Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minnalgal
Minnalgal
Minnalgal
Ebook153 pages56 minutes

Minnalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலக மக்கள் காலம் காலமாக கதை சொல்லுவதையும், கதை கேட்பதையும் மரபாகக் கொண்டுள்ளனர். அதேபோல தான் கண்ட நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும் மையக் கருத்தாகக் கொண்டு விவரிக்கும் இலக்கிய வகைதான் மின்னல்கள். இது சிறு சிறு கதைகளாக அனைவரையும் படிக்க தூண்டும் வகையில் அமையப் பெற்றுள்ளது. தான் பார்த்த இடங்களின், வரலாற்றுச் சிறப்புகளையும் சேர்த்து அனைவராலும் புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது வாங்க வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580145208004
Minnalgal

Read more from S. Sathyamoorthy

Related to Minnalgal

Related ebooks

Reviews for Minnalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minnalgal - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    மின்னல்கள்

    Minnalgal

    Author:

    S. சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கூரை ஒழுகுகிறது

    தமிழா! நீ ஏன்...?

    அண்ணன் காட்டிய வழி

    பகீரதப் பிரயத்தனங்கள்!

    உடைத்ததுதான் மிச்சம்...!

    சும்மா இருப்பதே சுகம்!

    21ஆம் நூற்றாண்டில் இடித்த இடி!

    பாகிஸ்தானைப் பிரித்தது யார்?

    சோம்பேறி ஆகவேண்டும்

    முகமூடிகளின் காலம்

    ஒரு காபினட் மினிஸ்டரின் கதை...

    கடிதங்கள்

    பாங்காங் பஸ்கள்!

    தமிழ்க் குடிமகன்கள்

    மின்னல்கள்

    செக்ஸ் என்றால் என்ன?

    அழகிகள் அலை!

    மதுரையில் தாய்லாந்து

    ‘காசி’யைப் பற்றி ‘காலிப்!’

    ஆண்களின் கவர்ச்சி...?

    ஜெயின் டைரியும் ஜெயில் டைரியும்!

    சூப்பர் ஸ்டாரும் டூப் மாஸ்டரும்

    கலைஞரும் கர்த்தரும்

    பெயர் மாற்றம் ஏமாற்றம் தடுமாற்றம்

    80 வயது நக்கீரர்

    கர்மபலனும் கருணாநிதியும்

    நமோ நாராயண

    புலிகளைத் தின்ற ஆடுகள்!

    அலிபாபாவும் 40 திருடர்களும்

    பகவான் ரமணர்

    மணியன் கொடுத்த வரம்!

    நந்தவனத்து ஆண்டி

    காது

    கிருஷ்ணன் கடத்தல்!

    சூழ்ச்சி வலையில் அண்ணாவும் வீழ்ந்தார்!

    கறுப்புச் சட்டையும் கடைசிப் பக்கமும்

    ஜெ...விலிருந்து ஜெல்லி வரை...!

    பாம்பைக் கற்பழி

    லாஸ் ஏஞ்சலஸிலிருந்து...

    தீவிரவாதியின் திருத்தலம்!

    அரங்கம்

    உள்துறை மந்திரியா...? உளறுவாய் மந்திரியா...?

    பத்தாம் பசலி

    கண்மூடாக் கனவு...

    பவர் கட்!

    சுக்குமி. ளகுதி. ப்பிலி

    மூன்று மேனியர்!

    பட்டாம்பூச்சிகள்

    ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் கடைசி பக்கம் என்றால் இப்பொழுது எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் சத்தியமூர்த்தியின் பக்கம் என்றாகிவிட்டது.

    தான் பார்த்த இடங்களை அதன் வரலாற்றுச் சிறப்புகளோடு இன்றைய நிஜத்தையும் இணைக்கிறார். படித்த செய்திகளில் பொதிந்துள்ள புதிய பொருள்களை உணர்த்துகிறார். தான் கேட்ட நிகழ்ச்சிகளை கோட்டுச் சித்திரமாக வரைந்து காட்டுகிறார். அனுபவித்த உணர்வுகளை அநாயாசமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    இவர் எழுத்தில் இழையோடும் மெலிதான நகைச்சுவை ரசிக்கத்தக்கது. தன் துறை சார்ந்த செய்தியான பொருளாதாரப் புள்ளி விவரங்களுடன் சுவைபடச்சொல்லுவது இவருக்குக் கை வந்த கலையாகும்.

    முதல் தொகுதி கடைசி பக்கம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்தத் தொகுதி ‘மின்னல்கள்’ ஆக மலர்கிறது. எல்லாப் பக்கங்களையும் ஓர் அமர்வில் படிக்கத் தூண்டும் தொகுப்பு இது.

    - நந்தா

    கூரை ஒழுகுகிறது

    இது விஞ்ஞான யுகம். ஆமாம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் டெல்லியில் ஜன்பத்தில் தேசிய அருங்காட்சியகம் மூன்றாவது தளம், 20,000 சதுர அடி. அற்புதமான கலைப்பொருட்கள் அலங்கரிக்க வேண்டிய அரங்கம். காலியாகக் கிடக்கிறது. காரணம் கூரை ஒழுகுகிறது!

    கனிஷ்கா ஓட்டல். ஐந்து நட்சத்திரம். நண்பர் சுந்தரத்தைப் பார்க்கப் போனேன். கோலம் போட்டு வரவேற்கவில்லை. வாளி வைத்து வரவேற்கிறார்கள். கூரை ஒழுகுகிறது.

    விஞ்ஞான் பவன், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் மாளிகை. ஜனாதிபதி பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் மிலிட்டரி செகரட்டரி அண்ணாந்து பார்த்து ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். காரணம்... ஜனாதிபதி தலைக்கு மேலே வாளிகள், வாளி விழுந்தால் ஜனாதிபதி காலி. கூரை ஒழுகுகிறது.

    விஞ்ஞான உலகில் கூரை இல்லாமல் கட்டடம் கட்டச் சொன்னால் நமது பொறியியல் வல்லுனர்கள் ஜமாய்த்து விடுவார்கள் போலிருக்கிறது என்றேன். இன்ஜினீயர்கள் என்ன பிரைம் மினிஸ்ட்ர்களையே பாருங்கள்... எவ்வளவு லஞ்சப் புகார்கள் கூரை ஒழுகுகிறது என்றார் நண்பர்.

    கூரை ஒழுகினாலும் சுவர்கள், தரைகள் பரவாயில்லை. போன வாரம் இரண்டு தமிழர்கள் கொடிகட்டி இருக்கிறார்கள். இராமர்பிள்ளை நீரிலிருந்து பெட்ரோல் என்கிறார். இலை, தழை, பட்டை, உப்பு, சொக்குப்பொடி என்று போட்டு நீரைக் கொதிக்க வைத்து ஒரு லிட்டர் நீரிலிருந்து 300 கிராம் பெட்ரோலை வடிகட்டி விடுகிறார். 15 நிமிடத்தில் பெட்ரோல் ரெடி. சென்னை, டெல்லி ஐ.ஐ.டி.கள் பரிசோதனையைப் பார்த்து பிரமித்து விட்டன. இது உண்மைதான் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். கற்பனை உண்மையாகிறது.

    இன்னொரு தமிழர் இராகவன் கோபாலசாமி தண்ணீரிலிருந்து பெட்ரோல் வரும் காலத்தில் இவர் பெட்ரோல் இல்லாத விமானம் என்கிறார். Hyper Plane. காற்றைக் கிரகித்து அதை ஆக்ஸிஜன், கரியமிலவாயு என்று பிளக்குமாம். பிறகு ஆக்ஸிஜனை எரித்து பிளேன் பறக்குமாம். ஐடியா தந்தது இவர். விமானங்கள் தயாரிப்பவர்கள் ராக்பெல் கம்பெனியார். குமலோவ் கம்பனியார். அமெரிக்கர்களும், ரஷ்யர்களும் ஐடியாவை அபேஸ் செய்து விட்டார்கள். மன்

    இவருடைய இன்னும் ஓர் ஐடியா... விண்வெளியிலேயே சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கி அதை எந்த நகருக்கு வேண்டுமானாலும் பீய்ச்சுவது. இது சாத்தியமே என்கிறார் விண்வெளி விஞ்ஞானி அப்துல்கலாம். இராமர் பிள்ளையும் இராகவன் கோபாலசாமியும் இருக்கும் நாட்டில்தான் கூரை ஒழுகுகிறது. என்ன செய்வது? துக்காராம் பிறந்த நாட்டில்தான் சுக்காராம் பிறந்திருக்கிறார்!

    கூரை ஒழுகிய இன்னோர் இடம் டெல்லி தமிழ்ச்சங்கம். உதயம் கையெழுத்துப் பிரதியில் நல்லதொரு கவிதை. பூலே, அம்பேத்கர், நாராயண குரு, புரட்சிப் பெரியார் நாட்டினிலே நாலே வருணம் நாமழிப்போமதை, என்று திரண்டனர் நம் தலைவர். மேலே பார்த்தால் ஓரளவுக்கு, மேல்கீழ் மறைந்தது என்றாலும், வாலே உயிர்நிலை நாகமதைப்போல் வந்தன சாதிக்கு சங்கம் பல அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே வரவேற்புரையாளர், உதயம் பத்திரிகை அறிஞர்களின் கருவூலம். இதில் பார்ப்பன எழுத்தாளர் ஒருவர் பார்ப்பனரை எதிர்த்து எழுதிய கதை ஒன்று அச்சுப் பத்திரிகை போட்டி ஒன்றில் பின்னர் பரிசு பெற்றது என்றார். தொண்டையில் எலும்பு சிக்கியதுபோல வேதனை. கவிதைக்கும் நடைமுறைக்கும் இத்தனை இடைவெளியா? படிப்பது இராமாயணம் இடிப்பது கோயிலா? கலைஞனுக்கு ஏது சாதி? சாதியைச் சாடிக் கொண்டே சாதிபற்றிப் பேசுவதா?

    அப்போது சீனத்தலைவர் டெங் சொன்னது ஞாபகம் வந்தது. பூனை கறுப்பா, வெளுப்பா என்பதல்ல முக்கியம். எலியைப் பிடிக்கிறதா என்பதே முக்கியம். எழுத்தாளன் பார்ப்பனனா என்பதல்ல முக்கியம். எழுதியது அழகா என்பதே முக்கியம். எல்லாருமே கூரையில் ஒழுக வைக்கலாமா... நாடே ஒழுகுகிறதே!

    தமிழா! நீ ஏன்...?

    1957ஆம் வருட தேர்தல். தி.மு.க. களத்தில் குதித்தது. தெருவெல்லாம் தமிழ் மணந்தது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று ஒரு சுலோகம். சிந்திரித் தொழில் சிறக்கிறது வடக்கே; முந்திரித் தொழில் சிதைகிறது தெற்கே என்றோர் அனுபல்லவி. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் அரசு கட்டிலைப் பிடித்தது. முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் தமிழகம் இன்னும் சிதைந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது ‘மேற்கு வாழ்கிறகு கிழக்கு தேய்கிறது’ என்று சொல்ல வேண்டிய நிலை. கர்நாடகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டின் பிரதமர் அங்கிருந்து. நாமோ 2005இல் தமிழன் பிரதமராக முடியுமா என்று தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறோம்.

    கர்நாடக ராஜ்குமாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது. இங்கோ சிவாஜி அண்ணாசாலையில் காரில் செல்லும்போது எருமை வழிவிட்டாலே திருப்தி. அங்கே ஐஸ்வர்யா ராயின் அழகு பளிச்சிடுகிறது. இங்கே ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அழுகை வாழ்க்கை பாழாகிறது. போன மாதம் முதல் ஷியாம் பெனகலின் மகாத்மா. நாடெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கிரிஷ் கர்னாடின் நாகமண்டலா நியூயார்க்கில் அரங்கேறுகிறது. இந்திய விண்வெளித் துறை, பெங்களூரிலிருந்து பரிமளிக்கிறது. நமக்கு அரட்டை அரங்கம் போதும் என்று தோன்றுகிறது. துக்ளக்கும் தராசும் நமக்கு ஜென்ம சாபல்யத்தைத் தருகின்றன. இந்த அழகில் நம்முடைய இராமர்பிள்ளை ஓர் ஏமாற்று வீரர் என்று செய்தி. கர்நாடகத்திலிருந்து இந்தியக் கிரிக்கெட் டீமில் ஐந்தாறு கிரிக்கெட் வீரர்கள். நம்மிடமிருந்து வறட்டு வேதாந்தம். இல்லையோ நையாண்டி நல்லுசாமிகள், ஓரங்கட்டேய் சேச்சு, ஆபீஸ் பையன், லைட்ஸ் ஆன் சுனில், அணிலார். எழுத்தை விடுங்கள். இசையை எடுங்கள். மல்லிகார்ஜுன் மன்சூர்; சௌரேசியா; நாகமணி ஸ்ரீநாத். ஆடலில் என்றால் ஆரம்பமே வைஜயந்தி. அடுத்து வருவது புரோதிமா பேடியின் நிருத்யக்கிராமம்.

    Enjoying the preview?
    Page 1 of 1