Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aga Suvadugal
Aga Suvadugal
Aga Suvadugal
Ebook277 pages57 minutes

Aga Suvadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்தான் கவி உலகில் அஞ்சி அஞ்சி அடி பதித்தேன். வலுவற்ற என் வரிகள் பஞ்சமில்லா பாராட்டுகளால் வலிமை பெற்றது. எட்டியிருந்த தமிழன்னை எனை கிட்டவந்து அணைத்துக்கொண்டாள். தட்டுப்பாடின்றி சொற்கள் ஊற்றாய் சுரந்தது. கட்டுப்பாடின்றி கற்பனை சிறகடித்து பறந்தது. இடர்பாடின்றி கவிதைகள் தானே பிறந்தது. சிறிது சிறிதாய் கவி முத்துக்களை சேர்த்து கோர்த்து மாலை ஆக்கினேன். கோர்த்த மாலையை அகச்சுவடாய் இதோ உங்கள் கையில்...

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580152408018
Aga Suvadugal

Read more from Kavithayini Amutha Porkodi

Related to Aga Suvadugal

Related ebooks

Reviews for Aga Suvadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aga Suvadugal - Kavithayini Amutha Porkodi

    http://www.pustaka.co.in

    அகச் சுவடுகள்

    Aga Suvadugal

    Author :

    கவிதாயினி அமுதா பொற்கொடி

    Kavithayini Amutha Porkodi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavithayini-amutha-porkodi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கவிஞர் அமுதாவின் கவிப் பயணம் வெல்லட்டும்!

    ஆலடிப்பட்டி கிராமத்தில் பிறந்து, அரசியலில் தனது காலடிகளை ஆழமாகப் பதித்தவரும், திராவிட இயக்கத்துக்குத் தென்திசை தந்த தீரனுமாகிய என்னுயிர் நண்பர் ஆலடி அருணா அவர்களின் குடும்பத்துப் பிள்ளையாய் பிறந்து, இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்கிற இனிய சகோதரி கவிஞர் அமுதா பொற்கொடி அவர்களின் ‘அகச்சுவடுகள்’ நூலில் அவர் வடித்துள்ள கவிதைகளை படித்த போது என் முகத்தில் புன்னகைப் பூ பூத்தது.

    கல்வி நிலையம் ஒன்றை நடத்தி, எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் வாழ்க்கையில் அறிவுச் சுடரை ஏற்றும் மனிதநேயப் பணியில் உயரச்சிகரமாக உயர்ந்து நிற்கும் சகோதரி அமுதாவுக்கு கவிதைகள் புனையும் ஆற்றலை இயற்கைத்தாய் அள்ளி வழங்கியிருக்கிறாள்.

    மனித மனங்களை எளிதில் தன் வயப்படுத்தும் ஆற்றல் கவிதைகளுக்கு உண்டு. ஆயிரம் வரிகள் ஊட்டாத உணர்ச்சியை இருவரிக் கவிதை உருவாக்கும். கவிதைகளைப் படிப்பதில் எனக்கு எப்போதுமே அளவிட முடியாத ஆர்வம் உண்டு.

    தங்கை அமுதா பொற்கொடி என்னைச் சந்தித்து, இந்த கவிதை நூலுக்கு அணிந்துரை தாருங்கள் அண்ணா என்று வேண்டுகோளை முன் வைத்து நூலுக்கான பிரதியை என்னிடம் தந்த மாத்திரத்திலேயே பல பக்கங்களைப் படித்தேன். பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை அற்புதமாக படைத்திருக்கிறார்.

    நான் பெத்த ராசாவே... என்ற கவிதையில்...

    "பொறந்த வீட்டு சுவரு

    செல்லரிச்சி போய் கிடக்கு – உன்ன

    சுமந்த என் வயிறு

    தரிசா காய்ஞ்சி கிடக்கு

    எப்ப நீ வருவ

    எனக்குத் தெரியல

    எஞ்சி இருக்கு என் ஆயுசு

    உன் வரவுல!"

    என்ற வரிகளை வாசித்த போது எனக்குள் ஒரு பெருமூச்சு எழும்பிற்று.

    தாயை உயிருக்கும் மேலாய் மதித்த தலைமுறை மாறி, இன்று அந்த அன்புருவத்தை பெற்ற மகனே முதியோர் இல்லத்தில் கொண்டு போய் முடக்கிப் போட்டு அந்தத் தாயின் மூச்சுக் காற்று, தன்னை ஒரு அநாதை என்று நினைத்தவாறே பிரிகின்ற வேதனைக்கு நிகரான வேதனை வேறு உண்டோ?

    ஈரைந்து திங்கள் சுமந்து பெற்ற பிள்ளை, வசதி வாய்ப்புகள் வந்தவுடன் தன்னை மறந்து போவதையும், எப்ப வருவ மகனே என்று அந்த தாய் ஏக்கப் பெருமூச்சோடு காத்திருப்பதையும் மிக அழகாக நெஞ்சம் கனக்கும்படி படம் பிடித்திருக்கிறார் தங்கை அமுதா.

    தனது மரண சாசனமாக அவர் தீட்டியிருக்கிற கவிதையில்...

    "என் உயிர் பிரிந்த மறுகணமே

    என்னுடலைத் தானம் செய்திடுவீர்

    தனித்தனியாய் உறுப்புகள்

    தக்கவர்க்கு பொருந்தட்டும் – அவர்

    மலர்ச்சி பெற்ற புதுவாழ்வில்

    மகிழ்ச்சி நான் பெறுவேன்"

    என்கிறார்.

    இரத்த தானம், கண் தானம், உடல் தானம் ஆகியவையே தலையாய தர்மங்களாகும். இறந்த பின்பும் வாழும் வாய்ப்பை அதன் மூலமே பெற முடியும்.

    தங்கை அமுதாவின் உள்ளத்துக்குள் ஒளிவீசும் மனிதநேய உணர்வின் வெளிப்பாடாகவே, தனது உடல்தான உறுதியை அந்தக் கவிதையில் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

    நாங்கள் ஜனநாயக ஏமாளிகள்... என்ற கவிதையில் மதுவிலக்கு கோருகிறார்.

    கற்றறிந்த மூடர்களே... கவிதையில் பெரியாரின் பகுத்தறிவை முன்னெடுக்கிறார்.

    யான் இறைந்து வேண்டுவன... கவிதையில் யாக்கை ஒன்று கொள்ளவேண்டிய வேட்கையினை வெளிப்படுத்துகிறார்.

    வரலாறு மறந்த தமிழச்சியர்... கவிதையில் வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி போன்றோரின் வீரத்தையும், தியாகத்தையும் உரக்க முன் வைக்கிறார்.

    தங்கை அமுதா என்னைச் சந்தித்தபோது எளியவன் என்னைக் குறித்து அவர் எழுதிய ‘வாழும் வரலாற்றுக்கு 101 வரிகள்’ என்ற தனது கவிதையை பரிசாகத் தந்தார்.

    தங்கையே, உங்களின் கவிப்பயணம் வெல்லட்டும். நன்றி.

    வைகோ

    முன்னுரை

    அன்புடன் உங்கள்

    கவிதாயினி அமுதா பொற்கொடி

    எனக்கு பெருமை சேர்க்கும் தாய் நாட்டிற்கும் என்னுள் உறையும் உயிர்த் தமிழுக்கும் எனது உணர்வாய் நிறைந்த தாய் தந்தைக்கும் என் முதல் வணக்கங்கள்!

    எழுத்தாய் அதில் ஒலியாய்

    சொல்லாய் அதில் சுவையாய்

    எண்ணமாய் அதில் திண்ணமாய்

    எழுச்சியாய் அதில் முதிர்ச்சியாய்

    மாற்றமாய் அதில் ஏற்றமாய்

    உருவாய் அதில் கருவாய்

    என்னுள் இதயத்துடிப்புடன் இயைந்து ஒலிக்கும் எங்கும் வாழும் எம் தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த அகச்சுவடு எனும் என் கவிதைத்தொகுப்பை காணிக்கையாக்குகிறேன்.

    மாற்றம் ஒன்றே மாறாதது எனும் உலகில் மாறாக் கொள்கை கொண்ட எம் மதிப்பிற்குரிய வாழும் வரலாறு தமிழ் மக்கள் தலையாரி திரு. வைகோ அவர்கள் அணிந்துரை எழுதியது இக்கவிதை தொகுப்பிற்கே கிடைத்த மணிமகுடம்.

    கற்பனைக்கு வரைமுறை இல்லை...

    கவித் தமிழுக்கும் குறை வரை இல்லை...

    கருப்பொருளுக்கும் திரை புரை இல்லை...

    மனம் கெஞ்சியது...

    உணர்வு விஞ்சியது...

    கைகள் தானாய் தூரிகையை நாடியது...

    துணையாய் வந்தது தாய் தந்தை மரபணு...

    துரிதம் தந்தது ஆலடி மண் நேசம்...

    துடிப்பைத் தந்தது நெல்லை தமிழ் வாசம்...

    பகலவன் உதயத்திலும் மறைவிலும் கூட இவ்வுலகில் இடத்திற்கு இடம் மாறுபாடு... மாற்றம் பகலவனால் அல்ல... அவன் எப்போதும் நிலையாக நின்று தன் ஒளிக்கரங்களை நீட்டுகிறான். மாற்றம் தருவது பூமியின் சுழற்சியே.

    உண்மையும் சத்தியமும் என்றும் நிலையானது.

    மாற்றம் தருவது மனிதனில் சூழலே. மாற்றங்கள் ஏற்றம் உள்ளதாய் அமைய வேண்டும். சமுதாயம் எனும் ஆல விருட்ச்சத்தின் ஆணி வேரறுக்கும் கோடாரிப் பதர்கள் பொடிப்பொடியாக்கப்பட வேண்டும். மனித இனப்பாகுபாடுகள் தகர்த்து எறியப்பட வேண்டும். விஞ்ஞான முன்னேற்றத்தினால் வேற்று உலகிற்கு குடியேற முனைந்தாலும், மனிதன் பிறந்த மண்ணின் வாசம் காத்திடல் வேண்டும். பெண்ணின் உயர்வு இயல்புகள் திரியாது இமயம் தொட்டிட வேண்டும். இதுவே என் ஆழ்மனதின் ஆதங்கம்... அதுவே எம் கவிதையின் வேதாங்கம்.

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்தான் கவி உலகில் அஞ்சி அஞ்சி அடி பதித்தேன். வலுவற்ற என் வரிகள் பஞ்சமில்லா பாராட்டுகளால் வலிமை பெற்றது. எட்டியிருந்த தமிழன்னை எனை கிட்டவந்து அணைத்துக்கொண்டாள். தட்டுப்பாடின்றி சொற்கள் ஊற்றாய் சுரந்தது. கட்டுப்பாடின்றி கற்பனை சிறகடித்து பறந்தது. இடர்பாடின்றி கவிதைகள் தானே பிறந்தது. சிறிது சிறிதாய் கவி முத்துக்களை சேர்த்து கோர்த்து மாலை ஆக்கினேன். கோர்த்த மாலையை அகச்சுவடாய் என் அன்னை தந்தைக்கும், என் பெரிய தந்தை ஆலடி அருணா அவர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்

    கவிதாயினி அமுதா பொற்கொடி

    என்தாய் தந்தைக்கு சமர்ப்பணம்!

    என் முதல் ஆசான்...

    நாற்பது ஆண்டு காலம்

    ஆசிரியர் பணி ஆற்றிய என்

    பெற்றோருக்கு சமர்ப்பணம்

    உயிர் தந்து மெய் வளர்த்தவரே

    உயிர்மையும் மெய்மையும் சொன்னவரே

    இத்திரையில் நான் மிளிர

    உத்திரமாய் நின்றவரே

    நற்றமிழாய் நான் வளர

    கொற்றவையாய் காத்தவரே

    உண்மை கண்டு உணரவும்

    பொய்மை கண்டு பொங்கவும்

    மேன்மை கண்டு வணங்கவும்

    ஏழ்மை கண்டு இரங்கவும்

    கயமை கண்டு எதிர்க்கவும்

    கற்றுத் தந்த நீரே

    என் முழு முதல் ஆசான்...

    தலை வணங்குகிறேன் உம் பணிக்கு

    அன்பு மகள் வை. அமுதா

    பொருளடக்கம்

    வாழ்க்கைக் குறிப்பு கவிதைகள்

    மந்திரப் புன்னகையில் மாறிய வரலாறு - கிளியோபாட்ரா

    வறுமையில் செம்மை – வணங்காமுடி ஜீவானந்தம்

    மண்ணுள் மறைந்த மனித ஒளி - நெல்சன் மண்டேலா

    என் கால அட்டவணையில் இருண்ட நாள் - கருப்பு வைரம் காமராசர்

    அண்ணல் பிறந்த நன்னாளில் அனைவரும் இணைந்து சூழுரைப்போம்

    என் பெரிய தந்தை ஆலடி அருணாவிற்கு ஓர் புகழ் அஞ்சலி

    பாரதிக்கோர் புகழாரம்...

    ஒரு புனிதப் பயணம் (அன்னை தெரேசா)

    வரலாறு மறந்த மறத்தமிழச்சியர்

    மரணத்தை வென்ற பகத்சிங்!

    இயற்கை கவிதைகள்

    காந்த மலரே...!

    வீழ்ந்தது ஆலவிருட்சம்

    இயற்கையிடம் ஒரு உரையாடல்

    நீயும் தலையிடாதே

    சுகம் தரும் அழுகைகள்

    வான் கொடை...

    உரையாடல்...

    வானவில்

    இயற்கையின் மிளிர்ச்சி

    முத்தம் முத்தம் முத்தம்

    கடலோரம் வாங்கிய காற்று...

    கதிரவன் வரவு

    என்னை மயக்கிய நீரோடை

    சமூக சிந்தனை கவிதைகள்

    ஒரு திருநங்கையின் குமுறல்

    கழி பிணங்கள்

    பூமாதேவி சாடுகிறாள்...!

    நிலவுப் பெண்ணே...

    பாவத்தின் சம்பளம் மரணமா...???

    பிணம் தின்னும் பணப் பேய்கள்

    இலக்கியத்தில் பாரபட்சம்

    அம்முவின் ஆத்திச்சூடி

    யுத்தம் யுத்தம் யுத்தம்

    முகத்திரை கிழித்த நாள்காட்டி

    இந்த யுகம் பூத்துக் குலுங்கட்டும்

    சிங்கியின் ஆதங்கம்

    வெட்கிப் போன வேதங்கள்

    இனி ஒரு விதி செய்வாய்

    பெண்மை வெல்க!

    சமத்துவம் கண்டிடும் சமுதாயம்

    கண்ணில் மறைந்த அப்துல் கலாம்கள்

    இலவு காத்தக் கிளி இவள்...

    எங்கு தேடி அலைகிறாய்...?

    கருவறைக் கல்லறை

    (Bar) குள்ளே நல்ல நாடு...

    அவலங்களை அம்பலமாக்குங்கள்

    இவர்கள் சுமங்கலி விதவைகள்

    தேவை தேவை ஆட்கள் தேவை

    அவசர உலகம் இது

    நாங்கள் ஜனநாயக ஏமாளிகள்

    கற்றறிந்த மூடர்களே...

    நாட்டை அழிக்கும் நாசப் புயல்கள்

    கண் விழிப்பாய் மகளே!

    முகமூடி மனிதர்கள்

    வேதங்கள் திருத்தப்படட்டும்

    எங்களையும் வாழவிடுங்கள் (திரு நங்கையர்)

    வெகுமதி

    கைபேசிக்காதல்

    தொட்டில் முதல் சுடுகாடு வரை

    தடைகளை மீறி வந்திடுவீர்

    கைப்பிடித்து அழைத்துச் செல்ல வருவீர்களா

    புலிகளை விரட்டிப் பிடியுங்கள்

    பாரதத்தாய் அழுகின்றாள்

    ஒற்றைப் பனை மரம்

    எதற்கு சுதந்திரம்

    மனிதக் காட்சி சாலை

    கடவுள் ஏன் கல்லானார்?

    காதல் கவிதைகள்

    சிப்பாயின் கடிதம்

    என் தேசிங்கு ராசனே

    எனக்கென்று ஒருத்தி

    தேடுகிறேன்...

    பூச்சூட்ட வரவா

    எனக்கென்று ஒருவன்

    பருத்திக் காட்டுப் பக்கத்திலே...

    எப்படி வந்தாய் என் மனதிற்குள்

    உன் நினைவில் நான்...

    என்னருகே நீ இருந்தால்

    வெண்ணிலவே...!

    நினைவலைகளில் உன்னை துரத்துகிறேன்

    தனிப்பட்ட கவிதைகள்

    எந்தைக்கு ஓர் எழுத்தோலை

    நான் பெத்த ராசாவே

    திக்! திக் திக்!

    என் மரண சாசனம்!

    அவன் அழுகிறான்...

    பெண்ணே நீயும் புறப்படு!

    மானிடத்தை வென்ற மரணம்!

    என் உள்ளம் பற்றிய புரூஸ் லீ

    குயவனின் கை வண்ணம்

    கற்சிலை காரிகை

    உன்னதம் காத்திடு பெண்மையே

    வள்ளுவம் செய்த பிழை

    தண்டமிழில் ஒரு தாலாட்டு

    இன்றைய பொழுது இனிதே கழிந்தது

    திரும்பிப்பார்க்கிறேன்...

    தமிழினமே பெருமை கொள்!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

    வாழ்க்கையின்

    Enjoying the preview?
    Page 1 of 1