Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulli Thiriyum Ninaivalaigal - Part 1
Thulli Thiriyum Ninaivalaigal - Part 1
Thulli Thiriyum Ninaivalaigal - Part 1
Ebook273 pages1 hour

Thulli Thiriyum Ninaivalaigal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத் திசைகளிலும் வியாபித்திருப்பது. அணிச்ச மலரையும்விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்கவைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மால்குடி தினங்கள் , மக்சீம் கார்கியின் எனது குழந்தைப் பருவம் போல தமிழில் ஒரு யதார்த்த தளத்தில் இயங்கக் கூடிய குழந்தை இலக்கியமாய் அதே நேரம் யாரும் படிக்க முடிகிற எளிய பதிவாய் ஆக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கிற கடிதங்கள்.

இதில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் மற்றும் அதன் கிளை அனுபவங்கள். அப்படி இதில் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எழுத்துக்களைக் கடந்து செல்கையில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் கிள்ளிவிட்டு, அவர்களுக்குள் காலம் ஜெயித்து மாறா சாசுவதத்துடன் மாற்றமற்று அப்படியப்படியே ஒளிந்திருக்கும் குழந்தைப் பருவத்திற்குள் ஆட்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.

இதில் குழந்தைப் பருவத்து அனுபவங்களும், குழந்தை மனதோடான அனுபவங்களுமாய் நிறைந்திருக்கும். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர் என்றழைக்கப்படும் இளந்தளிர்த் தலைமுறைகள் மற்றும் குழந்தை மனது மாறாதிருப்பவர்கள் அனைவருக்குமான பதிவுகளாய் இதன் வீச்சு படிப்பவர் நினைவுகளில் தடம் பதிக்கும். இதன் வழித் தடங்களில் உங்களின் அனுபவங்களோடு ஒத்திருக்கிற சம்பவங்கள் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதன் தொடர்ச்சியாய் உங்களின் மனதில் எஞ்சிய பிரத்யேக குழந்தை உலகத்தின் அனுபவங்களின் நீட்சியாய், ஞாபகத்தில் கொண்டு வந்து, வார்த்தைகள் கடந்த இனம்புரியாத குதூகலத்திற்குள் மனதின் கைபிடித்து அழைத்துச் செல்லும்.

அதனால் அந்த அனுபவப் பகிர்வினை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. அனுபவங்களாகவோ, கதை வடிவங்களாகவோ சொல்லப்படுகிற எண்ணங்கள் அவர்களை லெகுவில் சென்றடைகின்றன. அவர்கள் அதனைத் தங்களின் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கொள்ளவும் அதில் இடம் இருக்கிறபடியால் அந்த உத்தி அவர்களுக்கு ஏற்புடையதாகிறது. பெற்றோர்கள் அன்பாகி, அன்புடன் தயாரித்துத் தருகிற எளிய உணவுகூட அவர்கள் உடம்பிற்கு மிகவும் உகந்ததாக மாறிப் போகிறது. வெறுப்போடோ, சலிப்போடோ தயாரித்துத் தருகிற ஊட்டமான உணவுகூட அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததாகி விடுகிறது என்கிறது அறிவியல். எதையும் பரந்த, பேதமற்ற அன்பிதத்துடன் செய்தால் குழந்தை உள்ளங்கள் அந்த இதத்தில் கதகதப்பு கொள்ளும்.

இன்றைய அதி வேகமான நகரச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் இருப்பதென்பது அரிது. அப்படியே இருந்தாலும் தொலைக்காட்சி அவர்கள் நேரத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறதென்பது அரிதிலும் அரிது. அப்பிடியே ஒன்றாயிருந்து தொலைக்காட்சியும் குறுக்கிடாமல் இருக்கிற நேரத்திலும் மனசு விட்டுப் பேசிக்கொள்வதென்பது அரிதிலும் அரிதரிது.

ஒரு வகையில் இது என்னுடைய சுருக்கி எழுதப்பட்ட சுயசரிதத்தின் முதல் பாகம் என்று கூட சொல்ல முடிகிற அளவிற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கல் எறி வட்டங்களாய் விரிந்திருக்கிறது. அது என்னையும் மீறித் தன்னிச்சையாய் வழுக்கிக் கொண்டு வந்து உடன் சேர்ந்து கொண்டவை. எழுத எழுத உள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டிய நினைவுகளின் புதையல் கூடிக்கொண்டே போவது ஒரு அதிசயம்.

விடலைப் பருவம் என்கிற துளிர் இளம்பருவத்திலிருக்கும் இளைய மகன் வருணிடம் பொது அறிவு மற்றும் பரஸ்பர அனுபவப் பகிர்தலின் மூலம் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு திட்டத்தைப் புகுத்தினேன். கணினியில் எது வேண்டுமானாலும் பிடித்ததை எழுதுவேன். அதில் பல சின்னச் சின்ன கேள்விகள், தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், வேண்டுகோள்கள், அபிப்பிராயங்கள், நடந்தவை, பிடித்தவை, உணர்ந்தவை என்று பல விசயங்கள் இருக்கும்.

அதற்கு இன்னொரு நாள் அதை வாசிக்கிற வேளையில் அவன் பதிலளிப்பதோடு, அவனுக்குத் தோன்றியவைகள் எது வேண்டுமானாலும் அதில் எழுதலாம். அவைகள் பதில்களாகவோ, வேறு கோணத்திலான கேள்விகளாகவோ விரியும். இப்படி நீட்டித்த விசயத்தின் நீட்சியாகவே இந்தப் பதிவுளைக் கொண்டுவர எண்ணம் துணிந்தது. இதை ஒரு முறையாக வைத்துப் பாலியல் கல்வி குறித்த சிந்தனை உட்பட இந்தத் தொடரைப் பல கோணங்களில் நீட்டலாம் என செயல்படத் தொடங்கினேன். அதற்காக மலரின் பாலியல் வழிமுறை யிலிருந்து துவங்கி மானுடத்தின் உடலியல் மற்றும் பாலியல் கல்வி வரை எளிமையாய், நுண்மையாய் இயல்பாய் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

நட்புடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003727
Thulli Thiriyum Ninaivalaigal - Part 1

Read more from Kulashekar T

Related authors

Related to Thulli Thiriyum Ninaivalaigal - Part 1

Related ebooks

Reviews for Thulli Thiriyum Ninaivalaigal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulli Thiriyum Ninaivalaigal - Part 1 - Kulashekar T

    http://www.pustaka.co.in

    துள்ளித் திரியும் நினைவலைகள்- பாகம் - 1

    Thulli Thiriyum Ninaivalaigal - Part 1

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ட்ரங்க் பெட்டி

    2. கூறு கட்டி மகிழ்ச்சி விற்ற மனது

    3. பயம்

    4. முதல் அனுபவம்

    5. விளையாட்டுகள் பலவிதம்

    6. கனவுப் பிரதேசங்கள்

    7. கற்பித்தலில் வன்முறை

    8. கிராமம்

    9. சித்திர வாத்தியார்

    10. உன்னில் என் ஞாபகங்கள்

    11. ஆரஞ்சு நிறச் சைக்கிள்

    12.பிடித்த படைப்புகளும் படைப்பாளர்களும்

    13. பிரசவிக்காதவை

    14. மகிழ்ச்சி வங்கிகள்

    15. உண்டியல்

    16. காத்திருத்தல்

    17. வேகம்

    18. ஒளிந்திருக்கும் மூலவேர்கள்

    19. தோழமைகள்

    20. விரும்பி ஏற்கும் கட்டுப்பாடு

    21. சமையற் கலை

    22. முதல் பரிபூரண அழகன்

    23. தடைகளே திறவுகோல்கள்

    24. ஏழ்மையென்பது தகுதியின் அளவீடல்ல

    25. காமராஜர் பெரியார்

    26. ஏசு

    27. காந்தி

    அறிமுகம்

    அனுபவங்களின் அருகாமை, தனித்துவ நடை, நட்பின் ஆழம், நேசிப்பின் சொக்கம் இவரது

    படைப்பின் பலங்கள். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்பு நூல்களும், ஏழு குறுநாவல்களும் பிரசுரமாகியிருக்கின்றன.

    கவிஞர் மீராவிற்கு இவர் மீதும், இவரது படைப்பின் மீதும் பிரத்யேகப் பாசம் உண்டு. செல்லப்பிள்ளையாகவே பாவித்தவர் மீரா. அவரது அன்னம் பதிப்பகம் தான் இவர் படைப்புகளின் மீது வெளிச்சமிட்டு அடையாளப்படுத்தியது. இவரது ஒரு சிநேகிதிக்காக' நூலில் இடம் பெற்றிருக்கிற பல கதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

    வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில் தினமணிக் கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இயக்குநர் வஸந்த் அறிமுகம் இவர் மூலம் தான் நிகழ்ந்திருக்கிறது.

    இவரது மனதில் ஒரு பிரார்த்தனை சிறுகதை பேராசிரியர் சண்முகசுந்தரம் தொகுத்த 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது. இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தி. குலசேகர் கதைகள் என்கிற தலைப்பில் சந்தியா பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. இவருடைய வித்தின் கனாக்கள், நீ + இன்னொரு நீ = நாம் ஆகிய கவிதை நு£ல்கள் அச்சில் உள்ளன.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்குத் தேர்ந்த எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். இந்த நூல்களின் திரைப்படக்கலையில் கையாளப்படும் இருபத்திநான்கு தொழில்நுட்பப்பிரிவும் அப்படத்தின் ஒவ்வொரு காட்சித்துளிகளிலும் எப்படிப் பணியாற்றியிருக்கிறது என்கிற நுட்பத்தை டெக்னிக்கல் வார்த்தை எதையுமே பயன்படுத்தாமல் அவரின் பிரத்யேக மொழி கொண்டு சாத்தியப்படுத்தியிருப்பது அந்நூல்களின் சிறப்பு.

    தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை.

    புதிய பார்வை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார். ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக்கொண்டிருந்த வேளையிலேயே, ஸ்பிக் நிறுவனத்தில் வேலை கிடைத்துச் சில காலம் பணிபுரிந்து , அக்காலக்கட்டத்தில் நயமான உலகத்திரைப்படங்கள் மற்றும் இலக்கியப் பரிட்சயமேற்பட்டு, படித்து, பின் எழுதிக் கொண்டிருந்தவர், காத்திருந்து, ஒரு நாள் திட்டமிட்டபடி திரைப்படத் துறைக்குள் அடியெடுத்து வைத்து, கலைஇலக்கிய இருதுறைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் உலக சினிமா என்கிற நிகழ்ச்சியை ஆழமான தேடலோடு எழுதி, இயக்கியிருக்கிறார்.

    இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை

    இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார். திரைப்பட உலகின் மீது தீராத காதல் கொண்டிருப்பவர். அந்த அடர்த்தியான காதல் புருவம் உயர்த்த வைக்கிற படைப்புகளை நிச்சயம் வழங்கச் செய்யும்.

    இயக்குநர் பாக்யராஜிடம் திரைக்கதையின் நுட்பத்தையும், வசந்த்திடம் அழகியலையும் நடிகர்களிடம் துல்லியமான பாவனைகள் வெளிப்படுத்த வைக்கிற உத்தியையும், ராஜன்சர்மாவிடம் திரை மொழியின் இலக்கணத்தையும், ரேவதியிடம் மனது விட்டுப் பாராட்டும் பரந்த தன்மையையும், இலக்கியத்தின் மூலம் வாழ்வின் சூட்சுமத்தையும் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

    குலசேகரின் படைப்புகளில் நிறைந்திருக்கும் மானுட நேயம், சிநேக ராகம், அன்பு இழையோடல் இப்படி எங்கும் மென்மையைப் ஸ்பரிஷிக்கிறேன். ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது அதனோடேயே ஒன்றிவிடுவதால், நாமே அந்தப் பாத்திரங்களாகிப் போகிற உணர்வு. ததும்பும் நேசத்தில் மனது நிறைந்து கொள்கிறது. அதை எண்ணும்போது எழுகிற சிலிர்ப்புத் தாங்கமுடியவில்லை. வாழ்த்துகள் குலசேகர்.

    நூலாசிரியர் பற்றிச் சில படைப்பாளர்கள்

    அருமை நண்பர் குலசேகருக்கு,

    நண்பர் சுஜாதாவிடமும் உங்களைப் பற்றி, உங்களின் தனித்தவ நடை, உங்கள் படைப்புகள் பற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். உங்ககிட்டயிருந்து இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

    ***

    அருமை நண்பர் குலசேகர் அவர்களுக்கு, தங்களிடம் நான் எதிர்பார்க்கும் வளர்ச்சி காணப்படுகிறது. நல்வாழ்த்துக்கள்.

    தி.க.சி

    நெல்லை

    ***

    அன்பார்ந்த தி. குலசேகர் அவர்களுக்கு,

    இரவு 8 மணிக்குத் துவங்கி 10 மணி வரையில் ஒரே மூச்சில் படித்து முடித்தது எனக்கே வியப்பு. அவ்வளவு ஈர்ப்பு. உங்கள் எழுத்தின் சக்திக்கு இதுவே சாட்சி! உங்களுக்கு என் பூரண ஆசிகள்.

    அன்புடன்,

    பால்யூ

    ***

    பிரிய நண்ப,

    அன்பு, மனிதநேயம், முற்போக்கான சிந்தனை, துணிச்சலான செயல்பாடுகள் உங்கள் படைப்புகளுக்குள் நிறைந்து காணப்படுகின்றன. உங்கள் படைப்பு ஆற்றல் உரிய கவனிப்பைப் பெற வாழ்த்துக்கள்.

    வல்லிக்கண்ணன்

    சென்னை

    ***

    உங்களின் பிரிக்க முடியாத துருவங்கள் வெண்ணிலா ஆகிய கதைகள் படித்தேன். ஒரே வார்த்தை. உலகத்தரம்.

    சொ. பிரபாகரன்

    ***

    அன்பின் குலசேகர்!

    காதல்.. நட்பின் இன்னொரு பரிணாமம். மனிதம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கான உலகச் சிந்தனை. தென்றலின் சிலிர்ப்பில் ஒளியின் துடிப்பில் மழைத்துளியின் முத்தத்தில் உயிர் மலரும் மொட்டு. ஆஉறா! என்ன அற்புதமான சிந்தனை! குலசேகர்!ஆண் பெண் சிநேகம் பற்றி மிக அழகாக ஆழமாக அழுத்தமாகக் கூறியிருக்கின்றன உங்கள் படைப்புகள். அனைத்தும் அனைத்துமே உடன்பாடானவை.

    ப்ரிய ஸ்நேகமோடு,

    ஆனந்தி

    ***

    அன்பார்ந்த குலசேகருக்கு,

    சென்னைக்குச் சென்று குடியேறியதும் நான் கூறியபடி நண்பர் கவிக்கோ அப்துல் ரகுமானைச் சென்று சந்தித்துப் பழகியிருக்கிறீர்கள்.

    தங்களின் சந்திப்பின் மூலம் ரகுமானைக் கவர்ந்திருக்கிறீர்கள். என்னிடம் பாராட்டிச் சொன்னார். இரண்டு மூன்று முறை உங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

    தினமணிக்கதிரில் பூர்ணம் புகழ்ந்து தள்ளி இருக்கிறாரே! பாராட்டுக்கள். பெரிதுவந்தேன். குலசேகர் சாதாரணமான மனிதர் இல்லை. மகத்தான கலைஞர். வாழ்த்துகள்.

    மீரா

    ***

    அன்புமிக்க குலசேகர்,

    தினத்தந்தி ஞாயிறு மலரில் தாங்கள் எழுதியிருந்த கதை படித்தேன். பிடித்திருந்தது. உங்கள் தொகுப்பில் பிடித்திருந்த கதைகள் பற்றி நேரில் பேசுவோம்.

    திலகவதி ஐ.பி.எஸ்

    ***

    உறலோ சேகர்,

    ஹ்மீs..ஹ்ஷீu லீணீஸ்மீ ரீஷீt sஷீனீமீtலீவீஸீரீ.. உனக்கு வாழ்வின் 'பிடி' கதைகளில் கிடைக்கிறது. அழகான விஷயம் இது.

    எஸ். சங்கரநாராயணன்

    ***

    அன்பு நண்பர் ஷேக்கர்ஜி,

    வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. கவரைப் பிரித்தவுடன் இவ்வளவு பக்கங்களா என நினைத்துப் படித்து முடிக்கும்போது இவ்வளவு பக்கங்கள் தானா என நினைத்தேன். சில(ர்) கடிதங்கள் அப்படித்தான் நம்முள் புதை சேரென மூழ்கிப் போகும். உங்களின் சிறுகதை நூலைத் தற்செயலாய்ப் படிக்க நேர்ந்ததில் கிடைத்த உங்கள் நட்பிற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் சிறுகதை, நாவல், திரைக்கதைகளோடு, கவிதைகளும் நிறைய எழுதுங்கள். ஏனென்றால் உங்களிடம் கவித்துவம் வண்டிவண்டியாய் இருக்கிறது.

    வாழ்த்துகள்.

    வெ. சுப்ரமணியபாரதி

    ***

    அன்பு நண்பருக்கு,

    வணக்கம். உங்களை சுபமங்களா அலுவலகத்தில் வைத்து தற்செயலாய் அறிமுகமாகிக் கொண்டதில் உள்ளபடி மகிழ்ச்சி. நாங்கள் மனப்பிரச்னைகளுக்கான யீக்ஷீமீமீ நீஷீuஸீsமீறீறீவீஸீரீ-ங்கிற்காக ரங்கநாதன் தெருவில் துவங்கியிருக்கும் ஆத்மன் ஆலோசனை மையத்தின் துவக்க விழாவிற்கு வருகை தந்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்களின் சந்திப்பு மிகுந்த உற்சாகமளிக்கிறது. தங்கள் புத்தகம் கிடைத்தது. எம்.ஏ தேர்வு ஜுனில் முடித்துவிட்டுப் படிக்கிறேன். என்னுடைய ஒவ்வாத உணர்வுகள், உணர்வுகள் உறங்குவதில்லை புத்தகங்கள் அனுப்பியிருக்கிறேன். படித்துப் பார்த்துச் சொல்லுங்கள். சென்னை வரும்போது அவசியம் தெரிவியுங்கள். அடிக்கடி கடிதம் எழுதுங்கள்.

    தோழமையுடன்

    கோபி கிருஷ்ணன்

    ***

    அன்பிற்கினிய எழுத்தாள நண்பர் குலசேகருக்கு,

    சுபமங்களாவில் வெளிவந்த தங்கள் கதை மனுசி படித்தேன். மனிதநேயமிக்க கதை. அதைப் படிக்கும் போது உங்கள் இலக்கியம் குறித்து எல்லோரும் பேசுகிற ஒரு நாள் வரும் என்பதை உணர முடிந்தது. மனித மனம் எவ்வளவு சிக்கலானது? எவ்வளவு நுண்மையானது? புரிதல், அணுகுமுறையில் மாறுபடுகிறதால் ஒரே செயல் வெவ்வேறு வகைகளில் விளக்கப்படுகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறோம்? இங்கே ஆணியமும் பெண்ணியமும் இப்படித் தான் கட்சி கட்டிக்கொண்டு வார்த்தைப் போராட்டத்திற்கிடையே சிக்கித் தவிக்கிறது.

    மனிதத்தை மனிதமாகப் பார்ப்பது தானே பிரச்னைகளின் தீர்வு. உங்களைப் போன்ற இளைஞர்கள் பெண்ணியம் பற்றிய பரந்துபட்ட பார்வையோடு உருவாகியிருப்பது மனதிற்கு நிறைவாய் இருக்கிறது. உங்கள் படைப்பில் பெண்ணின் மனஉணர்வைத் துல்லியமாய்ப் படியெடுக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    அன்புள்ள

    விஜயலட்சுமி

    தமிழ்ப் பேராசிரியர்

    ***

    அன்பு குலசேகர்,

    உங்களால மிகச் சிறந்த இலக்கியம் படைக்க முடியும். சீக்கிரம் புரிந்து கொள்ளுதல், காணும் இன்பம், புதுமைகள் மீது மோகங் கொள்ளுதல், திறமைகள், உண்மைகள் மீது உயர்வான மதிப்புக் கொண்டிருத்தல், உழைக்கத் தயாராகயிருத்தல் இவையெல்லாம் உங்ககிட்ட உள்ள உறுதுணைகள்.

    நல்ல உற்சாகமான, அன்பான, அழகான, இளைஞர் நீங்க. உங்க எழுத்து ரொம்பவும் கூர்மைப் பட்டிருக்கு. சமூக அக்கறை மிகுந்திருக்கு.

    நீங்க ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். சொல்ல முடியாத உங்க இனிய அன்பு..தோழமை.. என்னெ ரொம்பப் பக்குவப்படுத்துது. உங்க தோழமை எண்ணி எண்ணி மகிழத் தக்கது. நீங்க ஜெயிக்கனும். ஜெயிப்பீங்க.. நிதானமா, ஒரு தவமா செயல்பட்டு இன்னும் பலப்பல அற்புதங்கள் படைச்சி சாதனை படைக்க என்னிக்கும் உங்க கூடவே இருக்கும் என் வாழ்த்துகள்...

    அன்புடன்,

    ச. தனுஷ்கோடி ராமசாமி

    நோக்கம்

    குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத் திசைகளிலும் வியாபித்திருப்பது. அணிச்ச மலரையும்விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்கவைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம்.

    எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மால்குடி தினங்கள் , மக்சீம் கார்கியின் எனது குழந்தைப் பருவம் போல தமிழில் ஒரு யதார்த்த தளத்தில் இயங்கக் கூடிய குழந்தை இலக்கியமாய் அதே நேரம் யாரும் படிக்க முடிகிற எளிய பதிவாய் ஆக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கிற கடிதங்கள்.

    இதில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் மற்றும் அதன் கிளை அனுபவங்கள். அப்படி இதில் எத்தனைஎத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எழுத்துக்களைக் கடந்து செல்கையில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் கிள்ளிவிட்டு, அவர்களுக்குள் காலம் ஜெயித்து மாறா சாசுவதத்துடன் மாற்றமற்று அப்படியப்படியே ஒளிந்திருக்கும் குழந்தைப் பருவத்திற்குள் ஆட்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.

    வளர்ந்து கொண்டிருப்பவர்களின் மனதிற்குள் புகுந்து அங்கே குடிகொண்டிருக்கும் நினைவுகளோடும், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வியலின் அர்த்தம் நிறைந்த கணங்களை உரசிச்சென்று மின்னலாய் ஒரு ஒளிக்கீற்றை நினைவுகளில் விதைத்தபடி அத்தனையையும் போகிறபோக்கில் ஞாபகப்படுத்திச் செல்லும்.

    இதில் குழந்தைப் பருவத்து அனுபவங்களும், குழந்தை மனதோடான அனுபவங்களுமாய் நிறைந்திருக்கும். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர் என்றழைக்கப்படும் இளந்தளிர்த் தலைமுறைகள் மற்றும் குழந்தை மனது மாறாதிருப்பவர்கள் அனைவருக்குமான பதிவுகளாய் இதன் வீச்சு படிப்பவர் நினைவுகளில் தடம் பதிக்கும். இதன் வழித் தடங்களில் உங்களின் அனுபவங்களோடு ஒத்திருக்கிற சம்பவங்கள் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

    அதன் தொடர்ச்சியாய் உங்களின் மனதில் எஞ்சிய பிரத்யேக குழந்தை உலகத்தின் அனுபவங்களின் நீட்சியாய், ஞாபகத்தில் கொண்டு வந்து, வார்த்தைகள் கடந்த இனம்புரியாத குதூகலத்திற்குள் மனதின் கைபிடித்து அழைத்துச் செல்லும்.

    வளர்ந்தவர்கள் எதை வழி நெடுக நமக்கே தெரியாமல் தவறவிட்டுக் கொண்டிருந்திருக்கிறோம் என்றும், வளர்கிறவர்கள் எதை இழந்துவிடக் கூடாது என்பதையும் உணர்வால் தொட்டுச் செல்லும். இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிற குழந்தையின் மனதை ஆராதிக்கும் எண்ணத்தின், நிகழ்வின், காட்சிப் படிமங்கள் உள்ளுக்குள் அமைத்திருக்கும் பிரத்யேகத் திரையில் ஒரு பேசும் புகைப்படக் காட்சியமைக்கும்.

    குழந்தை மனது பசுந்தளிருக்கு ஒப்பானது. மிருதுத்துவமிக்கது. ஒரு தூய்மையான வெற்றிடம் அது. நம் வாழ்வை அற்புதங்கள் நோக்கி நகர்த்திச் செல்லக்கூடிய சக்தி படைத்தவை அவை. அவை நம்மின் ஆதாரங்கள். அது போடுகிற அஸ்திவாரத்தில் நம் இளைய தலைமுறையைக் கம்பீரமாய் எழுந்து நிற்கச் செய்ய விரும்பும் ஒரு மனதின் ஆலாபனையே இந்தப் பயணத்தின் வழியெங்கும் மனதிற்குள் இசைக்கும்.

    குழந்தைகள் ஆலோசனைகளைப் பெரும்பாலும் வரவேற்பதில்லை. அவை தீர்மானமாய் இருக்கிறது. இப்படிச் செய். அப்படிச் செய்யாதே என்கிற தொனியில் அவை இருக்கின்றன. அதில் குழந்தைகள் சிந்தித்து அதனை பரிசீலிப்பதற்கான இடம் ஒதுக்கப்படுவதில்லை என்பதாலேயே அவர்கள் ஆலோசனைகளைச் சமயங்களில் அலட்சியம் செய்யவோ, நிராகரிக்கவோ முற்படுகிறார்கள்.

    அதனால் நமது அனுபவங்களை அவர்களோடு பகிர்வது தான் ஆரோக்யமான அணுகுமுறை. அதில் அவர்கள் ஆலோசனைகளைக் காட்சிப் படிமங்களாகப் பெறுவதோடு, தங்களின் சிந்தனையைச் செலுத்தி அதனுள் புகுந்து, தங்களின் அனுபவங்களாய் அதனை உருமாற்றி எடுத்துக்கொண்டு வெளிவருகிறார்கள்.

    அதனால் அந்த அனுபவப் பகிர்வினை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

    அனுபவங்களாகவோ, கதை வடிவங்களாகவோ சொல்லப்படுகிற எண்ணங்கள் அவர்களை லெகுவில் சென்றடைகின்றன. அவர்கள் அதனைத் தங்களின் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கொள்ளவும் அதில் இடம் இருக்கிறபடியால் அந்த உத்தி அவர்களுக்கு ஏற்புடையதாகிறது.

    பெற்றோர்கள் அன்பாகி, அன்புடன் தயாரித்துத் தருகிற எளிய உணவுகூட அவர்கள் உடம்பிற்கு மிகவும் உகந்ததாக மாறிப் போகிறது. வெறுப்போடோ, சலிப்போடோ தயாரித்துத் தருகிற ஊட்டமான உணவுகூட அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததாகி விடுகிறது என்கிறது அறிவியல். எதையும் பரந்த, பேதமற்ற அன்பிதத்துடன் செய்தால் குழந்தை உள்ளங்கள் அந்த இதத்தில் கதகதப்பு கொள்ளும்.

    இன்றைய அதி வேகமான நகரச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில்

    இருப்பதென்பது அரிது. அப்படியே இருந்தாலும் தொலைக்காட்சி அவர்கள் நேரத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறதென்பது அரிதிலும் அரிது. அப்பிடியே ஒன்றாயிருந்து தொலைக்காட்சியும் குறுக்கிடாமல் இருக்கிற நேரத்திலும் மனசு விட்டுப் பேசிக்கொள்வதென்பது அரிதிலும் அரிதரிது.

    அப்படிப் பேசியிருந்தால் என்னஎன்னல்லாம் பேசியிருந்திருப்போம். மனதிற்குள்போய் அப்படி அசை போட்டதில் கொப்பளித்துக்கொண்டு வந்த இறவா நினைவுகளைத் தான் சின்னதாய் இங்கே

    தொகுத்திருக்கிறேன். இதில் ஒரு குழந்தை உலகத்தின் அத்தனை அனுபவங்களும் தடைசெய்யப்படாமல் நிஜம் என்கிற சான்றிதழ் கொண்டு, மனதின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் உலகத்திற்குள் நிறைய குழந்தைகள், அந்தக் குழந்தையின் குழந்தைகள் என உள்ளெறி வட்டங்களாய் எண்ணற்ற அனுபவங்கள் இணைந்து கொண்டேயிருக்கின்றன.

    ஒரு வகையில் இது என்னுடைய சுருக்கி எழுதப்பட்ட சுயசரிதத்தின் முதல் பாகம் என்று கூட சொல்ல முடிகிற அளவிற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கல் எறி வட்டங்களாய் விரிந்திருக்கிறது. அது என்னையும் மீறித் தன்னிச்சையாய் வழுக்கிக் கொண்டு வந்து உடன் சேர்ந்து கொண்டவை. எழுத எழுத உள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டிய நினைவுகளின் புதையல் கூடிக்கொண்டே போவது ஒரு அதிசயம்.

    காலமும், சூழலும் அனுமதித்தால் இரண்டாம் பாகம் உங்களின் பார்வைக்கு வந்து, உங்களின் உள்ளே

    Enjoying the preview?
    Page 1 of 1