Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal
Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal
Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal
Ebook587 pages3 hours

Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காட்சிக்கு எளிமையும், கருணையும் வடிவாகவும் வாழ்ந்து நிலைத்தவர் காஞ்சி மகா பெரியவர்.

தேசம் முழுவதும் நடந்தும் ஒயாதவை அவர் தம் தெய்வீக பாதங்கள்! காஞ்சி மகான், காஞ்சிப் பெரியவர், ஜகத்குரு என்று போற்றி வணங்கப்பட்ட அப்புனிதரின் பாதுகையை ஆராதிப்பது, அவரையே ஆராதிப்பாதாக கருதப்படுகிறது!

காஞ்சி மடத்தின், 68வது பீடாதிபதியாகத் திகழ்ந்த புகழ்மிகு சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை அருள் பெற்ற அறுபத்தியெட்டு பக்தர்களின் பரவச அனுபவங்களை, கட்டுரைகள் மற்றும் சொல்லுரைகள் வாயிலாகப் பெற்று, அடர்த்தியான ஆன்மிகப் பெட்டகமாக இந்நூலை தொகுத்திருக்கிறார் டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன்.

பல காலம் காத்திருந்து காஞ்சி மகா பெரியவரிடமிருந்தே வாய்ப்பு பெற்றவர்களும், தாமே பாதுகை வாங்கி காஞ்சி மகானின் பாதங்களில் அணிவித்து அனுக்கிரகம் செய்யப்பெற்று வழிபடும் அணுக்கத் தொண்டர்ள் பரவிப் படர்ந்துள்ளனர்.

அவ்வாறு மகா பெரியவரின் பாதுகையை பூஜிப்பவர்களை ஒன்று திரட்டும் நோக்கோடு உருவாக்கப்பட்ட தொகுப்பு நூல் இது.

பாதுகையில் இறங்கும் மகானின் தவ வலிமையும், இறைமையும் பாதுகையிலும் தங்குவதாகக் கூறப்படுகிறது. அதீத நம்பிக்கையே ஆத்மார்த்த இறைவழிபாட்டின் அசைக்க முடியாத அடித்தளம்.

பாதத்தைத் தொழுவதால் தான் நல்லருள் கிட்டும் எனும் நித்திய நம்பிக்கையின் நீட்சியே பாதுகையைத் தொழுதலாகும்.

காஞ்சி மகானின் பாதுகைகள் அருளப்பெற்ற பக்தர்களின் பக்திப் பிரவாகம், நூலெங்கும் தூய வெண்பனிநீர் வெள்ளமாகப் பாய்ந்தோடிகிறது.

பெரியவரிடமிருந்தே புஷ்பப் பாதுகை வழங்கப்பட்டு அனுக்கிரகம் பெற்ற பிலாஸ்பூர் சுவாமிகள், பெரியவர் தன் வீட்டில் விட்டுச் சென்ற பாதுகையைப் பிருப்பிக் கொடுக்க, சென்னையிலுருந்து காஞ்சி வரை வெறுங்காலோடு நடந்து சென்றவரின் பயபக்தி.

சந்தன மரப் பாதுகைக்கு தங்கக கவசம் செய்து வழிப்பட்டவரின் இன்பக் களிப்பு, காஞ்சி மகானை மகானை இறைவனின் திருவுருவமாகவே பார்த்தவர்கள் எனப் பல ஆண், பெண் பக்தர்களின் உரை வெளிப்படுகள் நூலின் பெருமையை உயர்த்துகின்றன. சில நிகழ்வுகளும் நெஞ்சை நெகிழ்த்துகின்றன.

பாதுகையை பூஜிக்கும் விதம், வழிப்பாட்டுப் பொருள்கள் போன்ற விபரங்களையும், வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய தூய்மை, பாதுகை பராமரிப்பு போன்றவற்றையும் கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.

காஞ்சி மகானின் பெருமைகளை படம் பிடிக்கும் சிறந்த நூல்.

- மெய்ஞானி பிரபாகரபாபு

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126103839
Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

Read more from Dr. Shyama Swaminathan

Related to Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

Related ebooks

Reviews for Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal - Dr. Shyama Swaminathan

    http://www.pustaka.co.in

    ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகை மகிமைகள்

    Sri Kanchi Mahanin Padhugai Mahimaigal

    Author:

    Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    Dr. Shyama Swaminathan

    For more books

    http://pustaka.co.in/home/author/shyama-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகை மகிமைகள்

    Dr.ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    தென்னாடுடைய பெரியவா போற்றி

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்

    மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி!

    ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகை மகிமை.

    (குரு பாதுகை அருளப்பெற்ற அன்பர்களின் பக்திப் பிரவாஹம்)

    முன்னுரை

    சதாசிவ சமாரம்பாம் சங்கராச்சார்யா மத்யமாம் /

    அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம் //

    நாராயண சமாரம்பாம் வியாஸ சங்கர மத்யமாம் /

    அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தம் வந்தே குரு பரம்பராம் //

    த்யான மூலம் குருர்முர்த்தி: பூஜா மூலம் குருபதம் /

    மந்த்ர மூலம் குரு வாக்யம் மோக்ஷ மூலம் குரு க்ருபா //

    குருர் ப்ருஹ்மா குருர் விஷ்ணுர் குருர்தேவோ மகேஸ்வர: /

    குரு: ஸாக்ஷாத்பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: //

    ஸ்ரீ காஞ்சி மகானின் கருணை அலைகளாலே இந்தப் புத்தகம் உருவாகியது.

    எழுத்துதான் என்னை உயிர் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ எழுதுகிறேன். எதை எதையோ எழுதுகிறேன். பத்துப் பதினைந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பரமேஸ்வரனான ஸ்ரீ மகா பெரியவா பற்றி எழுதவேண்டும் என்று எனக்கு எதுவும் சங்கல்பம் இல்லை. துணிவும் இல்லை. ஞானமும் இல்லை. மெழுகாக உருகும் பக்தியும் இல்லை. இப்பிடி எத்தனையோ இல்லைகள். இருப்பினும் சமீப ஆண்டுகளாக மஹா பெரியாவாளைப்பற்றி எழுதுவதற்கு என்னைத் தன் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் மகா பெரியவா.

    ஹோசூர் கணேசன் மாமாவுக்குத்தான் என் மீது எத்தகைய நம்பிக்கை! என்னை விரட்டி விரட்டி 'ஸ்ரீ காஞ்சி மகானின் கருணை அலைகள்' எழுத வைத்தார். சாட்ஷாத் மகா பெரியவாளின் சத் சிஷ்யனுமான ஸ்ரீ மேட்டூர் சுவாமிகளிடம் கொண்டுபோய் என்னைச் சேர்த்தார். அவருடைய வழிகாட்டுதலுடனும் பரி பூரண ஆசீர்வதங்களுடனும் 'ஸ்ரீ காஞ்சி மகானின் கருணை அலைகள்' பிரவாஹம் எடுத்து, பிரபஞ்சம் நிறைத்தது. அந்தப் புத்தகத்தின் வெற்றியை பெரியவாளே பார்த்துக் கொண்டார். உலகளாவிய அளவில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் பக்தர்களின் உள்ளத்தில் உல்லாசமாகச் சென்று உட்கார்ந்து கொண்டார்.

    அதுவும் எந்த அடிப்படை நோக்கத்திற்காக (குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே ஆனவர் மகா பெரியவா என்ற தவறான புரிதலை அகற்றி, அவர் ஜகத்குரு என்ற நாமத்திற்கேற்ப சாமானியனுக்கும் நெருக்கமானவர் என்ற தெளிவை என் எளிய தமிழ் எழுத்துக்களின் மூலம் ஏற்படுத்துவதே) அந்தப் புத்தகம் எழுதப்பட்டதோ, அந்த என் நோக்கம், மகா பெரியவாளால் பரிபூரணமாக அங்கீகரிக்கப்பட்டதற்குச் சான்றாக ஒரு சாதாரணன் எழுதிய கடிதத்தால் நிறைவேறியது. (அந்தக் கடிதம் புத்தகத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.) இந்தப் புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மகாபெரியவளின் தீவிர பக்தரான ஹோசூர் கணேசன் என்னை சும்மா இருக்க விடவில்லை. திடீரென்று ஒரு நாள், தொலைபேசியில் தனது கணீர் குரலில் 'பாதுகை என்னாச்சு?' என்றார். எதுவும் புரியாமல் திருதிருவென்று முழித்தேன். மட மட வென்று பேசினார். 'குரு பாதுகா பிரவாஹம்' என்று ஒரு தனி வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்தார். மகாபெரியவாளின் பாதுகையைப் பூஜிப்பவர்கள் ஒன்று திரட்டப்பட்டனர். என் வேலை அவர்களைத் தொடர்புகொண்டு விவரங்கள் பெறுவதுதான்.

    ஆனால் அது 'ஜகத்குருவின் பாதுகா விஷயமல்லவா? அவ்வளவு சுலபமாகக் கிட்டிவிடவில்லை.

    என் பிள்ளையார் சுழியை மகா பெரியவாளின் பிருந்தாவனத்தில் போட்டுவிட்டு, ஸ்ரீ காஞ்சி காமாக்ஷியிடம், அதற்கான ஞானத்தை வேண்டிக் கொண்டு, பிரகாரம் விட்டு வெளியே வந்தால் எனக்கு மிகவும் அறிமுகமாகியிருந்தவரும் அம்பாளை அனுதினமும் ஸ்பரிசித்து கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மிக முக்கியஸ்தருமான ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவரிடம், பெரியவா பாதுகை பற்றி எழுதவிருப்பதை எடுத்துக் கூறி, உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் என்றேன். அடுத்த கணம் ஒரு குண்டைத்தூக்கி போட்டு என்னை நிலைகுலைய வைத்துவிட்டார் அவர். "உண்மையைச் சொல்வதானால், பெரியவா யாருக்கும் பாதுகையே கொடுக்கவில்லை. யார் யாரோ பெரியவா பாதுகை என்று வேண்டப்பட்டவளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறது. நான் குழந்தையாகப் பெரியவா மடியிலேயே வளர்ந்தவன். ஆனானப்பட்ட பக்தர்களுக்கே (சில முக்கியஸ்தர்களின் பெயர்களையும் சொன்னார்) பெரியவா பாதுகை கொடுத்ததில்லை. அதுக்கப்புறம் உங்க இஷ்டம் என்றுவிட்டார். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை? என்பது போல் குழம்பிவிட்டேன். குழப்புவதும் பின் தெளியவைப்பதும் அவர் அருளால்தானே என்று மனதை நிச்சலனமாகத் துடைத்து வைத்துக் கொண்டு என் தேடுதலைத் துவக்கி விட்டேன்.

    என்ன ஆச்சர்யம்? ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகைகள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருந்தன. உலகளாவிய தேடுதல் அவசியமாக இருந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று உலகத்தை என் உள்ளங்கையில் கொண்டுவந்து வைத்துவிட்டார் அந்த கருணாமூர்த்தி! சிலர் சாக்ஷாத் பரமேஸ்வரனே நேரடியாக அருளினார் என்றார்கள், சிலர் அவரின் அணுக்கத்தொண்டர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம் என்றார்கள், சிலர் பரம்பரையாக வந்தது, விவரம் தெரியவில்லை என்றார்கள், சிலர் விசித்தரமாக தபாலில் வந்தது என்றார்கள், சிலர் நாங்களே கடையில் வாங்கிச்சென்று பெரியவரிடம் சமர்ப்பித்து, அவர் பாதங்களில் அணிந்துகொண்டு அனுக்ரகம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டோம் என்றார்கள். எப்பிடி இருந்தால் என்ன? எல்லாவற்றிர்க்கும் நம்பிக்கையும் நல்வழிபாடும் தானே அஸ்திவாரம்? சிறு மண்ணையும் மஞ்சளையும் பிடித்துவைத்து பிள்ளையார் என்று வழிபடவில்லையா? ஒரு அண்டாவைக் கவிழ்த்துவைத்து அண்ணாமலையார் என்று சொல்லவில்லையா? சின்ன உருண்டைக் கல்லை சிவலிங்கம் என்று கொள்ளவில்லையா? இதுதானே இந்து மதத்தின் சிறப்பு. நீ என்னை எந்தவஸ்துவில் நம்பிக்கையோடு வரித்து வழிபடுகிறாயோ அந்த வஸ்துவில் நான் இருப்பேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நமக்கு உணர்த்தவில்லையா? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுதானே இந்து மதத்தின் உன்னதம்!

    அவ்வழியே, ஆச்சர்ய பக்தர்கள் அவரின் பாதுகையைப் பலவிதமாகப் பெற்று, பலவிதமாகக் கொண்டாடி, பலவிதமாக உறவு முறை சொல்லி அழைத்து, அவரின் பரிபூரண ஆசிகளைப் பெற்று என்னை ஆச்சர்யப் படுத்தினார்கள். முடிந்தவரை சென்னையில் வியாபித்திருக்கும் அன்பர்கள் வழிபடும் மகா பெரியவா பாதுகைகளை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் ஆச்சார்ய பக்தர்களாக இருந்த போதும் அவரின் பாதுகை பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதும் தருவாயில், ஆச்சார்யப் பாதுகையை நான் கேட்டுப் பெற்று பூஜிக்கும் கொடுப்பினையை நான் இழந்து விட்டிருந்தாலும், நான் சற்றும் எதிர்பாராதவிதமாக திருசிற்றம்பலத்துறையும் தில்லை நடராஜனின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் 'குஞ்சிதபாதமும், 'நீ வரையும் படத்திலும், பாதத்திலும் நான் வந்து இருப்பேன்.' என்று ஸ்ரீ காஞ்சியின் கருணாமுர்த்தி திருவாய் மலர்ந்தருளிய, திரு L.S. வெங்கடேசன் அவர்களின் 'சித்திரப் பாதுகையும்' கிடைக்கும் பாக்கியம் பெற்று விட்டேன். (விவரம் உள்ளே) இந்த ஜென்மத்திற்கு இதுவே எதேஷ்டம்.

    ஸ்ரீ காஞ்சி மகானின் பொற்பாதங்களைத் தாங்கி வரும் இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் திகழும் அந்த தருணத்திலிருந்து உங்கள் வாழ்வு மேலும் சிறக்கவும் வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஸ்ரீ காஞ்சி மகானின் பொற்பாதங்களையே தாழுந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

    பெரியவா சரணம்!

    அன்புடன், சிநேகமுடன்

    Dr.ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    தொடர்பு விவரங்கள்:

    DR. SHYAMA SWAMINATHAN

    101, KOTTUR MANOR

    4TH MAIN ROAD EXTENSION

    KOTTURPURAM, CHENNAI-85.

    PHONE: RES: 044 24470651

    MOBILE: 9941387193

    E.MAIL: dr.shyama2000@ gmail.com

    WEB: www.dsvstrust.org.

    ஸ்ரீ குருப்யோம் நமஹ

    ஸ்ரீ குரு பாதுகா ஸ்தோத்ரம்

    மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த ஸ்ரீ குரு பாதுகா ஸ்தோத்ரம் ஆதி ஷங்கரரால் இயற்றப்பட்டது. இந்து மதத்தில் தெய்வத்திற்கு முன்பாக நாம் வணங்க வேண்டியவர்களாக நம் பெற்றோரையும் குருவையும் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களை வணங்காமல் தெய்வத்தை மட்டும் வணங்குவது அதற்குண்டான பலனைத் தராது. இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கரர் குருவின் பாதங்களின் மகத்துவத்தை நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக எடுத்துரைக்கிறார். இதற்கான தமிழ் அர்த்தமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

    ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நாமும் வாழ்ந்துகொண்டிருந்தது நமக்கு பெறும் பாக்கியம். இவ்வுலகிற்கே குருவாக -ஜகத் குருவாகப் போற்றப்பட்டவர், காஞ்சி மடத்தின் 48வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவரும் நம் அனைவராலும் அன்புடன் 'பெரியவா' என்று அழைக்கப்பட்டவருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களை, அவர்களின் பாதாரவிந்தங்களை நம் மனதில் ஸ்மரித்துக் கொண்டு ஸ்லோகத்தைச் சொல்லுவோம்.

    அனன்தஸம்ஸார ஸமுத்ரதார னௌகாயிதாப்யாம் குருபக்திதாப்யாம்

    வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    கவித்வவாராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்யதாவாம் புதமாலிகாப்யாம்

    தூரிக்றுதானம்ர விபத்ததிப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    நதா யயோ ஸ்ரீ பதிதாம் ஸமீயு: கதாசிதப்யாஷ்ர தரித்ரவர்யா:

    மூகார்ஷ வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    நாலீகனீகாஷ பதாஹ்றுதாப்யாம் நானாவிமோ ஹாதி நிவாரிகாப்யாம்

    நமஜ்ஜ நாபீஷ்ட ததிப்ரதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    ந்றுபாலி மௌலி வ்ரஜரத்னகான்தி ஸரித்விராஜத் ஜஷகன்ய காப்யாம்

    ந்றுபத்வ தாப்யாம் னதலோக பங்கதே: நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    பாபான்தகாரார்க பரம்பராப்யாம் தாபத்ரயா ஹீன்த்ர கஹேஷ்ர் வராப்யாம்

    ஜாட்யாப்தி ஸம்ஷோஷண வாடவாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    ஸமாதிஷட்க ப்ரதவைபவாப்யாம் ஸமாதிதான வ்ரததீக்ஷிதாப்யாம்

    ரமாத வான்த்ரிஸ்திர பக்திதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    ஸ்வார்சா பராணாம் அகிலேஷ்ட தாப்யாம் ஸ்வாஹாஸ ஹாயாக்ஷ

    துரன்தராப்யாம்

    ஸ்வான்தாச்ச பாவப்ரதபூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம்

    போதப்ரதாப்யாம் த்றுதமோக்ஷ தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

    இதற்கான தமிழ் விளக்கம்

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    முடிவில்லா மறு பிறப்பில் இருந்து விடுதலை தரும் தோணி இது

    குருநாதருக்கு தூய பக்தியை செலுத்தும் மனநிலையை தரவல்லது

    இதை வணங்குவதின் மூலம் பற்றற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    முழு பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக் கடலுமாகும் இந்த பாதுகை

    நெருப்பு போன்ற துயரங்களையும் அழிக்கும் கருணை நீர் இது

    சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்க வல்லது.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    தன்னை வணங்கித் துதிபவர்கள் ஏழைகள் என்றாலும்

    அவர்களையும் செல்வந்தர்களாக்கும் சக்தி கொண்டது

    ஊமைகளைகூட சக்தி மிக்க பேச்சாளராக்கும் வல்லமை கொண்டது

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    தாமரை மலர் போன்ற குருவின் பாதங்களை அலங்கரிக்கும் இது

    வீண் ஆசைகளை அழித்து மனதை தூய்மை படுத்தும்

    தூய்மையாகத் துதிபவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும்.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    மன்னனின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்கக்கல்

    இது முதலைகள் சூழ்ந்த நதியில் ஜொலிக்கும் இளம் பெண் போன்றது

    தன் பக்தனை மன்னனாகவே மாற்றும் சக்தி கொண்டது.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    கொடிய பாபங்களை ஒழிக்க வந்த ஆயிரம் சூரியன் போன்ற சக்தி கொண்டது

    நச்சுப் பாம்புகளைப் போன்ற துயரங்களை அழிக்க வந்த ராஜா கருடனைப் போன்றது

    கடல் போன்ற அறியாமையை பொசுக்க வந்த தீயைப் போன்றது.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    அளவற்றஆரறிவைஅனைவருக்கும்தரவல்லதுமாணவனைப் போன்று வந்தவர்க்கும் பேரானந்த நிலையைத் தருவது

    விஷ்ணுவின் பாதத்தை நிலையாக வணங்கும் சக்தி தரவல்லது.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    என்றென்றும் தம் பணியை செய்து கொண்டிருக்கும்

    தம் சிஷ்யர்களின் தேவைகளை பூர்த்தி செய்து

    ஆத்மா ஞானம் பெற்றிட வழி வகுக்கும் வல்லமை படைத்தது.

    என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

    மோகம் என்ற பாம்பினை அழிக்கவல்ல கருடனைப் போன்றது

    பட்டற்ற மனநிலை, அளவற்ற அறிவு அனைத்தையும் தருவது

    ஆத்மா ஞானத்தைப் பெற மனதார ஆசி தரும்

    தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு விரைவாகவே முக்தி தரும்.

    ஸ்ரீ குரு பாதுகா சரணம்!

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை

    குரு கடாக்ஷத்துடன் தெய்வகடாக்ஷமும்!

    ஸ்ரீ கணேஷ் ஷர்மா

    மனித உடலில் அடிப்பாகமாக இருப்பது பாதம். அதனாலேயே அதனை 'அடி'என்கிறோம். அதற்கு 'திரு' சேர்த்து 'திருவடி' என்கிறோம். உயர்ந்த செல்வத்தை நல்கும் ஸ்ரீ கரமான பாதம். நமக்கு வேண்டிய காரியத்தை ஒருவரிடம் சாதித்துக்கொள்ள வேண்டுமானால் அவருடைய காலைத்தான் பிடிப்போம். நினைத்த காரியம் சாத்தியமாகும் வரையில் பிடித்த காலை விடுவதேயில்லை எனும் பிடிவாதம்தான் வைராக்கியம். அப்பிடி ஒவ்வொரு காரியத்திற்குஒவ்வொரு மனிதர்களின் கால்களைப் பிடித்துக்கொள்வதைவிட அனைத்துக்குமாக ஒரே ஒருவரின் பாதங்களைப் பற்றிக் கொண்டுவிட்டால் நமது அத்தனை காரியங்களும் சாத்தியமாகிவிடும். அந்த ஒரு ஆள் தான் பகவான். இவ்வுலக வாழ்விலிருந்து மோக்ஷத்திற்கான முக்தியை அளிக்க வல்லது திருவடி ஒன்றுதான். ஆண்டவனை அப்பிடி 'சிக்' கெனப் பிடித்துக் கொண்டவர்களைத்தான் அடியார்கள் என்கிறோம்.

    கடவுளைக் கருணையின் வடிவம் என்கிறோம். அந்தக் கருணை அங்கம் அங்கமாக இறங்கி வந்து மொத்தமாகக் கூடி நிற்பது அந்தத்திருவடிகளில் தானே அத்தகைய திருவடியை நாம் முழுமையாகப் பற்றிக் கொண்டுவிட்டால் நாம் விரும்பிய அனைத்தையும் தருகிறது என்பது மட்டுமல்ல நம்மிடம் உள்ள விரும்பத்தகாத தோஷங்களையும் அல்லவா போக்கிவிடுகிறது! அதனாலேயே 'பதித பாவன சரணம்' என்று போற்றுகிறோம். ஆனால் அந்த பதித பாவன சரணம் என்பது நம் போன்ற சாமான்யர்களின் கண்களுக்கு புலப்பட்டு, கைகளுக்குக் கிடைத்தால்தானே பற்றிக் கொள்ள முடியும்? என்று தோன்றலாம். அதற்காகத்தான் கருணையே வடிவான கடவுள் குருவடிவில் நம் முன்னே தோன்றுகிறார். இதனையே 'குரு சாக்ஷாத் பரப்ப்ரும்மம்' என்றபடி நம் கண்ணுக்குப் புலப்படுகிறார். சரி, அந்த குருவும் நம் கண்களிருந்து மறைந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்கலாம். அதற்கும் நமது தர்ம சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. அதன்படி குருவின் பாதத்திற்கு இணையானது அவருடைய 'பாதுகை' என்கிறது.

    கடவுளின் பாதமும் குருவின் பாதுகையும் ஒன்றாகி விடுமா? பாதுகை என்பது மரத்தாலான ஜடப் பொருள் அல்லவா, அதற்கு மகிமை உண்டா என்றால் நிச்சயம் உண்டு. காரணம், ஒரு மனிதனைத் தாங்கிக்கொண்டு நிற்பது பாதமெனில் அந்த பாதத்தையும் சுமந்து கொண்டு நிற்பது பாதுகையே. கடவுளின் கருணையும், அன்பும் வடிந்து, ஓடி, இறங்கித் தேங்கி நிற்கும் பாதத்தை சுமக்கின்ற உயர் வஸ்த்து பாதுகை அல்லவா? மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கிறது. ஆனால் அதே மின்சாரத்தை ஒரு மரக்கட்டையின் மீது ஏறி நின்றுகொண்டு தொட்டால் பாதிப்பதில்லை. அவ்வளவு சக்தி அந்த மரத்துக்கு. அது போல கடவுளின் கருணை முழுவதும் தேக்கி வைத்துக் கொண்டிருக்கும் பாதுகை அந்த சக்தியை வேறு எங்கும் சிதற விட்டு விடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. அதனால் குருவின் பாதுகையை எவர் வைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு குருவின் கடாக்ஷத்துடன் தெய்வ கடாக்ஷமும் உடனே கிடைத்து விடுகிறது. அத்தகைய குரு பாதுகையை நாம் பூஜிப்பதால் எக் காலத்திலும் எத்தகைய பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு அருள் பெறலாம் என்பது உறுதி.

    ******

    ॥ श्री गुरुभ्यो नमः ।।

    || श्री गुरु पादुका पञ्चकम् ।।

    ஸ்ரீ குருபாதுகா பஞ்சகம்

    जगज्जनस्थेम लयालयाभ्यां

    अगण्य पुण्योदय भाविताभ्याम् ।

    त्रयीशिरो जात निवेदिताभ्यां ..

    नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ।। १ ।।

    ஜகஜ்ஜநிஸ்தே²ம லயாலயாப்யாம்

    அக³ண்ய புண்யோதய பா⁴விதாப்யாம் |

    த்ரயீசிரோ ஜாத நிவேதி³ தாப்யாம்

    நமோ நம : ஸ்ரீகு³ருபாது³காப்யாம் ||

    ஸகல உலகங்களின் உற்பத்தி, ஸ்திதி, லயம் இவைகளுக்குக் காரணங்களாயும், எல்லையில்லாமல் இருக்கிற புண்ணிய பரிபாகத்தின் மகிமையினால் அடையக்கூடியதாயும், வேதங்களின் சிரோபூதமான உபநிஷத்துக்களால் மட்டும் அறியக்கூடியதுமான ஸத்குருக்களுடைய பாதுகைகளின் பொருட்டு பல தடவை வணங்குவோமாக!

    विपत्तमस्तोम विकर्तनाभ्यां

    विशिष्टसंपत्ति विवर्धनाभ्याम् ।

    नमज्जनाशेष विशेषदाभ्यां

    | नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ।।२।।

    விபத்தமஸ்தோம விகர்த்தனாப்யாம்

    விசிஷ்ட ஸம்பத்தி விவர்த்த⁴னாப்யாம் |

    நமஜ்ஜநாசேஷ விசேஷதா³ப்யாம்

    நமோ நம : ஸ்ரீகு³ருபாது³காப்யாம் ||

    ஆபத்துக்களாகிற இருள் கூட்டங்களைப் போக்குவதில் சூரியனாகவும், உயர்ந்ததான ஐச்வரியங்களை மேன்மேலும் விருத்திபண்ணிக் கொடுக்கக் கூடியதாயும், வணங்குகிற ஜனங்களுக்கு எல்லை இல்லாமலிருக்கிற ஸகல புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடியதுமான ஸ்ரீமத் ஆசார்ய பாதுகைகளை வணங்குவோமாக!

    समस्तदुस्तर्क कलङ्क पड्कपनोदन

    प्रौढ जलाशयाभ्याम्

    निराश्रयाभ्यां निखिलाश्रयाभ्यां

    नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ।। ३ ।।

    ஸமஸ்த து³ஸ்தர்க்க கலங்க பங்காபநோத³ந

    ப்ரெளட ஜலாசயாப்யாம் |

    நிராச்ரயாப்யாம் நிகி²லாச்ரயாப்யாம்

    நமோ நம : ஸ்ரீகுருபாது³காப்யாம் ||

    பலவாறான துர்வாதிகளால் (துஷ்ட ஹேதுக்களால்) கற்பிக்கப்பட்ட தோஷங்களாகிற சேற்றைப் போக்கடிப்பதில் பெரிய ஜலப் பெருக்காயும், மற்றொன்றைத் தான் ஆச்ரயிக்காமலும், மற்றவர்களாலே ஆச்ரயிக்கப்படுவதுமாயிருக்கிற ஸ்ரீமத் ஆசார்ய பாதுகைகளை வணங்குவோமாக!

    तापत्रयादित्य करार्दितानां

    छायामयीभ्यामतिशीतलाभ्याम् ।

    आपन्नसंरक्षण दीक्षिताभ्यां

    नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ।। ४ ।।

    தாபத்ரயாதி³த்ய கரார்த்தி³தாநாம்

    சா²யாமயீப்யா மதிசீதலாப்யாம் |

    ஆபந்ந ஸம்ரக்ஷண தீஷிதாப்யாம்

    நமோ நம : ஸ்ரீகுரு³பாது³காப்யாம் ||

    ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்று சொல்லக்கூடியதான தாபத்ரயங்களாகிய கொடிய சூரிய கிரணங்களால் தகிக்கப்படுகிற ஸர்வ ஜீவராசிகளுக்கும் மிகவும் குளிர்ந்த நிழலைக் கொடுப்பதாயும், சரணமடைந்தவர்களை ஸம்ரக்ஷிப்பதில் முக்கிய நோக்கத்துடன் கூடியதுமான ஸ்ரீ குருபாதுகைகளை வணங்குவோமாக!

    यतो गिरोऽप्राप्य धिया समस्ता

    हिया निवृत्ताः सममेव नित्याः ।

    ताभ्यामजेशाच्युत भाविताभ्यां

    नमो नमः श्रीगुरुपादुकाभ्याम् ।। ५ ।।

    யதோ கி³ரோ அப்ராப்ய தி⁴யா ஸமஸ்தா

    ஹ்ரியா நிவ்ருத்தா : ஸமமேவ நித்யா : |

    தாப்யாமஜேசாச்யுத பா⁴விதாப்யாம்

    நமோ நம: ஸ்ரீகு³ருபாது³காப்யாம் ||

    ஸகல வேத ராசிகளும், அவைகளின் புத்தியுக்திகளோடு கூடி, எந்தப் பாதுகைகளின் மகிமையை வர்ணிக்க ஆரம்பித்ததும், இயலாமல், லஜ்ஜையோடு திரும்புகிறதோ, அப்பேர்ப்பட்ட பிரம்மா, விஷ்ணு, ருத்திராதிகளால் எப்பொழுதும் கொண்டாடப்படுகிறதாயுமுள்ள ஸ்ரீமத் ஆசார்ய சரணத்வந்த்வங்களை வணங்குவோமாக!

    ये पादुका पञ्चक मादरेण ।

    पठन्ति नित्यं प्रयताः प्रभाते ।

    तेषां गृहे नित्य निवासशीला

    श्रीदेशिकेन्द्रस्य कटाक्षलक्ष्मीः || ६ ।।

    யே பாது³கா பஞ்சக மாதரேண

    படந்தி நித்யம் ப்ரயதா³: ப்ரபாதே |

    தேஷாம் க்ருஹே நித்ய நிவாஸசீலா

    ஸ்ரீதேசிகேந்த்ரஸ்ய கடாக்ஷலஷ்மீ: ||

    இவ்வாறு எந்த பக்தர்கள் ஸ்ரீமத் ஆசார்யாளுடைய சரணகமல பீடமான பாதுகைகளைத் துதிக்கும் இவ்வைந்து ச்லோகங்களையும் ஆதராதிசயத்துடனும், பரிசுத்தர்களாயும் பிரதி தினம் காலையில் பாராயணம் செய்கிறார்களோ, அந்த மகான்களுடைய வீட்டில் ஸ்ரீ பரமாசார்யாளுடைய கருணாவிலாஸஸமும், லஷ்மி கடாக்ஷமும் ஏற்படும் என்பது நிச்சயம்.

    சுபமஸ்து!!

    குறிப்பு: இந்த உயர்ந்த கிரந்தமானது தஞ்சை ஸரஸ்வதி மஹால் புஸ்தகாலயத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு கும்பகோணம் அத்வைத ஸ்பா ஆதரவில் பிரசுரமாகும் பிரம்ம வித்யா பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியார் அவர்கள், நர்மதா நதிக்கரையில் அவர்களுடைய குருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாளை தரிசித்தபொழுது, அவ்வாச்ரமத்தின் வாயிலில் அந்த குருவின் திவ்ய பாதுகைகளைக் கண்டவுடன் இந்த ச்லோகங்கள் ஸ்ரீ ஆசார்யாளின் வாக்குகளிலிருந்து உதித்த பத்யங்கள் என்று சொல்லப்படுகிறது.

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை

    மகான்களின் பாதுகை விசேஷம்

    கீரனூர் ஸ்ரீ எஸ். ராமமுர்த்தி

    தமிழில் ஒரு பழமொழி உண்டு அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் இதன் பொருள், கொம்பு கொண்டு அடிப்பது அல்ல அடி என்பது, இறைவனின் பாத ஸ்பரிசம் பட வேண்டுமென்பதாகும். பெருமாள் கோவில்களில் ஒரு குல்லா போன்று ஒரு பாத்திரத்தை நம் தலையில் கவிழ்ப்பார்கள் அதன் பெயர் சடாரி ஆகும். அதன் மேற்புறத்தில் விஷ்ணு பாதம் பதிக்கப்பட்டிருக்கும். அதன் பொருள் இறைவனது அடி நம் முடியில் மீது படவேண்டு மென்பதாகும்

    முதலில் பாதுகையைப்பற்றி விரிவாக கூரிய புராணம் இராமாயணம் ஆகும் . ஸ்ரீ ராமர் வனவாசம் சென்ற செய்தி அறிந்த அவரது தம்பி பரதன் வருத்தமுற்று, இதற்க்கெல்லாம் காரணம் தன் தாயார் கைகேயி தான் என்பதை உணர்ந்து, அதை சரி செய்ய எண்ணி காட்டுக்கு விரைகின்றான் தாய்மார்களோடும் குருவோடும் மற்றும் மக்களோடும். ஆங்கே தம் தந்தை இறந்துவிட்ட நிலையில் நாடு அரசன் இன்றி இருப்பதாகவும், உடனே திரும்பி வந்து பதவியை ஏற்று அரசாள வேண்டுமேன்று வற்புறுத்தினான். அதற்க்கு ஸ்ரீ ராமர், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆதலால் அவர் ஆணைப்படியே தான் முழுமையாக பதினான்கு ஆண்டு வனவாசம் இருந்தபின் தான் மீண்டும் அயோத்தி திரும்புவேன் என்றார். அதுவரை பரதனே ஆளவேண்டுமென்று அன்பு கட்டளையிட்டார். தாற்காலிக ஏற்பாடாக ஒப்புக்கொண்ட பரதன், அதுவரை தங்களுக்குப் பதிலாக தங்கள் பாதுகை யை வைத்து அரசாள சம்மதிக்க வேண்டுமென்று கோரி அவரது பாதுகையைப் பெற்று நந்தியம்பதி என்ற கிராமத்தில் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வந்தான்.

    இதன் பெருமையை பூஜ்யஸ்ரீ வேதாந்ததேசிகன் (வைஷ்ணவத்தில் வடகலை சம்பிரதாயத்தை ஏற்படுத்தியவர்) ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கன் முன்பாக எம் பெருமான் திருவடியான, பாதுகையைப் போற்றிப் பாடும்,'பாதுகா ஸஹஸ்ரம்' என்ற ஓர் அற்புதமான உன்னதமான தீஞ்சுவைக்காவியம்.இயற்றினார்

    ஸ்ரீ ராமர் பாதுகை

    ஸ்ரீராமரின் பெருமையை, இந்த ஆச்சார்ய பெருமான் ஓர் இரவிலேயே(1008 ஸ்லோகங்கள், 32 பத்ததிகள், கொண்டது) பாடி அருளினார்.

    அதில் பாதுகையின் பெருமைகளை வருணிக்கின்றார்

    எங்கும் தர்மம் செழித்து நின்றது, சிசு மரணம் இல்லை, மக்களுக்கு கள்வர் பயம் இல்லை என்பதுபோல் ஆயிரம் வருணனைகளை வர்ஷித்தார் அவர்.

    பொதுவாக சந்நியாசிகளுக்கு பாத பூஜை செய்வது வழக்கம். ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுக்கு பாதுகை பூஜை மிகவும் முக்கியமானது. குறிப்பாக நம் மகாபெரியவாளின் பாதுகைக்கு இருக்கும் மகத்துவம் அலாதியானது வெறும் பாதுகைக்கு அப்படி என்ன மகத்துவம் இருக்கமுடியும் என்று சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படும்

    மிகவும் புண்ணிய ஆத்மாக்கள் மகான்களாக இருக்கும் காலத்தில் அவர்களது உடல் ஸ்பரிசம் பட்டுபட்டு ஒருவித காந்த அலையை உருவாக்கும். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அவர்களது தவ வலிமையையும் இறையுணர்வும் சேர்ந்து அவர்கள் அணியும் பாதுகைகளிலும் இறங்கும் அத்தகைய பாதுகைகளை அவரிடமிருந்துப் பெற்று அதை பூஜை செய்து வணங்கினால் பெரும் பயன் விளையும் ஆத்மானந்தம் ஏற்படும்.

    இத்தகைய பாதுகைகளை பய பக்தியுடன் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்வார்கள் அப்படி பூஜை செய்தவர்களின் அற்புத அனுபவத்தை ஆன்மீக எழுத்தாளர் திருமதி டாக்டர் ஷ்யாமா அவர்கள் தொகுத்து எழுவது குறித்து அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் மகாபெரியவாளின் ஆசி பெற்ற அவர் நீடூழி வாழ பிரார்த்திக்கின்றேன்.

    ***********

    கீரனூர் எஸ். ராமமூர்த்தி

    Old No: 3., New No: 7, 12 th street

    Thillaiganga Nagar, Nanganallur, Chennai- 61.

    (PH: 9840756776)

    பெரியவா சரணம்

    இதய பூர்வமான நன்றிகள்

    என்னையும் சிறு துரும்பாகப் பயன்படுத்தி ஸ்ரீ காஞ்சி மகானின் கருணை அலைகளையும், ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகை மகிமைகளையும் எழுத வைத்த மகா பெரியவாளின் சரணார விந்தங்களுக்கு கோடானுகோடி வந்தனங்களுடன் கூடிய இதய பூர்வமான நன்றிகள்.

    என் விரல் பிடித்து இழுத்துச் சென்று ஸ்ரீ மடத்தில் இவர்தான் நம் பெரியவா என்று என் மிகச் சிறு வயதில் இப் பிரபஞ்சத்தின் தெய்வத்தை அறிமுகப் படுத்திவைத்த என் அளப்பறிய அன்புக்குரிய பாட்டியான புதுக்கோட்டை திருமதி வாலாம்பாள் ஸ்ரீநிவாசனுக்கு (ஸ்ரீ லலிதா பஜனை வாலாம்பாள்) என் நன்றிகள்.

    முன் பின் தெரியாத என்னை, உரிமையுடன் விரட்டி விரட்டி வழிகாட்டி இவ்வுலகின் கோடிக் கணக்கான பக்தர்களுக்கு உயிர் மூச்சாக விளங்கும் காஞ்சி மகானைப் பற்றி எழுத வைத்த ஹோசூர் திரு கணேசன் அவர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள். அவர் இல்லையென்றால் இந்த படைப்புகள் என்னிலிருந்து கண்டிப்பாக சாத்தியமாகி இருக்காது. HE IS THE DRIVING FORCE FOR THIS LIFE TIME HOLY WORK OF ME.

    'ஸ்ரீ காஞ்சிமகானின் பாதுகை மகிமைகள்' எனும் இந்த பொக்கிஷத்தை தரம் வாய்ந்த புத்தக வடிவில் கொண்டுவருவதற்கு முன் வந்துள்ள சிவசாகரம் அறக்கட்டளையைச் சார்ந்த அனைத்து சிவன் சார் பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதுவும் இந்தப் புத்தகம் ஸ்ரீ சிவன் சாரின் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்படுவது என் பெரும் பாக்கியமே.

    காஞ்சி மகானின் பாதுகைகளைத் தங்கள் வீட்டு பூஜையில் வைத்து பூஜிக்கும் பெரும் பேறு பெற்றவர்களும் என் தொலைபேசி அழைப்பினை ஏற்று, உடனடியாகவே தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து ஒத்துழைத்த அனைத்து பெரியவா பக்தர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றிகள். சிலர் நேரில் வந்தனர். சிலர் இல்லத்திற்கு அழைத்தனர். சிலர் கடிதம் எழுதினர், சிலர் தொலைபேசியிலேயே தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிலர் நான் நேரில் வரவில்லை என்று உரிமையுடன் என் மீது வருத்தமும் கோபமும் கொண்டனர். சென்னை நகரத்தின் பரந்த எல்லைகளில் குடியிருந்த பக்தர்கள் அனைவரையும் நேரில் சென்று சந்தித்து விவரம் பெறுவது என்பது புத்தகம் அச்சுக்கு செல்வதை மிகவும் தாமதப் படுத்திவிடுமோ என்கிற கவலையை எனக்கு ஏற்படுத்தி விட்டது. இந்தப் புத்தகம் உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாத்தியமாகி இருக்காது. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பலரது வீட்டில் பெரியவா பாதுகையை தரிசிக்கும் பெரும் பாக்யம் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்ததே காஞ்சி மகானின் கருணை அலைகளால் தான்.

    ரொம்பவும் கவனமுடன்தான் இதனைத் தொகுத்துள்ளேன். எழுதியுள்ள என் வார்த்தைகளில் மிகைப்படுத்தல்கள் இல்லை. பக்தர்கள் சொன்னது சொன்னபடி இடம் பெற்றுள்ளது. என் கவனத்தை மீறி ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் மனம் கனிந்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    காஞ்சி மகானின் மீதான என் முதல் புத்தகத்தை மிகுந்த அக்கறையுடனும் சிரத்தையுடனும் மேற்பார்வை செய்து கொடுத்த ஸ்ரீ மேட்டூர் பெரியவா சரணாரவிந்தங்களுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள். அவருடைய பரிபூரண ஆசிகள் இந்த புத்தகத்திற்கு உண்டு என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

    நான் சற்றும் எதிர் பாராமல் கும்பகோணம் பெரியவா தானே முன்வந்து இந்த புத்தகத்திற்கான என் எழுத்துப் பிரதியை மேற்பார்வையிட்டு தருவதாக சொன்னதும் ஸ்ரீ காஞ்சி மகானின் கருணையே. சுவாமிகளுக்கு என் பணிவான, இதய பூர்வமான நன்றிகள் கலந்த நமஸ்காரங்கள்.

    'எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்கிற கீதாச்சாரத்தின் வரிகளை உண்மையாக்குவதாக, மகா பெரியவா பாதுகை மகிமைகள் பற்றிப் பேசும் இந்தப் புத்தகத்தினை அவருடைய பூர்வாஸ்ரம சகோதரரும், 'நானும் அவனும் வேறில்லை' என்று பெரியவாளால் அடையாளம் காட்டப்பட்ட மகானுமான சிவன்சார் அவர்களின் கிருபையோடு, திரு சிவராமன் அவர்கள் பொறுப்பேற்று வெளிவரும் என்று நான் நினைக்கவில்லை. சிவன் சார் அவர்களுக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்களும் சிவராமன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளையும் சமர்பித்துக் கொள்கிறேன்.

    காஞ்சி மகானின் கருணை அலைகளுக்கு பெரும் பாத்திரமாகி அவருடைய பாதுகைகளை பூஜிக்கும் மகத்தான பேறு பெற்ற உங்கள் அனைவரையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    இந்தப் புத்தகம் மூலம் ஸ்ரீ காஞ்சி மகானின் பாதுகை மகிமையைப் படித்துத் தெரிந்து கொள்ளப் போகும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

    பெரியவா சரணம்!

    பணிவுடன்

    Dr. ஷ்யாமா சுவாமிநாதன்

    10-1-2017

    உள்ளே.....

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-1

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-2

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-3

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-4

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-5

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-6

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை – 7

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-8

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -9

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-10

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-11

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -12

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -13

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-14

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-15

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-16

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை.-17

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-18

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-19

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -20

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-21

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -22

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-23

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-24

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை- 25

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-26

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-27

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-28

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-29

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-30

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-31

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை -32

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-33

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-34

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-34

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-36

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை- 37

    ஸ்ரீ குரு பாதுகை மகிமை-38

    ஸ்ரீ குரு பாதுகை

    Enjoying the preview?
    Page 1 of 1