Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athiradi Padai
Athiradi Padai
Athiradi Padai
Ebook94 pages32 minutes

Athiradi Padai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இஸ்ரோ விஞ்ஞானி தீபச்சந்திரன் கடத்தப் படுகிறான். காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளையும் அவன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தையும் கண்டு பிடிக்கிறது. ஆனால் - மதிப்பு வாய்ந்த அவனைப் பாதுகாப்பாக மீட்க அதிரடிப் படை வரவழைக்கப் படுகிறது. அவர்களின் சாகசங்களும் அதன் முடிவும் இங்கே காட்சிகளாக விரிகின்றன.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131008226
Athiradi Padai

Read more from S. Kumar

Related authors

Related to Athiradi Padai

Related ebooks

Related categories

Reviews for Athiradi Padai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athiradi Padai - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அதிரடிப் படை

    Athiradi Padai

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    யுனிவர்சிடி ஹால்.

    உள்ளே தளும்பாத கூட்டம். வெளியே வரிசையாகப் பார்க் செய்யப்பட்ட கார்கள். அம்பாசடர், ஸ்டாண்டர்ட் வரிசைகள் இல்லை. காண்டெஸ்ஸா, எசி.பென்ஸ், குறைந்த பட்சம் மாருதி.

    அலங்கார விளக்குகளோ, ஆரவார அறிவிப்புகளோ இல்லை. சிக்கனமாக, சிறியதாக ஒரு பானர். இந்திய விஞ்ஞானிகள் கழகம்.

    உள்ளே...

    படிப்பிற்கும் உழைப்பிற்கும் உள்நாட்டுச் சம்பளம் வாங்கும் ஓடிப்போகாத விஞ்ஞானிகள் நாற்காலிகளை நிறைத்திருந்தார்கள்.

    மேடையில் தலைமை தாங்கிய அணுமின் நிலைய இயக்குநர்.

    மற்றவர்கள் தங்கள் பெயர் அறிவிக்கப்பட்டபோது மட்டும் மேடைக்கு வந்து சிக்கனமான கலைச்சொல் ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தார்கள்.

    விசேஷ அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற கல்விமான்கள் வெறும் பார்வையாளர்களாக வி.ஐ.பி. வரிசைகளுக்குப் பின்னால் அமர்த்திருந்தார்கள்.

    பத்திரிக்கையாளர்கள் பக்கவாட்டு வரிசையில் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் இலவச இணைப்பான புகைப்படக் கலைஞர்கள் விஞ்ஞானிகள் பேச வந்தபோது மட்டும் எழுந்து, கோணம் அமைத்து அவர்களைச் சுட்டு எடுத்துக் கொண்டார்கள்.

    ரஷ்யச் சிதறலால் கைகூடாமல் போன கூடங்குளத்தின் மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஆத்மநாதன் பேசிக் கொண்டிருந்தார். குட்டையான உருவம், கூர்மையான மூக்கு, நீளமான முகம், சற்று நிமிர்ந்த காது மடல்கள், அவற்றில் அதிர்ஷ்ட மயிர்க் கற்றை, மடித்து விடப்பட்டிருந்த முழுக்கைச் சட்டையின் வெளித் தெரிந்த கரங்களிலும் சுருளான முடி.

    அதிருப்தியடையும் போது ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் ‘கரடியே, வெளியே வா!’ என்று கத்தியதாக வரலாறு.

    மற்ற இடங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்திருந்த முடி தலையை மட்டும் காலி செய்து விட்டு, அட்வான்சையும் திரும்பப் பெற முயன்று கொண்டிருந்தது.

    அறிவோ...

    ஓயாத சிந்தனையோ...

    யௌவனம் கடந்த நிலையோ...

    அவர்களில் பலரை மொட்டையடித்துக் கொண்டிருந்தது.

    முன்வரிசை வி.ஐ.பிகளில் தீபச்சந்திரன் ஒரு விதிவிலக்கு.

    அவன் விஞ்ஞானி. அதாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையக்காரன்.

    கூர்ந்த அறிவும் சிந்தனை வெளிப்பாடும் அவனுக்கு உண்டு. தொலைத்தொடர்பு அமைச்சகமும் பாதுகாப்பு அமைச்சகமும் அவன் பேசியபோதெல்லாம் முன்னுரிமை கொடுத்தன. அவன் யோசனைகளைக் கண்ணை மூடி ஆதரித்தன.

    அவனுடைய வயது வெறும் முப்பத்தேழு. ஐந்தரை அடி உயரத்துக்கு எங்கேயும் முன்பாக சதை வைக்காமல், கன்னங்கள் கூட உப்பாமல் சீரான சரீரம் வைத்திருந்தான். தூய கோதுமை நிறம். நரை எங்கும் எட்டிப் பார்க்கவில்லை.

    வயது இருபத்தைந்து என்றாலும், இன்னும் மணமாகவில்லை என்றாலும் பெண்கள் நம்பிப் புன்சிரிப்பார்கள்.

    அது அவன் முறை.

    பெயர் அறிவிக்கப்பட்டதும் மேடைக்குப் போனான்.

    வெண்ணிற காற்சட்டையும் நேவி ப்ளூ அரைக்கைச் சட்டையும் அணிந்து, டை, ஷூக்கள் என்று முழுமையான மேற்கு நாகரீகம் காட்டி இருந்தான்.

    மைக்கை மென்மையாகத் தனக்குச் சரி செய்து கொண்டான்.

    சகோதர விஞ்ஞானிகளே என்று அழைக்கும் எண்ணத்தை அழகான பெண் பிரதிநிதிகளைப் பார்த்து கை விட்டுவிட்டு, டியர் ஃப்ரெண்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் துவங்கினான்.

    ஏவுகணை குறித்து ரஷ்யா செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும் அந்த ஒப்பந்த விதிகளை நிறைவேற்ற சோவியத் காமன் வெல்த் விருப்பம் தெரிவித்த போதும் அமெரிக்காவின் மேலாதிக்கம் அது நமக்குக் கிடைக்க விடாமல் தடுக்க முனைவதைப் பற்றியும் தான் பேசினான்.

    வெம் விஞ்ஞானக் கட்டுரைகளையே கேட்டுக் கொண்டிருந்த அரங்கு சற்று காட்டமான உலக அறிவியல் கேட்டு காதுகளை விடைத்துக் கொண்டது.

    தெரிந்த விஷயங்கள் தான் என்றாலும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

    "... இந்த நேரம் நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்தியா நல்லரசு என்ற பெயரை எப்பொழுதும் போல் தக்கவைத்துக் கொள்ளும். அதே நேரத்தில் வல்லரசு என்ற பெயரையும் விரைவில் அடையும். இது உறுதி. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்ப அறிவாலேயே. விஞ்ஞானிகளின் முயற்சியாலேயே நாம் உலகின் எந்த வல்லரசுக்கும் இணையாக உயரத்தான் போகிறோம். சமாதானம் தான் இலக்கு என்றாலும் எந்தச் சச்சரவையும் நம்மால்

    Enjoying the preview?
    Page 1 of 1