Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pandaripurathu Mahaangal
Pandaripurathu Mahaangal
Pandaripurathu Mahaangal
Ebook180 pages1 hour

Pandaripurathu Mahaangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரத தேசம் முழுதும் எத்தனையோ திருக்கோயில்கள்... அத்தனையும் புராண முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் பண்டரிபுரம் குறிப்பிடத் தகுந்த ஒரு க்ஷேத்திரம். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அற்புத தலம் இது.
பண்டரிபுரம் பற்றி எத்தனையோ பேர் அறிந்திருந்தாலும், அங்கு பண்டரிநாதன் வந்து அமர்ந்த கதை, க்ஷேத்திரத்தின் மகிமை, அங்கு வாழ்ந்த மகான்கள் பற்றித் தெரிந்து கொள்வது - போன்ற விஷயங்கள் அவசியம் இல்லையா?
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138306245
Pandaripurathu Mahaangal

Read more from P. Swaminathan

Related to Pandaripurathu Mahaangal

Related ebooks

Reviews for Pandaripurathu Mahaangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pandaripurathu Mahaangal - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    பண்டரிபுரத்து மகான்கள்

    Pandaripurathu Mahaangal

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பண்டரிபுரம் ஓர் அறிமுகம்

    2. நாமதேவர்

    3. ஞானதேவர்

    4. துளசிதாசர்

    5. ஜனாபாய்

    6. கபீர்தாசர்

    7. துக்காராம்

    8. ஏகநாதர்

    9. சூர்தாசர்

    10. சமர்த்த ராமதாசர்

    11. நரஹரி

    12. மீராபாய்

    13. சோகாமேளர்

    14. பானுதாசர்

    15. கூர்மதாசர்

    16. பக்த ராக்கா

    17. ஹரிவியாசர்

    18. கர்மாபாய்

    19. ரோஹிதாசர்

    20. துவாரகை ராமதாசர்

    21. மாதவதாசர்

    பண்டரிபுரத்து மகான்கள்

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    நமஸ்காரம்.

    உணவை சாப்பிட்டால்தான், அதன் ருசி தெரியும். அதுபோல் ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றி எழுதி, அங்குள்ள மகிமைகளை ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துரைத்தால்தான், அந்த புனிதத் தலத்தின் பெருமை புரியும். அந்த விதத்தில் நம் தேசத்தில் ஆன்மிக உணர்வு இன்று பெருகி இருப்பதற்கு முக்கியமான காரணம் ஆன்மிக எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். எங்கெங்கோ மூலை முடுக்குகளிலும் உள்ள தலங்களைப் பற்றிப் பல கட்டுரைகள் வெளி வந்த காலத்தில்தான், ஆன்மிகம் ஏற்றம் பெற்றது.

    ஒரு கோயிலைப் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது அங்கு என்ன சிறப்பு, ஆலய மகிமை, தெய்வம் வந்து அமர்ந்த புராணக் கதை போன்ற பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஒரு மகான் வாழ்ந்தார் என்றால், அந்த மகானின் சிறப்புகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொள்ளாமல் அவரைத் தரிசிக்கப் போவது பிரயோஜனப்படாது.

    பாரத தேசம் முழுதும் எத்தனையோ திருக்கோயில்கள்... அத்தனையும் புராண முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் பண்டரிபுரம் குறிப்பிடத் தகுந்த ஒரு க்ஷேத்திரம். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் அற்புத தலம் இது.

    பண்டரிபுரம் பற்றி எத்தனையோ பேர் அறிந்திருந்தாலும், அங்கு பண்டரிநாதன் வந்து அமர்ந்த கதை, க்ஷேத்திரத்தின் மகிமை, அங்கு வாழ்ந்த மகான்கள் பற்றித் தெரிந்து கொள்வது - போன்ற விஷயங்கள் அவசியம் இல்லையா?

    என் மீது ஆதரவும் அன்பும் காட்டி வரும் என் நண்பர்களுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. பண்டரிபுரம் ஓர் அறிமுகம்

    கங்கை நதி வளம் பெருக்கிப் பாய்ந்தோடும் காசி க்ஷேத்திரம் இன்றைக்கு எந்த அளவு புனிதமாக மதிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பீமா நதி என்கிற சந்திரபாகா நதியின் கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம் திருத்தலமும் பக்தர்களால் பெருமளவில் போற்றப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிறது. இந்தப் பண்டரிபுரத்தில் குடி கொண்ட விட்டலன் - அதாவது பாண்டுரங்கன், பண்டரிநாதன் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தப் பரந்தாமன் பல லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் ஈர்த்துள்ளான். தன்னைத் தேடி வரும் ஒவ்வொரு பக்தரது கோரிக்கையையும் பிரார்த்தனையையும் நிறைவேற்றி அவர்களுக்கு அருள் புரிந்து வருகிறான்.

    பகவானின் சந்நிதியில் எந்த ஒரு பேதமும் இல்லை. ஏழை- பணக்காரன், படித்தவன்- படிக்காதவன் இப்படி எந்த ஒரு பாகுபாடும் இல்லை. பாண்டுரங்கனுடைய திருச்சந்நிதியில் எல்லோரும் சமம். சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் தன் இன்னருளை வேறுபாடு இன்றி வழங்கி வருகின்றான் பாண்டுரங்கன்.

    கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிரத்துக்கும் இடையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது பண்டரிபுரம் என்கிற பண்டர்ப்பூர். பண்டரிபுரத்தில் உள்ள இறைவனை 'விட்டலன்' என்று அன்புடன் அழைக்கிறார்கள்.

    பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உடுப்பி போல, வேங்கடவனுக்குத் திருமலை போல, ரங்கநாதனுக்கு ஸ்ரீரங்கம்போல, குழந்தை கண்ணனுக்கு மதுரா போல, பாண்டுரங்கனான விட்டலனுக்கென்று அமைந்த இந்த பண்டரிபுரம் வெகு சிறப்பான திருக்கோயில் ஆகும்.

    பண்டரிபுரத்தைத் தரிசிப்பதற்கு நித்தமும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகிறார்கள். சந்திரபாகாவில் புனித நீராடி விட்டு, 'விட்டலா விட்டலா' என்று உருக்கமான பக்தியுடன் கோஷம் எழுப்பிக் கொண்டு பாண்டுரங்கனின் திருவடி தொழுகிறார்கள்.

    ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் ஏகாதசிக்கு வைணவத்தில் ஒரு சிறப்பு உண்டு. அதுபோல் ஆடி மாதம் (ஜூலை- ஆகஸ்ட்) வரும் ஏகாதசியை ஆஷாட ஏகாதசி என்பர். மகாராஷ்டிரத்தில் இது ரொம்பவும் விசேஷம்.

    தைப்பூசக் காலத்தில் நம்மூர் பழநி முருகனுக்குப் பல விதமான காவடிகள் எடுத்துச் சென்று பக்தர்கள் தரிசிப்பது போல் இந்த ஆஷாட ஏகாதசி காலத்தில் பாண்டுரங்கனைத் தரிசிக்க அந்த ஊர் பக்தர்களும் காவடி எடுத்துச் சென்று வழிபடுகிறார்கள். பழநி முருகனுக்கான காவடியில் பால், புஷ்பம், சர்க்கரை, பூ, விபூதி என்று பல வித அபிஷேகப் பொருட்கள் இருக்கும். ஆனால், பண்டரிபுரநாதனுக்கான காவடியில் பால் அல்லது தயிர் மாத்திரமே எடுத்துச் செல்லப்படுகிறது.

    காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரில் இருந்து பண்டரிபுரம் வரை - அது எத்தனை நூறு கி.மீ. தொலைவு இருந்தாலும் சரி - நடை பயணம்தான். பக்தர்கள் செல்லும் வழி நெடுக 'பாண்டுரங்க விட்டலா... பண்டரிநாதா விட்டலா...', 'விட்டல விட்டல... ஜய ஜய விட்டல' என்கிற விட்டலநாதனின் கணீர் கோஷம் அந்தப் பகுதியையே நிறைக்கும். எங்கெங்கும் பக்தி மணம் கமழும்.

    பண்டரிநாதனின் இத்தகைய பக்தர்களுக்கு அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊரிலும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள செல்வந்தர்கள் இந்த பக்தர்களை அன்புடன் வரவேற்று, உபசரித்து, ஆசுவாசப்படுத்தி, உணவளித்து மகிழ்கிறார்கள்.

    பாண்டுரங்கனான ஸ்ரீகண்ண பரமாத்மா இந்தப் பண்டரிபுர க்ஷேத்திரத்தில் எழுந்தருளிய விதமே சுவாரஸ்யமானது.

    பக்தியில் முழுமையாகப் பக்குவம் அடையாத புண்டரீகன் என்கிற சாதாரண பக்தனுக்காக பண்டரிபுரத்தில் பரமாத்மா எழுந்தருளினார். துவக்கத்தில் தாய்- தந்தையரை மதிக்காமல், மனைவியின் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்த புண்டரீகனுக்கு ஞானம் பின்னாளில்தான் வந்தது. ஞானம் பெற்ற பின்னர் தன்னையே வணங்கி வரும் புண்டரீகனுக்கு அருள் புரிந்து அவனை ஆட்கொள்வதற்காகத் திருக்காட்சி தந்தார் பகவான். அதன் பின் புண்டரீகனின் வேண்டுகோளுக்கிணங்க, பகவான் நிரந்தரமாக இங்கேயே குடிகொண்டார். அவன் வசித்து வந்த கிராமம் பின்னாளில் அவன் பெயராலேயே (புண்டரீகன் என்பதில் இருந்துதான் பண்டரிபுரம் வந்தது) வழங்கப்பட ஆரம்பித்தது.

    புண்டரீகனின் பக்திக்கு இரங்கிய பகவான் இங்கு வந்து அமர்ந்தது ஒரு ஆடி மாத ஏகாதசி தினம். எனவேதான், இங்கு ஆஷாட ஏகாதசிக்கு அவ்வளவு விசேஷம்.

    கிருஷ்ண பக்திக்கு உதாரணமாக எத்தனையோ திருத்தலங்கள் சொல்லப்பட்டாலும் 'பண்டரிபுர'த்துக்குக் கூடுதல் சிறப்பு உண்டு. காரணம் பக்தனான புண்டரீகன் தன் தாய்- தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும்போது வாசலுக்கு வந்த ஸ்ரீகண்ணன் அவனை அழைத்தார். அப்போது ஒரு செங்கல்லை ஜன்னல் வழியாக வீசி விட்டு, 'தாய்- தந்தையருக்கு நான் செய்து வரும் பணிவிடைகளை முடித்த பிறகே உன்னைத் தரிசனம் செய்ய வர முடியும். ஆகவே, என் கடமைகள் முடிந்து உன்னை தரிசிக்க நான் வரும்வரை நீ காத்திரு. அதுவரை இந்த செங்கல்லின் மீது நின்று கொண்டிரு' என்று தாய்- தந்தையர் மீதுள்ள அபரிமித பக்தியால் புண்டரீகன் சொன்ன வார்த்தைகளை ஒரு வேத வாக்காக எடுத்துக் கொண்டு, புண்டரீகன் எறிந்த கல்லின் மீது பகவான் நிற்க ஆரம்பித்தார். பிறகு, புண்டரீகனுக்கு அருள் வழங்கினார்.

    பாண்டுரங்கனின் அருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் மற்றும் அடியார்களின் சிறப்புகளைச் சொல்லும் நூல்கள் மராத்திய மொழியிலும், இதர மொழிகளிலும் ஏராளம் இருக்கின்றன. அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று - 'ஸ்ரீமஹா பக்த விஜயம்' என்கிற மராத்திய மொழி நூல். இந்த நூலில் பாண்டுரங்க பக்தர்கள் ஜயதேவர், கபீர்தாசர், துளசிதாசர், நாமதேவர், ஞானேஸ்வரர் ஆகியோர் வாழ்க்கைச் சரிதங்கள் வெகு விரிவாகவே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. நாபாஜி சித்தர், உத்தவ சித்தர், பாவாஜி போன்ற எண்ணற்ற அருளாளர்கள் இப்படிப்பட்ட உத்தமமான பக்த புருஷர்களின் கதைகளைத் தேடித் தேடி அவற்றை முறையாகத் தொகுத்து நமக்கு அளித்துள்ளனர்.

    இதுபோல் 'சர்வமும் நீதான்' என்று பாண்டுரங்கனிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்த ஏராளமான பக்தர்களுக்கு வெகு சாதாரண தொண்டனாகி, பகவான் சேவை செய்த நிகழ்வுகள் 'ஸ்ரீமஹா பக்த விஜய'த்தில் ஏராளம் சொல்லப்பட்டுள்ளன. ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 700 பேரின் சரித்திரங்களை இந்துஸ்தானிய மொழியில் நாபாஜி சித்தர் தொகுத்தளித்துள்ளார்.

    தமிழகத்தில் வைணவத்துக்கு சேவை செய்த பன்னிரு ஆழ்வார்கள் எப்படிக் கொண்டாடப்படுகிறார்களோ, அது போல் மகாராஷ்டிரத்தில் இத்தகைய பகவத் பக்தர்கள் - ஹரிதாசர்கள் இறைவனுக்கு சமமாகக் கொண்டாடப்படுகிறார்கள்.

    பகவானை வணங்குவதற்கு போற்றுதல்கள், நாம ஜபம், பக்திப் பாடல்கள் பாடுவது என்று பல முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் பக்தர்கள் பாண்டுரங்கனைப் போற்றிப் பாடுவதற்கு 'அபங்கம்' எனப்படும் ஒரு வகைப் பாடல்களை உணர்ச்சிமயமாகப் பாடுகிறார்கள். இந்தப் பாடல்கள் அனைத்துமே விட்டலனையும் அவனது மகிமையையும் குறித்து இயற்றப்பட்டவை.

    விட்டலனின் பெருமையைக் குறித்து இப்படி அபங்கம் பாடும் பக்தர்கள் ஹரிதாசர்கள், ஹரிதாச இசைவாணர்கள் என்று போற்றப்பட்டார்கள். இத்தகைய இசைவாணர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் விட்டலன் என்பதைச் சேர்த்துப் பெருமை கொண்டார்கள்.

    பல லட்சக்கணக்கான பக்தர்களால் மதிக்கப்படும் ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்ற எண்ணற்ற மகான்கள் இந்த அபங்கம் பாடல்களைப் பாடிப் பாடி விட்டலனின் பெருமையை நாடெங்கும் பரப்பியவர்கள். பண்டரிபுரத்துக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், இன்றைக்கும் இந்தப் பாடல்களை இசைத்துக் கொண்டே செல்வது வாடிக்கை. இசைக்கு மயங்காதோர் உண்டோ? சாம கானம் இசைத்து சர்வேஸ்வரனையே மயக்கியவன் அன்றோ ராவணன்? எனவே, இசையால் அந்த மாயவனைத் தங்கள் பக்திக்குக் கட்டிப் போட்டார்கள்.

    விஜயநகரப் பேரரசில் மன்னர்களாக விளங்கிய பிரபு தேவராயர், கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் விட்டலருடைய சிறப்பு மேலும் ஓங்கி இருந்தது. எனவே, விஜயநகர மன்னர்கள் ஹம்பி நகரத்திலேயே விட்டலருக்காக ஒரு கோயிலை ஸ்தாபித்தனர்.

    இவ்வளவு ஏன்... அந்தக் காலத்தில் விட்டல பக்தி நம் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. 16-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி பகுதி விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்குள் இருந்தது. அப்போது விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக

    Enjoying the preview?
    Page 1 of 1