Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthu Kavithaigal Puthu Karuthukkal
Puthu Kavithaigal Puthu Karuthukkal
Puthu Kavithaigal Puthu Karuthukkal
Ebook134 pages45 minutes

Puthu Kavithaigal Puthu Karuthukkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்வேறு காலத்தில் பல்வேறு சூழ்நிலையில் எழுதப்பட்டவை. இவை இதழ்களிலும் வெளியாகியுள்ளன. முகநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்விமர்சனங்கள் ஏற்கனவே சிலர் வாசித்திருக்கவும் கூடும். இதன் மீதான விமர்சனங்கள் சிலர் எழுதியிருக்கவும் கூடும். விமர்சனங்கள் மனத்தளவிலேயே இருந்திருக்கவும் கூடும். என் விமர்சனங்களை வாசித்த, அறிந்த சிற்றிதழ் சேகரிப்பாளர் நவீன் குமார் அவர்களும் எழுத்தாளர் பாரதி வசந்தன் அவர்களும் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து கொண்டு வாருங்கள் என உரையாடும் போதெல்லாம் கூறிக்கொண்டே உள்ளனர். ஒரே நேரத்தில் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து ஒரே தொகுப்பாகக் கொண்டு வர சாத்தியமில்லை.

அவ்வவ்போது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொகுத்து தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறேன். அவ்வகையில் தொகுக்கப்பட்டதுதான் இத்தொகுப்பான ‘புதுக்கவிதைகள் புதுக்கருத்துக்கள் விமர்சனங்கள்’.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580159410679
Puthu Kavithaigal Puthu Karuthukkal

Read more from Pon. Kumar

Related to Puthu Kavithaigal Puthu Karuthukkal

Related ebooks

Reviews for Puthu Kavithaigal Puthu Karuthukkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthu Kavithaigal Puthu Karuthukkal - Pon. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புதுக்கவிதைகள் புதுக்கருத்துக்கள்

    Puthu Kavithaigal Puthu Karuthukkal

    Author:

    பொன். குமார்

    Pon. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pon-kumar

    பொருளடக்கம்

    1. தம்புராட்டியின் பரியங்கம் - நட. சிவகுமார்

    2. மன யாத்ரீகன் - பா. சேது மாதவன்

    3. தேடித்திரிகையில் - தமிழ் இயலன்

    4. மழையில் நனையும் மனசு - பொன் சந்திரன்

    5. குட்டி ஆலிஸூம் கோடி நட்சத்திரங்களும் - டி. எல். சிவகுமார்

    6. உள்ளிருந்து - துரை நந்தகுமார்

    7. செவ்வந்திகளை அன்பளிப்பவன் - ஸ்ரீதர் பாரதி

    8. போதியானவன் விளம்புவதில்லை புத்தனென்று - பொ.செந்திலரசு

    9. மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் - செந்தில் பாலா

    10. கருவத்தடி - கானுார் சு. பழனி சாமி

    11. மகா சிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும் - யாழி

    12. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - அ. ஈஸ்டர் ராஜ்

    13. இலையுதிர் காலத்தின் முதல் இலை - ஜா. பிராங்க்ளின் குமார்

    14. பிரியாத மழை நினைவு - கம்பீரன்

    15. பீச்சாங்கை - ப. சதீஸ் பிரபு

    அன்புள்ளங்களுக்கு வணக்கம்.

    என் இலக்கியப்பயணத்தில் தொடக்கக் காலத்தில் கவிதைகளே எழுதி வந்தேன். பின்பு இதழ்களுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். 1991இல் தொடங்கிய இப்பயணத்தில் 1999இலேயே விமர்சனம் எழுத முயற்சித்தேன். விமர்சனம் ஒன்றிரண்டு எனத் தொடங்கி இன்று ஏறத்தாழ ஆயிரம் விமர்சனங்கள் எழுதி இருப்பேன். ஹைக்கூத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கதைத் தொகுப்புகள், நாவல் தொகுப்புகள், நாடகத் தொகுப்புகள், நேர்காணல்கள் தொகுப்புகள், சிறார் தொகுப்புகள் என எழுததாவையே அல்ல.

    எனினும் விமர்சனத் தொகுப்புகள் குறைவாகவே வந்துள்ளன. அவை

    01. ஒரு படைப்பாளியின் பார்வையில் - கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் - 2003

    02. ஹைக்கூ அனுபவங்கள் - ஹைக்கூத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் -2004

    03. நானும் நாமும் - கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் -2004

    04. பெண் கவியுலகம் - பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் - 2005

    05. தமிழ்க்கதைகளின் போக்கு - சிறுகதைத் தொகுப்புகள், நாவல் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள் - 2006

    06. கவிப்பயணம் - கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்- 2006

    07. இலக்கியப் பிரவேசம் - கவிதைத்துறையில் காலடி வைத்த கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள- 2010

    08. நான் வாசித்த நாவல்கள்- நாவல் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்- 2020

    09. தமிழில் சிறுகதைகள் ஒரு பார்வை - சிறுகதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்- 2022

    10. கவிதைகள் கூறும் கதைகள் - கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்-: 2023

    11. ஹைக்கூ தரிசனங்கள் - ஹைக்கூ தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்- 2023

    12. கவிதைகள் குறித்த கருத்துரையாடல் - கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்-:2023

    13. மயிர்க் கவிதைகள் சில குறிப்புகள் - மயிர்க் குறித்த கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்கள்-:2023

    இவை தவிர ஆவணப்படங்கள் குறித்த விமர்சனங்களும் குறும்படங்கள் குறித்த விமர்சனங்களும் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் அவர்களுக்கு எழுதப் பட்ட விமர்சனங்களும் அவர் எனக்கு எழுதிய விமர்சனங்களும் ஒரு தனித் தொகுப்பாக வெளியாகியுள்ளது. தற்போது ‘ புதுக்கவிதைகள் புதுக்கருத்துகள் விமர்சனங்கள் ‘ என்னும் ஒரு விமர்சனத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் கீழ்க்கண்ட விமர்சனங்கள் உள்ளடங்கியுள்ளன.

    01. தம்புராட்டியின் பரியங்கம் - நட. சிவகுமார்

    02. மனயாத்ரீகன் - பா. சேதுமாதவன்

    03. தேடித்திரிகையில் - தமிழ் இயலன்

    04. மழையில் நனையும் மனசு - பொன். சந்திரன்

    05. குட்டி ஆலிஸூம் கோடி நட்சத்திரங்களும் - டி. எல். சிவகுமார்

    06. உள்ளிருந்து - துரை. நந்தகுமார்

    07. செவ்வந்திகளை அன்பளிப்பவன்- ஸ்ரீதர் பாரதி

    08. போதியானவன் புலம்புவதில்லை புத்தனென்று - பொ. செந்திலரசு

    09. மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் - செந்தில் பாலா

    10. கருவத்தடி - கானூர் சு. பழனிசாமி

    11. மகாசிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும் யாழி

    12. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - அ. ஈஸ்டர் ராஜ்

    13. இலையுதிர் காலத்தின் முதல் இலை - ஜா. பிராங்களின் குமார்

    14. பிரியாத மழை நினைவு - கம்பீரன்

    15. பீச்சாங்கை - சதீஸ் பிரபு

    இவை புதுக்கவிதைத் தொகுப்புகள் மீதான விமர்சனங்களாகும். பல்வேறு காலத்தில் பல்வேறு சூழ்நிலையில் எழுதப்பட்டவை. இவை இதழ்களிலும் வெளியாகியுள்ளன. முகநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்விமர்சனங்கள் ஏற்கனவே சிலர் வாசித்திருக்கவும் கூடும். இதன் மீதான விமர்சனங்கள் சிலர் எழுதியிருக்கவும் கூடும். விமர்சனங்கள் மனத்தளவிலேயே இருந்திருக்கவும் கூடும்.

    என் விமர்சனங்களை வாசித்த, அறிந்த சிற்றிதழ் சேகரிப்பாளர் நவீன் குமார் அவர்களும் எழுத்தாளர் பாரதி வசந்தன் அவர்களும் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து கொண்டு வாருங்கள் என உரையாடும் போதெல்லாம் கூறிக்கொண்டே உள்ளனர். ஒரே நேரத்தில் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து ஒரே தொகுப்பாகக் கொண்டு வர சாத்தியமில்லை.

    அவ்வவ்போது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொகுத்து தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறேன். அவ்வகையில் தொகுக்கப்பட்டதுதான் இத்தொகுப்பான ‘புதுக்கவிதைகள் புதுக்கருத்துக்கள் விமர்சனங்கள்’. இத்தொகுப்பு விமர்சனத் தொகுப்பின் வரிசையில் பதினான்காம் தொகுப்பாகும்.

    மலையின் மீது மெளனமாக ஒலிக்கும் பாடல்கள் (மலை குறித்த கவிதைகள்),

    அப்பாக்களாலானது இவ்வுலகு (அப்பா குறித்த கவிதைகள்),

    ஹைக்கூ தரிசனங்கள் (ஹைக்கூ தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள்), கவிதைகள் கூறும் கதைகள் (கவிதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள்), கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல் (கவிதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள்)

    ஆவணப்படங்கள் ஓர் அறிமுகம் (ஆவணப்படங்கள் குறித்த பார்வைகள்), புதுக்கவிதைகளின் பயணம் (புதுக்கவிதைத் தொகுப்புகளுக்கு வழங்கப் பட்ட அணிந்துரைகள்), குறும்படங்கள் ஒரு கண்ணோட்டம் (குறும்படங்கள் குறித்த பார்வைகள்) என்னும் என் தொகுப்புகளை வெளியிட்ட pustaka நிறுவனமே இத்தொகுப்பையும் வெளியிடுகிறது.

    விமர்சனங்களை வெளியிட்ட இதழ்களுக்கும் இத்தொகுப்பை வெளியிடும் pustaka நிறுவனத்திற்கும் விமர்சனம் எழுதப்போகும் தங்களுக்கும் நன்றிகள்.

    எழுதுங்கள்!

    எழுதுகிறேன்!!

    எழுதுவோம்!!!

    என்றும் அன்புடன்

    பொன். குமார்

    21/15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு

    சேலம் 636006

    9003344742

    1. தம்புராட்டியின் பரியங்கம் - நட. சிவகுமார்

    நட. சிவ குமார் இருபது ஆண்டுகளாக இலக்கிய உலகில் பயணித்து வருகிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியராக இருந்து கொண்டு கலை இலக்கிய பெரு மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மேடைகளிலும் இலக்கியம் குறித்து பேசி வருபவர். கவிதைத் தொகுதிகளை மட்டுமே வெளியிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1