Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Kodaiyin Nizhal Nee
En Kodaiyin Nizhal Nee
En Kodaiyin Nizhal Nee
Ebook167 pages21 minutes

En Kodaiyin Nizhal Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகளான கனவு சாமரங்கள், மூங்கிலிசை மற்றும் நினைவுகள் நிழலாடும் மகிழம்பூ மரத்தடி ஆகியவை இவ்வாண்டு (2023) சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றது. உலக மகளிர் தினத்தில் இவ்வாண்டிற்கான பெண் சாதனையாளர் விருது பெற்றதை தனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறார். "என் கோடையின் நிழல் நீ" வெற்றிகரமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பாய் உங்கள் கைகளில் தவழ வருகிறது.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580157009624
En Kodaiyin Nizhal Nee

Read more from Sumathi Sankar

Related to En Kodaiyin Nizhal Nee

Related ebooks

Reviews for En Kodaiyin Nizhal Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Kodaiyin Nizhal Nee - Sumathi Sankar

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    என் கோடையின் நிழல் நீ

    கவிதைகள்

    En Kodaiyin Nizhal Nee

    Kavithaigal

    Author:

    சுமதி சங்கர்

    Sumathi Sankar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sumathi-sankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    நினைவு ஊஞ்சல்

    பெண்ணின் மறுபக்கம்

    திருமணம்

    பகல் கனவு

    என்னை மறந்ததேன்

    உயிராய் நீ

    இரட்டைவேடம்

    பேசும் ஓவியம்

    மனிதம்

    கரை சேராத படகு

    சொல்ல மறந்த காதல்

    திண்ணை

    சில நேரங்களில்

    அக்னிப்பிரவேசம்

    ஓடும் மேகங்களே

    தேனினும் இனியது காதல்

    என்றாவது ஒரு நாள்

    கற்பனைக் கோட்டை

    விழி அனுப்பும் தூது

    காத்திருப்பு

    தினக்குறிப்பிலிருந்து

    முகநூல்

    தூரிகை

    அவள் ஒரு இலக்கியம்

    புன்னகை

    இயற்கை என்னும்

    கருப்பு

    தலையணை

    ஆழ்கடலின் சங்காக

    அவளும் நானும்

    அன்புள்ள மான்விழியே

    அவள் ஒரு தேவதை

    மனைவி

    விழி தேடும் வசந்தம்

    சுகமான சுமை

    பாரதி நீ மீண்டும் பிறந்து வந்தால்

    யாருக்கும் வெட்கமில்லை

    தூக்கம்

    காந்தி ஜெயந்தி

    சிலைகள் பேசினால்

    தனிமையின் தவிப்புகள்

    திருமணம்

    உணர்ந்து கொள் என்னுயிரே

    வண்ண வண்ண ரோஜாக்களை

    இளங்கலை

    தோளிலும் மார்பிலும்

    தீராக் காதல்

    கண்ணெதிரே தோன்றினான்

    கலையா சிலையா

    நீ பேசிய வார்த்தைகளெல்லாம்

    எனக்காக எத்தனை பேர்

    கட்டில்

    உன்னால்

    கிளி ஜோசியம்

    விண்ணையும் ஆள்வாய் வென்று

    எங்கு செல்லும் இந்தப்பாதை

    வண்ணப் பூங்காவில்

    மீட்டாத வீணை

    வாழிய செந்தமிழ் வாழியவே

    ஏன் இந்த வேதனை

    காதல்

    அரசியல் தீபாவளி

    நீதி தேவதை

    கனவிலும் உன் நினைவே

    தனிமை

    கடலோரக் கவிதை

    இல்லத்தரசி

    அணிந்துரை

    அண்மைக்காலமாக இலக்கிய உலகிற்குள் தடம்பதிக்கும் பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கை, ஆடி மாதத்தில் அதிகரிக்கும் நதிகளின் நீர் வரத்தைப் போல், கணிசமாகக் கூடிக்கொண்டே வருகிறது.

    இது தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஆரோக்கியத்திற்கு அடையாளம்.

    கதை, கவிதை, கட்டுரை ஆய்வு நூல்கள், சிறார் இலக்கியம், திறனாய்வுகள் என எல்லா தடத்திலும் தடம்பதித்து வரும் பெண் படைப்பாளர்களின் வரிசையில், என் அன்பு தோழியும், கவிஞருமான சுமதி சங்கரும் களமிறங்கியிருக்கிறார்.

    இவரின் என் கோடையின் நிழல் நீ என்ற இத்தொகுப்பில் சமுதாயத்தில் நிகழும் தீய சக்திகளையும், பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளையும் தன் கந்தகத் எழுத்துகளால் சாடியிருக்கிறார்.

    சில இடங்களில் மனதில் பொத்தி வைத்திருக்கும் காதல் உணர்வுகளையும், சாரல் மழைப் போல் தூவி, வாசிப்பவரின் இதயத்திற்கு வாசனையோடு இடம் பெயர்க்கிறார்.

    இத்தொகுப்பின் முதல் கவிதையிலேயே

    "பண்டிகைக்காலங்களில்

    மட்டுமே

    நீயும் கதரும் நினைவுக்கு

    வருகிறீர்கள்"

    என அரும்பாடுப்பட்டு நம் தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசப்பிதாவை, இந்தச் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கிறார். வாழ்கின்ற வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், சிறு சிறு கனவுகளுக்கு உருவம் கொடுக்கவும் எல்லா விதத்திலும் தடையாக இருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, மகாத்மாவை நினைப்பதற்கு ஏது நேரம்? என்பதே கவிஞரிடமிருந்து ஆற்றாமையாக வெளிப்படுகிறது.

    திருமணம் என்ற கவிதையில்,

    "ஓலைக் குடிசையிலும்

    சிக்கனச் சாப்பாட்டிலும்

    உறவுகள் வாழ்த்தும்

    திருமணம் மறுபுறம்

    பகட்டாய் பட்டுடுத்தி

    பல முக்கிய பிரமுகர்கள்

    முன்னிலையில்

    பசிக்காக உணவு உண்ணாமல்

    பணத்தை வீணடிக்கும் கூட்டம்

    ஒரு புறம்"

    என தற்காலத்தில் புற்றீசல்போல் பெருகிவரும் ஆடம்பரத் திருமணங்களையும், அதன் அவல நிலையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடிப்பதோடு,

    "எத்தனைத் திருமணம்

    இதில் வெற்றிவாகை

    சூடுமோ

    வழக்கு மன்றம் போகுமோ"

    என இன்று பெருகிவரும், மனம் ஒன்றாத் திருமண வாழ்க்கை குறித்த கவலையையும் நம் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

    கவிஞரின் ஆதங்கம் உண்மைதானே…

    திருமண மண்டபங்களுக்கு இணையாக

    Enjoying the preview?
    Page 1 of 1