Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neelavan
Neelavan
Neelavan
Ebook237 pages1 hour

Neelavan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீலவன் ஒரு நாவல்.

அது ஒர் ஊரின் கதையைச் சொல்கிறது என்பது போலவே ஊரில் உள்ள மக்களின் கதையைச் சொல்கிறது. ஊர் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா ஊர்களும் ஒன்றில்லை. அப்படியே மனிதர்களும், ஒன்றுபோல் இருக்கும் மனிதர்களும் ஒன்று கிடையாது. அதுதான் ஊரின் சிறப்பு; மனிதர்களின் இயல்பு.

ஒர் ஊரில் பிறந்து வளர்ந்து படித்து இன்னோர் ஊருக்குப் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மனிதர்களின் பேச்சும், செயலும் ஊர் என்பதற்கு அடையாளமும், மனிதன் என்பதற்குப் பொருளும் கொடுக்கிறது.

மனிதனின் கதை என்பதின் சுவாரசியம், சொல்லப்படுவது மாதிரியே சொல்லப்படாமல் இருக்கும் கதையையும் சேர்ந்துதான் இருக்கிறது. அதுதான் நீலவன் நாவல்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125104138
Neelavan

Read more from Sa. Kandasamy

Related to Neelavan

Related ebooks

Reviews for Neelavan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neelavan - Sa. Kandasamy

    http://www.pustaka.co.in

    நீலவன்

    Neelavan

    Author:

    சா. கந்தசாமி

    Sa. Kandasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sa-kandasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    முன்னுரை

    நீலவன் ஒரு நாவல்.

    அது ஒர் ஊரின் கதையைச் சொல்கிறது என்பது போலவே ஊரில் உள்ள மக்களின் கதையைச் சொல்கிறது. ஊர் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா ஊர்களும் ஒன்றில்லை. அப்படியே மனிதர்களும், ஒன்றுபோல் இருக்கும் மனிதர்களும் ஒன்று கிடையாது. அதுதான் ஊரின் சிறப்பு; மனிதர்களின் இயல்பு.

    ஒர் ஊரில் பிறந்து வளர்ந்து படித்து இன்னோர் ஊருக்குப் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மனிதர்களின் பேச்சும், செயலும் ஊர் என்பதற்கு அடையாளமும், மனிதன் என்பதற்குப் பொருளும் கொடுக்கிறது.

    மனிதனின் கதை என்பதின் சுவாரசியம், சொல்லப்படுவது மாதிரியே சொல்லப்படாமல் இருக்கும் கதையையும் சேர்ந்துதான் இருக்கிறது. அதுதான் நீலவன் நாவல்.

    நாவல் என்பதற்குச் சொல்லப்படும் எந்த இலக்கணமும் நாவல் சார்ந்திருப்பது இல்லை. ஒவ்வொரு நாவலும் நாவல் என்பதற்குச் சொல்லப்படும் இலக்கணத்தைத் தகர்த்துக் கொண்டே இருக்கிறது. சிலர் அதனைத் தெரிந்து கொண்டு எழுதுகிறார்கள்; பலர் தெரியாமல் எழுதுகிறார்கள். அதுதான் நாவல் என்பதின் சரித்திரம்.

    நூறு மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி ஆயிரம் நாவல்கள் எழுத இடமுண்டு. ஏனெனில் மனிதன் ஒன்றில்லை. அவன் புறத்தே ஒன்றுபோல் இருக்கிறானே தவிர அகத்தால் ஒன்றில்லை. அதனை அவன் பேச்சும், செயலும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

    அதுவே மனிதன் அறிய முடியாதவன் என்பதையும் - அறிந்து என்பதெல்லாம் அறிந்ததாகாது என்பதை நிலைநாட்டுவதாகவும் இருக்கிறது. அதனை அதாவது அறிய முடியாத மனிதனின் வாழ்க்கையைப்பற்றி அறிந்தது மாதிரியும்; அறியாதது மாதிரியும் நாவல்கள் எழுதப்பட்டு வருகின்றன. இவ்வகை நாவல்களுக்குத் தேசம் கிடையாது. மொழி இல்லை. இடம் காலமென்ற பிரக்ஞையும் கூட இல்லை. ஆனால் மனிதன் போல எங்கும் ஜீவித்துக் கொண்டிருப்பது நாவல்.

    அறிந்த மனிதனின் வாழ்க்கையை அறிய முடியாதது என்பதை அறிய முடியாத முறையிலேயே சொல்லும் நாவல் அதிகமான முக்கியத்தும் பெறுகிறது. அது இலட்சியம் சார்ந்தது. அறிவு என்பதால் அறிய முடியாத மனிதனின் அறியவொண்ணாத வாழ்க்கை என்பது ஒன்று உண்டு. அதனை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை, வாழ்வது என்பதுதான் முக்கியம். ஆனால் வாழ்க்கை என்பது என்ன?

    நீலவன் நிஜமா? கற்பனையா?

    நிஜமெனில் யாருடையது?

    கற்பனையெனில் எவருடைய சிருஷ்டி.

    நீலவன் எங்கிருந்து வந்தான். எங்கு சென்றான். அவனைக் கண்டது யார்? கண்டவர்கள் சொன்னது என்ன? நீலவனைக் கண்டதற்கும் சொன்னதற்குமிடையில் என்ன இருக்கிறது.

    நீலவனின் நிஜக்கனவு. எழுதப்பட்டு விட்டது. அதனைத் திருப்பிச் சொல்ல முடியாது. அது ஆற்றில் ஓடிய தண்ணீர், இன்னொரு முறை திருப்பிக்கொண்டு வர முடியாது.

    எழுதப்பட்ட நாவலைத் திருப்பி அதேமாதிரி சொல்ல முடியாது; வாசிக்கிறவர்களால் என்பதுதான் இல்லை, எழுத்தாளனாலும் கூடத்தான். அதனால்தான் எழுத்து என்பது மதிப்படைகிறது.

    நீலவன் என்பது ஒரு பெயர்தான். அவன் எங்கும், எப்போதும் மனிதர்களோடு இருக்கிறான். சிலசமயத்தில் அவனைச் சந்திக்க நேர்கிறது; பேசவும் அவன் பேச்சைக் கேட்கவும் முடிகிறது. அவனைக் கண்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள் பேச்சைக் கேட்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வது மிகையல்ல. வாழ்க்கை என்பது அறிந்தது போல அறியாததும் சேர்ந்ததுதான். அறியாததை அறியாததாகவே சொல்வதுதான் நீலவன். அவன் புறத்தே இல்லையெனில் அகத்திலும் இல்லை, அகத்தில் இருக்கிறான் என்றால் புறத்திலும் இருக்கிறான். அவனைக் காண்பதும்; காணாமல் இருப்பதும் அவரவர் சம்பந்தப்பட்டது.

    2009 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி ‘Writers in Residency' என்ற திட்டத்தில் சில இந்திய எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து எங்கு வேண்டுமானாலும் சென்று எழுதுங்கள் என்று வசதி செய்து கொடுத்தது.

    ‘Writers in Residency' திட்டத்தில் மைசூரில் தங்கியிருந்து எழுதப்பட்ட நாவல் 'நீலவன்'.

    சாகித்ய அகாதெமிக்கும், அதன் தமிழ் ஆலோசனைக்குழு கன்வீனர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி.

    சா. கந்தசாமி

    3.4.2000

    மைசூர்.

    சமர்ப்பணம்

    சகோதரர் திருமேனி நினைவிற்கு

    1

    அது கோடைக்காலம். சித்திரை மாதம்.

    இளங்காலைப் பொழுது. இருள் பிரியாமலும், கதிரவன் ஒளி பரவாமலும் இருந்தன. ஆனால் பறவைகள் உறங்கியெழுந்து சப்தமிட்டபடி பறந்து சென்று கொண்டிருந்தன. சாலையில் பால் லாரிகளும், தண்ணீர் லாரிகளும் ஓடியபடி இருந்தன.

    நகரம் விழித்தெழுந்து விட்டது.

    புங்க மரத்தடியில் பால் பூத்தில் வேலாயுதம் நின்று கொண்டு இருந்தான். அவன் காலடியில் கூடை நிறைய பால் கவர்கள் இருந்தன. அவனுக்கு வயது ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும். தென்றல் நகரில் இருபத்தொரு வீடுகளுக்கும், நாற்பத்தேழு பிளாட்டுகளுக்கும் காலையில் பால் கொண்டு போய் கொடுப்பது அவன் வேலை. மூன்று ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்து வருகிறான். ஒரு பால் கவருக்குப் இருபது காசு. அந்தக் காசுக்காக அவன் வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அதை அவன் ஒரு வேலையென்றே கருதியதில்லை. காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுகின்ற ஆள் அவன். அப்புறம் செய்யக்கூடிய வேலையாக அது ஒன்றுதான் இருந்தது. முதலில் நான்கு வீடுகளுக்குப் பால் கொண்டு போய் கொடுத்தான். அப்படியே அது பெருகிவிட்டது.

    காலையில் ஐந்து மணிக்கெல்லாம் லாரி புங்க மரத்தடி பால்பூத்தில் பால் போட்டு விட்டுப் போய்விடும். ஆள் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி. அதற்கு அரசாங்கம் நியமித்த ஆள் உண்டு. ஆனால் அவன் ஐந்து மணிக்கு அநேகமாக வருவது இல்லை. எனவே வேலாயுதம் பால் கவர்களை வாங்கி வைக்கும் வேலையையும், கார்டுகாரர்களுக்குப் பால் கவர் கொடுக்கும் வேலையையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    வேலாயுதம் சரியாகத்தான் வேலை பார்த்தான். ஆனால் அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் பால் கூடையைத் தூக்கிக்கொண்டு பால் போடக் கிளம்பிப் போய்விடுவான். எனவே பால்பூத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டன. கோபாலகிருஷ்ணன் - ஒய்வு பெற்ற தாசில்தார், தனக்குப் பால் கிடைக்கவில்லை எனப் பால் வளத்துறை உதவி ஆணையாளருக்கு டெலிபோன் செய்தார். ஓட்டைப் பால் கவர் கிடைக்கிறது எனச் சிலர் புகார் செய்தார்கள். எனவே புங்க மரத்தடி பால் பூத்திற்குச் சரியான ஆளைத் தேடிக் கண்டு பிடித்து முன்னாள் இராணுவ வீரரான முருகு பாண்டியனை நியமித்தார்கள்.

    முருகுபாண்டியனுக்குச் சுமாராக நாற்பத்திரண்டு வயது இருக்கும். நல்ல கறுப்பு. தெற்கத்தி ஆள் மாதிரி இருந்தான். முகத்தில் பெரிய மீசை. இரண்டு பக்கமும் திருகி விட்டுக் கொண்டிருந்தான். காலையில் பச்சைத் தண்ணீரில் குளித்து விட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையில் பால்பூத்திற்கு வந்தான். அவனைப் பார்த்தால் பால் விநியோகம் செய்யும் ஆள் மாதிரியே இல்லை. ஏதோ பெரிய அதிகாரி மாதிரி இருந்தான்.

    முருகு பாண்டியன் புங்க மரத்தடி பால்பூத்திற்கு நான்கரை மணிக்கே வந்தான். கதவைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு ஊதுவத்தி கொளுத்தி வைத்தான். தாழம்பு மணம் எங்கும் பரவியது. அவன் ஒரு தினுசான ஆளாக இருந்தான். அதில் முதல் அம்சம் கார்டு இல்லாமல் பால் கொடுப்பது இல்லை. கடன் கிடையாது. யாரிடமும் அனாவசியமாகப் பேசுவதில்லை. ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்வான். கொஞ்சம் விளக்கம் கேட்டால் பால்வளத்துறை அலுவலகத்திற்குச் சென்று கேட்டுக்கொள்ளச் சொல்லிவிடுவான்.

    அவனுக்குக் கை சரியில்லை. பார்த்தால் தெரியாது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டால் அடிபட்டு மூன்று மாதங்கள் டில்லி இராணுவ மருத்துவமனையில் இருந்ததாகச் சொல்வான். அவன் பொய் பேசக்கூடிய ஆளில்லை. நடந்ததை நடந்தது மாதிரி சொல்லத் தெரிந்தவனும் இல்லை. நடந்தது மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டான். அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

    புங்க மரத்தடி பால்பூத் முருகுபாண்டியனைப் பற்றி, அவன் ரொம்பக் கறாராக இருக்கிறான் என்பது பற்றிய நிறைய புகார்கள் பால்வளத்துக்குச் சென்றன. அதில் முதல் புகார் முன்னாள் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் எழுதினார். அவர் பால்வளத்துறை ஆணையாளர்க்கு, 'எங்கள் தென்றல் நகர் குடியிருப்புப் பகுதியில் புங்க மரத்தடியில் ஒரு பால் பூத் இருக்கிறது. அதில் ஒரு பேயாண்டியை போட்டிருக்கிறீர்கள். அவன் எதற்கெடுத்தாலும் சட்டம் என்றான். நான் முப்பத்தொரு வருஷம் சர்க்காரில் காரியம் செய்து ஓய்வு பெற்று இருக்கிறேன். என்னை வாரிசையில் வந்து பால் எடுத்துப் போகச் சொல்கிறான். ஒரு முதிய குடிமகனை, ஓய்வு பெற்ற தாசில்தாரை ஒரு சாதாரணமான பால்காரன் நடத்தும் முறை எப்படி இருக்கிறது. அதனால் சர்க்கார் ஊழியர்களுக்கு மரியாதை இல்லாமல் போகிறது. அதனை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது என் கடமையெனக் கருதி எழுதுகிறேன். அவன்மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு அரசாங்க விதி முறைகளின்படி நடந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டுகிறேன்' என்று எழுதி பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தார்.

    பதினைந்து நாள்களுக்குப் பிறகு, பால்வளத்துறை ஆணையாளரிடம் இருந்து, ‘தங்களின் கடிதம் கிடைத்தது. அது தீவிரமான பரிசீலனையில் இருக்கிறது. பின்னர் விவரம் தெரிவிக்கப்படும்' என்று எழுதப்பட்டிருந்தது. தன் புகார் கடிதத்திற்குப் பதில் கிடைத்தது கோபாலகிருஷ்ணனுக்குத் திருப்தியாக இருந்தது. இன்னும் ஒரு மாதத்திற்குள் முருகுபாண்டியனனப் புங்க மரத்தடி பால்பூத்தில் இருந்து தூக்கி அடிக்கப்பட இருக்கிறான் என்று நடைப்பயிற்சியின் போது சங்கரராமனிடம் சொன்னார்.

    ஏன்? அவன் ஒழுங்காதானே வேலை செய்யறான்.

    நீதான் அவன் ஒழுங்கை மெச்சிக்கணும்.

    இப்படிச் சொன்னா. உன்ன அவன் என்ன பண்ணினான்?

    என்ன பண்ணினானா? அவன செருப்பால அடிச்சி இருக்கணும். ஏதோ அவன் நல்ல காலம். பேசாமல் வந்துட்டேன்.

    பெரிய சண்டையா? அவன் வந்ததில் இருந்து பால்பூத்தில் சப்தம் ரொம்பக் கேட்கறது இல்ல.

    உனக்குக் காது செவிடா போயிடுச்சி. டாக்டரைப் பார்.

    என்ன விஷயம்? சொல்லு, நான் விசாரிக்கறேன்.

    அவன் ஆள் நீ. அதான் அவனுக்குச் சார்பா பேசிக்கிட்டே வர்ற, தென்றல் நகரை அமைப்பதிலே நான்தான் முதல்ல இருந்தேன். வீட்டு வசதித்துறை அமைச்சரை பத்து முறைக்கு மேல் சந்தித்தேன். பால் பூத்திற்கு நான்தான் ஐடியா கொடுத்தேன். நான் இல்லேன்னா தென்றல் நகரில் பால்பூத்தே வந்து இருக்காது. எம்.எல்.ஏ. முல்லை நகருக்குப் பால் பூத்தைத் தூக்கிக்கிட்டுப் போகத் துடியா துடிச்சான்...

    கோபால்... நீ என்னமோ சரியில்ல... டாக்டரைப் பாரு.

    "டாக்டரை நான் இல்ல. நீதான் முதல்ல பார்க்கணும்... நான் சாயந்தரமா உன் மருமகளிடம் வந்து சொல்லுறேன்.

    அது சிங்கப்பூருக்கு டூர் போய் இருக்கு. வர ஒரு வாரம் ஆகும்.

    அதனாலதான் நீ இப்படி எல்லாம் பேசுற. இரவு வீட்டுக்கு வா. சப்பாத்தி சாப்பிடலாம்...

    அதுக்கெல்லாம் ஒன்றும் குறையில்லை. மருமகள் மெஸ்ஸில் ஏற்பாடு பண்ணிட்டுப் போய் இருக்கு.

    சரி, பால்பூத்காரன் மேல உனக்கு என்ன கோபம்?

    அவன முதல்ல இங்க இருந்து கிளப்பிட்டுத்தான் மறுவேல. நான் யாரென்று உனக்குத் தெரியும். அவனுக்குத் தெரியாது. அதைக் காட்டப் போறேன். நீ, அவன் எல்லாம் பார்க்கப் போறீங்க என்றபடி கோபாலகிருஷ்ணன் தன் வீடு நோக்கி கைகளை வீசியபடி நடக்க ஆரம்பித்தார்.

    சங்கரராமன் சிறிது நேரம் நின்றார். பிறகு தன் வழியே நடந்தார்.

    2

    வேலாயுதம் ஐம்பத்தொரு பால் கார்டுகளையும், முருகுபாண்டியனிடம் கொடுத்தான். அவன் வேகமாக எண்ணிப் பார்த்து விட்டு, பால் கவர்களை எடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னான். சில நேரங்களில் அவனே எடுத்து வைப்பான். தன் வேலையைத் தானே செய்ய வேண்டும், இன்னொருவரிடம் தள்ளி விடக்கூடாது என்பதுதான் அவன். அதனால் அவனுக்கு ஒன்று ஒன்றாகப் பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தன. முதல் பிரச்சினை, அவன் யாரையும் மதிப்பது இல்லை. அவன் யாரையும் நம்புவதில்லை. பால் கவர் எடுத்துக் கொடுக்க அனாவசியமாக தாமதப்படுத்துகிறான். நம் ஊர் பழக்கம் தெரியவில்லை. இராணுவ வீரனாக இருந்து இருக்கலாம்; ஆனால் நடைமுறை வாழ்க்கை தெரியவில்லை. பழைய ஆள் அடாவடியாகத் திருடனாக இருக்கலாம். ஆனால் மரியாதை தெரிந்தவனாக இருந்தான். இவனுக்கு மரியாதை தெரியவில்லை. சமாளிக்க முடியவில்லை என பால்வளத்துறைக்குப் புகார்கள் போய்க்கொண்டே இருந்தன.

    ஒருமுறை பால்வளத்துறை அதிகாரி அவனை அலுவலகத்திற்கு வரவழைத்து, "என்ன முருகு, எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1