Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soolamani Part – 2
Soolamani Part – 2
Soolamani Part – 2
Ebook424 pages2 hours

Soolamani Part – 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூளாமணி என்ற சொல் காப்பியத்தின் உயிர்ச்சொல்லாக அமைந்துள்ளதால் அதுவே பெயராக அமைந்து விட்டது என்று வரையறுக்கப்படுகிறது.

தமிழ் காப்பியங்களின் பெயரில் பல்வேறு அணிகலன்கள் அமைந்திருப்பது போல சிலப்பதிகாரம் காலில் அணியும் சிலம்பு பற்றியும், மணிமேகலை இடையில் அணியும் மேகலை பற்றியும், சீவக சிந்தாமணி நெஞ்சில் அணியும் சிந்தாமணி பற்றியும், குண்டலகேசி காதில் சூடும் குண்டலம் பற்றியும், வளையாபதி கைகளில் அணியும் வளையல்கள் பற்றியும் சொல்வது போல சூளாமணி திருமுடியில் அணியும் ஓர் அணிகலன் பற்றி உரைக்கிறது.

கற்றோர்கள் சீவகசிந்தாமணி கவிதை அழகுடையது என்றும், சூளாமணி ஓசை அழகுடையது என்றும் கம்பராமாயணம் இவை இரண்டும் கலந்தது என்றும் கூறுவர்.

மேலும், இந்த நூல் வித்யாதாரர் உலகத்தையும் மண்ணுலகத்தையும் நினைப்பது போல காவியத் தலைவன் திவிட்டன் மண்ணுலக மன்னன் மகன். காவியத் தலைவி சுயம்பிரபை வித்யாதாரர் மன்னனின் மகள்.

இக்காவியத்தில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமே சிறப்புடையது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதற்கு உவமையாக பொன்னில் பதிக்க வேண்டிய மாணிகத்தை ஈயத்தில் பதித்து வைத்தாலும் மாணிக்கம் மறுப்பதில்லை. அதுபோல, பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் எத்தகையது என்றாலும் மணப்பெண் ஏற்றுக் கொள்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இந்த நூலாசிரியர் 308வது பாடலில் தோலா நாவிற் சுச்சுதன் என்று தன் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் உளவியல் அறிவும், உலகியல் தெளிவும், அரசியல் ஞானமும் பெற்ற சமண சமயத் துறவியாவார்.

கார் வெட்டி அரசன் விஜயன் என்பவன் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அவன் வேண்டுகோளை ஏற்று எட்டு வகை சுவைகளும் உறுதிப்பொருள் நான்கும் உள்ள இந்த நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.

சூளாமணி என்னும் இந்தக் காப்பியம், நாட்டுச் சருக்கம் தொடங்கி முக்திச் சருக்கம் வரை 12 சருக்கங்களையும் 2130 பாக்களையும் கொண்டுள்ளது. இந்நூலில் இக்கால நடைமுறைக்கு உகந்தது போல பெரும்பான்மையான நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் உள்ளதால் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பயன் அடையத் தக்க நூலாக விளங்குகிறது.

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580144206860
Soolamani Part – 2

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Soolamani Part – 2

Related ebooks

Reviews for Soolamani Part – 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soolamani Part – 2 - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    சூளாமணி பாகம் - 2

    Soolamani Part – 2

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    9. கல்யாணச் சருக்கம் (தொடர்ச்சி)

    10. அரசியற் சருக்கம்

    11. சுயம்வர சருக்கம்

    12. துறவுச் சருக்கம்

    13. முக்திச் சருக்கம்

    9. கல்யாணச் சருக்கம் (தொடர்ச்சி)

    மாதவ சேனை சயம்பவையின் உருவத்தைத் தீட்டல்

    மற்றவர் காணும் போழ்தின் மாதவ சேனை யென்பாள்

    சுற்றிய பளிங்கிற் சோதிச் சுவர்மிசை யெரித்துத் தோன்ற

    இற்றிவ ளுருவ மென்றாங் கிதயத்து ளெழுதி வைத்துப்

    பிற்றையோர் பலகை தன்மேற் பெய்வளை யெழுத லுற்றாள்.1001

    அந்த மகளிர் சுயம்பிரபையை பார்க்கும்போது பளிங்குச் சுவரின் மீது அவர் உருவம் தோன்றியதாக மாதவ சேனை என்னும் தவ மகள் அவள் அழகை எண்ணி தன் உள்ளத்தில் அதில் ஓவியமாகத் தீட்டி பின்னர் ஒரு பலகையின் மீது அந்த உருவத்தைப் பொறிக்கத் தொடங்கினாள்.

    மாதவ சேனையின் கூற்று

    பண்களை மருட்டு மின்சொற் பாவையைப் பருக லுற்ற

    கண்களை மருள நீருங் கண்களெங் கண்க ளாகப்

    பெண்களை மருட்டுஞ் சாயற் பேதையைக் காண்மி னென்று

    மண்களை மருட்டுஞ் சீர்நும் மாமியா ரடிகள் சொன்னார்.1002

    சுயம்பிரபையையின் அழகை நுகர்ந்த மட்டில் வியக்கும்படி உமது கண்களை எமது கண்களாகக் கருதி சுயம்பிரபையை நான் கண்டது போல் காணுங்கள் என்று உங்கள் மாமியராகிய பெரியார் என்னிடம் கூறினார்.

    ஆதலா லவர்க்குச் சொல்லு

    மாற்றமொன் றருளிச் செய்மின்

    மாதுலாஞ் சாய லென்ன

    மாதவ சேனை யென்பாள்

    ஏதமாங் கில்லை யன்றே

    யெங்கண்முன் மொழிய வென்றாள்

    கோதிலாக் குணக்கொம் பன்னாள்

    குறுநகை முறுவல் கொண்டாள் 1003

    சுயம்பிரபை ஒரு வார்த்தை எமக்குக் கூறுங்கள். உமது மாமியாருக்கு நீங்கள் கூறும் வார்த்தையை எங்களுக்குச் சொல்வதால் குற்றமில்லை என்று மாதவ சேனை கூறவும் சுயம்பிரபை புன்னகைப் பூத்தாள்.

    அமிர்தமா பிரபையின் கூற்று

    அங்கவள் குறிப்பு நோக்கி யமிமுதமா பிரபை யென்னு

    மங்கலத் தோழி கூறு மாமியா ரடிக டம்மை

    எங்களின் செய்கை யதாக விணையடி பணிமி னென்றாள்

    செங்கனி கனிந்த செவ்வாய்ச் சிறுநுதற் பெரிய கண்ணாள்.1004

    அவன் கருத்தைக் குறிப்பால் உணர்ந்து அமிர்த பிரபை என்ற தோழி மாதவ சேனையிடம் எம்முடைய மாமியாரின் திருவடியை நாங்கள் பணிவது போல எம்பொருட்டுச் செய்யுங்கள் என்றான்.

    மாதவசேனை திரும்புதல்

    ஆங்கவண் மொழிந்த போழ்தி னணங்கினை வணங்கி மற்றத்

    தீங்கனி யமிர்த மன்ன திருமொழிப் பண்ணி காரம்

    வாங்குநீ ருலகங் காக்கு மன்னவன் பட்டத் தேவி

    ஓங்கிருங் கற்பி னாளுக் குய்ப்பளென் றுணர்த்திப் போந்தாள்.1005

    அமிர்தபிரபை சொன்னவுடன் மாதவ சேனை அவளைத் தொழுது கற்பகக் கனியையும், அமிர்தத்தை போன்ற திருமொழி என்னும் திண்பண்டத்தை அரசியான கோப்பெருந்தேவியிடம் சேர்த்ததாக அறிவித்துச் சென்றாள்.

    பளிங்கியல் பலகை தன்மேற்

    பாவைய துருவந் தான்முன்

    றெளிந்தவா றெழுதிக் கொண்டு

    செந்துகி லுறையின் மூடி

    வளந்தரு கோயின் முன்னி

    மணிவண்ணற் பயந்த தேவி?

    அளந்தறி வரிய கற்பி

    னமிர்தனா ளருகு சேர்ந்தாள்.1006

    மாதவ சேனை தன் உள்ளத்தில் உள்ள ஓவியத்தை எடுத்துக் கொண்டு அரண்மனையை அடைந்து கற்புடையவளும், அமிர்தம், போன்ற வளும், திவிட்ட நம்பின் தாயுமான சசி தேவியை அடைந்தாள்.

    மாதவசேனை தான் வரைந்த ஓவியத்தைக் காட்டலும் திவிட்டன்தாயின் மகிழ்ச்சியும்

    மையகத் தலர்ந்த வாட்கண் மாதவ சேனை சென்று

    வையகத் தரசன் றேவி மலரடி வணங்க லோடும்

    மெய்யகத் துவகை கூர விரும்பித்தன் னருகு கூவிக்

    கையகத் திதுவென் னென்னக் கன்னிய துருவ மென்றாள் 1007

    மாதவ சேனை அரசியை வணங்கியவுடன் அவள் மகிழ்ச்சி அடைந்து மாதவ சேனை கையில் உள்ள பொருள் என்னவென்று கேட்க அவள் சுயம்பிரபையின் உருவம் தீட்டிய ஓவியப் பலகை என்றாள்.

    அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த

    மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து

    பணிவரும் பலகை தன்மேற் பாவையைக் காண்டு மென்றாள்

    துணிவரும் பவழத் துண்டந் துடிக்கின்ற தனைய வாயாள் 1008

    அரசி அழகின் உருவமாகத் திகழும் சுயம் பிரபையைக் கண்டு முத்தும், பவழமும் போன்ற பற்களையும் சிவந்த வாயை உடைய மாதவ சேனைக்கு உயரிய அணிகலன்களைப் பரிசாக தந்து சுயம்பிரபையின் உருவத்தை யாம் கண்டோம் என்றாள்.

    மணிதெளித் தமைக்கப் பட்ட

    வண்ணமே வண்ண மாகத்

    துணியமுன் கலந்து செய்த

    துகிலிகைத் தொழில்க ணோக்கி

    அணியின தொளிக ளோவிவ்

    வணங்கின துருவ மோவிக்

    கணிநலங் கருத லாகாக்

    கண்கவர் சோதி யென்றாள் 1009

    ஒன்பது மணிகளின் நிறங்களை ஆராய்ந்து அவ் ஓவியத்திற்கு நிறமாக அமையும்படி தூரிகை கோல்களைக் கொண்டு கண்ணைக் கவரும் சுயம் பிரபையின் அணிகலன்களாக அதில் செய்வித்தாள்.

    பழுதிய லிலாத பாவை யுருவமோர் படியி னாலும்

    எழுதுதற் கரிதி யார்க்கு மிலங்கொளி யுருவ மேனி

    மொழிதலுக் கரிதா லத்தை முருகுவேய் குழலி மற்றுன்

    றொழுதகை யருளி னன்றே துணிந்தியா னெழுதிற் றென்றாள்.1010

    சுயம்பிரபையின் உருவத்தை எந்த ஓவியமும் இவ்வாறு எழுதவியலாது என்பது போல அவள் மேனியின் நலத்தை வரைந்ததை யாராலும் சொல்லிக் காட்ட இயலாது. அத்தகைய உருவத்தைக் கண்ட அரசி அவள் வரைந்த ஓவியத்தின் திறனை வியந்தாள்.

    சயம்பவையின் குறிப்பை மாதவசேனை தெரிவிக்கத் திவிட்டன் தாய் மகிழ்தல்

    அல்லது மடந்தை தோழி

    யவளது முகத்தி னாலோர்

    சில்லணி மழலைச் செவ்வாய்த்

    திருமொழி பிறந்த துண்டு

    வல்லிதன் மொழிபோய் நீரெம்

    மாமியா ரடிகட் கெம்வாய்

    எல்லையில் கிழமை தன்னா

    லிறைஞ்சுக வென்ப தென்றாள்.

    சுயம்பிரபையின் தோழியாகிய அமிர்த பிரபை வாயில் சிறந்த மொழியொன்று தோன்றி நீங்கள் சென்று எம் மாமியாராகிய பெரியவருக்கு எம்பொருட்டு தொடக்கிடுவீர் என்று மாத சேனை விரும்பினாள்.

    என்றவண் மொழிந்த போழ்தி னிலங்கொளிப் பலகை தன்மேல்

    மின்றவழ் மேனி யாளை மென்பணைத் தோளிற் புல்லி

    இன்றினி தாகு மன்றே யிருந்தவப் பயங்க ணம்பால்

    ஒன்றின விளைந்த வென்றாங் கொளியினாற் புதிய ளானாள்.1012

    மாதவ சேனை இவ்வாறு கூறியவுடன் அரசி சுயம்பிரபையின் ஓவியத்தைத் தன் தோளில் போர்த்திக் கொண்டு என்னுடைய விரதத்தின் பலன் எல்லாம் ஒன்றாகத் தோன்றியதோ? இது நன்மை மிக்க நன்னாள் என்று மகிழ்ந்தாள்.

    திவிட்டன் தாய் அவ்வோவியத்தைத் தன்மகனுக்குக் காட்டும்படி மாதவசேனையை ஏவலும் அவள் செயலும்

    போதவி ழலரி நாறும் புரிகுழ லுருவப் பாவை

    சோதிசூழ் வடிவு நம்பி சுடர்மணி வண்ணண் காண

    மாதவ சேனை காட்ட வல்லையோ வென்ன வையற்

    கோதுவ திவணை யன்றே யடிகள்யா முணரி னென்றாள் 1013

    சுயம்பிரபையின் ஓவிய உருவத்தை திவிட்டன் காணும்படி மாதவ சேனையே நீ அவளுக்குக் காட்டுக என்று கூறவும் அவ்வாறே செய்வோம் என்று மாதவ சேனை உரைத்தாள்.

    மற்றவ டொழுது போகி

    மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற்

    சுற்றிநின் றெரியுஞ் செம்பொற்

    சுடர்மணி வாயி னண்ணி

    இற்றென விசைத்துப் புக்காங்

    கிளையவன் கழல்கை கூப்ப

    எற்றுநீ வந்த தென்றாற்

    கிதுவெனா வெடுத்துச் சொன்னாள்.1014

    மாதவ சேனை திவிட்டன் உறையும் அரண் மனையை அடைந்து காவலர்களிடம் அனுமதி பெற்று திவிட்ட நம்பியை வணங்கியவளாக தான் வந்த காரியத்தை எடுத்துக் கூறினாள்.

    அருங்கல முலகின் மிக்க

    வரசர்க்கே யுரிய வன்றிப்

    பெருங்கல முடைய ரேனும்

    பிறர்க்கவை பேச லாகா

    இருங்கலி முழவுத் தோளா

    யெரிமணிப் பலகை மேலோர்

    நெருங்கொளி யுருவங் கொண்டு

    நின்னையா னினைந்து வந்தேன் 1015

    செல்வந்தராயினும் அரசர் அல்லாத மற்றவர்களுக்கு உரிமையாகமாட்டாது, நம்பியே நீ காண வேண்டிய அருங்கலம் போன்ற ஓவியத்தை உன்னிடம் காட்டுவதற்காகக் கொண்டு வந்துள்ளேன்.

    ஓவியத்தைக் கண்ணுற்ற திவிட்டன் செயல்

    அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி

    மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக்

    கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட

    மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான்.1016

    மாதவ சேனை திவிட்டனிடம் அருகில் இருந்தவர்களை அகன்று செல்லுமாறு கூறிப் பளிங்குப் பலகையின் மீது வரையப்பட்ட சுயம் பிரபையின் உருவத்தைக் காட்ட அது அவளின் ஓவியம் என்று அறியாதவனாக மறுக்கையுடன் திவிட்டன் நின்றான்.

    திவிட்டன் வினாவும் மாதவ சேனையின் மறுமொழியும்

    வானவர் மகள்கொல் விஞ்சை

    மாதுகொள் மண்ணு ளாள்கொல்

    தேனிவர் குழலி மற்றித் திருநுதன்

    மடந்தை யென்ன

    மானிவர் நோக்கி யன்னோர்

    மகளல்லண் மற்று நின்ற

    ஊனிவ ரலங்கல் வேலோ

    யுய்த்துணர்ந் தருளு கென்றாள் 1017

    இவள் தேவன் மகளோ? பிச்சாதாரன் மகளோ? மண்ணுலக மகளோ? என்று அவன் வினவ மாதவசேனையும் இவள் நீ கூறிய யார் மகளும் அல்ல. என் மகள் என்று ஆராய்ந்து உணர்க என்று கூறினாள்.

    திவிட்டன் சயம்பவை என அறிதல்

    மண்மிசை மகளி ரின்ன

    வடிவுடை யவர்க் ளில்லை

    விண்மிசை மடந்தை யல்ல

    ளாய்விடின் விஞ்சை வேந்தன்

    கண்மிசை நவிலுங் காதற்

    கன்னிய துருவ மாமென்

    றெண்மிசை யிவரும் போழ்தி

    னிதுவென வவளுஞ் சொன்னாள் 1018

    மானிட மகளிரில் இவள் போல் யாரும் இல்லை. இவள் சதி மன்னன் மகளான சுயம்பிரபை உருவம் என்று மாதவ சேனை கூறினாள்.

    திவிட்டன் காதல் நோயுற்றமை

    கன்னிய துருவங் காளை காண்டலுங் கேடில் காமன்

    பொன்னியல் கழலன் றாரன் பூட்டிய சிலைய னாகி

    மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித்

    துன்னிய பொழுது நோக்கிச் சுடுசரந் தொடுக்க லுற்றான்.1019

    அந்த உருவத்தைக் கண்ட திவிட்ட காம வேள் என்பான் வில்லை எடுத்து கரும்பு வில்லின் மலர் கணைகளைப் பொருத்தி தன் செயலுக்கு ஏற்ற காலத்தைப் பார்த்து அம்புகளை ஏவினான்.

    மண்ணியல் வளாக மெல்லா

    மகிழ்ந்துடன் வணங்கும் போழ்தும்

    உண்ணனி மகிழ்தல் செல்லா

    வொளியுடை யுருவக் காளை

    கண்ணியற் காத லாடன்

    கண்ணின் னுருவங் கண்டே

    வெண்ணெயின் குன்றந் தீயால்

    வெதும்புகின் றதனோ டொத்தான்.1020

    உலகம் அனைத்தும் உவகையுடன் தன்னடியில் விழும்படி உருவம் உடைய தெவிட்டன் சுயம் பிரபையின் உருவத்தைக் கண்டு நெருப்பில் இட்ட வெண்ணை போல உள்ளம் உருகினான்.

    மாகத்து மதிய மன்ன வாணுதன் மடந்தை தன்னை

    ஆகத்து ளடக்கிப் பின்னு மணிநுத லழகு நோக்கி

    நாகத்தை நடுக்கு மல்கு னங்கைதன் றிறத்துக் காம

    வேகத்தை மெல்ல மெல்ல வில்வலான் பெருக்கி யிட்டான்.1021

    சுயம்பிரபையின் ஓவியத்தைத் தன் மார்பில் வைத்து பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய சுயம்பிரபையின் மேல் இருந்த காம நோயின் கொடுமையைத் திவிட்டன் படிப்படியாக அதிக மாகும்படி செய்து கொண்டான்.

    குழலையான் றிருத்திக் கோதை

    சூட்டுவன் குறிப்புண் டாயின்

    மழலைவாய் திறந்தோர் மாற்ற

    மருளுக மடந்தை யென்னும்

    நிழலவாம் பகழி போலு நெடுங்கணோக்

    கென்னும் வெய்ய

    அழலினா லளிய னாவி

    யடுவதோ வழகி தென்னும் 1022

    சுயம்பிரபையே உன் அழகிய வாய் மலர்ந்து ஒரு வார்த்தை இயம்புக என்று இறங்கி நின்றான். உயிரைக் குடிக்கும் அம்பு போன்ற கொடிய கண்களின் பார்வை தன்னைக் கொல்வதா? என்று எண்ணினான்.

    சீறடிப் பரடு தோயுஞ் சிலம்பிணை

    திருந்த வைப்பன்

    வீறுடை நங்கை யென்றன் கவான்மிசை

    யிருத்தி யென்னும்

    சேறுடைக் கோதை மேலாற்

    சிறந்துவார் கூந்தல் கையால்

    வேறிடத் துருவல் செய்ய

    விரும்பிய மனத்த னானான்.1023

    சுயம்பிரபையே என் தொடை மீது அமர்க. உன் சிலம்புகளைத் திருத்தமுறச் செய்வேன். மலர் மாலைகளால் சிறப்புற்று அளகக் கற்றையைத் தொட்டு விரும்பும் நெஞ்சுடையவன் ஆகினான்.

    அந்துகி லசைத்த தோர்கை யவிழ்ந்தசை கின்ற தென்னும்

    பைந்தளிர் மேனி தன்மேற் பன்மணிக் கலங்க டீண்டு?ம்

    செந்தளிர் புரையு மேனிச் சேயிழை திறத்திற் காம

    வெந்தழல் கனல மூட்டி வில்வலான் மெலிய லுற்றான்1024

    கட்டப்பட்ட சேலை ஒரு புறம் நெகிழ்ந்துள்ளது என்பான். அதிலும் உள்ள அணி கலன்களைக் கையால் தொடுவான். சுயம் பிரபையின் காரணமாக காம நெருப்பு எரியும்படி திவிட்டன் வருந்தினான்.

    சூரியாத்தமன வருணனை

    வாளையா நெடுங்க ணல்லாண்

    மணவினை தொடங்குங் கால

    நாளையா னமர்க ளோடு

    சூழ்ந்துவந் தறிவ லென்று

    காளைபாற் பட்டு வெய்யோன்

    குடதிசைக் கனபொற் குன்றிற்

    சூளிவா யருவி மாலைச் சுடர்முடிச்

    சென்னி சேர்ந்தான்.1025

    சுயம்பிரபையின் திருமணச் சடங்கு தொடங்கும் காலம் நாளையே என்பதால் அதை கண்டு மகிழ்வேன் என்று நினைத்து வருந்தும் திவிட்டன் பக்கத்தில் கதிரவன் பொன் மலையில் உள்ள சிகரத்தில் தன் தலையைத் தூக்கினான்

    விண்ணிய லுருவ வீதி மேனின்று

    மிழிந் வெய்யோன்

    கண்ணியல் விலங்க னெற்றி

    கதிரென்னுங் கையி னூன்றி

    மண்ணியன் மரத்தின் சாகை

    நுதிபிடித் தவையும் விட்டுப்

    பண்ணியல் பிறிதொன் றாகிப்

    பையவே மறைந்து போனான் 1026

    கதிரவன் அர்த்தகிரியின் நெற்றியின் மீது தன் கைகளை ஊன்றிக் கொண்டு மரக்கிளையின் நுனிகளைப் பற்றினான்.

    வெய்யவ னென்னுஞ் செந்தீச் சுடரினால் வெதும்பப் பட்டு

    மையொளி பரந்த போன்று கருகின திசைகண் மற்று

    மொய்யழல் மேல விழ்ந்த தழன்மீள மூள்வ தேபோற்

    செய்யதோ ருருவ மேல்பாற் றிசைமுகஞ் சிறந்த தன்றே. 1027

    கதிரவன் என்னும் நெருப்புப் பிழம்பால் திக்குகள் எல்லாம் அவன் மறையும்போது மறைந்தன. அவை மீண்டும் எழுந்தது போல மேற்குத் திசையில் ஒரு உருவம் சிறப்புடன் தோன்றியது.

    மாலைக்கால வருணனை

    கள்ளுலாங் கழனி நீத்துக்

    கருங்கயல் கவுளுட் கொண்டு

    புள்ளெலாங் குடம்பை சேர்ந்து

    பார்ப்பினம் புறந்தந் தோம்பி

    உள்ளுலா வுவகை கூரத்

    துணைபுணர்ந் தொலித்து வைக

    வள்ளலார் மனத்துக் கெஃகாய்

    மாலைவந் திறுத்த தன்றே 1028

    வயல்களில் குஞ்சுகளின் பொருட்டு கயல் மீன்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டு பறவைகள் கூடுகளில் தன் குஞ்சுகளைப் பாதுகாப்புச் செய்து தன் காதல் புதையுடன் புணர்ந்து ஆரவாரத்துடன் இருக்க திவிட்டன் நம்பியின் உள்ளம் புண்படும் மாலைக் காலம் வந்தது.

    காதலா ரகன்ற போழ்திற்

    கற்புடை மகளிர் போலப்

    போதலொங் குவிந்த பொய்கைத்

    தாமரை பொலிவு நீங்க

    மீதுலாந் திகிரி வெய்யோன்

    மறைதலுஞ் சிறுவெள் ளாம்பல்

    தாதலொ மலர நக்குத்

    தம்மையே மிகுத்த வன்றே 1029

    கதிரவன் மறைந்தவுடன் அவள் பிரிவை தாங்க முடியாமல் தாமரை மலர்கள் அழகிழந்து கற்புடைய மகளிரைப் போன்று இதழ்கள் கூம்பியும் ஆம்பல் மலர்கள் தம்மை தாமே மிகைப்படுத்திக் காட்டின

    செய்யொளிச் செக்க ரென்னுஞ்

    செம்புனல் பரந்து தேறி

    வெய்யொளி நிறைந்த நீல

    விசும்பென்னு மணிகொள் பொய்கை

    மையிரு ளென்னுஞ் சேற்றுள்

    வளர்திங்கட் கதிர்க ளென்னு

    மொய்யிளங் கமல நாள

    வளையங்கண் முளைத்த வன்றே 1030

    சிவந்த வானம் என்னும் புதுப்புனல் பரவ  பொய்கையில் உள்ள இருள் நிலவின் சுடர்களால் இளமையுடைய தாமரையின் தாள்களை உடைய சுருள்கள் முறைத்தன.

    அங்கொளி விசும்பிற் றோன்றி யந்திவா னகட்டுக் கொண்ட

    திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதி ரமிழ்த மாந்தித்

    தங்கொளி விரிந்த வாம்ப றாமரை குவிந்த வாங்கே

    எங்குள ருலகுக்கெல்லாம் மொருவரா யினிய நீரார்1031

    வானத்தின் இடையே இருக்கும் பிறை நிலவின் இனிய ஒளியின் புன்முறுவலைக் கண்டு ஆம்பல் மலர்கள் தன் ஒளியை விரிக்க தாமரை மலர்கள் கூம்பிய தன்மை உடையதாக உள்ளன.

    மணவாய மல்லிகையின் மதுநனைந்து

    வண்கனிகண் மதர்ப்ப வீசி

    இணர்வாய வனமுல்லை யிதழ்வாரி

    யிளந்திங்கட் கதிர்கா லூன்றித்

    துணைவாய சுரும்பிரங்க வரவிந்த

    வனத்துதிர்ந்த துகளுஞ் சீத்துத்

    திணைவாய கருங்குவளை திளைத்தசைக்குந்

    தென்றலுமொன் றுடைத்தே மாலை 1032

    மல்லிகை மலர் தேனுடன் இருக்க காற்று முல்லை மலர்களின் இதழை அள்ளிக் கொண்டு பிறை நிலவில் பொருந்தி பெட்டையுடன் வண்டுகள் பாட தாமரைக் காட்டில் உதிர்ந்த பூந்துகள்களை வாரிக் கொண்டு நீலோத்பல மலர்கள் இடையே இயங்குகின்ற தென்றல் வீசும் மாலை நேரம் வந்தது.

    மைபருகு நெடுங்கண்ணார் மணிமாட

    மிசையிட்ட வளைவாய்ப் பாண்டில்

    நெய்பருகு கொழுஞ்சுடரி னகிலாவி

    யிடைநுழைந்து நிழல்கால் சீப்பப்

    பைபருகு மணியுமிழ்ந்து பணநாக

    மிரைதேரும் பருவ மாலை

    கைபெருகு காமநோ யுடையவர்க்கோர்

    கனல்போல வருமே காணில்.1033

    படம் எடுக்கும் பாம்பு தன் இரைகளை தேடும் இந்த மாலைக் காலத்தில் அழகிய கண்ணுடைய மகளிர் மேனிலை மாடங்களில் ஏற்றப்பட்ட அகல்களில் உள்ள நெய்யை உண்டு விளக்குகள் ஒளி வீச அகிற்புகை பரவ காமப்பிணி வந்தவர்களுக்கு அந்த விளக்கு ஒளி நெருப்புப் போல சுட்டது.

    கணிமிடற்ற நறவேங்கை யவிர்சுணங்கின்

    மடவார்தங் கைமேற் கொண்டு

    பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின்

    செவ்வழியி னிசைமேற் பாட

    மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற்

    கபோதங்கண் மதலை தோறு

    மணிமிடற்றி னாலகவ வனங்கனையு

    மனல்விக்கு மளிய மாலை1034

    வேங்கை மலர் போன்ற பொன்னிறமான மகளிர் அணிகலன்களை உடைய பச்சைக் கிளிகள் போல இசை பாடி நீல மணி போல கழுத்து உடையதும் சிவந்த கண்களும் பவழம் போன்ற கால்களும் ஆகிய புறவுகள் மாடங்கள் தோறும் அகவவும் மாலை நேரத்தில் காம வெப்பம் மிகுந்தது.

    சயம்பவை சினாலயத்தை அடைதல்

    வெஞ்சுடர்வே லிளையவனாங் கினையனவின்

    மெலிவெய்த விசும்பு செல்லும்

    விஞ்சையரை யன்மடமா மகணிலையா

    தனெவினவில் விளம்பக் கேண்மின்

    பஞ்சிலங்கு தேரல்குற் பாடகக்காற்

    பாவையர்கள் பலர்பா ராட்டச்

    செஞ்சுடரோன் மழைபொழுதிற் சினவரன்றன்

    றிருக்கோயில் சென்று சார்ந்தாள் 1035

    சதி மன்னன் மகளான சுயம்பிரபை தேர்த் தட்டை போன்ற அல்குலையும் சிறிய அடியை உடைய மகளிர் பாராட்ட மாலை நேரத்தில் அருகன் கோயிலை அடைந்தாள்.

    சயம்பவையின் வழிபாடு

    திண்ணிலைய மணிக்கதவந் தாழ்திறந்து

    திருவிளக்குத் திகழ மாட்டி

    விண்ணியல நறும்புகையுங் காழகிலும்

    விசும்பிவர்ந்து விம்ம மூட்டிக்

    கண்ணியுடன் வெறிமலரு நறும்பொடியுங்

    கமழ்சாந்துங் கையி னேந்திப்

    பண்ணியல நரம்பிசைமேற் பரமனையே

    பணிமொழியாள் பரவா நின்றாள் 1036

    நறுமணப் புகையின் ஊடே அகிற் கட்டையின் புகையும், மணப்பொடிகளும், சந்தனமும் கையேந்தி யாழ் இசையுடன் சுயம்பிரபை அருகனைப் புகழ்ந்து பாடினாள்.

    வரிப்பாட்டு

    மணங்கமழுந் தாமரையின் மதுத்திவலை

    கொப்பளித்து மதர்த்து வாமன்

    அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ

    ரொளிபருகி யலரும் போலும்

    அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ

    ரொளிபருகி யலரு மாயின்

    வணங்கினவ ரொளிவிரிந்து களிசிறந்து

    மதிமகிழன் மருளோ வன்றே.1037

    மணம் வீசும் தாமரை மலர் தேன் துளிகளால் செருக்குற்று மலர்ந்து நிற்கும் அருகனுடைய திருவடியில் உள்ள ஒளியை துணையாக்கிக் கொண்டு அவர் திருவடிகளை வணங்கிய அடியார்கள் உள்ளம் மகிழ்ச்சி அடைவார்கள்.

    அரும்பிவரு மரவிந்த மறிவரன

    தடிநிழல தடைந்தோ மென்று

    சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து

    சுடருமிழ்ந்து துளும்பும் போலும்

    சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து

    சுடருமிழ்ந்து துளும்பு மாயின்

    விரும்பினராய்த் தொழுதெழுவார் மெய்ம்மறப்பு

    முண்மகிழ்வும் வியப்போ வன்றே 1038

    தாமரை மலர் அருகன் திருவடியை அடைந்தோம் என்ற மகிழ்ச்சியால் இருக்க வண்டுகள் சூழ்ந்து இசை பாட அருகக் கடவுளின் திருவடியை தொழும் அடியார்கள் தம்மை மறந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    அழலணங்கு தாமரையா ரருளாழி

    யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து

    நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து

    தோடேந்தி நிழற்றும் போலும்

    நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து

    தோடேந்தி நிழற்று மாயிற்

    றொழிலணங்கு மனமுடையார் சூழொளியும்

    வீழ்களிப்புஞ் சொல்லோ வன்றே 1039

    தாமரை மலர் அருகனின் திருவடியின் கீழ் மணம் வீசி ஒளி வீச அருகனுடைய பாதத்தைத் தொடாமல் பிறர்தொழில்கள் செய்யாத நறுமணம் உடையவர்கள் மகிழ்ச்சி உடையவர்கள் ஆவர்.

    மணிமரு டிருமொழி வாமன் சேவடி

    அணிமரு ளுருவுடை யமிர்தின் சாயலாள்

    பணிமொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள்

    பிணிமொழி பிறவிநோய் பெயர்க வென்னவே 1040

    சுயம்பிரபை அருகன் உரைத்து அருளிய அவருடைய திருவடிகளைப் புகழ்ந்து அறிஞர்கள் கூறும் பிறவி நோய் நீங்கட்டும் என்று வாழ்த்தினாள்.

    சயம்பவை நிலாமுற்றத்தை அடைல்

    வென்றவன் றிருவடி வணங்கி மெல்லவே

    சென்றுதன் வளநகர்ச் செம்பொன் மாளிகை

    நின்றொளி விரிவதோர் நிலவு வேதிகை

    முன்றின்சென் றெய்தினாண் முகிழ்த்த வேட்கையாள் 1041

    வாமனன் திருவடியை வணங்கிய பின்னர் தன் மாளிகையில் கன்னி மாடத்தில் நின்று ஒளி வீசும் மேடையில் நிலா முற்றத்தைக் காணச் சென்றாள். இறை வணக்கம் செய்தபோது உள்ளம் மகிழ்ச்சியால் காம வேட்கை உடைய சுயம்பிரபை

    சந்திரோதய வருணணை

    செய்யவன் செங்கதிர் சுருக்கச் செக்கர்வான்

    பையவே கருகலும் பரவை பாற்கதிர்

    ஐயவே யவிர்கதி ரரும்பு வந்தது

    வையமே தொழப்படும் வளர்வெண் டிங்களே 1042

    சூரியன் தன் சுடர்களைச் சுருக்கச் செவ்வானம் இருண்டு வெண்மையான வளர்பிறை தோன்றி வெண்சுடர் அரும்ப நின்றது.

    இருங்கயத் தெழின்மலர் நிரந்து மேலதோர்

    சுருங்கையங் கவிழ்ந்தனெத் தோன்று மீன்குழாம்

    அரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை

    ஒருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள் 1043

    சூரியனாகிய கணவன் பிரிந்ததால் வானத்தில் மலர்ந்த மீன் கூட்டம் குளத்தில் உள்ள மலர்கள் பரவியது போல காணப்பட்டது. அரண்மனையின் மாடத்தில் அந்த மீன்களை நோக்கியபடி அவள் நின்றாள்.

    சயம்பவை வருந்துதல்

    திங்களங் கொழுநனைச் சேர்ந்து தாரகை

    அங்கொளி முகிழ்நகை யரும்பு மாதலான்

    மங்கல மணமகன் மணந்த போதலால்

    எங்குள திளையவர்க் கிளைமை யின்பமே 1044

    நிலவாகிய கணவனைக் கூடிய உடுக்கள் புன்முறுவல் செய்ய இளம் காதலர்கள் காதல் உறவு கொள்ளும்போது நாம் இங்கு இருக்கலாகாது.

    என்றுதன் னகம்புடை யியலக் காளையால்

    ஒன்றிய வுள்ளநோ யொளிக்க லுற்றனள்

    இன்றிவ ளகத்தது காம நோயெனப்

    பொன்றவழ் பசலைமெய் புகல லுற்றதே 1045

    இவ்வாறு சுயம்பிரபை நிற்கவும், திவிட்டன் காரணமான காம நோய் புறத்தாருக்கு மறைத்து பசலை

    Enjoying the preview?
    Page 1 of 1