Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

K. Balachandar
K. Balachandar
K. Balachandar
Ebook214 pages1 hour

K. Balachandar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏப்ரல் மாதம் 2004ல் ஆரம்பித்தது இந்தப் புத்தகத்திற்கான வேலை. என் சகோதரர் வஸந்த் சொல்லி, கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி புஷ்பா கந்தசுவாமி அவர்களை அவர்களது அபிராமபுரம் வீட்டில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்தேன். பேசினோம். ''அப்பா இதுவரை சொல்லாதவற்றைப் பற்றி சொல்ல இருக்கிறார்கள். மனம் திறக்க இருக்கிறார்கள்'' என்றார் மகள்.

நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் சென்னைக்கு அருகில் இருக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் காத்திருக்கையில் கைபேசியில் அழைப்பு வந்தது. பேசியது புஷ்பா கந்தசுவாமி அவர்கள்தான். இன்றைக்கு மீட் பண்ணலாமா? ஆறு மணிக்கு'' என்றார்கள்.

அதற்கு முன் அவரது அலுவலகம் சென்று ‘பேப்பர் கட்டிங்க்ஸ்' மற்றும் ஏனைய பைல்கள் பார்க்க ஏற்பாடானது. கே.பி அவர்களது அலுவலக அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். மேசைமீது பல்வேறு பைல்கள். பைல்களை புரட்டப் புரட்ட பிரமிப்பு வந்து பின்பு அதுவே மலைப்பாகி, இந்த மலையை எப்படிப் புத்தகம் என்ற டப்பாவிற்குள் அடக்குவது என்கிற அச்சம் வந்தது.

15.8.2004 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கே போய்விடுகிறேன். திரு. கே.பி. அவர்களின் வாரன் ரோடு வீடு. கே.பி. 3.25-க்கு வருகிறார். ஆரம்பிக்கிறோம்.

மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், ரெஸ்ட் தேவை என்றும் சொல்லிவிட்டார்கள். அதனால்தான் ஆரம்பிப்பதில் தாமதம் என்று சொன்னார். அவர் ரொம்ப 'திங்க்' பண்ணக் கூடாதாம்.

அவரது டேப்ரிக்கார்டரை எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் கை லேசாக நடுங்குவதைப் பார்த்தேன். அவ்வளவு தளர்ந்து போயிருந்தார். அவ்வளவு பெரிய ஜாம்பவானை, சிங்கத்தை அவரது முழு வேகத்தில் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. "புஷ்பாவும் வஸந்தும் கம்பெல் செய்ததால்தான் இதற்கு சம்மதித்தேன்'' என்றார்.

முதலில் ஊர், பிறப்பு, தந்தை, படித்த பள்ளி பற்றி பேச்சு போனது. அடுத்து தங்கை பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. பேச்சை நிறுத்திவிட்டு டேப்பை ஆப் செய்தார். சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு, Re-living என்றார்.

இருபது முதல் இருபத்து ஐந்து முறை வரை அவரை சந்தித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் குறைந்தது இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். அனேகமாக எல்லா மீட்டிங்கும் அவரது வாரன் ரோடு வீட்டில் அவரது அறையில்தான். மாலையில்தான். யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். அப்போது அவரிடம் எடுத்த பேட்டியின் சுருக்கம்தான் இந்தப் புத்தகம். அவரது ஆரம்பகால வாழ்க்கை, நாடகங்கள் மற்றும் திரைப்பட பிரவேசம் குறித்து அவரே சொல்லச் சொல்லக் கேட்டு எழுதப்பட்டவை.

ஒரு குறிப்பிட்ட நேரம் அவர் 'பொய்' திரைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டதால் சந்திப்பு நின்றுபோனது. அதன்பின் தொடரவில்லை. அதன் பின் ஒன்றிரண்டு பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தபோது, எப்போது தொடரலாம் என்று கேட்டதற்கு, செய்யலாம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.

ஆண்டுகள் பல ஓடிவிட்டன. டிசம்பர் 2014ல் மறைந்துவிட்டார். அவர் மறைவின்போது சன் நியூஸ் தொலைக்காட்சி அவரது இறுதி ஊர்வலத்தை நேரடி ஒலிபரப்பு செய்தது. அது சமயம் நிலையத்துக்கு அழைத்தும், தொலைபேசி வாயிலாகவும் அவருடன் பழகிய பணியாற்றிய பலரிடமும் பேட்டி எடுத்தார்கள். அப்போது நிகழ்ச்சியை நடத்திய திரு. பாலவேல் தொலைபேசி வாயிலாக என்னிடம் கே.பி.யின் படங்கள் பற்றிக் கேட்டார். நான் என் பார்வையைச் சொன்னதுடன் அவருடன் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு எழுதிய அனுபவத்தைப் பற்றியும் குறிப்பிட்டேன்.

அதற்கு பாலவேல், தானும் அவரைப் போல பாலசந்தர் அவர்களின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக சொன்னார். அப்போதுதான் எனக்கு எழுதியது வரையிலான, என் புத்தக அலமாரியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த, கே.பி. அவர்களே சொல்லிய, அவர் பற்றிய தகவல்களைத் தமிழ் மக்களுடன் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

கே.பி. எவ்வளவு பெரிய படைப்பாளி! அவரே அவரைப் பற்றியும் அவரது அந்தக் கால எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்தும் சொல்லியவை இவ்வளவு இருக்கிறதே. இதை நான் மட்டும் தெரிந்து கொள்ளவா அவர் சொன்னார்! அவரது வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள, அவரது ஆர்வங்கள், முயற்சி, உழைப்பு, வெற்றிகள் மற்றும் மேன்மை குறித்து உலகம் அறிந்து கொள்ள என்னிடம் இருக்கும் அரிய தகவல்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இதில் இருக்கும் தகவல்கள் பலருக்கும் அரியனவாகவும் சில புதியனவாகவும் இருக்கும். முக்கியமாக மிகச் சரியாக இருக்கும். அதில் எந்த ஐயமும் வேண்டாம்.

நன்றி.
சோம வள்ளியப்பன்.
writersomavalliappan@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580110104688
K. Balachandar

Read more from Soma Valliappan

Related to K. Balachandar

Related ebooks

Reviews for K. Balachandar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    K. Balachandar - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    கே.பாலசந்தர்

    K. Balachandar

    Author:

    சோம. வள்ளியப்பன்

    Soma. Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உயிரோட்டமான பதிவு

    புத்தகம் வாசிக்கும் போது கண்கலங்குவது ஒருவகை. எண்ணங்களின் தாக்கத்தால் கண்ணீர் சுரப்பிகள் உசுப்பப்பட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் உருண்டோடுவது ஒருவகை.

    இவை இரண்டும் போல் அல்லாமல், படிக்கும் போது தாரைதாரையாக கண்கள் பொழிந்த வண்ணம் இருப்பது முற்றிலும் வேறுவகை அனுபவம். அப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்தது இந்தப் புத்தகம்.

    இதன் ஹீரோ எனது வாழ்க்கையின் ஹீரோவான எனதருமைத் தந்தை திரு. கே. பாலசந்தர் என்பது முக்கிய காரணம் என்றாலும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு உரமாக அமைந்த இளமைக்கால அனுபவங்களின் உயிரோட்டமான பதிவு இது என்பது அதிமுக்கிய காரணம்.

    அப்பா- பெண் என்ற உறவு முறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில் முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள். சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்க விட்டுப்போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பல உண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல், அவர் யார், வாழ்க்கையைப் பற்றி அவருடைய அணுகுமுறை என்ன? அவருடைய கனவுகள், அவற்றை அடைய அவரிடம் இருந்த பண்புகள், அவரை வழிநடத்திச் சென்ற மனிதர்கள், கால் பதித்த தடங்கள், ஆளுமையைச் செதுக்கிய சம்பவங்கள் எல்லாம் அடங்கிய அழகிய நீண்ட கட்டுரையாக அமைந்திருக்கிறது இப்பதிவு.

    அவர் பிற்காலத்தில் மாபெரும் இயக்குனாராக வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். இந்தப் புத்தகத்தில் காணப்படும் தகவல்கள் அனேகருக்கு புதிதாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும் என்பது சத்தியமான வார்த்தைகள்.

    அப்பாவுக்கு வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். உடன் பயணித்த மனிதர்கள் குணச்சித்திரங்கள். இப்படித்தான் அவருடைய அணுகுமுறை இருந்திருக்கிறது.

    சோர்ந்து போகாத மனநிலை, ஏமாற்றத்தையும் சகஜமாக எடுத்துக்கொள்கிற மனோதிடம், வெற்றி தோல்விகளை கைக்குள் அடக்கிக்கொண்டிருந்த பக்குவம். இவை சிறுவயது முதல் அவரை ஆட்கொண்ட பண்புகள்.

    'செய்வன திருந்தச்செய்', 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதெல்லாம் அவரைப் பொறுத்த மட்டில் வெறும் வார்த்தைப் பிரயோகங்கள் அல்ல. தாரக மந்திரங்கள். தகப்பனின் அதீத கட்டுப்பாட்டையும் தாண்டி, அவருடைய கற்பனைத் திறனும், படைப்புத் திறனும் பரிமளித்திருக்கிறது என்றால் எத்தகைய விடாமுயற்சிக்காரராக அவர் இருந்திருக்க வேண்டும்!

    உடன்பிறந்தவர்களின் சோகத்தைக் கூடவே சுமந்து நின்ற நிலையிலும், தன் இலக்கு நோக்கிய கவனத்தை சிதறவிடாமல் சாதித்தவருக்கு எத்தனை சுயநம்பிக்கை இருந்திருக்க வேண்டும். தன்படைப்புகள் மூலம் Message சொன்ன அவருடைய வாழ்க்கையே எங்களுக்கெல்லாம் Message தான்!

    இறுதிவரையில் கலைத்துறையில் உயிர்ப்போடு உறவாடியபடி இயற்கை எய்திய மாமனிதர் இன்னும் பலபல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் போனதில் வருத்தம்தான்.

    திரு.சோம வள்ளியப்பன் அப்பாவிடம் நேரடியாகப் பேசிக்கேட்டு வாங்கிய நினைவு பகிர்தல்களை சுவை குன்றாமல் உணர்வுப் பூர்வமாய் பதிவு செய்திருக்கிறார். முற்றுப்பெறாத பதிவாக இருந்தாலும், அப்பா சொன்ன விஷயங்களை வாசகர்களுடன் பகிர்வது தன் கடமை என அவர் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியே. அந்த மகா மேதைக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஒரு அற்புதமான பாலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

    கட்டுப்பாடுக்குப் பெயர்போன, ஆங்கிலப் புலமை வாய்ந்த கிராம முனிசீப் கைலாச அய்யரைப் பார்த்தேயிராத ஏக்கமும், படுசுட்டி இளைஞனான பாலசந்திரனுடன் நல்லமாங்குடித் திண்ணையிலும் அன்ணாமலைப் பல்கலைகழக அரங்கத்திலும் அருகில் இருந்து ஆராதிக்கும் வாய்ப்புக் கிடைக்காமலே போன ஏக்கமும் என்மனம் முழுதும் வியாபித்திருப்பது உண்மை.

    சினிமா, தொலைக்காட்சி, நாடகத்துறைகளில் மோகம் கொண்ட அனைவரும் இந்தப் பதிவைப் படிக்க வேண்டும் என்பது என் அவா. அப்படிப் படித்தால் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட கே.பி. என்னும் மாபெரும் கலைஞனை அருகே இருந்து பார்க்கும் சுக அனுபவம் உங்களுக்குக் கிட்டும். அத்துடன் வெற்றி, பெயர், புகழ் எல்லாம் சில்லரைக்குக் கிடைக்கும் சாக்லேட்டுகள் அல்ல என்ற வாழ்க்கைப் பாடம் உங்கள் தொண்டைக்குள் வழுக்கிப்போகும் அல்வா போல லகுவாய் இறங்கும்.

    புஷ்பா கந்தசுவாமி.

    முன்னுரை

    சரியாக சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் மாதம் 2004ல் ஆரம்பித்தது இந்தப் புத்தகத்திற்கான வேலை. என் சகோதரர் வஸந்த் சொல்லி, கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி புஷ்பா கந்தசுவாமி அவர்களை அவர்களது அபிராமபுரம் வீட்டில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்தேன். உடன், என்னுடைய 'திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்' மற்றும் 'தொட்டதெல்லாம் பொன்னாகும்' புத்தகங்களை எடுத்து சென்றிருந்தேன். கொடுத்தேன். பேசினோம். அப்பா இதுவரை சொல்லாதவற்றைப் பற்றி சொல்ல இருக்கிறார்கள். மனம் திறக்க இருக்கிறார்கள் என்றார் மகள். கிளம்பும் நேரம், சஹானா முடிஞ்ச பிறகு, After April பேசலாம் என்றார்கள் என்றார்.

    நடுவில் ஒரு முறை புஷ்பா அவர்களிடம் எப்போது ஆரம்பிக்கலாம் என்று கேட்க, சஹானா முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கிறார். வந்திடட்டும் என்றார்கள். அதன்பிறகு நான் கேட்கவில்லை.

    நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. 2004ம் ஆண்டு, ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் சென்னைக்கு அருகில் இருக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் காத்திருக்கையில் கைபேசியில் அழைப்பு வந்தது. பேசியது புஷ்பா கந்தசுவாமி அவர்கள்தான். இன்றைக்கு மீட் பண்ணலாமா? ஆறு மணிக்கு" என்றார்கள். ஓ.எஸ். என்றேன். மயிலாப்பூர் கற்பாகாம்பாள் நகர் ஆபீஸ் வந்துவிடுங்கள் என்றார்கள்.

    மாலை மீண்டும் போன். 5.45க்கே வரமுடியுமா? He is free என்றார்கள். போனேன். கே.பி. பிரியமாகப் பேசினார். என்னுடைய சிறுகதைத் தொகுப்பு, காலம் உங்கள் காலடியில் புத்தகம் மற்றும் சில தினமணி நடுப்பக்கக் கட்டுரைகளின் போட்டோ காப்பி கொடுத்தேன்.

    நான் அப்போதுதான் நவியா மார்க்கெட்ஸ் நிறுவனத்தில், குழும மனிதவளத் துறைத் தலைவராக சேரவிருந்தேன். சனிக்கிழமைகள் அரைநாள்தான் வேலை. அதனால் வாராவாரம் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கவிதாலயா அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவு செய்துகொண்டோம். முதல் மீட்டிங் நல்ல நாளான 15.8.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 முதல் 4.15 வரை என்று முடிவானது. அன்று சுதந்திர தினமும்கூட…

    அதற்கு முன் அவரது அலுவலகம் சென்று ‘பேப்பர் கட்டிங்க்ஸ்' மற்றும் ஏனைய பைல்கள் பார்க்க ஏற்பாடானது. கே.பி அவர்களது அலுவலக அறையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். மேசைமீது பல்வேறு பைல்கள். பைல்களை புரட்டப் புரட்ட பிரமிப்பு வந்து பின்பு அதுவே மலைப்பாகி, இந்த மலையை எப்படிப் புத்தகம் என்ற டப்பாவிற்குள் அடக்குவது என்கிற அச்சம் வந்தது.

    15.8.2004 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கே போய்விடுகிறேன். திரு. கே.பி. அவர்களின் வாரன் ரோடு வீடு. கே.பி. 3.25-க்கு வருகிறார். ஆரம்பிக்கிறோம்.

    மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், ரெஸ்ட் தேவை என்றும் சொல்லிவிட்டார்கள். அதனால்தான் ஆரம்பிப்பதில் தாமதம் என்று சொன்னார். அவர் ரொம்ப 'திங்க்' பண்ணக் கூடாதாம்.

    அவரது டேப்ரிக்கார்டரை எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் கை லேசாக நடுங்குவதைப் பார்த்தேன். அவ்வளவு தளர்ந்து போயிருந்தார். அவ்வளவு பெரிய ஜாம்பவானை, சிங்கத்தை அவரது முழு வேகத்தில் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. புஷ்பாவும் வஸந்தும் கம்பெல் செய்ததால்தான் இதற்கு சம்மதித்தேன் என்றார்.

    முதலில் ஊர், பிறப்பு, தந்தை, படித்த பள்ளி பற்றி பேச்சு போனது. அடுத்து தங்கை பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. பேச்சை நிறுத்திவிட்டு டேப்பை ஆப் செய்தார். சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு, Re-living என்றார்.

    ***

    இருபது முதல் இருபத்து ஐந்து முறை வரை அவரை சந்தித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் குறைந்தது இரண்டு மணிநேரம் பேசியிருப்போம். அனேகமாக எல்லா மீட்டிங்கும் அவரது வாரன் ரோடு வீட்டில் அவரது அறையில்தான். மாலையில்தான். யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். எப்போதாவது கே.பி. அவர்களின் தனிப்பட்ட உதவியாளர் மோகன் வருவார். இடையில் ஒரு முறை சூப் வரும். அப்போது அவரிடம் எடுத்த பேட்டியின் சுருக்கம்தான் இந்தப் புத்தகம். அவரது ஆரம்பகால வாழ்க்கை, நாடகங்கள் மற்றும் திரைப்பட பிரவேசம் குறித்து அவரே சொல்லச் சொல்லக் கேட்டு எழுதப்பட்டவை.

    ஒரு குறிப்பிட்ட நேரம் அவர் 'பொய்' திரைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டதால் சந்திப்பு நின்றுபோனது. அதன்பின் தொடரவில்லை. அதன் பின் ஒன்றிரண்டு பொது நிகழ்ச்சிகளில் சந்தித்தபோது, எப்போது தொடரலாம் என்று கேட்டதற்கு, செய்யலாம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவே இல்லை.

    ஆண்டுகள் பல ஓடிவிட்டன. டிசம்பர் 2014ல் மறைந்துவிட்டார். அவர் மறைவின்போது சன் நியூஸ் தொலைக்காட்சி அவரது இறுதி ஊர்வலத்தை நேரடி ஒலிபரப்பு செய்தது. அது சமயம் நிலையத்துக்கு அழைத்தும், தொலைபேசி வாயிலாகவும் அவருடன் பழகிய பணியாற்றிய பலரிடமும் பேட்டி எடுத்தார்கள். அப்போது நிகழ்ச்சியை நடத்திய திரு. பாலவேல் தொலைபேசி வாயிலாக என்னிடம் கே.பி.யின் படங்கள் பற்றிக் கேட்டார். நான் என் பார்வையைச் சொன்னதுடன் அவருடன் அமர்ந்து அவரது வாழ்க்கை வரலாறு எழுதிய அனுபவத்தைப் பற்றியும், எழுதி ஆயத்தமாக இருந்த அவரது 'ஒரு கால கட்டம் வரையிலான வாழ்க்கை வரலாறு' பற்றியும் குறிப்பிட்டேன்.

    அதற்கு பாலவேல், அந்தப் புத்தகத்திற்கு தானும் அவரைப் போல பாலசந்தர் அவர்களின் ரசிகர்கள் பலரும் காத்திருப்பதாக சொன்னார். அப்போதுதான் எனக்கு எழுதியது வரையிலான, என் புத்தக அலமாரியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த, கே.பி. அவர்களே சொல்லிய, அவர் பற்றிய தகவல்களைத் தமிழ் மக்களுடன் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

    கே.பி. எவ்வளவு பெரிய படைப்பாளி! அவரே அவரைப் பற்றியும் அவரது அந்தக் கால எண்ணங்கள் மற்றும் பார்வை குறித்தும் சொல்லியவை இவ்வளவு இருக்கிறதே. இதை நான் மட்டும் தெரிந்து கொள்ளவா அவர் சொன்னார்! அவரது வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ள, அவரது ஆர்வங்கள், முயற்சி, உழைப்பு, வெற்றிகள் மற்றும் மேன்மை குறித்து உலகம் அறிந்து கொள்ள என்னிடம் இருக்கும் அரிய தகவல்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

    இதில் இருக்கும் தகவல்கள் பலருக்கும் அரியனவாகவும் சில புதியனவாகவும் இருக்கும். முக்கியமாக மிகச் சரியாக இருக்கும். அதில் எந்த ஐயமும் வேண்டாம்.

    நன்றி.

    சோம வள்ளியப்பன்.

    கே.பாலசந்தர்

    நல்லமாங்குடி

    தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் உள்ள ஒரு மிகச்சிறிய

    Enjoying the preview?
    Page 1 of 1