Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yasothara Kaaviyam
Yasothara Kaaviyam
Yasothara Kaaviyam
Ebook152 pages54 minutes

Yasothara Kaaviyam

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

யசோதார காவியத்தை எழுதிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. வடமொழியில் இந்நூல் பல ஆசிரியர்களால் பாடப்பட்டுள்ளது.

மகாபுராணம் என்பது சமண சமயத்தில் அறுபத்து மூவரையும் தீர்த்தங்கரர் இருபத்தி நால்வர், சக்ரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதிவாசுதேவர் ஒன்பது பேர் என்று சொல்வர்.

இந்த தொகை விரிவதால் அறுபத்து மூவர் ஆயினர். யசோதார காவியம் உத்தரபுராணத்தில் காணப்படும் ஒரு சார்பு நூலாகும். உத்தரபுராணத்தில் முதலாவதாகக் கொண்டு அரிபத்திரரின் வரலாற்றை பின்பற்றியும் வாதிராசர் என்பவர் யசோதார சரித்திரத்தை வடமொழியில் எழுதியுள்ளார்.

அதனுடைய தமிழ் ஆக்கமே இந்த யசோதர காவியமாகும். யசோதார காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனைகளும் சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலைத் தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206863
Yasothara Kaaviyam

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Yasothara Kaaviyam

Related ebooks

Reviews for Yasothara Kaaviyam

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yasothara Kaaviyam - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    யசோதர காவியம்

    Yasothara Kaaviyam

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதற் சருக்கம்

    இரண்டாவது சருக்கம்

    மூன்றாவது சருக்கம்

    நான்காம் சருக்கம்

    ஐந்தாவது சருக்கம்

    முன்னுரை

    தமிழ் சான்றோர்கள் தமிழ் இலக்கியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் வரையறுத்துள்ளனர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் அமைந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி போன்றவை ஐம்பெரும் காப்பியங்கள்

    இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் அது சிறுகாப்பியம் எனப்படும். அந்த வரிசையில் நாககுமார காவியம், யசோதார காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், சூளாமணி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்களும்.

    இவைகள் தவிர, பிற்காலங்களிலும் பல்வேறு பெரும் காவியங்களும் சிறு காப்பியங்களும் தமிழ் கவிஞர்களால் படைக்கப்பட்டன

    சமணர்கள் நாலடியார் போன்ற அறநூல் களையும் சூளாமணி, சீவக சிந்தாமணி போன்ற காவியங்களும், சின்னூல், நன்னூல் போன்ற இலக்கணங்களையும் படைத்தனர்.

    யசோதார காவியத்தை எழுதிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. வடமொழியில் இந்நூல் பல ஆசிரியர்களால் பாடப்பட்டுள்ளது.

    மகாபுராணம் என்பது சமண  சமயத்தில் அறுபத்து மூவரையும் தீர்த்தங்கரர் இருபத்தி நால்வர், சக்ரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதிவாசுதேவர் ஒன்பது பேர் என்று சொல்வர்.

    இந்த தொகை விரிவதால் அறுபத்து மூவர் ஆயினர். யசோதார காவியம் உத்தரபுராணத்தில் காணப்படும் ஒரு சார்பு நூலாகும். உத்தரபுராணத்தில் முதலாவதாகக் கொண்டு அரிபத்திரரின் வரலாற்றை பின்பற்றியும் வாதிராசர் என்பவர் யசோதார சரித்திரத்தை வடமொழியில் எழுதியுள்ளார்.

    அதனுடைய தமிழ் ஆக்கமே இந்த யசோதர காவியமாகும். யசோதார காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனைகளும் சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

    இந்த நூலைத் தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    யசோதர காவியம்

    காப்பு

    உலக மூன்று மொருங்குணர் கேவலத்

    தலகி லாத வனந்த குணக்கடல்

    விலகி வெவ்வினை வீடு விளைப்பதற்

    கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.

    மூன்று உலகங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை உணர்ந்து கொள்வதற்கு உரிய அளவில்லாத ஞானம் போன்ற குணங்கள் நிரம்பிய கடல் போன்ற அருகதேவன் திருவடியை வணங்கி வினைகள் நீங்கி வீடுபேறு பெறுவோமாக!

    பாயிரம்

    நாத னம்முனி சுவ்வத னல்கிய

    தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்

    ஏத மஃகி யசோதர னெய்திய

    தோத வுள்ள மொருப்படு கின்றதே.2

    நமக்கு தலைவனாகிய முனிவர்கள் சுவ்விரத தீர்த்தரர்கள் ஆவர். அவர் அருளிய குற்றமற்ற ஆகம உபதேசங்கள் நடைபெறும்போது யசோதரன் என்பவன் வினை சார்புகளை விட்டு வீடுபேறு அடைந்த நிகழ்ச்சியை உரைப்பதற்கு நெஞ்சம் விரும்புகிறது.

    அவையடக்கம்

    உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென

    எள்ளு கின்றன ரில்லை விளக்கினை

    உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்

    கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே3

    தீயின் உள்ளே நின்று இருக்கும் புகை ஒழுங்கு விளக்கில் உள்ள காரணத்தால் அந்த விளக்கை யாரும் இகழ்வது இல்லை. அதுபோல, இந்தப் பாட்டின் பொருளில் ஆராய்ந்து கொள்பவர்கள் நல்லதை மட்டும் ஏற்றுக் கொள்வர்.

    நூல் நுவல் பொருள்

    மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்

    பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்

    வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்

    தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே4

    தீ வினை வந்து வாசலை அடைத்து அருள் அறத்தைச் செய்வது, உடனே வீட்டு இன்பத்தை உண்டாக்கும் என்பதையும், உயிர்களுக்கு அச்சத்தை, தீவினையை உண்டாக்கும் என்பதையும் இந்நூல் உரைக்கின்றது.

    முதற் சருக்கம்

    நாட்டுச் சிறப்பு

    பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை

    நம்பு நீரணி நாடுள தூடுபோய்

    வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ

    திம்ப ரீடில தௌதய மென்பதே.5

    பொன் போன்ற நாவலந்தீவில் உள்ள பரத கண்டத்தில் சிறப்பித்து கூறப்படும் உயிர்கள் விரும்பும் நீர்வளம் மிகுந்த நாடு உள்ளது. சோலைகள் சூழ்ந்த வானத்தில் மேகங்கள் அடர்ந்த அந்த நாடு இம்மண்ணுலகில் சிறந்ததாகும்.

    நகரச் சிறப்பு

    திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்

    வசை யிலாநகர் வானவர் போகமஃ

    தசைவி லாவள காபுரி தானலால்

    இசைவி லாதவி ராசபு ரம்மதே.6

    திசைகள் எல்லாம் புகழும், செல்வமும் மிகுந்து இருப்பதால் தேவலோகத்தைப் போல விளங்கக் கூடிய அளகாபுரிக்கு இணையாக சொல்லப்படக் கூடிய நகரம் ராசமாபுரமாகும்.

    இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது

    மஞ்சு லாமதி சூடின மாளிகை

    அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்

    விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.7

    நகரின் மதில் வானம் வரை உயர்ந்தது. மேகங்கள் உலவும் மாளிகைகளும் அதில் அழகிய சொற்களை உடைய மகளிரும் ஆடல், பாடல் நடத்துகின்ற காட்சியைக் காணும்போது இது வித்யாதரர் உலகத்தைவிட மேம்பட்டதாகும்.

    அரசனியல்பு

    பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி

    பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை

    வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்

    மாரி தத்தனென் பானுளன் மன்னவன்8

    மண்ணில் மக்கள் நலத்தினை முன்பை விட ஒளிரச் செய்து விளங்கும் வெண்கொற்றக் குடையும் பொற்குடையும் கொண்டு மேகத்தைப் போல கொடையினைச் செய்யும் கரங்களைக் கொண்ட மாரி தத்தன் என்பவன் அங்கு மன்னனாக விளங்கு கின்றான்.

    அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்

    மருவு மானுயர் வானவர் போகமும்

    பொருவில் வீடு புணர்திற மும்மிவை

    தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.9

    அரசன் மாரிதத்தனுடன் அந்நகரத்து மக்கள் செல்வ களிப்பினாலும், தேவலோகத்திலும் கிடைக்கக் கூடிய இன்பமும், வீடுபேறுகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

    வேனில் வரவு

    நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை

    சரிந்த காதற் றடையில தாகவே

    வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்

    விரிந்த தின்னிள வேனிற் பருவமே.10

    அழகிய கூந்தலும், அணிகலனும் கொண்ட பெண்கள் காதல் இன்பம் தர வேந்தன் மாரி தத்தன் இன்பத்தில் மூழ்கிக் கிடக்க இளவேனிற் பருவம் வந்தது.

    சோலை நலம்

    கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன

    வாங்கு வாகை வளைத்தன சாமரை

    கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி

    பாங்கு வண்டொடு பாடின தேனினம்.11

    கோம்பு மரங்களும், வாகை மரங்களும் சாமரை போல பூத்துக் கிடந்தன. குயில் கூட்டமும் தேனுண்ட வண்டுகளும் இசை பாடியது.

    மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர

    தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்

    கலந்த காதன்மை காட்டுநர் போலவே

    வலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.12

    நீண்ட கொடிகளில் பூக்கள் பூத்தன. பெண்கள் அங்கு விளையாடி அமர்ந்தனர். மனதிற்கினிய காதலரைக் கூடி நலமுடன் இருப்பவரைப் போலவே அவரைக் கண்டு மாமரங்களும் தளிர்களை ஈன்றன.

    அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

    உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட

    வயந்த மன்னவன் வந்தன னென்றலும்

    நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்

    வயந்த மாடு வகையின ராயினர்13

    உயர்ந்த மரம் உள்ள சோலைகள் தளிரையும், பூக்களையும் பூத்தன. வசந்த காலமாகிய மன்னன் தென்றலுடன் வரும்போது வரவேற்ற மன்னர்களும், ராசமாபுரத்து மக்களும் வசந்த விழா கொண்டாடினர்.

    கானும் வாவியுங் காவு மடுத்துடன்

    வேனி லாடல் விரும்பிய போழ்தினில்

    மான யானைய மன்னவன் றன்னுழை

    ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.14

    யானைகளைக் கொண்ட மன்னனாக மாரி தத்தன் காடுகளில் சுற்றியும், சோலைகளில் தங்கியும் வேனில் விளையாட்டை விளையாடச் சென்றபோது

    Enjoying the preview?
    Page 1 of 1