Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Visaranai Commission
Visaranai Commission
Visaranai Commission
Ebook324 pages3 hours

Visaranai Commission

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

இறைக்குத் தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையின் முக்கியமான மூன்று இழைகள் அரசியல், சினிமா, மதம். அரசியல் என்றால் எவனும் அரசியல்வாதிகள், கட்சிகள், கொள்கைகள், கொடிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பதில்லை. அதிகார வர்க்கம், மக்கள் தொடர்புச் சாதனங்கள், அரசியல்வாதிகளைப் பின்னிருந்து இயக்கும் பண முதலைகள் எல்லாம் இதில் அடக்கம்.

சினிமாவும் இதே போலத்தான், வெறுமே சூப்பர் ஸ்டார்களும் கவர்ச்சி நடிகைகளும் மட்டும் கொண்டதல்ல சினிமா. மக்களின் அபிப்பிராயங்களை, நடை, உடை, பாவனைகளை, கருத்துகளின் ரொம்பச் சுலபமாக மாற்றி அமைக்கக் கூடியது. சினிமாவின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதற்கு வேறு உதாரணமே வேண்டாம். இந்த நாற்றாண்டில் தமிழகத்தில் இரண்டு துருவங்களாக செயல்பட்ட இராஜாஜியும் பெரியாரும் அதை எதிர்த்ததே அதனுடைய செல்வாக்கு எத்தன்மையது என்பதை நமக்கு எடுத்துக் காட்டும். மதம் என்பதோ அரசியல், சினிமா இவற்றை விட சர்வ வியாபகம் பொருந்தியது. அரசியல் - ஜனநாயக அரசியல் - மக்கள் பங்குகொள்ளும் அரசியல் ஒரு நாறு வருடத்தின் வரலாறு கொண்டது. சினிமாவின் வரலாறோ அதனினும் குறுகியது. மதம் கல்பகோடி கால சமாசாரம்.

இத்தகையதொரு சூழ்நிலையில் நாவலாசிரியர் சா. கந்தசாமி அரசியலையும், மதத்தையும் பின்புலமாக்கித் தனது புதிய நாவலை உருவாக்கி இருக்கிறார். நாவலில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டே பேர்கள்தான். பஸ் கண்டக்டர் தங்கராசும் பள்ளிக்கூட டீச்சரும், அவர் மனைவியுமான ருக்குமணியும். கதையும் ரொம்ப எளிமையானதுதான். கண்டக்டர் தங்கராசு அவருக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத சமூகக் குளறுபடி ஒன்றில் சிக்கி உயிர் துறக்கிறார், அவர் மனைவி ருக்குமணி வியாதி ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் தெம்பை அணு அணுவாக இழந்து வருகிறாள்.

ஆனால் இந்த நாவலின் முக்கியத்துவம் அதனை எடுத்துச் செல்லும் இலேசான கதை அமைப்பினுள் அடங்கு வதல்ல. அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே ‘நாவலாசிரியன் தன் படைப்பில் அந்த Tip of the Iceberg தான் காட்டிச் செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னைப் பத்தில் ஒரு பங்கு மட்டுமே காட்டி நிற்கும். மற்ற ஒன்பது பங்கு பனிப்பாறை நீர் மட்டத்திற்குக் கீழே நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தேங்கிக் கிடக்கும். இந்த கலை சூட்சுமம் சா. கந்தசாமி அவர்களுக்குச் சரியாகவே பிடிபட்டிருக்கிறது.

அவன் ஆசிரியர் பிரதிநிதியாக எம். எல். ஏ. ஆகிறான். ஆசிரியர்களிடம் தவணை முறையில் நிதி வசூலித்து வெள்ளை அம்பாஸிடர் கார் வாங்குகிறான். தனக்கு மிக நெருக்கமான டீச்சரிடம் கொடுத்த சிறிய வாக்குறுதியை காப்பாற்றத் தெரியாத - விரும்பாத இவன், தொகுதி மக்களுக்கு எத்தனை வாக்குறுதிகள் கொடுத்திருப்பான், அவற்றில் எத்தனை பங்கு நிறைவேற்றியிருப்பான் என்பதை நாம் சுலபமாகவே அனுமானிக்க முடியும்,

சரோஜினி டீச்சர் ஒரு சம்பாஷணையின் போது வரதட்சணை, கல்யாணம், சீர் செய்து கொடுப்பது போன்ற சமாசாரங்களில் தன் ஜாதியின் மகத்துவத்தை’ எடுத்துக் கூறுகிறாள்.

‘வைரத் தோட்டுல அரை காரட்டு குறைஞ்சி போய்ச்சின்னு, என் மாமியார் புருஷன்கிட்ட ரெண்டு மாசம் படுக்கவிடல.’அடுத்த வரி இதற்கும் மேலே போய் அவள் கணவனைத் தாக்குகிறது.

இத்தனை பேச்சு மத்தியிலும் ஆசிரியர் மறந்தும் கூட குறுக்கிடவில்லை, சரோஜினி என்ன ஜாதி என்றோ, ருக்குமணி என்ன ஜாதி என்றோ தீர்மானிக்கும் பொறுப்பை வாசகரிடம் விட்டு விடுகிறார்.

இந்த நாவலில் அரசியல் பிரதான பங்கு வகிக்கிறது என்று முன்னமேயே குறிப்பிட்டேன். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும் காவல் துறை நாழியர்களுக்குமான மௌன யுத்தம் ஒருநாள் தெருச் சண்டையாக வெடிக்கிறது. அப்பாவி கண்டக்டர் தங்கராசு எப்படியோ இதில் சிக்கி உயிர் துறக்கிறார். ஒரு தனி மனிதனின் அர்த்தமற்ற சாவு இந்த நாவலாசிரியரைப் பாதித்திருக்கிறது. ‘ஒரு தனி மனிதன் இறந்தால் அது செய்தி; பல்லாயிரக் கணக்கானவர்கள் இறந்து போனால் அது வெறும் புள்ளி விவரம்’ என்றார் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் தனலவர் ஸ்டாலின்...

தங்கராசு என்ற தனிமனிதனின் சாவுச் செய்தி என்ற அதன் ஒற்றைப் பரிமாண நிலையிலிருந்து வளர்ந்து, அதன் அரசியல் சகப் பின்னணிகள் என்ன என்ற விஷயங்கள் ஆராயப்பட வேண்டிய நிகழ்ச்சியாக இரட்டைப் பரிமாணம் பெற்று, கைதேர்ந்த நாவலாசிரியராக சா கந்தசாமியின் இலக்கியத் திறமையால் ஒரு முழுமையான கனலப்படைப்பு என்ற மூன்றாவது பரிமாண வளர்ச்சியைப் பெற்று நிற்கிறது. தமிழ்நாட்டு வாசகர்கள் இந்த நாவலின் தீவிரத்தன்மையையும், சமூக வரலாற்றுத் தன்மையையும், கனவு முதிர்ச்சியையும் அங்கீகரித்து இது சமீப காலத்திய மிகச் சிறந்த படைப்பு என்ற நாலாவது பரிமாணத்தை இதற்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125103814
Visaranai Commission

Read more from Sa. Kandasamy

Related to Visaranai Commission

Related ebooks

Reviews for Visaranai Commission

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Visaranai Commission - Sa. Kandasamy

    http://www.pustaka.co.in

    விசாரணைக் கமிஷன்

    Visaranai Commission

    Author:

    சா. கந்தசாமி

    Sa. Kandasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sa-kandasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    பதிப்புரை

    'சாயாவனம்' கந்தசாமி அவர்களின் 'விசாரணைக் கமிஷன்' நாவல் யதார்த்தம் ததும்பும் உணர்ச்சிபூர்வமான நாவல் என்றால் மிகையல்ல.

    நாவலைப் படிக்க ஆரம்பித்ததும், நம் முன்னே நடமாடும் உயிரோட்டமான கதாபாத்திரங்களை பார்ப்பது போலவே (தங்கராசு, ருக்குமணி) தத்ரூபமாக, மனதை கனமாக அழுத்துகிறது.

    கதாபாத்திரங்கள் உணர்ச்சிகரமான மனிதர்களைப் பிரதி பலிக்கிறார்கள்.

    'சாகித்திய அகாதமி' விருது பெற்ற இந்நாவலை 10 வருடங்களுக்குப் பிறகு வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பது மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தனி மனித உரிமை மீறல்கள் (காவல் நிலைய நிகழ்ச்சிகள்) சமுதாயத்தில் அன்றும் இன்றும் எந்தவித மாற்றமுமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதை தங்கராசுவின் கைது. அதனைத் தொடரும் மரணச் செய்தி உறுதிப்படுத்துகிறது!

    ஜீவனுள்ள கதாபாத்திரங்களை நம் கண் முன்னே உலவ விட்டு, நாவலைப் படித்து முடிக்கும்போது கண்களை குணமாக்குகிறார் ஆசிரியர் கந்தசாமி.

    இந்நாவலுக்கு வாசகர்கள் பெரிதும் வரவேற்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

    - சேது. சொக்கலிங்கம்

    முன்னுரை

    ஐராவதம்

    இறைக்குத் தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையின் முக்கியமான மூன்று இழைகள் அரசியல், சினிமா, மதம். அரசியல் என்றால் எவனும் அரசியல்வாதிகள், கட்சிகள், கொள்கைகள் (அறிவிக்கப்பட்டவை, அறிவிக்க முடியாதவை, நிறைவேற்றப்பட்டவை, என்றைக்கும் நிறைவேற்ற முடியாதவை) கொடிகள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பதில்லை. அதிகார வர்க்கம், மக்கள் தொடர்புச் சாதனங்கள், அரசியல்வாதிகளைப் பின்னிருந்து இயக்கும் பண முதலைகள் எல்லாம் இதில் அடக்கம்.

    சினிமாவும் இதே போலத்தான், வெறுமே சூப்பர் ஸ்டார்களும் கவர்ச்சி நடிகைகளும் மட்டும் கொண்டதல்ல சினிமா. மக்களின் அபிப்பிராயங்களை, நடை, உடை, பாவனைகளை, கருத்துகளின் ரொம்பச் சுலபமாக மாற்றி அமைக்கக் கூடியது. சினிமாவின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதற்கு வேறு உதாரணமே வேண்டாம். இந்த நாற்றாண்டில் தமிழகத்தில் இரண்டு துருவங்களாக செயல்பட்ட இராஜாஜியும் பெரியாரும் அதை எதிர்த்ததே அதனுடைய செல்வாக்கு எத்தன்மையது என்பதை நமக்கு எடுத்துக் காட்டும்.

    மதம் என்பதோ அரசியல், சினிமா இவற்றை விட சர்வ வியாபகம் பொருந்தியது. அரசியல் - ஜனநாயக அரசியல் - மக்கள் பங்குகொள்ளும் அரசியல் ஒரு நாறு வருடத்தின் வரலாறு கொண்டது. சினிமாவின் வரலாறோ அதனினும் குறுகியது. மதம் கல்பகோடி கால சமாசாரம். உங்கள் பேட்டையில் வியாஸர் தினம், யாக்ஞவல்கியர் தினம் கொண்டாடுகிற சனாதனி உலகத்துக்கு நிரூபிக்கக் கிளம்பிபிருக்கிற விஷயம் என்ன தெரியுமா? நான் - இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் வாழ்கிற நான் - எவனோ வெள்ளைக்காரனான சார்லஸ் டார்வின் கூறியபடி குரங்கிலிருந்து பிறந்தவனில்லை; என்னுடைய மூதாதையர்கள் வியாஸர், யாக்ஞவல்கியர் முதலிய மகான்களாக்கும் என்பதுதான். வியாஸர், வால்மீகி போன்ற பழைய புண்ணியவான்களுக்கு மட்டும்தான் இந்த கதி என்றில்லை புதிய புண்ணியாத்மாக்களான அரவிந்தர், ரமண மகரிசி, ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களுக்கும் இதே கதிதான்.

    பாண்டிச்சேரியில் அரவிந்தர் சமாதி, பூக்களால் அலங்காரம், சதா திரண்டுவரும் மக்கள் கூட்டம்.

    திருவண்ணாமலையில் ரமண ஆஸ்ரமம், தங்க இடவசதி, உண்ணும் வசதிகள்.

    'நான் யாருக்கும் குருவாக விரும்பவில்லை' என்று உலகறிய பிரகடனம் செய்த ஜே. கிருஷ்ணமூர்த்தியின் பெயரால் பள்ளிக் கூடங்கள். இங்கு படிக்கும் பிள்ளைகள் இந்தியாவின் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள். நாளைய அதிகார வர்க்கம் ஆன்மிக வர்க்கம்: கவாசார வர்க்கம் இங்கு சிரத்தையாக உருவாக்கப்படுகிறது.

    ஆக, மதம் என்றால் மடம், ஸ்தாபனம், புதிய - பழைய நிறுவனங்கள், நிர்வாகப் பொறுப்புகள், கஜானா, கல்லாப் பெட்டி, சில்லறை குவியும் இடம். சத்தம் போடாமல் வெள்ளை உறைகளுக்குள் வைத்துக் கொடுக்கப்படும் பச்சை, நீல, சிவப்பு, ஊதா நிற ரூபாய் நோட்டுக்கள். இன்னும் உயரே போகும்போது பிரிட்டிஷ் பௌண்ட், அமெரிக்க டாலர், ஜெர்மன் மார்க். இனிமேல் ரஷ்ய ரூபிள் கூட இந்த வரிசையில் இடம் பெறும், ரஷ்யா பொது உடைமை என்னும் அமிர்தத்தைத் தூர எறிந்து விட்டு, மதம் என்னும் அப்கனை இறுகப் பற்றியுள்ளதே அப்பொழுது இந்து மதம் அதன் பல்லாயிரக்கணக்கான நாக்குகளுடன் ரஷ்யாவுக்குள்ளும் இடம் பெறலாம்.

    இத்தகையதொரு சூழ்நிலையில் நாவலாசிரியர் சா. கந்தசாமி அரசியலையும், மதத்தையும் பின்புலமாக்கித் தனது புதிய நாவலை உருவாக்கி இருக்கிறார். நாவலில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டே பேர்கள்தான். பஸ் கண்டக்டர் தங்கராசும் பள்ளிக்கூட டீச்சரும், அவர் மனைவியுமான ருக்குமணியும். கதையும் ரொம்ப எளிமையானதுதான். கண்டக்டர் தங்கராசு அவருக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத சமூகக் குளறுபடி ஒன்றில் சிக்கி உயிர் துறக்கிறார், அவர் மனைவி ருக்குமணி வியாதி ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் தெம்பை அணு அணுவாக இழந்து வருகிறாள்.

    ஆனால் இந்த நாவலின் முக்கியத்துவம் அதனை எடுத்துச் செல்லும் இலேசான கதை அமைப்பினுள் அடங்கு வதல்ல. அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே 'நாவலாசிரியன் தன் படைப்பில் அந்த Tip of the Iceberg தான் காட்டிச் செல்ல வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது குளிர்ந்த நீர் கொண்ட மிகப் பெரிய ஏரியில் ஒரு பனிப்பாறை மிதக்கிறது. நீர் மட்டத்திற்கு மேலே அது.

    தன்னைப் பத்தில் ஒரு பங்கு மட்டுமே காட்டி நிற்கும். மற்ற ஒன்பது பங்கு பனிப்பாறை நீர் மட்டத்திற்குக் கீழே நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் தேங்கிக் கிடக்கும். இந்த கலை சூட்சுமம் சா. கந்தசாமி அவர்களுக்குச் சரியாகவே பிடிபட்டிருக்கிறது.

    அந்தோணிசாமி என்கிற பாரதிவாணன் டீச்சர் ருக்கு, மணியிடம் நேசபாவம் கொண்டிருக்கிறான். டாக்டர் ராதா கிருஷ்ணனின் இரண்டு தத்துவ நூல்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவளுக்கு அவற்றைப் படிப்பதற்காகக் கொண்டு வந்து தருவதாகவும் வாக்கு கொடுக்கிறான். கடைசி வரை அவன் அவளுக்கு அந்த நூல்களைத் தரவே இல்லை.

    அவன் ஆசிரியர் பிரதிநிதியாக எம். எல். ஏ. ஆகிறான். ஆசிரியர்களிடம் தவணை முறையில் நிதி வசூலித்து வெள்ளை அம்பாஸிடர் கார் வாங்குகிறான். தனக்கு மிக நெருக்கமான டீச்சரிடம் கொடுத்த சிறிய வாக்குறுதியை காப்பாற்றத் தெரியாத - விரும்பாத இவன், தொகுதி மக்களுக்கு எத்தனை வாக்குறுதிகள் கொடுத்திருப்பான், அவற்றில் எத்தனை பங்கு நிறைவேற்றியிருப்பான் என்பதை நாம் சுலபமாகவே அனுமானிக்க முடியும்,

    சரோஜினி டீச்சர் ஒரு சம்பாஷணையின் போது வரதட்சணை, கல்யாணம், சீர் செய்து கொடுப்பது போன்ற சமாசாரங்களில் தன் ஜாதியின் மகத்துவத்தை' எடுத்துக் கூறுகிறாள்.

    'வைரத் தோட்டுல அரை காரட்டு குறைஞ்சி போய்ச்சின்னு, என் மாமியார் புருஷன்கிட்ட ரெண்டு மாசம் படுக்கவிடல.'அடுத்த வரி இதற்கும் மேலே போய் அவள் கணவனைத் தாக்குகிறது.

    'இந்த அசட்டு ஆம்பளையும் அம்மா பேச்சைக் கேட்டுண்டு தான் இருந்தார்.'

    பின்னே இன்னொரு வரி ஜாதியின் தனி குணாதிசயத்தைப் பறைசாற்றுகிறது.

    'எங்க ஜாதியில் டீச்சரா இருக்கிறவா கண்டக்டர், பஸ் டிரைவரை எல்லாம் கட்டிக்கமாட்டார். தன்னைவிட படிச்சவனா, பெரிய உத்தியோகத்தில் இருக்கறவனாதான் பாப்பா.'

    இத்தனை பேச்சு மத்தியிலும் ஆசிரியர் மறந்தும் கூட குறுக்கிடவில்லை, சரோஜினி என்ன ஜாதி என்றோ, ருக்குமணி என்ன ஜாதி என்றோ தீர்மானிக்கும் பொறுப்பை வாசகரிடம் விட்டு விடுகிறார்.

    எந்த ஜாதியின் பழக்கம் நல்லது, கெட்டது என்ற ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை. இதை எல்லாம்விட ருசியான விஷயம் இந்தப் பேச்சின் ஊடே தொக்கி நிற்கும் Irony. எல்லா ஜாதியிலிருந்தும் டீச்சர்கள் உருவாகிறார்கள். ஆனால் ஜாதி வித்தியாசங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருந்துதான் வருகின்றன என்பது.

    இந்த நாவலில் அரசியல் பிரதான பங்கு வகிக்கிறது என்று முன்னமேயே குறிப்பிட்டேன். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும் காவல் துறை நாழியர்களுக்குமான மௌன யுத்தம் ஒருநாள் தெருச் சண்டையாக வெடிக்கிறது. அப்பாவி கண்டக்டர் தங்கராசு எப்படியோ இதில் சிக்கி உயிர் துறக்கிறார். ஒரு தனி மனிதனின் அர்த்தமற்ற சாவு இந்த நாவலாசிரியரைப் பாதித்திருக்கிறது.

    'ஒரு தனி மனிதன் இறந்தால் அது செய்தி; பல்லாயிரக் கணக்கானவர்கள் இறந்து போனால் அது வெறும் புள்ளி விவரம்' என்றார் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் தனலவர் ஸ்டாலின்...

    தங்கராசு என்ற தனிமனிதனின் சாவுச் செய்தி என்ற அதன் ஒற்றைப் பரிமாண நிலையிலிருந்து வளர்ந்து, அதன் அரசியல் சகப் பின்னணிகள் என்ன என்ற விஷயங்கள் ஆராயப்பட வேண்டிய நிகழ்ச்சியாக இரட்டைப் பரிமாணம் பெற்று, கைதேர்ந்த நாவலாசிரியராக சா கந்தசாமியின் இலக்கியத் திறமையால் ஒரு முழுமையான கனலப்படைப்பு என்ற மூன்றாவது பரிமாண வளர்ச்சியைப் பெற்று நிற்கிறது. தமிழ்நாட்டு வாசகர்கள் இந்த நாவலின் தீவிரத்தன்மையையும், சமூக வரலாற்றுத் தன்மையையும், கனவு முதிர்ச்சியையும் அங்கீகரித்து இது சமீப காலத்திய மிகச் சிறந்த படைப்பு என்ற நாலாவது பரிமாணத்தை இதற்கு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

    என்னுரை

    இலக்கியத்திற்கு மரபு உண்டென்பது வாழ்க்கைக்கு மரபும் சரித்திரமும் உண்டு என்பது தான், அதனை தமிழ் மொழியில் அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. விசாரணைக்கமிஷன் எழுதி முடித்த பின்னர் படித்த போது - அது சிலப்பதிகாரத்தை ஓர் இழையாகப் பிடித்துக் கொண்டு வந்துள்ளது தெளிவாகியது. அது மரபின் தொடர்ச்சி, அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் மரபின் தொடர்ச்சி இலக்கியத்திற்கு உண்டு என்பதுதான். அதை அறிந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

    1998-ஆம் ஆண்டில் விசாரணைக்கமிஷன் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1994 ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக கவிஞர் மீரா அன்னம் பதிப்பாக வெளியிட்டார்.

    இரண்டாம் பதிப்பாக, வெகு நேர்த்தியான முறையில் நண்பர் சேது சொக்கலிங்கம் அவர்கள் கவிதா பப்ளிகேஷன் சார்பாக வெளியிடுகிறார். என் நூல்களைக் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர்க்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்,

    - சா. கந்தசாமி

    விசாரணைக் கமிஷன்

    1

    தங்கராசு சீப்பை எடுத்துத் தலையை வாரிக் கொண்டான். வார வார தலையில் இருந்து மயிர் உதிர்ந்து கொண்டிருந்தது. ஐந்தாறு மாதங்களாக மயிர் சுத்தமாக கொட்டிக் கொண்டிருப்பது மாதிரிதான் இருந்தது. ஓரடி முன்னே எடுத்து வைத்துக் கொஞ்சம் போலக் குனிந்து, இன்னொரு முறை கண்ணாடியில் முகத்தை நன்றாகப் பார்த்துக் கொண்டான். உதடுகளில் லேசாகப் புன்சிரிப்பு

    மலர்ந்தது.

    'இது என்ன அநியாயமா இருக்கு! உங்க பெரிய அண்ணனுக்கு முடியெல்லாம் கருகருன்னு இருக்கு. உங்களுக்கென்னா நரை மட்டுமில்லை, வழுக்கையும் விழுந்துப் போச்சே' என்று தங்கராசு மனைவி ருக்குமணி இரண்டு மூன்று மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

    தங்கராசு கொஞ்சம் போலக் குனிந்து இன்னொரு தடவை கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். நரைத்த மயிர் இலவம் பஞ்சு மாதிரி அலைபாய்ந்து கொண்டு இருந்தது. தலையை ஒருமுறை அசைத்து சீப்பைக் கண்ணாடிக்குப் பின்னால் வைத்தான்.

    நான்கு நாட்களுக்கு முன்னால் பழைய சிநேகிதன் ராஜ மாணிக்கம் ஊழியர் கூட்டுறவு சேமிப்புச் சங்கத்தில் பார்த்ததுமே இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு 'என்னப்பா தங்கராசு, தலைமசுரு சுத்தமா பழுத்துப் போயிருக்கே?' என்று கேட்டான்.

    'நீ எப்ப ஊர்ல இருந்து வந்த?'

    'சின்ன வயசிலேயே உங்க குடும்பத்துல தலமசுரு பழுத்துப் போயிடுமா?'

    'நீ ரெண்டு நாளைக்கு இருப்ப இல்ல?'

    'சாயந்தரம் போகணும் அப்பா.'

    'என்ன அவசரம்? வீட்டுக்கு வந்துட்டுப் போ.'

    'வீட்டுக்கு இன்னொரு நாளைக்கு வர்றேன். யூனியன் விஷயமா பேச நம்ப அமைச்சர் கூப்பிட்டு இருந்தார். மத்த ஆளுங்க எல்லாம் யூனியன் ஆபீசில் இருக்காங்க. நான் மட்டும் நம்ப ஆளுங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமேன்னு வந்தேன். '

    'அப்படியா?'

    'நம்ப அமைச்சருக்கு வயது எழுபத்திரண்டு ஆகுது. ஆனா தலையும் மீசையும் கருகருன்னு இருக்குது. என்னடான்னா சாயத்தையள்ளி தலைமசுரு, மீசை, கை, காலுயெல்லாம் பூசிக்கிட்டு இருக்கார்.'

    'கையிலும் காலிலுமா?'

    'வேற எங்கெல்லாம் பூசிக்கிட்டு இருக்காரோ!'

    தங்கராசு ஒரு சிரிப்புச் சிரித்தான்.

    'நீ, மசுரு பழுக்க ஆரம்பிச்சதுமே, சாயம் அடிச்சிக்கிட்டு இருக்கணும்.'

    'அட, நீ போப்பா! '

    'இங்க பாரு. நம்ப தலயெல்லாம் ஒரே சாயந்தான்.'

    'அப்படியா?'

    'பார்த்தா தெரியல.'

    'எங்க தெரியுது?'

    'டீச்சர் அம்மா எப்படி இருக்கு?'

    தங்கராசு தலையசைத்தான்…

    'பொண்டாட்டியை நல்லா பாத்துக்கப்பா.... கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னு கேள்விப்பட்டேன். இப்பப் பரவாயில்லயா?'

    'தேவலாம்.'

    'ஆம்பளைக்கு நாப்பது வயசுக்கு மேல பொண்டாட்டி தான் தெய்வம்.!'

    தங்கராசு ஒரு சிரிப்புச் சிரித்தான்.

    'நான் நிஜத்தைத்தான் சொல்லுறேன். கொஞ்சம் போனா உனக்குத் தெரியும்.'

    'தங்கராசு அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தான். மீட்டிங் சீக்கிரமா முடிஞ்சிட்டா, நான் வந்து டீச்சர் பாக்கறேன்.'

    'சரி.'

    'நீ வீட்டுலதான இருப்ப?'

    'ஆமாம்.'

    'டீச்சர் கிட்ட சொல்லு, நான் ரொம்ப விசாரிச்சேன்னு.'

    'சரி'

    தங்கராசு இடது கையால் தலையைத் தடவி விட்டபடி உள்ளே சென்றான். ருக்குமணி கட்டிலில் காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. அவன் ருக்குமணியையே பார்த்தபடி இருந்தான்.

    அது ஓர் ஆகஸ்டு பதினைந்து. அவனுக்கு ஆஃப்; விடுமுறை, அப்படி வருவது அபூர்வந்தான். கூட டிரைவராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி தம்பி குருமூர்த்தி ஆடு வெட்டினான். சுதந்திரத்திற்குச் சுதந்திரந்தான் குருமூர்த்தி ஆடு வெட்டுவான். அவனிடம் இருந்து பத்து மணிக்கே ஒரு சட்டி ரத்தம், ஈரல், கறி எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டான். ஆனால் பதினொரு மணி வரையில் ருக்குமணி வரவில்லை. அவனாலும் உட்கார்ந்து இருக்க முடியவில்லை. வாசல் பக்கம் வந்து நின்று சாலையையே பார்த்தபடி இருந்தான். கூட்டம் கூட்டமாகப் பெண்கள் போய்க் கொண்டு இருந்தார்கள். அவர்களில் அவள் இல்லை. அவன் திரும்பி வந்தான். தாகம் எடுப்பது மாதிரி இருந்தது. தம்ளரை எடுத்துத் தண்ணீர் மொண்டு குடித்தான், தண்ணீர் மேலே எல்லாம் சிந்தியது.

    நாற்காலியைப் பரபரவென்று ஜன்னல் பக்கம் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். வேலியை ஒட்டியிருந்த முருங்கை மரத்தில் இருந்து காக்கை கத்தியது. அவன் காலைத் தூக்கி ஜன்னல் மீது போட்டுக் கொண்டு. கண்களை மூடிக் கொண்டிருந்தான். மணி பன்னிரண்டு அடித்து ஓய்ந்தது, ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்து விட்டு மறுபடியும் மூடிக் கொண்டான்.

    சரோஜினி டீச்சரோடு திரும்பி வந்த ருக்குமணி வீட்டுக் கதவு திறந்து இருப்பதைப் பார்த்ததும், 'அவுங்க இருக்காங்க' என்று அவளுக்கு விடை கொடுத்து விட்டு அவசர அவசரமாக உள்ளே வந்து,' என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க?' என்று கேட்டாள்.

    'புடுங்கிக்கிட்டு இருக்கேன்.' அவள் ஓரடி பின்னால் எடுத்து வைத்தாள்.

    'பன்னண்டு மணி வரைக்கும் என்னத்த ஏத்திக்கிட்டு இருந்த?'

    'விமலா டீச்சர் பொண்ணு பெரிய மனுஷியாகிட்டான்னு கூப்பிட்டாங்க - அதுக்கு எல்லா டீச்சரும் போனாங்க. அதனால கொஞ்சம் நேரம் ஆயிடுச்சி.'

    'அதெல்லாம் சொல்லிட்டுப் போறது இல்ல?'

    அவள் அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

    'நம்ப குருமூர்த்தி ஆடு வெட்டினான். ரத்தம், குடல் எல்லாம் கொஞ்சம் புடிச்சியாந்து இருக்கேன்.'

    'இன்னிக்கா?'

    'லீவுதானே?'

    ருக்குமணி சமையல் அறைக்குள் சென்றாள். அடுப்பு மேடை மீது எவர்சில்வர் பாத்திரத்தில் ஆட்டுக்கறி. ஒரு மண் சட்டியில் ரத்தம் உறைந்து போய் ஏதோ ஆடை மாதிரி இருந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் லுங்கியை அவிழ்த்துக் கட்டிக் கொண்டே, 'உனக்குப் புடிக்குமென்னு தான் ரத்தம் புடுச்சிக்கிட்டு வந்தேன்' என்றான்.

    அவள் பதிலொன்றும் சொல்லாமல் திரும்பிப் படுக்கை அறைக்குள் சென்றாள். கொடியில் கிடந்த பழைய புடைவையைக் கையில் எடுத்துக் கொண்டு பட்டுப் புடைவையை அவிழ்க்க ஆரம்பித்தாள். தங்கராசு உள்ளே வந்து அவளுக்கு நேர் எதிரே உட்கார்ந்தான்.

    அவள் அவிழ்த்த புடைவையைக் கையில் பிடித்துக் கொண்டு, 'நீங்க எழுந்திரிங்க' என்றாள்.

    'ஏன்? எதுக்கு?'

    'எழுந்திரிங்கன்னா?'

    தங்கராசு திடீரென்று எழுந்து அவள் பட்டுப் புடைவையை இழுத்துவிட்டு விட்டு ஒரு சிரிப்புச் சிரித்தான்.

    'ச்சீ, ச்சீ. அசிங்கமா இல்ல?' என்று அவள் அவசர அவசரமாகப் புடைவையை எடுத்து உடம்பில் சுற்றிக் கொண்டாள்.

    'இப்பதான், ரொம்ப வெட்கம்' என்றபடி அவன் வெளியில் வந்தான்.

    ருக்குமணி அறைக்கதவைத் தாழ்ப்பாள் போட்டு புடைவையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள். அவன் டி. வி. யில் படம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

    அவள் சமையல் அறைக்குள் நுழைந்து ஆட்டுக் கறியைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    'எலும்பு இல்லாத கறியாப் போடச் சொன்னேன். நல்ல கறியாப் போட்டு இருக்கானா?'

    ருக்குமணி தலையசைத்தாள். 'நம்ப குருமூர்த்தி சுதந்திரத்துக்குச் சுதந்திரந்தான் ஆடு அடிப்பான்.'

    'அதென்ன அப்படி?'

    'என்னமோ, அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. நல்ல வெள்ளாடு கொழுகொழுன்னு திரிஞ்சிக்கிட்டு இருந்துச்சி.'

    'சரி, நீங்க போய் இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாம் வாங்கிக் கிட்டு வாங்க!

    'இப்பவே வா?'

    அவள் திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தாள்.

    'ரத்தம் சுண்ட தேங்கா இருக்கா?'

    'ரெண்டு தேங்கா இருக்கு.'

    'சரி,' தங்கராசு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.

    ருக்குமணி கறியையும் அரிவாள்மனையையும் எடுத்துக் கொண்டு கீழே உட்கார்ந்தாள்.

    'வேற என்ன வேணும்?'

    'போயி சீக்கரமா வாங்க.'

    கறி வறுத்து, ரத்தம் சுண்டி, குழம்பு வைத்து முடிக்க அவளுக்கு நேரமாகிவிட்டது. தங்கராசு இரண்டு முறை, இன்னும் ஆகலியா ருக்கு?' என்று கேட்டுக் கொண்டு உள்ளே வந்து நின்றான்.

    'இப்ப ஆகிடும்.'

    'பாரு. மணி ரெண்டு அகுது.'

    'செத்த இருங்க.'

    'ராத்திரிக்குத்தான் நீ சோறு போடுவ.'

    'இல்ல... இல்ல... இதோ ஆகிடுச்சி.'

    அவள் அவசர அவசரமாகப் பறந்தாலும் மூன்று மணிக்குத் தான் எல்லாம் தயார் ஆனது. தட்டை எடுத்து முன்னே வைத்துச் சாப்பாடு போட்டாள். தங்கராசு லுங்கியை

    Enjoying the preview?
    Page 1 of 1