Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannin Perumai
Mannin Perumai
Mannin Perumai
Ebook205 pages1 hour

Mannin Perumai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழகுதற்கு இனிய பண்பாளர், பெருந்தகை கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாக்களில், வைகோ ஆற்றிய உரைகளை இந்த நூலில் தொகுத்து இருக்கிறோம்.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580142908649
Mannin Perumai

Read more from K.S. Radhakrishnan

Related to Mannin Perumai

Related ebooks

Reviews for Mannin Perumai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannin Perumai - K.S. Radhakrishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மண்ணின் பெருமை

    (கே.எஸ்.ஆர். நிகழ்ச்சிகளில் வைகோ ஆற்றிய உரைகள்)

    Mannin Perumai

    (K.S.R. Nigazhchigalil Vaiko Aatriya Uraigal)

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குரலால் வையத்தை வசப்படுத்தியவர் வைகோ!

    வைகோ ஓர் அற்புதம்தான்!

    வைகோவுக்கு இணை யாரும் இல்லை

    ‘நிமிர வைக்கும் நெல்லை’

    ‘பாரதி 125 விழா’

    ‘கதை சொல்லி’

    செம்புலிங்கம் பட்டறை

    தமிழகப் பொன்விழா நாள்! நம் உரிமைக்குச் சூளுரைக்கும் நாள்!

    முல்லைப் பெரியாறு பிரச்சினை

    மனித உரிமைச் சட்டங்களும், சில குறிப்புகளும்

    உரிமைக்குக் குரல் கொடுப்போம்

    குரலால் வையத்தை வசப்படுத்தியவர் வைகோ!

    அன்புக்குரிய கே.எஸ். இராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிகளில் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பு ‘மண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் வெளிவருவது மகிழ்ச்சி தரும் சேதி.

    அன்பர் கே.எஸ்.ஆரின் ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற நூல்களும், ‘கதைசொல்லி’ இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது வைகோவின் கர்ஜனைக் குரலின் ஈர்ப்பு அபாரமாக இருந்தது.

    பிறப்பின் உயிர் அடையாளம் குரல். நான் அறிய குரலினால் உலகத்தைக் கட்டிப் போட்டவர்கள் இவர்கள்:

    விளாத்திகுளம் சுவாமிகள்

    மதுரை சோமு

    தோழர் ஜீவா

    பிரியமுள்ள வைகோ

    கடல் ஆவியாகி மேகமாகி, பச்சையம் வழி தரை இறங்கி, உயிர் ராசிகளின் தாகம் தணித்து, நம்மையும் பேணி வளர்க்கும் இந்த நீரினால் பயன் உண்டு நமக்கு; அந்த நீருக்கு என்ன பயன்?

    நீருக்கும் முந்தியது ஓசை எனும் குரல். (ஓசை பிறந்த பிறகே உலகம் பிறந்தது என்பார்கள்.)

    மேலே குறிப்பிட்டவர்களின் குரல்களால் நாம்தான் அதிக நலன் பெற்றோம், அவர்களை விட!

    இந்த வினாடியில் பளிச்சென்று என் நினைவுக்கு வருவது, திருவாசகத்துக்கு மெட்டு அமைத்து இசைப் பேராசான் இளையராஜா வெளியிட்ட கூட்டத்தில் வைகோ அவர்கள் பேசிய குரல். அதிலும் ஓர் இசை இருந்தது.

    குரலால் வையத்தை வசப்படுத்தியவர் வைகோ.

    அவரது பேச்சு விஸ்தாரமான ஒரு ராக சஞ்சாரம் போல இருக்கும். விசயச் செரிவுகள் நிறைந்து இருக்கும்.

    சங்கீத வித்வான்களிடம் மக்கள் இசையை மட்டும் கேட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அரசியல்காரர்களிடம் அவர்கள் மற்றவை சிலதையும் பார்க்கிறார்கள், கவனிக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் சொந்த வாழ்க்கையையும் கவனிக்கிறார்கள்.

    வ.உ.சி., தந்தை பெரியார், பசும்பொன் தேவர், காமராசர், ஜீவா, பேரறிஞர் அண்ணா, இவர்களெல்லாம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போனார்கள் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சுயநலம் இல்லாதவனே தங்கள் தலைவன் என்று தீர்மானித்து வைத்திருக்கிறார்கள்.

    மக்கள் கையில் இருப்பது குண்டாந்தடிகள் அல்ல; சக்தி வாய்ந்த ஓட்டுக்கள். அவர்கள் குறி தப்பாது. காலம் பதில் சொல்லும்!

    கி. ராஜநாராயணன்

    புதுச்சேரி – 605 008

    30.03.2007

    வைகோ ஓர் அற்புதம்தான்!

    கரிசல் மண்ணான கோவில்பட்டிக்கு அருகில் உள்ள குருஞ்சாகுளத்தைச் சேர்ந்தவர் அருமை மாமா, வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். இவருடைய ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, ‘நிமிர வைக்கும் நெல்லை’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    அந்த விழாக்களில், அரசியல் தலைவர்களுள் பண்பான பெருந்தகை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாமா, உயர்திரு வைகோ அவர்கள் ஆற்றிய உரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

    ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில், 1995ஆம் ஆண்டு நடந்தது. அன்று மாமா வைகோ ஆற்றிய உரை இப்போதும் என் நினைவில் உள்ளது. பின் கே.எஸ்.ஆரின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையும் இன்னும் நெஞ்சில் இருந்து நீங்காமல் நிற்கிறது.

    ஏறத்தாழ 325க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அந்த நெல்லைச் சீமை வரலாற்று நூலில் இருந்து, பக்கம் பக்கமாக ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் இழை பிரித்துக் காட்டி அவர் பேசியதைக் கேட்டபோது நான் பரவசம் அடைந்தேன். மனிதனுக்கு இவ்வளவு அபார நினைவு ஆற்றலா?

    இப்படியான ஆழ்ந்த வாசிப்பும், அபார நினைவு ஆற்றலும், பரந்த அறிவும் உடையவராக இருப்பதால்தான் தனி ஆளுமையோடும், துணிச்சலோடும் அரசியலில் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது என்று உணர்ந்தேன். அந்த மேடையில் அவர் அரசியல் பேசவில்லை. எதிர்க் கட்சிகளை விமர்சிக்கவில்லை. அந்தப் பண்புக்கு அவர் சொந்தக்காரர்.

    நூலின் பக்கங்களில் இருந்து சற்றும் விலகாமல், நூலுக்கு உள்ளே தான் புகுந்ததோடு நில்லாமல், அவையோரையும் நூலுக்குள் இழுத்துச் சென்று தன்னுடைய சொந்த நெல்லை மண்ணைப் பற்றிய முழு சித்திரத்தை வடித்துக் கொடுத்தார்.

    நெல்லைச் சீமையில் வாழ்ந்து மறைந்த சித்தர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகள், தியாகிகள், ஜமீன்கள் என்று பட்டியல் இட்டுப் பேசினார். ஒரு அரசியல் கட்சியை இவர் தலைமை ஏற்று நடத்துவதற்கு உண்டான ஆற்றல் பெறுபவதற்கு மூலகாரணமாக அமைந்து இருப்பது இவருடைய கடும் அபார உழைப்பு, பரந்த, ஆழ்ந்த வாசிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

    அன்று என்னுடன் விழாவிற்கு வந்து இருந்த மாற்றுக் கட்சி நண்பர் ஒருவர், இவருடைய பேச்சைக் கேட்டுவிட்டுச் சொன்னது இப்பவும் நினைவில் நிற்கிறது. வைகோ ஓர் அற்புதம்தான்!

    19 மாத சிறைவாசத்தின்போது அவர் எழுதி தமிழுக்குத் தந்த ‘சிறையில் விரிந்த மடல்கள்’ ஒரு அற்புதமான நூல். தம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளுடைய வீர வரலாறுகள், உலகப் புகழ் அடைந்த இலக்கிய படைப்புகள், உலக அரசியல் இப்படியான பல அரிய தகவல்களைத் தருகின்ற நூல் அது. செகுவேரா, உமர் முக்தார் போன்ற விடுதலை வீரர்கள் இவருக்குள் வாழ்ந்து கொண்டு இருப்பதால், ஒரே கொள்கைப் பிடிப்போடு ஒரே இலக்கை நோக்கிப் பயணம் செய்கின்றார்.

    நெல்லை மண்ணான கலிங்கப்பட்டி கிராமத்தில் பிறந்த இந்தக் கிராமவாசி, இன்று இந்தியாவெங்கும் வியாபித்து நிற்கின்றார் என்றால், அதற்குச் சுடர் காட்டிக் கொடுப்பது அவருடைய அறிவுத் திறனும், ஆழ்ந்த வாசிப்பும், வாசித்தவற்றைப் பிறருக்குப் பகிர்ந்து அளிக்கும் மன விரிவும் ஆகும். அவர் ஒரு சேகுவாரா.

    இவருடைய பாதை, இடர்ப்பாடுகள் இல்லாத இலட்சியப் பாதையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    29.03.2007,

    திருநெல்வேலி

    வாழ்த்துக்களுடன்,

    தோப்பில் முஹம்மது மீரான்

    வைகோவுக்கு இணை யாரும் இல்லை

    பழகுதற்கு இனிய பண்பாளர், பெருந்தகை கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாக்களில், வைகோ ஆற்றிய உரைகளை இந்த நூலில் தொகுத்து இருக்கிறோம்.

    தமிழ்ச் சான்றோர்கள் கி.ரா., தோப்பில் முஹம்மது மீரான் ஆகியோர் வழங்கி இருக்கின்ற வாழ்த்து உரைகள் இந்த நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறது. அண்மையில் நடைபெற்ற ‘கதைசொல்லி’ நூல் வெளியீட்டு விழாவில், வைகோ அவர்கள் ஆற்றிய உரையை, துக்ளக் வார ஏடு (7.3.2007) பாராட்டி இருக்கிறது. ‘இந்த விழாவில் எழுத்தாளர்களின் பேச்சைவிடச் சிறப்பாக அமைந்தது வைகோவின் பேச்சுதான். தமிழ்நாட்டில் முதன்முதலாக அச்சில் கதைகள் 1822இல் வெளிவந்தன என்பதில் தொடங்கி, முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள், வெளிவந்த விவரங்களை ஆண்டுவாரியாக, கையில் எந்தக் குறிப்பும் இன்றி, அவர் அடுக்கிக் கூறிய விதம் வியக்க வைத்தது’ என்று குறிப்பிட்டு உள்ளது.

    மயக்க மருந்து வல்லுநராகப் பணிபுரிந்து வருகின்ற வெங்கடேஷ், தாயகத்துக்கு வந்தார். ‘என்னுடைய குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. தொலைக்காட்சியில்தான் வைகோ அவர்களின் உரையை முதலில் கேட்டேன். ஸ்பார்ட்டகஸ் பற்றிய குறிப்புகளையும், உலக வரலாற்றுச் செய்திகளையும் அவர் பேசியதைக் கேட்டபோது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. பத்துப் புத்தகங்களில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை, வைகோ அவர்களின் ஒரே உரையில் கேட்க முடிகிறது. எனக்குத் தெரிய, இப்படிப் பேசுவதற்குத் தமிழ்நாட்டில் வைகோவைப் போல் வேறு யாரும் இல்லை’ என்றார்.

    கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நேசமணி கிறித்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுவதுடன், ‘திராவிட இயக்கத்தில் பிளவுகள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு நடத்தி வருகின்ற அருண் ஜார்ஜ், ‘கல்லூரிகளில் யார் பேசினாலும் மாணவர்கள் குழப்பம் செய்துகொண்டே இருப்பார்கள். பேச விட மாட்டார்கள், ஆனால், எங்கள் கல்லூரியில் வைகோ அவர்கள் ஒன்றரை மணி நேரம் ஆற்றிய உரையை, அனைத்து மாணவர்களும் ஆடாமல், அசையாமல் இருந்து அமைதியாகக் கேட்டார்கள். எல்லோரையும் கவர்ந்து இழுக்கின்ற வகையில் அவருடைய உரை அமைந்து இருந்தது’ என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஓராண்டில், தமிழகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வைகோ உரை ஆற்றினார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற அரிமா சங்கம், சுழற் கழக மாநாடுகளில் அவருடைய உரை, கேட்டோர் அனைவரையும் காந்தமென ஈர்த்தது...

    இப்படி, சான்றோர் பெருமக்கள் வியக்கின்ற, படித்தவர்கள் பாராட்டுகின்ற வைகோ அவர்களின் உரைகளுள், அரிய செய்திகள் நிரம்பிக் கிடக்கின்ற ஆறு உரைகளை இந்த நூலில் தொகுத்து இருக்கிறோம். வைகோவின் இலக்கிய உரைகள் அனைத்தையும் ஒரே நூலாகத் தொகுத்து வருகிறேன். விரைவில் அந்த நூல் வெளியிடப்படும்.

    எழுத்தாளர்கள், நூல் வெளியீட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் நூல்களில் தமிழ் எழுத்துகளை நேராக அச்சிடுங்கள், சாய்த்து அச்சிடாதீர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், செய்யுளாக இருந்து, உரைநடையாக மாறி, கவிதை, ஹைகூ என தமிழ் எளிமையான வடிவம் பெற்று விட்டது. எனவே, ‘புணர்ச்சி விதி’ என்ற பெயரில், இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதாமல், 21 ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் எளிதில் புரிந்து கொள்கின்ற வகையில், தமிழ்ச் சொற்களை உள்ளது உள்ளபடியே, தனித்தனியாக முழுமையாக எழுதுங்கள்.

    கதை, கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு, உண்மைச் செய்திகளை, அறிவியல், மருத்துவம், விண்வெளி குறித்த புதிய செய்திகளைத் தமிழில் எழுதுங்கள். மொழிபெயர்ப்புச் செய்யுங்கள். மேற்கோள்களைக் காட்டாமல், உங்கள் கருத்துகள் மட்டுமே இடம்பெறுகின்ற, உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை எழுதுங்கள் - குடும்ப ஆவணங்களை உருவாக்குங்கள்.

    6.4.2007 அன்று, பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில், பாஸ்கர நாராயணன் அவர்கள் அமைத்து இருக்கின்ற, ‘மறுமலர்ச்சி மையம்’ திறப்பு விழாவின்போது இந்த நூல் வெளியிடப்படுகிறது. அலுவலகப் பணிகளில் உதவிய ருத்ரன், மோகன்தாஸ், கணினியில் நூல் ஆக்கப் பணிகளில் உதவிய பாடாலிங்கம், மதுரை அமுதன், கலைஞர் இராஜா (936 – 268 - 6396) அனைவருக்கும் நன்றி.

    இரண்டு விரல்களால் எழுதுவதை நிறுத்துங்கள்

    பத்து விரல்களால் எழுதுங்கள்

    ஒருமுறையேனும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்!

    அருணகிரி

    வைகோவின் செயலர்

    31.03.2007

    ‘நிமிர வைக்கும் நெல்லை’

    நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம்.

    ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்கின்ற பொருள் பொதிந்த தலைப்போடு வெளியிடப்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1