Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Justice Jegadeesan
Justice Jegadeesan
Justice Jegadeesan
Ebook262 pages1 hour

Justice Jegadeesan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜஸ்டிஸ் ஜெகதீசனின் வாழ்க்கையிலே இறைவனின் திருவிளையாடலைக் காணலாம். அவர் மருத்துவராக வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டார். திரு. ஜெகதீசனோ, என்ஜினியராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், இறுதியில் இறைவன் அவருக்குக் கொடுத்தது சட்டக் கல்லூரி படிப்புதான். சட்டக் கல்லூரி படிப்பில் வெற்றி பெற்று வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தபிறகு தன் வழக்கறிஞர் தொழிலை பிரபல வழக்கறிஞரான தன் தந்தையுடன் இணைந்து சேலத்திலேயே ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுத்த பொழுது அவருடைய தந்தையின் நண்பர் ஜஸ்டிஸ் கே. வீராசாமி (பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்) சேலம் வந்தபொழுது, திரு. ஜெகதீசனைப் பார்த்து, “உன்னுடைய வழக்கறிஞர் தொழிலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பிக்க வேண்டும்” என்று அன்புக்கட்டளை விடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அவர் சென்னை வந்தபிறகு பிரபல அரசு வழக்கறிஞர் (பின்னால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு தலைமை நீதிபதியாகவும், அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிய) திரு. ஜஸ்டிஸ் வி. ராமசாமி அவர்களுடைய அலுவலகத்தில் இளம் வழக்கறிஞராக சேர்க்கப்பட்டார். சில வருடங்கள் அந்த அலுவலகத்திலும், அதன்பின் இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் திரு. கே. பராசரன் அவர்கள் அலுவலகத்திலும் பயிற்சி பெற்று சட்ட நுணுக்கங்களையும், நீதிமன்ற விதிமுறைகளையும் சிறப்பாகக் கற்றுக்கொண்டு அதன்பின் தனியாக வழக்கறிஞர் தொழிலில் இறங்கி, விரைவில் படிப்படியாக முன்னேற்றம் கண்டார். இந்த நூல் அனைவருக்கும் - முக்கியமாக வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் - மிக்க பயன்தரும் நூலாக உள்ளது. நூலை வாசிப்பவர்கள் அதை நன்கு உணர்வார்கள்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580143106896
Justice Jegadeesan

Read more from Ranimaindhan

Related to Justice Jegadeesan

Related ebooks

Reviews for Justice Jegadeesan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Justice Jegadeesan - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    ஜஸ்டிஸ் ஜெகதீசன்

    (சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் வாழ்க்கை வரலாறு)

    Justice Jegadeesan

    (Chennai Uyar Neethimandra Munnal Neethipathiyin Vazhkkai Varalaru)

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    Justice S. NATARAJAN

    Former Judge,

    Supreme Court of India.

    Phones: 2499 5056/2499 4360

    26, Second Street,

    East Abhiramapuram,

    Mylapore, Chennai - 600 004.

    e-mail: justices.natarajan@gmail.com

    Date : 17.04.2013

    அணிந்துரை

    ‘அவர் என்ன பெரிய ஹைகோர்ட் ஜட்ஜா, அவர் சொல்லுக்கு மறுசொல் இல்லாமல் அனைவரும் கேட்டு நடப்பதற்கு...’ என்று பலர் கேட்கும் கேள்வியை நம்மில் பெரும்பாலோர் கேட்டுள்ளோம்.

    இந்திய நாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று என்பதே இதற்குக் காரணம். இந்த நிலை நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே உள்ளது. அதுவுமின்றி நாடு விடுதலை பெறுவதற்கு முன், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால் இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ரிவி கவுன்சிலுக்குத்தான் போக வேண்டும். ஆகையால் பெரும்பாலான வழக்குகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாக இருந்தது.

    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அந்தப் பதவி மேலும் உயர்வடைந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் தனிப்பட்ட சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டமாக இருந்தாலும் சரி, அல்லது மாநில சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டமாக இருந்தாலும் சரி, அதே போல் மத்திய அரசின் உத்தரவாக இருந்தாலும் சரி, மாநில அரசின் உத்தரவாக இருந்தாலும் சரி, அவைகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் அந்தச் சட்டமோ, அல்லது உத்தரவோ செல்லாது என்று கூறும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதுவுமன்றி ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ நியமித்த பிறகு அவரை எந்த அரசாலும் பணியிலிருந்து நீக்க முடியாது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுத்துள்ளபடி பதவி நீக்குதல் வழிமுறை பிரகாரம்தான் அவரைப் பணியிலிருந்து நீக்கமுடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மையினர் தீர்மானம் செய்து வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றால்தான் பதவி நீக்கம் செய்யமுடியும்.

    இவ்வளவு சிறப்புகள் பெற்ற பதவி தங்களுக்கு கிடைக்காதா என்று மிகப் பல வழக்கறிஞர்கள் ஏங்கும் நிலையில் ஒரு வழக்கறிஞர் மட்டும் அந்தப் பதவி அவரைப் பன்முறை தேடி வந்தும், அதை ஏற்க மறுத்தார் என்றால் அவர் ஒரு வித்தியாசமான, அதிசயமான மனிதராகத்தான் இருக்க வேண்டும். அப்படி தனித்தன்மை வாய்ந்த வழக்கறிஞர் யார் என்றால் அவர்தான் மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜெகதீசன்.

    நீதிபதி பதவியைப் பலமுறை அவர் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அவர் அந்தப் பதவியின் உயர்வை அறியாதவர் என்பதல்ல. அந்தப் பதவிக்காகத் தன்னுடைய சுதந்திரத்தை, கொள்கைகளை விட்டுக் கொடுக்க மனமின்மை காரணமாகத்தான் அவர் நீதிபதி பதவியை ஏற்க மறுத்தார். இதிலிருந்தே அவருடைய கொள்கைப் பிடிப்பு, மன உறுதி, தன்னம்பிக்கை, பதவி மோகமின்மை போன்ற சீரிய குணங்களை நாம் தெரிந்துகொள்ளலாம். பதவி மோகமின்மை என்பது அவரது இரத்தத்தில் ஊறிய குணம் என்று சொல்லலாம். ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் அவருடைய தந்தையார் பிரபல வழக்கறிஞர் திரு. சங்கர முதலியார் அவர்கள் தனக்குக் கொடுக்கப்பட்ட சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதவியை எனக்கு விட்டுத்தர முன்வந்தார்கள். ஆகையால் தந்தைவழி வந்த மகன் நீதிபதி பதவியை முதலில் ஏற்க மறுத்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

    ஜஸ்டிஸ் ஜெகதீசனின் வாழ்க்கையிலே இறைவனின் திருவிளையாடலைக் காணலாம். அவர் மருத்துவராக வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டார். திரு. ஜெகதீசனோ, என்ஜினியராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், இறுதியில் இறைவன் அவருக்குக் கொடுத்தது சட்டக் கல்லூரி படிப்புதான். சட்டக் கல்லூரி படிப்பில் வெற்றி பெற்று வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தபிறகு தன் வழக்கறிஞர் தொழிலை பிரபல வழக்கறிஞரான தன் தந்தையுடன் இணைந்து சேலத்திலேயே ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுத்த பொழுது அவருடைய தந்தையின் நண்பர் ஜஸ்டிஸ் கே. வீராசாமி (பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்) சேலம் வந்தபொழுது, திரு. ஜெகதீசனைப் பார்த்து, உன்னுடைய வழக்கறிஞர் தொழிலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அவர் சென்னை வந்தபிறகு பிரபல அரசு வழக்கறிஞர் (பின்னால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு தலைமை நீதிபதியாகவும், அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிய) திரு. ஜஸ்டிஸ் வி. ராமசாமி அவர்களுடைய அலுவலகத்தில் இளம் வழக்கறிஞராக சேர்க்கப்பட்டார். சில வருடங்கள் அந்த அலுவலகத்திலும், அதன்பின் இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் திரு. கே. பராசரன் அவர்கள் அலுவலகத்திலும் பயிற்சி பெற்று சட்ட நுணுக்கங்களையும், நீதிமன்ற விதிமுறைகளையும் சிறப்பாகக் கற்றுக்கொண்டு அதன்பின் தனியாக வழக்கறிஞர் தொழிலில் இறங்கி, விரைவில் படிப்படியாக முன்னேற்றம் கண்டார்.

    நல்லறிவும், நல்ல அனுபவமும் பெற்று வழக்கறிஞராக தொழில் செய்ய ஆரம்பித்ததால், வெகுவிரைவில் பதவிகள் அவரைத் தேடி வந்தன. வீட்டு வசதி வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும், அதன்பின் அரசு வழக்கறிஞர் பதவியும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தப் பதவிகளை வகித்தபொழுது தமிழக அரசும், மற்ற அரசு சார்ந்த நிறுவனங்களும் தன்னுடைய கட்சிக்காரர்கள்தான் என்றும், தான் அவர்களின் அலுவலர்களில் ஒருவன் அல்ல என்றும் ஓர் உணர்வை எப்பொழுதும் மனதில் வைத்து வழக்குகளை நடத்தி வந்தார். அதன் காரணமாக தனக்கு நியாயமாகத் தோன்றும் வாதங்களைத்தான் எழுப்புவார். அரசு அதிகாரிகளோ அல்லது மற்ற நிர்வாக அதிகாரிகளோ கேட்டுக்கொண்டால்கூட தவறான வாதங்களை முன்வைக்க மாட்டார்.

    ஒரு கட்டத்தில் அந்த அதிகாரிகள் தங்கள் கூற்றையே திரு. ஜெகதீசன் அவர்கள் வாதமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றபொழுது, அந்த அரசு பதவிகள் தனக்கு வேண்டாம் என்று சொல்லி அந்தப் பதவிகளை ராஜினாமா செய்து தன்னுடைய உயர்ந்த கொள்கைகளையும், தொழில் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டார்.

    திரு. ஜெகதீசன் அவர்களின் சட்ட அறிவும், வாதத் திறமையும், உயர்ந்த கொள்கைகளும் அவருக்கு உயர்ந்த மதிப்பைத் தேடிக் கொடுத்தன. ஆகையால் தலைமை நீதிபதிகள் அவரை எப்படியாவது உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக இருக்கச் செய்ய வேண்டும் என்ற நினைவில் அவருக்குப் பலமுறை அழைப்புகள் விடுத்தனர். ஆனால் திரு. ஜெகதீசன் அவர்கள் தன்னுடைய சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்க மனமில்லாததால் அவர் அவ்வழைப்புகளை ஏற்க, பலமுறை மறுத்தார். இறுதியிலே அவருடைய சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்ற உறுதி பெற்றபின் அவர் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

    பலமுறை அழைப்பு வந்தபிறகே, நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட ஜஸ்டிஸ் ஜெகதீசன் மீது தலைமை நீதிபதிகள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. பதவி ஏற்ற முதல் நாளிலிருந்தே ஜஸ்டிஸ் ஜெகதீசனுடைய செயல்பாடுகள் சிறப்பாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் இருந்தன. வழக்காளர்களின் கால விரயம், கட்டுக்கடங்காத செலவுகள், வீண் அலைச்சல் போன்றவைகளை மனதில் கொண்டு, ஜஸ்டிஸ் ஜெகதீசன் அவர்கள் வழக்குகளை விசாரிப்பதில் கண்டிப்புடனும் அதே நேரத்தில் கனிவுடனும் தன் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். காலம் கடத்தாமல் வழக்குகளை விசாரித்து கருணையுடன் கூடிய சட்டப்பூர்வமான தீர்ப்புகளை வழங்கினார். பொய் வழக்குகள், ஏமாற்று வேலைகள், திட்டமிட்டு காலங்கடத்தல், சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் வழக்குகளின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுதல், அனுகூலமான உத்தரவு கிடைக்க வாய்ப்பு இல்லையென்றால் வேறு கோர்ட்டுக்கு வழக்கை மாற்றும் முயற்சி போன்ற காரியங்கள் ஜஸ்டிஸ் ஜெகதீசனிடம் பலிக்காது. தாங்கள் வழக்கறிஞர்கள் என்று போலி வேடம் தரித்து செயல்பட்டு வந்த ஒரு கும்பலை துப்பறியும் கண்ணோடு கண்டுபிடித்து அவர்களை அடிபணிய வைத்து அவர்கள் வேடத்தை கலைத்த பெருமை அவருக்குண்டு. எவ்வளவு கடினமான வழக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை எளிதாக தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து, அந்த வழக்குகளை முடிக்கும் திறமை பெற்றவர். சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் வரை ஒரு வழக்கை கொண்டு போய் அங்கும் தோல்வி அடைந்த பிறகு மீண்டும் கற்பனைக் காரணங்கள் அடிப்படையில் அந்த வழக்கைத் தொடர முயற்சித்தால் அம்மாதிரியான முயற்சிகளை முளையிலே கிள்ளி எறிந்து விடுவார்.

    முப்பது ஆண்டுகள் வழக்கறிஞராகவும், ஒன்பது ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஜஸ்டிஸ் ஜெகதீசன் ஓய்வுபெறும் நிலைக்கு வந்தபொழுது அவருக்கு சிறப்பான மற்றொரு பதவி காத்திருந்தது. அதுதான் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியாகும். அந்தப் பதவி இந்தியாவிலேயே முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பதவி அனைத்து இந்தியாவிற்கும் ஒரே பதவியாகும். முதல் முறையாகத் தோற்றுவிக்கப்பட்ட பதவியானதால் அந்த அமைப்பின் விதிமுறைகள் அனைத்தையும் ஜஸ்டிஸ் ஜெகதீசனே உருவாக்க வேண்டியிருந்தது. அந்தப் பணியையும் சிறப்பாகச் செய்தார். அந்தப் பதவி வகித்த காலத்தில் இந்தியாவில் பல்வேறு பாகங்களில் தேங்கிக் கிடந்த பல வழக்குகளை எடுத்து அவற்றிற்கெல்லாம் நல்ல தீர்ப்புகள் வழங்கி தனக்கு மேலும் புகழ் சேர்த்துக்கொண்டார்.

    ஜஸ்டிஸ் ஜெகதீசன் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய பணிகளை விருப்பு வெறுப்பின்றி சிறப்பாகச் செய்தார் என்று அனைவரும் போற்றினர். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களுடைய மதிநுட்பத்தையும், செயல் திறமையையும், நேர்மையையும் போற்றினார்கள் என்றாலும் விஷமிகள் சிலர் அவரிடம் குறை கண்டார்கள். ஆனால் ஜஸ்டிஸ் ஜெகதீசன் போற்றுதலுக்கு வேண்டியோ, அல்லது தூற்றுதலுக்குப் பயந்தோ என்றும் செயல்பட்டதில்லை என்னும் பெருமையை நிலைநாட்டினார். எப்பொழுதும் இன்முகமும், இன்சொல்லும் கொண்ட அவர் எவருக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு உதவிக்கரம் நீட்ட தயங்கியதில்லை. வழக்கறிஞர்களுக்கும், நீதி அரசர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக தன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்.

    உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி மிகப் பொறுப்புள்ள கடினமான பதவி. அந்தப் பதவியை வகிப்பவர்களுக்கு வேறு அமைப்புகளுக்குப் பணி செய்ய கால அவகாசம் கிடைப்பது மிகவும் குறைவு. அப்படியிருந்தும் ஜஸ்டிஸ் ஜெகதீசன் தன்னுடைய பதவிக் காலத்தில் பல அமைப்புகளுக்கு தலைமை வகித்ததுடன் பெருமளவு சமூகப் பணிகளும் செய்து வந்தார். அவற்றில் முக்கியமான பணி என்ன வென்றால் அவர் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரிக்குத் தலைமை பொறுப்பு ஏற்று பத்தாண்டுகள் சிறப்பான பணிகளைச் செய்து சாதனை புரிந்ததுதான். எம்.பி.ஏ. பிளாக், பெரிய நூலகம், மாணவியர் விடுதி போன்றவைக்கான பிரம்மாண்டமான கட்டடங்கள் உருவாக்கிக் கொடுத்தார். நான் அக்கல்லூரி தலைவராக பதினெட்டு ஆண்டுகள் இருந்துள்ளேன். நான் ஆற்றிய பணிகளைவிட ஜஸ்டிஸ் ஜெகதீசன் சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார் என்று சொல்வதில் நான் பெருமைகொள்கிறேன்.

    பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றபிறகு அவருடைய இலக்கிய சமூகப் பணிகள் பன்மடங்காக அதிகரித்துவிட்டன. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஒருவர் வழக்கறிஞராக இருந்து பிறகு நீதிபதியாக உயர்ந்து, அனைவராலும் போற்றப்படும் நிலையை அடைந்தார் என்றால் அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு நூல் வடிவமாகக்கொண்டு வருவது மிகப் பொருத்தமாகும். இந்த நூல் அவருக்குப் புகழ் சேர்ப்பதற்கு அல்ல. ஆனால் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரும் பொருட்டுதான் இப்படிப்பட்ட ஒரு நூல் தேவையாகியுள்ளது. அந்தச் சிறந்த பணியை புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் திரு. ராணிமைந்தன் அவர்கள் போற்றத்தக்க வகையில் இந்த நூலின் மூலம் செய்துள்ளார்கள். வரலாற்று நூலைப் படிக்கும் பொழுது, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நம் கண்முன்னே நடந்தது போல் திறமையாக அனைவரும் பாராட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

    இந்த நூல் அனைவருக்கும் - முக்கியமாக வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் - மிக்க பயன்தரும் நூலாக உள்ளது. நூலை வாசிப்பவர்கள் அதை நன்கு உணர்வார்கள். இந்தச் சிறந்த நூலுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்குப் பெருமையும், மனமகிழ்ச்சியையும் தருகிறது.

    ஜஸ்டிஸ் எஸ். நடராஜன்,

    உச்ச நீதிமன்ற

    Enjoying the preview?
    Page 1 of 1