Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Palavitham
Kaadhal Palavitham
Kaadhal Palavitham
Ebook130 pages42 minutes

Kaadhal Palavitham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதயமே... இதயமே... இச்சிறுகதையில், தன் மகள் பிரியாவின் காதலுக்கு வருமா எதிர்ப்பு தெரிவித்தும், பிரியாவின் இதயம் சங்கரிடம் சேர்ந்தது எப்படி? இது காலத்தின் கட்டளையா? விதியால் ஏற்பட்ட சதியா? என்பதையும், காதல் சிலருக்கு உயிர், சிலருக்கு பொழுதுபோக்கு, சிலருக்கு வாழ்க்கை. இப்படி “காதல் பலவிதம்” என்பதை உணர்ந்த அரவிந்த் தன்னுடைய காதலை ரம்யாவிடம் கூறினானா? காதல் ஜெயித்ததா? என்பதையும் இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580166909902
Kaadhal Palavitham

Related to Kaadhal Palavitham

Related ebooks

Reviews for Kaadhal Palavitham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Palavitham - G. Shekar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் பலவிதம்

    (சிறுகதைகள்)

    Kaadhal Palavitham

    (Sirukathaigal)

    Author:

    ஜி. சேகர்

    G. Shekar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    என்னுரை

    1. காதல் பலவிதம்

    2. விஞ்ஞானத்தின் மறுபக்கம்

    3. ஜோடிப்பொருத்தம்

    4. வெறி

    5. நான் கொசு!

    6. பெரிய தம்பி

    7. பேட்டி

    8. புதுவீடு

    9. ஊர் வாய்!

    10. புது தீபாவளி

    11. பார்வைகள்

    12. பிக்பாஸ்

    13. இதயமே... இதயமே...

    14. அவரவர் நியாயங்கள்

    15. மாடசாமி

    16. குழந்தை!

    17. அவள் - இவள்

    18. ஆடுகளம்

    19. மங்காத்தா

    20. உறுதி

    21. வலி

    முன்னுரை

    அன்பு வாசகர்களே!

    வணக்கம்! இந்த சிறுகதை தொகுப்பில், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு, நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தது முதல், கடைசியாக வெளிவந்த சிறுகதைகள் வரை தொகுத்துள்ளேன்.

    இச்சிறுகதைகளை வெளியிட்ட வார, மாத இதழ் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்!

    இவர்களைத் தவிர அணிந்துரை எழுதிய பத்திரிகையுலகில் 50 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக (தினத்தந்தி) இருந்ததோடல்லாமல், பல சிறந்த நாவல்களையும், இருபதாம் நூற்றாண்டு வரலாறு போன்ற வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் எழுதியவருமான, மூத்த பத்திரிகையாளர் திரு. ஐ. சண்முகநாதன் (நாதன்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    இனி இந்த கதைகளை படித்துவிட்டு, அது எப்படியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    திருச்சி-17

    15-05-2023.

    இப்படிக்கு,

    ஜி. சேகர்

    6381148731

    ஜி. சேகர்

    நூலாசிரியர்

    பிரபல நாவலாசிரியரும், மூத்த பத்திரிகையாளரும் தினத்தந்தி நாளிதழின் ஆலோசகருமான திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் வழங்கிய

    அணிந்துரை

    வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் இடையே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விடிவெள்ளிபோல. இன்றைய இளம் எழுத்தாளர்கள் மத்தியில் ஒளிவிடுபவர் திரு.ஜி. சேகர் அவர்கள்.

    இதிலுள்ள கதைகளில் பல, ஏற்கனவே பிரபல பத்திரிகைகளில் பிரசுரமானவை. அதாவது சிறந்த கதைகள் என்று பத்திரிகை ஆசிரியர்களின் அங்கீகாரம் பெற்றவை.

    கற்பனைவளமும், மொழிநடையை சிறப்பாகக் கையாளும் லாவகமும் கைவரப் பெற்றுள்ளார் ஜி. சேகர். எதிர்காலத்தில் உலகத் தரம் வாய்ந்த பல படைப்புகளை இவரிடம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தச் சிறுகதைத் தொகுதி.

    மேலும் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க இவரை வாழ்த்துகிறேன்.

    ஐ. சண்முகநாதன்

    (நாதன்)

    என்னுரை

    அன்பு வாசகர்களே!

    இது எனது முதல் சிறுகதை தொகுப்பு. இதற்கு முன்பு சிறுகதை வானில் என்ற சிறுகதை தொகுப்பில், எனது சில சிறுகதைகள் வந்திருந்தாலும், முழுமையான தொகுப்பு இதுதான். இதில் நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தது முதல், தற்பொழுது கடைசியாக எழுதியுள்ள சிறுகதைகள் வரை உள்ளன.

    நான் இப்படி சிறுகதைகள் எழுத ஆர்வம் வருவதற்கு முக்கிய காரணம், எங்கள் வீட்டிலேயே இருக்கும் மற்றொரு எழுத்தாளரும், எனது அண்ணனுமான செல்வன்ஜிதான். ஆமாம், அவர் பத்திரிகைகளுக்கு துணுக்குகள், கதைகள் எழுதி அனுப்பி, அது பத்திரிகைகளில் பிரசுரமாகி,கூடவே அதற்கு சன்மானமும் பெறுவதைப் பார்த்து, எனக்கும் அந்த ஆசை தொற்றிக் கொண்டது. இதற்கு உதவியாக அவர் அப்பொழுது நடத்தி வந்த சிறு நூலகமும், எனக்கு உதவி செய்ய, அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களையெல்லாம், வீட்டிற்கு எடுத்து வந்து படித்து, படித்து நானும் கதைகள் எழுத ஆரம்பித்தேன். இது தவிர அவர் நடத்தி வந்த அந்த நூலகம், திருச்சியில் அந்த சமயத்தில் பத்திரிகைகளில் துணுக்குகள், சிறுகதைகள் எழுதி வந்த எழுத்தாளர்களின் சந்திப்பு மையமானது. அந்த நூலகத்திற்கு அப்பொழுது திருச்சி சையது, தென்னூர் யாதவன், தி.மா. தமிழழகன், ஹேமந்த் குமார், எஸ். பிரேம் சந்தர், இந்திர பூபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீகாந்தன், எஸ். சக்திவேல், மற்றும் தற்பொழுது சென்னையில் சினிமாத் துறையில் டைரக்டராக இருக்கும் சந்துரு மாணிக்கவாசகம் போன்றோர் அடிக்கடி வருவார்கள். நாங்கள் அவ்வாறு சந்திக்கும் சமயத்தில், பெரும்பாலும் கதைகளைப் பற்றியே பேசுவோம், விவாதிப்போம். அப்படி ஆரம்பித்த ஆர்வம், பிறகு பணி நிமித்தமாக பலரும் பல இடங்களுக்கு போய்விட்டாலும், நான் தொடர்ந்து எழுதியவைகள்தான் இந்த சிறுகதைகள்.

    இந்த கதைகள் கடந்த இருபது வருடங்களாக, பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை என்பதால், சில கதைகளை இப்பொழுது படிக்கும்பொழுது வேடிக்கையாகக்கூட தோன்றலாம். (உ.ம்.) மாறும் நியதிகள் குழந்தை மனசு போன்ற கதைகள், செல்போன்கள் எல்லாம் எளிய மனிதர்களிடம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாதபொழுது எழுதப்பட்டவை என்பதால், இன்றைக்கு இந்த கதைகளை படிக்கும் வாசகர்களுக்கு, வீட்டில் போன் இருப்பது இவ்வளவு கஷ்டமான விஷயமா? என்றுகூட தோன்றலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கின்றனர் என்பது நிதர்சன உண்மை.

    1. நான் ஈ படம் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் எழுதியதுதான் நான் கொசு சிறுகதை.

    2. எங்கள் தெருவில் புதிதாக குடி வந்த ஒரு அழகான ஜோடியை பார்த்து ரசித்து, பின்பு உண்மை நிலையை அறிந்தபொழுது, தோன்றியவைதான் ஜோடிப் பொருத்தம் கதை.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் இத்தொகுப்பில் நான் சிலருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன்.

    முதலாவதாக இக்கதைகள் வெளியிட்ட மாலைமுரசு, தினமலர் - வாரமலர், தினத்தந்தி, பாக்யா, தேவி, தமிழ் முரசு, சுவாசம் செய்திகள் மற்றும் சில பத்திரிகைகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள்.

    அடுத்து நான் முன்பு ‘மாலைமுரசில்’ பணிபுரிந்த பொழுது, என்னிடம் கதை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தி, ஆர்வமாக அதை கேட்டு வாங்கி பிரசுரித்த, அப்போதைய அதன் உதவி ஆசிரியர்களான திரு. ரத்னகுமார், திரு. நாகராஜன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

    இத்தொகுப்பு வெளிவருவதற்கு மற்றொரு

    Enjoying the preview?
    Page 1 of 1