Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam
Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam
Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam
Ebook516 pages7 hours

Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சார்லி சாப்ளின் சினிமா மௌன மொழியில் தன்னை துவக்கிய காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். அவர் கிட்டத்தட்ட 80 படங்கள் குறும்படங்களும், நெடும்படங்களுமாய் நடித்திருக்கிறார். அவரின் அத்தனை படைப்புலகமும் இங்கே சுவாரஸ்யமாக பதிவாகியிருக்கிறது. மேலும், அவரின் வாழ்க்கை வரலாறும் அடர்வாய் பதிவாகியிருக்கிறது. அவரின் முதல் காதல் தோன்றிய கதை, அந்த காதலி பிளேக் நோயில் இறந்துவிட, அவரின் தோற்றத்தில் உள்ளவர்களை எல்லாம் காதலித்து ஏமாந்து முடிவில் அதே தோற்றத்தில் அதே குணாம்சத்தோடு ஒரு காதலியை அவர் கண்டடைந்த காதல் கதை உட்பட, அவரை பற்றிய முழுமையான வாழ்க்கை மற்றும் படைப்பு அனுபவத்தை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த புத்தகம்.

திரைமொழியின் பரவசிப்புடன்,

தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003093
Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam

Read more from Kulashekar T

Related to Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam

Related ebooks

Reviews for Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Charlie Chaplin - Oru Muzhumayana Dharisanam - Kulashekar T

    http://www.pustaka.co.in

    சார்லி சாப்ளின்

    ஒரு முழுமையான தரிசனம்

    Charlie Chaplin

    Oru Muzhumaiyana Dharisanam

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கலை இலக்கிய பயணத்தின் நினைவுகூரல்

    2. மௌனம் மொழி

    3. முதல் காதல்

    4. சாப்ளினின் சொந்தக் கதை

    5. திரையுலக பிரவேசம்

    6. சாப்ளின் திரைக்காவியங்கள்

    7. மேக்கிங் எ லிவிங் (making a living)

    8. தி கிட் ஆட்டோரேச’ஸ் அட் வெனீஸ் (the kid auto races at vienice)

    9. ஆட்டோ ரேஸ் (auto race)

    10. ஹிஸ் ரீஜெனரேசன் (his regeneration)

    11. எ கிங்’ஸ் ரேன்ஸம் (a king’s ransom)

    12. பிட்வின் ஷவர்ஸ்(between showers)

    13. ஹிஸ் மில்லியன் டாலர் ஜாப் (his favourite past time)

    14. ஹிஸ் ஃபேவரைட் பாஸ்ட் டைம் (his favourite past time)

    15. க்ருயல் க்ருயல் லவ் (cruel cruel love)

    16. தி லேன்ட்லேடி’ஸ் பெட்(the landlady’s pet)

    17. ஹாட் ஃபினிஷ்(hot finish)

    18. ட்வென்ட்டி மினிட்ஸ் ஆஃப் லவ் (twenty minutes of love)

    19. காட் இன் எ காபரே(caught in a cabaret)

    20. காட் இன் தி ரெய்ன் (caught in the rain)

    21. தி ஃபேட்டல் மாலேட்(the fatal mallet)

    22. ஹெர் ஃபிரண்ட் தி பன்டிட்(het friend the bandit)

    23. தி நாக் அவ்ட்(the knock out)

    24. தி மேபெல்’ஸ் பிஸி டே(the mabel’s busy day)

    25. மேபெல்’ஸ் மேரிட் லைஃப்(mabel’s married life)

    26. லாஃபிங் கேஸ்(laughing gas)

    27. தி ப்ராப்பர்ட்டி மேன்(the property man)

    28. தி ஃபேஸ் ஆன் தி பார்ரூம் ஃபுளோர்(the face on the barroom floor)

    29. ரெக்ரியேஷன்(recreation)

    30. தி மேஸ்க்யூரேடர்(the masquerader)

    31. தி குட் ஃபார் நத்திங்(the good for nothing)

    32. தி ரவ்ண்டர்ஸ்(the rounders)

    33. தி நியூ ஜேனிட்டார் (the new janitor)

    34. தி ரைவல் மாஸர்ஸ்(the rival massers)

    35. டவ் அன்ட் டைனமைட்

    36. ஜென்டில்மென் ஆஃப் நெர்வ்(gentlemen of nerve)

    37. ஹிஸ் மியூசிகல் கேரியர்(his musical carrier)

    38. ஹிஸ் ட்ரைஸ்டிங் ப்ளேஸ்(his trysting place)

    39. டில்லீ’ஸ் பங்ச்சர்ட் ரொமான்ஸ் (tillie’s puntrued romance)

    40. எ ஃபேர் எக்சேஞ்ச்(a fair exchange)

    41. ஹிஸ் ப்ரிஹிஸ்டாரிக் பாஸ்ட் (his prehistoric past)

    42. ஹிஸ் நியூ ஜாப்(his new job)

    43. எ நைட் அவ்ட்(a night out)

    44. தி சாம்பியன் (the champion)

    45. இன் தி பார்க்(in the park)

    46. எ ஜிட்னி எலோப்மெண்ட்(a jitney elopement)

    47. தி ட்ராம்ப் (the tramp)

    48. பை தி ஷீ(by the sea)

    49. வொர்க்(work)

    50. எ விமன்(a woman)

    51. தி பேங்க்(the bank)

    52. சாங்காய்ட்(shanghaied)

    53. எ நைட் இன் தி ஷோ (a night in the show)

    54. கார்மென் (Carmen)

    55. போலீஸ் (police)

    56. தி ஃபுளோர் வாக்கர் (the floor walker)

    57. தி ஃபயர்மேன் (the fireman)

    58. தி வேகா பாண்ட் (the vagabond)

    59. ஒன் ஏ. எம்(one a.m)

    60. தி கவ்ண்ட் (the count)

    61. பான் ஷாப் (pawn shop)

    62. பிஹைன்ட் தி ஸ்க்ரீன்(behind the screen)

    63. தி ரிங்க்(the rink)

    64. ஈஸி ஸ்ட்ரீட்(easy street)

    65. தி க்யூர் (the cure)

    66. தி இமிக்ரண்ட் (the immigrant)

    67. தி அட்வஞ்ச்சரர் (the adventurer)

    68. எ டாக்’ஸ் லைஃப்(a dog’s life)

    69. சோல்டர் ஆர்ம்ஸ் (shoulder arms)

    70. தி பாண்ட்(the bond)

    71. சன்னிசைட்(sunny side)

    72. எ டே’ஸ் பிளஷர் (a day’s pleasure)

    73. தி கிட்(the kid)

    74. தி ஐடில் கிளாஸ்(the idle class)

    75. பே டே (pay day)

    76. தி பில்க்ரிம் (the pilgrim)

    77. எ விமன் ஆஃப் பாரிஸ்(a woman of paris)

    78. கோல்ட் ரஷ் (gold rush)

    79. தி சர்க்கஸ் (the circus)

    80. சிட்டி லைட்ஸ் (city lights)

    81. மாடர்ன் டைம்ஸ்(modern times)

    82. தி கிரேட் டிக்டேட்டர்(the great dictator)

    83. மான்சியல் வெர்டாக்ஸ்(monsieur verdoux)

    84. லைம்லைட் (lime light)

    85. எ கிங் இன் நியூயார்க் (a king in newyork)

    86. எ கவுண்ட்டஸ் ஃபிரம் ஹாங்காங் (a countess from hongkong)

    87. ஜாவா மற்றும் பாலி பழங்குடியினர் பற்றிய ஆவணப்படம்(documentary film)

    88. விருதுகள்

    89. சில பிரத்யேக தகவல்கள்

    90. பேசும் படம்

    91. தி ஆர்ட்டிஸ்ட்

    92. ஒரு நகைச்சுவை களஞ்சியத்தின் நிறைவுரை

    தி. குலசேகர்

    சிரிப்பு கொடை வள்ளல்களுக்கு சமர்ப்பணம்

    ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன்

    சந்திரபாபு

    நாகேஷ்

    கவுண்டமணி

    வடிவேல்

    விவேக்

    சந்தானம்

    டி.ஏ.மதுரம்

    டி.பி.முத்துலட்சுமி

    மனோரமா

    மாதவி

    ரமாபிரபா

    சச்சு

    காந்திமதி

    கோவை சரளா

    கல்பனா

    தேவதர்சினி

    ஆர்த்தி

    மதுமிதா

    வித்யுலேகா

    1. கலை இலக்கிய பயணத்தின் நினைவுகூரல்

    மாணவ பிராயத்தில் பதினாறு வயதினிலே படம் பார்த்த பிறகு தான் திரைப்படத் துறைக்குள் ஒரு கலைஞனாக பயணிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படித்து முடித்ததும் சரியான சந்தர்ப்பம் பார்த்து எப்படியாவது திரைப்படத்துறைக்குள் அடியெடுத்து வைத்துவிட வேண்டும் என்று மனது தீர்மானித்து விட்டது.

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்.சி ரசாயணம் படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் விரட்டிவிரட்டி ஆங்கிலபடங்கள் பார்க்க ஆரம்பித்தாகிவிட்டது. முதல் ஆசான் கவிஞர் ராஜசுந்தரராஜனுடனான உரையாடல் உலக சினிமா குறித்த ஆழமான புரிதல் ஏற்பட உதவியது.

    திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கு ஏதாவது அடையாளம் வேண்டுமே என சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதினேன். ஒரு கட்டத்தில் இலக்கியமும் கலை தாகத்தின் இன்னொரு அங்கமாகி என்னை விட்டு பிரிக்கமுடியாதவொரு தோழமையாக ஆகிக்கொண்டது. அதன் மூலம் நிறைய எழுத்தாள நண்பர்கள் கிடைத்தார்கள். அப்படித்தான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி என்னோடு உணர்வும் நரம்புமாய் ஆகிப்போனார். மாபெரும் கலைஞர் அவர். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை அற்புதம். மனிதநேயத்தின் ஈரம் வற்றாத அந்த புன்னகை ஒரு அற்புதம். அவர் சாத்தூரில் இருந்து சென்னை வந்தால் என் வீடு தான். இரவு முழுவதும் மொட்டை மாடி தான். ஈசி சேர் தான். இலக்கியம், அந்தரங்கம், காதல், நட்பு, அரசியல், தமிழ், நேயம் என்று ஒரே அரட்டை தான். அவரின் எல்லா அந்தரங்கமும் தெரிந்த தோழமை என்கிற அந்தஸ்து அவர் எனக்கு தந்த பெருமை. என் எழுத்து என்கிற படைப்பு சம்பாதித்த உசத்தியான சன்மானம் அவர். எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தி வைத்ததுகூட அவர் தான்.

    சற்றும் எதிர்பாராமல் ஒரு முறை வறுமை என்னை ஆக்கிரமித்துக்கொண்டது. எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். ஊருக்கு சென்ற கையோடு ஆயிரம் ரூபாய் மணியார்டர் செய்திருந்தார். அதன் அடிக்குறிப்பில் என் அன்பான குலசேகருக்கு.. நீங்க ரொம்ப நல்லவரு.. உங்க நட்பு என்னை பெருமிதப்பட வைக்குது. தோழமையோட அன்பு பரிசு இது. நீங்க ஜெயிக்கனும் என்று வண்ணவண்ண எழுத்துக்களில் எழுதியிருந்தார்.

    அது என் உயிர் உலாவும் நினைவுகளின் பெட்டகமான ட்ரங்க் பெட்டிக்குள் உயிர்ப்போடு பத்திரமாக இருக்கிறது. உலகின் விலைமதிக்கமுடியாத சொத்து அது. அவர் தான் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமானால் கிணற்றில் குதித்து தான் ஆகவேண்டும் என என்னுடைய ஆத்மார்த்தமான விருப்பத்திற்கு தைரியமும், முதல் பச்சைக்கொடியும் காட்டியவர்.

    என் மீது உயிரையே வைத்திருந்த கவிஞர் மீரா அன்னம் பதிப்பகம் மூலம் பிரபல இதழ்களில் பிரசுரமாகியிருந்த எனது சிறுகதைகளை மூன்று தொகுப்புகளாக பிரசுரித்தார். என்னுடைய விருப்பத்தை சொன்னதும் தனது நண்பர் கவிக்கோ அப்துல்ரகுமானிடம் என்னை அனுப்பிவைத்தவர் அவர். பின்னாளில் அவர் மறைவதற்கு சில வாரங்கள் மிச்சம் இருந்த பொழுதினில் அவரிடமிருந்து ஒரு தபால்அட்டை. என் திரை லட்சியம் வெற்றி பெற வேண்டும் என்று அதில் தவிப்போடு எழுதியிருந்தார். சென்று பார்க்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி அத்தனை சீக்கிரம் விடைபெறுவார் என நினைக்கவேயில்லை.

    கவிக்கோ என்னிடம் ஒரு வாரம் தொடர்ந்து வந்து பார்க்கச் சொன்னார். தினமும் காலை முதல் மாலை வரை விடாமல் உலக சினிமா பற்றிய பேச்சுத் தான். ஒரு கட்டத்தில் என் மீது நம்பிக்கை வந்து என்னை இயக்குநர் கே. பாக்யராஜிடம் அனுப்பிவைத்தார். பாக்யராஜ் சார் எனது சிறுகதை, குறுநாவல் நூல்கள் பார்த்துவிட்டு உடனே உதவி இயக்குநராய் சேர்த்துக்கொண்டார்.

    பாக்யராஜ் சாரிடம் வேலை பார்த்தது ஒரு வரம். அவர் மிகவும் கூர்மையானவர். நகைச்சுவை அவரிடம் சேவகம் செய்துகொண்டிருந்தது. பல இரவுகளில் அவர் பேசி கேட்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த தனிமையான தருணங்களில் அவர் பாசம் ததும்பும் ஒரு குழந்தை என்பது கண்டு சிலிர்த்திருக்கிறேன். உதவி இயக்குநர்கள் தான் அவருக்கு எல்லாம். எப்போதும் சாப்பிட்டாச்சா சாப்பிட்டாச்சா என மறக்காமல் விசாரிப்பது இவர் ஸ்பெஷல். இவரிடம் தமிழ், இந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் டெலிஃபிலிம்கள் என விதவிதமாய் வேலை செய்கிற வாய்ப்பு கிடைத்தது. அந்நாட்களில் திரைக்கதையின் சூட்சுமம் அறிந்துகொண்டது மனதில் தன்னம்பிக்கை விதைத்தது. அது ஒரு கிடைப்பதற்கரிய வரம்.

    இயக்குநர் ராஜன் சர்மாவிடம் எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ தொலைக்காட்சி தொடரும், சில டெலிஃபிலிம்களும் துணைஇயக்குநராக வேலை பார்த்தேன். காட்சிகள் எடுக்கும்போது டென்சன் ஆகவே மாட்டார். இவரிடம் தான் திரைமொழியின் இலக்கணம் கற்றுக்கொண்டேன்.

    பின்னர் என்னுடைய கதைகளின் ரசிகரும், நண்பருமான பூர்ணம் விசுவநாதன் சார் மூலம் இயக்குநர் வசந்த் அவர்களிடம் துணை இயக்குநராக சேர்ந்து பணியாற்றினேன். வசந்த் சார் ஒரு அழகியல் உபாசகர். ஆழமாய் பயணித்து பார்த்தால் இனிப்பான குழந்தை.

    பூர்ணம் சார் எனக்கு நட்பானது அழகான கதை. அவருக்கு புனித புரட்சி என்று ஒரு நாடகம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த வாரமே வந்தது கடிதம். ஒரே திட்டு. பல விசயங்களை ஒரே கதையில் கையாளக்கூடாது என்று கொந்தளித்திருந்தார். சிறிது காலம் கடந்தது. என்னுடைய முதல் தொகுப்பு நூல் ‘ஒரு சிநேகிதிக்காக’ அனுப்பி வைத்தேன். பக்கம்பக்கமாய் அவரிடமிருந்து பாராட்டுக் கடிதம். அன்று ஆரம்பித்த நட்பு இறுதிவரை உயிர்த்திருந்தது. பாக்யராஜ் சாரிடம் பணியாற்றியபோது அவரது இயக்கத்தில் பூர்ணம் விசுவநாதன் கதாநாயகனாக நடித்து ரூல்ஸ் ரங்காசாரி என்கிற டெலிஃபில்ம் எடுத்தோம். முதலில் யார்யாரோ கேட்டும் நடிக்க மறுத்துவிட்டார்.

    அந்த சமயத்தில் எனக்கு பிடித்த புத்தகம் என அவர் எனது ‘வானம்பாடி’ புத்தகம் பற்றி தினமணிகதிரில் கட்டுரை எழுதியிருந்தார். கதை விவாத குழுவை சேர்ந்த கனகசண்முகம் சார் அதை படித்து பாக்யராஜ் சாரிடம் சொல்ல பூர்ணம் சார் வீட்டிற்கு சம்மதம் வாங்க நான் அனுப்பி வைக்கப்பட்டேன். போனதும் மாமி கையால் அன்பான காஃபி தந்து கூடவே சம்மதமும் தந்து விட்டார்.. அதன் ஷுட்டிங் நடக்கிறபோது பாக்யராஜ் சாரிடம் குலசேகர் உதவி இயக்குநராக வேலை செய்ய வேண்டும் என்றுகூட இல்லை. அவரிடம் இருக்கும் கலைத் திறனுக்கு இப்போதே டைரக்ட் பண்ணலாம் என்று சொல்லி திகைக்க வைத்தவர்.

    வஸந்த் சார் மூலம் ரேவதி இயக்கிய டெலிஃபிலிம்களுக்கு திரைக்கதை,வசனம் எழுதி இணை இயக்குநராக பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விசேசம் ஈகோ பார்க்க மாட்டார். நல்ல விசயம் என்றால் வெளிப்படையாக பாராட்ட தயங்காதவர். சம்பவளத்தை விரட்டிவிரட்டி வந்து தரக்கூடிய கம்பெனி இவரது டெலிஃபோட்டோ. அற்புதமான மனுசி.

    தற்சமயம் இயக்குநர் ரா. பார்த்திபன் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றுகிறேன். துறுதுறுப்பும், மனிதநேயமும் இவரது விருப்பப்பாடம். இவரின் மின்னல் வேக நகைச்சுவை கமெண்ட்களுக்கு எல்லோரையும்போல நானும் ரசிகன். அதை மட்டும் முழுமையாக தொகுத்தால் நூறு புத்தகம் போட்டு கின்னசில் பெயர் தட்டிச் செல்லலாம். இவரின் மனிதநேய பண்பிற்கு எத்தனையோ விசயங்கள் குறிப்பிட முடியும். அதை ஒரு தனி புத்தகமாக எழுத எண்ணம் இருப்பதால் ஒன்று மட்டும் இங்கே சொல்ல ஆசை.

    சமீபத்தில் தனது மனிதநேய மன்றம் சார்பாக ரத்ததான முகாம் ஒன்று நடத்தினார். அதற்காக என் பங்கிற்கு இயக்குநர் சங்கம், காந்திய மக்கள் இயக்கம் போன்ற அமைப்புகளுக்கு தகவல் சொல்லி அழைப்பு விடுத்திருந்தேன். பல தரப்பிலிருந்தும் மனிதநேயமிக்கவர்கள் குழுமியிருந்தார்கள்.

    அந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் சார் ‘மனித நேயன் விருது’ யாருமே எதிர்பார்த்திராத ஒரு மனிதரை அழைத்து வந்து கொடுத்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். அந்த நபர் கேரளாவில் வசிக்கும் ஒரு எளிய மனிதர். மனைவி மற்றும் வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகள். சிறிய அளவிலான லாட்டரி சீட்டு கடை தான் வாழ்க்கை பாட்டிற்கான ஆதாரம். இந்த சூழ்நிலையில் அவரிடம் ஒருவர் 250 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் வாங்குகிறார். பணம் எடுத்து வரவில்லை. அதனால் பணத்தை தந்துவிட்டு டிக்கெட் வாங்கிக் கொள்கிறேன் என்று அதை தனியாக எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் அவர் சொன்னபடி வரவில்லை.

    அடுத்த வாரமே அந்த டிக்கெட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுகிறது. இந்த நபர் அந்த நபரிடம்போய் விவரம் சொல்லியிருக்கிறார். அவர் முதலில் தான் பணம் தராததால் அந்த டிக்கெட் தனக்கு எப்படி உரியது ஆகும் என்று கேட்டிருக்கிறார். இவர் அவர் கையில் வலுக்கட்டாயமாய் அந்த டிக்கெட்டை திணித்துவிட்டு ரூபாய் 250 மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

    அந்த செய்தி மனோரமா இதழில் வெளிவந்திருக்கிறது. அதை யார் மூலமோ கேள்விப்பட்டு உடனே அவரை உரிய முறையில் அழைத்து வந்து பிரபலங்கள் முன்னிலையில் பாராட்டி விழா எடுத்து விட்டார். அதோடு அவர் தொழிலை விருத்தி பண்ண லட்ச ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்தார். அவர் தான் பார்த்திபன். மேடையில் விவேக் பேசுகையில் பார்த்திபன் சாரை உதவி செய்யும் போதை நோயில் சிக்கி மீளமுடியாமல் தவிப்பவர் என்று குறிப்பிட்டது பொருத்தமான வாசகம் தான்.

    இவர்களால் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கல். சிராய்ப்புகளும், வலிகளும் போராட்ட பயணிப்பின் ஞானங்கள். அந்த கல் கூடிய சீக்கிரம் உயிர் பெரும். உயிருள்ள படைப்புகள் சிருஷ்டிக்கும். திரைப்படம் தோன்றாத காலத்தில் பிறக்க நேர்ந்திருந்தால் சபிக்கப் பட்டவனாகவே உணர்ந்திருப்பேன். திரைப்படம் தோன்றியிருக்கிற காலத்தில் வாழ்கிறேன் என்பதே ஒரு சாதனையாக படுகிறது. இந்த திரைப்படத்துறைக்குள் ஒரு வேளை வராமல் இருந்திருந்தால் என் ஜென்மம் ஒரு நாளும் சாபல்யம் அடைந்திருக்காது.

    பத்து வருடங்களுக்கு மேலாக திரைப்படத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தரமான இயக்குநராக வேண்டுமென்கிற வேட்கையோடு. எனக்கு பிடிக்கிறது என்பதால் நான் ரிஸ்க் எடுக்கலாம். ஆனாலும் என் விருப்பத்திற்காக அந்த ரிஸ்க்கை துணைவி மற்றும் மகன்கள் மீதும் திணிக்க நேர்ந்த போது என் கலைஆர்வத்திற்காக அதை தாங்கிக்கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும் கண்ணும்கருத்துமாய் கவனித்துவரும் எங்கள் வீட்டு தேவதை அனுராதாவிற்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி சொல்லத்தான் வேண்டும். விரைவில் எல்லோரும் நேசிக்கிற தரமான வெற்றிகளையும் நன்றியாக சமர்ப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

    அவருக்கு நிறைய தோழிள். எங்கிருந்தெல்லாமோ தேடிவந்து பேச வைக்கிற வசீகரம் அவருக்கு நிறையவே உண்டு. அவர் பற்றி ஒரு சம்பவம். இரண்டாவது மகன் பிறந்ததும் நடந்த ஃபேமிலி ப்ளானிங் ஆபரேசன் முடிந்திருந்த நேரம். இன்னும் மயக்கம் தெளியவில்லை. தலைமாட்டில் அமர்ந்து தண்ணீர் தொட்டு காய்ந்து போயிருந்த உதட்டை நனைத்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மயக்க நிலையிலே கிணற்றுக்குள் கேட்பதுபோல திரும்ப திரும்ப ஒரு வார்த்தையை சொல்லி புலம்ப ஆரம்பித்தார். ‘அவரு சாப்பிட்டாரா.. அவரு சாப்பிட்டாரா’ என்கிற வார்த்தை தான் அது. இது அவருக்கு மயக்கத்தில் இருந்ததால் தெரியாது. பரவசத்தின் சிலிர்ப்பில் உதித்த ஈரம் உலராமல் என் நினைவில் இருக்கிற முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.

    என் உயிரை இரண்டு உயிராக்கிய பிள்ளைகள் விக்ரம், வருண். எத்தனையோ பரவசமான கணங்களை இலவசமாக தந்திருக்கிற அவர்களுக்கு என்றென்றைக்கும் உண்டு கதகதப்பான அன்பு முத்தங்கள்.

    கோபத்தின் கோழைத்தனம் உரைத்தது. குழந்தைகளிடம் வன்முறையை பிரயோகிப்பது ஒரு நாளும் நேர்விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை அனுபவம் உணர்த்தியது. அன்பு மட்டுமே அனைத்தையும் சாதிக்கும் என்கிற சிந்தனை உதித்த கணம் எதிர்பார்ப்பின் இயலாமையால் உணர்ச்சிவயப்பட்டு எப்போதாயினும் என்றாலும்கூட அடிப்பது என்பது அகராதியில் இருந்து தானாக அகன்று போனது. ஞானத்தின் தோற்றுவாயாக இருந்த அந்த தூண்டுதலுக்கு நன்றி சொல்லிக் கொள்வதே அந்த அறியாமை முழுமையாய் அகன்று ஓடியதற்கான சாசனம்.

    இந்த பையன் வாடிப் போகிறதை பார்த்தால் எனக்குள்ளும் அதே மாதிரி ஆகிப்போகும். அவன் படும் அவஸ்தையை காண தைரியம் இல்லாமல் இந்தப் பக்கம் இருந்தபடி தொலைபேசியில் விசாரித்து வந்தேன். சேர்த்து சில நாட்கள் ஆகியிருந்தது. பார்க்க வேண்டும்போல இருந்தது. புறப்பட்டுப் போனேன்.

    திரைப்படத்துறைக்குள் வருவதற்கு காரணமாயிருந்த பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், அகிரோ குரசேவா, ஆல்ஃபிரட் ஹிச்காக், யாசுஜிரோ ஓசூ, இங்மர் பெர்க்மென், ஃபெலினி, விக்டோரியா டெசிகா போன்ற முன்னோடிகளில் முக்கியமானவர் சார்லி சாப்ளின். அவரை பற்றி முழுமையான ஒரு நூல் எழுதுவதற்கு உந்துதலாய் இருந்த சந்தியா நடராஜன் அவர்களின் கரிசனத்திற்கு ஈரம் தோய்ந்த அன்பின் ஒத்தடங்கள்.

    அன்புடன்,

    தி. குலசேகர்

    9941284380

    8610787390

    withlovekuttypalam@gmail.com

    2. மௌனம் மொழி

    திரைமொழி இலக்கணம் உருவாக்கத்தை துவக்கி வைத்த முன்னோடிகளில் முக்கியமானவர். இங்கே புராணம் மற்றும் நாடகங்களை திரைப்படங்களாக எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் திரைமொழியின் நுட்பங்களை தீராத வேட்கையோடு தம் வாழ்வியல் சார்ந்த சமூக படைப்புகளின் வாயிலாக கண்டறிந்தவர். அவர் நாடகத்தின் மொழியும், திரைமொழி உத்தியும் ஒன்றல்ல என்பதை அப்போதே உணர்ந்திருந்தார். தமது மௌன மொழி திரைப்படங்கள் மூலம் பன்முகப்பார்வை கொண்ட சமூக அக்கறையின் வெளிப்பாட்டினை திரைமொழியின் நுட்பத்தோடு படைத்திருக்கிறார். அவர் பெயர் சார்லி சாப்ளின்.

    தன் இளமைப் பருவத்தில் அவர் படாத சிரமம் இருக்க முடியாது. ஆனாலும் அந்த மகாகலைஞரை ஏழ்மை வீழ்த்திவிடவில்லை. எத்தனை பொருளாதார தட்டுப்பாடுகளை சந்திக்க நேர்ந்தபோதும் அவருக்குள் இருந்த நகைச்சுவை வளம் மட்டும் குறையவேயில்லை. அவர் வாழ்வியல் சூட்சுமம் அறிந்தவர். அதனாலேயே அவர் பின்னர் ஹாலிவுட் வந்து குறுகிய காலத்தில் மௌன திரைப்படங்களின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட போதிலும், தினம் மாலையில் நடைபயிற்சி செய்வதற்கு ஏழ்மை படர்ந்திருக்கும் சேரி பகுதியையே தேர்ந்தெடுத்தார்.

    அங்கே தான் வாழ்க்கையின் கூறுகள் கொட்டி கிடப்பதாக நம்பினார். அவர்கள் உணர்வுகளில் பாவனை இல்லை என்பார். வெளியே எங்கே எல்லாம் பணம் இருக்கிறதோ அங்கெல்லாம் பகட்டும், பொய்மையும் வாழ்க்கை மீது உடைக்க முடியாத திரையாக படர்ந்துவிடுகிறது. தினமும் சிறிதுநேரமாவது வாழ்க்கையை தரிசிப்பதற்காகவே இந்த பகுதிக்கு நடைபயிற்சி செய்ய வருகிறேன் என்பார்.

    அவர் ஏழ்மையின் பாதாளம் வரை பயணித்தும் இருக்கிறார். அதே மாதிரி பணத்தின் உச்சம் தொட்டு அதன் விளைவுகளையும் உணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவர் தடுமாறவில்லை.

    எவ்வளவு தான் சம்பாதித்தாலும் எளிமையான வாழ்வையே விரும்பியிருக்கிறார். அவருடைய திரைக்காவியங்கள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கக்கூடியவையாகவும் இருப்பதற்கு அவரின் இந்த மனிதநேய பண்பே காரணமாக இருந்திருக்கிறது.

    புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். சாப்ளின் எத்தனை தான் லௌகீக வாழ்வில் பணம் சம்பாதித்திருந்தாலும், மனதளவில் மேற்படி தத்துவத்தை துல்லியமாக உணர்ந்திருந்தார்.

    அதனாலேயே அவரின் பெரும்பாலான மௌன மொழி படங்களில் அவர் அடுத்த வேளை சோறு பற்றிகூட கவலைப்படாமல் மனம்போன போக்கில் ஆனால் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகிற ட்ராம்ப் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அவரின் அனுபவத்தில் அவர் உணர்ந்திருந்த ஞானம் என்றுகூட இதை சொல்லலாம்.

    எதுவுமே இல்லாமல் இருக்கிறவனுக்குள் எல்லாம் கிடைத்து விடுகிறது. லௌகீக வாழ்வில் எல்லாம் கிடைத்துவிட்டதாய் நம்புகிறவனுக்கு எதுவுமே கிடைக்காமல் போய் விட்டிருப்பது பின்னர் தான் புரிகிறது. மகிழ்ச்சியின் சூட்சுமம் அப்படியொரு தத்துவ சரடிற்குள் ஒளிந்திருப்பதை அவரால் இனம் காண முடிந்திருக்கிறது. அதனாலேயே அவர் உருவாக்கிய ட்ராம்ப் கதாபாத்திரம் திரைப்படம் வாழும் வரை வாழும் வரத்தை தனதாக்கிக் கொண்டு இருக்கிறது.

    அவர் புகழின் உச்சம் எட்டிய சமயத்தில் அவரை போல நடித்துக் காட்டுபவர்களுக்கு பெரியபெரிய பரிசுகள் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். அப்படி அவரது ட்ராம்ப் கதாபாத்திரத்தைப் போல நடித்துக்காட்டி அசத்தி பின்னாளில் பிரமாண்டமாக வளர்ந்தவர்களில் ஒருவர் தான் கார்ட்டூன் உலகின் ஜாம்பவான் வால்ட் டிஸ்னி. அந்த சார்லி சாப்ளின் போல நடிக்கிற போட்டியில் ஒரு முறை சார்லி சாப்ளின் விளையாட்டாக கலந்து கொண்ட போது அவரால் நான்காவது பரிசு தான் பெற முடிந்திருக்கிறது. சாப்ளின் உருவாக்கிய ட்ராம்ப் கதாபாத்திரம் லேசுபட்டதா என்ன.

    சாப்ளின் தன் இளமை பருவத்தில் சிறிய குடிலில் தான் அண்ணன் சிட்னி சாப்ளின் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஹன்னா சாப்ளின் உடன் வசித்து வந்திருக்கிறார். அந்த காலம் போதித்த வாழ்க்கை அனுபவம் தான் அவரின் பிரபலமான ட்ராம்ப் கதாபாத்திரம் உருவாக தேவையிருந்த ஞானோதயம் விதைத்திருக்க வேண்டும்.

    சாப்ளின் பழசை மறக்காதவர். மௌனத்திரை மொழி உயிர் என்றாலும் தாய்மொழி, தாய்மண் நேசம் கொண்டவர். புகழின் உச்சம் எட்டியதும் முதல் வேளையாய் தாய்நாடான பிரிட்டன் செல்கிறார். ஆதரவற்ற தன்னை ஆதரித்த அனாதை குழந்தைகளுக்கான லேம்பத் வொர்க்ஹவுஸ் என்று அழைக்கப்படுகிற கருணை இல்லம் போய் பார்க்கிறார். தான் நான்காவது பாரம் வரை படித்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹான்வெல் பள்ளிக்கு சென்று பார்க்கிறார். தான் விளையாடிய இடங்களுக்கு சென்று பார்க்கிறார். குறிப்பாக தன் தாய் மற்றும் அண்ணனோடு வசித்திருந்த அந்த குடில் இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசை. இப்போது அவர் உலகறிந்த பிரபலம். அதனால் தான் விரும்பிய அத்தனை இடங்களிலும் உறங்காத அந்த இரவில் தன்னந்தனியே ஆசைதீர சுற்றிச்சுற்றி வலம் வருகிறார்.

    அப்படி ஒவ்வொரு இடமாய் தன் மலரும் நினைவுகளின் களங்களை பார்த்து வருகிற போது அதில் பல இடங்கள் இடித்து மாற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் மனதிற்குள் அவை குறித்த நினைவுகள் அழியாத காட்சிப்படிமங்களாய் கொஞ்சமும் களையிழக்காமல் தோன்றி நொடியில் அவரை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு இடமாய் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர், அவர் தான் வாழ்ந்திருந்த அந்த குடிலின் கதவு ஓசையற்ற அந்த இரவில் தட்டுகிறார். உள்ளே இருந்து ஒரு ஏழை கைம்பெண் வந்து திறக்கிறார். தான் யார் என்பதை அவர் சொன்னதும் அந்த பெண்ணிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

    சாப்ளின் அந்த குடிலை நிதானமாக அணுஅணுவாக சுற்றிப் பார்க்கிறார். அவர் நினைவலைகளில் அவளின் பால்யபருவம் நிழற்படங்களாய் விரியத் துவங்குகிறது. அவர் அந்த பெண்மணியிடம் முன்பு அதே குடிலில் வசித்திருந்தபோது நடந்த சம்பவங்களை விவரித்ததோடு அப்போது நடந்த மாதிரியே நடித்தும் காட்டுகிறார். அந்த மாது நம்பமாட்டாமல் கிடைப்பதற்கரிய அந்த பாக்கியத்தை அனுபவித்தபடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    செல்லும்போது அந்த பெண் அவருக்கு செய்ய தன்னிடம் எதுவுமே இல்லையே என்றபோது அவர் புன்னகையோடு அந்த மாது கைபிடித்து மௌனமாய் குலுக்கிவிட்டு செல்கிறார். அவள் கைகளில் கத்தைகத்தையாக பணம். விழிகளில் தாரைதாரையாய் கண்ணீர்.

    தன் நேசத்திற்குரிய பதின்பருவ தோழி ஹெட்டி தன்னோடு பழகிய நாட்களில் எங்கெங்கெல்லாம் சந்திப்பபார்களோ அந்த சரித்திர பிரசித்தி வாய்ந்த இடங்களை எல்லாம் போய் பார்க்கிறார். அவரின் இளமைக்கால டைரிக்குறிப்பில் இன்னும் அழியாமல் உயிரோடு இருக்கிற பக்கங்கள் அவை. அவரை பொறுத்தமட்டில் அவை இறந்த காலம் என்பதை நம்பவே முடியவில்லை. அவரை என்றென்றைக்கும் அவருக்கு நிகழ்காலம் தான். தான் காதலித்தும் வறுமையின் காரணமாக நிறைவேறாமல் போய்விட்ட அந்த அமர காதலுக்குரிய ஹெட்டி இப்போது எங்கே இருக்கிறாள் என தேடிப் போகிறார். அங்கே அவள் இறந்துவிட்ட செய்தி இடியாய் இறங்குகிறது. அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளுக்காக என்னஎன்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்கிற ஆசையோடு சென்றவருக்கு எல்லாம் நிராசை ஆகிறது. இருந்தும் இல்லாமல் ஆக்கிவிட்டுப்போன இயலாமை கண்களில் அடர்ந்து திரள்கிறது. அவள் அடையாளமாய் இப்போது அவரிடம் அவளின் நினைவுகளும், கோடிகோடியாய் மனதில் படிந்துகிடக்கும் வண்ணப்படிமங்கள் மட்டும் தான் என்பது புரிகிறதில் மனது கலங்கிவிடுகிறது. அந்த ஆறாத ஏக்கம் அவரை சிட்டி லைட்ஸ் போன்ற காவியங்கள் உருவாக்க உள்ளிருந்து உந்தியிருந்திருப்பதை உணர முடிகிறது.

    சாப்ளின் வாழ்வியல் நுட்பத்தை, அதன் சோகத்தை நகைச்சுவையாக சொல்வதில் ஜித்தர். அது யாரும் செய்யாத ஒரு உத்தி. நகைச்சுவை என்றால் நகைச்சவை. சீரியஸ் என்றால் சீரியஸ். அப்படித் தான் எல்லோரும் இருந்தார்கள். சாப்ளின் அந்த விதிகளை உடைத்தெறிந்தார்.

    சீரியஸான வாழ்வியல் பிரச்னைகளான பசி, சுதந்திரம், ஆசை, வேட்கை, காதல், தோல்வி, சோகம், விரக்தி, போராட்டம், அவலம், அடக்குமுறை, ஞானம், அன்பு, தேடல் என எத்தனையோ விசயங்கள் அவர் நகைச்சுவைய«£டு கையாண்டிருக்கிறார். அது ஆச்சர்யகரமாய் அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. சோகத்தை நகைச்சுவையோடு தரிசிக்கிற பார்வை அவருக்கு இருந்ததே அவை சாத்தியப்பட்டதற்கான காரணம்.

    சாப்ளின் மௌனமொழி திரைப்படங்கள் திரைமொழியை வளப்படுத்த பெரிதும் உதவும் என அழுத்தமாக நம்பினார். அவர் பேசும் படங்கள் தோன்றிவிட்ட காலக் கட்டத்திலும் மௌனமொழி படங்களை எடுத்துக்கொண்டிருந்தவர்.

    திரைமொழி ஒரு விசயத்தை விளக்குவதற்கு முற்படும்போது இறந்துவிடும். உணர்த்துவதற்கு முற்படும்போது தான் ஜீவிக்கும் என்பது திரைமொழியின் ஆதார விதி. அதற்கு ஒத்திசைவாக இருந்த மௌனமொழியை அதனாலேயே கெட்டியாக பிடித்துக்கொண்டவர் அவர். மௌன மொழியின் மகத்துவம் திரைமொழி வளர்வதற்கான ஆதார சக்தியாக நினைத்தார். மௌனமொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிக்கும் நடிகர்கள் திறமையாக உணர்வுகளை முகபாவங்களில் வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மௌன மொழியில் முகபாவங்களால் உணர்த்தும் உணர்ச்சிகள் மொழிகள் கடந்தவை. அவரவர் நாட்டு மொழியில் அவர்கள் உணர்த்தும் விசயத்தை பேசியதாக மக்கள் நினைத்தும் கொள்ளலாம். அது மௌனமொழியின் சிறப்பு. மொழி கடந்த அனைவருக்குமான பொது மொழி அது.

    அவரின் மௌன மொழி திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் சினிமா உட்காரக் கூட தெரியாமல் தவழ்ந்து கொண்டிருந்த கைக்குழந்தை. அதற்கு பெரிதாய் எதுவும் தெரியாது. இனி தான் ஒவ்வொன்றாய் கற்றுக்கொள்ள வேண்டும். அந்நாட்களில் மேடை நாடகத்தின் முன் கேமராவை வைத்து படம் பிடித்துக்கொண்டு வந்தால்கூட அதுவும் சினிமா என்று நம்பப்பட்டிருந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் சாப்ளின் நடித்து இயக்கிய மௌனப் படங்கள் என்பதை, இவரது படங்கள் பார்க்கிறபோது மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் இந்த திரைமொழிக்கு தன்னுடைய மௌன திரைப்படங்கள் மூலம் எத்தனை பங்காற்றியிருக்கிறார் என்பது புரியும். திரைமொழி, உத்தி, நுட்பம், இலக்கணம் என்று அவர் ஒருவித பரவசத்தோடு பாய்ந்துபாய்ந்து மிதந்துமிதந்து பறந்துபறந்து அவரின் படைப்புகளில் புகுத்தி இருக்கிறார். கோர்வையாக கதை சொல்லக்கூட அறிந்திராத அன்றைய மௌன திரைப்படங்களின் ஆரம்ப கட்டங்களில் இவர் எத்தனையோ பரிசோதனைகள் செய்திருக்கிறார் என்பது இவரின் அத்தனை முக்கியமான படங்கள் பற்றியும் விரிவாக இந்த நூலில் பதிவு செய்திருப்பதை படிக்கையில் புரியும்.

    இவர் ஒரு சுயம்பு. கையில் எதுவும் இருக்காது. போகிற போக்கில் பிடித்துக்கொள்வது இவரின் ஸ்டைல். இவரின் கதைகள் மனிதம் என்கிற மந்திரத்தை எப்போதும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்திருக்கிறது. சினிமா ஒரு எமோசனல் மீடியா என்பதை அப்போதே புரிந்து வைத்திருக்கிறார். பார்வையாளர்களை உணர்ச்சிப் பரவசிப்பிற்குள் ஆழ்த்தியாக வேண்டுமென்பதே சினிமாவின் முதல் இலக்கணம் என்பதையும் துல்லியமாய் புரிந்து வைத்திருந்திருக்கிறார் என்பதற்கு மௌனசாட்சியாய் அவரின் ஒவ்வொரு படமும் இருக்கின்றன.

    அந்நாளிலேயே எவ்வளவோ வெற்றிகரமான பரிசோதனை முயற்சிகள் திரைமொழியில் செய்து பார்த்திருக்கிறார். தி ஒன் ஏ.எம் திரைக்கதையில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே பிரதானமாக படம் முழுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1