Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Paravai Paarvai
Oru Paravai Paarvai
Oru Paravai Paarvai
Ebook191 pages1 hour

Oru Paravai Paarvai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித மனம் சடுதியில் நிறம் மாறக்கூடியது. எந்த நிறத்துக்கு எப்படி மாறும்? என்ன வித்தைக்காட்டும்? என்றெல்லாம் எவரும் யூகித்தறிய இயலாது. ‘விதையினை விதைத்து விட்டு அறுப்பவன் காத்திருப்பதைப்போல மனம் - எதற்கும் எப்போது காத்திருப்பது இல்லை. மனம் ஒரு ஜீவ ஓடை எப்போது வற்றும்? எப்போது நீர் வரத்து பிதுங்கி வழியும்? என்றெல்லாம் கண்டறிய முடியாது. அது ஒரு மாய வலை. சமயத்தில் விரித்தவனே மாட்டிக் கொள்வான்’.
மனித மனசின் நீள - அகல - ஆழங்களை எல்லாம் வார்த்தைகளுக்குள் பதியம் போடத் தெரிந்தவன் அற்புதமான படைப்பிலக்கியவாதி என்பதை நிரூபிக்கும் இந்தச் சிறுகதைகளை மனம் நுழைத்து படியுங்கள். உங்கள் மனசுக்குள் நிச்சயம் நடக்கும் ஒரு அயல் மகரந்தச் சேர்க்கை!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131006297
Oru Paravai Paarvai

Read more from S. Kumar

Related authors

Related to Oru Paravai Paarvai

Related ebooks

Reviews for Oru Paravai Paarvai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Paravai Paarvai - S. Kumar

    http://www.pustaka.co.in

    ஒரு பறவைப் பார்வை

    Oru Paravai Paarvai

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எதற்கோ காத்திருந்தார்

    2. ஏழையென்றாலும் ராஜகுமாரன்...

    3. நிறம் மாறிய மனம்

    4. மிட்டாய் தாத்தா!

    5. அக்கா

    6. காதலும் தலைமுறைகளும்

    7. அந்நியன்

    8. ராஜ்குமாரின் காதல் அனுபவம்

    9. அது

    10. வாடகை வீடு

    11. ஞான குரு

    12. ஏன் பிறந்தாய் மகனே?

    13. சராசரி

    14. காதல்

    15. பிரிவுகள்

    16. காலாட்படை

    17. ஒரு ஊழியர் விடுப்பில் போகிறார்!

    18. கயிறு

    19. சில நேரங்கள்

    20. ஜன்னல் பறவை

    21. பேட்டை பெஞ்ச் கோர்ட்

    22. பூ வேஷம்

    23. தொடர் ஓட்டங்கள்

    மெல்ல வந்தது வெளிச்சம்...

    எஸ். குமார் கைதேர்ந்த தமிழ் படைப்பாளி. படைப்பாள மனநிலையை பாதுகாத்து வைத்திருப்பதே ஒரு சவால் தான். ஏனெனில் மனதை குடையும் சம்பவங்களால் படைப்பாளியின் மனம் வெய்யில் வெப்பத்தில் காய்ந்து விடக்கூடும். அப்படியான எந்த விபத்தும் எனக்கு வாய்க்காது என்பதை நெஞ்சு நிமிர்த்தி...எஸ்.குமார் சொல்லிக் கொள்ளலாம். காரணம் - அவர்தான் பார்த்த அக்கிரமங்களை, கேட்டரிந்த துயர் சம்பவங்களை, உற்றறிந்த சோக நிகழ்வுகளை, மனிதர்களின் அன்றாட வாழ்வியல் சங்கடங்களை (Family Hazards) எல்லாம் அழகுறச் சொல்கிறார்.

    இன்றைய நவீன இலக்கியவாதிகள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் கர்வம் பிடித்த நவீன இலக்கியவாதிகளின் அறிவுக்கு, படைப்பாற்றலுக்கு, கதையின் செறிவுக்கும் சற்றும் நான் சளைத்தவனில்லை என்று நெஞ்சு நிமிர்த்திக் கொள்ளலாம் எஸ். குமார் ஏனெனில் மிக அற்புதமாக மனித மனங்களை கூர்மையாக பதிவு செய்யப்பட்ட கதைகளை இப்புத்தகத்தில் தொகுத்து தந்திருக்கிறார்!

    மனித மனம் சடுதியில் நிறம் மாறக்கூடியது. எந்த நிறத்துக்கு எப்படி மாறும்? என்ன வித்தைக்காட்டும்? என்றெல்லாம் எவரும் யூகித்தறிய இயலாது. 'விதையினை விதைத்து விட்டு அறுப்பவன் காத்திருப்பதைப்போல மனம் - எதற்கும் எப்போது காத்திருப்பது இல்லை. மனம் ஒரு ஜீவ ஓடை எப்போது வற்றும்? எப்போது நீர் வரத்து பிதுங்கி வழியும்? என்றெல்லாம் கண்டறிய முடியாது. அது ஒரு மாய வலை. சமயத்தில் விரித்தவனே மாட்டிக் கொள்வான்'.

    எஸ். குமாரின் கதைகள் - மனசின் கல்லு, மண்ணு, பொக்கு, பொறைகளை எல்லாம் சளித்து எடுத்து வைக்கும் சல்லடையாகவும், புடைத்து எடுத்து வைக்கும் முறமாகவும் காட்சி அளிக்கிறது.

    மனித மனசின் நீள - அகல - ஆழங்களை எல்லாம் வார்த்தைகளுக்குள் பதியம் போடத் தெரிந்தவன் அற்புதமான படைப்பிலக்கியவாதி என்பதை நிரூபிக்கும் இந்தச் சிறுகதைகளை மனம் நுழைத்து படியுங்கள். உங்கள் மனசுக்குள் நிச்சயம் நடக்கும் ஒரு அயல் மகரந்தச் சேர்க்கை!

    1. எதற்கோ காத்திருந்தார்

    ரங்கராஜன் ஆபீஸ் கிளம்புகிற அவசரத்தில் இருந்தான். பிள்ளைகள் ஸ்கூல் பஸ்ஸில் புறப்பட்டு விட்டார்கள். விஜயலட்சுமியும் ரங்கராஜனைத் தொடர்ந்து பத்து நிமிஷ இடைவெளியில் புறப்பட்டு விடுவாள்.

    காரியர் அடங்கிய கூடைக்குள்ளேயே லாகாகச் சுருட்டி செருகப்பட்ட ஃபைலுடன் புறப்பட்டவன் ரேழியில் செருப்பு மாட்டிக் கொள்கிற அவகாசத்தில் கேட்டான். இது அவன் பழக்கம். பதில் எதிர்மறையாக இருக்கும் பொழுது சடடென்று தப்பித்து வெளியேற இதுதான் சரியான இடம்.

    விஜி, அப்பாவுக்கு டிபன் எடுத்து வச்சியா?

    பதில் சொல்வதற்கு முன் அவள் பார்த்த பார்வையில் ஒரு சிங்கள வெறி இருந்தது.

    பசங்களுக்கே டிபன் காணலே. பழையது இருக்கு. வேணும்னா சாப்பிடட்டும்.

    இந்த வார்த்தைகளைக் கேட்கும் மனமில்லாமல் அவன் வெளியேறி இருந்தான். ஆனால் - அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

    மகனும் மருமகளும் பேரன்களும் அனுமதித்தபின் குளித்து முடித்து, நீறு பூசி, தோட்டத்துக்கு வந்து ஆகாயம் பார்த்தபின் - ஆதித்யஹிருதயம் சொல்லி, நிர்மலமான மனசுடன் உள்ளே வந்து உட்கார்ந்தார்.

    பசித்துப் புசி - என்று சொல்லிக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசான் அவர். இப்பொழுது பழையது புசிக்கக் - காத்திருந்தார்.

    விஜயலட்சுமி ஒரு தட்டில் சோறும் நீருமாய் கெண்டு வந்து அவர் முன் அவசரமாக வீசிவிட்டு, தண்ணீர் குவளையை சத்தமாக அவர் முன் வைத்துவிட்டு, விலகிப் போனாள். வயிறு காய்ந்து கொண்டிருந்தாலும் அவர் சட்டென்று சோற்றில் கையை அளையவில்லை.

    விஜி அவசரமாகப் புறப்பட்டுப் போன பின்பும் யோசனைமயமாவே இருந்தார்.

    எத்தனையோ முறை தலைக்கு, உடம்புக்கு, வயிற்றுக்கு என்று முடியாமல் படுத்திருக்கிறார். வலியறிந்தும் ருசியறிந்தும் எதையும் செய்ய யாரும் இல்லாமலே மீண்டும் எழுந்திருக்கிறார். எதற்காக...? வலியும் அவமானமும் சோகமுமாய் வாழ்வதற்கென்றே மீண்டும் மீண்டும் உயிர்ப்பது ஏன்?

    சாதத்தில் கையை அளைந்தார். சாப்பிடத் துவங்கினார். மனசைப் போல, உடம்பைப் போல், வாழ்க்கையைப் போல் அதற்கும் சுவையே இல்லை. என்றாலும் எல்லாமே காலம் கடத்திப் போகின்றன. தாத்தா! - பேரன் விஜியின் உச்சரிப்பில் சில நேரம் மிகவும் பூரித்துப் போவார். ஆனால், அது பாலைவனச் சோலை. நீர்க்குமிழி சந்தோஷம். விஜயலட்சுமி பேச ஆரம்பித்தாலே அந்த கொஞ்ச நேர சந்தோஷமும் பறந்து போகும்.

    எங்க மெடிகல் ஆபீசர் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க என்றாள் விஜயலட்சுமி.

    யாரு, ஏதோ கர்நாடகமா ஒரு பேர் சொல்வியே, அந்த அம்மாவா?

    அவங்கதான்!

    அவங்க பேரென்ன, மறந்து போச்சே!

    பொன்னுத்தாயி.

    அதென்ன பொன்னுத்தாயி, வைரத்தாயி?

    அவங்க பேரண்ட்ஸ் வச்ச பேர்.

    எப்போ வர்ராங்க?

    நாளைக்கு ஈவெனிங். நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க.

    நான் என்னத்துக்கு?

    சரிதான். நான் மட்டும் இருந்து அவங்களோட பேசவும் காபி சாப்பிடவும் வீடு எதுக்கு. ஹாஸ்பிடலே போதுமே! நாம குடும்பத்தோட அவங்களை வரவேற்கணும். அப்புறம்...

    சற்று நிதானித்தாள்.

    அப்புறம் என்ன?

    உங்கப்பாவைக் கொஞ்சம் டீஸண்ட்டா இருக்கச் சொல்லுங்க. அவங்க வர்ற நேரத்தில் காலை நீட்டி தூங்கிட்டோ, காரிகாரி துப்பிகிட்டோ இருக்கப் போறார்.

    அவர்கிட்ட இப்படில்லாம் நான் எப்படி சொல்ல முடியும்?

    ஏன் முடியாது...? உங்களால் முடியாதுதான்! நான் சொல்லிக்கிறேன்.

    விருட்டென்று எழுந்தாள்.

    கொஞ்சம் மென்மையாக சொல்லு.

    கண்களால் கொஞ்சம் சுட்டுவிட்டு நடந்தாள்.

    ***

    ஹாலில் சோபாவில் உட்கார்ந்து ரங்கராஜனும் - விஜயலட்சுமியும் குழந்தைகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

    அவர் மட்டும் தன்னறையில் உட்கார்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

    டாக்டரம்மா வரப் போகிறார்களாம். அவர் வெளியிலெல்லாம் வந்து நடமாடக் கூடாதாம். துக்கம் தொண்டையை அடைத்தது. காலம் மனிதர்களை ஏகமாய் வளர்த்து விடுகிறது.

    அப்பாவைப் பதுக்கி வைத்து விட்டு விருந்தினரை வரவேற்பதென்பது மனதை நெருடிக்கொண்டிருந்தது. ஆனால் விஜயலட்சுமியை எதிர்த்துப் பேச முடியாது. விஜயலட்சுமி குற்ற உணர்ச்சியோ, குறையோ இல்லாமல் மெடிகல் ஆபீசல் பொன்னுத்தாயின் வருகைக்காக வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    வந்து விட்டாள்.

    விஜயலட்சுமி எழுந்து வாசலை அடைந்து வரவேற்று அவளை அழைத்து வந்தாள். ரங்கராஜன் வணங்கி வழிவிட்டான். பொன்னுத்தாயி உட்கார்ந்தாள்.

    குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்ட மரியாதையில் குட் ஈவெனிங் மேடம் என்றன.

    குட் ஈவெனிங்.

    அவள் தன் கையிலிருந்து பிஸ்கட், பழங்களை அவர்களிடம் நீட்டினாள். விஜயாவும் சரளாவும் அம்மா அனுமதித்த பின் அதை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாகள்.

    பொன்னுத்தாயி ரங்கராஜனுடன் சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

    விஜி டிபனையும் காபியையும் அவள் முன்னால் வைத்து சாப்பிடச் சொன்னாள். அவர்களும் அவளோடு சாப்பிட்டார்கள்.

    எண்ணெயில் பொறித்த 'சேவரி' ஒன்றின் வாசனை அவர் அறைக்கு வந்தது. எண்ணெ பண்டங்களை நிறுத்தி வருஷங்களாகிவிட்டன. என்றாலும் - எப்போதாவது சுவைக்க ஆசை வரும். இபோது வந்தது.

    பலவீனமான எதிர்பார்ப்புடன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

    வீடு வசதியா இருக்கிறதா?

    ஓரளவு பரவாயில்லை. நாங்களே எச.பி.ஏ.வாங்கிக் கட்டியது. அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்கு. சுற்றிப் பார்க்கும் ஆர்வத்துடன் பொன்னுத்தாயி எழுந்துகொண்டாள்.

    விஜயலட்சுமிக்கு திக்கென்றது. மாமனாரின் அறைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இந்த வால் பேப்பர் நல்ல செலக்ஷன். அருமையா இருக்கு.

    தேங்க் யூ, மேடம்.

    வால் பேப்பரிலிருந்து பார்வை சுவரிலிருந்த போட்டோக்களின் மீது தாவியது.

    இந்த போட்டோவிலிருக்கிறது...

    விஜி திணறிப் போனாள். சுதாரித்துக் கொண்டு, எங்க மாமனார் என்றாள்.

    அவர் எங்கே இருக்கார்?

    இங்கேதான்!

    நான் பார்க்கணும்!

    எதற்கு? கேட்க முடியவில்லை. மௌனமாக மாமனார் இருந்த அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள்.

    பொன்னுத்தாயி உள்ளே நுழைந்ததும் அவர் சட்டென்று எழுந்து நின்றார்.

    வணக்கம், சார் என்றாள், பொன்னுத்தாயி.

    வணக்கம்.

    அவரிடம் எந்த சலனமுமில்லை.

    என்னத் தெரியலியா, சார்?

    மெடிகல் ஆபீசர்னு சொன்னாங்க. நான் பார்த்ததில்லே.

    இல்லை சார், நீங்க என்னைப் பார்த்திருக்கீங்க.

    அப்படியா...? எனக்கு அடையாளம் தெரியலம்மா.

    "நீங்க எனக்கு வாத்தியாரா இருந்தவர்.

    Enjoying the preview?
    Page 1 of 1