Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadhai Solli
Kadhai Solli
Kadhai Solli
Ebook249 pages1 hour

Kadhai Solli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தலைமுறைப் பேரம் பேத்திகளை மடியில் அள்ளிப்போட்டுக் கதைசொல்லும் தாத்தாக்களின் பேரன்பைப் பேப்பரில் கொடுப்பதே கதை சொல்லியின் எளிய விளக்கம். இந்தக் கதை சொல்லி இதழில் கே.எஸ்.ஆர். குறிப்புகள் என்று என்னுடைய தொடரில் எழுதிய தொகுப்பாக இந்த நூலை வெளியிடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580142908642
Kadhai Solli

Read more from K.S. Radhakrishnan

Related to Kadhai Solli

Related ebooks

Reviews for Kadhai Solli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadhai Solli - K.S. Radhakrishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதை சொல்லி

    Kadhai Solli

    Author:

    கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    K.S. Radhakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    MENTERI KESIHATAN MALAYSIA

    கி.ரா.வின் வாழ்த்துரை

    கழனியூரன்

    என்னுரை

    சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி

    கழுகுமலைக் கலவரம் (1895)

    என்.டி.வி.

    வைகுந்தசாமி பக்தி இயக்கம்

    மதனபள்ளியில், தாகூர் ‘ஜன கண மன’வை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நிகழ்வுகள்

    கோக், பெப்சிக்குத் தடை

    வெள்ளித்திரை நாயகி பத்மினி

    அமைதியாகத் துயரச்சுமைகளைச் சுமந்த நாயகி ஸ்ரீவித்யா

    மும்பை டப்பாவாலாக்கள்

    முதல் இந்தி எதிர்ப்புப் போர் நெல்லை மண்ணில்!

    இராஜராஜன் காலத்தில் பொருள் மதிப்பும், பண்டமாற்று முறையும்:

    கோவை எப்படித் தென்னகத்தின் மான்செஸ்டரானது? சே.ப. நரசிம்மலு நாயுடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் சுப.கோ. நாராயணசாமி

    உலகம் உஷ்ணமாகிறது

    விளைநிலங்களுக்கு ஆபத்து!

    சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

    விவசாய நீர்நிலைகளுக்கும் பேராபத்து

    விவசாயிகளின் கல்லறைகளின் மீது மாட மாளிகைகள்

    சிப்பாய் புரட்சி 150ஆவது ஆண்டு

    ஒடுக்கப்பட்டோர் ஆலயப் பிரவேசம்

    தொல்காப்பியத்தில் இசை

    ஜேன் ஆஸ்டின்

    பாவைக் கூத்து

    பொதிகை மலைக்கு ஆபத்து

    ஆரியங்காவு மலைக் குகைக்கு மூடு விழா

    நகுலன்

    புலவர் கலியபெருமாள்

    விளாத்திகுளம் சுவாமிகள் நினைவிடத்தின் அவலநிலை

    பாம்பன் பாலம்

    ஆனந்த குமாரசாமி

    தாஜ்மஹால் குறித்து ஒரு செய்தி

    வெ. சாமிநாத சர்மா

    தெருக்கூத்துக்கள் - வகைகள்

    நாளந்தா பல்கலைக்கழகம்

    இமயம் எதிர்காலத்தில் கேள்விக்குறியா?

    உழவன் வாழ்வில் வறுமை ஏன்?

    அது அக்காலம்!

    நெருக்கடியில் காங்கேயம் காளைகள்

    திராவிடப் பல்கலைக்கழகம்

    டார்வினின் ‘உயிர் உருவான’ கோட்பாட்டுக்கு 150

    பரவச இசையில் பாசுரங்கள்

    முதுபெரும் நடிகை எஸ். வரலட்சுமி

    அனுராதாவின் அற்புத இசை

    பிரியா சகோதரிகள்

    அழிவில் ஆடுகள்

    கிருதுமால் நதி

    அரிசி

    பெருங்குளம் பறவைகள் சரணாலயம்

    குமரகுருபரர்

    காடுகள்

    திருப்பதி திருமலை கிருஷ்ணதேவராயர்

    ஸ்காட்லாந்து விடுதலை வீரர் சர் வில்லியம் வாலேஸ்

    நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக்கழக மசோதா

    பரிதிமாற்கலைஞர்

    திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்

    அழிந்த தனுஷ்கோடி தழைக்குமா?

    ஜோசப் சி. குமரப்பா

    எண்டோசல்பானுக்குத் தடை

    நவரச நாயகி சுஜாதா மறைவு

    மிளகு, ஏலக்காய், கிராம்பு...

    தில்லானா மோகனாம்பாள்

    யானைகளுக்குச் சோதனை

    உதயமானது புதிய நாடு தெற்கு சூடான்

    சென்னை உயர்நீதி மன்றம் 150

    தமிழகத்தின் 338கிராமங்கள் எங்கே?

    அலிகார் பல்கலைக்கழகம்

    பழம்பெரும் நடிகை ப. கண்ணாம்பாவுக்கு நூற்றாண்டு

    கிரிக்கெட் வீரர் பட்டோடி

    வரலாற்றில் தட்சசீலம், நாளந்தா...

    ஏ.கே. இராமானுஜம்

    பள்ளிகொண்டபுரம்

    மதுரையில் விவசாயிகள் கலந்துரையாடல்

    கந்தக பூமியில் கரிசல் இலக்கியம்

    மானமிகு படைப்பாளி ஆ. மாதவன்

    இலங்கையின் புதிய அரசியலமைப்புச்சட்டம்

    வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

    கே.எஸ்.ஆர். குறிப்புகள்

    MENTERI KESIHATAN MALAYSIA

    எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற மொழிக்கு ஏற்ப தமிழ்மொழி பல கூறுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் இம்முயற்சியில் அறுபது தலைப்புகளில் அறுபது படைப்பாளர்களால் அறுபது நூல்கள் படைக்கப்பட்டுள்ளன. இச்சீரிய முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதனுடன், இந்நூல்களை இந்திய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சரவைக் குழு கோலாலம்பூர் சென்னை இரட்டை நகர் திட்டத்தின் கீழ் நடைபெறும் எழுத்தாளர் கருத்தரங்குகளில் வெளியிடப்படுவது என்பது பொருள் கொண்ட ஒரு நிகழ்வாக இருக்கின்றது என்பது உண்மை.

    தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் மலேசியாவில் பல்வேறு நிகழ்வுகளை பல இயக்கங்கள் நடத்தி வருகின்றன. ஆனால், இரு நாடுகளின் படைப்பாளர்களின் சந்திப்பில் நடைபெறும் இம்மாதிரியான கருத்தரங்குகள் தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பது திண்ணம். எனவே, இம்மாதிரியான முயற்சிகளை வெகுவாக ஊக்குவிக்க அனைவரும் எண்ணம் கொள்ள வேண்டும். மலேசியாவை பொறுத்தவரையில் மலாய் மற்றும் சீன இலக்கிய வளர்ச்சியையும் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அக்குழுவினருடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் அனுபவங்களை தமிழுக்கு கொண்டு வருதல் அவசியமாகும். இதனை தமிழகத்தைச் சார்ந்த எழுத்து நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வது அவசியமாகும்.

    இந்நூல்களை படைத்திட்ட ஆசிரியர்களையும், நண்பர் நந்தன் மாசிலாமணி அவர்களையும் மீண்டும் எனது நன்றியினைக் கூறி இம்மாதிரியான முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,

    டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம்,

    மலேசியா சுகாதாரத் துறை அமைச்சர்,

    தேசியத் தலைவர் - மலேசிய இந்திய காங்கிரஸ்

    KEMENTERIAN KESIHATAN MALAYSIA ARAS 13, BLOK E7 PARCELE, PRESINT 1

    PUSAT PENTABIRAN KERAJAAN PERSEKUTUAN, 62500 PUTRAJAYA

    TEL 03-0003 2511 FAX: 03-8888 6188

    கி.ரா.வின் வாழ்த்துரை

    கழனியூரன்

    பொறுப்பாசிரியர், கதை சொல்லி

    கி. ராஜநாராயணன் அவர்கள் ஆரம்பித்த சிற்றிதழ் ‘கதைசொல்லி’ அழகான அச்சமைப்பில் தரமான காகிதத்தில், சிறப்பான கதை, கட்டுரைகளுடன் காலாண்டிதழாக கதை சொல்லி இதழ் வெளிவந்து கொண்டிருந்தது.

    புதுவையைச் சேர்ந்த பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களின் உதவியால் ஆரம்பகாலத்திலும், பின்னர் பிரேம், ரமேஷ் என்ற நவீன எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியாலும் கதைசொல்லி இதழ் வெளிவந்தது.

    ஒரு காலகட்டத்தில் கதை சொல்லி சில, பல காரணங்களால் நின்றுவிடும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது கி.ரா.வைப் பார்க்க புதுவை சென்ற என்னிடம் கி.ரா. அவர்கள் கதை சொல்லியை ‘இந்தாபிடி’ என்று என் கையில் கொடுத்துவிட்டார்கள். நானும் மறுப்புச் சொல்லாமல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘ஏழைக்குத் தக்க எள்ளுருண்டை, குருவிக்குத்தக்க கூடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப எளிய வடிவமைப்பில், கதை சொல்லியை கந்தாய இதழ் (நான்கு மாதத்திற்கு ஒருமுறை) என்று கொண்டு வந்தேன். இதழ் நடத்துவதில் எந்த முன் அனுபவமும், பொருளாதார பலமும் இன்றி, மிகுந்த சிரமத்துடன்தான் கதை சொல்லி இதழை கழுநீர்குளம் என்ற சிற்றூரில் இருந்து நான் கொண்டு வந்தேன். அப்போதும் எனக்கு பொருளாதார விசயத்தில் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவிகள் செய்தார்கள்.

    நான் கதை சொல்லி இதழை நடத்துவதற்கு சிரமப்பட்டதை உணர்ந்த கி.ரா. அவர்களே இனி இதழ் கே.எஸ்.ஆர். பொறுப்பில் இருந்து வெளிவரட்டும். பின்னால் இருந்து உதவிகள் செய் என்றார்கள். அதன்பிறகு கதைசொல்லி இதழ் கே.எஸ். பொறுப்பில் வெளிவரத்துவங்கியது என்றாலும் கி. ராஜநாராயணன் அவர்கள் ஆசிரியர் என்றும் கழனியூரன் பொறுப்பாசிரியர் என்றும் கதை சொல்லியில் நானும் கி.ரா.வும் பதவி வகிக்கிறோம்.

    கே.எஸ்.ஆர். அவர்கள் கதை சொல்லியின் இணை ஆசிரியர், வெளியீட்டாளர் என்ற பொறுப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு தற்போது மிகச் சிறப்பாக இதழை பிரசுரித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது கதை சொல்லி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், கிராமியம் சார்ந்த படைப்புகளுக்கும், நாட்டுப்புறவியல் சார்ந்த படைப்புகளுக்கும் இதழில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதழின் அட்டைப் படங்களும் கிராமியப் பண்பாட்டை பறை சாற்றுவதைப் போல் அமைக்கப்படுகிறது.

    தரமான அச்சில் நல்ல கட்டமைப்பில் கதை சொல்லி இதழ் வெளிவருகிறது. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் எங்கெங்கு தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் இப்போது கதை சொல்லிக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் இப்போது கதை சொல்லி இதழ் மின்னிதழாகவும் பிரசுரிக்கப்படுகிறது.

    கே.எஸ்.ஆர். அவர்கள் கதை சொல்லி இதழில் எழுதிய குறிப்புகள் யாவும் தொகுக்கப்பட்டு இப்போது நூலாக வெளிவருகிறது. ஒட்டுமொத்தமாக நூலில் உள்ள குறிப்புகளை எல்லாம் படித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

    எவ்வளவு பெரிய சிந்தனையாளராக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும் தான் எண்ணியதை எண்ணியபடி எழுதலாம். ஆனால் அவைகளை வணிகப்பத்திரிகைகள் அப்படியே வெளியிடுவதில்லை. நிச்சயம் இடப்பற்றாக்குறை, கருத்தொவ்வாமை என்பன போன்ற காரணங்களைக் காட்டி, கட்டுரைகளில் அல்லது கதைகளில் கத்தரிபோட்டு விடுவார்கள். (ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களுக்கு விலக்கு அளித்திருக்கலாம்) படைப்பாளன் தன் சொந்தப் பத்திரிகையில் எழுதுகிறபோது முழுசுதந்திரத்தோடு எழுத முடியும்.

    நிர்பந்தமற்ற, தடையற்ற எழுத்திற்கு என்று ஒரு தனிச்சுவை உள்ளது. அந்தச் சுவையை இந்நூல் முழுக்க வாசகர்கள் அனுபவிக்கலாம். இந்நூலில் உள்ள கே.எஸ்.ஆர் குறிப்புகள் கதைசொல்லி இதழில் பிரசுரமானபோதே அதைப் படித்துவிட்டு மறைந்த மூத்த எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றோர் மிகவும் பாராட்டி கதை சொல்லிக்கு கடிதங்கள் எழுதினார்கள்.

    தற்போது கதைசொல்லி இதழில் வெளிவந்த கே.எஸ்.ஆர். குறிப்புகளை அப்படியே இதழில் பிரசுரமான வரிசையில் நூலாகக் கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் கே.எஸ்.ஆர் குறிப்புகள் இரண்டாம் பதிப்பு வெளிவரும் போது அதை, சமூகம் சார் கட்டுரைகள், வரலாறு சார் கட்டுரைகள் கலை, இலக்கியம் சார் கட்டுரைகள் என்று பகுத்தும் தொகுத்தும் நூலாக வெளியிடும் எண்ணமும் கதை சொல்லி ஆசிரியர் குழுவுக்கு உள்ளது.

    இந்நூலில் உள்ள சமூகம்சார் கட்டுரைகளை எல்லாம் படிக்கும் போது கே.எஸ்.ஆர். அவர்களுக்கு உள்ள மனிதநேயம் குறித்த சிந்தனைகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

    இன்றைக்கு மழை வெள்ளத்தால் தமிழகமே தத்தளிக்கிறது. தலைநகரம் மூழ்கிவிட்டது என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், கே.எஸ்.ஆர். அவர்கள் அன்றைக்கே உலகம் உஷ்ணமாகிறது, பொதிகை மலைக்கு ஆபத்து, இமயம் எதிர்காலத்தில் கேள்விக்குறி, விவசாயிகளின் நீர்நிலைகளுக்கு பேராபத்து என்று கட்டுரைகள் எழுதி எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் அதை அரசோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவே இல்லை.

    கே.எஸ்.ஆர். அவர்கள் ஒரு வழக்கறிஞர், அரசியல் பிரமுகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று அனைவருக்கும் தெரியும். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பது பலருக்கும் தெரியாது. இன்றைக்கும் அவரின் சொந்தக் கிராமத்தில் உள்ள அவரின் நிலங்களில் அவரின் மேற்பார்வையில் விவசாயம் நடந்து கொண்டிருப்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். உழவர் வாழ்வில் வறுமை ஏன், விவசாயிகளின் கல்லறை மீது மாடமாளிகை போன்ற கட்டுரைகளின் மூலம் தாமிரபரணி தண்ணீர், கோக், பெப்சி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வும் விவசாயமும் பாதிக்கப்படும் என்பதை கோக், பெப்சிக்குத் தடை என்ற கட்டுரை மூலமும் தெளிவுபடுத்துகிறார்.

    சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கட்டுரையின் மூலம் ஏழை, எளிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை விவரிக்கின்றார். இப்படி இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் மனிதகுலத்தின் மேல் உள்ள மாறாத அன்பினால் எழுதப்பட்டிருக்கிறது.

    மரபின ஆடுகள், மாடுகள் போன்றவற்றின் அழிவுகள் குறித்தும் சில கட்டுரைகளில் கவலை தெரிவித்துள்ளார். யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதையும் ஒரு கட்டுரையில் கண்டிக்கிறார். அதன் பின்விளைவு கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார். இப்படி மனிதநேயம் மட்டுமல்லாமல், மிருகங்கள்பாலும் நேயம்கொண்டு சில கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

    ஒடுக்கப்பட்டோர் ஆலயப்பிரவேசம் போன்ற கட்டுரைகளில் நூலாசிரியரின் சமூக அக்கறை பளிச்சிடுகிறது.

    1. கழுகுமலைக் கலவரம்

    2. வைகுந்தசாமி பக்தி இயக்கம்

    3. முதல் இந்திப்போர் நெல்லை மண்ணில்

    4. சிப்பாய் புரட்சி - 150-ம் ஆண்டு

    5. திராவிடப் பல்கலைக்கழகம்

    6. கிருதுமால் நதி

    7. திருப்பதி - திருமலை – கிருஷ்ணதேவராயர்

    8. ஸ்காட்லாந்து விடுதலை வீரர் சர் - வில்லியம் வாலேஸ்

    9. நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக்கழக மசோதா.

    10. திராவிட பல்கலைக்கழகம் குப்பம்

    11. அழிந்த தனுஷ்கோடி - தழைக்குமா?

    12. ஜோசப். சி. குமரப்பா

    13. உதயமாகிறது

    Enjoying the preview?
    Page 1 of 1