Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vergalai Varudum Vizhuthu...
Vergalai Varudum Vizhuthu...
Vergalai Varudum Vizhuthu...
Ebook379 pages2 hours

Vergalai Varudum Vizhuthu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குடும்பமே ஒரு சமூகத்தின் உயிர்ச்சொல் (உயிரெழுத்து.)

சமூகங்கள் பல இணைந்தே ஒரு பிரதேசம் என்ற திசுவை உருவாக்குகின்றன.

பிரதேசங்கள் ஒன்று கலந்தே தேசம் என்ற தசை (நரம்பு) மண்டலத்தைக் கட்டமைக்கின்றன.

தேசங்கள் இணைந்தே இந்த மாபெரும் (மனித) பிரபஞ்சத்திற்கு உயிரோட்டமுள்ள உருவத்தை தருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ச் செல் (ஆத்மா) குடும்பம் என்றால், அதன் பிராணவாயு (பிராணன்) அதன் மீதான (தீராத) பற்றாகும். உறவுகள் மீதான பற்றே நம் வாழ்க்கைப் பயணத்தை (உந்து சக்தியாய்) முன்னோக்கி இழுத்துச் செல்லும்.

(உயிர் பேராற்றலாய்) அம்மா, (உளவியல் உறுதி தரும்) அப்பா, (காக்கும் தூண்களாய்) உடன் பிறப்புகள், (உதரத்தோடு கலந்த) தாய்வழிச் சொந்தங்கள், (அறிவுசார்) தந்தைவழிச் சொந்தங்கள்

என்ற இந்த உறவுச் சங்கிலிகள் இணைந்து வலிமையுடன் இருக்க, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உறவுகள்பால் பற்று அவசியம்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580152408019
Vergalai Varudum Vizhuthu...

Read more from Kavithayini Amutha Porkodi

Related to Vergalai Varudum Vizhuthu...

Related ebooks

Reviews for Vergalai Varudum Vizhuthu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vergalai Varudum Vizhuthu... - Kavithayini Amutha Porkodi

    https://www.pustaka.co.in

    வேர்களை வருடும் விழுது...

    Vergalai Varudum Vizhuthu...

    Author:

    கவிதாயினி அமுதா பொற்கொடி

    Kavithayini Amutha Porkodi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavithayini-amutha-porkodi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. எம் பூசாரி வம்ச வரலாறு

    2. பாதாளம் அடையான் பரம்பரை

    3. ஆதிவேரின் தேடல்

    4. பூவையா சுவாமிகள் பூர்வ வரலாறு

    5. ஞானகுரு வீரபுத்திரன்

    6. அன்னை என் முன்மாதிரி!

    7. யாதுமாகி நின்ற இறைவன்

    8. எங்கள் அடையாளம்

    9. ஆணிவேரின் அடிச்சுவடுகள்

    10. அன்புமழை பொழிந்த பத்ரகாளி

    11. அத்தையின் மூன்று கட்டளைகள்

    12. நினைவெல்லாம் பூவம்மா!

    13. கடவுள் அனுப்பிய தேவதூதன்

    14. மணாளனே மங்கையின் பெருமிதம்

    15. என் அண்ணன்

    16. இசையே நீ இனிது வாழ்க!

    17. வாடாமல்லி நாயகன்

    18. பிரியமான தோழி

    19. தாயுமானவன்

    20. அடுத்த வாரிசு

    21. பெரியப்பா போட்ட நான்காவது முடிச்சு!

    22. பெரியப்பாவின் எண்ணம்

    23. ஆலடி தேசப் பயணம்

    24. நினைவுகளில் விழுதூன்றிய ஆலமரம்

    25. ஆனந்தம் விளையாடிய வீடு

    26. மண்ணின் நேசமும் மருதாணி வாசமும்!

    27. உறவோடு உரையாடு!

    28. பூட்டு வல்லுநர் அமுதா!

    29. தொலைந்த செருப்பும் தொலையாத பாசமும்

    30. கிட்டதட்ட திருப்பதியை நெருங்கிய தருணம்

    31. வேட்டைக்குச் சென்ற ‘வீர’ வரலாறு

    32. ஹெலிகாப்டரில் ஏறி இளநீர் பறிப்போம்!

    33. மாடிக்கு வந்து மிரட்டிய யானை!

    34. பிள்ளை பிடிப்பவளும் போலீஸ் தாத்தாவும்

    35. பேனா நண்பா! நீ வேணாம் நண்பா!

    36. கொஞ்சிப் பேசிடும் அஞ்சல் தலைகள்

    37. நெஞ்சில் தைத்த நினைவுகள்

    38. ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்...

    39. ஆகாஷ்வாணி... செய்திகள் வாசிப்பது அமுதா...

    40. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்...

    41. கைகொடுத்த கலைமகள்

    42. துப்பறியும் அம்மு 007

    43. எங்க பாட்டி சொத்து

    44. அழியாத பொக்கிஷங்கள்

    45. மருத்துவர் என்னும் மகத்துவர்

    46. தாயாகி வந்த தெய்வம்

    47. வதந்தி என்னும் வைரஸ்

    48. காக்க காக்க கனகவேல் காக்க!

    49. பைக்கில் வந்த மர்ம மனிதன்

    50. காதல்... கலாட்டா... கல்யாணம்!

    51. வெறிச்சோடிய மொட்டைமாடிகள்

    52. பாச மலர்கள்

    53. நடுஇரவில் வந்த நாகப்பாம்பு!

    54. மியாவ் மியாவ் பூனைக்குட்டி

    55. அன்பின்றி அமையாது உலகு

    56. என் முதல் காதல்

    அணிந்துரை

    அனுபவக் கோவை

    ஷோபனா ரவி

    தம் வீட்டாரோடு வேட்டைக்குப் போனபோது தோட்டா துளைத்துக் கீழே விழுந்த பறவையின் வலியில் நனைந்த இதயம் இந்த எழுத்தாளரின் இதயம். ஆசிரியரான இவருடைய தாயார், தான் பழகிவந்த நேர்மையை இவருக்கும் போதித்து, அஞ்சாமையை இவருக்குப் பாலோடு புகட்டியிருக்கிறார்.

    அன்பான தந்தை; ஆதரவான உடன் பிறந்தோர்; மனம் சலிக்காத கணவர்; பொறுப்பான மக்கள்; அரசியலில் ஆழ்ந்த சுற்றம்! கவிஞர் அமுதா பொற்கொடி, தான் பெற்ற வெவ்வேறு அனுபவங்களால் வடித்துச் செதுக்கப்பட்ட விதத்தை வேர்களை வருடும் விழுதாகத் தொட்டுத் தடவி, நினைவு கூர்ந்து, இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

    வட்டாரப் பேச்சுவழக்கும், கிராமிய மணமும், இவர் நினைவில் நின்றுவிட்ட மாசுபடாத இயற்கைச் சூழலும், இவர் எழுத்துக்கு இனிமை சேர்க்கின்றன. எழுத்திலும், அதன் நடையிலும், உற்சாகம் மிளிர்கிறது. சமூக உணர்வும், எந்தக் கோட்பாட்டிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத தனித்துவமும், இவருடைய மனமுதிர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

    இவர் மூதாதையரின் தேரிமேட்டுப் பண்ணை வீட்டை விவரிக்கும்போது, ஒரு நூற்றாண்டின் வரலாற்றையும் வாழ்வியலையும் போகிற போக்கில் படம் பிடிக்கிறார்.

    கூடத்தைக் கடந்து ஓடினேன். பரணுடன் கூடிய இருண்ட அறை. இந்த அறைக்குப் பெயர் ‘தெக்கு வீடு.’ பரணுக்கு அடியில் தானியங்களைச் சேமித்து வைத்திருக்கும் பெரிய குலுக்கைகள், அருகில் ஒரு சிறிய நார்க்கட்டில்; அதன் தலைக்கு நேராய் மேலிருந்து ஒரு கம்பி வளையத்துடன் தொங்கும் கயிறு... இது தான் பிரசவ அறையும். பிரசவத்தின் போது தாங்கிப் பிடித்து எழத்தான் அந்தக் கயிறு.

    இந்த ஐந்து வரிகளில் பல சிறுகதைகள் அடக்கம்.

    சிறுமியாய்த் தோழியருடன் மருதாணி இலை பறிக்கச் சென்ற பிரதாபம் சுவாரஸ்யம். போகும் வழியின் வர்ணனையில் சங்கத் தமிழ் மண்ணின் ஈரமும் செழுமையும் இழையோடுகின்றன. ‘கோடை மழையால் குளம் நீர் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தது’, என்று தொடங்கி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முந்தைய புலத்துக்கும், காலத்துக்கும் நம்மை அநாயாசமாக அழைத்துச் செல்கிறார் அமுதா.

    வெந்தயக் களியும், கிண்ணிப்பெட்டியும், சித்திரை மாதத்து இடி மின்னலும், மழையில் பெயர்ந்து விழுந்த ஆல விருட்சமும் கூடவே கோவில் திருவிழா நடந்து முடிந்த வடுவுமாய் ஆலடிப்பட்டி கிராம வாழ்க்கை நம் மனக் கண்ணில் விரிகிறது.

    விருட்சமாய்ப் பரவிக் குடும்பத்தைக் காத்த குலத்தினரும் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொள்கிறார்கள். அவர்களை நமக்குப் பரிச்சயப்படுத்தித் தம் நினைவுகளோடு நம்மையும் தம் எழுத்தாற்றலால் ஒன்றிப்போகச் செய்கிறார் அமுதா பொற்கொடி. நீரோட்டம் போன்ற தெளிவான நடை!

    தம் கணவர் ஹெபடைட்டிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டபோது, எழுத்தாளர் நிறைமாத கர்ப்பிணியாகப் பட்ட கலக்கத்தையும், எதிர்கொண்ட இன்னல்களையும் யதார்த்தமாகச் சொல்லியிருப்பது புத்தகத்தின் உருக்கமான பகுதி. கந்தர் சஷ்டிக் கவசத்தை ஒரு முறை சொல்லி, ஆறு முறை சொல்லிப் பிறகு முப்பத்தாறு முறை தினம் சொல்லும் பழக்கம் தன்னைப் பற்றிக் கொண்டதையும் அமுதா விவரிக்கிறார்.

    நிறைவான வாழ்க்கை என்றாலும் அமுதாவின் ஒரு லட்சியம் மட்டும் நிறைவேறாதது பெரிய குறைதான். ஆசிரியர் அமுதா, தாளாளர் அமுதா, எழுத்தாளர் அமுதா, கவிஞர் அமுதா இப்படியெல்லாம் இவர் அழைக்கப்பட்டாலும் இவர் வெறிகொண்டு விழைந்த ஒரு பட்டம் இவருக்குக் கிடைக்கவேயில்லை. அது ‘துப்பறியும் அம்மு.’ இது என்ன புதுக்கதை என்று கேட்கிறீர்களா? படித்துப்பாருங்கள்!

    பூட்டை உடைக்கக் கற்றதிலிருந்து, பி.ஏ தடய அறிவியல் சேர முனைந்தது வரை அந்த அமுதா ‘வேற லெவல்!’ கனவாகிப்போன அந்த ஆசை இவரை இன்னும் துரத்துகிறது. அதனால் கனவில் ஜேம்ஸ் பாண்டாக மாறி மூச்சிறைக்க யாரையோ துரத்திக்கொண்டிருக்கிறார்! விரைவில் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

    அணில் வளர்த்தது, அஞ்சல் தலை சேகரித்தது, நாய் வளர்த்தது, ஆல்பம் தயாரித்தது, பேனா நண்பர் சங்கத்தில் சேர்ந்து பிரச்னையில் மாட்டிக்கொண்டது, அண்ணன் பட்டம் விட ‘லொட்டாயைக் கையில் ஏந்தி ஆட்டுக்குட்டி போல் சுற்றிவந்தது’, என்று பல அனுபவங்களில் தோய்ந்த தம் நினைவுகளை இப்புத்தகத்தில் கோவையாகத் தொகுத்திருக்கிறார் அமுதா.

    அது அடிமைத்தனம் இல்லை. நம்பிக்கை, என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். அதை இரசித்தேன். மறைமூர்த்தி கண்ணனை, மலையப்பனைக் காத்திருந்து தரிசித்த முதல் அனுபவத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். இவர் செய்தி வாசித்திருக்கிறார் என்னும் தகவல் இப்புத்தகத்தைப் படித்த பின் உங்களுக்கும் தெரியவரும்!

    வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன உணர்ந்தார் என்ற விவரங்களே இவர் யார், இவருடைய தனிமனிதக் கோட்பாடுகள் எவை என்பவற்றை விளக்குகின்றன. தன்னை நேர்த்தியாக வைத்துக் கொள்ளக் கூட முடியாத சூழலில் பெண்கள் வேலைப்பளுவில் துவண்டு போவது பற்றிய இவருடைய அங்கலாய்ப்பில் அத்தனைப் பெண்களின் அசதியும் தொனிக்கிறது. தொலைக்காட்சி இல்லாத காலத்தில் வீட்டு மொட்டைமாடிகள் ஒண்டுக் குடித்தனங்களின் குடும்பச் சமூக விளையாட்டு அரங்கங்களாகத் திகழ்ந்ததை நினைவு கூர்கிறார்.

    தாகத்தில் தவித்தபோது தண்ணீர் தந்த இஸ்லாமியர் வடிவில் வந்தது தான் வணங்கும் விநாயகரே என்ற நம்பிக்கை; பிள்ளையைப் பறிகொடுத்தும் பூவாகச் சிரிக்க முடிந்த செல்வியின் பெருந்தன்மை என முல்லை சம்பங்கி அடுக்குமல்லி கேந்தி மரிக்கொழுந்து மாம்பூ மாதுளம்பூவாக மணக்கிறது அமுதா பொற்கொடியின் அனுபவக் கோவை, ‘வேர்களை வருடும் விழுது.’

    கல்விப்பணியில் தோய்ந்திருக்கும் கவிஞர் அமுதாவுக்கு ஒவ்வொரு நாளுமே ஓர் அனுபவம் தான். தம் மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, உந்துசக்தியாக, உதவியாகக் கவிஞர் அமுதா பொற்கொடி விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை. சீரிய உடல் நலமும் நிறைந்த மகிழ்ச்சியும் அவருக்கு எப்பொழுதும் அமையவும் அவருடைய எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன்,

    பெருங்குடி, சென்னை.

    இளவேனில், 2021

    கனிந்துரை

    என்றும் அழியா உயிரோவியம்

    செயசோதி

    தித்திக்கும் தெள்ளமுதாய்

    தெள்ளமுதின் மேலதாய்

    முத்திக் கனியாகிய முத்தமிழுக்கு முதல் வணக்கம்.

    ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று பாடினார் புரட்சிக்கவி பாரதிதாசன். அந்த அமுதாகிய அன்புத் தங்கை அமுதாவுக்கு நன்றிகள் பலப்பல.

    ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்பது முதுமொழி. இம்மொழிக்கேற்ப என் அன்புச் சித்தி திருமதி. சந்திரா வைகுண்டம் அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக ‘நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும்’ உடையவராய் இறுதிவரை வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர்.

    அவரது ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் ஷாஜஹானாக, வீர சிவாஜியாக மேடையில் நடித்தும், குலசை (குலசேகரப் பட்டினம்) முத்தாரம்மன் கோயிலிலும், திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலிலும் பாட்டுக் கச்சேரி நடத்தி பலரால் பாராட்டப் பெற்றவர்.

    ‘அணையா விளக்கு’ என்ற சிறுகதையும் ‘எங்கள் ஊர் செங்கமலப் பொய்கை’ என்ற வர்ணனைக் கட்டுரையும் எழுதி ஆண்டு மலருக்கு அழகு சேர்ந்தவர்.

    அவர் கருவிலேயே திருவுடையவர் என்றால், சிற்றப்பா அவர்களோ பன்முகத் திறனுடையவர். சுருங்கச் சொல்லின் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப்போல் எல்லோரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துவிடுவார்.

    ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பர். அதற்கேற்ப தங்கை அமுதா சிறுவயதிலேயே தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களைப்போல் அஞ்சாது அண்ணன் கலை, தம்பி இசை இருவரிடமும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததை நேரில் கண்டு வியந்து போயிருக்கிறேன். இருவரும் தங்கையை ‘குந்தவை’ என்றே அழைத்தார்கள்.

    பின்னாளில் மூவரும் நல்ல தலைவர்களாகவோ, வரலாற்று ஆசிரியர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். அன்று எண்ணியது இன்று நிறைவேறி வருவதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.

    அன்புத் தங்கை சிகரத்தைத் தொட காலடி பதித்துள்ளாள். அவள் சிகரத்தின் உச்சத்தை அடைய என் அன்பான வாழ்த்துகள்.

    கவிதாயினி அமுதா பொற்கொடி நல்கிய பத்து கவிதைத் தொகுதிகளையும் படித்துச் சுவைத்தேன். ஒவ்வொரு கவிதையும் கற்கண்டு போல் இனிமையும், பலாப்பழச் சுளையைப்போலவும், முற்றல் கழையிடை ஏறிய சாறு போலவும், தென்னையின் குளிரிள நீர் போலவும், புதுமைக்குப் புதுமையாய், பழமைக்குப் பழமையாய், இறப்பிலும் உயிராய், அழியாத ஓவியங்களாய் கண்ணுக்குள் கண்ணாய் இருப்பதைக் கண்டேன்.

    ஆனந்தம் விளையாடும் நந்த கோபாலபுரம் பாட்டியின் வீட்டைக் கண்டபோது, எல்லோரும் உயிருள்ள ஓவியங்களாய், திரைப்படத்தில் காண்பதைப் போல எல்லாக் காட்சிகளும் உயிரோட்டமாகத் தோன்றுவது உணர்ந்து மலைத்துப் போனேன்.

    சந்தோஷச் சாரலில் நனைந்து குளிர்ந்து போனேன். நெல்லை வட்டாரப் பேச்சுத் தமிழ், இசை நயத்துடன் நடனமாடுவதைக் கண்டேன். நடனக் களிப்பில் காணத் துவையலை ருசித்தேன். மருதாணி வாசனையை நுகர்ந்து மனம் களித்தேன்.

    சுவை புதிது சொல் புதிது பொருள் புதிது வளம் புதிது சோதி மிக்க நவகவிதையாக எந்நாளும் அழியாத பாரதியின் மகாகவிதையைப் போல் மிளிர்வதைக் கண்டேன்.

    நல்ல கனியாக நன்னீர் ஊற்றாக கவிதை உலகில், எழுத்துலகில் பவனி வருகின்ற அன்புத் தங்கை அமுதா பொற்கொடி எண்ணியதை எண்ணியபடியே அடைய, புகழ் என்னும் கொடி கட்டிப் பறக்க, பல விருதுகள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

    அன்பு அக்கா,

    ,எம்.ஏ, எம்.எட்...

    ஓய்வு பெற்ற தமிழாசிரியை

    தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி,

    திருநெல்வேலி.

    இனிந்துரை

    சமகாலக் கல்வெட்டுகள்

    வை. இசைவாணன்

    வேர்களைத் வருடும் விழுது என்ற இனிய நினைவலைகளை (சு)வாசிக்கும்போது, பாசம், நேசம், பரஸ்பர அன்பு, நட்பு, காதல், விழிப்புணர்வு, வேகம், விவேகம் என்ற ஜலதரங்கத்தில் எழுகின்ற நாதமாய் உணர்வுகள் இதயத்தை வருடுகின்றன.

    மயிற்பீலியை கொண்டு வீசுகின்ற இதமான காற்றில், உணர்வு எரிமலைகளை எப்படி உருவாக்க இயலும் என்ற பிரமிப்பு தோன்றாமல் இல்லை. வாசிக்கின்ற ஒவ்வொரு கணமும் எப்படி செல்போன் செயலியில் தமிழ் தட்டச்சு செய்து, தமிழரின் இதயத்தைத் தொடுகின்ற ரசவாத வித்தையை எங்கு பயின்றாள் எமது தமக்கை என்ற ஆச்சரியம் கலந்த இறுமாப்பு ஏற்படாமல் இல்லை.

    படைப்புகள் படைப்பாளிகளின் பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்ற நிழற்படங்கள். இந்த எழுத்துக்கள் இந்தப் படைப்பாளி வாழுகின்ற சம காலத்தின், சமூக வரலாற்றின் கல்வெட்டுகளாய் திகழும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.

    ஒரு படைப்பாளி எளிய மக்களின் பொறுப்பு மிக்க ஆசிரியராய், உயர்நடு வகுப்பினை சார்ந்த மருத்துவக் குடும்பத்தின் தலைவியாய், இரண்டு தலைமுறையாய் அரசியல் சமூக விழிப்புணர்வில் ஈடுபட்டிருக்கின்ற குடும்பத்தின் உறுப்பினராய் பயணித்து, அத்துணை மனிதப் பிரபஞ்சத்தின் நிகழ்வுகளையும் உள்வாங்கிக் கிரகித்து, தெளிவான ஞானத்துடன் முப்பரிமாணமாய், பட்டை தீட்டிய வைரமாய், நவமணிகளாய் கவிதை நூல்கள் புனைந்து, இயற்கையாய் மரபணுக்களில் ஊறி இருக்கின்ற தமிழ் உணர்வோடு நமக்கு இந்தப் படைப்பை தந்துள்ளார் என்பது தெரியாமல் இல்லை.

    எழுதுகோல் என்ற மந்திரக் கோலை ஏந்தி இருக்கின்ற என் அன்புச் சகோதரி, சமூகத்தில் வர இருக்கின்ற அவலங்களை அழித்தொழிக்கும் தடுப்பூசியாய் தீர்க்கதரிசனத்தோடு தடையின்றி பல படைப்புகளை தர வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அன்புடன் இளவல்,

    MS international transport management

    பணிந்துரை

    வம்சத்தின் ஆவணம்

    அமுதா பொற்கொடி

    குடும்பமே ஒரு சமூகத்தின் உயிர்ச்சொல் (உயிரெழுத்து.)

    சமூகங்கள் பல இணைந்தே ஒரு பிரதேசம் என்ற திசுவை உருவாக்குகின்றன.

    பிரதேசங்கள் ஒன்று கலந்தே தேசம் என்ற தசை (நரம்பு) மண்டலத்தைக் கட்டமைக்கின்றன.

    தேசங்கள் இணைந்தே இந்த மாபெரும் (மனித) பிரபஞ்சத்திற்கு உயிரோட்டமுள்ள உருவத்தை தருகின்றன.

    பிரபஞ்சத்தின் உயிர்ச் செல் (ஆத்மா) குடும்பம் என்றால், அதன் பிராணவாயு (பிராணன்) அதன்மீதான (தீராத) பற்றாகும்.

    உறவுகள் மீதான பற்றே நம் வாழ்க்கைப் பயணத்தை (உந்து சக்தியாய்) முன்னோக்கி இழுத்துச் செல்லும்.

    (உயிர் பேராற்றலாய்) அம்மா,

    (உளவியல் உறுதி தரும்) அப்பா,

    (காக்கும் தூண்களாய்) உடன் பிறப்புகள்,

    (உதரத்தோடு கலந்த) தாய்வழிச் சொந்தங்கள்,

    (அறிவுசார்) தந்தைவழிச் சொந்தங்கள்

    என்ற இந்த உறவுச் சங்கிலிகள் இணைந்து வலிமையுடன் இருக்க, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உறவுகள்பால் பற்று அவசியம். அந்த உணர்வு எனக்குச் சற்று அதிகமாக உதிரத்தில் கலந்துள்ளது. மரபணுவாய் என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற பெரும்வரம் இது.

    பாட்டி, பூட்டி, ஓட்டி, உறவத்தான் பாட்டன், பூட்டன், ஓட்டன், உறவத்தான் என்ற எம் உறவுகளினால் வானளாவ தழைத்தோங்கி நிற்கும் மாபெரும் ஆல விருட்சத்தில் தோன்றிய சிறு விழுது நான்! பூமியைப் பற்ற எத்தனித்து, எம் ஆதி வேர்களை வருடினேன்... வேர்களின் வாசம் என் சுவாசத்தைச் சுத்திகரித்தது.

    அதன் பாசப் பற்று என் ஆத்மாவை ஆலிங்கனம் செய்தது.

    தலைமுறை தலைமுறையாய் பிறந்த மண்ணில் ஆழ ஊன்றிய எம் வம்ச ஆணிவேர்களை, தீர்க்க தரிசனத்தில் திளைத்த தொல்லியல் அறிஞனாய் அகழ்வாராய்ந்தேன். தாய்வழி வரலாறு, தந்தைவழி வரலாறு என என் தேடல் பரந்து விரிந்தது. தொலைந்து போன சில உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. தொலைதூரத் தொடர்புகளும் சிற்சில விவரங்களை தெளித்தன.

    தலைமறைவான தகவல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

    சில வரலாற்று ஏடுகளும் தூசித் தட்டப்பட்டன.

    அனுபவப் பரிசமாய்

    எத்தனை நெருடல்கள்

    எத்தனை வருடல்கள்

    எத்தனை நெகிழ்ச்சி

    எத்தனை மகிழ்ச்சி

    இடையிடையே சில உரசல்கள்... விரிசல்கள்...

    அனைத்தும் எமக்கு ஈட்டின நேசங்களின் ஆசிகளை...

    அனைத்தையும் திரட்டி, இதோ ‘வேர்களை வருடும் விழுது’ என்ற என் வம்ச ஆவணத்தை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

    இதற்குத் தூவானமாய் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்ட தந்தைவழிச் சொந்தங்களான,

    எனது வம்ச முன்னோடி,

    சின்ன அத்தை திருமதி. இராஜம்மாள்,

    சம்பிரதாயங்களை சரியாகப் புகட்டும் பெரியம்மா திருமதி. கமலா ஆலடி அருணா,

    உறவுகளை அரவணைக்கும்,

    அண்ணி மணிமேகலை, பாசத்தை பாசனம் செய்யும் இளைய அருணா,

    மதியூகி ஜவகர்...

    தாய்வழிச் சொந்தங்களான,

    என் அன்னையின் அம்சம் அழகுச் சித்தி,

    பவித்திர பாசமிகு பத்மா சித்தி,

    ஆழமான அன்புகொண்ட ஜெயஜோதி அக்கா, முரட்டு அன்பு காட்டும் அசோகன் அண்ணன்,

    சகோதரத் தோழி அன்புச் செல்வி,

    பாச உரிமைக்குரல் தம்பி செல்வம் அமுனாஸ், பாசமிகு தங்கை மலர்விழி மற்றும் மகன் அருணால்டு,

    கோகிலா அக்கா மற்றும் என் உடன்பிறந்த சகோதரர்கள் கலைவாணன், இசைவாணன் அனைவருக்கும் உள்ளார்ந்த நன்றிகள்!

    எந்தவொரு அறிமுகமும் இன்றி, முகநூல் வழியே மட்டுமே என் ஆத்மார்த்த தோழியான திருமதி. ஷோபனா ரவி அவர்கள், மிகச் சிறப்பான அணிந்துரையை வழங்கி என்னை நெகிழவைத்தார். அன்புத் தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். என்மீது பேரன்பு கொண்டு தங்கள் அகவரிகளை வாழ்த்துரையாய் வழங்கிய ஜெயஜோதி அக்காவிற்கும், தம்பி இசைவாணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    உணர்வுகள் எனதே ஆனாலும், உயிர் வரிகள் எனதே ஆனாலும், ஏதோ இலக்கு இல்லாது படைப்புலக நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த எனது எழுதுகோளை, ‘வேர்களை வருடும் விழுது’ என்ற என் ஆத்மாவின் கேவலைத் தூண்டும் தலைப்பைக் கொடுத்து, உறவுகள் ததும்பும் குளிர்ந்த தடாகத்தை நோக்கி ஓடவைத்து, அதை முறைப்படுத்தி அழகிய நூலாக வெளிவர உறுதுணையாய் இருந்த என் உடன்பிறவா சகோதரர் பெ. கருணாகரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    என்றும் அன்புடன்,

    1

    எம் பூசாரி வம்ச வரலாறு

    கற்பகச் சித்தரை நெருங்கும்போது என்னுள் ஒரு காந்த ஈர்ப்பு... அவர் என் முப்பாட்டனார் அல்லவா! அவரின் மரபணு எனக்குள் ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் உணர்வாகித் துடித்துக் கொண்டிருக்கிறதே!

    அன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் நான். மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நான் அடிக்கடி ரசித்துக் கேட்கும் பாடல்களை (குறிப்பாக ‘ராதை என் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே...’) எப்போதும் போல அரையும் குறையுமாய் தெரியாத வரிகளை நானே என் விருப்பம் போல் இட்டு நிரப்பி, ஏழு ஸ்வரங்களில் அடங்கா ராகங்கள் கூட்டி, முணுமுணுத்த வண்ணம் வீட்டில் அங்கும் இங்குமாய் இலக்கு இல்லாது பறக்கும் சிட்டுக்குருவி போல உலவிக் கொண்டிருந்தேன். இடையிடையே அன்று மாலை செல்ல வேண்டிய பயணத்துக்கும் என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன்.

    ஆம்! வெகுநாட்களுக்குப்பின் அன்றுதான் அத்தைப் பிள்ளைகள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவரும் ஒன்றாய் இரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம்.

    என் கல்லூரி நாட்கள்வரை பொதுவாக கோடை விடுமுறை, குடும்பம் சார்ந்த சுப நிகழ்வுகள் மற்றும் தேர்தல் திருவிழாக்களின் (எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஒரு திருவிழா தான்) போது எல்லாரும் இப்படி ஒன்றாகப் பயணித்து, நெல்லை செல்வது வழக்கம். திருமணத்திற்குப் பின்பு, அவரவர் குடும்பம், பிள்ளைகள் கல்வி, பணிச் சுமை என்ற பல காரணங்களால் பல வருடங்களாக இதுபோன்ற பயணங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது.

    இன்று அந்த வாய்ப்பு கைகூடி வந்ததே என் பேரானந்தத்துக்குக் காரணம். அதுமட்டுமன்றி எனக்குள் விடை தெரியாது ஓடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்குத் தகுந்த சான்றுடன் விடை கிட்டும் தருணமாக அமையப்போகிறது இந்தப் பயணம் என்பது மற்றொரு முக்கியக் காரணம்.

    இந்தப் பயணம் எமது பூசாரி வம்சத்துப் பூர்வ குடிகள் வாழ்ந்த குறும்பூரையும், அதையடுத்த கல்லால் என்னும் கூழையன் குண்டு என்ற இடத்தில் அமைந்துள்ள எம்பெருமான் வைத்திலிங்கம் சுவாமி ஆதியில் குடிகொண்ட கோயிலையும், எங்கள் மூதாதையர் மற்றும் குலதெய்வமான கற்பகச் சித்தர் ஆதியில் வாழ்ந்த தலத்தையும் தரிசிக்க மேற்கொண்ட பயணம்.

    பலமுறை அப்பாவின் வாயிலாக எங்கள் பூசாரி வம்ச வரலாற்றையும், எங்கள் குல தெய்வம் கற்பகச் சித்தர் பற்றியும் கேட்டிருக்கின்றேன். ஆனால், அதை மேலோட்டமாகவே மனதில் பதிய வைத்திருந்தேன். எனக்குத் திருமணம் முடிந்தபோது, புதிதாய் ஏற்பட்ட உறவுகளிடம், எங்கள் குடும்பம் பூசாரிக் குடும்பம். எங்கள் குலதெய்வம் கற்பகச் சித்தர் என்று சொல்வேன். ஆனால், எதிர்வாதமாய் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

    ‘பூசாரி’ என்றால் நீங்கள்தான் கோயிலில் பூசை செய்வீர்களா? என்று பலர் என்னிடம் வினா எழுப்புவார்கள்.

    ‘ஆம்! எங்கள் ஊரிலுள்ள வைத்திலிங்க சுவாமி கோயிலில் வழிவழியாக எங்கள் வம்சமே பூசை செய்கிறது...’ என்று மிடுக்காய் பதிலுரைப்பேன்.

    ஆனால், எப்படி இந்த வைத்திலிங்க சுவாமி கோயிலுக்கு எங்கள் வம்சம் மட்டுமே பூசை செய்கிறது?

    ‘பூசாரி’ என்ற எங்கள் குடும்பப் பெயருக்கான காரணம் என்ன?

    குறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் எவ்வாறு ஆலடி மண்ணில் புலம் பெயர்ந்தோம்? இப்படிப் பல கேள்விகளுக்கு எனக்கு அதுவரை தெளிவான விடை தெரியாது என்பதே உண்மை.

    அன்று பயணம் இனிதே தொடங்கியது. அந்த நெல்லை விரைவு வண்டியில் ஒரு பெட்டி முழுவதும் எங்கள் உறவுகளே ஆக்கிரமித்திருந்தோம். ஒருவருக்கொருவர் கொண்டு வந்த உணவுகளைப் பரிமாறிக் கொள்வதும், சிறு பிராயத்தில் ஒன்றாய்க் கூடி ஊர் திருவிழாக்களில் வலம் வந்ததையும், அவ்வப்போது நாங்கள் செய்த சிறுசிறு குறும்புகளையும், அதற்காய் பெரியவர்களிடம் வாங்கிய

    Enjoying the preview?
    Page 1 of 1