Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurumpadangal Oru Kannottam
Kurumpadangal Oru Kannottam
Kurumpadangal Oru Kannottam
Ebook195 pages1 hour

Kurumpadangal Oru Kannottam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறும்படங்கள் திரைப்படங்கள் போல் அல்லாமல் அதிகபட்சம் அரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். ஒரு நிமிடத்தில் ஓடக்கூடிய படமும் உண்டு. ஒரு சில படங்கள் அரை மணி நேரத்தைத் தாண்டியும் ஓடும். திரைப்படங்கள் ஒப்பனையில் ஒளிந்திருக்கும். குறும்படங்கள் எளிமையானவை. சமூகத்திற்கு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்லி செல்லும். தகவலைத் தந்து கடக்கும். இரண்டாயிரங்களைக் குறும்படங்களின் காலம் எனலாம். ஏராளமான குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரையிடப்பட்டன. இளைஞர்களும் ஆர்வம் செலுத்தினர். குறும்பட பயிற்சி பட்டறைகளும் நடத்தப் பட்டன.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580159410377
Kurumpadangal Oru Kannottam

Read more from Pon. Kumar

Related to Kurumpadangal Oru Kannottam

Related ebooks

Reviews for Kurumpadangal Oru Kannottam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurumpadangal Oru Kannottam - Pon. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குறும்படங்கள் ஒரு கண்ணோட்டம்

    (குறும்படங்கள் குறித்த விமர்சனங்கள்)

    Kurumpadangal Oru Kannottam

    Author:

    பொன். குமார்

    Pon. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pon-kumar

    பொருளடக்கம்

    ஏழு மலை ஜமா - எஸ். கருணா

    நாக் – அவுட் - பி. லெனின்

    கால்களின் ஆல்பம் - பி. லெனின்

    திருவிழா - சுப்ரபாரதி மணியன்

    சோத்துப்பொட்டலம் - பேரெழில் குமரன்

    மல்லி, டெர்ரரிஸ்ட், தற்கொலை தீர்வல்ல - சி. கே. ராஜா சந்திர சேகர்

    லீவு - ஆர். ரவிக்குமார்

    எட்டா(ம்) வகுப்பு - ஆர். ரவிக்குமார்

    சுழல் - ஆர். ரவிக்குமார்

    சுமங்கலி - இரா. ரவிக்குமார்

    பூங்கா - தாண்டவக்கோன்

    கை - தாண்டவக்கோன்

    இப்படிக்கு பேராண்டி - தாணடவக்கோன்

    POLYBAG(D)S - தாண்டவக்கோன்

    ஒரு நாள் - பாரதி வாசன்

    என்று மடியும் - சி ஜெ.முத்துக்குமார்

    எரிபொருள் - சி. ஜெ. முத்துக்குமார்

    உறவின் கதை - நா. கவி குமார்

    சிலம்பம் - நா. கவி. குமார்

    டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் - தே. பத்மநாபன்

    லெட்சுமி - தே. பத்மநாபன்

    எதிரே உன் ஏணி - கவிமுகில்

    ஐக்கூ தரிசனம் - மணிமேகலை நாமலிங்கம்

    திவலை - ஈழவாணி

    ...த்தூ - மணிமேகலை நாகலிங்கம்

    மண்ணில் விழுந்த மழைத்துளிகள் - சுந்தர முருகன்

    ஐ லவ் யு அப்பா - ஏம்பல் ராஜா

    குடக்கூத்து - தாரகை

    சொல் இல்லை - கிருஷ்ண கோபால்

    ஆழத்தாக்கம் - பைசல்

    அ - தயா

    புதிய உறவுகள் - திருமணி

    மண் - எஸ். மஞ்சுநாத்

    நிழல்களின் நீட்சியாய் - ஷக்தி பாரதி

    புதுயுகம் - அனித்ரா அறக்கட்டளை

    Raja Rani - ராதாகிருஷ்ணா

    விழி - செல்வன்

    கண்ணாடி மீன் - டி. எல். சிவகுமார்

    ஏன்... - சி. குணசேகரன்

    பயணி - ஜி.சசிதரன்

    கல்வி - பா. விக்னேஷ்

    C / O - ஹரிகிருஷ்ணன்

    தாகம் - யோகநாதன்

    என்னைப் பார் யோகம் வரும் - நா. சீனிவாசன்

    துளி - மு. சந்திரசேகர்

    எங்கே செல்லும் இந்த பாதை - ம. கரிகாலன்

    பிஞ்சு மனசு - என். சரவணன்

    வண்னக்கனவு - கோ. அரங்கநாதன்

    என்னைப் போல் ஒருவன் - சுரேஷ் ஆறுமுகம்

    பசியின் குரல் - ஆற்றல்

    இரு துருவம் - அபிஷேக்

    திட்டம் இரண்டு – திரைப்படம் - விக்னேஷ் கார்த்தி

    இன்னொரு தாஜ்மகால்- குறும்படங்களுக்கான கதைகள் - இரா. பன்னீர் செல்வம்

    மாற்றுக்களம் – விமர்சனங்கள் - பொன். குமார்

    திரைப்ப (பா)டம் கற்போம் கட்டுரைகள் - த. சு. சண்முகவேல்

    சமர்ப்பணம்

    முதன் முதலில்

    மகாத்மா காந்தி வரலாற்றை

    ஆவணப்படமாக எடுத்த

    ஏ. கே. செட்டியார் அவர்களுக்கு...

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

    சினிமா என்பது ஒரு காட்சிக் கலை. தொடக்கத்தில் கூத்து. தொடர்ந்து நாடகம். பின்னர். சினிமாவிலும் தொடக்கக் காலங்களில் சினிமா புராணக் கதைகளைக் காட்டப்பட்டது. பக்தியைக் காட்டிய சினிமா பகுத்தறிவையும் காட்டியது. சமூகத்தை சீர்திருத்த வேண்டிய சினிமா மெல்ல மெல்ல சீரழிவை ஏற்படுத்தியது. கலாச்சாரத்தைக் கெடுத்தது. பண்பாட்டை பாழடித்தது. மக்களின் சிந்தனை போக்கை மாற்றியது. மனிட மூளையை மழுங்கடிக்கச் செய்தது. இச்சூழலில் மாற்று சினிமா என குறும்படங்களும் ஆவணப்படங்களும் உருவாக்கப்பட்டன.

    குறும்படங்கள் திரைப்படங்கள் போல் அல்லாமல் அதிகபட்சம் அரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும். ஒரு நிமிடத்தில் ஓடக்கூடிய படமும் உண்டு. ஒரு சில படங்கள் அரை மணி நேரத்தைத் தாண்டியும் ஓடும். திரைப்படங்கள் ஒப்பனையில் ஒளிந்திருக்கும். குறும்படங்கள் எளிமையானவை. சமூகத்திற்கு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்லி செல்லும். தகவலைத் தந்து கடக்கும்.

    இரண்டாயிரங்களைக் குறும்படங்களின் காலம் எனலாம். ஏராளமான குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரையிடப்பட்டன. இளைஞர்களும் ஆர்வம் செலுத்தினர். குறும்பட பயிற்சி பட்டறைகளும் நடத்தப் பட்டன.

    குறும்படங்கள் திரைப்படங்களுக்கு மாற்றாக வந்தது எனினும் குறும்படங்களை இயக்குபவர்கள் திரைத்துறைக்குள் பிரவேசிக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். அவ்வாறு சென்றவர்களில் ஒருவர் இயக்குநர் ஆர். ரவிக்குமார். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். திருப்பூரில் இவருடன் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கவிஞர் கோவை சதாசிவம், தாண்டவக்கோன், பாரதி வாசன் என ஒரு படையே குறும்படத்துறையில் இயங்கி வந்தது. திருப்பூரில் மட்டுமின்றி தமிழ்நாடெங்கும் ஏராளமானோர் குறும்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறும்படம் மூலம் மக்களுக்கு பல செய்திகளை, தகவல்களை, கருத்துக்களை, நியாய அநியாயங்களைக் காட்டி வந்தனர்.

    ஆவணப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுதி வந்த நான் குறும்படங்களுக்கும் விமர்சனம் எழுதினேன். அவ்விமர்சனங்களைத் தொகுத்து ‘ குறும்படங்கள் ஒரு கண்ணோட்டம் ‘ என்னும் தொகுப்பாக வெளிவருகிறது. குறும்படங்களுடன் ஒரு திரைப்பட விமர்சனமும் மற்றும் படங்கள் தொடர்பான மூன்று புத்தக விமர்சனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    குறும்பட விமர்சனங்களை வழக்கம் போல் முகநூலில் பதிவிட்டேன். எத்தனை பேர் வாசித்தார்களோ எத்தனை பேர் கடந்து சென்றார்களோ தெரியவில்லை. பொதுவாகவே முகநூலில் மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் வாசிப்பது அரிது. எனினும் ஒரு சிலர் கருத்திட்டுள்ளனர். அக்கருத்துகள் இங்கு பகிரப்படுகின்றன.

    கவிஞர் அமுதபாரதி லீவு படம் விமர்சனத்திற்கு வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார். தோழர் திரையன் அவர்களும் அருமை. வாழ்த்துகள் என வாழ்த்தியுள்ளார்.

    இயக்குநர் தாண்டவக்கோன் அவரின் கை விமர்சனம் குறித்து இது போல் உற்சாகம் தந்து நீங்கள் உருவாக்கிய கலைஞர்கள் என்னைப் போல் எத்தனைப் பேர்களோ... பிறந்த நாளில் பழைய பதிவு கடந்த வாழ்வை கை மேல் கொண்டு வந்தது. அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    ‘இப்படிக்கு பேராண்டி’ என்னும் குறும்படம் விமர்சனம் குறித்து அதன் இயக்குநர் தாண்டவக்கோன் தங்களின் ஆய்வு ஆச்சரியம் தருகிறது. படைப்பாளிக்கே படைப்புகள் குறித்து இல்லாத புது அறிமுகங்கள் தருகின்றன. நெஞ்சார்ந்த நன்றிகள் என தன் எண்ணத்தைத் தெரிவித்துள்ளார்.

    கவிஞர் மித்ரா கவி முத்து Poly Bag(d)s விமர்சனத்தை அழகான விமர்சனம் என குறிப்பிட்டுள்ளார்.

    ‘குடக்கூத்து’ என்னும் விமர்சனம் வாசித்த கவிஞர் சக்தி அருளானந்தம் ‘சிறப்பு’ என ஒற்றைச் சொல்லில் முடித்துக்கொண்டாலும் பாவலர் வாணிதாசனின் பேரன் கவிஞர் முருகன் சிறப்பான பார்வை. அழிவின் விளிம்பில் இருக்கும் கலையை மீட்டெடுப்போம் என குரல் கொடுத்துள்ளார்.

    சிறப்பு தோழர் என கவிஞர் கண்மணி ராசாவும் அருமையான பதிவு என கவிஞர் பெருமாளும் என்னைப்பார் யோகம் வரும் குறும்படவிமர்சனம் குறித்து தெரிவித்துள்ளனர்.

    கவிஞர் பு. அ. இரவீந்திரன் ஒரு நாள் விமர்சனம் குறித்து சிறப்பு. தோழருக்கு நல்வாழ்த்துகள் என்று வாழ்த்தியுள்ளார்.

    குறும்படங்கள் அனுப்பி விமர்சனங்கள் எழுத வைத்த இயக்குநர்களுக்கும் விமர்சனங்களை வெளியிட்ட இதழ்களுக்கும் குறும்படங்கள் ஒரு கண்ணோட்டம் என்னும் இத்தொகுப்பை வெளியிடும் Pustaka நிறுவனத்திற்கும் மற்றும் உதவிய நண்பர்களுக்கும் நன்றிகள்.

    எனவே குறும்படங்கள் ஒரு கண்ணோட்டம் என்னும் இத்தொகுப்பிலுள்ள குறும்பட விமர்சனங்களை வாசித்து ஓரு விமர்சனம் எழுத வேண்டுகிறேன்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!!

    எழுதுவோம்!!!

    என்றும் அன்புடன்

    பொன். குமார்

    21 /15 புதிய திருச்சிக் கிளை

    வடக்குத் தெரு

    லைன்மேடு

    சேலம் 636006

    9003344742

    ஏழு மலை ஜமா - எஸ். கருணா

    கலை மண்ணோடும் மக்களோடும் பின்னிப்பினைந்திருப்பது. பெரும்பாலான கலைகள் அழியும் நிலையிலேயே உள்ளன. அவைகளில் ஒன்று கூத்து. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் கூத்துக் கலை நிகழ்த்தப்படுவதுண்டு.

    கூத்துக் கலை மக்களை மகிழ்விக்கும். கலைஞர்களை வாழ்விக்கும். எல்லாக் கலைகளையும் விட கூத்துக் கலைக்குத் தனிச் சிறப்புண்டு. இக்கலையின் வாயிலாக இதிகாச, புராணங்கள் அறியச் செய்யப்படும். பாமரர்களுக்கும் புரியும் வகையில் கதைச் சொல்லப்படும்.

    திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் தயாரித்து மக்கள் திரைப்படம் இயக்கம் வழங்கி வெளி வந்திருக்கும் குறும்படம் ‘ ஏழுமலை ஜமா’. கூத்து மற்றும் கூத்து கலைஞனைப் பற்றியது.

    வெளியூரில் சென்று கூத்து நடத்தி வருகிறார் ஏழுமலை வாத்தியார். ஆனால் அவர் ஊரில் நடக்கும் திருவிழாவில் கூத்தை நடத்தாமல் திரைப்படங்களை திரையிடவும் பாட்டுக்கு ஆடச் செய்யவும் முடிவெடுக்கின்றனர். அறிந்து மனம் உடைந்த ஏழுமலை வாத்தியார் பெங்களூருக்குச் சென்று காய்கறி மண்டியில் கூலி வேலைச் செய்கிறார்.

    ஒரு கலைஞனை மதிக்கத் தெரியாமல், மதிக்காமல் அவமானப்படுத்துவதால் அது தன் கலைக்கு அவமானம் எனக் கருதி மீண்டும் ஊருக்கே திரும்பி தன் குழுவினரை அழைத்து கூத்தைத் தொடர விரும்புகிறார். குழுவினர் கூத்தை நம்பி வாழ முடியாது என மறுத்து விலகி விடுகின்றனர் . கவலையில் குடிக்கத் தொடங்கி விடுகிறார். அச்சமயம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் ஓர் ஒத்திகையில் தவறான அடவுகளைக் கண்டு கோபமுற்று ஆடி மயங்கி விழுந்து விடுகிறார். கதை முடிகிறது.

    கதையை எழுதியவர் எழுத்தாளர் பவா. செல்லத் துரை. ஒரு கூத்துக் கலைஞனின் மனநிலையைத் துல்லியமாகக் காட்டியுள்ளார். கதையைத் தெளிவாகத் திரைக்கதையாக்கி இருப்பவர் எஸ். கருணா.

    முற்பகுதியில் கலைஞர்கள் கூத்துக்குத் தயார் ஆவதையும் அவர்கள் வேடமிடுவதையும் கூத்து நடத்துவதையும் காட்டி கூத்துக் கலையின் மதிப்பை உயரச் செய்துள்ளார். கலைஞர்கள் நிஜமானவர்களாக இருப்பதால் காட்சியோடு பொருந்தித் திறமையை வெளிப்படுத்திக் குறும்படத்தின் இலக்குக்கு உதவியுள்ளனர். கண்முன் நடப்பதாகவே உள்ளன காட்சிகள்.

    கூத்தை நம்பினால்

    Enjoying the preview?
    Page 1 of 1