Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannukku Vandha Nila
Mannukku Vandha Nila
Mannukku Vandha Nila
Ebook317 pages1 hour

Mannukku Vandha Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103803119
Mannukku Vandha Nila

Read more from Kottayam Pushpanath

Related to Mannukku Vandha Nila

Related ebooks

Related categories

Reviews for Mannukku Vandha Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannukku Vandha Nila - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    மண்ணுக்கு வந்த நிலா

    Mannukku Vandha Nila

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    வீட்டின் முன்னால் கூடியிருந்த எல்லாரது கவனமும் வாயிற்புறத்தில் இருந்தது-திருமணத்திற்கு வராத பெண்கள் மணமகளைப் பார்க்க வந்திருந்தார்கள்.

    அதோ வருகிறாள் மணப்பெண்!

    அவளுக்கு முன்னால் வந்து கொண்டிருந்த மணமகன் கேசவன் குட்டியை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. எல்லாரது கவனமும் அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மணமகள் மீதே நிலைத்திருந்தது.-ஏற்கெனவே பிரமாதமான அழகியான மணப்பெண் நீலப்புடைவை உடுத்தி, கண்களுக்கு மை எழுதி, செந்தூரப் பொட்டிட்டு, அளவுக்கதிகமான நகைகளுடன் பதுமை போலிருந்தாள்-அழகு ஜொலித்தது.

    அன்ன நடை பயின்ற அவளை, வைத்த கண் வாங்காமல் எல்லாரும் கவனித்தனர்.

    வீட்டின் முன் இருந்த துளசிமாடத்தின் அருகே அவர்கள் வந்தவுடன், மணமகனின் தாய் நாராயணி அம்மாள், வலக்காலை எடுத்து வைத்து உள்ளே வா! என்று மருமகள் ரோகிணியிடம் சொன்னாள்.

    மணமகள் ரோகிணி தனது வலக்காலை எடுத்து வாயிற்படியில் வைத்த அதே சமயத்தில் வீட்டின் பின்புறமிருந்து பயங்கரமான சப்தம் வந்தது. அதை எல்லாரும் கேட்டனர்.

    நாராயணி அம்மாள் கையிலிருந்த தூக்கு விளக்கு தரையில் விழுந்தது.

    பகவதித் தாயே என்ன இது? என்று யாரோ பயந்து கூச்சலிட்டார்கள்.

    ஆனால் மணமகள் ரோகிணி இதைப்பற்றிக் கவலையே படாமல் வாயிற்படி ஏறி உள்ளே சென்றாள்.

    பின்னாலிருந்து வந்த அந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் சிலர் அங்கே விரைந்தார்கள்.

    பெண்களில் சிலர் ஏனோ முகத்தைச் சுளித்தார்கள். அத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    பின்பக்கம் சென்றவர்கள், அங்கே சென்றதும் அதிர்ந்தார்கள். அவர்கள் கண்களில் தென்பட்டது ஒரு பயங்கரக் காட்சி!

    ஒரு பெரிய பனை மரம், மிகவும் வயதானது, அங்கே வேரோடு சாய்ந்திருந்தது.

    அரை அடி இடப்பக்கமாக மட்டும் அம்மரம் சாய்ந்திருந்தால், அந்தப் பழைய வீடு அடியோடு நாசமாகியிருக்கும்.

    வந்து பார்த்தவர்களுக்கு இது உடனே புரிந்தது. பரமேஸ்வரன் நாயர்-அவர் தான் மணமகன் கேசவன் குட்டியின் தந்தை-தன் நண்பர் ராமன் நாயரிடம் இதைச் சொல்லி வியந்தார்.

    மிகவும் நல்ல வேளை என்று பலர் பெருமூச்சு விட்டனர். பனைமரத்தின் அடிப்பாகம் மிகவும் உளுத்துப் போயிருந்தது. இன்றில்லாவிட்டால் நாளை விழுந்திருக்கும்.

    புதுப் பெண் வந்தாள், இந்த விபரீதம் நடந்தது என்று அவள் மீது பழியைப் போட நினைத்தவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள். பரமேஸ்வரன் நாயர் வீட்டு வராந்தாவில் நின்று தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    "இந்த மரத்தை வெட்டிவிட வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன்-வெட்டப் போகிறவன் மரத்தில் ஏறும்போதே மரம் சாய்ந்து விட்டால் என்ன செய்வது என்கிற பயமும் எனக்கு இருந்தது' என்றார்-நிம்மதியாகப் பெருமூச்சு விட்டபடி!

    இத்தனை நாள் அது அங்கே நின்றதே பெரிய விஷயம் என்றார் சேகரன் நாயர். அவர்தான் விழுந்த மரத்தை முதலில் போய்ப் பார்த்தவர்-இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தார்.

    அந்த ஊரில் செண்பகச்சேரி குடும்பம், மிகவும் பழைமையான குடும்பங்களில் ஒன்று. ஒரு காலத்தில் அக்குடும்பம் மிகவும் செல்வாக்குடன் நல்ல நிலையில் இருந்தது.

    அக்குடும்ப வீட்டைச் சுற்றி இப்போது இருந்த நிலம் வெறும் முப்பது சென்ட் மட்டுமே. மற்றவை விற்கப்பட்டும், பாகம் பிரிக்கப்பட்டும் கை நழுவியவை. இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் நெல்லும் மிகவும் குறைச்சல். இதைத் தவிர அந்த வீட்டிற்கு வேறு சொந்தம் ஏதும் இல்லை.

    வீட்டின் தலைவர் பரமேஸ்வரன் நாயருக்கு வேலை ஏதும் இல்லை. மகன் கேசவன் குட்டியின் சம்பளம் மட்டுமே, தற்போதைய வருமானம்-கேசவனுக்கு ஐந்து சகோதரிகள்.

    அவர்களுக்கெல்லாம் திருமணம் செய்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேசவன் சொல்லிக் கொண்டிருந்தான்-பக்கத்து ஊரில் அவனுக்கு ஆசிரியர் வேலை. அங்கே ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு வேலை பார்த்த அவனுக்கு, சம்பளத்தில் மீதமானதோ மிகவும் குறைந்த தொகை. அதுதான் வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

    கேசவனுக்கு முதலில் திருமணம் செய்தால், அதன் மூலம் கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு, ஒரு சகோதரிக்குத் திருமணம் செய்து விடலாம் என்று பரமேஸ்வரன் நாயர் நினைத்தார். அதன்படியே மூத்தவள் அஸ்வினி குட்டியின் திருமணம் அடுத்த வாரம் நடக்க இருந்தது. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவள் அவள்.

    ரோகிணி போட்டுக் கொண்டு வரும் நகைகளில் கொஞ்சம் எடுத்து அஸ்வினிக்குப் போட்டு விடலாம் என்பது பரமேஸ்வரனின் யோசனை-மகன் கேசவன் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

    மருமகளாக வந்த ரோகிணியின் வீடு அடுத்த கிராமத்தில் இருந்தது. அவளுக்குத் தந்தை இல்லை. இருந்தது தாயும் சகோதரனும் மட்டுமே! அவள் உறவு இவ்வளவு தான்!

    ரோகிணியின் குடும்பத்தைப் பற்றிய சிறிய வரலாறு அப்போது எல்லாராலும் பேசப்பட்டது.

    ரோகிணியின் தாய் மகேஸ்வரி அந்தக் காலத்திலேயே பேரழகி என்று பெயர் பெற்றவள்.

    மகேஸ்வரியின் தந்தை ஒரு நம்பூத்திரி. பிறகு அழகுக்குக் கேட்கவா வேண்டும்? கிராமத்துக் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது மகேஸ்வரியின் வீடு. கோயிலைச் சேர்ந்த நம்பூத்திரிக்குப் பிறந்தவள் மகேஸ்வரி! இவளது துரதிர்ஷ்டம் இவள் பிறந்தவுடன் நம்பூத்திரி இறந்துவிட்டார். அதனால் பந்தம் விட்டுப் போனது. அவள் தாய் மகேஸ்வரியை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டாள். இருந்தாலும் மகேஸ்வரி வளர வளர, பேரழகியாக உருவெடுத்தாள். அவளது அழகு எல்லாரையும் ஈர்த்தது. வயது வித்தியாசம் பார்க்காமல் அவள் எல்லாருடைய கனவிலும் வந்தாள். அந்த அழகு ஒரு வரப்பிரசாதம்-அசாதாரணமானது. மகேஸ்வரிக்குப் பதிநான்கு வயதான போது அவள் காலையிலும், மாலையிலும் ஒழுங்காகக் கோயிலுக்குச் சென்று வரத் தொடங்கினாள்.

    இவள் கோயிலுக்குத் தொடர்ச்சியாகச் சென்று வரத் தொடங்கிய போதுதான், அக்கோயிலுக்குச் சகல காரியங்களையும் கவனித்துக் கொள்ள ஒரு நம்பூத்திரி வந்து சேர்ந்தான்.

    அவன் பெயர் விஷ்ணு.

    பார்ப்பதற்கு அழகனாகவும், நல்ல உடற்கட்டு அமைந்தவனாகவும் இருந்த விஷ்ணுவிற்கு, மகேஸ்வரியைப் பார்த்த மாத்திரத்தில் மிகவும் பிடித்துப் போயிற்று.

    அவள் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது.

    இருவரும் நெருங்கினர்-ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினர்.

    இதன் காரணமாக விஷ்ணு நம்பூத்திரி சம்பிரதாயப்படி மகேஸ்வரியின் வீட்டிற்கு, இரவில் வந்து தங்க அனுமதிக்கப்பட்டான்.

    மகேஸ்வரி என்கிற பேரழகி, கடைசியில் விஷ்ணுவின் வலையில் விழுந்தாள்.

    இத்தொடர்பு காரணமாக மகேஸ்வரி-கர்ப்பிணியானாள். விஷ்ணு நம்பூத்திரி இதை அறிந்து மகிழ்வதற்குப் பதில், கோயில் வேலையை விட்டு விட்டு, அக்கிராமத்திலிருந்தே மறைந்து போனான்.

    இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை. இதெல்லாம் சகஜம் என்னும் பாவனையில் விட்டு விட்டனர்.

    சொல்லப் போனால் விஷ்ணுவை எல்லாரும் மறந்தே போய் விட்டனர். ஆனால் மகேஸ்வரியால் அவனை மறக்கவே முடியவில்லை. மறக்க முடியாது. விஷ்ணு அங்கிருந்து போனவுடன், கோயில் நிர்வாகத்திற்கு ஒரு நடுத்தர நம்பூத்திரி அங்கு வந்து சேர்ந்தான். ரோகிணி பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில்! இவள் தன் அம்மாவை விட அழகாக இருந்தாள்.

    வயது ஏற ஏற அவளது அழகும் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகியது.

    தாய் அழகி என்றால், மகள் அவளை விட அழகியாக இருந்தாள் என்பது கிராமத்தாரின் கணிப்பு. கோயிலில் உள்ள சிலைகளின் அழகுக்கு, ரோகிணியின் அழகை ஒப்பிட்டார்கள் கிராமத்து விடலைகள்.

    ரோகிணிக்கு ஒரு சகோதரன்-சங்கரன் குட்டி. அவனுக்கு அறவே படிப்பு இல்லை. செலவு செய்து படிக்கவைக்க வசதி இல்லாத காரணத்தால் பத்தாவது படித்தபோதே படிப்பு நின்று போயிற்று. பிழைக்க வழி வேண்டுமே?-அதனால் பக்கத்து நகரத்தில், கடைகளில் கணக்கெழுதத் தொடங்கினான். ஓரளவுக்கு வருமானம் தொடர்ச்சியாக இருந்தது.

    தலைவன் இல்லாத குடும்பம் என்றாலும், நிம்மதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு தான் இருந்தது.

    ரோகிணி எட்டாவது வரைதான் படித்தாள். பள்ளிக்கு வெகுதூரம் போக வேண்டியிருந்ததாலும் அவள் அழகே அவளுக்கு எதிரியாக இருந்ததாலும் அவளது தாய் மகேஸ்வரி, மகளின் படிப்பை அத்துடன் நிறுத்தி விட்டாள்.

    ரோகிணியின் வளர்ச்சி அபரிமிதமானது. பெண்களில் இப்படிப்பட்ட அழகியும் இருக்கிறாளா என்று மூக்கின் மீது விரல் வைக்கத்தக்க அளவில் இருந்தாள்.

    இந்தக் காரணத்தால், அவள் கோயிலுக்குக் போக மட்டும் அனுமதிக்கப்பட்டாள்.

    ஒரு நாள்...

    கோயிலுக்கு மிக அருகில், ரோகிணி தன் வீட்டுப் பசுவிற்காக, புல்லைப் பறித்துக் கொண்டிருந்தாள்.

    குனிந்த தலை நிமிராமல் அவள் புல்லைப் பறிப்பதில் ஈடுபட்டிருந்தபோது ரோகிணி என்று அவள் பெயரைச் சொல்லி ஒரு குரல்! திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அவள்.

    யாரோ ஒரு புதியவன்-அழகான இளைஞன்! சிரித்தபடியே அவளைக் கூர்ந்து பார்த்தான். அவன் கண்களில் தான் என்ன கவர்ச்சி! தன்னை அழைத்த அந்த அழகனை ரோகிணி வியப்புடன் பார்த்தாள்.

    இந்தக் கிராமத்தில் இப்படி ஓர் அழகனா?

    நான் ரோகிணிக்காகவே காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றான் அவள் கண்களைப் பார்த்தபடி.

    நல்ல உயரம். அழகான உருவம். இடுப்பில் மட்டும் ஒரு வேட்டி. மேல் ஆடை ஏதும் இல்லை.

    அவனது கருள் கருளான தலைமுடி தோள் வரை நீண்டிருந்தது. தேக்கினால் செதுக்கியது போன்ற பரந்த கட்டான மார்பு. கச்சிதமான வடிவுடன் இருந்த வயிற்றுப் பகுதி. நீண்ட மூக்கு, முகத்தில் மீசை இல்லை. ஆனால் கண்களில்தான் என்ன கவர்ச்சி!

    ரோகிணி தன் நிலைக்கு வந்த பிறகு சுற்றுமுற்றும் பார்த்தாள். அங்கே வேறு யாரும் இல்லை. உடனே அவளுக்குப் பயம் வந்து விட்டது. உடல் நடுங்கியது.

    அதனால் பறித்த புல்லைக்கூட எடுத்துக் கொள்ளாமல் ஒட்டமாக ஒடி வீட்டிற்கு வந்தாள்.

    பரபரப்புடன் ஓடி வந்த மகளைப் பார்த்து தாய் கேட்டாள்.

    புல் எங்கே?

    அதற்குப் பதில் சொல்லாமல் பயந்து அழுத ரோகிணியை, தாய் மெதுவாகச் சமாதானப்படுத்திக் கேட்டபோது, ரோகிணி தனக்கு ஏற்பட்ட அந்த விசித்திர அனுபவத்தை விவரித்தாள்...

    தாய் இதைக் கேட்டு அதிர்ச்சி அடையவில்லை. வாலிப வயதில் எவனோ ரோகிணியிடம் தவறாக நெருங்கியிருக்கிறான் என்று அவள் நினைத்தாள்-மகளின் ஆறுதலுக்காக,

    சங்கரன் வரட்டும் பார்க்கலாம்! என்றாள். வேலையிலிருந்து சங்கரன் வந்ததும், தாய் அவனிடம் விவரத்தைச் சொல்ல, அவன் உடனே சென்று தன் கிராமத்து சிநேகிதர்களுடன் சேர்ந்து, அந்தப் புதியவனைப் பற்றி விசாரித்தான்.

    ரோகிணி சொன்ன அடையாளத்தில் அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் எந்த வாலிபனும் இல்லை. அந்த விஷயம் அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் வேறு விதத்தில் தொடராமல் இல்லை. மறுநாள் ரோகிணி துளசி மாடத்தில் விளக்கு வைத்துக் கொண்டு இருந்தாள், வைத்துவிட்டு நிமிர்ந்தபோது எதிரே அதே அழகான வாலிபன்!

    அம்மா! என்று ரோகிணி அலற, தாய் மகேஸ்வரி அங்கே ஓடி வந்தாள்.

    அந்த வாலிபனைக் காணவில்லை.

    மகள், தான் பார்த்ததாகச் சொன்ன விஷயத்தைத் தாய் நம்பவில்லை என்பதை, அவள் முகம் காட்டியது.

    ஆனால், அன்று இரவு ரோகிணியின் கனவில் அந்த அழகன் தோன்றினாள்.

    அவளது இடுப்பை லாகவமாக இழுத்து, தன்னுடன் அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான். மயங்கினாள். அப்படியே அவளை மெதுவாகப் படுக்கையில் சாய்த்தான்... அதற்குப் பிறகு அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் இதுவரை அவள் அனுபவித்திராத,

    இனிய அனுபவம்!

    திடுக்கிட்டு அவள் விழித்துக் கொண்டாள்.

    யாரோ தன் அருகில் படுத்திருப்பதாக நினைத்துக் கூச்சலிட்டாள்.

    மகனும், தாயும் உள்ளே ஓடி வந்தார்கள்.

    சகோதரனைக் கண்டதும், ஒன்றுமில்லை என்று சொன்னவள், தாயிடம் நடந்த கனவைப் பற்றிச் சொன்னாள்...

    அதற்குத் தாய் அளித்த பதில்

    ஒன்றுமில்லை... பேசாமல் படுத்துத் தூங்கு என்று சொன்னாளே தவிர, அவளது மனத்தில் ஒரு முடிவு அப்போதே தோன்றிவிட்டது.

    மறுநாள் சங்கரன், தாயின் உத்தரவுப்படி ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1