Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhuthin Kotpadu : Sujatha
Ezhuthin Kotpadu : Sujatha
Ezhuthin Kotpadu : Sujatha
Ebook394 pages2 hours

Ezhuthin Kotpadu : Sujatha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ராம் ஸ்ரீதர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில், அஷ்டாவதானியான எழுத்தாளர் சுஜாதாவின் முக்கியமான படைப்புகள் (ஆசிரியரின் கருத்து) பற்றிய பார்வைகள், தன் படைப்புகள் பற்றி சுஜாதா கூறிய சுவையான தகவல்கள், சம்பத்தப்பட்ட பிற பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580131306571
Ezhuthin Kotpadu : Sujatha

Read more from Ram Sridhar

Related authors

Related to Ezhuthin Kotpadu

Related ebooks

Reviews for Ezhuthin Kotpadu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    எழுத்தின் கோட்பாடு:சுஜாதா - எழுதியவர் திரு. ராம் ஸ்ரீதர்

    சுஜாதாவின் தீவிர வாசகர் என்பது முதல் பாகத்திலிருந்தே தெரிகிறது.

    சுஜாதாவின் மற்ற தீவிர வாசகர்களான திரு சுஜாதா தேசிகன், (மறைந்த) திரு பாரதி மணி உட்பட பலரின் சுவையான அனுபவங்களை கேட்டு வாங்கி பிரசுரித்து இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    சுஜாதாவின் முதல் நாவலான "நைலான் கயிறு" நாவலில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 33 நாவல்களையும், சுஜாதா வசனம் எழுதி வெளிவந்த பிரபலமான இந்தியன், சிவாஜி, முதல்வன் உட்பட சில வெற்றிப் படங்களையும், அவருடைய முக்கியமான நாடகங்கள் சிலவற்றையும் அக்கு அக்காக ராம் ஸ்ரீதர் அலசிய விதத்தைக் கண்டு வியந்து போனேன்.

    உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவன் முடித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தேன். எவ்வளவு தகவல்கள் !! அப்பா, அற்புத,விவரங்கள்.

    படிக்கப் படிக்க புத்தக்த்தில் அலசியுள்ள சுஜாதாவின் படைப்புகளை மீண்டும் ஒரு முறை படிக்க ஆர்வமானேன். புத்தக ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

Book preview

Ezhuthin Kotpadu - Ram Sridhar

http://www.pustaka.co.in

எழுத்தின் கோட்பாடு: சுஜாதா

Ezhuthin Kotpadu: Sujatha

Author:

ராம் ஸ்ரீதர்

Ram Sridhar

For more books

https://www.pustaka.co.in/home/author/ram-sridhar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

சமர்ப்பணம்

என் அன்பு மனைவி மற்றும்,

என்னுடைய அருமை மகன் // மகளுக்கு,

வாத்தியார் திரு.சுஜாதா அவர்களுக்கு

வாசகப் பெருமக்களுக்கு.......

என் மனமார்ந்த நன்றிகளுடன் இந்த நூலைச் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்.

பொருளடக்கம்

1. இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகம்:

2. எழுதுவது பற்றி சுஜாதா:

3. சுஜாதாவும் நானும்

4. சுஜாதாவும் நானும்: சுஜாதா தேசிகன்

5. சுஜாதாவும் நானும்: பாட்டையா திரு பாரதி மணி

6. சுஜாதாவும் நானும்: திரு. ஜெயராமன் ரகுநாதன்

7. சுஜாதாவும் நானும்: திருமதி வேதா கோபாலன்

8. சுஜாதாவும் நானும்: எழுத்தோவியர் திரு. என்.எஸ். நாணா

9. நைலான் கயிறு

10. காயத்ரி

11. கரையெல்லாம் செண்பகப்பூ

12. கனவுத் தொழிற்சாலை

13. 24 ரூபாய் தீவு

14. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1 & 2

15. ப்ரியா

16. சொர்க்கத் தீவு

17. என் இனிய இயந்திரா

18. மீண்டும் ஜீனோ

19. பத்து செகண்ட் முத்தம்

20. இருள் வரும் நேரம்

21. எப்போதும் பெண்

22. பதவிக்காக

23. வாய்மையே சிலசமயம் வெல்லும்

24. ஒரே ஒரு துரோகம்

25. தேடாதே

26. பெண் இயந்திரம்.

27. கொலையுதிர் காலம்

28. காகிதச் சங்கிலிகள்

29. ஜன்னல் மலர்

30. குரு ப்ரஸாத்தின் கடைசி தினம்

31. ஆ...

32. ஜேகே

33. விக்ரம்

34. ரத்தம் ஒரே நிறம்

35. திசை கண்டேன் வான் கண்டேன்

36. நில் கவனி தாக்கு

37. மாயா

38. நிர்வாண நகரம்

39. பேசும் பொம்மைகள்

40. நில்லுங்கள் ராஜாவே

41. 14 நாட்கள்

42. வைரங்கள்

43. சுஜாதாவும் நாடகங்களும்: அறிமுகம்

44. ஊஞ்சல்

45. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

46. கடவுள் வந்திருந்தார்

47. திரைப்பட வசனங்கள் - அறிமுகம்

48. 'நினைத்தாலே இனிக்கும்'

49. இந்தியன்

50. முதல்வன்

51. அந்நியன்

52. சிவாஜி

53. எந்திரன்

54. முடிவுரை

55. ADDENDUM

வணக்கம்.

இந்தப் புத்தகத்தை வாங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் சுஜாதா - ஒரு அறிமுகம்:

இவருக்கு அறிமுகமே தேவையில்லைதான். இருந்தாலும்......

1935ஆம் ஆண்டு பிறந்த எஸ் ரங்கராஜன் (சுஜாதா). ஒரு பொறியியல் பட்டதாரி திருச்சி புனித வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் இயற்பியல் (Physics) இளங்கலை படிப்புக்கு பிறகு, சென்னை எம்ஐடி பொறியியற் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் (மின்னணுவியல்) படித்தவர்.

ஆரம்பத்தில் மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவில் (Civil Aviation), பிறகு பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில், பணிபுரிந்தார்.

BEL-ல் பணிபுரிந்தபோது தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்த குழுவின் தலைவராக இருந்தார். இதற்காக பிரசித்தி பெற்ற மத்திய அரசு விருதான வாஸ்விக் விருது பெற்றார். B.E.L -ல் பொதுமேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபின், சென்னைக்குக் குடி பெயர்ந்த பிறகு அம்பலம் உட்பட சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணிபுரிந்தார்.

குமுதம் ஆசிரியர் திரு எஸ் ஏ பி அவர்கள் மறைவுக்குப் பிறகு, குமுதத்தின் பொறுப்பாசிரியராக கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பணிபுரிந்தார்.

தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டு காலம் தமிழ் வாசகப்பரப்பை ஆக்கிரமித்திருந்த சுஜாதா 27-2-2008 சென்னையில் மறைந்தார்.

அவருடைய இரு புதல்வர்களான ரங்க பிரசாத், கேசவ பிரசாத் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

திருமதி சுஜாதா ரங்கராஜன் சென்னையில் வசித்து வருகிறார்.

1. இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகம்:

இன்றளவும் தொடர்ந்து வாசிக்கும் இன்பத்தை வழங்கும் நூல்கள் இலக்கியம்தான் என்பதை இன்றிருக்கும் பெரும்பாலான so called இலக்கியவாதிகள் அதிகம் பேர் ஒத்துக்கொள்வதில்லை என்பது உண்மை.

அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்..

இதனால், சுஜாதா அவர்களின் நூல்கள் சுவையில்லாமல் போய்விடுமா என்ன?

சுஜாதா எழுதிய நூல்களை நான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்ததுண்டு. ஒவ்வொரு முறையும் உவகை தரும் நூல்கள் அவை.

இன்று இருக்கும் பல so called இலக்கியவாதிகள் சிலர், சுஜாதா இலக்கிய எழுத்தாளர் அல்ல என்று ஒரே புலம்பலை, கீறல் விழுந்த ரிக்கார்டு போல புலம்பிவருகிறார்கள்.

இதில் நகைச்சுவை என்னவென்றால் இவர்கள் இலக்கிய எழுத்தாளர்கள் என்று தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் சில எழுத்தாளர்களின் நூல்கள் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆயிருந்தாலே பெரிய விஷயம். அப்படியானால் அதை எவ்வளவு பேர் படித்திருக்க முடியும்? இதில் உதாரணம் காட்ட நிறைய இலக்கிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை வம்புக்கு இழுக்க நான் விரும்பவில்லை.

ஆனால், சுஜாதா எழுதிய நூல்கள் நிலை இன்று எப்படியிருக்கிறது? இவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் எழுதிய நிறைய படைப்பாளர்களின் படைப்புகள் இன்று காணாமல் போய்விட்டன. சுஜாதாவின் contemporary (சம காலத்து) எழுத்தாளர்கள் யார், யார் என்று மக்களுக்குத் தெரியும். அந்த எழுத்தாளர்களின் எவ்வளவு புத்தகங்கள் இன்றும் விரும்பிப் படிக்கப்படுகின்றன?

அதை ஆராய்வது என் நோக்கமும் அல்ல. இந்தப் புத்தகம் அதைப் பற்றியதும் அல்ல.

இந்தப்புத்தகத்தில்,ஒரு வாசிப்பாளன் என்ற முறையில், உலகின் பல்வேறு புகழ்பெற்ற இலக்கியங்கள்,பொழுதுபோக்கு நூல்கள் ஆகியவற்றைப் படித்தவன் என்ற தகுதியில் ஒரு உண்மையான வாசகனாக என்னுடைய கருத்துக்கள் மட்டுமின்றி, வேறு சில உண்மையான வாசகர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே பதிவு செய்துள்ளேன்.

இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது ;

1. சுஜாதா படைத்த நாவல்கள்,

2. சுஜாதா படைத்த நாடகங்கள்,

3. சுஜாதா வசனத்தில் வந்த திரைப்படங்கள்.

இந்தப் புத்தகம் நிச்சயம் படிப்பவர்களுக்கும், அவர்தம் உள்ளங்களுக்கும் உவகை தரும். அதனால் இது இலக்கியம் என்று நான் அழிச்சாட்டியம் பேசமாட்டேன். எனவே, இன்றைய so called இலக்கியவாதிகள் அஞ்ச வேண்டாம்.

தமிழில் இதுவரை எந்த எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றிய பார்வைகள் இப்படித் தனி ஒரு புத்தகமாக வந்ததாக எனக்கு நினைவில்லை.

ஒரு வேளை வராமல் இருந்திருக்கும் பட்சத்தில், அந்தப் புகழும் எழுத்தாளர் சுஜாதாவிற்கே.

சுஜாதா எழுதிய நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்த, என் மனதிற்கு நெருங்கிய, சில மிகப் பிரபலமான படைப்புகளைப் பற்றி, இந்தப் புத்தகங்களைப் படித்த அனுபவங்களை மட்டுமே குறிப்பிட்டு, உங்கள் கவனத்திற்கு விருந்தாகப் படைத்துள்ளேன்.

1. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சுஜாதா எழுதிய படைப்பு விவரங்கள் :

கதைகள்:

1. காயத்ரி

2. கரையெல்லாம் செண்பகப்பூ

3. நைலான் கயிறு

4. கனவுத் தொழிற்சாலை

5. 24 ரூபாய் தீவு

6. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 1 & 2

7. ப்ரியா

8. சொர்க்கத் தீவு

9. என் இனிய இயந்திரா

10. மீண்டும் ஜீனோ

11. 10-செகண்ட் முத்தம்

12. இருள் வரும் நேரம்

13. எப்போதும் பெண்

14. பதவிக்காக

15. வாய்மையே சிலசமயம் வெல்லும்

16. ஒரே ஒரு துரோகம்

17. தேடாதே

18. பெண் இயந்திரம்

19. கொலையுதிர் காலம்

20. காகிதச் சங்கிலிகள்

21. ஜன்னல் மலர்

22. குருப்ரஸாத்தின் கடைசி தினம்

23. ஆ.…….

24. ஜேகே

25. விக்ரம்

26. ரத்தம் ஒரே நிறம்

நாடகங்கள்:

1. ஊஞ்சல்

2. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு

3. கடவுள் வந்திருந்தார்

4. அடிமைகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள் :

1. நினைத்தாலே இனிக்கும்

2. அந்நியன்

3. இந்தியன்

4. சிவாஜி

5. எந்திரன்

உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு இவை சுவைகூட்டும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

ராம் ஸ்ரீதர்

சென்னை

2. எழுதுவது பற்றி சுஜாதா:

எழுதுவதற்காக ஏதேனும் உத்திகள் வைத்திருக்கிறாரா சுஜாதா?

அறுபதுகளில், சுஜாதாவின் புனைவுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது.

மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக் கிடந்த வாசகர்களை எழுந்து உட்கார வைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து ஸ்டைலை தூக்கிக் கடாசியவர் சுஜாதா. அந்த வகையில் தமிழ் உரைநடை வளர்ச்சியில் அவரது பங்கு அலட்சியப்படுத்த முடியாதது.

அவரது காலகட்டத்தில், மரபுசார் எழுத்தாளர்கள், விமர்சகர்களின் தாக்குதல்கள் அவரைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சளைக்காது அவற்றை அவர் இயல்பாக எதிர்கொண்டார்.

மரபை மீறுகிற, இலக்கணத்தை அனாயாசமாக சிதைத்து எழும் இந்தவகை எழுத்துபற்றி அவர் சொல்கிறார்:

‘மொழி என்பது ஒரு தொடர்புக்கான சாதனமே. புதிய விஷயங்களைச் சொல்லவேண்டுமென்றால் இலக்கணத்தை வளைக்கவேண்டும். மரபை ஓரளவு ஒத்துப்போகும்போது இது தவறல்ல என்றே நினைக்கிறேன். மேலும் எழுத்து, வாசகரின்றி நிறைவு பெறுவதில்லை. என் வாசகர்கள் புதிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உபயோகித்தால், அதை எழுதுவதில் என்ன தவறு?’ என்று கேட்கிறார் சுஜாதா.

சுஜாதா சற்று விபரமாகச் சொல்கிறார்:

"நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவைத் தட்டி, ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற

குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது என்றார்.

அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை.

எந்த காலேஜ்? என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னார்.

சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?

என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்

சரி அந்த மரத்துக்கு பேர் என்ன?

அதெல்லாம் தெரியணுமுங்களா?

ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?

ஏங்க நீங்க கூட நிறைய கொலைக் கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க? என்றார்.

என்னால் பதிலே சொல்ல முடியலை.

***

தி.ஜானகிராமன் சொல்லுவார்.. ஒரு தடவை டெல்லியில் பாரகம்பா சாலையில் போய்கொண்டு இருந்த போது இரண்டு பக்கமும் சோலை போல மரங்கள். தி.ஜா என்னிடம் கேட்டார், நீ எப்பவாவது நிமிர்ந்து மேலே பார்த்திருக்கியா? அந்த மரம் பேர் தெரியுமா?

மிகவும் துல்லியமாக ஒவ்வொரு மரத்தின் பெயரையும் நினைவு வைத்திருந்தார். அதனாலதான் அவருடைய கதைகளில் அவ்வளவு விவரம் இருக்கும். எனக்குக் கூட மரங்களை அடையாளம் காணமுடியும். சங்ககாலப் பாடல்களை பார்த்தால் எல்லா மரமும் இருக்கும். இதில் முக்கியம் என்னவென்றால் இயற்கையைப் பார்த்து / ரசித்து எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம்.

அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் போது... ஒரே நாள்ள பூக்கும்.. அதனுடைய பேர் ஜாகரண்டா. அந்தப் பூவோட பேர் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னா-- ஒரு வெளிநாட்டுகாரர் வந்திருந்தார். அவருடைய பேர் தாமஸ் டிஷ். அவர் ஒரு எழுத்தாளர்.

அவர் இந்தப் பூவை பார்த்திட்டு, இது என்ன 'பூ'ன்னு கேட்டார். எனக்குத் தெரியலை, அப்பறம் எங்கல்லாமோ தேடி, கடைசியில ஒரு பாட்டனி ப்ரொபசர் கிட்ட கேட்டு அதன் பெயர் ஜாகரண்டா அப்படீன்னு கண்டுபிடிச்சோம்.

அந்த எழுத்தாளர் அதற்கு பிறகு ஒரு அதை பற்றி ஒரு ஹைக்கூ கவிதை எழுதினார். அந்த கவிதை எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு

என்னுடைய எழுத்துல பார்க்கலாம், ஒரு விஷயம் தெரியலைன்னா அதன் டீட்டெய்ல் தெரியும் வரை வெயிட் பண்ணுவேன். நன்றாக எழுத முயற்சிப்பதில் இதுவும் ஒரு அங்கம். யாரிடமாவது கேட்பேன், இல்ல தேடுவேன்... இப்ப ரொம்ப சுலபம்….கூகிள் இருக்கிறது"

*********************************************

"ஒரு எழுத்தாளனுக்கு நல்ல அப்ஸர்வேஷன் பவர் வேண்டும். நான் ஆண்டுக்காண்டு இதை வளர்த்துவருகிறேன். எனது கண்களையும், காதுகளையும் எப்பொழுதும் கவனமாகத் திறந்து வைத்திருக்கிறேன்.

கதைகளையும், கதைகள் அல்லாதவற்றையும் எப்பொழுதும் வாசிப்பேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகின்றது. ஒருவருக்கு எதைப்பற்றித் தெளிவாகத் தெரிகிறதோ, அதைப் பற்றியே எழுத வேண்டும். எழுத்து என்பது அவரது தோலிலேயே ஊறிப்போய்விடவேண்டும். ஒருவர் எழுதும்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகத்தான் பொருள்"- எனச் சொல்கிறார்.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தான் எழுதும் ஒவ்வொரு புத்தகமும் பிடித்தால் மட்டுமே அடுத்த புத்தகத்தை எழுத முடியும்.

ஒரு வாசகர் - சுஜாதா சந்திப்பில் சில வாசகர்கள் சுஜாதாவிடம் அவருடைய மாஸ்டர்பீஸ் ரத்தம் ஒரே நிறம் என்றபோது சுஜாதா சொன்ன பதில் இது.

ஒரு எழுத்தாளன் எப்போது தன்னுடைய ஒரு புத்தகத்தை, தன்னுடைய சிறந்த புத்தகம் என நினைக்கிறானோ, அதற்கு மேல் அவனால் சிறப்பாக எழுத முடியாது என்றார்.

இதையே ஒருமுறை பிரபல ஆங்கில நாவலாசிரியர் Stephen King ஜக் கேட்டபோது அவர் சற்று மாற்றிச் சொன்ன பதில், என்னுடைய ஒவ்வொரு புத்தகமும் என்னுடைய மாஸ்டர்பீஸ்தான்.

இது தலைக்கனம் அல்ல. தன்னம்பிக்கை. ஒவ்வொரு எழுத்தாளரும் வெவ்வேறு வகையில் தங்களுடைய எழுத்தைப் பார்க்கிறார்கள்.

***

சரளம் ; தகவல் சுரங்கம் ; விஷய ஞானம் ; எளிமையான வியாக்யானம் ; நகைச்சுவை ; எதிலும் நீதி / புத்தி சொல்வதைக் கவனமாகத் தவிர்ப்பது ; தான் அறிந்த புதுப்புது விஷயங்களைத் தன் வாசகர்களுடன் சுவையாகப் பகிர்வது - - இதுதான் சுஜாதா

***

இந்தப் புத்தகத்தில் இருக்கும் படைப்புகளின் வரிசைக்குப் பொருள் என்ன? என்று கேட்டால் படைப்புகளின் வரிசை யதேச்சையாக நான் அமைத்த ஒன்று. எந்தவித நோக்கமும் அதன் பின்னணியில் இல்லை என்று மட்டும் சொல்ல முடியும்.

3. சுஜாதாவும் நானும்

எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளைப் பற்றிய கருத்துக் கோவையாக மட்டும் இந்தப் புத்தகம் இல்லாமல், புத்தகத்திற்கு சுவை கூட்டும் நோக்கில், சுஜாதாவுடன் நெருங்கிப் பழகிய சில அதிர்ஷ்டசாலிகளை, அவர்களுடைய சுஜாதா உடனான சுவையான அனுபவங்களை,

சுஜாதாவும் நானும் -

என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தேன்.

அந்த வரிசையில்

1. திரு சுஜாதா தேசிகன்

2. பாட்டையா திரு பாரதி மணி

3. திரு ஜெயராமன் ரகுநாதன்

4. திருமதி வேதா கோபாலன்

5. எழுத்தோவியர் திரு. என். எஸ். நாணா

ஆகியோர்கள் தத்தம் சுவையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

4. சுஜாதாவும் நானும்: சுஜாதா தேசிகன்

என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும் விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். (கடன்காரன் என்ன அருமையா எழுதறான்! )

நானும் ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வேன். நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்.

நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாள், அப்பா அடிக்கடி ஏதோ 'சுஜாதா, சுஜாதா' என்று அடிக்கடி சொல்கிறாரே என்னதான் எழுதுகிறார் பார்க்கலாமே என்று, திருச்சி ஜங்ஷனுக்குப் போய் ஒரு லெண்டிங் லைப்ரரியில் சுஜாதா புத்தகம் ஒன்று எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முன்பே சொன்னது போல் என் தமிழ் புலமை அதிகம் ஆதலால் மிகவும் மெதுவாகப் படித்தேன்.

ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மாதத்தில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் படித்தவுடன் சுஜாதாவின் தமிழ் நடை, உத்தி, அவர் மொழியைக் கையாளும் முறை போன்றவை என்னை மிகவும் வசீகரித்தது.

சுஜாதாவின் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

புத்தகத்தைத் திருப்பி கொடுக்க லெண்டிங் லைப்ரரிக்குச் சென்ற போது அதை நடத்துபவர், தம்பி, புத்தகத்தின் விலை 14ரூ, ரீடிங் சார்ஜ், ஃபைன் எல்லாம் சேர்த்தால் 32 ரூ என்றார்.

நான் 14ரூ கொடுத்து புத்தகத்தை வாங்கிவிட்டேன். அதுதான் நான் வாங்கிய முதல் சுஜாதா புத்தகம்! அதன் பின் வீட்டிற்கும் லெண்டிங் லைப்ரரிக்கும் அலைவதே எனக்கு வேலையாக இருந்தது.

லைப்ரரிக்காரருக்கு என் மேல் ஒரு தனி மரியாதை எற்பட்டது- லைப்ரரியில் புத்தகத்தை வாங்கும் ஒரே நபர் நான்தான்.

புத்தகங்களைப் படிக்கப் படிக்க கொஞ்சம் வேகமாகப் படிக்க முடிந்தது, சில தமிழ் வார்த்தைகளுக்கு அப்போதுதான் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளை படித்த போது அதே மாதிரி எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.

காலேஜில் Artificial Intelligence பற்றி அஸைன்மெண்ட் கொடுத்தார்கள். வகுப்பில் எல்லோரும் எழுதிக் கொடுத்தார்கள். சில வாரம் கழித்து கிளாசில் எல்லோரும் எழுதியதை திருப்பி கொடுத்தார்கள் என்னுடைய கட்டுரையை திருப்பி கொடுக்கவில்லை. அந்த வகுப்பு HOD-யுடையது. அதனால் பயந்துக்கொண்டு

சார் என் கட்டுரை..?

ஓ அதுவா தேசிகன்... அதை xerox எடுக்க கொடுத்திருக்கிறேன்... 35 காபி கிளாசில் எல்லோருக்கும் அது தான் நோட்ஸ்... மிக அருமை என்றார்.

ஒரே கட்டுரையில் வகுப்பு பெண்களை எல்லாம் என்னை திரும்பி பார்க்க வைத்தது அந்த ‘சுஜாதா’ மாதிரி கட்டுரை!

அவ்வப்போது எதையாவது வரைவேன். வாட்டர் கலர் கொண்டு ஒரு சுஜாதா படம் வரைந்து(1988) என் ரூமில் மாட்டினேன்.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் அந்த லயன்ஸ் கிளப் விளம்பரம் என் கண்ணில் பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினார் திரு.சுஜாதா!. All are Welcome!! என்று அழைத்திருந்தார்கள்.

விழாவிற்குச் சென்று சுஜாதாவை ஒர் ஓரத்தில் நின்றாவது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் கிளம்பும்போது நான் வரைந்த படத்தை அவரிடம் காண்பித்து, ஒரு ஆட்டோகிராஃப் கேட்டேன். படத்தைப் பார்த்துவிட்டு, அட, நான் இப்படியா இருக்கேன்? என்றார்.

பேர் என்ன?

தேசிகன்

வீட்டில் தம்பி கூட நிறைய சண்டை போடுவியா? என்று கேட்டு படத்தில் ஒரு கையெழுத்திட்டுத் தந்தார் (28-07-91).

நான் முதல் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது அப்போதுதான்!

ஒரு சமயம் முத்துவும் நானும் சுஜாதாவை தமிழ் கீபோர்ட், என்கோடிங் சம்பந்தமாக சந்திக்கச் சென்றோம். இது என் இரண்டாவது சந்திப்பு. முதல் சந்திப்பிற்கும் இரண்டாவது சந்திப்பிற்கும் ஏறத்தாழ 6 ஆண்டுகள்

இடைவெளி. தமிழ் கீபோர்ட், என்கோடிங் விவாதத்திற்குப் பிறகு, சுஜாதா அவர்கள் இண்டர்நெட்டிலிருந்து சில தகவல்களை என்னிடம் கேட்டிருந்தார். ஒரு நாள் அவர் வீட்டிற்குப் போய் கொடுத்துவிட்டு விடைபெறும் முன்..

சார்! உங்கள் கதை, கட்டுரை, எல்லாம் என்னிடம் இருக்கிறது என்றேன்.

இருக்காது, என்னிடமே அவை இல்லை என்றார். விட்டுக்கு வந்துவிட்டேன்.

பிறகு என்னிடம் உள்ள சுஜாதா அவர்களின் கதை, கட்டுரை, கவிதை, நாடகம், எல்லாவற்றையும் தொகுத்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு மூன்று வரி பதில் அனுப்பியிருந்தார். அதில், 'நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்; நான் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று இன்றுதான் தெரிந்தது; நீதான் என் Official Biographer' என்று எழுதியிருந்தார்.

பிறகு சுஜாதாவிற்கு ஒரு வலைத்தளம் அமைத்து அவருடைய எழுத்துகளை அவர் அனுமதியுடன் இணையத்தில் அரங்கேற்றி மகிழ்ந்தேன். அவரே என் வீட்டுப்பக்கத்துக்கு ஒரு முன்னுரையும் எழுதிக் கொடுத்தார்.

இந்த சமயத்தில்தான் என் அப்பா அம்மா எனக்குக் கல்யாணத்திற்குப் பெண் பார்த்தார்கள். கல்யாண பத்திரிகையை சுஜாதாவிடம் கொடுத்த போது அதைப் பார்த்துவிட்டு, உன் தலை எழுத்து அப்படி என்றால் மாத்த முடியாது என்றார். (காரணம், என் மனைவி பெயரும் சுஜாதா தான்!

என் திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு, "எனக்கும் தேசிகனுக்கும் ஆண்டாள் சொல்லுவது போல ‘ஒழிக்க ஒழியாத உறவு’ என்று என் அப்பாவிடம் செல்லிவிட்டுச் சென்றார்.

பிறகு திருச்சியில் ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்து என் அப்பாவிடம் பிரபந்தத்தைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். என் அப்பா சுஜாதா தொடர்கதைகளை ரொம்ப விரும்பிப் படிப்பவர்.

சுஜாதா அவர்களின் இரண்டாவது காதல் கதை தொடர் வந்து கொண்டு இருந்த சமயம். தொடர் முடிவதற்கு 2 வாரம் தான் இருக்கும். நான் என் அப்பாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தேன். 'இரண்டாவது காதல் கதை' பற்றி பேச்சு எழுந்தது.

முடிவு தெரியும் சொல்லட்டுமா என்றேன்.

கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது, முடிவை நானே படிச்சிக்கிறேன் என்றார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் அப்பா திடீரென்று இறந்து போனார் கடைசிவரை அவர் அந்தக்

Enjoying the preview?
Page 1 of 1