Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidhaikkul Virutcham
Vidhaikkul Virutcham
Vidhaikkul Virutcham
Ebook415 pages1 hour

Vidhaikkul Virutcham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“விதைக்குள் விருட்சம்” என்ற தலைப்பின் கீழ் அவரது கவிதை படைப்புகள் மிகவும் ஆகச் சிறந்த சிந்தனை களம். இயற்கையின் முக்கியத்துவம், வாழ்வியல் தத்துவம், சமுக அவலங்களை, வலிகளை அழகாக சித்தரித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சமூக பிரக்ஞையுடன் தனது சிந்தனை ஓட்டத்தை ஓடவிட்டுள்ளார். ஆழ்ந்த சிந்தனையை எளிமையான முறையில் கவிதையாக தந்துள்ளார்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580175210668
Vidhaikkul Virutcham

Related to Vidhaikkul Virutcham

Related ebooks

Reviews for Vidhaikkul Virutcham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidhaikkul Virutcham - A. Muthuvezhappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விதைக்குள் விருட்சம்

    Vidhaikkul Virutcham

    Author:

    அ. முத்துவேழப்பன்

    A. Muthuvezhappan, IES (Retd.)

    For more books
    https://www.pustaka.co.in/home/author/a-muthuvezhappan

    பொருளடக்கம்

    எழுத்தாளர் குறிப்பு

    அணிந்துரை

    எனக்குள் தேடல்

    மதிப்புரை:

    1. விதைக்குள் ஒரு விருட்சம் மீண்டும் வித்தாகும் பல விருட்சங்கள்

    2. நான் நான் தான் நீ நீயா

    3. கேட்டேன் கேட்டேன்

    4. மரமே! வரமே! வனமே! என் இனமே!

    5. எழுந்தது இனிய அதிகாலை பொழுது

    6. விடியல்

    7. விடியல் வரப்போகுது குடு குடு

    8. இயற்கை

    9. பூலோகம் தானப்பா

    10. மரக் கிளைக்கு பிறந்தது ஞானம்

    11. பூமி இது நம்ம பூமி

    12. அழகிய பிரபஞ்சமே

    13. காடு புவியின் உயிர் கூடு

    14. மறுபடியும் பிறக்கட்டும் மழைத்துளிகள்

    15. மரம் நடு தண்ணீர் விடு

    16. நிலம்

    17. தேன் கூடு

    18. நீரைத்தேடி

    19. அக்கா அக்கக்கா; இயற்கையைப் பார்த்து சிரியக்கா

    20. மலரைக்கேட்டேன்

    21. பாருக்குள்ளே எங்கள் நாடு

    22. தாயின் மணிக்கொடி

    23. அன்பே மீதி; அகிலமே வீதி

    24. மண்ணில் பிறந்த ஒரே தெய்வம் தாய்

    25. தாயின் கரங்கள் அது

    26. தாயின் கருவறை

    27. தாயின் பாசம் அது

    28. ஆத்தாவின் கிழிந்த சேலை இது

    29. கருவறை என்ன கல்லறையா

    30. தொப்புள் கொடி உறவு

    31. தோல்வி ஒன்றும் தொல்லை இல்லை தோழா

    32. பெண்ணே பெண்ணே பொறுத்தது போதும்

    33. புயலாய் புறப்பட்ட புதுமைப் பெண்

    34. மனங்களை நடு நல் மனங்களை நடு

    35. அமைதிப் பூக்கள்

    36. அமைதிப்புறா சுடுவதற்கு அல்ல பறப்பதற்கு, அமைதியை பரப்புவதற்கு

    37. விடைதேடும் விவசாயம்

    38. எல்லாம் மாறிபோச்சி

    39. அந்தக்காலம் இந்தக்காலம்

    40. நான் கண்ட கிராமம்

    41. மரணிக்கப்போவது இந்த பூமியா? ஆதலால் மனிதா...

    42. எப்பொழுது வருவாய்

    43. ஆறு ஐந்தானது பகுத்தறிவு இப்போ பாழானது

    44. பாசக்கார குரங்கும் பாட்டியும்

    45. வார்த்தைக்கு வேலிபோடு; வாய்க்கு பூட்டு போடு

    46. பிடிவாதமாய் வளர்த்தது பெற்றோரின் தவறன்றோ

    47. அழுது வடியும் அழுக்கு மனிதர்கள்

    48. அன்பெனும் ஜீவநதி வற்ற வேண்டாம்

    49. அன்பு நிரம்பட்டும் உள்ளத்திலும், இல்லத்திலும்

    50. மனிதனும் மகான் ஆகலாம்

    51. ஆண் என்னும் அடிமை

    52. கூடி வாழ்ந்தால் குடும்பம்

    53 நம்பிக்கைத் துரோகம்

    54. சிரித்தால் மகிழ்ச்சி, சிந்தித்தால் புரட்சி

    55. முனை உடைந்த பேனா

    56. உன்னைக் கேளாய்

    57. எனக்குள் நான் ஏன் என்று என்னையே கேட்டேன்

    58. குப்பாயம் பொய்த்தால் குப்பையாகும் உடம்பே

    59. நிலவில் காலடி வைத்த விக்ரம் (சந்திராயன் 3)

    60. நிம்மதி

    61. வேருக்கு நீர், வேதனைக்கு கண்ணீர்

    62. போர் முனையோ, உயிர்க் கொலையோ

    63. இளைஞர்களின் எதிர்காலம்

    64. கேட்பேன் கேட்பேன்

    65. விழுவேன் என்று நினைக்காதே

    66. நீயே உனக்கு சொந்தமில்லை

    67. ஆனால் மனிதா, ஆகையால் மனிதா

    68. வந்து கிடக்கலாம் நாளையும்

    69. வேதனைதான் நிலவுக்கும் இவளுக்கும்

    70. இதுவும் காதல்தான்

    71. ஜீவ காதல்

    72. வாழ்க்கைப் படகு வகையாய் ஓட்டப் பழகு

    எழுத்தாளர் குறிப்பு

    அ. முத்துவேழப்பன்

    பிறந்தது: விருதுநகர்

    வளர்ந்தது: கும்பகோணம்

    கல்லூரிப்படிப்பு: அரசு ஆடவர் கல்லூரி, கும்பகோணம்.

    பணி: மைய அரசுப் பணியில் 1985ல் அகமதாபாத்தில் துவங்கி இயக்குநராக பணி ஓய்வு பெற்றது

    சென்னை.

    இந்திய பொருளாதாரப் பணி (I.E.S) யிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு - மார்ச் 2021

    கவிதை தொடர்ந்து எழுத துவங்கிய ஆண்டு: 2019

    சமர்ப்பணம்

    எழுதுகோலை எடுத்தேன் எட்டிப்பார்த்தது என் இதயம். எப்படியாவது நன்றி சொல்லவேண்டும் என்றது.

    என்னையும் எழுத வைத்த என் அன்னை தமிழுக்கு முதல் வணக்கம்.

    அமைதியாய் இருந்து உண்மை உலகை காண உன்னுள் தேடலைத் துவங்கு என்று என்னை உருவாக்கிய ஆசான்கள், Dr. R. திருநாவுக்கரசு, (பொருளாதாரம்) மற்றும் திரு Dr. S. கார்திகேயன் (பொருளாதாரம்) அவர்களுக்கும் அடியேனின் அன்பு வணக்கம்.

    என்னை இந்த மண்ணுலகிற்குக்கொண்டு வந்து வெற்றிப்பயணத்தை துவங்கி வைத்த அன்பு பெற்றோர்களுக்கு நன்றி.

    என் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு அங்கத்தினராக இருந்து, என்னுடன் எல்லா நிலைகளிலும் பயணித்து என்னையும் படைப்பாளியாக்கிய என் துணைவியாருக்கு பிரத்தியேக நன்றி.

    என் இதயத் துடிப்பாய் இருந்து உந்துதல் தந்த என் பாசக் குழந்தைகளுக்கும் பரிவு ஆதரவு காட்டிய மருமகளுக்கும் மாப்பிள்ளைக்கும் இந்த படைப்பை சமர்பிக்கின்றேன்.

    இந்தப் படைப்பை வெளிக்கொணர கருவாய் இருந்து, சும்மா இரு சொல் அற என்றது போல், செத்தாலும் பொய் சொல்லமல் இரு, வெற்றியைச் சுமக்க வெறித்தனமாய் ஓடு, வேள்வியை விட கேள்வி கேளு, விழுந்தே போனாலும் எழுந்து எழுச்சி பெற்று விடிவைத்தேடு, வெளிச்சத்தைப்பாரு, வெளி உலகம் வெறுத்தாலும்,வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாலும்,விடைகாண ஓடு, என்று என் விடியலுக்கு வித்திட்ட எனது மாமா திரு P. சிதம்பரம் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி, பணி ஓய்வு, அவர்களுக்கு இதயப்பூர்வமான சமர்ப்பணம்.

    ஆதரவு தந்த எனது நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி.

    அ. முத்துவேழப்பன், IES( Retd.)

    அணிந்துரை

    திருவாளர் அ. முத்துவேழப்பன் அவர்களின் விதைக்குள் விருட்சம் என்ற தலைப்பின் கீழ் அவரது கவிதை படைப்புகள் மிகவும் ஆகச் சிறந்த சிந்தனை களம். இயற்கையின் முக்கியத்துவம், வாழ்வியல் தத்துவம், சமுக அவலங்களை, வலிகளை அழகாக சித்தரித்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சமூக பிரக்ஞையுடன் தனது சிந்தனை ஓட்டத்தை ஓடவிட்டுள்ளார். ஆழ்ந்த சிந்தனையை எளிமையான முறையில் கவிதையாக தந்துள்ளார். படித்து பயன்பெற வாழ்த்துகிறேன்.

    முனைவர் சு கார்த்திகேயன்

    எனக்குள் தேடல்

    கவிஞன் இல்ல நான்; காலத்தை துரத்தி விட்டு கனவு காணத் துடிக்கும் கிழவன் நான்;

    இலக்கணம் தெரியாது என் கற்பனைச் சோலையில் கனவு காணும் சாதாரண மனிதன் நான்;

    எனக்குள் தேடலைத் துவங்கினேன், ஏன் இந்த வீண் முயற்சி என்றது என் சிறு மூளை.

    சிந்திக்கவா என்றேன், சிந்திய பிறகு சிந்தித்து என்ன பயன் என்றது எனது சிற்றறிவு;

    சிரிக்காதே என்றேன், சிரிக்கத்தான் போகின்றார்கள் படித்து என்றது.

    சிறகு அடித்து பார்க்கின்றேன் என்றேன்,

    சிறகு ஒடிந்தபின் பறக்க நினைக்காதே என்றது என் மனது;

    காவிரித் தண்ணீரைப் பருகியவன் நான் கற்பனைத் தேரை ஓட்டித்தான் பார்க்கின்றேன் என்றேன்;

    உன் ஓட்டை மூளையை ஒட்டிப் பார்த்தது போதும் என்று சபித்தது;

    பிழைகள் பல இருக்குமே என்றேன்

    நீ தான் கவிஞன் இல்லையே பிழைத்துப் போ என்றது.

    இலக்கணம் வரம்பை மீறி இருக்கலாமோ என்று கவலை கொண்டேன்,

    இலட்சியவாதியாய் இரு இலகட்டும், இழுக்கு வராது என்றது.

    முயற்சித்துள்ளேன் என்றேன், முறைத்து பார்த்தது என் பேனா;

    சிரித்தது என் சிந்தனை,

    பிதற்றல் தான் பிடிவாதத்தால் வந்த பிதற்றல் தான், படைப்பாளன் நான் இல்லை, படித்துப் பாருங்கள்.

    தமிழில் வடிக்க முயன்றேன்,

    வடிவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வடித்துவிட்டேன்

    தவறு இருந்தால் மன்னிக்கவும். தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

    இந்த படைப்புக்கும் இனி வர இருக்கும் எனது படைப்புகளுக்கும் ஆதரவும் தரவும்.

    அன்புடன்

    அ.முத்துவேழப்பன்,

    IES Retd.

    vezhappan@gmail.com

    சென்னை 600 063, 21.08.2023

    கைபேசி எண் 9444927111

    மதிப்புரை:

    முனைவர். ந. கண்ணகி

    எம்.ஏ.எம்பில்.பிஎச்டி

    நேர்மை திறனும், துணிவும் பணிவென்னும் நற்பண்புடைய திரு. முத்துவேழப்பன் அவர்களுடைய விதைக்குள் விருட்சம் என்னும் தலைப்பின் கீழ் வடித்துள்ள கவிதை படைப்பிற்கு மதிப்புரை வழங்குவதில் எனக்கு ஆகப்பெரும் மகிழ்ச்சி.

    வெண்பா கலிப்பா என்ற மரபுக் கவிதைகளைக் கடந்து, சீர், தளை என்ற யாப்பு இலக்கணங்களை உடைத்து, புதுக்கவிதை என்று பெயர் பெற்று, மாறிய படிவத்தில் தமிழ்க் கவிதைகள் இன்று வேரூன்றி கிளைவிட்டு வளர்ந்து விருட்சங்களாய் வளர்ந்தோங்கி தமிழை அழகு படுத்தி வருகின்றது.

    பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு தானே. புதுக்கவிதைகளின் முன்னோடிகள் பாட்டுக்கோர் புலவனாம் பாரதியும், பாவலர் பாரதி தாசனும் ஆவர். புதுக்கவிதையின் தந்தை அய்யா பிச்சை முத்து அவர்களைத் தொடர்ந்து புதுக்கவிதை பல்வேறு பரிமாணங்களில் எளியமுறையில் ரத்தின சுருக்கமாக கருத்தாழத்துடன் பல கவிதைகள் தமிழ்தாய்க்கு ஆபரணங்களாக அழகூட்டி வருகின்றது. அதன் வழி, திரு அ. முத்துவேழப்பன் அவர்களின் ‘விதைக்குள் விருட்சம்’ என்ற தலைப்பின் கீழ் படைக்கப்பட்ட கவிதைகளும் தமிழை அழகுபடுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

    உள்ளத்தின் உள்ளேயிருந்து புற உலகைப் பார்ப்பதற்கான சாளரமாக இக் கவிதை தொகுப்பு அமைந்துள்ளதைப் பார்க்கின்றேன். மனித இனத்தின் ஆதார உணர்வகள், இன்றைய சமுதாய முற்போக்குக் கருத்துகள் மடைதிறந்த வெள்ளம் போல் பாய, புதிய சொல்லாட்சியில் கற்பகசோலை போல் அமைந்துள்ளது முத்துவேழப்பன் அவர்களின் இந்த படைப்பு. மண், விண், நில்லாது ஓடும் நதி, காற்றோடு உரசும் மேகம், உணர்வைத் தொடும் தென்றல், சுடும் நெருப்பு என்று இயற்கையின் வலிமைகள் மட்டுமல்லாது, சோம்பிக் கிடக்கும் சமூகம், முகவரியைத் தொலைத்த முகம் இல்லாத மனிதர்களின் வலிகள், உபாதைகள், ஏக்கங்கள், மற்றும், துவண்ட மனித மனதிற்கு எழுச்சி எழுப்பும் ஓர் அறைகூவலை அவரின் படைப்பில் பார்க்கின்றேன்.

    நீயும் வாழ், மற்றவர்களையும் வாழ விடு என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்குவதாக உள்ளது ‘மரக்கிளைக்கு பிறந்த ஞானம்’ என்ற கவிதை.

    ‘கடித்து தின்ன பழம் தருகின்றேன் பறவைகளே’ "நீங்கள் உங்கள் இனத்தைப் பெருக்குங்கள், எங்கள் இனத்தையும் பெருக்குங்கள்’ என்று போதி மரத்தின் ஞானத்தை பொழிகின்றது இந்த கவிதை.

    மண்ணின் வளம் காக்க, மரங்கள் என்ற வேர்களே மூலம் என்பதை

    மரங்கள் தான் வனங்கள், நம்மைக் காக்க நமக்கு கிடைத்த வரங்கள் என்ற கவிதை வரிகள் வலிமையாக உணர்துகின்றன.

    காட்டை வெட்டாதே,

    கழனியை விற்காதே,

    காடு இல்லை என்றால் வரும் கேடு

    என்று மிக காட்டமாக, காடுகளை அழித்து வரும் சமுதாய அறிவின்மையைச் சாடுகிறார்.

    இயற்கையின் சாளரத்தைத் தொலைத்தான் மனிதன் என்பதை மிகவும் வேதனையுடன் பதிவிடுகிறார்.

    ‘எல்லாம் மாறிப்போச்சி, எட்டிப் பார்த்து

    விளையாடிய குளமும், ஏர்பூட்டிய மாடு, மிதித்த

    கழனியும் போச்சி, இறைத்த கிணறும் மூடிப்போச்சி,’

    போன்ற வரிகள், மனித நாகரீக வளர்ச்சி, இயற்கையை சிறுக, சிறுக அழித்து வருகின்ற அவல நிலையை ஆழ்ந்த சோகத்துடன் எடுத்துரைக்கின்றது.

    வெறும் சொற்களின் தூவல் தாவல் மட்டும் அல்லாது, ஒரு சாதாரண வாழ்க்கையின் மெல்லிய உணர்வுகளை நம்மோடு விட்டுச் செல்கின்றது. பாசக்கார குரங்கும் பாட்டியும் என்ற கவிதை ‘உயிர் தந்த பெற்றோர்களை உதாசீனப் படுத்தாதே’ என்ற உணர்சித் துடிப்புள்ள கவிதை, கவிஞர் கண்ணதாசனின் சொந்த மென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை; ஒரு துணை இல்லாமல் வந்தெல்லாம் பாரமும் இல்லை. நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைதானடா தம்பி, நன்றி கெட்ட மனிதனை விட நாய்கள் மேலடா என்ற வலுவான வரிகளுக்கு இணையாக நிற்கின்றது.

    சிந்தனை வீச்சும், சொற்திறனும் இணைந்து உயிர்ஓட்டமாக சக்தி மிக்க தெறிக்கும் கனல்களாக சில கவிதைகள் அமைந்துள்ளன.

    முழுமதிக்கு முக்காடு எதற்கு

    "தோல்வி ஒன்றும்தொல்லை இல்லை தோழா’

    தோல்வியைத் தாண்டி வா தோழா"

    போன்ற கவிதை வரிகள் இளம் உள்ளங்களில் எழுச்சியும் உற்சாகமும் ஊட்டும் எக்காள நாதங்கள்.

    திருவள்ளுவர் ‘அறம் வலியுறுத்தல்’ என்ற அதிகாரத்தில், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், இந்நான்கும் அறத்தின் வழிசெல்பவன் தவிர்க்க வேண்டியதாகச்சொல்கிறார். அதன் எதிரொலிபோல உள்ள இக்கவிதை வரிகள்.

    குணம் கெடாத மனதைக் கேட்டுடேன்( அழுக்காறு)

    இறுக்கம் இல்லாத இதயம் கேட்டேன் ( அழுக்காறு)

    பிறர் சொத்துக்கு ஆசைப்படாத உள்ளத்தைக் கேட்டேன் (அவா)

    கொதிக்கும் இரத்தத்தில் கோபம் மடியக் கேட்டேன் (வெகுளி)

    வசை பாடாத வாயைக் கேட்டேன் ( இன்னாச் சொல்)

    இவ்வாறாக முத்துவேழப்பன் கவிதைகளின் நல் மதிப்பீட்டை அளவாகக் கொண்டு, சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு கவிதையும் நம்முள் வித்திடும் எழுச்சியாக விதைத்துள்ளது என்பதில் ஐயம் இல்லை.

    மண்ணில் விதைத்த விதைகூட சில சமயம் முளையாமல் போகலாம். ஆனால் மனித மனதில் விழுந்த சிந்தனை விதைகள் முளைக்க தவறுவதேயில்லை. அவ்வகையில் இக் கவிதைகள் ஒவ்வொன்றும் உன்னத படைப்பு.

    1. விதைக்குள் ஒரு விருட்சம் மீண்டும் வித்தாகும் பல விருட்சங்கள்

    விதைக்குள் விருட்சம், விழுந்தே முளைக்குது,

    ஒரு மரம்.

    வேர்கள் மண்ணைப் பிடிக்குது,

    துளிர்கள் அரும்புது,

    துளித்தே வளர்வது பெருமரம்;

    பூந்தளிர்கள் பூத்து காயாகுது;

    வளர்ந்தே தருவது, 

    பல நூறு காய், கனிகள்;

    பழங்கள் பலன் அளிக்கிறது,

    பழத்தில் புதைந்த கொட்டை

    வித்தாகுது;

    வித்தில் பிறக்குது மீண்டும் விருட்சம்;

    வனமாய் மாறுது விதைக்குள் இருந்து பிறந்த விருட்சம்;

    நிழல்களைத்தந்ததும் அந்த மரங்கள்,

    நெடு நெடு என்று வளர்ந்தது மரங்கள்;

    விதைதான் விருட்சமடா;

    விழுந்தே முளைத்த மரங்களடா.

    விதைக்குள் மரங்களடா;

    வளரத்துடிக்கும் மரங்களடா!

    மூளைக்குள் ஒரு வித்து,

    முளைக்கத்துடிப்பது பெரும் சொத்து.

    போட்டது ஒரு வித்து,

    புறப்பட்டது ஒரு உசுறு.

    உதிர்ந்தது ஒரு ஒரு துளியாய்,

    சேர்ந்தது மழைத் துளியாய்,

    விரைந்தது நதியாய்;

    கடலில் சேர்ந்து,

    நீண்டது நீர்ப்பிரளயமாய்.

    ஒரு துளி, ஒரு துளி;

    கண்ணீர்த்துளியாம்;

    வடித்தது வடித்தது பெரும் துயராம்;

    சிந்தியது, சிந்தியது;

    சிறு, சிறு வேர்வைத்துளியாம்,

    உழைப்பு தந்தது பெரும் வெற்றியாம்.

    படைத்தது படைத்தது ஒரு உயிராம்;

    படர்ந்தது படர்ந்தது,

    பாரில் பல இனமாம்;

    அணுக்கள் அணுக்கள் சேர்ந்தனவாம்,

    அதிசயங்கள் ஆயிரம் படைத்தனவாம்;

    திசுக்கள் திசுக்கள் ஒன்று சேர்ந்தனவாம்;

    சிசுக்கள் சிசுக்கள் உருவாகினவாம்;

    இனங்கள், இனங்கள்;

    சேர்ந்தது தான் உலகமடா.

    சேர்ந்தது, சேர்ந்தது, ஒரு ஒரு கரங்களாய்;

    தேசத்தை இணைக்குது பல கரங்களாய்;

    ஒரு உளி, ஒரு உளி, சிலை வடிக்குமாம்,

    ஒரு கரம், ஒரு கரம்,

    நாற்கரம் ஆகுமாம்.

    ஒரு துளி ஒரு துளி இணைந்து,

    புனலாய் புறப்பட்டது,

    புரண்டே, புரண்டே

    புது வெள்ளமாய் பாய்ந்திடத் துடித்தது;

    ஒரு சொல், ஒரு சொல் கசக்கின்றதே!

    ஓராயிரம் பகையை மூட்டுகின்றதே!

    மறு சொல், மறு சொல் இனிக்கின்றதே!

    மனதில் அன்பை விதைக்கின்றதே.

    பனித்துளி, பனித்துளி;

    உதிர்கின்றதே,

    படரும் குளிராய் துடிக்கின்றதே.

    ஒருகரம், மறு கரத்தை தாங்குகின்றதே,

    சிகரத்தின் உச்சியை அடைகின்றதே.

    ஒரு பொறி, ஒரு பொறி;

    தீப்பொறியாய் எரிகின்றதே.

    ஒரு உடல்; ஒரு உடல் சேர்ந்து,

    ஜீவன் உயிர் பெறுகின்றதே.

    ஒரு மரம், ஒரு மரம் கூடி

    பெரு வனம் ஆகின்றதே!

    ஒரு துளி, ஒரு துளி சிந்தனை;

    சேர்ந்து படைப்பை படைக்கின்றதே.

    விதைதான் விருட்சம்,

    வியர்வைதான் வெற்றி,

    விடியல் தான் துவக்கம்.

    விதைக்குள் விந்தையடா!

    விடியலின் வித்தையடா!

    விசித்திர உலகமடா!

    இது தான் விடுதலை முழக்கமடா.

    விதைக்குள் விருட்சம்,

    விடியலில் உண்டு வெளிச்சம்,

    விடுதலையில் உண்டு சுபிச்சம்;

    துளிகளின் பெருக்கம் நீரோட்டம்;

    துணிந்தே செயல்படு,

    குனிவெதற்கு.

    பனியின் துகள்கள், படரும் குளிர்கள்,

    பகையுடன் தொடரும்

    குரோதம்,

    விளக்கும் ஒரு பொறிதான், வெளிச்சத்தை உமிழும் வரைதான்.

    விதை விதைத்திடு, விடியலைத்தேடிடு,

    விதைக்குள் உண்டு மரம்,

    உன் விடியலுக்குத்தேவை

    தினம் உழைப்பு.

    2. நான் நான் தான் நீ நீயா

    நான் நானா; நீ நியா;

    நினைத்து விடு மனமே;

    நீண்ட பயணத்தில்

    நீ கண்டது என்ன;

    நின்ற உடலில் நீ செய்த மாயை என்ன

    நினைத்து பாராயோ;

    உனக்குள் நின்றேன்; உனக்காக படைத்தேன்;

    உன்னில் உள்ளேன்;

    வந்த முழக்கமே நான்;

    வலைந்த வானவில்லே நான்;

    வெடித்து சிதறிய எரிமலை நான்;

    வந்த தாகமே நான்; வதைத்த பிறவியே நான்;

    வந்த உறவே நான்;

    மாண்ட உடலில் நான்;

    மறைந்த மண்ணுக்குள் நான்;

    அணுவையும் துளைத்தவன் நான்;

    ஆயிரம் அண்டங்களை ஓடவிட்டு,

    அசைவாய் நின்றவன் நான்;

    உருண்ட அண்டங்கள்

    உடைந்திடாது உருட்டுபவனும் நானே;

    புல் பூண்டும் நானே; புழு பூச்சி பறவையும் நானே;

    மரம் செடி கொடியும் நானே;

    மக்கிடும் குப்பையும் நானே ;

    மண்ணிடும் விலங்கும் நானே; மண்ணும் நானே;

    மண்ணில் பிறந்து மடியும் ஜீவனும் நானே;

    புதைந்திட்ட ரகசியமும் நானே;

    விரைந்திட்ட மேகமும் நானே;

    வந்திட்ட மோகமும் நானே;

    தவித்திட்ட தாகமும் நானே;

    இயங்கும் கோள்கள் அனைத்திலும் நானே;

    ஏங்கும் எண்ணங்களும் ;

    எடுத்த செயலும் நானே; விடுத்த விசையும் நானே;

    தடுத்த பகையும் நானே; தடுமாறிய மனமும் நானே;

    கண்ட புதுமையும் நானே;

    விதைத்த விதையின் வித்தும் நானே;

    முளைத்த பயிரும் நானே;

    முழு நிலவின் வடிவும் நானே;

    Enjoying the preview?
    Page 1 of 1