Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Basravilirunthu Danielin Dairy Kurippugal...
Basravilirunthu Danielin Dairy Kurippugal...
Basravilirunthu Danielin Dairy Kurippugal...
Ebook260 pages1 hour

Basravilirunthu Danielin Dairy Kurippugal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘பாஸ்ராவிலிருந்து...’ சிறுகதையை வாசித்துவிட்டு ஒருவர், கதையின் ஆசிரியரை கிருத்துவர் என்று நினைத்து ‘கூடுதலான மதப்பிரச்சாரம்’ என விமர்சித்தார். ‘ஃபாத்திமாவும்...’ சிறுகதையை வாசித்துவிட்டு, மசூதிகளில் வகுப்பெடுக்கும் மதப்போதகர் ஒருவர் தொலைபேசியில் ‘இவர் நிச்சயம் இஸ்லாமியராகத்தான் இருக்க வேண்டும்’ என்றார். ‘பிராது’ கதையை வாசித்த இன்னொருவர் இந்த எழுத்தாளர் சிலகாலமாவது ஆன்மீக மடத்தில் கழித்திருக்கலாம் என்று கருதியதாகக் கூறினார். உண்மையில் ஒரு படைப்பாளி நீரைப்போல… தான் அடைபட்ட கலன்களின் வடிவத்திற்கேற்பத் தன்னை வடிவமைத்துக் கொள்கிறவன். தேவைப்படும்போது மீறுவதும் அவன் இயல்பு. இந்தப் புத்தகம் எழுத்தாளரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு வித்தியாசமான உத்திகளில் வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்...

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580159009221
Basravilirunthu Danielin Dairy Kurippugal...

Read more from Neyveli Bharathikumar

Related to Basravilirunthu Danielin Dairy Kurippugal...

Related ebooks

Reviews for Basravilirunthu Danielin Dairy Kurippugal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Basravilirunthu Danielin Dairy Kurippugal... - Neyveli Bharathikumar

    http://www.pustaka.co.in

    பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்...

    Basravilirunthu Danielin Dairy Kurippugal...

    Author:

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்...

    2. ரெண்டுங்கெட்டான்

    3. அந்த ‘மூன்று’ நாட்கள்

    4. வினாக்களுக்குப் பொருத்தமான விடையளி

    5. படிக்கத்தெரியாத மூர்த்தி எம்.ஏ.வுக்கு

    6. அய்யனார் உறக்கப் பாட்டு

    7. சுடுநிழல்

    8. ஆடிஸம்

    9. நவம்

    10. பத்தும் பத்தாததும்

    11. பிடிபட்டவன்

    12. இது பொது வழி அல்ல

    13. பிராது

    14. கனவுகளின் நிறம் நீலம்

    15. இந்த நிகழ்ச்சியை உங்களுக்குத் தயாரித்து வழங்குபவர்கள்...

    16. இனி ஒரு விதி

    17. ம்... ம்... ம்மா

    18. கண்ணுக்குப் புலப்படாத வண்ணங்கள்

    19. இந்தியச் சோறு

    20. உள் மன ஓசைகள்

    21. ராசா வேசம்

    22. பரபரப்பான புதிய தகவல்கள்

    23. ஃபாத்திமாவும், ஃபவுண்டன் பேனாவும்

    24. சுவரில் எழுதாதீர்

    சமர்ப்பணம்

    எனக்கு எல்லாமுமாக இருக்கிற என்னுடைய துணைவியார் ஆதிலட்சுமி என்கிற வசந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம்

    நன்றி

    என்னுடைய இரண்டாம் சிறுகதைத் தொகுப்பான இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவர உதவிய புஸ்தகா நிறுவனத்தின் இயக்குனர் திரு ராஜேஷ், புஸ்தகா நிறுவனத்தின் சசிகலா, சனா மற்றும் இந்த நூலை வடிவமைத்த சகோதரி, அச்சிட்டு நூலாக்கிய சகோதரர்கள், புஸ்தகாவை அறிமுகம் செய்த கவிஞர் சுமதி சங்கர் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    கண்ணீரை விதைக்கின்றேன்

    ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்த மனித வாழ்வு சுமைகளோடு திரிந்து கொண்டிருக்கிறது. சிலவற்றை இறக்கமுடியாமல்... சிலவற்றை ஏற்ற முடியாமல்... ஜன்னல்வழி தென்படுகிற புறவுலகம் நம்மை வெறும் பார்வையாளனாக மட்டும் இருந்திட அனுமதிப்பதில்லை.

    தருதலும், பெறுதலும் நம் எல்லா சுகதுக்கங்களுக்கும் அடிப்படைக் கர்த்தாக்களாக இருக்கின்றன. பதிவுகளற்ற பிறவி அர்த்தமற்றதாகிவிடுகிறது. நமக்கான சுவடுகளைப் பதிவுசெய்ய, இருக்கின்ற தடங்களில் பயணிக்கின்றோம். எதிர்ப்படும் தடங்கல்கள் நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்தியபடி இருக்கின்றன. இறுகிய மனம், இறக்கும் வரை அவற்றை ஏதேனும் ஒரு தோளில் இறக்கிவிட எத்தனிக்கின்றது. படைப்பிலக்கியம் துவங்கும் புள்ளி இதுதான்.

    புள்ளிகளிலிருந்து தொடங்கும் கோடுகளை பலரும் பலவிதமாக அர்த்தப்படுத்திக்கொள்கின்றனர். அவரவர் அர்த்தத்தில் அவரவர் பாதை தெரிகின்றது... தெளிகின்றது... இருக்கும் இடத்திலிருந்து அவர்களை ஏதேனும் ஒரு திசையில் அசைக்கின்றது. காலவெளித் தாண்டியும் இந்த இயக்கத்தை நிகழ்த்துகிற எந்த இலக்கியமும் வெற்றிபெற்றதாகக் கருதுகிறேன்.

    அந்தத் தொடர் இயக்கத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடே என் படைப்புகள். என் முந்தைய நூலான முற்றுப்பெறாத மனுவிற்கு - (2002) பிறகு இந்த இடைவெளி நீண்டதாகத் தோன்றலாம். பதப்படுதலுக்கான காலம் அந்த இடைவெளியைத் தீர்மானிக்கின்றது. முற்றுப்பெறாத மனுவிலிருந்து சில அடிகளாவது நகர்ந்திருக்கிறேன் என்பதை வாசிப்பவர்கள் உணர முடிந்தால் அதுவே எனக்குத் திருப்தி.

    ‘பாஸ்ராவிலிருந்து...’ வாசித்துவிட்டு ஒருவர், என்னை கிருத்துவர் என்று நினைத்து ‘கூடுதலான மதப்பிரச்சாரம்’ என விமர்சித்தார், ‘ஃபாத்திமாவும்...’ சிறுகதையை வாசித்துவிட்டு, மசூதிகளில் வகுப்பெடுக்கும் மதப்போதகர் ஒருவர் தொலைபேசியில் ‘நீங்கள் நிச்சயம் இஸ்லாமியராகத்தான் இருக்க வேண்டும்’ என்றார். ‘பிராது’ கதையை வாசித்த இன்னொருவர் நான் சிலகாலமாவது ஆன்மீக மடத்தில் கழித்திருந்தவன் என்று கருதியதாகக் கூறினார். உண்மையில் ஒரு படைப்பாளி நீரைப்போல... தான் அடைபட்ட கலன்களின் வடிவத்திற்கேற்பத் தன்னை வடிவமைத்துக் கொள்கிறவன். எல்லா நிறை, குறைகளையும் உள்ளடக்கிய, இரத்தமும் சதையுமான மனிதன் நான் என்பதே உண்மை.

    ஒரு படைப்பு உருவாவதற்கு எப்படி சக மனிதர்கள் காரணமாக இருக்கின்றார்களோ, அதைப்போல ஒரு படைப்பு வெளிவரவும் பலர் காரணமாக இருக்கின்றனர். அவர்களை நன்றிப் பெருக்கோடு நினைவு கூற இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    என்னை வளர்த்து ஆளாக்கி பெருமிதத்தோடு என் வளர்ச்சியைக் கவனிக்கின்ற என் பெற்றோர் சண்முகம், சாந்தா ஆகியோருக்கும், என்னால் ஏற்படும் சகல அசௌகர்யங்களையும் சகித்துக்கொண்டு என் இயல்பு கெடாமல் என்னை இயங்க அனுமதிக்கின்ற என் மனைவி ஆதிலட்சுமி, குழந்தைகள் ப்ருத்வி மதுமிதா, சிபிக்குமார் ஆகியோருக்கும், தமிழை என்னுள் விதைத்த என் ஆசிரியர்கள், தனித்தனியே பெயர் குறிப்பிட்டால் இடம் போதாத அளவுக்கு நீண்ட பட்டியல்கொண்ட என் நண்பர்கள் வட்டாரம்... அவர்களுக்கும், இலக்கிய முன்னோடிகளுக்கும், என் சக படைப்பாளிகளுக்கும் என் நன்றி!

    வெகுஜன இதழ்களில் மட்டுமே என் ஆரம்பகாலப் படைப்புகள் பிரசுரமாயின. சிற்றிதழ்களில் வெளியாக நான் முயற்சித்த அந்த நிமிடத்திலிருந்து, இந்த கணம் வரை என் படைப்புகளைப் பிரசுரித்து உற்சாகமூட்டி வரும் ‘சௌந்தரசுகன்’ இதழாசிரியர் திரு. சுகன் அவர்களுக்கும், இன்ன பிற படைப்புகளை வெளியிட்டு என்னைக் கௌரவித்த இனிய உதயம், கல்கி, இலக்கியப்பீடம், தேவி, நிவேதிதா, கணையாழி, நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களுக்கும், மற்றும் நெய்வேலி மந்தாரக்குப்பம் ஜேசீஸ் அமைப்பு, ராசீ அறக்கட்டளை (திண்டிவனம்) ஆகியோருக்கும் என் நன்றி!

    என் இலக்கியப் பணிகளைத் தடையின்றித் தொடர்வதற்கு ஊக்குவிக்கும் என்.எல்.சி நிறுவனத்திற்கும் அதன் உயரதிகாரிகளுக்கும் என் உளம் நெகிழ்ந்த நன்றி!

    கடப்பாடுகள் தாண்டிய, தன் எல்லாக் கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் என்னை இணைத்துக்கொள்வதோடு எனக்கான பணிகளுக்காக அணுகும்போதெல்லாம் ஈடுபாடான உழைப்பை அர்ப்பணிக்கும் நண்பர் புகைப்படக் கலைஞர் ந. செல்வனுக்கும்...

    நெய்வேலி எழுத்தாளர்களின் க்ரியா ஊக்கியாகத் திகழும் திரு. மருதூர் அரங்கராசன், திரு. மாலா உத்தண்டராமன் ஆகியோருக்கும்...

    பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் இதழ் நடத்தினாலும் அதில் சில பக்கங்களை எனக்காக ஒதுக்கிச் சுதந்திரமாக அதில் எழுத அனுமதித்த ‘கிழக்கு வாசல்’ ஆசிரியர் உத்தமசோழனுக்கும்...

    என் படைப்பு வெளியானவுடன் பத்து பக்கங்களுக்கும் குறையாமல் விமர்சனத்தையும், தன் வாசிப்பனுபவத்தையும் தவறாமல் பகிர்ந்துகொள்ளும் பரமக்குடிக் கவிஞர் பா. உஷாராணிக்கும்...

    எத்தனை இடைவெளிக்கு பிறகு தொடர்பு கொண்டாலும், உற்சாகம் குன்றாமல் ஆசி கூறும் விருத்தாசலம் வே. சபாநாயகம், கடலூர் இரா. நடராசன் ஆகியோருக்கும்...

    என் சிறுகதைகளை எம்ஃபில் பட்ட ஆய்வுக்காக தன் மாணவியிடம் சிபாரிசு செய்து அதற்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட திருவண்ணாமலைப் பேராசிரியர் வே. நெடுஞ்செழியன் அவர்களுக்கும், நறுமுகை ஜெ.ரா அவர்களுக்கும்...

    என் படைப்புகளின் மீது அதீத நம்பிக்கை வைத்து, செல்லும் இடம்தோறும் எனக்கான தளங்களை உருவாக்கிட முயற்சிக்கும் திரைப்பட ஒளிப்பதிவாளர் அன்பின் சி.கே. ராஜ்குமார் அவர்களுக்கும் எளிமையே வடிவாய், மண்ணுள் வேராய் திகழும் உதவி இயக்குனர் திரு. வேல்முருகன், மதிப்பிற்குரிய திரு. குறிஞ்சிவேலன் மற்றும் குறிஞ்சி ஞான. வைத்தியநாதன் அவர்களுக்கும் என் நன்றி!

    பெயர் குறிப்பிடாமல் போனாலும் அதற்காக வருந்தாமல் என் நலனில் அக்கறை செலுத்தும் இனிய உள்ளங்களுக்கும்... வாசிக்கும் உங்களுக்கும் என் நன்றி!

    என் படைப்புகளை வாசித்துவிட்டு என் சக எழுத்தாளர் ஜீலியட்ராஜ் அவர்கள் ‘கண்ணீரை விதைக்கிறவன், கெம்பீரமாக அறுக்கிறான்’ என்கிற வேதாகம வரிகளை மேற்கோள்காட்டி, ‘நீங்கள் கண்ணீரை விதைக்கிறீர்கள்’ என்று எழுதினார்.

    என் படைப்புகளின் அறுவடை கம்பீரமானதா என்று தெரியவில்லை...

    என்றாலும் தளராமல் ஆனந்தத்திலும், துக்கத்திலும் துளிர்க்கும் கண்ணீரை விதைக்கின்றேன்.

    E-9, பெருமாள் கோயில் தெரு

    வட்டம் – 27

    நெய்வேலி – 607803

    கடலூர் மாவட்டம்

    மிக்க அன்புடன்,

    பாரதிக்குமார்

    9442470573, 8825753498

    E Mail: sbharathikumar@gmail.com

    writerbharathikumar@gmail.com

    bharathikumar.blogspot.com

    1. பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்...

    பாஸ்ரா

    ஏப்ரல் 15, 2003

    இரவு 11-00 மணி

    தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆதியாகமம் 6:12

    இன்று பாஸ்ராவின் எல்லைக்கு வந்தோம். ஒரு பாவமும் அறியாத டைக்ரிஸ் நதி சலசலத்தபடி நகர்ந்து கொண்டிருந்தது. நல்லது நதியே, உன் ஜனனம் புனிதமானது. எதற்காகவும் நீ கரையேறத் தேவையில்லை. உன் ஓட்டம் ஒழுங்குக்குள் சுதந்திரிக்கப்பட்டது. அர்த்தமற்ற இந்த முடிவில்லா பயணத்தின் காரணமாக எங்கள் எல்லை மீறப்பட்டு இங்கே உள்ளே நுழைந்தோம்.

    என் அன்புக்குரிய மகளே ஜெனிஃபர்! பொங்கிச்சுழியும் யூப்ரடீஸ் நதியின் பிரவாகத்தைப் பார்க்கும்போது, உன் களங்கமில்லாத முகம் என் நெஞ்சில் நனைந்து இனிக்கிறது. என்னை வழியனுப்புகையில் அசையும் உன் பட்டு விரல்களைப்போல் யூப்ரடீஸ் நதியின் நுரை ஒதுங்கிக் கரையிலேறுகிறது. யுத்தம் துவங்கியாயிற்று. மனிதர்கள் மீது மரணத்தை திணிப்பது மட்டுமே எங்கள் பணி. எங்கள் கையிலிருக்கும் துப்பாக்கிகளுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரக்கமில்லாமல் துளைத்துச் செல்லும் தோட்டாக்களைப் போல், வழியில் பட்ட எல்லா ஜீவன்களையும், கட்டடங்களையும் தகர்த்துக் கடந்தோம். எல்லா ஜீவன்களையும் எரித்துச் சாம்பலாக்கிய பின் எந்தச் சர்வாதிகாரியிடமிருந்து யாருக்குச் சுதந்திரத்தை, எங்களால் தர முடியுமென எனக்குப் புரியவில்லை.

    ***

    நஸிரியா

    ஏப்ரல் 16, 2003

    அதிகாலை 05-00 மணி

    நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்கு கொடுத்தவர்கள் யார்? என்று கேட்டார்கள்.

    - மாற்கு 11:28

    மகளே ஜெனி! இருட்டுப் பிரியும் இன்றைய அதிகாலைப் பொழுதில் நஸிரியாவில் நுழையும்போது, எதிரியின் ஒற்றர்படை ஃபிதாயின் தற்கொலைப்படைதானோ என்று நினைத்து ட்ரக்கில் வந்த அப்பாவி ஜனங்கள் பதிமூன்று பேரை சரமாரியாகச் சுட்டுக்கொன்றோம். தேசம் முழுக்கத் திரியும் கொலைக்காரர்களுக்கு அஞ்சி அவர்கள் தப்பிச்செல்லும் முகமாய், இரவில் புறப்பட்டு எந்த ராணுவத்தின் தொல்லைகளும் இராத உம்காஸர் நகருக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது பிற்பாடு புரிந்தது. எல்லாம் ஆன பின் தெரிந்து என்ன செய்வது? எடுத்த இடத்தில் திரும்ப வைக்க உயிர் ஒன்றும் மனிதனால் ஆக்கப்பட்ட ஜடப்பொருள் இல்லையே... தேவனின் கிருபை அல்லவா அது. அங்கே சிதறிப்போயிருந்த ரத்தம் என்னை உறங்கவொட்டாமல் செய்தது. மணற்துகள்களுக்கிடையில் புதைந்துகிடந்த பிண்டங்கள் ‘நீயும் ஒரு பொறுப்பாளிதானே’ என்று என்னைச் சுட்டித் துடித்தபடி கேட்டன. மகளே ஜெனி! ஆகமத்தில் ஒரு வாசகம் உண்டு...

    ‘எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதமில்லை; நான் விரும்புகிறதையே செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

    அதெப்படியெனில், என்னிடத்தில் அதாவது என் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது. நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை’

    ***

    சமோவா

    ஏப்ரல் 16, 2003

    இரவு 8-00 மணி

    மார்த்தாள் இயேசுவிடத்தினில் வந்து, ஆண்டவரே! நீர் இங்கே இருந்தீர்களானால், என் சகோதரன் மரிக்கமாட்டான்;

    - யோவான் 11:21

    இறந்துபோன பதிமூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் அவர்களது சகோதரிகளின் கணவன்மார்கள் என்று அறிந்தோம். அவர்கள் சமோவா நகரைச் சேர்ந்தவர்கள். பெண்களை பிற்பாடு வரச்சொல்லிவிட்டு இவர்கள் மட்டும் பயணித்திருக்கிறார்கள்...

    ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தில் பதிமூன்று பெண்கள் விதவையானார்கள் என்பது எத்தனைக் கொடூரம் தெரியுமா ஜெனி. உன் அன்னை சாரா, உன்னையும் உன்னுடன் இரட்டைக் குழந்தையாய்ப் பிறந்த உன் பெயரிடப்படாத சகோதரியையும் ஈன்ற அன்றே மரித்துப்போனாள். கூடவே உன் சகோதரியும்... ஒரே நேரத்தில் இரண்டு உயிர்களை இழந்து, எடை குறைந்து உயிருக்குப் போராடிய உன்னையும் கையில் சுமந்தபடி நான் அழுத அழுகை, ஏசுவே! எனக்கு மட்டும் ஏனிந்த மாபாதகம் என்று கதறினேன். இத்தனை வருடம் கழித்து நான் சம்மந்தப்பட்ட இந்த பாவத்திற்கான தண்டனைதான் எனக்கு அன்றே கிடைத்ததா?

    துக்கத்தைச் சந்தித்திராத என் வாழ்வில் இரண்டு மரணங்கள் என்பதே தாங்கொண்ணாத வலியைத் தந்தது. ஆனால் பதிமூன்று பேரையும் ஒரே இரவில் பறிகொடுத்த அந்த வீடு சாத்தானால் சபிக்கப்பட்டுவிட்டதா? ஏதுமறியாத ஜீவன்களைத் தின்று கொழிக்கும் யுத்தங்கள் என்று முடிவுக்கு வரும்? இதற்கெல்லாம் கர்த்தரிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோமே! பிலடெல்பியாவில் ஒலிக்கும் சுதந்திர மணியின் சப்தம் இந்த ஓலங்களை மீறி எப்படி என் செவியில் வந்து விழும் முகம் தெரியாத மனிதர்களுக்கிடையில் யுத்தம் என்பது எப்படி யுத்தமாகும்? காட்டுமிராண்டித் தனமில்லையா? எங்களுக்கும் அந்த அல் ஹம்தினி குடும்பத்துக்கும் என்ன பகை?

    ***

    நஜாஃப்

    ஏப்ரல் 17, 2003

    மாலை 6-00 மணி

    Give me your tired. Your poor. Your huddled masses yearning to breathe free. the wretched refuse of your teaming shore

    - Emma Lazaras

    (in Liberty Statue of Newyork)

    நகரம் முழுக்க இடிந்து சரிந்த கட்டடங்கள். ஏவுகணைத் தாக்குதல்களால் சிதைந்து மூளியாகிக் கிடந்தன. கட்டடங்களை எழுப்பிய வியர்வையின் வாடையை, இரத்தவாடையும் வெடிமருந்து வாடையும் அமுக்கியது. ஹாரிஸ் பெர்க்கில் சிறுகச்சிறுக சேமித்துக் கட்டப்பட்ட உனக்கான அழகிய வீடு என் கண்முன்னே ஊசலாடுகிறது. உழைப்பின் வலியை எத்தனைச் சுலபமாய் உதாசீனப்படுத்தி விடுகிறோம். யுத்தம் ரத்தத்தோடு மட்டும் சமாதானமடைவதில்லை. மனிதனின் சகல சௌகர்யங்களையும் பிடுங்கியபின் சவமாக்கி விடுகிறது தனியானதொரு வனத்தில். நியூயார்க்கின் அழகியத் தீவில் கம்பீரமாய் நிற்கும் சுதந்திர தேவியின் சிலை மீது எல்லா அமெரிக்கனுக்கும் பெருமிதமுண்டு. எனக்கும்கூட. தனிமனிதச் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும் முன் நிற்கும் நம் தேசத்திற்காகப் பிரெஞ்சு மக்களால் தரப்பட்ட உயரிய விருது அது என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். அடுத்தவர்களின் சுதந்திரத்தையும் மதிக்கும்படி நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான் அதைத் தந்திருக்கக் கூடுமோ என்று சந்தேகிக்கிறேன் இப்போது.

    அதன் பீடத்தில் பொறித்திருக்கும் எம்மா லாசரஸ்-ன் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் என்னைச் சுட்டபடித் தகிக்கிறது.

    ***

    கர்பாலா ஏப்ரல்

    18, 2003

    காலை 07-00 மணி

    கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

    - மத்தேயூ 27:24

    பாக்தாத்தை வேறு வழியில் நுழையும் மார்க்கமாய் கர்பாலா வந்தடைந்தோம். எங்களுக்கு முன் ஏவுகணைகளும். கட்டடங்கள், மனிதர்களை குறிவைத்து தாக்கும் குண்டுகளும் கோடைகாலத்து மழைபோல சடசடத்து விழுந்து கொண்டிருந்தன.

    அப்பொழுதுதான் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத அந்தக் கொடூரம்

    Enjoying the preview?
    Page 1 of 1