Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Unnudaiya Naal
Ithu Unnudaiya Naal
Ithu Unnudaiya Naal
Ebook94 pages28 minutes

Ithu Unnudaiya Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழிலதிபர் செல்வநாயகத்தைக் கொல்ல திட்டமிடப் படுகிறது. செல்வநாயகத்தின் மனைவி வசந்தியின் காதலில் விழுந்த கேர்டேக்கர் நவீன் திட்டத்தைச் செயல் படுத்துகிறான். ஆனால் - இறுதியில் அவன் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறுகின்றன.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131008224
Ithu Unnudaiya Naal

Read more from S. Kumar

Related authors

Related to Ithu Unnudaiya Naal

Related ebooks

Related categories

Reviews for Ithu Unnudaiya Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Unnudaiya Naal - S. Kumar

    http://www.pustaka.co.in

    இது உன்னுடைய நாள்

    Ithu Unnudaiya Naal

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    பெசன்ட் நகரின் நிழலடர்ந்த சாலை.

    நவீன் மனதுடன் விலாசத்தைச் சரிபார்த்துக் கொண்டு அந்த வீட்டின் முன்னால் நின்றான்.

    பிரம்மாண்ட வீடு ஆர்க்கிடெக்டின் பெயரை விசாரிக்கத் தூண்டியது.

    பையின் ஜிப்பைத் திறந்து, விளம்பரத்தை வெளியே எடுத்தான். பார்த்தான்.

    இந்த வீடுதான்!

    இருபுறமும் பதிக்கப்பட்ட வழவழப்பான க்ரானைட்களில் பெயர்கள்.

    வலப்புறம் செல்வநாயகம்.

    இடப்புறம் நந்தவனம்.

    கேட்டைக் கவனமாகப் பார்த்தான். நாய்களை எச்சரிக்கும் போர்டு இல்லை. தைரியமாகத் தள்ளித் திறந்தபோது,

    யாருய்யா, அது? என்ற முரட்டுக் குரல்.

    போர்டு வைத்திருக்கலாம்.

    இன்டர்வியூவுக்காக வந்திருக்கேன்.

    அவன் இன்னமும் இடம் பெயராமல் எதிரே நின்றிருந்தான். மழுங்கச் சிரைத்திருந்தான். பாதி தலை ஷேவ் செய்யப்பட்டிருந்தது. பனியனும் அரைக்கால் சட்டையும் அணிந்து செக்சியாக இருந்தான். திடகாத்திரக் கிழவனுக்கு ஐம்பது வயதிருக்கும்.

    லெட்டர் பேக்ல இருக்கு. என்று ஜிப்பைத் தொட்டபோது,

    உள்ளே போங்க. நுழைஞ்சதும் ட்ராயிங் ரூம். இண்டர்காம்ல சொல்லிட்டு உட்காருங்க என்றான்.

    நன்றாகப் பராமரிக்கப்பட்ட லானின் நடுவே பாதை ஓடியது.

    சீராக வெட்டப்பட்ட யூனிஃபார்ம் தாவரங்களும், குறுகத் தரித்த போன்சாய் மரங்களும், பூக்களெல்லாம் வண்ணங்களில் சிரித்தன. வீட்டின் விளிம்பில் தொட்டிகளில் கள்ளி வளர்த்திருந்தார்கள்.

    அது மட்டும்தான் அடையாளம் தெரிந்த தாவரம்.

    உள்ளே நுழைந்தான்.

    ட்ராயிங் ரூம் அவனைப் பணத்தால் அழைத்தது.

    பிரமிப்பு குறையாமல் பாலிமர் நாற்காலியில் உட்கார்ந்தான்.

    அறையின் நடுவில் தேக்கு மேசை, வீனஸ் பூத்தொட்டி, வாடாத செயற்கைப் பூக்கள், சுவரில் சத்தமின்றிக் கொட்டும் அருவி.

    இதையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்திருந்தால் கூடப் போதும் என்று அந்தக் கணம் நினைத்தான்.

    பிரமிப்பு அடங்கியதும் இண்டர்காமைத் தொட்டான்.

    ஹலோ?

    யாரு?

    என் பேர் நவீன், கேர் டேக்கர் இண்டர்வியூவுக்காக வந்திருக்கேன்.

    வெய்ட் பண்ணுங்க...

    அது கட்டளைக் குரல். ஆனால்,

    இனிமையான பெண் குரல்.

    அழகாகவும் இருப்பாளா?

    மீண்டும் நாற்காலிக்குத் திரும்பியபோது மேசை மீது கிடந்த இதழ்களைப் பார்த்தான்.

    எல்லாம் ஆங்கில இதழ்கள்.

    அபூர்வமாகத் தமிழில் வளர்தொழில் மட்டும் வைத்திருந்தார்கள்.

    எடுத்துப் படிக்க எண்ணினான்.

    மற்ற விசிட்டர்களைப்போல் நேர்முகத் தேர்விற்கு வந்த தானும் நடந்துகொள்ளலாமா? தவறாக எண்ணப்படுமா?

    சந்தேகத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நாற்காலிக்குத் திரும்பினான்.

    காத்திருப்பது பதட்டம் தந்தது. நகம் கடிக்க அனிச்சையாகத் தீர்மானித்து, பின் எச்சரிக்கையாக விலக்கினான்.

    படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த இரண்டு வருஷங்களில் ஏழு இன்டர்வியூக்களுக்குப் போய்விட்டான் பலனில்லை.

    பெரும்பாலும், வரிசையாகப் போடப்பட்ட பெஞ்சுகளில் நூறோடு நூற்று ஒன்றாகவோ...

    ஹாலில் போடப்பட்ட மூன்றாந்தர நாற்காலிகளில் பத்தோடு பதினொன்றாகவோ உட்கார்ந்திருக்க நேரும்.

    அபூர்வமாகப் பேசினால் கேட்க இருப்பார்கள்.

    இங்கே இவன் மட்டும்?

    என்னை மட்டும் அழைத்திருக்கிறார்களா?

    ஒருவேளை, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி இருப்பார்களா?

    மழைக்குக் கூட இத்தனை ஆடம்பரமான வீட்டுச் சுவரோரம் ஒதுங்கியதில்லை.

    இங்கேயே வேலை கிடைத்தால்...

    ஸோ, யூ ஆர்... மிஸ்டர் நவீன்?

    பார்த்தான்.

    திரையை ஒதுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவள் அசாதாரண அழகு வைத்திருந்தாள்.

    கிரேக்கத்துப் பெண் கடவுள்களைப்போல் மார்பிள் உடல், ஐந்தரை அடி

    Enjoying the preview?
    Page 1 of 1