Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Musthafa
Musthafa
Musthafa
Ebook210 pages1 hour

Musthafa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

உழைப்பால் முன்னேறி உன்னத நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் பதிவு செய்யும்போது ஏற்படுகிற சுகமே அலாதிதான். இந்தப் புத்தகத்தை எழுதியபோது நான் அந்தச் சுகத்தை அனுபவித்தேன். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை அவர்களே சொல்லக் கேட்கும்போது, அவர்களோடு பழகிவருபவர்களைச் சந்தித்து அவர்கள் மூலம் சில விவரங்கள் தெரிய வரும்போது, வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு வியர்வை விழுந்திருக்கிறது என்பது புரியும்போது நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம். இந்த நூலைப் படிக்கும் உங்களுக்கு: “முஸ்தபா அவர்களின் வாழ்க்கை நிறைய விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தது போலவே உங்களுக்கும் கற்றுத் தரும். வாருங்கள் வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580143106892
Musthafa

Read more from Ranimaindhan

Related to Musthafa

Related ebooks

Reviews for Musthafa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Musthafa - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    முஸ்தபா

    (சிங்கப்பூரில் ஒரு வெற்றித் தமிழர்)

    Musthafa

    (Singaporeil Oru Vetri Thamilar)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    என்னை நேசிப்பவர்களுக்கும்

    என்னால்

    நேசிக்கப்படுகிறவர்களுக்கும்

    - எம்.ஏ. முஸ்தபா

    எண்ணம்

    குற்றவாளிகளால் நிகழ்கின்ற தீமைகளைவிட அந்தக் குற்றத்தைக் கண்டிக்காமல் மௌனமாக இருக்கின்ற நல்லவர்களால் விளைகின்ற தீமைகள் சமுதாயத்திற்கு அதிகம்.

    என்னை நீங்கள் பாராட்டுங்கள் அல்லது தூற்றுங்கள், அது உங்கள் விருப்பம். ஆனால் ஒருபோதும் என்னைப் புகழாதீர்கள். ஏனெனில் புகழுக்கு உரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே.

    - எம்.ஏ. முஸ்தபா

    முன்னுரை

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமத்தில் பிறந்தவன் நான். காலம் என்னை சிங்கப்பூருக்குக் கொண்டுவந்து சேர்த்தது.

    என் சகோதரர்களும் நானும் இந்த மண்ணில் காலூன்றுவது அவ்வளவு எளிதாக இல்லை.

    சவால்களைச் சந்தித்தோம் - தளராமல் முயற்சித்தோம் - காலூன்றினோம் - வெற்றிகண்டோம் - காலப்போக்கில் பிரிந்தோம் - வளர்ந்தோம்.

    இன்று நாங்கள் தனித்தனியாக இருந்தாலும் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    பலரது வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கக்கூடும். ஆனால் ஒரு வாழ்க்கை புத்தகமாகப் பதிவு செய்யப்படுவதற்கு இது போதுமா?

    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

    பல நண்பர்கள் ‘உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தபோது நான் நட்பாக அந்த விருப்பத்தை மறுத்து வந்தேன்.

    இருந்தாலும் உள் மனதில், ‘உழைத்தால் முன்னுக்கு வரலாம்; நற்பண்புகளைக் கைக்கொண்டால் வளரலாம்; ஒரு நிலைக்கு உயர்ந்த பின்னர் சமுதாயத்திற்கு நம் பங்களிப்பைத் தரலாம் என்று என் வாழ்க்கை அமைந்திருந்தால் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை’ என்ற எண்ணமும் இருந்ததை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    இறைவன் தன் படைப்புகள் அனைத்திற்கும் வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறான் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வாய்ப்புகளை அவரவர் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அப்படி வெற்றி பெறுகிறார்கள்.

    என்னுடைய மிக நெருங்கிய நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்த போது நண்பர்களின் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

    ஆஹா... அருமையான விருப்பம். நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற கவிஞர், அடுத்துச் சொன்னது இதுதான்:

    நான் ராணிமைந்தனிடம் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதட்டும்.

    திரு. ராணிமைந்தனை நான் எழுத்தாளர் திரு. சாவி அவர்கள் மூலமாக அறிவேன் என்றாலும் நெருங்கிப் பழகியதில்லை. எனினும் பல்துறைப் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர் எழுதிக்கொண்டு வருவதை அறிவேன்.

    அவருடன் நான் உரையாடிக் கொண்டிருந்த சமயம் என் வாழ்க்கையின் சில அனுபவங்களைச் சொல்லிவிட்டு கேட்டேன்:

    ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

    ராணிமைந்தன் உடனே சொன்ன பதில்:

    யாருடைய வாழ்க்கையை எழுதுகிறோம் என்பதல்ல முக்கியம். எந்த வாழ்க்கையை எழுதுகிறோம் என்பதே முக்கியம். உங்கள் வாழ்க்கையில் நிறைய செய்திகள் உள்ளன. பானைச் சோற்றுக்குப் பதமாக சில பருக்கைகளை எனக்குக் காட்டினீர்கள். நான் பானைக்குள் முழுவதையும் பார்க்க விரும்புகிறேன்.

    அவர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் இந்த நூல் வெளியாக முக்கிய காரணம்.

    திரு. ராணிமைந்தனின் ஆர்வத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

    அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். அவர் எழுதினார்.

    முஸ்தபா என்ற முத்துப்பேட்டைக்காரரின் முன்னேற்ற வரலாறு புத்தகமாக உருவானது இப்படித்தான்.

    கல்வி, சமயம், மொழி ஆகிய மூன்று பிரிவுகளிலும் என்னுடைய அணில் பங்கை ஆற்ற இறைவன் எனக்கு வாய்ப்பளித்தான். அவனுக்கு என் நன்றி.

    என்னைப் பெற்ற அன்னை ரஹ்மத் அம்மாள் நினைவாக சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையை நிறுவி, எனது பிறந்த மண்ணில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை உருவாக்கி, பின்தங்கிய எனது ஊர் முத்துப்பேட்டையில் மிகச் சிறந்த கல்வியை வழங்கியது. சென்னையில் ரஹ்மத் பதிப்பகத்தை நிறுவி, அரபி மூலாதாரங்களில் உள்ள இஸ்லாமிய சமய வேதம் குர்ஆன், பெருமானாரின் வாழ்வும் வாக்கும் இணைந்த ‘ஹதீஸ்’ - இவற்றை தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் முஸ்லிம்களுக்கும், மாற்று மத நண்பர்களுக்கும் இஸ்லாத்தை தமிழில் புரிந்துகொள்ள அரபு கிரந்தங்களைத் தமிழில் கொண்டுவந்தது; எனது இன்னோர் அன்னையாகிய தாய்த் தமிழுக்கு சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையையும், தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஆய்வு இருக்கையையும் நிறுவி தமிழ் மொழிக்குத் தொண்டு செய்ய வாய்ப்பளித்தது - இவற்றையெல்லாம் சாத்தியமாக்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்!

    இவ்விரண்டு அறக்கட்டளைகளையும் நிறுவி சேவை செய்யும் வாய்ப்பை இறைவன் அளித்திராவிட்டால், சராசரி வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள சாதாரண மனிதன் என்பதைத்தவிர எனக்கு வேறு எந்த சிறப்பும் இல்லை.

    வாழ்ந்தாலும் இறந்தாலும் நான்கு பேர் துணை வேண்டும் என்பது வாழ்வின் இயல்பும், மரபும். இறந்த பின்பு வரும் நால்வரை நான் அறியேன். ஆனால் உயிரோடு வாழ்ந்து வரும் நால்வரைப் பற்றி நான்கு வரிகள்:

    என்னோடு எல்லா சுக துக்கங்களிலும் பங்குகொண்டு, ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் என்ற கருத்துக்கு விளக்கமாக வாழும் எனது துணைவி கதிஜா நாச்சியா -

    சிங்கப்பூரில் எனது நெருக்கடியிலும், சோகத்திலும் என்னோடு துணை நின்ற, எனது நிறுவனத்தின் ஆடிட்டர் - நான் அன்போடு தம்பி என்றும் அவர் என்னைப் பாசத்தோடு மாமா என்றும் அழைக்கும் ஆடிட்டர் அப்துல் காதர் -

    எனது கற்பனைப் பள்ளிக்கூடத்தை - நான் காகிதத்தில் வரைந்ததை - கட்டடமாக்கி உயிர் கொடுத்த உத்தமர், எனது அன்பு வழிகாட்டி, நான் ‘சந்துரு ஸார்’ என்றழைக்கும் திரு. சந்திரராஜன் -

    நான்கு தலைமுறை நட்பு - நாற்பதாண்டு உறவு - எனக்கு மார்க்க வழிகாட்டி - என் உள்ளத்தில் வடிகால் - எனது பெற்றோரும், என்னுடைய குடும்பத்தினரும், என் பிள்ளைகள் அனைவரும் அன்புடன் ‘ஸார்’ என்றழைக்கும் யாகூப் ஸார் -

    இவர்கள் நால்வருக்கும் என் நன்றி.

    என் வாழ்க்கை அனுபவங்களுக்கு தனது வளமான எழுத்தால் நூல் வடிவம் தந்திருக்கும் இனிய நண்பர் திரு. ராணிமைந்தன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் என் நன்றி, என்றென்றும்.

    புத்தகத்தைப் படித்த பிறகு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தெரிந்துகொள்ள ஆசை.

    - எம்.ஏ. முஸ்தபா

    81A, GOODMAN ROAD

    SINGAPORE – 439066

    Mobile : +65 96190125

    Email: musthafa@asianexchange.com.sg

    வணக்கம்

    உழைப்பால் முன்னேறி உன்னத நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் பதிவு செய்யும்போது ஏற்படுகிற சுகமே அலாதிதான்.

    இந்தப் புத்தகத்தை எழுதியபோது நான் அந்தச் சுகத்தை அனுபவித்தேன்.

    அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை அவர்களே சொல்லக் கேட்கும்போது, அவர்களோடு பழகிவருபவர்களைச் சந்தித்து அவர்கள் மூலம் சில விவரங்கள் தெரிய வரும்போது, வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு வியர்வை விழுந்திருக்கிறது என்பது புரியும்போது நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம்.

    என் எழுத்து வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டியவர் அமரர் சாவி அவர்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நான் அவருடன் பழகிய அந்தக் கால கட்டத்தில் அவர் பல வெற்றியாளர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகமும், தொடர்ந்து கிடைத்த அவர்களின் நட்பும் எனக்குக் கிடைத்த வரம்.

    நான் பல முறை சாவி ஸாரோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அவரும் நானும் பெரும்பாலும் தங்குவது திரு. யாகூப் அவர்களது வீட்டில்தான். சாவிஸார் தன் வாழ்நாளில் மதங்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தந்ததில்லை. மனங்களுக்கு மட்டுமே தந்திருக்கிறார்.

    அப்படி யாகூப் அவர்களது வீட்டில் தங்கியபோதெல்லாம், அவரைப் பற்றி நிறையவும், அவரது பெரிய குடும்பத்தைப் பற்றியும், அவரது சகோதரர்களைப் பற்றி ஓரளவுக்கும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

    சில காரணங்களால் சகோதரர்கள் பிரிய நேர்ந்தாலும், அவரவர்கள் தனித்தனியாக தொழில் செய்து உயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கிடையே ஓர் அடிப்படை பாச உணர்வு அப்படியேதான் அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.

    சகோதரர்களில் முஸ்தபா அவர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு சிங்கப்பூரில் அவர் பெற்றிருக்கும் சமூக அந்தஸ்தையும், பொருளாதார மேன்மையையும் நான் அறிந்திருந்தேன். எனினும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.

    சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலை என் மதிப்பிற்குரிய நண்பர் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்கு ஃபோன் செய்தார்.

    சிங்கப்பூரில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார். அவர் பெயர் முஸ்தபா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை நீங்கள் புத்தகமாக எழுத வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். நாளை காலை நீங்களும் அவரும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

    மறுநாள் திரு. முஸ்தபா அவர்களை அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தேன்.

    சாவி அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை என்னிடம் சற்று நேரம் பகிர்ந்து கொண்டபின், தன் வாழ்க்கையின் சில நிகழ்ச்சிகளை எனக்குக் கோடிட்டுக் காட்டினார்.

    ‘பதிவு செய்யப்பட வேண்டிய வாழ்க்கை முஸ்தபாவின் வாழ்க்கை’ என்பதை அந்தச் சில நிகழ்ச்சிகளே எனக்குச் சுட்டிக்காட்டின.

    ஒரு புத்தகமாக எழுதப்படும் அளவுக்குத் தான் பெரிய ஆள் இல்லை என்று முஸ்தபா தன்னடக்கத்துடன் கூறினார்.

    ‘யாருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறோம் என்பதைவிட எந்த விதமான வாழ்க்கையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று’ என்று நான் பிடிவாதம் காட்டினேன்.

    என்னை சிங்கப்பூருக்கு அழைத்துச்

    Enjoying the preview?
    Page 1 of 1