Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Elumboodu Oru Vazhkai
Elumboodu Oru Vazhkai
Elumboodu Oru Vazhkai
Ebook261 pages1 hour

Elumboodu Oru Vazhkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் மிகச் சிலரைப் பற்றி எனக்குத் தோன்றுவதுண்டு. அப்படிப்பட்ட மிகச் சிலரில் டாக்டர் மயில்வாகனன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

இவரைப் போன்ற மிகப் பிரபலமான முக்கியப் பிரமுகர்களைச் சென்று சந்திப்பது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழும். நேராகப் போய் கதவைத் தட்டி, 'உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுத வந்திருக்கிறேன்' என்று சொன்னால் அனுமதி கிடைக்குமா என்ன? அதற்கு முறையாக நான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அப்படி என்னை அறிமுகப்படுத்துபவர் அவருக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும். என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

டாக்டர் மயில்வாகனன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டு காத்திருந்தேன். இந்த நூலை எழுதி முடித்ததும் ‘எப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை இவருடையது’ என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது.

இந்த நூலைப் படித்து முடித்ததும் உங்களுக்கும் அந்த வியப்பு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580143106885
Elumboodu Oru Vazhkai

Read more from Ranimaindhan

Related to Elumboodu Oru Vazhkai

Related ebooks

Reviews for Elumboodu Oru Vazhkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Elumboodu Oru Vazhkai - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    எலும்போடு ஒரு வாழ்க்கை

    Elumboodu Oru Vazhkai

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    வாழ்க்கையில் அனுபவங்கள் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பது இல்லை.

    இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அனுபவங்கள் இருக்கவே செய்யும்.

    நபருக்கு நபர் இந்த வாழ்க்கை அனுபவங்கள் வித்தியாசப்படும், அவ்வளவுதான்.

    சராசரி மனிதனுக்கு ஏற்படும் அனுபவங்களிலிருந்து என் வாழ்க்கை அனுபவங்கள் சற்றே வேறுபட்டவை என்பது உண்மை.

    என் தந்தையார் டாக்டர் எம்.நடராஜன் அவர்கள் அவருடைய காலகட்டத்தில் முடநீக்கியல் துறையில் தமிழகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி கோலோச்சிய மிகச் சிறந்த சர்ஜன் ஆவார்.

    என்னை வளர்த்த முறையில், நானும் அதே ஆர்த்தோபீடிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் கட்டாயப்படுத்தாமல் விதைத்தவர் அவர்.

    ஒருவிதமான ராணுவ ஒழுக்கத்துடன் நானும் என் உடன்பிறந்தோரும் வளர்க்கப்பட்டோம்.

    அந்த ஒழுக்கம் எனக்குப் பிடித்துப் போயிற்று. எனவே, அது என் இயல்பாகவே என்னிடம் ஒன்றிப் போயிற்று.

    சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசினர் பொது மருத்துவ மனையோடு ஒரு மாணவனாகவும், பின் பேராசிரியராகவும் நான் தொடர்பு கொண்டிருந்த இருபத்தாறு ஆண்டுகளை என் வாழ்க்கையின் பொற்காலம் என்பேன்.

    ஏழை எளிய மக்கள் முடநீக்கியல் பிரிவில் சேர்க்கப்படும் போது அவர்கள் படும் பாட்டையும், அவர்களின் குடும்பத்தினரின் மன வேதனையையும் அருகிலிருந்து உணர்ந்தவன் நான்.

    அதிலும் குறிப்பாக, எலும்பில் புற்றுநோய் என்று வந்து விட்டால் கையையோ, காலையோ எடுப்பதைத் தவிர வேறு மாற்றுச் சிகிச்சை இல்லை என்றிருந்த அன்றைய நிலை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

    அதன் விளைவாக நான் வடிவமைத்து, உருவாக்கி இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியதுதான் 'கஸ்டம் மெகா புராஸ்திஸிஸ்' என்ற மருத்துவப் பெயர் கொண்ட உலோக செயற்கை எலும்பு இணைப்பைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை.

    என் மருத்துவ வாழ்க்கையில் எனக்குக் கிட்டிய அனைத்து அங்கீகாரங்கள், விருதுகள், பட்டங்களுக்கு அந்தக் கண்டுபிடிப்பே காரணம்.

    சரி, இதனால் எல்லாம் என் வாழ்க்கை ஒரு நூலாக எழுதப்படும் அளவுக்குத் தகுதி பெற்றுவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    நண்பர்களும், சக மருத்துவர்களும், நெருக்கமானவர்கள் பலரும் 'உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டிய ஒன்று' என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

    என் நெருங்கிய நண்பர் திரு. எஸ்.டி. மார்க்கண்டேயன் அவர்கள் என் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை இலட்சியப் பயணம் என்கிற தலைப்பில் ஒரு நூலாக 2012இல் பதிவு செய்து வெளியிட்டார். அதே போல என் தந்தையைப் பற்றி 2015இல் டாக்டர் எஸ்.ஜீவராஜன் அவர்கள் எழுதிய 'என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம்.நடராஜன்' என்ற நூலில் என்னைப் பற்றியும் சில குறிப்புகளைத் தந்திருந்தார். இந்த இருவரும் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்லர் என்ற உண்மையை மனதில் கொள்ள வேண்டும். ஆர்வத்தின் அடிப்படையில், அவர்களாக மேற்கொண்ட முயற்சி அது.

    என் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையான நூல் வெளியாக வேண்டும் என்று என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் தங்கள் ஆசையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

    அந்தச் சமயத்தில்தான் எனக்கு திரு. ராணிமைந்தன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதற்கு முன் நான் அவரைப் பற்றிப் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

    தன்னைப் பற்றிய குறிப்புகளை அவர் என்னிடம் கொடுத்தார். அதைப் பார்த்தபோது, நான் பெரிதும் மதிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பற்றிய வரலாற்றை நூலாக எழுதியவர் அவர் என்பதைப் புரிந்துகொண்டேன்.

    'உங்கள் பயோகிரஃபியை நான் எழுத விரும்புகிறேன்' என்று அவர் கேட்டபோது, என்னால் மறுக்க முடியவில்லை.

    என் அனுமதியுடன் அவர் அந்தப் பணியை மேற்கொண்டார். பலமுறை என்னை வந்து அவர் சந்தித்தார். பல கேள்விகளைக் கேட்டார்.

    ஏற்றுக்கொண்ட பணியில் அவர் கொண்ட ஈடுபாடும், காட்டிய ஆர்வமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவருக்கு என் பாராட்டுகள்.

    எழுதி முடித்து கையெழுத்துப் பிரதியை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.

    படித்துப் பார்த்தேன். அருமையாக எழுதியிருந்தார். என் வாழ்க்கை எனக்கே சற்று வியப்பளித்தது.

    நாம் ஏதோ சாதித்திருக்கிறோம் என்ற நிறைவு அதைப் படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

    நான் என் தொழிலில், என் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு அந்த நிறைவு என்னை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த நூலின் முக்கிய நோக்கம் என்னை விளம்பரப்படுத்திக் கொள்வது அல்ல. அப்படிப்பட்ட விளம்பரம் எனக்குத் தேவையுமில்லை. அந்த அவசியம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதும் இல்லை.

    ஆயிரக்கணக்கான நோயாளிகள், அறுவைச் சிகிச்சைகள், தனியொரு அறுவைச் சிகிச்சை நிபுணராக நான் செய்த 'கஸ்டம் மெகா புராஸ்திஸிஸ்' (Custom Mega Prosthesis) ஆபரேஷன்கள் மட்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் (இந்த ஆபரேஷன் பற்றி இந்த நூலில் விவரமாக எழுதப்பட்டிருக்கிறது) என்று ஆன பிறகு எனக்கு எதற்கு விளம்பரம்?

    ஆணோ, பெண்ணோ சிறிய வயதிலிருந்து படிப்பு, படிப்பு என்று கல்வியில் கவனம் செலுத்தினால், அதன் பிறகு தன் அலுவலகத்திலோ அல்லது தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறையிலோ வேலை வேலை என்று கவனம் செலுத்தினால், புதிதாக எதையேனும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று கவனம் செலுத்தினால் பெரிய வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை படிப்பவர்கள் மனங்களில் இந்த நூல் ஏற்படுத்துமேயானால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறில்லை.

    நண்பர் ராணிமைந்தன் அவர்களை மீண்டும் பாராட்டி மகிழ்கிறேன்.

    நூலைப் பற்றிய தங்கள் கருத்துகளை எனக்கு அவசியம் தெரிவியுங்கள்.

    நன்றி.

    - டாக்டர் மயில்வாகனன்

    4, Lakshmi Street,

    (Off New Avadi Road)

    Kilpauk, Chennai 600010.

    Cell: 9791019743

    Email: drmayilnatarajan@me.com

    Website: www.bonetumour.in

    வணக்கம்

    இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் மிகச் சிலரைப் பற்றி எனக்குத் தோன்றுவதுண்டு.

    அப்படிப்பட்ட மிகச் சிலரில் டாக்டர் மயில்வாகனன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.

    இவரைப் போன்ற மிகப் பிரபலமான முக்கியப் பிரமுகர்களைச் சென்று சந்திப்பது எப்படி என்ற கேள்வி எனக்குள் எழும். நேராகப் போய் கதவைத் தட்டி, 'உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுத வந்திருக்கிறேன்' என்று சொன்னால் அனுமதி கிடைக்குமா என்ன?

    அதற்கு முறையாக நான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அப்படி என்னை அறிமுகப்படுத்துபவர் அவருக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும். என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

    டாக்டர் மயில்வாகனன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டு காத்திருந்தேன்.

    சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தொன்றில் என் இளைய மருமகள் திருமதி லாவண்யா அவர்களின் வலது கால் முட்டிக்குக் கீழே தசை நார்கள் கிழிபட்டபோது என் சம்பந்தி அம்மாள் திருமதி நிர்மலா அவர்கள் தன் மகளைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றது டாக்டர் மயில்வாகனன் அவர்களிடம்தான்.

    நானும் உடன் சென்றிருந்தேன்.

    என் மருமகள், அவருடைய தாயார் இருவருக்கும் டாக்டரிடம் ஏற்கனவே சற்று பரிச்சயமிருந்தது.

    பார்த்தவுடன் புரிந்து கொள்ளுமளவுக்குப் பரிச்சயம்.

    சில நாட்கள் தொடர்ந்து நாங்கள் டாக்டர் மயில்வாகனன் அவர்களைச் சந்தித்தோம்.

    அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என் மருமகள் தேறி வந்த நிலையில் ஒரு நாள் இருவரும் டாக்டருக்கு என்னை முறையாக அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

    அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 'நான் உங்கள் பயோகிரஃபியை எழுத விரும்புகிறேன், டாக்டர்' என்றேன்.

    அவர் என்னைப் பார்த்தார்.

    எதற்கும் இருக்கட்டும் என்று நான் என்னுடன் கொண்டு போயிருந்த என்னைப் பற்றிய குறிப்புத்தாளை அவர் முன் வைத்தேன்.

    நான் இதுவரை எழுதிய நூல்களின் பட்டியல் அதில் இருந்தது. அதை நோட்டமிட்டவர், 'அட! அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட்டைப் பற்றி எழுதியவர் நீங்கள் தானா? அப்புறமென்ன?' என்றார்.

    அந்தக் கேள்வி, 'சரி, எழுதுங்கள்' என்று அவர் தந்த அனுமதியையும் எனக்குத் தெரிவித்தது.

    பின்னர் திட்டமிட்டோம்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலையில் நான் டாக்டர் மயில்வாகனன் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

    கேட்ட கேள்விகளுக்குச் சற்றும் சளைக்காமல் பதில் தந்தார்.

    தன் வெற்றி, தோல்வி, ஏற்றம், ஏமாற்றம் என்று அனைத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

    நான் மகிழ்ந்தேன்.

    எம். என். முடநீக்கியல் மருத்துவமனையில் ஒரு சர்ஜனாக நான் பார்த்த டாக்டர் மயில்வாகனன் அவர்களுக்கும், வீட்டில் பார்த்த டாக்டர் மயில்வாகனன் அவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அடேயப்பா!

    ஒரு குழந்தை போல என்னிடம் பழகினார். ஒரு நல்ல நண்பராக நட்பை வெளிப்படுத்தினார்.

    நான் துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிக இயல்பாக பதில் தந்தார்.

    எழுதி முடித்தபோது ஒரு நல்ல வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறோம் என்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டது.

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா அம்மையாருக்கு நான் ஒரு விதத்தில் நன்றி சொல்ல வேண்டும். அந்த மருத்துவமனையின் வரலாற்றை நான் எழுத அம்மையார் அவர்கள் அனுமதித்து, நான் எழுதி, ‘அடையாறில் இன்னோர் ஆலமரம்’ என்ற அந்தப் புத்தகத்தை டாக்டர் மயில்வாகனன் அவர்கள் படித்ததன் காரணமாக என்னைப் பற்றிய நம்பிக்கை ஏற்பட்டதால் தான் அவர் எனக்கு அனுமதியளித்தார். எனவே, சாந்தா அம்மையாருக்கு என் முதல் நன்றி.

    என் நன்றிக்குரிய மேலும் சிலர்:

    - என்னை டாக்டர் மயில்வாகனன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த என் சம்பந்தி அம்மாள் திருமதி நிர்மலா அவர்கள் மற்றும் என் இளைய மருமகள் திருமதி லாவண்யா அவர்கள்;

    - இந்த நூலை நேர்த்தியாக பதிப்பித்திருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் வானதி ராமநாதன் அவர்கள்;

    - என் கையெழுத்துப் பிரதியை அழகாக டைப்செட் செய்து தந்த நண்பர் செல்வின் அவர்கள்;

    - தேவையான புகைப்படங்களைச் சேகரித்துத் தந்த திருமதி ப்ரீத்தா பாபி அவர்கள்.

    நூலை எழுத அனுமதி தந்த பிறகு பிரமாதமாக ஒத்துழைப்பு நல்கிய நூலின் நாயகர் டாக்டர் மயில்வாகனன் அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.

    இந்த நூலை எழுதி முடித்ததும் ‘எப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை இவருடையது’ என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது.

    இந்த நூலைப் படித்து முடித்ததும் உங்களுக்கும் அந்த வியப்பு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.

    இந்த நூலைப் பற்றிய தங்கள் கருத்துகளை டாக்டர் மயில்வாகன் அவர்களுக்கோ, எனக்கோ அல்லது இருவருக்குமோ வாசகர்கள் எழுதியனுப்பினால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?

    நன்றி.

    - ராணிமைந்தன்

    7, மணவாளன் தெரு,

    வெற்றிநகர் எக்ஸ்டன்ஷன்,

    சென்னை 600 082

    தொலைபேசி: 26713643

    கைபேசி: 9381025834

    உள்ளே...

    1. குடும்பப் பின்னணி

    2. தந்தையின் பெருமை

    3. மாணவன் மயில்வாகனன்

    4. சென்னை மருத்துவக் கல்லூரியில்...

    5. மாப்பிள்ளை மயில்வாகனன்

    6. ‘ஆர்த்தோ’வில் எம்.எஸ் படிப்பு

    7. லிவர்பூல் பல்கலைக்கழகம்

    8. இங்கிலாந்து நாட்கள்

    9. சென்னை அரசு பொது மருத்துவ மனையில்...

    10. ஆராய்ச்சிக்கு வித்திட்ட ஜி.எச்

    11. அடையாறு புற்று நோய் மருத்துவமனை

    12. சொந்தமாக வடிவமைப்பு

    13. எலும்பு வங்கி

    14. துணைவேந்தர் மயில்வாகனன்

    15. ஆன்மிக உணர்வு

    16. அறக்கட்டளை ஒன்று

    17. சில தருணங்கள்

    18. விருதுகள் - பட்டங்கள்

    19. அற்புதமான குடும்பம்

    20. இவர்கள் சொல்கிறார்கள்

    21. மயில்வாகனன் இன்று...

    1. குடும்பப் பின்னணி

    அன்றைக்கு அது ஒரு சிறிய கிராமம்.

    மதுரையிலிருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் தூரம். மாவட்டம் என்று பார்த்தால் ராமநாதபுரம். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட வேளாண் பூமி.

    'கவின்மிகு முல்லைத் திருநகர்' என்பது அந்தக் கிராமத்தின் பெயர். தமிழ்நாட்டில் இந்தப் பெயரில் ஒரு கிராமம்

    Enjoying the preview?
    Page 1 of 1