Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ethir Kaala Yuthangal!
Ethir Kaala Yuthangal!
Ethir Kaala Yuthangal!
Ebook149 pages59 minutes

Ethir Kaala Yuthangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘எதிர்கால யுத்தங்கள்’ எனும் தலைப்பில் வெளி வந்துள்ள இந்நூல், முற்றிலும் வேறுபட்ட பல்வேறு தலைப்புகளில் அருமையான விவரங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் திரு.சத்தியமூர்த்தியின் எழுத்தாற்றல் வியப்பூட்டுவதாக இருக்கிறது. வாருங்கள் வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580145208003
Ethir Kaala Yuthangal!

Read more from S. Sathyamoorthy

Related to Ethir Kaala Yuthangal!

Related ebooks

Reviews for Ethir Kaala Yuthangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ethir Kaala Yuthangal! - S. Sathyamoorthy

    https://www.pustaka.co.in

    எதிர்கால யுத்தங்கள்!

    Ethir Kaala Yuthangal!

    Author:

    S.சத்யமூர்த்தி

    S. Sathyamoorthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-sathyamoorthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ‘எதிர்கால யுத்தங்கள்’ எனும் தலைப்பில் வெளி வந்துள்ள இந்நூல், முற்றிலும் வேறுபட்ட பல்வேறு தலைப்புகளில் அருமையான விவரங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் சத்தியமூர்த்தியின் எழுத்தாற்றல் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

    இந்தியா எங்கே போகிறது என்ற தலைப்பில் கட்டுரையாசிரியரின் கட்டுரையைத் தொடர்ந்து, டாக்டர் கி. வேங்கடசுப்ரமணியம் (புதுவை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்) ஜெயகாந்தன், டாக்டர் எம்.எஸ். சீனிவாசன், திரு. ஏ.எஸ். ராமன் (இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இம்முயற்சி, இந்நூலை மிகப் பெரிய கருத்தரங்க மேடையாக ஆக்கிவிட்டது என்றால் வியப்பில்லை; அதுவே நூலின் தனிச் சிறப்பு எனலாம்.

    கட்டுரைகள் அனைத்தும், படிக்கும் அன்பர்களுக்கு ஏராளமான கருத்துகளைத் திரட்டித் தரக்கூடிய பெட்டகமாக அமைந்துள்ளன.

    பொருளடக்கம்

    எதிர்கால யுத்தங்கள்!

    அந்தமானைப் பாருங்கள் அழகு!

    புதிய முத்தங்கள்...

    இந்தியா எங்கே போகிறது?

    பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிடுவதே தவறு!

    இந்தியாவைக் கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது!

    அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால் அழிந்து வருகிறது இந்தியா...!

    உலகத்தின் கண்களுக்கு இந்தியா சாம்பலாகத்தான் தெரியும்...!

    இந்தியா எங்கே போகிறது? சத்தியமூர்த்தி விளக்கம்...

    டில்லி சலோ!

    கோடைக்கு ஏற்றது பாலைவனம்!

    வெகு சீக்கிரத்தில் எங்கள் சரித்திரத்தில் திருப்பம் ஏற்படும்!

    சேஷன் இடி அமீனா, அவதாரமா?

    குளிருக்கு ‘லே!’

    எது மாடர்ன்?

    உஜ்ஜயின் உலா...

    அழகிகள் பலவிதம்

    எதிர்கால யுத்தங்கள்!

    குருக்ஷேத்ரம்... தட்சசீலம்... கலிங்கம். ரத்தத்தில் உறைந்து போன ரணகள க்ஷேத்திரங்கள். அர்ச்சுனன்... அபிமன்யு... கர்ணன்... கடோத்கஜன்... அலெக்ஸாண்டர்... அக்பர்... க்ளைவ்... திப்பு... இந்திய சரித்திரத்தின் சிருஷ்டி கர்த்தாக்கள். செங்கிஸ்கான்... நெப்போலியன்... வாஷிங்டன்... வெல்லிங்டன்... ஹிட்லர்... ரோம்மல்... பேட்டன்... டிகால் கரியப்பா... திம்மய்யா... மேனஷா... கற்பனையில் மிதக்கின்ற தற்காலத் தளபதிகள்.

    கடோத்கஜனும், பீமனும் தன் கையே தனக்குதவி என நம்பியவர்கள். இரண்யகசிபுவைக் கொல்ல நரசிம்மருக்கு நகங்கள் தேவைப்பட்டன. வாலியும் சுக்ரீவனும் கட்டிப் புரண்டு சண்டையிட்டார்கள். இது ஆரம்பக் காலப் போர் நிலை. விலங்குகள் மோதிக் கொள்வதைப் போன்ற முறை.

    பிறகு அம்புகள், வில்கள், வாள்கள், வேல்கள் வந்தன. ஆனாலும் அவற்றின் வேகங்களும், விஸ்தாரங்களும் சில அடி தூரமே. இராமனிடம் பறக்கும் அம்பு இருந்திருந்தால் தண்டகாரண்யம் புண்ணியவாசம் பெற்றிருக்காது. ராமேஸ்வரத்தில் சேது பிறந்திருக்காது. ஆனால் இன்று பேட்ரியட், ஸ்கட், ஸில்க் என்று ஏகப்பட்ட ஏவுகணைகள், இந்தியாவும் அக்னியோடும் பிருத்வியோடும் களத்தில் குதித்திருக்கிறது. இது என்ன பரிணாம வளர்ச்சி?

    யுத்தங்கள் எப்போது ஆரம்பித்தன? மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் பூமிக்கு மவுசு கூடியது. தனிமனிதச் சொத்துரிமைகள் பிறந்தன. உணவைச் சேமித்து வைக்க முடிந்தவுடன் வேட்டைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் குறைந்தன.

    விவசாயக் கருவிகளோடு போர்க் கருவிகளும் தயாராக ஆரம்பித்தன. ஆரம்பக் காலத்தில் விவசாயிகளே வீரர்கள்! வீரர்களே விவசாயிகள்! ‘ஜெய் ஜவான் ஜெய்கிஸான்’ என்று லால் பகதூர் சாஸ்திரி எழுப்பிய கோஷம் நினைவிருக்கிறதா?

    விவசாயிகள் உழவுக்குக் கையை நம்பியது போலவே சண்டைக்கும் கைகளையே நம்பினார்கள். நரசிம்ம அவதாரங்கள் நிகழ்ந்தன. நாகரிகம் வளர வளர, விவசாயம் செழிக்கச் செழிக்க நெல் பத்தாயங்கள் பெருகப் பெருக, செல்வம் குமியக் குமிய யுத்தங்கள் ஜனிக்க ஆரம்பித்தன. பெருக ஆரம்பித்தன.

    நாகரிகமும் யுத்தமும், உண்மையும் நிழலும் போல, மெபிஸ்டபிலிஸ் போல (ஒரு பக்கம் அழகி, மறுபக்கம் குரூரன் - ஸலார் ஜங் ம்யூசியத்தில் உள்ளது) ஒன்றை மற்றொன்று வளர்த்தது.

    தொடக்கக் கால யுத்தங்களில் ஆயுதங்களைவிட ஆட்களே அதிகம் தேவைப்பட்டார்கள். ஆகவே அரசர்கள் சிற்றரசர்களையும், ஜமீன்தார்களையும் சார்ந்திருந்தார்கள். விவசாயிகள் அறுவடைக்குப் பின் வீரர்கள் ஆனார்கள். சண்டைகள் ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) முடிக்கப்பட்டன. அவை முடிந்தவுடன் ‘வீரர்கள்’ விவசாயத்துக்குப் போனார்கள்...

    சைனாவில் ஒரு சாணக்கியன்... சாங்க் (Shang) என்று பெயர் கி.மு. 358 முதல் 339 வரை அங்கே அமைச்சராக இருந்தார். அவருடைய கூற்றுப்படி நாடு சமாதானத்தைத் தழுவ விவசாயமும், யுத்தமும் தேவை!

    அதாவது வளமையும் வீரமுமே சமாதானத்தைப் பெற்றெடுக்குமாம்.

    வில்லும் வேலும் வந்தபின் கடோத்கஜன்களும் பீமன்களும் கர்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் வழிவிட்டார்கள். உடலோடு உடல் மோதாமல் எதிராளியை 20, 30 அடி தூரத்திலிருந்து தாக்க முடிந்தது.

    ஆனாலும் போர்க் களங்கள் தேவைப்பட்டன. அவை நாட்டு எல்லைக்கு அருகிலேயே இருந்தன. வீரர்கள் விவசாயத்திற்குத் திரும்ப வேண்டுமே! அம்பு வந்த பின்னும் வேகமும், வீர்யமும் வரவில்லை. இன்றைய ஏவுகணைகளின் வேகம் அன்று கற்பனை செய்ய முடியாதது. இன்றைய ஆயுதங்களின் வீர்யங்கள் டோக்கியோவில் வீசப்பட்ட குண்டு 267141 கட்டடங்களையும் 34000 மக்களையும் ஒரே வீச்சில் தாக்கியது. நடுங்க வைப்பவை; அன்றைய அம்பு அதிகபட்சமாக 2000 அடி சென்றது.

    அதுவும் ஒலிம்பிக் விளையாட்டில்! டேவிட் கோலியாத்தோடு சண்டை போட எடுத்துப் போனது வெறும் கவண் கல் மட்டுமே. நாகரிகம் வளர்ந்த அளவே யுத்தங்களின் எல்லைகள் இருந்தன. பயங்கர யுத்தங்கள் நாகரிகத்திற்காகக் காத்திருந்தன!

    நாகரிகம் சிறகடிக்க வெடி மருந்துகளும் குதிரைப் படைகளும் பிறந்தன. கடிவாளங்களும் வெடி மருந்துகளும் ராஜ்யங்களை விஸ்தரித்தன.

    அலெக்ஸாண்டர் கிரேக்க நாட்டிலிருந்து போரஸோடு கைகுலுக்க சிந்து நதிப் பக்கம் வந்தான். நெப்போலியன் தோல்வியைத் தழுவ மாஸ்கோவின் குளிரை நாடிப் போனான்.

    கஜனியும், கோரியும் ஸோமநாதர் கோயிலை அடிக்கடி வந்து தரிசித்தார்கள். மெல்ல மெல்ல வீரமரணங்கள் பூதக் கண்ணாடிகள் போட்டுக் கொண்டன. தரை மண்டலப் போர்கள் வாயுமண்டல யுத்தங்கள் ஆயின. அவற்றிற்கு வில்லும், அம்பும் முன்னோடிகள். விமானங்கள் வழிமொழிய ஏவுகணைகளும், செயற்கைக் கோள்களும் யுத்தங்களை மண்ணிலிருந்து விண்ணுக்கு உயர்த்தின.

    நெப்போலியனுக்குப் பிறகு பிறந்தது தொழிற் புரட்சி. புகையைக் கக்கிய தொழிற்சாலைகள் எஃகையும், இரும்பையும் மட்டும் உருக்கவில்லை. தண்டவாளங்களையும், தந்திகளையும் மட்டும் பிறப்பிக்கவில்லை. கவசங்கள், துப்பாக்கிகள், குண்டுகள், பீரங்கிகள், விமானங்கள், கப்பல்கள் என்று பிறந்த குழந்தைகள் ஏராளம்.

    தொழிற்புரட்சி இன்றைக்கும் இரண்டுக்கும் மேல் வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அனைத்துமே ஆயிரக்கணக்கில் அளித்தன. இரண்டாவது உலகப் போரில் அமெரிக்கா மட்டும் 60 இலட்சம் துப்பாக்கிகளையும், மூன்று இலட்சம் விமானங்களையும், ஒரு இலட்சம் டாங்கிகளையும், 71000 கப்பல்களையும், 41,000,000,000 குண்டுகளையும் அனுப்பி வைத்தது. மனிதன் துப்பாக்கி பிடித்த துர்பாக்கியசாலி ஆனான். தொழிற்புரட்சி அவனைப் போர்க் கருவி தாங்கும் சுமைதாங்கி ஆக்கிவிட்டது.

    தொழிற்புரட்சி தந்த நூறு வருட வளமை இரண்டாம் உலகப் போரில் 8,200,000 உயிர்களைப் பலி கொண்டது. வீரர்கள் மட்டும் இங்கே இறந்து சுவர்க்கத்தில் பிறக்க வில்லை. வீரர்களை விட அதிகமாகக் காத்தாயியும் மூக்காத்தாளும் மண்ணோடு மண்ணாகிப் போனார்கள்.

    வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. உலகம் விழித்துக் கொண்டது. நாகரிகத்திற்குப் பிராணவாயு தேடினார்கள். ஐ.நா. சபை நாம கரணம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு உலக சரித்திரம் உஜ்ஜாலா சரித்திரமாக மாறும் என நினைத்தார்கள்.

    ஆனால்...! கடந்து 50 வருடங்களில் வியட்நாம், கொரியா, கம்போடியா, அங்கோலா, அயர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பிலிப்பைன்ஸ் காடுகள், டிமோர், க்யூபா, பால்க்லாண்ட், இரான், இராக், குவைத், இஸ்ரேல், சிரியா, எகிப்து, பாலஸ்தீன், சவூதி, போஸ்னியா, செசய்ன் என்று பலதரப்பட்ட போர்க்களங்களைச் சமாதானம் சந்தித்திருக்கிறது. மொத்தம் 150 யுத்தங்கள். மடிந்தவர் 74,000,000 பேர். கடந்த ஐம்பது வருடங்களில் ஆறே ஆறு வாரங்கள் மட்டுமே உலகம் முழுவதும் சமாதானம் சிறகடித்திருக்கிறது.

    அப்படியானால் மனிதனால் யுத்தங்களைத் தவிர்க்க முடியாதா? முடியாது.

    ராஜாஜி சமாதானத்திற்குச் சிறகைத் தேடியது சரித்திரத்தில் எதிர் நீச்சல். அப்படியானால் எதிர்கால யுத்தங்கள் படுபயங்கரமாக இருக்குமா? கோடிக்கணக்கான மக்கள் இறந்து போவார்களா? மாட்டார்கள். எதிர்கால யுத்தங்களில் இரத்தமே கூடச் சிந்தாது. ஆச்சரியமாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

    பங்காரு அடிகள், சாயிபாபா, ஆனந்தமயீ, சின்மயானந்தா, ஹரிதாஸ் கிரி, பிரம்மகுமாரிகள், விசிறி சுவாமிகள்... இவர்கள் எல்லாரும் வேத வித்துகளா? இவர்களிடம் ஆலமரமான இந்து மதம் எப்படி அடைமானம் ஆகிப்போயிற்று?

    சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும்,

    Enjoying the preview?
    Page 1 of 1