Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamizhiyal Katturaigal
Tamizhiyal Katturaigal
Tamizhiyal Katturaigal
Ebook126 pages46 minutes

Tamizhiyal Katturaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம் வயது முதல் தற்போது வரை மாத்தமிழை மனதார நேசிக்கிறேன் என்பதை விட சுவாசிக்கின்றேன் என்பதே பேருண்மை. என் உயிரினும் மேலான உயர்தமிழை பேசுவதையும் எழுதுவதையும் என் பிறவிப்பயனாகவே கருதுகின்றேன். எட்டாம் வகுப்பு பயிலும் போதே செந்தமிழ் இலக்கிய மன்றத்தை கடலூரில் ஏற்படுத்தி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்த நாள் முதலாய் இன்று வரை என் தூயத்தமிழ் பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி அதே உற்சாகமுடன் தமிழ்மொழி வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகின்றேன். தற்போது தமிழியல் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இந்நூலை அக மகிழ்வுடன் வெளியிடும் பெறுமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய உயர்திரு. ராஜேஷ் அவர்களுக்கும், அவர்தம் நிறுவனத்திற்கும் பணிவான நன்றிகள்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580150207820
Tamizhiyal Katturaigal

Read more from Kavingar. Seenu Senthamarai

Related to Tamizhiyal Katturaigal

Related ebooks

Reviews for Tamizhiyal Katturaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamizhiyal Katturaigal - Kavingar. Seenu Senthamarai

    https://www.pustaka.co.in

    தமிழியல் கட்டுரைகள்

    Tamizhiyal Katturaigal

    Author:

    கவிஞர். சீனு செந்தாமரை

    Kavingar Seenu Senthamarai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-seenu-senthamarai

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    செவ்வியல் இலக்கியங்களில் இயற்கை சக்திகள் ஆய்வுக்கட்டுரை

    கவியரசு கண்ணதாசன் திரை இசை பாடல்களில் இலக்கிய ஆளுமை…

    அற இலக்கியங்களில் கல்விக் கோட்பாடு

    இலக்கியம் தரும் இன்பம்

    அன்புத்தமிழ் நெஞ்சங்களுக்கு,

    பணிவான வணக்கம்.

    இளம் வயது முதல் தற்போது வரை மாத்தமிழை மனதார நேசிக்கிறேன் என்பதை விட சுவாசிக்கின்றேன் என்பதே பேருண்மை.

    என் உயிரினும் மேலான உயர்தமிழை பேசுவதையும் எழுதுவதையும் என் பிறவிப்பயனாகவே கருதுகின்றேன். எட்டாம் வகுப்பு பயிலும் போதே செந்தமிழ் இலக்கிய மன்றத்தை கடலூரில் ஏற்படுத்தி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்த நாள் முதலாய் இன்று வரை என் தூயத்தமிழ் பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி அதே உற்சாகமுடன் தமிழ்மொழி வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகின்றேன். தற்போது தமிழியல் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இந்நூலை அக மகிழ்வுடன் வெளியிடும் பெறுமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய உயர்திரு. ராஜேஷ் அவர்களுக்கும், அவர்தம் நிறுவனத்திற்கும் பணிவான நன்றிகள்.

    இப்படிக்கு,

    தங்கள் அன்புள்ள,

    சீனு.செந்தாமரை

    முகவரி

    82, குமரக்கோயில் தெரு,

    கடலூர் துறைமுகம். 607003.

    கைபேசி - 9488946078.

    செவ்வியல் இலக்கியங்களில் இயற்கை சக்திகள் ஆய்வுக்கட்டுரை

    முன்னுரை

    உலகம் உருவான நாள் முதலாய் இயற்கை சக்திகள் உலாவரத் தொடங்கிவிட்டன. இந்த இயற்கை சக்திகள் தாமே தோன்றியதோ அல்லது தோற்றுவிக்கப்பட்டதோ என்ற கருத்து ஆய்வுக்குரியதாக இன்றும் உள்ளது.

    சமயங்கள் தோன்றி வளர்ந்த போது சமய நம்பிக்கைகள் வழி நடத்த அவரவர் சமயங்களுக்கு ஏற்ப உலக இயற்கை சக்திகள் உருவாக்கப்பட்டதாக செய்திகளை உலவ விட்டனர். இயற்கை சக்திகளையே கடவுளாக வழிபடத் தொடங்கினார். காலப்போக்கில் மொழிகள் தோன்றியது மாறிவரும் நாகரிகத்திற்கு ஏற்ப இலக்கிய இலக்கணங்கள் எழுதப்பெற்றன. மிக மிகத் தொன்மையான செவ்வியல் இலக்கியங்களில் இயற்கை சக்திகள் எவ்வாறு ஆளுமைப் பண்பைப் பெற்றுள்ளன என்பதை அவ்விலக்கியங்களை முழுமையாக ஆய்வு செய்யும் முகத்தான் உரிய விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

    இயற்கை சக்திகள் மனித வாழ்வியலோடு பிண்ணி பிணைந்தும். இயற்கை சக்திகள் இன்றேல் மனித வாழ்வே இல்லை. ஏன் எந்த உயிரினமும் இல்லை. எந்த வித்தும் இல்லை. எந்த விருட்சமும் இல்லை. எல்லாமே இயல்பாக நடைபெற இயற்கை சக்திகள் எல்லை மீறக் கூடாது என்பதற்காக மனித இனம் அச்சப்படுகின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ள அவற்றையே கடவுளாகவே பாவித்து வழிபடுகின்ற மரபு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது.

    முன்னை பழமைக்கும் பழமையாகவும், பின்னை புதுமைக்கு புதுமையாகவும் உள்ள செம்மொழியாம் செந்தமிழில் இறவா இலக்கியங்கள் எண்ணில் அடங்கா. அமுதத்தமிழ் மணம் வீசும் செவ்வியல் இலக்கியங்களில் இயற்கை சக்திகளை இனி காண்போம்.

    நீர்ப்பொருளைப் பேசும் நிகரற்ற இலக்கியங்கள்...

    திண்பொருள் (Solid) நீர்ப்பொருள் (Liquid) ஆவிப்பொருள் (Gas) என்று பிரித்தாலும் திண் பொருளுக்கும் ஆவிப்பொருளுக்கும் இல்லாத சிறப்பு இயல்புகள் நீர்ப்பொருளுக்கு உண்டு.

    நீர்ப்பொருளின் சுருங்கா இயல்பை கண்டறிந்தவர் பாஸ்கல்

    நம் ஒளவையார் தம் அமுதத்தமிழ் பாவில்

    "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல்நீர்

    நாழி முகவாது நால் நாழி – தோழி

    நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்

    விதியின் பயனே"

    ஆழ்கடல் நீர், ஆழ அமுக்கி முகக்கினும் என்ற தொடர்கள் ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் அதிகமாகிறது என்ற அறிவியல் உண்மையை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே மொழிந்தவர் ஒளவையார்.

    அணுவை துளைக்க முடியும் என்ற உண்மையை கூறிய அறிவியல் பார்வைகள் கொண்ட ஒளவை நீர்ப்பொருளைப் பற்றி நிறையவே எழுதி உள்ளார். தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்த கலிலியோவை இன்று உலகம் கொண்டாடுகிறது.

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கபிலர், திருக்குறளை, திருவள்ளுவரைப் போற்றும் வகையில் ஒரு பாடலை எழுதி உள்ளார் அப்பாடலில் தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் என்று சிறு நீர் துளிக்குள் நெடுதுயர்ந்து திகழும் பனைமரத்தின் முழு உருவமும் அருமையாக அந்த சிறிய நீர்த் துளிக்குள் தெரியும் அழகைப் போன் வள்ளுவரின் குறள் பெருமைக்கு உவமையாக கூறும்.

    கபிலர் சிறுதுளிக்குள் ஒரு பெரிய பனைமரத்தை காணுகின்றார். கபிலரின் அறிவியல் பார்வையை கலிலியோவுக்கு முன்பே உலகிற்கு உணர்த்திவிட்டார் என்பது தானே உண்மை.

    "தினையளவு போதாச்சிறுபுல்நீர் நீண்ட

    பணையளவு காட்டும் படித்தால் – மனையள

    வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவர்செய்

    வெள்ளைக் குறட்பா விரி"

    (திருவள்ளுவ மாலை -கபிலர்)

    "பாலைவிரி மனங்கமழும் பைங்காய் வன்குலைத் தெங்கின்

    தாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப்பாய்ந்த

    வாளை புதை யச் சொரிந்த பழம் மிதப்ப தப்ப வண்பலவின்

    நீளமுதிர் கனிகிழிதேன் நீத்தத்தில் எழுந்துகளும்"

    என்ற சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் தோன்றிய ஆதனூரின் இயற்கை காட்சிகளில் ஒன்றை அழகுற கூறுகின்றார்.

    ஆற்றில் மதர்த்து துள்ளி நிற்கின்ற வரால் மீன்கள் தென்னை மரங்களின் தாள்களை வேகமாக முட்டுகின்றனவாம். அதனால் பழுத்து முதிர்ந்த தேங்காய்கள் மரங்களினின்று பொலபொல வென்று கொட்டுகின்றன. அவை கீழே விழும் போது நன்கு முற்றி உள்ள பலாப்பழங்களைத் தாக்க அவை உடைவதால் பலாப்பழச் சுளைகள் நசுங்கி, அவற்றின் சாறு ஆற்றின் நீரில் கலக்கின்றதாம். அந்தச் சுயைான தேனைக் குடித்துவிட்டுக் களிப்புடன் குதிக்கின்றனவாம். அந்த வரால் மீன்கள் வளமான இயற்கையின் எழில் நலம் சேர்ப்பது நீர்வளம் மட்டுந்தான்.

    வயலும் வயல் சார்ந்த மருத நிலமே மாண்பு நிறைந்து இருக்க நீராதாரம் இன்றியமையானதாக இருக்கிறது. மருத நிலமாகிய மன்னன். இயற்கை அளித்த நடன விருந்தை கண்டு மகிழ்ந்தான்.

    கோலமா மயில்கள் தான் அந்த நடன மாதர்கள் நடன அரங்கத்திற்கு ஒளியூட்டினவாம். அன்றலர்ந்த தாமரை மலர்கள் கரிய மேகங்கள் தாம் இடியோசையைத் தாளம் தவறாது மேளம் போல் ஒலித்து மருத நில இன்னிசை வழங்கினவாம். மருத நில மன்னனுடன் இந்த நடனக் காட்சியை குவளை மலர்களாகிய கண்கள் மன்னனின் குடிமக்களைப் போல் கண்டு மகிழ்ந்தனவாம்.

    வாவியின் மேற்பரப்பில் சிற்றலைகள் மெல்ல மெல்ல அசைந்து திரைச்சீலை போல் எழுந்தும், விழுந்தும் அழகூட்டியதாம் வெறும் இடியோசையாகிய மேளத்தின் ஓசை மட்டும் இருந்தால் போதுமா? கேட்போரைப் பிணிக்கும் யாழ் ஒலி வேண்டாமா? மணத்திற்காகவும் தேனுக்காவும் பல வண்ண மலர்களை நாடிப் பறந்து

    Enjoying the preview?
    Page 1 of 1