Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanney Kadathugirean
Kanney Kadathugirean
Kanney Kadathugirean
Ebook102 pages35 minutes

Kanney Kadathugirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சித்ரா அழகான பெண். பல சொத்துக்கு அதிபதி. பெற்றோர் இல்லாத நிலையில் தன் மாமாவுடன் வசிக்கிறாள். ராம் என்பவரை காதலிக்கிறாள். தன் மாமாவின் மகன் ரஞ்சன் சித்ராவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இந்நிலையில் சித்ரா கடத்தப்படுகிறாள். கடத்தப்படுகிற சித்ராவை யார் காப்பாற்றுவார்? இவர் காதலிக்கும் ராமா? இல்லை திருமணம் செய்ய விரும்பும் ரஞ்சனா? இல்லை யார்? வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580131007649
Kanney Kadathugirean

Read more from S. Kumar

Related authors

Related to Kanney Kadathugirean

Related ebooks

Related categories

Reviews for Kanney Kadathugirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanney Kadathugirean - S. Kumar

    https://www.pustaka.co.in

    கண்ணே கடத்துகிறேன்

    Kanney Kadathugirean

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    போர்டில் ராக்கெட்டின் படம். பாகங்கள் குறிக்கப்பட்டிருந்தன. சாம்பசிவம் ராக்கெட் இயங்கும் விதத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.

    அவருடைய குரலுக்கு இணையாக வகுப்பறை முழுவதும் குரல்கள். அஸிஸ்டன்ட் புரொபசர் சாம்பசிவம் என்று நீளமாகச் சொல்ல விரும்பாத மாணவர்கள் அவரை ஆஸ்ப்ரோ என்பார்கள்.

    ஆஸ்ப்ரோ கண்ணாடியை மூக்குத் தண்டிலிருந்து கண்களுக்குக் கொண்டு வந்தார். நின்று நிதானமாக ஒவ்வொரு பெஞ்சாகப் பார்வையை ஓட்டினார்.

    மாணவர்களின் பேச்சுக் குறைந்தது.

    வெல், நவ் எகெய்ன் வீ வில் பாஸ் ஆன் த லெசன்... என்று போர்டுக்குப் புறப்பட்டார்.

    கடைசி பெஞ்ச் தயாரானது.

    சித்ரா, ரெடியா? என்று கேட்டாள் மலர்க்கொடி.

    நான் ரெடி, நீப்பா? என்று சித்ரா, ரேகாவைத் திரும்பிப் பார்த்தாள்.

    நீங்கள்ளாம் ஆஸ்ப்ரோவோட முதுகுக்குப் பின்னால ரெடியாறிங்க. நான் அதோட மூக்குக்கு முன்னாலேயே ரெடியாயிட்டேன்.

    ஓகே... ஒன், டூ, த்ரீ.

    மூவர் கையிலும் தயாராக இருந்த ராக்கெட்டுகள் பேராசிரியப் பெருந்தகையை நோக்கிப் பறந்தன.

    அவருக்குச் சற்று முன்னாலிருந்த ஃபேனுக்கு அடியில் அவை வட்டமிடத் துவங்கின.

    எங்கும் சிரிப்பொலி.

    நான் எதுவும் ஜோக் அடிக்கலியே? புரொபசர் திரும்பிச் சுற்றி வரும் காகித அம்புகளைப் பார்த்தார். ஆம் ஐ போரிங் யூ?

    செர்ட்டன்லி, சார்.

    வெல், நான் இப்பவே என்னுடைய லெக்சரை நிறுத்திட்டேன். ஆனா பீரியட் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம், இருக்கு. சாக்குக் கட்டியை டேபிளின் மீது எறிந்துவிட்டு நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ... இந்த மாசம் முழுக்க சும்மா அட்டெண்டன்ஸ் எடுத்துட்டு, லெக்சர் கொடுக்காமப் போனாக்கூட எனக்குச் சம்பளம் கிடைக்கும். ஆனா உங்க எதிர்காலம்?

    த்ஸொ... த்ஸொ... என்றார்கள் மாணவர்கள்.

    நாம ஒன்று செய்வோம். மிச்சமிருக்கிற அஞ்சு நிமிஷத்தில் உங்க எதிர்காலத்துக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்.

    மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்யப்பட்டு, அந்தத் தீர்மானம் வரவேற்கப்பட்டது. அவசர அவசரமாக மாணவ மாணவிகள் எழுந்து நின்றனர்.

    இவ்வளவு மரியாதை வேண்டாம். உட்கார்ந்து செய்வோம் மௌனமா.

    கடைசி வார்த்தைக்கு நிறைய அழுத்தம் கொடுத்தார்.

    மாணவர்கள் எந்த நேரத்தில் எதைச் செய்வார்கள் என்று எவராலும் தீர்மானிக்க முடியாது. அந்த நேரத்தில் சுத்தமாய் மௌனம் சாதித்து அசத்தினார்கள்.

    மணி ஒலித்தது.

    தாங்க் யூ ஃபார் யுவர் கைன்ட் கோவாபரேஷன்.

    புரொபசர் வெளியேறினார்.

    ரேகா கேட்டாள்: அடுத்த பீரியட் யாருடி?

    ஆனந்தர்.

    தமிழ் ட்யூட்டர் சின்மயானந்தத்திற்கு இரண்டு செல்லப் பெயர்கள். திம்மையானந்தம் என்னும் அதிரடி கேலி ஒன்று. ஆனந்தர் எனும் வஞ்சப் புகழ்ச்சி மற்றொன்று.

    மாணவர்கள் மட்டுமின்றி எவருமே அவர் பெயரில் ஆனந்தம் இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சொந்தமாகவும் ஜோக் அடிக்க மாட்டார்; சொன்னாலும் சிரிக்க மாட்டார்.

    போச்சுப்பா. இன்னிக்கு என்ன இப்படி வரிசையா வந்து சேர்ந்துடுது ஆஸ்ப்ரோவுக்கு. அடுத்த பீரியட் ஆனந்தரா? என்று சித்ரா அலுத்தாள்.

    மலர்க்கொடி, கட் பண்ணிட்டுச் சினிமாவுக்குப் போயிடுவோமா? என்று கேட்டாள்.

    நல்ல சஜஷன், என்றாள் ரேகா.

    சும்மா இருங்கப்பா. கரெக்டா, காலேஜ் விட்டதும் ரஞ்சன் இங்கே காரை எடுத்துட்டு வருவான். அந்த நேரத்தில் நான் இங்கே இல்லேன்னா எங்க மாமாவுக்குத் தெரிஞ்சிடும். என்று சித்ரா சோகப்பட்டாள்.

    நீ மேஜர். மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூடாது.

    இது பயம் இல்லே.

    பக்தியா?

    ஆனந்தர் உள்ளே வந்தார்.

    சித்ரா, உனக்குத்தான் கார், பங்களா, ஃபாக்டரி எல்லாம் இருக்கே! ஏன் காலேஜுக்கு வந்து கஷ்டப்படறே? டிகிரி என்ன ரொம்ப அவசியமா? பேசாம நேரத்தோடு கல்யாணம் பண்ணிட்டு ஒழியேன்.

    இப்பதாம்பா. சொர்க்கத்திலே நிச்சயமாகியிருக்குது. பூமிக்கு இறங்கி வந்ததும் செட்டில் ஆயிடுவேன்.

    மாப்பிள்ளைதான் வீட்டிலேயே இருக்காரே!

    பல்லை உடைச்சிடுவேன். ரஞ்சன் எங்க மாமாவுக்கு மகனாப் பிறந்ததால எனக்கு மாப்பிள்ளை ஆயிடுவானா?

    அப்போ யார்?

    எனக்குத் தெரியும், என்றாள் ரேகா.

    ஸ், சும்மா இருடி.

    சொல்லுடி, என்றாள் மலர்க்கொடி.

    ராம்.

    யார் அவர்?

    இன்னிக்கு எங்களோடு வா, காட்டறேன்.

    2

    லாங்ஸ் கார்டன் ரோடுக்கு எதிரே கூவம் நதி

    Enjoying the preview?
    Page 1 of 1