Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavai Thurathiyavargal
Kanavai Thurathiyavargal
Kanavai Thurathiyavargal
Ebook82 pages26 minutes

Kanavai Thurathiyavargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையில் ஜொலிக்கப் போகிறோம் என்று நம்பிய கருணாவும் ராஜுவும் தங்கள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்த, அதன் விளைவு குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடத் துவங்கியது. அதன் முடிவு...

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580131010448
Kanavai Thurathiyavargal

Read more from S. Kumar

Related authors

Related to Kanavai Thurathiyavargal

Related ebooks

Related categories

Reviews for Kanavai Thurathiyavargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavai Thurathiyavargal - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனவைத் துரத்தியவர்கள்

    Kanavai Thurathiyavargal

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கடற்கரையின் குளுமைக் காற்றையும் முன்நேர வெயிலையும் தன்னுடன் வாங்கினாலும் அடர்ந்த மரங்களால் தற்காத்துக் கொண்டிருந்த பெசண்ட் நகரில் பெரும்பான்மை வீடுகளைப்போல் அந்த பாஷ் பங்களாவும் அமைதி காத்துக் கொண்டிருந்தது. வெளியே போர்டும் உள்ளே நாய்களும் இல்லை.

    காரேஜில் நிறுத்தப்பட்டிருந்த மாருதியும் கைனடிக் ஹோண்டாவும் இல்லை.

    சாம்பசிவன் காரை எடுத்துக்கொண்டு கம்பெனிக்குப் போய்விட்டார். பத்மாவதி சமூகசேவைக்காக கைனடிக் ஹோண்டாவுடன் வெளியேறிவிட்டாள்.

    உள்ளே ரஞ்சனா மட்டும்.

    ரஞ்சனா இப்பொழுதுதான் டீன் ஏஜைக் கடந்தாள். பி.பி.ஏ முடித்துவிட்டு கோடை விடுப்பில் இருந்தாள். கம்பீரமான பெண் எம்.பி.ஏவாகத் தன் எதிர்காலம் உருவாகப் போவதைக் குறித்து தனக்குள் நிறைய கலர்க் கனவுகளை வைத்திருந்தாள். சராசரிப் பெண்களை விட உயரமும் அது ஒடிசலாகத் தோன்றாத அளவு செழுமையும், சுடிதார்கள் கௌரவம் பெறும் உடல் வண்ணமும் கொண்டவள். சுஷ்மிதா, ஐஸ்வர்யாவை மாடல்களாகப் பார்க்கும் பொழுதும் மனேகா காந்தி, மதர் தெரசா பற்றிப் படிக்கும் பொழுதும் அவளுக்குத் தன் பெண்மை குறித்து கர்வம் வரும்.

    பெண் இரண்டாந்தர பிரஜை இல்லையென்று உறுதியாக நம்பும் பெண்களில் அவள் ஒருத்தி.

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... என்று அம்மா பத்மா குரலெழுப்பிப் பாடும்பொழுது அவளுடைய தைரியம் மேலும் விகசிக்கும்.

    ரஞ்சனா வி.சி.பியை அணைத்தாள்.

    ஓடிக்கொண்டிருந்த படம் நின்றது.

    ஹாய், ரஞ்சனா.

    திரும்பினாள்.

    தீபக்.

    வா, தீபக். எப்போ வந்தே? எப்படி வந்தே?

    இப்பத்தான் வந்தேன், நடந்து.

    ஏன்? உன் வாகனம் என்ன ஆச்சு?

    மைனர் ரிப்பேர். காரேஜ்ல விட்டிருக்கேன்.

    அதுதானே பார்த்தேன், உனக்குத் தெருவைவிட்டு இறங்கினதுமே பைக் இருக்கணுமே!

    என்ன கேசட் வச்சிருக்கே?

    ஒரு ஆக்ஷ்ன் ஆங்கிலப்படம்.

    போடேன்.

    சாரி, போரிங். ஏற்கனவே ரெண்டு முறை பார்த்துட்டேன்.

    நான் பார்க்கலையே!

    ஸோ வாட்? கேசட் தரேன். எடுத்துட்டுப் போய், உங்க வீட்டில போட்டுப் பாரேன்.

    அங்கே ப்ரைவசி கிடையாது. வீட்டில் அக்கா இருக்கா. அம்மாவும். உன்னை மாதிரி எனக்குச் சுதந்திரம் கிடையாது.

    புத்தகம் படிக்கறியா?

    என்ன வச்சிருக்கே?

    ஷெல்டன், லட்லம்.

    இப்ப நேரமில்லே.

    ஐ ஸீ, வேற எப்ப நேரமிருக்கும்? காலேஜ் திறந்த பிறகா?

    மே பீ.

    இப்ப என்ன செய்யறதா உத்தேசம்?

    தெரியலே. படம் பார்க்கிற மூடோட வந்தேன்.

    சாரிப்பா, பார்த்துப் பார்த்து எனக்கு சவுண்ட் அலர்ஜி வந்துடுது.

    ஓகே. லெட் மீ ஐஸ்ட் பீ ஹியர்.

    படிக்கமாட்டே, பார்க்கமாட்டே! தென் வாட்?

    நோ, படிக்கப் போறேன், பார்க்கப் போறேன்.

    எப்படி? புத்தகம் உனக்குப் பிடிக்கலே. படம் பார்க்க நான் அனுமதிக்கப் போறதில்லே. பிறகெப்படி?

    படிக்கிறதும் பார்க்கிறதும் புத்தகமாகதான் இருக்கணுமா?

    வேறெதை?

    உன்னை.

    தீபக்.

    யெஸ், யூ ப்யூட்டி. உன்னைப் பார்க்கிறதைவிட சினிமா சிறப்பில்லை. உன்னைப் படிக்கிறதைவிட புத்தகம் சுவாரஸ்யமில்லை.

    ஸ்டாப் இட், தீபக். உன் பேச்சு விபரீதமா இருக்கு.

    இதில என்ன விபரீதம்? இது இந்த வயசுச் சிந்தனை.

    சாரி, எனக்கு ஒத்து வராது.

    ரஞ்சனா... பத்து வருஷமா நாம நண்பர்கள். ஒரே ஸ்கூல். ஒரே காலேஜ். ஒரே கோர்ஸ். யூ நோ மீ வெரி வெல். எந்தக் கெட்டப் பழக்கமும் எனக்கில்லே, பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடறது உட்பட. இதுக்கப்புறமும்... உனக்கு என்னைப் பிடிக்கலையா?

    யார் சென்னது, தீபக்? ஐ லைக் யூ வெரிமச்.

    பட் யூ டோன்ட் லவ் மீ.

    "நான் காதல்,

    Enjoying the preview?
    Page 1 of 1