Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ainguru Nooru
Ainguru Nooru
Ainguru Nooru
Ebook216 pages1 hour

Ainguru Nooru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்க இலக்கியங்களில் உள்ள எட்டு தொகையில் ஒன்றாக ஒளி வீசக் கூடியது ஐங்குறுநூறு எனப்படும் அமுதத் தமிழாகும்.

இது அடியில் குறுகியது என்றாலும் பொருள் நயத்தாலும், அதனை விளக்கும் உணர்வுகளாலும் உரை சிறப்பாலும் மிகவும் உயர்ந்து நிற்பதாகும்.

ஐங்குறு நூறில் உள்ள செய்யுள்கள் ஒவ்வொன்றும் உணரும்போது நம் உள்ளத்தில் ஓவியங்களாக விரிந்து அந்த கால மாந்தர்களுடன் ஒன்று கலக்கச் செய்யும் சொற் சித்திரங்களாகும்.

காதலனும், காதலியும் அன்பால் இணைந்தும் கலந்தும் பிரிந்தும் இருக்கக் கூடிய எண்ணற்ற நினைவுகளையும், பண்பாட்டு மரபினையும் ஐங்குறுநூறில் படித்து மகிழலாம்.

தமிழ் புலவர்களின் இனிய தமிழும் அவர்கள் காட்சிகளை நயமாக்கி சுவை படுத்திய விதமும் நமக்கு அழகிய இலக்கிய வடிவங்களை தருகின்றன.

கற்போர் உள்ளத்தை உவகையடையச் செய்கின்றன. ஐங்குறுநூறு செய்யுட்கள் அனைத்தும் தமிழ் இலக்கிய உலகில் செல்வ களஞ்சியமாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பழந்தமிழ் மன்னர்களான சேரன் இரும்பெறை மரபில் தோன்றியவன். தலையாளங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் ராஜசூயம் வேட்ட பெருநர் கிள்ளியும் வாழ்ந்த புகழ் மிகுந்த நாளில் தானும் வாழ்ந்து தமிழ் இனத்தை, மாண்பைப் போற்றி காத்து புகழ் கொண்டவர்கள்.

பாரி வள்ளலின் உயிர் நண்பனான கபிலர் நட்பைப் பெற்றவன். ஆறாத தமிழ் அன்பும் தீராத பேராண்மையும், தணியாத வள்ளல் தன்மையும் குறைவில்லாத தமிழ் புலமையும் தனதாக்கிக் கொண்டவன்.

குருங்கோலியூர் கிழாரால் போற்ற¤ புகழ்ந்து பாராட்டப் பெற்றவன். சோழர் ராஜசூயம் வேட்ட நற்கிள்ளியுடன் பாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியனுடன் போரிட்டு அதனால் சோழ பாண்டிய மன்னர்களின் பகைக்கு உள்ளானபோதும் தாய் தமிழின் செம்மையை பேணி காக்க நினைத்தபோது பாண்டிய நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த மதுரை தமிழ் சங்கத்தாருடன் பெருங்கோலியூர்கிழாருடனும் நெருக்கமான உறவு கொண்டவன்.

இதனால் தமிழின் மேன்மை தமிழகத்து தலைவர்கள் மீது எந்தளவு வேரூன்றி இருக்கிறது என்பதை நாம் உணரலாம். ஐங்குறுநூறில் முதலாம் நூறு பாடல்கள் மருத நிலத்தைப் பற்றி வருகின்றது. இது ஓரம்போகியாரால் பாடப்பட்டது.

நெய்தல் நிலம் பற்றி வரும் இரண்டாம் நூறு செய்யுள்கள் அம்மூவனாரால் பாடப்பட்டது. குறிஞ்சிக்கு கபிலர் என்பார்கள். அந்த கபிலரால் மூன்றாம் நூறு குறிஞ்சி நிலத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

நான்காம் நூறான பாலை நிலத்தைப் பற்றி பாடல்கள் ஓதலாந்தையாரால் பாடப்பட்டது. ஐந்தாம் நூறான முல்லை நிலம் பற்றி முல்லை பேயனாரால் பாடப்பட்டது. “மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன், கருதும் குறிஞ்சி கபிலன், கருதிய பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு” என்பதாகும். இவற்றுள் மருதமும், நெய்தலும், ஐங்குறு நூறு தெளிவுரையில் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.

கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செய்யுட்களையுச் செய்வதிலே புகழ் படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செய்யுட்களையுச் செழுமையோடு ஆக்கித் தர, அவற்றை ஆராய்ந்து அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டவர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580144206865
Ainguru Nooru

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Ainguru Nooru

Related ebooks

Reviews for Ainguru Nooru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ainguru Nooru - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    ஐங்குறுநூறு

    Ainguru Nooru

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மருதம்

    2. நெய்தல்

    3. குறிஞ்சி

    4. பாலை

    5. முல்லை

    முன்னுரை

    சங்க இலக்கியங்களில் உள்ள எட்டு தொகையில் ஒன்றாக ஒளி வீசக் கூடியது ஐங்குறுநூறு எனப்படும் அமுதத் தமிழாகும்.

    இது அடியில் குறுகியது என்றாலும் பொருள் நயத்தாலும், அதனை விளக்கும் உணர்வுகளாலும் உரை சிறப்பாலும் மிகவும் உயர்ந்து நிற்பதாகும்.

    ஐங்குறு நூறில் உள்ள செய்யுள்கள் ஒவ்வொன்றும் உணரும்போது நம் உள்ளத்தில் ஓவியங்களாக விரிந்து அந்த கால மாந்தர்களுடன் ஒன்று கலக்கச் செய்யும் சொற் சித்திரங்களாகும்.

    காதலனும், காதலியும் அன்பால் இணைந்தும் கலந்தும் பிரிந்தும் இருக்கக் கூடிய எண்ணற்ற நினைவுகளையும், பண்பாட்டு மரபினையும் ஐங்குறுநூறில் படித்து மகிழலாம்.

    தமிழ் புலவர்களின் இனிய தமிழும் அவர்கள் காட்சிகளை நயமாக்கி சுவை படுத்திய விதமும் நமக்கு அழகிய இலக்கிய வடிவங்களை தருகின்றன.

    கற்போர் உள்ளத்தை உவகையடையச் செய்கின்றன. ஐங்குறுநூறு செய்யுட்கள் அனைத்தும் தமிழ் இலக்கிய உலகில் செல்வ களஞ்சியமாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    பழந்தமிழ் மன்னர்களான சேரன் இரும்பெறை மரபில் தோன்றியவன். தலையாளங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் ராஜசூயம் வேட்ட பெருநர் கிள்ளியும் வாழ்ந்த புகழ் மிகுந்த நாளில் தானும் வாழ்ந்து தமிழ் இனத்தை, மாண்பைப் போற்றி காத்து புகழ் கொண்டவர்க.ள

    பாரி வள்ளலின் உயிர் நண்பனான கபிலர் நட்பைப் பெற்றவன். ஆறாத தமிழ் அன்பும் தீராத பேராண்மையும், தணியாத வள்ளல் தன்மையும் குறைவில்லாத தமிழ் புலமையும் தனதாக்கிக் கொண்டவன்.

    குருங்கோலியூர் கிழாரால் போற்ற¤ புகழ்ந்து பாராட்டப் பெற்றவன். சோழர் ராஜசூயம் வேட்ட நற்கிள்ளியுடன் பாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியனுடன் போரிட்டு அதனால் சோழ பாண்டிய மன்னர்களின் பகைக்கு உள்ளானபோதும் தாய் தமிழின் செம்மையை பேணி காக்க நினைத்தபோது பாண்டிய நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த மதுரை தமிழ் சங்கத்தாருடன் பெருங்கோலியூர்கிழாருடனும் நெருக்கமான உறவு கொண்டவன்.

    இதனால் தமிழின் மேன்மை தமிழகத்து தலைவர்கள் மீது எந்தளவு வேரூன்றி இருக்கிறது என்பதை நாம் உணரலாம். ஐங்குறுநூறில் முதலாம் நூறு பாடல்கள் மருத நிலத்தைப் பற்றி வருகின்றது. இது ஓரம்போகியாரால் பாடப்பட்டது.

    நெய்தல் நிலம் பற்றி வரும் இரண்டாம் நூறு செய்யுள்கள் அம்மூவனாரால் பாடப்பட்டது. குறிஞ்சிக்கு கபிலர் என்பார்கள். அந்த கபிலரால் மூன்றாம் நூறு குறிஞ்சி நிலத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

    நான்காம் நூறான பாலை நிலத்தைப் பற்றி பாடல்கள் ஓதலாந்தையாரால் பாடப்பட்டது. ஐந்தாம் நூறான முல்லை நிலம் பற்றி முல்லை பேயனாரால் பாடப்பட்டது.

    மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்,

    கருதும் குறிஞ்சி கபிலன், கருதிய

    பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே

    நூலையோ தைங்குறு நூறு

    என்பதாகும். இவற்றுள் மருதமும், நெய்தலும், ஐங்குறு நூறு தெளிவுரையில் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.

    கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செய்யுட்களையுச் செய்வதிலே புகழ் படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செய்யுட்களையுச் செழுமையோடு ஆக்கித் தர, அவற்றை ஆராய்ந்து அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டவர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.

    தமிழ் கூறும் நல்லுலகம் சங்க இலக்கிய மரபில் வந்த ஐங்குறுநூறு என்னும் இந்த நூலை கற்று அனுபவிக்கும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    1. மருதம்

    1. வேட்கை பத்து

    வாழி ஆதன் வாழி அவினி

    நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க

    எனவேட் டோ ளே யாயே யாமே

    நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

    யாணர் ஊரன் வாழ்க

    பாணனும் வாழ்க எனவேட் டேமே.

    வாழ்க நெல் வளமும், பொன் வளமும் சிறக்கட்டும் என்று தலைவி வேண்டினாள். காஞ்சி மரத்தையும் சிறு மீன்களையும் மிகுந்த ஊர்களின் தலைவன் வாழ்க. பாணனும் வாழ்க என்று வேண்டிக் கொண்டோம்.

    கருத்து : அனைவரின் நலனையும் வேண்டி னோம்

    வாழி ஆதன் வாழி அவினி

    விளைக வயலே வருக இரவலர்

    எனவேட் டோ ளே யாயே யாமே

    பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

    தண்துறை யூரன் கேண்மை

    வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே.

    உலகம் வாழ்க வயல்கள் விளைக. இரவலர்களே வருகே. என்று தலைவி வேண்டினாள். நெய்தலும் மற்ற மலர்களும் மலர்ந்திருக்கும் நீர்த்துறை கொண்ட தலைவனின் நட்பானது வழி வழியாக சிறந்தோங்கட்டும்

    கருத்து : அரசன் வாழ்ந்தால் அனைவரும் வாழலாம் என்று அவன் சிறப்பை வேண்டுவதாகும்.

    வாழி ஆதன் வாழி அவினி

    பால்பல ஊறுக பகடுபல சிறக்க

    எனவேட் டோ ளே யாயே யாமே

    வித்திய உழவர் நெல்லோடு பெயரும்

    பூக்கஞு லூரன் தன்மனை

    வாழ்க்கை பொலிக என்வேட் டேமே.

    பால் வளம் பெருக பசுக்களும் காளைகளும் பெருகட்டும் என்று தலைவி வேண்டினாள். வயல்களில் வேலை செய்யும் உழவர்கள் மிகுந்த நெல்லை கொண்டவராக வீடு நோக்கிச் செல்லும் பூக்கள் மலரின் ஊரின் தலைவன் மனையறம் சிறக்கட்டும்.

    கருத்து : நாங்கள் உமது மண வாழ்க்கை சிறப்பதையே விரும்பி வேண்டுகிறோம்.

    வாழி ஆதன் வாழி அவினி

    பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக

    எனவேட் டோ ளே யாயே யாமே

    பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்

    கழனி யூரன் மார்பு

    பழன் மாகற்க எனவேட் டேமே.

    பகைவர்கள் நம்மிடம் தோற்றுச் சிறையில் இருப்பதால் புல்லரிசியை உண்ணட்டும். பார்ப்பனர்கள் வேதம் ஓதிக் கொண்டே இருக்கட்டும் என்று தலைவி வேண்டினாள். கரும்பு பயிரையும் நெற்பயிரையும் கொண்ட கழனிகளின் தலைவனின் மார்பானது சிறந்து விளங்கட்டும்.

    கருத்து : தலைவனுடன் தலைவி என்றும் பிரியாமல் இன்புற்று இருக்குமாறு வேண்டுவது.

    வாழி ஆதன் வாழி அவினி

    பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக

    எனவேட் டோ ளே யாயே யாமே

    முதலை போத்து முழுமீன் ஆரும்

    தண்துறை யூரன் தேரேம்

    முன்கடை நிற்க எனவேட் டேமே.

    பசியும் பிணிகளும் நெடுந்தொலைவு விலகி செல்லட்டும் என்று தலைவி வேண்டிக் கொண்டாள். முதலை போன்ற முதிர்ந்த மீன்களை உண்டு மகிழும் ஊருக்கு தலைவனின் பேரானது எம் வீட்டுத் தலைவாசலில் எப்போதும் நிற்கட்டும்.

    கருத்து : தலைவனுடன் எப்போதும் கூடி இன்புறுவதையே தலைவி வேண்டிக்கொண்டாள்.

    வாழி ஆதன் வாழி அவினி

    வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக

    எனவேட் டோ ளே யாயே யாமே

    மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

    தண்துறை யூரண் வரைக

    எந்தையும் கொடுக்க எனவேட் டேமே.

    பகைவர்கள் அனைவரையும் வென்ற தலைவன் பல ஆண்டுகள் நலமுடன் வாழட்டும் என்று தலைவி வேண்டினாள். பொய்கைத் தாமரையின் முகைகளும் தோன்றும் நீர்த்துறையின் தலைவன் விரைந்து வரட்டும். எம் தந்தை இவளை அவனுக்கு தரட்டும் என்று வேண்டியிருந்தோம்.

    கருத்து : தலைவன் விரைந்த வந்து தலைவியை மணம் முடிக்க வேண்டும் என்று வேண்டுவதாகும்.

    வாழி ஆதன் வாழி அவினி

    அறநனி சிறக்க அல்லது கெடுக

    என வேட்டோ ளே யாயே யாமே

    உளை மருதத்துக்கி கிளைக்குரு

    தண்துறை யூரன் தன்னூர்க்

    கொண்டனன் செல்க எனவேட் டேமே.

    அரண்கள் சிறக்கவும், தீச்செயல்கள் முற்றிலும் ஒழிய வேண்டும் என்று தலைவி வேண்டிக் கொண்டாள். உளைப் பூக்களைக் கொண்ட மருத நிலத்தில் குறுகுகள் கூட்டமாய் அமர்ந்திருக்கும் ஊருக்கு உரிய தலைவன் இவளை மனைவியாக்கிக் கொண்டு ஏற்றுச் செல்லவேண்டும் என்று தலைவனை வேண்டிக் கொண்டோம்

    கருத்து : தலைவியைத் தலைவன் மணம் புரிவதையே நாங்கள் விரும்புகிறோம் என்பதாகும்.

    வாழி ஆதன் வாழி அவினி

    அரசுமுறை செய்க களவில் லாகுக

    எனவேட் டோ ளே யாயே யாமே

    அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்

    புக்கஞல் ஊரன் சுளீவண்

    வாய்ப்ப தாக எனவேட்டோ மே.

    களவு இல்லாது ஒழிய வேண்டும் என்று தலைவி வேண்டிக் கொண்டாள். மாமரத்தின் மயில்கள் இருக்கின்ற பூக்கள் சொரிந்திருந்த ஊருக்கு தலைவன் முன்பு சூளுரைத்தது இப்போது மெய்யாகட்டும் என்று வேண்டிக் கொண்டோம்.

    கருத்து : அவளுக்கு விரைந்து திருமணம் ஆகவேண்டும் என்றே வேண்டினோம்.

    வாழி ஆதன்வாழி அவினி

    நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக

    என வேட் டோ ளே யாயே யாமே

    கயலார் நாரை போர்வின் சேக்கும்

    தண்துறை யூரன் கேண்மை

    அம்பல் ஆகற்க எனவேட் டேமே.

    நன்மைகள் பெருகி தீமைகள் இல்லாமல் போக வேண்டிக் கொண்டாள். மீன்கள் உண்ட நாரையானது நெற்போரில் சென்று தங்கும் நீர்த்துறையின் தலைவனின் உறவு என்றும் நீங்காது இருக்க வேண்டும் என்று வேண்டினோம்

    கருத்து : விரைந்து வந்து மணம் முடிக்க வேண்டும்.

    வாழி ஆதன் வாழி அவினி

    மாரி வாய்க்க வளநனி சிறக்க

    எனவேட் டோ ளே யாயே யாமே

    பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்

    தண்துறை யூரன் தன்னோடு

    கொண்டனன் செல்க எனவேட் டேமே.

    உரிய காலத்தில் மழை தவறாமல் பெய்து வளம் பெருகட்டும் என்று வேண்டிக் கொண்டாள் தலைவி. மா மரத்தையும் சிறு மீன்களையும் கொண்ட நீர்த்துறையின் தலைவன் தலைவியை மணந்து தன் ஊருக்குள் அழைத்துச் சென்று மனையறத்தை நடத்தட்டும் என்று வேண்டிக் கொண்டோம்.

    கருத்து : அவன் மனையறம் கைகூடுவதை விரும்புகிறோம்.

    2. வேழப்பத்து

    மனைநடு வயலை வேழஞ் சுற்றும்

    துறைகேழ் ஊரன் கொடுமை நாணி

    நல்லன் என்றும் யாமே

    அல்லன் என்னுமென் தடமென் தோளே.

    வயலைக் கொடியானது பறந்து சென்று வேழத்தை சுற்றி இருக்கும் ஊர் தலைவன் செய்த கொடுமையானது அவன் எமக்கு நல்லவன் என்று வாயால் கூறுவோம். அவன் நல்லவன் அல்ல என்ற உண்மை பின்னால் புலப்பட்டு விடும்.

    கருத்து : அவன் கொடுமைகள் என் தோள்கள் மெலியும்படி செய்துள்ளது.

    கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்

    துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்

    ஆற்றுக தில்ல யாமே

    தோற்கதில்லஎன் தடமென் தோளே.

    வேழமானது கரும்பினைப் போலவே வெண்பூக்களை பூக்கின்ற ஊரின் தலைவன் செய்யும் கொடுமையைப் பொறுத்துக் கொண்டோம். எமது மென்மையான தோள்களோ அவன் பிரிவைத் தாங்க முடியாமல் மெலிந்து விடுகிறது.

    கருத்து : எம் தோள்கள் மெலிவதை கட்டுப்படுத்த இயலாமல் போகிறது.

    பரியுடை நன்மான் பொங்குளை யன்ன

    வடகரை வேழம் வெண்பூப் பகரும்

    தண்துறை யூரண் பெண்டிர்

    துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே

    குதிரைகள் அணிந்த வெண்ணிறக் கவரியைப் போல வேழமானது வெண்ணிறப் பூக்களை கொண்டிருக்கும் நீர்த்துறையின் தலைவன் இரவு நடு ஜாமத்தில் நாம் படும் துயரினை அறியாமல் இருப்பாரோ.

    கருத்து : அன்புடன் கூடி வாழ்வான் என்பது இனி நடக்காத ஒன்றும் இல்லை.

    கொடிப்பூ வேழம் தீண்டி அயல

    வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்

    மணித்துறை வீரன் மார்பே

    Enjoying the preview?
    Page 1 of 1