Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Silaiyum Neeye Sirpiyum Neeye
Silaiyum Neeye Sirpiyum Neeye
Silaiyum Neeye Sirpiyum Neeye
Ebook256 pages1 hour

Silaiyum Neeye Sirpiyum Neeye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் சாதனை புரியத் துடிக்கும் பலருக்கும் எந்த வகையில் நம் எண்ணங்களையும், செயல்களையும் சீர்திருத்திக் கொண்டால் நாம் விரும்பிய வெற்றி இலக்கினை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. சாதனைச்சிலையாக நீங்கள் உருவாக்கப்பட வேண்டுமானால் அதைத் திறம்பட நேர்த்தியாக செதுக்கவல்ல சிற்பி வேறு யாருமல்ல நீங்கள்தான். தேவையற்ற எண்ணங்கள், சொற்கள், செயல்கள் போன்ற கற்துகள்களை நீக்கிவிட்டாலே உங்கள் சாதனைச்சிலை உருவாக்கப்பட்டுவிடும். இந்தக் கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட தொடர்தான் “சிலையும் நீயே! சிற்பியும் நீயே”

இந்த நூலினைப் படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவதுடன், அவர்கள் கடிதங்களை அடுத்த நூலில் இடம்பெறச் செய்ய ஆவலாக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580134805847
Silaiyum Neeye Sirpiyum Neeye

Read more from Geetha Deivasigamani

Related to Silaiyum Neeye Sirpiyum Neeye

Related ebooks

Reviews for Silaiyum Neeye Sirpiyum Neeye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Silaiyum Neeye Sirpiyum Neeye - Geetha Deivasigamani

    https://www.pustaka.co.in

    சிலையும் நீயே சிற்பியும் நீயே

    Silaiyum Neeye Sirpiyum Neeye

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    ஆசிரியர் குறிப்பு

    நம்பி கை வை! நம்பிக்கை வை!

    தேவை – ஆறெழுத்து மந்திரச் சொல் - சுறுசுறுப்பு

    உங்களுக்குத் தேவை உயர்ந்த குறிக்கோள்

    சிந்திக்க சில மணித்துளிகள்

    விட்டு விடாதீர்கள் விடா முயற்சியை!

    உங்கள் நேரம் உங்கள் கையில்

    எழாவிடில் பயனில்லை

    திறமைகள் துருப்பிடிக்கலாமா?

    ஆத்ம நண்பன் - புத்தகமே!

    ஆள் பாதி! ஆடை பாதி!

    அனுபவமே ஆசான்

    பிறருக்காகவும் வாழுங்கள்

    வேண்டாமே இந்த டென்ஷன்

    பேச்சைக் குறைக்கலாமே!

    எண்ணி… எண்ணிப் பேசலாமே!

    குறை கூறாதீர்கள்

    சிரிப்பு - ஒரு சிறந்த டானிக்

    உழைப்பே உயர்வு

    மூட நம்பிக்கைக்கு ஒரு மூடுவிழா

    மாதா, பிதாவே குரு, தெய்வம்

    மௌனமே சாந்தி

    உள்ளத்தனையது உயர்வு

    மனமே… கூடாது சினமே!

    சேமிக்க வேண்டுமய்யா!

    ஆண்டவனுக்கே அர்ப்பணம்

    விழுவது மீண்டும் எழுவதற்காகவே!

    ஆழ்மனதின் அற்புதம்

    உற்சாகம் உங்கள் கையில்!

    இன்று சிறப்பாக வாழுங்கள்

    அகந்தையை அகற்றுங்கள்

    சமர்ப்பணம்

    சிலையும் நீயே! சிற்பியும் நீயே எனும் இந்த சுய முன்னேற்ற நூலினை, என்னுள் இருந்து, இமைப்பொழுதும் எனைவிட்டு நீங்காமல் இயக்கி ஒவ்வொரு எழுத்தையும் என்னுள் இருந்து எழுதிவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மலர்பாதங்களில் சரணடைந்து சமர்ப்பிக்கிறேன்.

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

    கீதா தெய்வசிகாமணி,

    19-4-2007.

    என்னுரை

    வாழ்க்கையில் சாதனை புரியத் துடிக்கும் பலருக்கும் எந்த வகையில் நம் எண்ணங்களையும், செயல்களையும் சீர்திருத்திக் கொண்டால் நாம் விரும்பிய வெற்றி இலக்கினை அடைய முடியும் என்பதைப் புரிந்துக்கொள்ளவில்லை. சாதனைச் சிலையாக நீங்கள் உருவாக்கப்பட வேண்டுமானால் அதைத் திறம்பட நேர்த்தியாக செதுக்கவல்ல சிற்பி வேறு யாருமல்ல நீங்கள்தான். தேவையற்ற எண்ணங்கள், சொற்கள், செயல்கள் போன்ற கற்துகள்களை நீக்கிவிட்டாலே உங்கள் சாதனைச்சிலை உருவாக்கப்பட்டுவிடும். இந்தக் கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட தொடர்தான் சிலையும் நீயே! சிற்பியும் நீயே

    தினத்தந்தி ‘குடும்ப மலர்’ ஆசிரியர் திரு.சிவராஜ் அவர்கள் ஒரு சிறந்த சுய முன்னேற்றத் தொடர் ஒன்றை நம் குடும்ப மலருக்காக எழுதித்தர வேண்டும் என்று கேட்ட பொழுது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். காரணம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட நாளிதழ் என்பதால் இந்தக் கட்டுரை சிந்தனை, மக்கள் மத்தியில் விரைவாகச் சென்று சேரும் அல்லவா! அதேப்போல் வாசகர்களிடமிருந்து அதிக அளவில் கடிதங்கள் வர ஆரம்பித்ததும் தொடரை மிக சுவாரஸ்யமாக, சிறப்பாக எழுதும் ஆர்வமும் எனக்குள் அதிகரித்தது.

    மேலும் எழுத்தார்வத்தை இரத்தத்தில் ஊட்டிய தாயார் நாவலாசிரியை லீலா கிருஷ்ணன் அவர்களுக்கும், உடனிருந்து ஊக்கப்படுத்தி வரும் கணவர் அட்வகேட் திரு. தெய்வசிகாமணி அவர்களுக்கும், ஆன்லைனில் உடனே படித்து உற்சாகப்படுத்தும் என் குழந்தைகள் சாப்ட்வேர் இன்ஜினியர் சிர.சிவா, அறிவியல் முதுநிலை பட்டதாரி சௌ. சத்யலீலா இருவருக்கும் நன்றிகள் பல. குடும்பமலரில் ஒவ்வொரு வாரமும் புத்தகம் வெளிவந்த சிறிது நேரத்தில் படித்துவிட்டு விமர்சித்து ஊக்கப்படுத்தும் குடும்ப நண்பர் திரு. பாலதுரை அவர்களுக்கும் நன்றி.

    இந்த நூலினைப் படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவதுடன், அவர்கள் கடிதங்களை அடுத்த நூலில் இடம்பெறச் செய்ய ஆவலாக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி!

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

    அன்புடன்,

    கீதா தெய்வசிகாமணி.

    23, அபிநவ் பேலஸ்,

    ஜெத் நகர் முதல் மெயின்ரோடு,

    மந்தவெளி,

    சென்னை - 28.

    Ph: 24933886

    விமர்சனக் கடிதங்கள்

    சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! தொடரை விடாமல் படித்தேன். மிகச் சிறந்த வழிகாட்டியாக என் போன்றோர் உணர்ந்திருப்பர். நன்றிகள். அது முழுத்தொகுப்பாக புத்தக வடிவாய் வரும் நாளை எதிர்நோக்குகிறேன். இந்தத் தொடர் என் மன ஓட்டத்திற்காகவே எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதில் ‘அனுபவமே ஆசான்’, ‘குறை கூறாதீர்கள்’, டென்ஷன் பற்றிய கட்டுரைகள் நம்பிக்கையில் பலகீனமாக இருப்பவர்களுக்கு உற்சாகம் தரும். இந்தத் தொடரில் நல்ல விஷயங்கள் பல கற்றுக்கொண்டேன். இது போன்ற பயன் தரும் படைப்புகளை தாங்கள் இன்னும் தொடர்ந்து வெளியிட வேண்டுகிறேன்.

    க. மோகன சுந்தரம்

    பாளையங்கோட்டை

    ***

    பணத்தை சேமிப்பதோடு புண்ணியத்தையும் சேமிக்கப் பழகுங்கள் என்ற நல்ல கருத்தை சிலையும் நீயே! சிற்பியும் நீயே! பகுதியில் சொல்லியிருப்பது போற்றுதற்குறியது.

    செல்வராஜா

    சேலம்.

    ***

    கீதா தெய்வசிகாமணி எழுதும் சிலையும் நீயே! சிற்பியும் நீயே! தொடரில் சுறுசுறுப்பு என்னும் மந்திரச் சொல் பகுதியில் ஒவ்வொரு சொல்லும் முன்னேறத் துடிக்கும் இளைஞர் இளைஞிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து, படிக்கப் படிக்க பரவசம்.

    அபிராமி அன்புச்சோலை

    தாராபுரம்.

    ***

    அன்னையையும் தந்தையையும் குரு தெய்வமாக நினைத்து ஒவ்வொரு செயலையும் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என முதியோர்களை மதிக்க வேண்டும் என்று விளக்கிய சிலையும் நீயே! சிற்பியும் நீயே! தொடர் சிந்தனை செய்தி. பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறவர்களுக்கு சரியான படிப்பினைப் பகுதி.

    ஏ.பி.எஸ். ரவீந்திரன்

    நாகர்கோவில்.

    ***

    அனுபவமே ஆசான் சிலையும் நீயே! சிற்பியும் நீயே! எனும் தொடரில் அனுபவம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்வழி காட்டும் திசைக்காட்டி, தங்கள் அனுபவங்களை பெரியவர்கள் சொல்லும் போது பிள்ளைகள் கேட்பதில்லை. வேதனை அனுபவமும் வேண்டாத அனுபவமும்தான் ஒவ்வொரு மனிதனையும் புடம் போட்ட தங்கமாக மாற்றுகிறது. ‘கட்டுரை பிரமாதம்’ ஒவ்வொரு வாரமும் நல்ல விஷயங்களை செதுக்குங்கள்.

    முகவை. ஆர். இராஜகோபால்

    சென்னை – 114.

    ***

    குடும்ப மலரில் வெளியான கீதா தெய்வசிகாமனியின் கட்டுரை (மாதா பிதாவே குரு தெய்வம்) பெற்றோரை மதிக்காத தலைமுறைக்கு நல்ல சாட்டையடியாக இருந்தது. மேலும் மௌனத்தைப் பற்றிய கட்டுரையில் மௌனத்தின் சிறப்புகளை கட்டுரையில் படித்து வியந்தேன்.

    திருவாரூர் சரவணன்

    திருவாரூர்.

    ***

    விழுவது மீண்டும் எழுவதற்காகவே சிலையும் நீயே! சிற்பியும் நீயே! தொடர் உன் கைகள் இரண்டு மட்டும் போதும் என்று நினைக்காதே! மூன்றாவதாக நம்பிக்‘கை’யும் வேண்டும் என்று சொல்வது போல் இருந்தது. நன்றிகள்.

    சிவக்குமார்

    மஞ்சூர்.

    ***

    எங்கும் எதிலும் குறைகூறுதல், குறைகாணுதல் பழக்கத்தைக் கொண்டிருக்கும் நாம் அப்பழக்கத்திலிருந்து விடுபட கீதா தெய்வசிகாமணி - சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! எனும் கட்டுரையில் கூறிய வழிமுறைகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

    ஆர். திருநாவுக்கரசு

    ஜோதிநகர், போளூர்.

    ***

    சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட சிரிப்பு ஒரு சிறந்த டானிக் கட்டுரை படித்தேன். சிரிப்பு மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பலவழிகளில் மேம்படுத்துகிறது. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதால் நகைச்சுவை உணர்வை எல்லோரும் படிப்படியாக வளர்த்துக் கொள்வது நல்லது.

    கோ. கல்யாண சுந்தரம்

    கோவை.

    ***

    வாழ்க்கைத் தரம் உயர சேமிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நேரசேமிப்பு, உடல் சக்தியை எனர்ஜியை சேமிக்கும் யோகாசனம், தியானம் மற்றும் சம்பாதிக்கும் பொருளில் 10 சதவீதம் சேமிப்பு என்று இருப்பது நல்லது என சேமிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணக் கூறிய சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! சிந்தனைத் தொடர் அறிய வேண்டிய ஒன்று.

    இந்திரன்

    நாகர்கோவில்.

    ***

    24.9.06 நாளிட்ட குடும்ப மலரில் சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! எனும் பகுதி வாயிலாக அனுபவம் என்பது விளக்கு என்றும் அவ்விளக்கின் ஒளியைக் கொண்டு வாழ்க்கை எனும் பாடத்தை நன்கு விளக்குகிறார். இறைவன் எனும் ஆசான் எனும் பேருண்மையினை உணர வைத்த குடும்ப மலரின் இனிமை தேனினும் இனியது. வயது முதிர்ந்தவர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களது வாழ்கையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல் அறிவுரையை சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! எனும் கட்டுரை நன்கு எடுத்துரைத்ததைக் காண முடிந்தது. மிக்க நன்றி. பாராட்டுக்கள் பல.

    து. ராமகிருஷ்ணன்

    எரகுடி.

    ***

    கீதா தெய்வசிகாமணியின் சிலையும் நீயே! சிற்பியும் நீயே! 30 வார தொடர் நிறைவு பெற்று விட்டாலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் யாவும் என்றென்றும் எங்கள் மனதில் நின்று எங்களை நல்வழிப்படுத்தும்.

    கா. இராஜசேகர்

    மங்களபுரம்.

    ***

    சிலையும் நீயே! சிற்பியும் நீயே!! கட்டுரை விடாமுயற்சியின் மகத்துவத்தை உதாரணங்களுடன் விளக்கியது அருமை.

    சேது பழனிவேலு

    வடக்கூர்.

    ***

    சற்றே கர்வமாகவும் இருந்தது என்னுடைய கடிதத்தை தாங்கள் இணையதள பக்கத்தில் வெளியிட்டது ஒரு வாசகனை தங்கள் மனதில் எந்த இடத்தில் வைத்து இருக்கின்றீர்கள் என்பதை அறியமுடிகிறது. மிக அற்புதமான விஷயம். இது நிச்சயமாக எனக்கு தெரிந்தவரை யாரும் இதுபோல் செய்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு வாசகனையும் நினைவில் கொண்டு அவனை கௌரவிக்கும் வகையில் நீங்கள் வெளியிட்டுள்ளது ஒரு பரந்த மனப்பான்மையுடன் செய்யும் செயலாக நான் உணர்கிறேன். தங்கள் பணி இன்னும் சிறக்கவும் தொடர்ந்திடவும் வாழ்த்துகின்றேன். என்னைப்போல இன்னும் நிறைய எழுத்தாளர்களை நீங்கள் உருவாக்க வேண்டும் திசை தெரியாது எரிந்திடும் நெருப்பை ஊக்கம் என்ற விரல் கொண்டு தீபம் ஆக்கும்… உங்கள் சேவைகள் தொடர வேண்டும்… தாங்கள் எல்லா நலன்களும் பெற்று தொடர்ந்து எழுதிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வழிபடுகிறேன் மிக்க நன்றி

    இப்படிக்கு

    தங்களின் பிள்ளைகளில் ஒன்றான

    உங்கள் மோகனசுந்தரம்.

    திருநெல்வேலி.

    ***

    மதிப்பிற்குரிய அம்மா எழுத்தாளர் திருமதி. கீதாதெய்வசிகாமனி அவர்களுக்கு ஒரு கடிதம்… வணக்கம் நான் மோகனசுந்தரம் திருநெல்வேலி… அம்மா முன்பு தாங்கள் குடும்ப மலரில் எழுதிவந்த சிலையும் நீயே சிற்பியும் நீயே தொடர் பற்றி நான் ஒரு விமர்சனக் கடிதம் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அது 2007 ஆம் வருடத்தில் எழுதியிருந்தேன். நீங்களும் அதற்கு பதில் அனுப்பி இருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் கொஞ்சம் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன்… இன்னும் அதிகமாக எழுதுங்கள் என்று ஊக்கம் தந்தீர்கள். அதன்படி நான் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஓரளவுக்கு ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டிருக்கிறேன்… அதனுடைய ஒரு உந்துசக்தியாக நீங்கள் இருந்து உள்ளீர்கள். தற்போது தங்களுடைய இணையதள பக்கத்தில் தங்களுக்கு வந்த விமர்சன கடிதங்களை பதிவேற்றம் செய்து உள்ளீர்கள். அப்படி செய்யப்பட்ட கடிதத்தில் என்னுடைய கடிதமும் இடம்பெற்றுள்ளது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

    ***

    இலக்கிய இமயம் திருமதி. கீதா தெய்வசிகாமனி அவர்களுக்கு அறந்தாங்கி S.K.முகமது பாரூக் எழுதிக்கொண்டது.

    வணக்கம்.

    தாங்கள்எழுதிய சிலையும் நீயே சிற்பியும் நீயே என்ற நூல் அரசு நூலகத்தில் எடுத்து படித்தேன்.

    மனிதனின் நம்பிக்கையும், விடாமுயர்ச்சியும், வெற்றியையும் உற்சாகபடுத்தியுள்ளது. இவ்வளவு எழுதியவைக்கு மனமார பாராட்டுகிறேன்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டிய நூல்.

    ஒவ்வொரு திருமணத்திற்கும் பரிசளிக்கக்கூடிய நூல்.

    இதுபோல பல நூல்கள் எழுதி தன்னம்பிக்கையை இளைஞர்கள் மனதில் துளிர்விடும்படி செய்ய வேண்டுகிறேன்.

    மீண்டும் என் பாராட்டுக்கள். நன்றி.

    இப்படிக்கு

    அன்புடன்

    S.K.முகமதுபாரூக்

    ***

    என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட திருப்புமுனை தந்த ஒரே புத்தகம்

    என் வாழ்வில் நான் தோல்வியை மட்டும் சந்தித்துக் கொண்ட நேரம் (+2வில் நான்கு முறை தோல்வி) ஒரு முடிதிருத்தும் கடையிலும், ஹோட்டல் வேலை, பால், பேப்பர் போடுவது என்ற நிலையில் இருந்த நான் திடீரென என் வாழ்வில் ஒரு பேப்பரில் வந்த சுய முன்னேற்ற கட்டுரையான சிலையும் நீயே சிற்பியும் நீயே என்ற கட்டுரையை படிக்க ஆரம்பித்த உடன் என் வாழ்வில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. அவைகள் சொல்லப்பட்ட கருத்துக்களை என் வாழ்வில் நடைமுறை படுத்தியவுடன் B.Sc BioTech, M.Sc BioTech, Health Care Company Job. உலகில் ஏழாம் நிலையில் உள்ள மிகப்பெரிய Pharma Company மிகப்பெரிய பொருளாதார தன்னிறைவு அடைந்து அதே நிறுவனத்தின் CEO நிலையை நோக்கி செல்ல காரணமாக இருக்கும் ஒரே புத்தகம் இந்த சிலையும் நீயே சிற்பியும் நீயே என்ற இந்த புத்தகம் என்றால் அவை மிகையாகாது. இந்த புத்தகத்தை முழுமையாக அடைய எனக்கு 11 வருடம் தேவைப்பட்டது.

    என் வாழ்வில் இன்று ஒரு பொன் நாள்

    எனக்கு இந்த புத்தகத்தை அன்பளிப்பாக அருளிய உயர்திரு. கீதா தெய்வசிகாமணி அவர்கள் நான் வணங்கும் என் முதற் கடவுள் என் அம்மா அப்பாவிற்கு பின் என் முதல் குரு!

    ஜெ.ஜெயசீலக்குமார்

    ஆசிரியர் குறிப்பு

    நாவலாசிரியை திருமதி லீலாகிருஷ்ணன் பொறியியல் வல்லுநர் திரு. எம்.பாலகிருஷ்ணன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்த இவர் ஏற்கனவே தன் சுய முன்னேற்றக் கட்டுரைகள் வாயிலாக பத்திரிக்கை உலகில் நன்கு அறிமுகமானவர்.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் திரு. என். தெய்வசிகாமணி அவர்களின் மனைவியான இவர் கடந்த இருபது வருடங்களாக மங்கையர்மலர், சிநேகிதி, பெண்மணி, அவள்விகடன் போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து சுயமுன்னேற்றக் கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட பேட்டிகள் 500 மேற்பட்ட கட்டுரைகள் எழுதி இருக்கும் இவர் சென்னை தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி, மற்றும் வானொலியில் பல நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார்.

    தஞ்சை ஓவியக் கலையில் நன்கு தேர்ச்சிப் பெற்ற இவர் அண்மையில் ஜூபிடர் ஆடியோஸ் மூலம் வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழ்) ஒலி நாடா, பக்தர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

    கடந்த பத்து வருடங்களாக ‘கீதம் மேரேஜ் மேட்சிங் சென்டர்’ எனும் திருமண தகவல் மையத்தை நிறுவி நிர்வகித்து வருகிறார் இவரது மகன் ஷிவா கணிப்பொறித் துறை பொறியாளர். மகள் சத்யலீலா அறிவியல் முதுகலை பட்டதாரி.

    உங்கள் உயர்வு உங்கள் கையில், உற்சாகம் உங்கள் கையில், நம்பிக்கை வெற்றி பெறும்.

    Enjoying the preview?
    Page 1 of 1