Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magale Unakkaga
Magale Unakkaga
Magale Unakkaga
Ebook321 pages1 hour

Magale Unakkaga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பண்டிகைகள் நமக்கு உற்சாகத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. இறை அருளையும் நம் குடும்பத்தினருக்கு வாரி வழங்கக் கூடியவை. புதிதாகத் திருமணமாகி புது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகத் தொடங்கும் இல்லத்தரசிகள் பண்டிகைகளை தமது இல்லத்தில் விமர்சையாகக் கொண்டாடி மகிழ விரும்புவர். அதிலும் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டால்... பண்டிகை நாளின் போது எப்படி பூஜை செய்வது? என்ன சுலோகம் சொல்லி தீபாராதனை காட்டுவது? என்ன மாதிரி கோலம் போட வேண்டும்? நைவேத்யம் என்ன வைக்க வேண்டும்? அதைத் தயாரிக்கும் முறை என்ன? இப்படிப் பலவித சந்தேகங்கள் அடுக்கடுக்காய் வரும். இதற்கு ஒரு தீர்வே இந்தப் புத்தகம். ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் மகளின் திருமணத்தின் போதும், குடித்தனம் வைக்கும் போதும் தாராளமாக இந்தப் புத்தகத்தை வாங்கி கையில் கொடுத்து விடலாம்.

ஒவ்வொரு பண்டிகையிலும் அதன் அடிப்படை மகத்துவத்தை, அதன் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறேன். அடுத்து எவ்வாறு கொண்டாட வேண்டும் என அருகிலிருந்து மகளுக்குக் கற்றுத் தருவது போல எழுதி இருக்கிறேன்.

அந்தந்த பண்டிகை சம்பந்தப்பட்ட கோலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நான்கைந்து முறை போட்டுப் பழகி, பண்டிகை நாளில் கோலமிடலாம்.

அந்தந்த பண்டிகைக்குரிய தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள். கவசங்கள் இந்த நூலில் உள்ளன. நான் இயற்றி ஒலிநாடாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களையும் இதில் தொகுத்திருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் இந்த ஒலிநாடா தேவைப்பட்டால் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம்.

இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் இதன் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களது கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களில் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

கீதா தெய்வசிகாமணி

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580134805868
Magale Unakkaga

Read more from Geetha Deivasigamani

Related to Magale Unakkaga

Related ebooks

Reviews for Magale Unakkaga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magale Unakkaga - Geetha Deivasigamani

    https://www.pustaka.co.in

    மகளே உனக்காக

    Magale Unakkaga

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கோலம் முதல் ஆரத்தி வரை

    முன்னுரை

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை

    1. விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் பூஜை

    2. பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடலாம்… வாங்க!

    3. விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய கோலங்கள்

    4. விநாயக சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய துதிப்பாடல்கள்

    a. எண்னிரு கணபதி பண்மாலை

    b. ஸ்ரீ விநாயகர் 108 தமிழ் அர்ச்சனை வழிபாடு

    c. விநாயக சதுர்த்தி வழிபாட்டிற்காக சில துதிகள்

    5. நைவேத்யம் செய்முறைகள்

    a. பூரணக் கொழுக்கட்டை

    b. வடை (மெது வடை)

    c. வெண் பொங்கல்

    d. இனிப்பு குழிப்பணியாரம்

    e. பாசிப்பருப்பு பாயசம்

    f. கடலைப்பருப்பு சுண்டல்

    ஸ்ரீ கோகுலாஷ்டமி பண்டிகை

    1. கோபுர வாழ்வு அருளும் ஸ்ரீ கோகுலாஷ்டமி

    2. கோகுலாஷ்டமி கொண்டாடலாம்…. வாங்க

    3. ஸ்ரீ கோகுலாஷ்டமி கோலங்கள்

    4. ஸ்ரீ கிருஷ்ணர் துதிப்பாடல்கள்

    a. ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

    b. ஸ்ரீ கிருஷ்ணர் துதிகள்

    c. ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ர சத நாமாவளி

    5. கோகுலாஷ்டமி நைவேத்யம் செய்முறை

    பட்சணங்கள்

    a. வெல்லச் சீடை

    b. சீடை

    c. முறுக்கு (தேன்குழல்)

    d. கை முறுக்கு

    e. அப்பம்

    f. திரட்டுப் பால்

    g. தேங்காய் பர்பி

    நவராத்திரி பண்டிகை

    1. நலமெலாம் நல்கிடும் நவராத்திரி

    2. நவராத்திரி கொண்டாடலாம்… வாங்க!

    a. நவராத்திரி பூஜையின்போது குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்…

    b. நவ மாநிலங்களில் நவராத்திரி

    3. நவராத்திரி கோலங்கள்

    4. நவராத்திரி பண்டிகை துதிப்பாடல்கள்

    a. ஸ்ரீ அஷ்டலெஷ்மி ஸ்தோத்திரம் (தமிழில்)

    b. அன்னபூர்ணா ஸ்தோத்திரம்

    c. நவராத்திரி பாடல்

    d. மஹாலெக்ஷ்மி அஷ்டகம் (தமிழில்)

    e. ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

    f. ஓம் ஸ்ரீ அஷ்டலெக்ஷ்மி நவரத்ன மாலை

    g. ஸ்ரீலலிதா நவரத்தின மாலை

    h. ஸ்ரீ 108 திருப்பதிகள் நாச்சியார் போற்றி!

    i. ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

    j. சரஸ்வதி துவாதஸ நாம ஸ்தோத்ரம்

    k. நவராத்திரி ஆரத்தி பாடல்

    5. நவராத்திரி நைவேத்யங்கள்

    a. நவராத்திரி நைவேத்யத்திற்கு ஒன்பது வகை பாயசங்கள்

    முதல் நாள்

    1. சேமியா ஜவ்வரிசி பாயசம்

    இரண்டாம் நாள்

    2. கேரட் பாயசம் (அல்லது) கேரட் கீர்

    மூன்றாம் நாள்

    3. பாசிப்பருப்பு பாயசம்

    நான்காம் நாள்

    4. அவல் பாயசம்

    ஐந்தாம் நாள்

    5. பால் பாயசம்

    ஆறாம் நாள்

    6. கோதுமைப் பாயசம்

    ஏழாம் நாள்

    7. ஸ்பெஷல் கேஷ்யூ பாயசம்

    எட்டாம் நாள்

    8. ஓட்ஸ் பாயசம்

    ஒன்பதாம் நாள்

    9. பாதாம் பாயசம் (அல்லது) பாதாம் கீர்

    b. நவராத்திரிக்கு விநியோகிக்க ஒன்பது வகை சுண்டல்கள்

    1. கொண்டக் கடலை சுண்டல்

    2. மொச்சை சுண்டல்

    3. நிலக்கடலை சுண்டல்

    4. சோயா சுண்டல்

    5. கொழுக்கட்டை சுண்டல்

    6. கடலைப்பருப்பு சுண்டல்

    7. ராஜ்மா சுண்டல்

    8. காராமணி சுண்டல்

    9. முளைகட்டின பாசிப்பயறு சுண்டல்

    தீபாவளி பண்டிகை மற்றும் திருக்கார்த்திகை பண்டிகை

    1. கங்கா ஸ்நானம் ஆச்சா?

    2. தீபாவளி நாளில் ஒரு சேதி

    a. படா படா பட்டாசு

    3. தீபாவளி பண்டிகை கோலங்கள்

    4. தீபாவளி நாளில் துதிக்க சில துதிகள்

    a. ஸ்ரீ நாராயணன் 108 தமிழ் அர்ச்சனை வழிபாடு

    b. பகவத் கீதைச்சாரம்

    5. தீபாவளி பட்சணங்கள்

    1. இனிப்பு வகைகள்

    a. கோதுமை அல்வா

    b. லட்டு

    c. மைசூர் பாக்

    d. கோதுமை தேங்காய்ப் பால் கேக்

    e. தேங்காய் பர்பி

    f. பால் பர்பி

    g. பாசிப்பயறு உருண்டை

    h. அதிரசம்

    i. பாதுஷா

    j. போளி

    2. கார வகைகள்

    a. ஓமப்பொடி

    b. காரா சேவ்

    c. காராபூந்தி

    d. ரிப்பன் பக்கோடா

    e. முறுக்கு (தேன் குழல்)

    f. பொட்டுக்கடலை முறுக்கு

    g. சீடை

    h. எள்ளடை (தட்டை)

    i. மிக்ஸர்

    திருக்கார்த்திகை பண்டிகை

    1. திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

    2. துதிப்பாடல்கள்

    a. கந்தர் சஷ்டி கவசம்

    b. ஸ்ரீ சுப்ரமணியர் 108 தமிழ் அர்ச்சனை வழிபாடு

    c. முருகன் துதி பாடல்கள்

    d. திருவருட்பா

    பொங்கல் பண்டிகை

    1. பொங்கும் மங்கலம் அருளும் பொங்கல் பண்டிகை

    2. பொங்கல் தின கோலங்கள்

    3. ஸ்ரீ சூர்ய பகவானுக்கு புஷ்பார்ச்சனை

    I. பிரார்த்தனை ஸ்லோகம்

    a. சூர்ய நமஸ்காரம்

    b. சூர்ய காயத்ரி

    c. சூரிய பகவான் பாடல்

    4. நைவேத்யம் செய்முறை

    a. சர்க்கரைப் பொங்கல் செய்முறை

    b. வெண் பொங்கல் (பால் பொங்கல்)

    5. பொங்கல் ஸ்பெஷல் கறி வகைகள்

    a. பரங்கிக்காய் புளிவெல்லக் கறி

    b. மொச்சைக்காய் கறி

    c. பிஞ்சுக் கத்தரிக்காய் மசால்

    d. ஏழுகறி கூட்டு

    e. அவரைக்காய் மொச்சை பருப்பு உசிலி

    பண்டிகை நாட்களில் போட சில இழைக் கோலங்கள்

    கோலம் முதல் ஆரத்தி வரை

    சமர்ப்பணம்

    இந்துப் பண்டிகைகள் என்கிற இந்த நூலினை என்னுள் இருந்து எனது ஒவ்வொரு எழுத்தையும் எழுதி ஆசீர்வதித்து வரும் எனது தாயார் நாவலாசிரியை திருமதி லீலா கிருஷ்ணன் அவர்களுக்கும், சிறு வயதில் நமது பண்டிகைகள் பற்றிய சிறப்பையும் ஆர்வத்தையும் ஊட்டியவரான எனது பாட்டியார் திருமதி சிவபாக்கியம் நல்லசாமிபிள்ளை அவர்களுக்கும் ஆத்மார்த்தமாக சமர்ப்பிக்கிறேன்.

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

    முன்னுரை

    பண்டிகைகள் நமக்கு உற்சாகத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. இறை அருளையும் நம் குடும்பத்தினருக்கு வாரி வழங்கக் கூடியவை. புதிதாகத் திருமணமாகி புது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகத் தொடங்கும் இல்லத்தரசிகள் பண்டிகைகளை தமது இல்லத்தில் விமர்சையாகக் கொண்டாடி மகிழ விரும்புவர். அதிலும் திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டால்… பண்டிகை நாளின் போது எப்படி பூஜை செய்வது? என்ன சுலோகம் சொல்லி தீபாராதனை காட்டுவது? என்ன மாதிரி கோலம் போட வேண்டும்? நைவேத்யம் என்ன வைக்க வேண்டும்? அதைத் தயாரிக்கும் முறை என்ன? இப்படிப் பலவித சந்தேகங்கள் அடுக்கடுக்காய் வரும். இதற்கு ஒரு தீர்வே இந்தப் புத்தகம். ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் மகளின் திருமணத்தின் போதும், குடித்தனம் வைக்கும் போதும் தாராளமாக இந்தப் புத்தகத்தை வாங்கி கையில் கொடுத்து விடலாம்.

    ஒவ்வொரு பண்டிகையிலும் அதன் அடிப்படை மகத்துவத்தை, அதன் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறேன். அடுத்து எவ்வாறு கொண்டாட வேண்டும் என அருகிலிருந்து மகளுக்குக் கற்றுத் தருவது போல எழுதி இருக்கிறேன்.

    அந்தந்த பண்டிகை சம்பந்தப்பட்ட கோலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நான்கைந்து முறை போட்டுப் பழகி, பண்டிகை நாளில் கோலமிடலாம்.

    அந்தந்த பண்டிகைக்குரிய தெய்வங்களின் சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள். கவசங்கள் இந்த நூலில் உள்ளன. நான் இயற்றி ஒலிநாடாக்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களையும் இதில் தொகுத்திருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் இந்த ஒலிநாடா தேவைப்பட்டால் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம்.

    என்னுள் இருந்து என்னை தினமும் ஆசிர்வதிக்கும் என் தாயார் நாவலாசிரியை லீலாகிருஷ்ணன், தகப்பனார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஆத்மார்த்த வணக்கங்கள்.

    எனது எல்லாப் பணிகளிலும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வருகின்ற அன்புக் கணவர் வழக்கறிஞர் என். தெய்வசிகாமணி அவர்களுக்கு நன்றிகள் பல.

    இந்த நூலில் உள்ள கோலங்கள் வரைந்தவர் தொலைக்காட்சி ‘கோலங்கள்’ தொடரில் இடம் பெற்ற கோலங்கள் வரைந்த திரு. ரமேஷ்ராஜா அவர்கள். அவருக்கு என் நன்றி.

    நூல் தயாரிப்பில் ஒத்துழைப்பு நல்கிய எனது அலுவலகக் காரியதரிசி திருமதி. ஜான்ஸிலாசர் அவர்களுக்கு நன்றி.

    இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் இதன் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களது கடிதங்கள் எனது அடுத்தடுத்த நூல்களில் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி. வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    கீதா தெய்வசிகாமணி.

    23. ‘அபிநவ் பேலஸ்’

    ஜெத் நகர் முதல் மெயின் ரோடு

    மந்தவெளி சென்னை – 600028

    தொ.பே: 044 – 293308, 988485014.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை

    1. விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் பூஜை

    விநாயகர் என்றாலே தனக்கு மிஞ்சிய நாயகர் இல்லாத தனிப் பெருங்கருணைத் தலைமைக் கடவுள் என்பது பொருள். விநாயகர் பெருமான் மந்திர ஸ்வரூபம் ஆனவர். சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் ஆகிய இரண்டு பிரணவ மந்திரங்களின் மீது பார்வதி பரமேஸ்வரர் தங்கள் திருக்கண் சாத்த, அந்த மந்திரங்கள் யானை உருவம் கொண்டு மருவ, அதனின்று அவதாரம் செய்தவர் விநாயகப் பெருமான். அதனால் சதை, ரத்தம் ஆகிய கலப்பு இல்லாமல் முழுவதுமே மந்திர ஸ்வரூபமானவர் விநாயகர். விநாயகரைக் கும்பிடாமல் துவங்கும் எந்த ஒரு செயலும் முழுமையடையாது.

    ஸ்ரீ சிவபெருமான் ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் அவரது திரு அவதாரத்தின் போது,

    "என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்

    முன்னரே உனதுதாண் முடியுறப் பணிவரேல்

    அன்னர்தம் சிந்தைபோல் ஆக்குதி அல்துணை

    உன்னலார் செய்கையை ஊறு செய்திடுதி நீ."

    என்று கூறுகிறார் என பழம் பெரும் தமிழ்ச் செய்யுள் விளக்குகிறது.

    எதை எழுதும் போதும் முதலில் ‘உ’ காரத்தை பிள்ளையார் சுழியாகப் போட்டு விக்னம் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டுகிறோமல்லவா? இந்த ‘உ’காரம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் உள்ள அ, உ, ம-வில் நடு எழுத்தாய் இருந்து மஹாவிஷ்ணுவை உணர்த்துகிறது. அ - பிரம்மா. உ - விஷ்ணு. ம - சிவன் என்பதால், உ - விநாயகரையும், விஷ்ணுவையும் குறிப்பதால் இருவரும் ஒருவரே என்றாகும். இதை,

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்

    பிரசன்ன வதனம் தியாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

    என்ற ஸ்லோகத்திலுள்ள விஷ்ணு என்ற சொல்லே உறுதிப்படுத்துகிறது.

    கணபதி ஓங்கார ஸ்வரூபமானதால் அவருக்குச் செய்யும் வணக்கமும், ஸ்தோத்திரமும் பிரம்மத்தையே சேருவதால் விநாயக வணக்கம் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். ஸ்ரீ விநாயகரைத் துதித்தால் துர்க்கா, லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் முழு அனுக்கிரஹம் நமக்குக் கிடைக்கும் என்பதை முக்காலமும் உணர்ந்த தெய்வப் புலவரான ஔவைப் பிராட்டியாரே தமது பாடல் மூலம் நமக்கு விளக்குகிறார்.

    "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

    நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு

    துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

    தப்பாமல் சார்வார் தமக்கு"

    வாக்குண்டாம் - வாக்கு தேவியான சரஸ்வதியின் அருள் உண்டாகும்.

    மனமுண்டாம் - மனதுக்கு தேவியான பார்வதியின் அருள் உண்டாகும்.

    மாமலராள் நோக்குண்டாம் - செல்வத்துக்கு தேவியான திருமகளின் பார்வை கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் சதுர்த்தி வரும். ஆனால் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதமான ஆவணியில் வரும் சதுர்த்தித்

    Enjoying the preview?
    Page 1 of 1