Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithaiyai Meeri Nindru
Kavithaiyai Meeri Nindru
Kavithaiyai Meeri Nindru
Ebook152 pages56 minutes

Kavithaiyai Meeri Nindru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதிலுள்ள சிறுகதைகள் எல்லாம் தரமானவை. சில கதைகள் இதயத்தை வருடுகின்றன. சில கதைகள் மனத்திற்குள் இறுக்கமாய்ப் பதிந்து விடுகின்றன. சிறுகதை இலக்கண மரபை மீறாமல் மானுடத்தின் அவசியத்தை, தன் சுந்தர வரிகளால் வெள்ளைத் தாளில் வெள்ளை மனசோடு க்ளிக் செய்திருக்கிறார் ‘க்ளிக்’ரவி. இந்தச் சிறுகதை நூல் இவரின் கன்னி முயற்சி மட்டுமல்ல; கண்ணியமான முயற்சியும் கூட! க்ளிக் ரவி எழுதியிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139106271
Kavithaiyai Meeri Nindru

Related to Kavithaiyai Meeri Nindru

Related ebooks

Reviews for Kavithaiyai Meeri Nindru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithaiyai Meeri Nindru - Klik Ravi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    கவிதையை மீறி நின்று

    சிறுகதைகள்

    Kavithaiyai Meeri Nindru

    Sirukadhaigal

    Author:

    க்ளிக் ரவி

    Klik Ravi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/klik-ravi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    1. உறவுச் சங்கிலிகள்

    2. பாத்தாயி

    3. அம்மா

    4. மாற்றங்கள்

    5. இடைவெளி

    6. ரௌத்திரம் பழகு

    7. தூக்கம் வராத ராத்திரி

    8. அன்பளிப்பு

    9. அலையில் ஒரு குளியல்

    10. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில்

    11. கொடுப்பவரெல்லாம் கீழாவார்!

    12. தரிசனம்

    13. நாணயம்

    14. கவிதையை மீறி நின்று!

    சமர்ப்பணம்

    எனது அருமை அம்மாவுக்கும் அன்பான அப்பாவுக்கும்…

    என்னுரை

    என் தந்தையார் அதிகம் படிக்காதவர். ஆனால் நான்காம் வகுப்பு வரையில் மட்டுமே படித்திருந்தாலும்கூட அவரது பள்ளிக்கால நினைவுகளை, அனுபவங்களை அவருக்கு எண்பது வயதாகும் இன்றும்கூட பசுமையாக நினைவுகூற முடிகிறது. சுவாரஸ்யமாகச் சொல்ல முடிகிறது. அவரது பேச்சில் இழையூடும் நகைச்சுவை மெத்தப் படித்தவர்களும் கூட ரசிக்கத் தகுந்ததாக இருக்கும். புதிது புதிதாகவும் இருக்கும். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லையென்றாலும் கூட வாழ்க்கையை அனுபவித்துப் படித்தவர் அவர்! கதை கேட்கும், கதை சொல்லும் திறன் அவரிடமிருந்துதான் எனக்கு வந்திருக்க வேண்டும்.

    எனது அம்மா, எனது அப்பாவைவிட அதிகமாகப் படித்தவர். எட்டாம் வகுப்பு! அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து காமிரா வாங்கத் துணிவு கொடுத்தவர் அவர்தான்! (அப்போது விற்ற விலைக்கு செங்கல்பட்டு தள்ளி இரண்டு கிரவுண்ட் வாங்கிப் போட்டிருந்தால் இன்றைய நிலைக்கு நான் கோடீஸ்வரனாகியிருப்பேன்).

    அவர்கள் அதிகம் படிக்கவில்லையென்றாலும்கூட என்னையும், என் உடன் பிறந்தோர்களையும் படிக்க வைக்க பெருமுயற்சியெடுத்துக் கொண்டார்கள்.

    நான் சிறுவயதாக இருக்கும்போதே கார்ட்டூன்கள் வரையும்போது என்னை அருகில் வைத்துக்கொண்டு கேட்கும் சிறு பிள்ளைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் பதில் சொல்லி என்னையும் ஓவியம் வரையச் சொன்ன, எனது சித்தப்பா ராமரத்தினம்!

    எனது இன்றைய வளர்ச்சிக்கும், இனிமேல் பெறப்போகும் வளர்ச்சிகளுக்கும் இவர்களே முதற்காரணம்!

    அடுத்து எனது வாழ்க்கைப் பாதையில் உதவியவர்களின் பெயர்களை முதலிலேயே சொல்லி நன்றி பாராட்டியிருக்கிறேன். இருந்தாலும் இதில் விடுபட்டுப் போனவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

    எனது குடும்ப வட்டத்திலேயே கல்லூரி வாசலை முதலில் மிதித்தது நான்தான். ஆனால் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். கொஞ்சமாய்ச் சித்திரம் வரைந்திருக்கிறேன், பின்னர் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும், சற்றே அயல் மாநிலங்களிலும் சுற்றியிருக்கிறேன். தற்போது நான் ஈடுபட்டிருப்பது ‘போட்டோகிராபி’ எனக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அளித்து ஒரு புதிய வாசலைத் திறந்து வைத்தது இந்த ‘போட்டோகிராபி’ என்ற அருமையான துறைதான்!

    சிறு வயதிலிருந்தே நூலகம் திறக்கும் முன்பாகக் காத்திருந்து கடைசி விளக்கை அணைக்கும்வரையில் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவன் நான். மகாகவி பாரதி என்னைப் பிரமிக்க வைத்தார். தி. ஜானகிராமனும், ஜெயகாந்தனும் சமமாகவே என்னை பாதித்திருக்கிறார்கள். சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த புதுமை என்னை வசீகரித்திருக்கிறது. கலைமகள் ஆசிரியர் கீழாம்பூருடன் எழுத்துலகப் பிதாமகர்

    ஏ.என்.எஸ்-ஸை சந்தித்தபோது அவரது எளிமையாகப் பழகும் தன்மையும், அவர்தான் ‘கணக்கன்’ என்ற பெயரில் தினமணியில் கட்டுரைகள் எழுதியவர் என்றறிந்தபோது ஏற்பட்ட பிரமிப்பும், அவரது அருகில் நிற்கிறோம் என்ற பெருமிதமும் ஒன்றுசேர்ந்து இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தின. இப்படி ஒவ்வொரு பிராயத்தில் ஒவ்வொரு எழுத்தாளர் என்னை ஆட்கொண்டாலும் அவ்வப்போது என்னை வசப்படுத்தியவர்கள் என்ற முறையில் எல்லோரையும் நான் நன்றியுடன் நினைக்கிறேன். இவ்வளவு பெரிய மனிதர்களை மனதில் கொள்ளும்போது நான் இத்துறையில் முதற்படியில்கூட கால் வைக்கவில்லை என்பது புரிகின்றது. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் எழுதியிருப்பது மிகக் குறைந்த அளவில்தான்.

    துவக்கக் காலத்தில் எனது படைப்புகள், எந்த இதழிலும் வெளியாகாத நிலையில் நான் எழுதிய ‘பாத்தாயி’ என்ற கதையை வண்ண நிலவனிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டபோது, படித்து, மனதாரப் பாராட்டி, உங்களது எழுத்து எஸ்.வி.வி-யுடைய எழுத்தைப்போல இருக்கிறது என்று சொன்னதை நான் இப்போது மகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்கிறேன். (அதன் பின்னர்தான் எஸ்.வி.வி-யின் எழுத்துக்களைத் தேடிப் படித்தேன் என்பது வேறு விஷயம்)

    எனது திறமையை விடவும் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்மீது காட்டும் அன்புதான் எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அன்பின் காரணமாக எனக்கு அவர்கள் அளிக்கும் வாய்ப்புகள் எனது திறமையை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன.

    இது எனது முதல் சிறுகதைத் தொகுதி. வாசகர்களாகிய உங்களின் அன்பும் ஆதரவும் நிறைய தேவை. உங்களது கருத்துக்களை, விமர்சனங்களை எனக்கு எழுதினால் அவை என்னை மேலும் வளர்ச்சியடையச் செய்யும்.

    (இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் மொபைல் போன், இண்டெர் நெட் போன்ற வசதிகள் எதுவும் இல்லை என்பதை மனதில் கொண்டு படிக்கவும்)

    ‘க்ளிக்’ ரவி

    PARAMESWARAN VIHAR (C3-73), AWHO,

    67, ARCOT ROAD, SALIGRAMAM,

    CHENNAI- 600 093

    srisriravichandran@gmail.com

    கலைமகள் இதழாசிரியர் திரு கீழாம்பூர் அவர்களின்

    அணிந்துரை

    ‘அவன் ஒருவன் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி அன்று மாலை தெரிவிக்கப்பட்டபோது, சந்தோஷத்தில் திக்குமுக்காடினான். டைப்பிஸ்டாக இருந்தாலும் ஆரம்பச் சம்பளமாக 25 வருடமாக அரசு ஊழியராய் இருந்துவரும் அவன் அப்பாவுக்கு இணையாக இருந்தது.’ இதுபோன்று வாழ்க்கையில் யதார்த்தமாக நடைபெறுகின்ற சம்பவங்களை மையமாக வைத்து அழகான நடையில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார் க்ளிக் ரவி.

    இவருக்கு நாடக மேடையில் நடித்த முகம் ஒன்று உண்டு. அரசு ஊழியராக இருந்து திறம்படச் செயல்பட்ட முகம் ஒன்று உண்டு. பலரை தன் கேமிராவுக்குள் அடக்கி, பளிச்சென பிரிண்ட் போடும் சிறந்த கேமிராமேனாக முகம் ஒன்று உண்டு. இப்போது க்ளிக் ரவி நான்முகன் ஆகியிருக்கிறார் (பிரம்மன்). நான்காவது முகமாக சிறுகதைகளையும் பேட்டிக் கட்டுரைகளையும், பிரபல பத்திரிகைகளில் எழுதி, எழுத்தாளர் ஆகியிருக்கும் முகம் நான்காவது முகம் ஆகும்.

    ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வேண்டாம்!

    யாரும் இங்கே கடவுளர்களாக இருக்க வேண்டாம்!

    முதலில் நீங்கள் மனிதர்களாக மாறுங்கள்.

    மானுடத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.’

    இந்தக் கவிதை வரிகளை ஒட்டி, கவிதையை மீறி நின்று, சிறுகதைத் தொகுப்பு க்ளிக் ரவியால் ஒரு தேர்ந்த சிற்பி, சிற்பம் செதுக்குவதைப் போன்று அழகுபடத் தொகுக்கப்பட்டுள்ளது.

    இதிலுள்ள சிறுகதைகள் எல்லாம் தரமானவை. சில கதைகள் இதயத்தை வருடுகின்றன. சில கதைகள் மனத்திற்குள் இறுக்கமாய்ப் பதிந்து விடுகின்றன. சிறுகதை இலக்கண மரபை மீறாமல் மானுடத்தின் அவசியத்தை, தன் சுந்தர வரிகளால் வெள்ளைத் தாளில் வெள்ளை மனசோடு க்ளிக் செய்திருக்கிறார் க்ளிக் ரவி. இந்தச் சிறுகதை நூல் இவரின் கன்னி முயற்சி மட்டுமல்ல; கண்ணியமான முயற்சியும்கூட! க்ளிக் ரவி எழுதியிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

    அன்புடன்,

    கீழாம்பூர்

    ஆசிரியர், ‘கலைமகள்’

    அமுதசுரபி இதழாசிரியர் திரு. திருப்பூர்கிருஷ்ணன் அவர்களின்

    அணிந்துரை

    கல்கி மரபில் ஒரு கதாசிரியர்…

    பல ஆண்டுகளுக்கு முன்னால் ‘பாத்தாயி’ என்ற தலைப்பில் ஒரு கதை, நான் பணிபுரிந்த பத்திரிகையின் பரிசீலனைக்கு வந்தது. கதையின் தலைப்பு வித்தியாசமாக இருந்ததால் உடனே வாசித்தேன். மெல்லிய நகைச்சுவை, சரளமான நடை. ‘பாத்தாயி’ என்று அடிக்கடி அந்தக் குழந்தை சொல்லும் வார்த்தை கடைசியில் என்னவாகத்தான் இருக்கும் என்று வாசகனைப் பரபரப்புக் கொள்ள வைக்கும் வகையில் எழுதப்பட்ட விறுவிறுப்பு. நிறைய எழுதிப் பண்பட்ட மாதிரியான ஒரு லாகவம் கதையமைப்பில். படைப்பு தேர்வு செய்யப்பட்டுப் பிரசுரமாயிற்று.

    கதையை

    Enjoying the preview?
    Page 1 of 1