந்தபுரத்தில் மிலிட்டரி கணபதி, திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் ஏழைப் பிள்ளையார் - இப்படி வித்தியாசமான திருநாமங்கள் கொண்ட விநாயகர் வடிவங்கள் நம் தேசத்தில் ஏராளம் இருக்கின்றன.

    தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆன்மிக நகரம் - கும்பகோணம்! இந்த நகரில் இருக்கின்ற புராதனமான கோயில்களை அவ்வளவு எளிதில் பட்டியல் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒரு பழமையான திருக்கோயில் அமைந்திருக்கும்.

    ஸ்ரீபகவத் விநாயகர், உச்சிப்பிள்ளையார் என்று விநாயகருக்குத் தனிக் கோயில்களும் கும்பகோணத்தில் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் - கரும்பாயிரம் பிள்ளையார்.

    கும்பகோணம் நகரின் மத்தியில் எழுந்தருளி உள்ள ‘கரும்பாயிரம் பிள்ளையார்’ சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

    கும்பகோணம் நகரிலேயே ஆதியில் அவதரித்த பிள்ளையாராக இவர் கருதப்படுகிறார். எனவே, இவரது ஆலயத்துக்குப் பக்தர்கள் பெருமளவில் வந்து செல்வது வழக்கம்.

    கும்பகோணம் நகரம் உருவானதற்குக் காரணமாக விளங்கும் கும்பேஸ்வரன் திருக்கோயிலுக்கும், புண்ணிய நதியாம் காவிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரும்பாயிரம் பிள்ளையார் கோலாகலமாகத் திருக்கோயில் கொண்டுள்ளார்.

    கரும்பாயிரம் பிள்ளையார் என்று இவர் இப்போது வழங்கப்பட்டாலும், புராண காலத்தில் ‘வராஹ விநாயகர்’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்.

    புராண காலத்தில் வராஹபுரி என்ற பெயரால் கும்பகோணம் நகரம் அழைக்கப்பட்டு வந்தது. இந்த வராஹ க்ஷேத்திரத்தில் மாலவனும் ‘வராஹ பெருமாள்’ என்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1