Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valampuri Sangu
Valampuri Sangu
Valampuri Sangu
Ebook300 pages2 hours

Valampuri Sangu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851676
Valampuri Sangu

Read more from Kottayam Pushpanath

Related to Valampuri Sangu

Related ebooks

Related categories

Reviews for Valampuri Sangu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valampuri Sangu - Kottayam Pushpanath

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வலம்புரி சங்கு

    Valampuri Sangu

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    தமிழில்: சிவன்

    Kottayam Pushpanath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    1

    நீராட்டுமனை வாரிசு யாருமின்றி வெகுகாலமாகச் சும்மாவே கிடந்தது.

    நாலு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பின் நடுவே புராதனமான மனை அமைந்திருந்தது. காடும் புதரும் மண்டி, குள்ளநரிகள் கூட பகல் நேரத்தில் நுழையப் பயப்படும்படி இருள் மூடிக் கிடந்தது. ஆங்காங்கே வானத்தையே எட்டிப் பிடிப்பதுபோல் வளர்ந்திருந்த கொன்றை மரங்களின் உடல்களில் காட்டுக் கொடிகள் படர்ந்து அடர்த்தியாகச் சுற்றியிருந்தன.

    ஒரு காலத்தில் நாடாளும் மன்னனை விட, குடிமக்கள் அதிகமாகப் பயப்பட்ட, அதிகமாக நேசித்த, எத்தனையோ மனிதர்கள் அந்த பிரமாண்டமான மாளிகைக்குள் பிறந்து, வளர்ந்து இறந்திருக்கிறார்கள்! அந்த மனையைக் கட்டியது எந்தத் தலைமுறையைச் சேர்ந்த நபர் என்பது, ஊரின் வயதான பெரிய மனிதர்களுக்குக்கூடத் தெரியவில்லை!

    தேக்கு மற்றும் கருங்காலி மரங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான மாளிகை இருப்பதே வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத அளவில் செடி கொடிகள் அதை மூடியிருந்தன. அந்த மனையின் கிழக்குப் புறத்தில் ‘சர்ப்பக் காவு’ எனப்படும் பாம்புக் கோயில் இருந்தது. ஒரு காலத்தில் பெரிய பெரிய பூஜைகளும், சர்ப்பப் பாட்டும் (பாம்புகளைப் பிரதிப்படுத்தும் பாடல் பாடும் திருவிழா) நடைபெற்ற கோயில் அது.

    அந்தக் கிராமத்தின் தென்புறத்தில் ஒருபோதும் வற்றாத ஜூவநதியொன்று ஓடிக் கொண்டிருக்கிறது. நீராட்டுமனை இல்லத்தைச் சேர்ந்த தென்புறக் குளத்துக்கு, அந்த நதியிலிருந்து நீர்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஒரு காலத்தில் அந்த மனையைச் சுற்றியிருந்த வயல் வரப்புகளும், புஞ்சை நிலங்களும் அந்த மனைக்கே உரியதாக இருந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களது உல்லாச வாழ்க்கையின் பொருட்டு, அந்த மனையின் காரணவர்கள் (குடும்பத் தலைவரான தாய்மாமன்கள்) பலரிடமும் பங்கு போட்டுக் கொடுக்க நேர்ந்தது. முனையின் கடைசி வாரிசாக வாய்த்தவர் ராமபத்ரன் பட்டதிரிப்பாடு. அவர் ஓர் அப்பாவியும் கூட!

    வடக்கே எங்கோ வெகு தொலைவிலுள்ள ஓர் இல்லத்திலிருந்து திருமணம் புரிந்து கொண்டாராம் ராமபத்ரன். ஆனால் அவரது மனைவி அதிக நாள் அவருடன் வாழவில்லை. ஒரு குழந்தை பிறந்த பிறகு விவரிக்க முடியாத ஏதேதோ காரணங்களால் கணவரிடம் சண்டை போட்டுப் பிரிந்து போனாளாம்.

    அப்போது இல்லம் மிகவும் செழிப்பாக இருந்த காலம். இல்லத்தைக் கவனித்துக்கொள்ளக் காரியஸ்தர்கள் சிலர் இருந்தனர். அவர்களில் நீலகண்டன் என்பவர்தான் ராமபத்ரப்பட்டதிரியின் பிரியத்துக்குகந்தவராக இருந்தவர்.

    மனைவி பிரிந்துபோன பிறகு நம்பூதிரியைக் (ராமபத்ரபட்டதிரி) கவனித்துக்கொள்ள அங்கு வேறு யாரும் பொறுப்பானவர்கள் இல்லை. அவரது வயதான தாயார் ஆஸ்துமா நோயாளியாக இருந்தார். அவர் உடம்பு படுத்தால் படுத்த இடம், உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம் என்று படுத்தியது. வீட்டைப் பராமரிப்பதும், சமையல் வேலைகளும் தாறுமாறான நிலையை அடைந்தன. தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க, நம்பூதிரியின் அனுமதியோடு நீலகண்டன் நாயர் தனது ஒரே சகோதரியை இல்லத்துக்கு அழைத்து வந்தார். பார்வதியும் நம்பூதிரியின் தாயைக் கவனித்துக் கொண்டதுடன் சமையலறை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு கெட்டிக்காரத்தனமாகவே செய்தாள்.

    இல்லத்தில் வேறு யாரும் இல்லாததால் பார்வதியே சமையலுடன் அதைப்பரிமாறவும் நேர்ந்தது.

    நீலகண்டன் நாயரின் நிபந்தனை, பார்வதி காலையில் இல்லத்துக்கு வந்து வேலைகளை முடித்துக்கொண்டு விளக்கு வைப்பதற்கு முன்பாக அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்பது. ஆனால், நம்பூதிரியின் தாய் லட்சுமிக்குட்டி அந்தர்ஜனத்தின் நிலைமையும் வற்புறுத்தலும் பார்வதியை இல்லத்திலேயே தங்க வைத்தது. இப்படியாக ஐதீகமான அந்த இல்லத்துக்குள் நாயர் பெண் ஒருத்தி வந்து சமையல் செய்யவும், தங்கவும் நேர்ந்தது.

    பார்வதி அழகானவள்.

    அந்தக்காலக் கவிஞர்கள் பாடுவது மாதிரி எல்லாப் பொருளிலும் அவள் அழகாகவே இருந்தாள்!

    முகத்தில் காமனின் விற்கள் இரண்டு. யாரையும் வசீகரிக்கும் கண்கள். எள்ளுச் செடியின் பூ போன்ற மூக்கு. பளபளப்பான, ஈரம் படிந்த சிவந்த உதடுகள். நெருப்பு போன்ற உடல்நிறம்.

    தாவணி அணியாத பார்வதி, புட்டப் பகுதியைத் தொடும் நீண்ட தலைமுடியுடன் முற்றப்பகுதியில் கிடக்கும் காய்ந்த துளசி இலைகளையும் மாளிகையை ஒட்டி வளர்ந்திருந்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழுத்த இலைகளையும் பொறுக்கியெடுத்து அகற்றும்போது, ராமபத்ரன் நம்பூதிரி தன்னையும் மீறிப் பார்வதியையே ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினார்.

    ‘இப்படிக்கூடவா உலகில் பெண்கள் இருப்பார்கள்!’ என்று அவர் மனத்துக்குள்ளாகவே வியந்து கொள்வது வழக்கமாகிப் போனது.

    அன்றைய சூழ்நிலையில் தன் வயதுள்ள நம்பூதிரிகள் பலர், நாயர் குடும்பத்தினருடன் உறவேற்படுத்திக் கொள்வது அவருக்கும் தெரியவே செய்தது. இருப்பினும் ஏனோ அவர் மனம் அப்படியெல்லாம் ஆசைப்பட்டதில்லை. அதெல்லாம் கௌரவத்துக்கு உகந்ததாக அவருக்குத் தோன்றியதில்லை.

    தன்னுடைய வாழ்க்கையில் நிலவிளக்கு மற்றும் நிறபறயின் (மரைக்கால் நிறைய உள்ள நெல் மணிகளின் மத்தியில் விரிந்த தென்னம்பாளையைச் செருகி வைத்திருக்கும் முறை. கேரளத் திருமணங்களில் இது பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.) முன்பாக ஒரு பெண்ணுக்குப் புடவை வழங்கி, தாலி கட்டியாகிவிட்டது. ஏனவே அவரால் அதைப்பற்றி அந்தத் திசையில் மேற்கொண்டு யோசிக்கவும் முடியவில்லை.

    கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடியாத அம்மாவை விட்டுவிட்டு, தவழும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த நம்பூதிரிப்பெண், அவரது மனைவி வெளியேறிப் போனாள்.

    மனைவி சண்டைபோட்டுப் பிரிந்து போனதற்கு என்ன காரணம் என்பது நம்பூதிரிக்குப் புரியவே இல்லை. தான் ஓர் ஆண்பிள்ளை என்பதுடன், நல்ல கணவனாகவும் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதில் அவருக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

    அருந்ததி அந்தர்ஜனம் (ராமபத்ரனின் மனைவி) ஈரிழைப் பாயில் களைப்பு அடைந்து உறங்கத் தொடங்கும் போதும், திருமேனி நிலவொளி பொழியும் இரவு வேளைகளில் முற்றத்தில் இறங்கி உலவியிருக்கிறார். அப்போதெல்லாம் எந்த வகையிலும் தான் குற்றவாளியே அல்ல என்று அவருக்கு உறுதியாகவே தெரிந்தது.

    ஒருவேளை வயதான அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால், சலிப்பும் கோபமும் அடைந்திருப்பாளோ? தெரியவில்லை!

    ஆனால், பார்வதி வந்த பிறகு அம்மாவை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். அதையும் மறுக்க முடியாது.

    அம்மா கட்டிலிருந்து எழுந்திருப்பதே அபூர்வமான காட்சியாயிருக்க, பார்வதி வந்தபிறகு அவளது தோளைப் பற்றியபடி வீட்டுக்குள்ளேயே உலவத் தொடங்கினார். இப்போது எதற்கெடுத்தாலும் அம்மாவுக்குப் பார்வதி இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நிலைமை.

    ஒரு பௌர்ணமி இரவில் வழக்கம்போல் பார்வதி, துளசியிலை போட்ட குடிநீருடன் திருமேனியின் படுக்கை அறைக்கு வந்தாள்.

    அவர் கட்டிலில் சாய்ந்து படுத்தபடி ‘கல்யாண சௌகந்திகம்’ சுவடியை வாசித்துக் கொண்டிருந்தார்.

    நிலவிளக்கின் ஒளியில் அவர் பார்வதியைப் பார்த்தார் - விளக்கின் அருகே விளக்கி எடுத்த மற்றொரு விளக்கு மாதிரி!

    வெண்கலச்சொம்பில் எடுத்து வந்த துளசிநீரை மேஜை மீது வைத்துவிட்டுத் திரும்பியபோது அவளது உடுதுணி, நாற்காலியின் மேற்புறப் பிடியில் சிக்கிக் கொண்டது. பார்வதி உடனே துணியை இழுத்துச் சரிசெய்ய முயன்றபோது நாற்காலி சரிந்து விழுந்தது. உடுதுணியை இழுத்தவாறே ஒரு கையால் அவள் முகத்தைப் பொத்திக்கொண்டு நின்றாள்.

    ஆனால், திருமேனி கண்களைத் திறந்து கொண்டுதானே படுத்திருந்தார்.

    ஒருவிநாடி நேரத்துக்குள் எங்கேயோ மறைந்திருந்த கரும்பு வில்லிலிருந்து மலரம்பு வழுக்கி, மாயையால் திருமேனியின் நெஞ்சில் பாய்ந்து மறைந்தது.

    அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது தேவலோகப் பெண் போல்- கடைந்தெடுத்த உடலழகுடன், அப்போதுதான் உருக்கியெடுத்த தங்கம் மாதிரி எதிரில் ஓர் இளம்பெண்! பதினேழாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் பார்வதிக்குட்டி என்கிற பரதேவதை!

    எழுந்த திருமேனி அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கி, தனது இரண்டு கைகளையும் அவளது தோள்களின் மீது வைத்தபோது திடுக்கிட்டவளாக அவள் கண்களைத் திறந்தாள்!

    கோடாலி முடிச்சிட்டுப் பின்புறமாகத் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட தலைமுடியை முன்புறமமாகக் கொண்டு வந்து, அதைக்கொண்டே திருமேனி அவளது கண்களை மூடினார். அவளது கண்ணிமைகளும் அத்துடன் மூடிக்கொண்டன.

    மாதக் கணக்கில் பெண்ணைத் தொடாமல் ஒரு தவமுனிவனைப் போல் நடமாடிக் கொண்டிருந்த ராமபத்ரன் திருமேனியின் வால்மீகம் (புற்று) அத்துடன் பெயர்ந்து விழுந்தது!

    அவரது உறுதியான கட்டுடம்புக்குள் பார்வதி, அதுவரை கண்டுகொண்டிருந்த பருவக் கனவுகள் பலிதமாவதை உணர்ந்தார். உணர்வுகள் உயிர்பெற்று நெளிந்தன.

    அன்றைய விடியல் என்பது பார்வதியைப் பொறுத்தவரை புதுமையான ஒன்றாகவே இருந்தது. அவளது ரத்தக் குழாய்களில் ஏதோ ஓர் உற்சாகத்தின் ஊற்று பீறிட்டுக் கிளம்பியது போலிருந்தது. திருமேனி அவளை உட்கார வைத்து கீதையை வாசித்துக் காட்டினார். பாகவதத்தையும், ராமாயணத்தையும் மனப்பாடம் செய்ய வைத்தார்.

    பார்வதிக்குட்டி, திருமேனியின் எலும்புகளில் பூக்களாக மாறிப் போனாள். அவரது ரத்த நாளங்களில் பார்வதியெனும் தாமரைக்கொடியின் வேர்கள் ஆழ்ந்து இறங்கின. அவளது வியர்வைக்கு, திரௌபதியின் வியர்வைக்கு இருந்த சுகந்தம் ஏற்பட்டிருந்தது.

    நாள்கள் இப்படியே நகர்ந்தபோது பார்வதிக்குட்டி ஓர் உண்மையை உணர்ந்தாள் - அவள் தனியொருத்தி அல்ல என்பதை!

    அவள் வந்து சேர்ந்த இருபத்தொன்பதாம் நாளன்றும் ஒதுங்காமல் துளசிமாடத்தில் விளக்கேற்றுவதைக் கவனித்த லட்சுமிக்குட்டி அந்தர்ஜனம் முதன்முறையாகச் சந்தேகம் கொண்டார்.

    ‘எதனால் இப்படி.?’ – தனது அறைக் கட்டிலில் படுத்தபடி வியப்பில் மூக்கின் மீது விரலை வைத்தபடி யோசித்தார்.

    பருவம் வந்த பெண்ணொருத்தி மாதம் முழுவதும் துளசி மாடத்தில் விளக்கேற்றுவது எப்படிச் சாத்தியம்? அவளிடம் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. அவர் தன் மனத்துக்குள்ளேயே ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். ஆனால், இதை எப்படி வாய்விட்டுக் கேட்பது? ஒரு மாதிரியான தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

    மகனிடம் இதுபற்றிப் பேச அவர் மனம் இடம்தரவில்லை. திருமணத்துக்கு முன்னர்கூட ராமபத்ரன் அப்படியெல்லாம் நடந்துகொண்டவன் அல்ல. இப்போது அவனது வயது நாற்பத்தைந்து. இந்தச் சூழ்நிலையில் அவனை அழைத்து என்னவென்று கேட்பது? எப்படிக் கேட்பது?

    அன்று இரவு பார்வதிக்குட்டி, திருமேனியிடம் ஒரு ரகசியம் சொன்னாள். அதுவும் அவரது காதில் மிகவும் மென்மையான குரலில். சுவர்களுக்குக்கூட கேட்கக்கூடாது என்கிற எச்சரிக்கையுடன்தான் அதைச் சொன்னாள்.

    நிஜமாகவா? – உடையற்ற அவளது முதுகுப்புறத்தை வலது கையால் அளைந்தபடி திருமேனி கேட்டார். அவரது இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

    காதில் கேட்டவுடன் கோபத்தில் வெடித்துச் சீறப்போகிறார், தன்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடப் போகிறார் என்றெல்லாம் நினைத்து, அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுதான் பார்வதி இந்தச் செய்தியை அவரிடம் தெரிவித்தாள்.

    என்ன வந்தாலும் சரி என்று நினைத்து அவள் சொன்னதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. முந்தினநாள் மதியத்துக்குப் பிறகு பார்வதி தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது, அவளது அண்ணி, அண்டைவீட்டுக்காரப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

    இல்லத்தில் சமையல் வேலைக்குப் போன பெண்களில் சிலர், இல்லத்தின் குளத்தில் செத்து மிதப்பதைப் பார்த்து இருக்கிறேன். இதற்கு முன்பு ஒரு சில காரணவர்கள் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக ‘சுத்திக்கலச’மே நடத்தி இருக்கிறார்கள் அந்த இல்லத்தில். இவளுக்கு என்ன ஆகப் போகிறதோ?

    அண்ணி பேசுவது தன்னை மனத்தில் வைத்துக் கொண்டுதான் என்பது பார்வதிக்குப் புரியவே செய்தது. எனவே மறைவாக உட்புற அறையின் கதவோரத்தில் நின்றபடியே கவனித்தாள்.

    அந்த இல்லத்தைப் பற்றி நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். இதுக்கு முன்னால் இருந்த காரணவர், வாரஸ்யார் (பூக்கட்டும் இனத்தார்) பெண்ணுடன் பொழுதைப் போக்குவாராம். ஒருநாள் பார்த்தால் அவள் உடல் ஆற்றில் மிதந்ததாம். அதுவும் உடம்பு மொத்தமும் வீங்கி, நாறியது. வயிற்றுப்பக்கம் வெடித்துக் குழந்தையின் தலைகூட வெளியே தெரிந்தது என்று சொன்னார்கள். காரியம் ஆவது வரையில் ‘கண்ணே… மணியே… கற்கண்டே… தங்கமே…’ என்றெல்லாம் சொல்லவும் செய்வார்கள்.

    பார்வதிக்குட்டி உண்மையில் திடுக்கிட்டே போனாள். வழக்கமாக நடைபெற வேண்டிய ஒன்று இந்தத் தடவை தவறிப் போனதை யாரிடம் சொல்லிச் சந்தேகத்தைப் போக்குவது?

    அண்ணனிடம் சொல்ல முடியுமா, சொல்லக் கூடிய விஷயமா? விஷயம் தெரிந்தால், ‘உன்னை அந்த இல்லத்துக்குக் கொண்டு போய்விட்டது இப்படி என் முகத்தில் கரிபூசவா?’ என்று தூக்கில் தொங்கி விடுவார்.

    எனவேதான் எது நடந்தாலும் சரி என்று நினைத்து நம்பூதிரியிடமே விஷயத்தைச் சொன்னாள். ஆனால், நடந்ததோ எதிர்பார்த்தற்கு மாறாக இருந்தது. நம்பூதிரி அவளை அப்படியே கட்டிணைத்துக் கொண்டார் மகிழ்ச்சியால்.

    ‘ஒருவேளை இதெல்லாம் நடிப்பாக இருக்குமோ?’ இப்படி ஒரு சந்தேகமும் அவளிடம் எழாமல் இல்லை.

    ‘விளைவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் வருவதை எதிர்கொள்ள வேண்டியதுதான்’ என்ற தீர்மானத்துக்கு கடைசியாக வரவும் செய்தாள்.

    நாள்கள் பல நகர்ந்தன. பார்வதிக்குட்டி தன் இரவுகளை அவருடனேயே கழித்தாள்.

    லட்சுமிக்குட்டி அந்தர்ஜனத்தின் சந்தேகம் ஒருநாள் வலுத்தது. எனினும் அவர் மகனிடம் அதுபற்றிப் பேசவில்லை.

    வழக்கம்போல் மதியம் தாண்டி பார்வதி தன்னுடைய வீட்டுக்குப் போனபிறகு, நீலகண்டனைப் பார்க்க விரும்புவதாக மட்டும் கூறினார்.

    நீலகண்டன் நாயர் வந்தார்.

    அப்போது இல்லத்தில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர்.

    நீலகண்டன் நாயரே, இந்த இல்லத்தின் பழைய காரணவர்கள் தங்களது பொழுதுபோக்குகளை இல்லத்துக்கு வெளியில்தான் வைத்துக்கொண்டனர். இப்போது இங்கேயே வருமளவுக்குப் பெண்கள் தயாராகி இருக்கிறார்கள். நான் சொன்னது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

    லட்சுமிக்குட்டி அந்தர்ஜனத்தின் கடுமையான கோபம் நிறைந்த வார்த்தைகள் நீலகண்டன் நாயரை அதிர்ச்சியடைய வைத்தன. அவருக்கு விஷயம் இன்னதென்று விளங்கவும் செய்தது.

    இந்த இல்லத்தின் பழைய காரணவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். உங்கள் குடும்பத்தில் அப்படி எதுவும் உண்டா, இல்லையா?

    நீராட்டுமனையின் பெரிய தம்புராட்டி என்ன அர்த்தத்தில் இதைச் சொல்கிறார் என்பது நீலகண்டன் நாயருக்குப் புரியவே செய்தது.

    இரண்டு நாள்களுக்கு முன்னால் தன்னுடைய மனைவி எச்சரித்ததும் அவருக்கு நினைவு வந்தது.

    இப்போது என்ன செய்யலாம்?

    தனது ஆசைக்குரிய தங்கையின் உடம்பு வீங்கி வெடித்து, நாற்றமடித்து ஆற்றிலோ, மனையின் குளத்திலோ மிதப்பதைப் பார்க்கும் வல்லமை தனக்குக் கிடையாது. அவருடைய மனம் எப்படியெல்லாமோ யோசித்தது.

    மனைவி பிரிந்துபோன பிறகும் மற்றொரு திருமணத்தைப் பற்றி நினைக்காமல் மனஉறுதியுடன் இருக்கும் ராமபத்ரன் நம்பூதிரி என்ன சொல்லப் போகிறாரோ?

    அது எப்படி இருந்தாலும் அதற்கு முன்பே, தான் இதற்கு ஒரு பரிகாரம் காணவேண்டும் என்று நீலகண்டன் நாயருக்குத் தோன்றியது.

    தம்புராட்டி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. நான் தேவையானதைச் செய்துவிடுகிறேன். சாப்பிடும் சாப்பாட்டுக்கான நன்றியை மறக்கமாட்டேன். இது உறுதி, என்னை நம்புங்கள்!

    கோபத்தில் சிவந்த கண்களுடன் நீராட்டு மனையில் இருந்து இறங்கிய நீலகண்டன் நாயர் நேராகப் போனது சாக்குண்ணியின் கடைக்குத்தான். அங்கு போனால் எப்படிப்பட்ட விஷயத்துக்கும் பரிகாரம் உண்டு. அது கொஞ்சம் உள்ளே போக வேண்டும், அவ்வளவுதான்!

    மௌனமாக உட்கார்ந்தபடி நிறையவே குடித்தார்.

    அங்கிருந்து வெளியேறும்போது, என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு அவரது உடம்பில் தெம்பு வலுத்திருந்தது.

    தனது வீட்டுத் திண்ணையில் கால் எடுத்து வைத்தபோதே, இடிமுழக்கம் போன்ற குரலில் நீலகண்டன் அழைத்தார். பாறுக்குட்டி! – (பார்வதி என்பது பேச்சு வழக்கில் சுருங்கி ‘பாறு’ என்று ஆகிறது.) அந்தக் குரல்,

    Enjoying the preview?
    Page 1 of 1