Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naaga Salangai
Naaga Salangai
Naaga Salangai
Ebook344 pages3 hours

Naaga Salangai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103803109
Naaga Salangai

Read more from Kottayam Pushpanath

Related to Naaga Salangai

Related ebooks

Related categories

Reviews for Naaga Salangai

Rating: 4.6 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naaga Salangai - Kottayam Pushpanath

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நாகச் சலங்கை

    Naaga Salangai

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    தமிழில்: சிவன்
    Kottayam Pushpanath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    வெண்ணிமலை கிராமம் கடந்த சில வாரங்களாக திருவிழாவின் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

    நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அங்கு ஒரு போட்டி நடப்பது வழக்கம். அது வெண்ணிமலை கிராமத்தை ஆட்கொண்ட நாட்டு மன்னர்கள் காலங்காலமாகக் கைக்கொண்டுவரும் ஒரு வழக்கமும்கூட.

    இந்தச் சந்தர்ப்பத்தில் அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து திறமை வாய்ந்த நாட்டியமணிகள் பலர் வெண்ணிமலை கிராமத்துக்கு வந்து, அங்குள்ள அரண்மனை நாட்டிய மண்டபத்தில் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இந்த நாட்டியப் போட்டியில் வெற்றி பெற்றால் கிடைப்பது வெறும் பரிசும், பொன்னாடையும் மட்டுமல்ல; வெற்றி பெற்ற நாட்டியத்தாரகை தனது வாழ்நாள் முழுவதுக்குமான செல்வத்தையும் பெறுவாள். சில சமயம் அது அவளது தலைமுறைக்கே கூடப் போதுமானதாக இருக்கும்!

    தேவகன்னிகையரையே தோற்கடிக்கும் நாட்டியப் பெண்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து, ஏற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான நிலவிளக்குகளுக்கு நடுவே சுழன்று ஆடும்போது இயற்கையேகூட புல்லரித்துப் போகும்.

    வெண்ணிமலையிலுள்ள கோயில் எத்தனையோ நூற்றாண்டுகளின் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் அதாவது, சேரமான் பெருமாள் ஒரு தடவை கப்பல் பயணத்தை மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாகப் புயலடித்துப் பயணம் தடைப்பட்டது. கப்பல், கொந்தளிக்கும் கடலில் தத்தளித்ததாம்.

    அப்போது கப்பலின் மேல் தளத்திலிருந்த மன்னரின் கண்களுக்கு ஒரு காட்சி தட்டுப்பட்டது. கிழக்குத் திசையில் - வெகுதொலைவில் பிரகாசமான ஒளியொன்று அவரை கைகாட்டி அழைப்பது போல் தோன்றியது. (கேரளம் மேற்குக் கரையில் அமைந்திருப்பதால், கடலின் கிழக்குப் பகுதியில்தான் கரை உள்ளது) அது என்னவென்று தெரிந்துகொள்ள மன்னர் விரும்பினார். அதேசமயம் காற்றும் சற்று மட்டுப்பட்டு கப்பலை அந்தத் திசை நோக்கிச் செலுத்தியது.

    கரையை நெருங்கியபோதுதான் அது ஒரு காட்டுப்பகுதி என்பதும், பிரகாசம் தென்பட்ட இடம் ஒரு மலை உச்சி என்பதும் தெரிந்தது. அந்தக் குன்றின் உச்சியை அடைந்தபோது அங்கு பிரமாண்டமான ஆலமரம் ஒன்று விழுதுவிட்டு வளர்ந்திருந்தது.

    நாகங்களைப் போல் வளைந்தும் நெளிந்தும் கண்டபடி வளர்ந்திருந்த ஆல மரத்தின் வேர்ப் பகுதியில் சுயம்பு வடிவமானதுபோல் இரண்டு சிலைகள் தென்பட்டன. ஊன்றிக் கவனித்தபோது அவை ராம் - லஷ்மணர்களின் சிலை என்பது புரிந்தது.

    பக்திப் பரவசத்தில் மூழ்கிய மன்னர் சேரமான் பெருமாள், அந்த இடத்திலேயே கோயில் ஒன்றைக் கட்டி, அந்தச் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். அதுமட்டுமல்லாமல் தனது மருமகன்களில் ஒருவனை அந்தப் பகுதியின் மன்னனாகவும் நியமித்தார். (கேரளத்தில் சொத்துக்கள் தாய்வழி உறவுக்குத்தான் சேரும் வழக்கம் 1972 வரை வழக்கில் இருந்தது. ஒரு குடும்பத் தலைவனின் வாரிசு அவனது சகோதரியின் மூத்த மகன்தான். இந்த முறைக்கு மருமக்கள் தாயம் என்பது பெயர்)

    காலம் சில கடந்த பிறகு அந்த மன்னனுக்கு உறவுமுறை வாரிசு எதுவும் இல்லாமல் போனது. எனினும் அந்த மன்னனின் தூரத்து உறவினரான ஒருவர் மன்னரானார். இப்படி எதிர்பாராமல் மன்னரானவர் ஏற்படுத்தியதுதான் இந்த நாட்டியப் போட்டி. அவர் தொடங்கியபோது நாட்டியம் மட்டுமின்றி போர்க்கலைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகள் தொடர்ந்து நாற்பத்து இரண்டு நாட்கள் நடக்குமாம்.

    முதலில் நடைபெறுவது நாட்டியப் போட்டி. மாந்திரீகத்திலும் நாட்டியத்திலும் தேர்ந்த மகேந்திரன் பட்டதிரிப்பாடின் சிஷ்யை செண்பகலட்சுமியும், வலியகுளங்கரை பாஸ்கரக் குறுப்பின் மகள் விஜயலட்சுமியும் தொடக்க விழா போட்டியில் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வலிய குளங்கரை பாஸ்கரக் குறுப்பின் மகள் விஜயலட்சுமிக்கு ஏற்கெனவே நாட்டியத்தில் நல்ல பேரிருந்தது.

    பதிநான்காம் வயதில் ஐந்து மணி நேரம் தொடர்ந்து நடனமாடி, நான்கு வருடங்களுக்கு முன்பு தன்னோடு போட்டியிட எவரும் இல்லை என்பதை நிரூபித்திருந்தாள் அவள். மின்னல் நகர்வது போன்ற லாகவத்துடன் அவளது கால்கள் மேடையில் விரையும். கையின் அபிநய முத்திரைகளில் சங்கு சக்கரங்கள் கண்ணுக்கே தென்படும்.

    வடிவழகோ, கோயில் சிற்பங்களில் காணக்கூடிய தேவநர்த்தகியரின் உருவம் போன்றது.

    அப்சரஸ் மாதிரியான அழகுள்ள அவளை எதிர்த்து நடனமாட, மற்றவர்கள் பயந்ததும் உண்மைதான்!

    அவளது பதினாறாவது வயதிலேயே இதனால் ஒரு பெரிய ஆபத்து நிகழவிருந்தது.

    அன்று வெண்ணிமலை கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.

    ஏழு யானைகள் நெற்றிப்பட்டம் எனப்படும் முகபடாம்கள் அணிந்து வரிசையாக நின்றுகொண்டிருந்தன. யானை வரிசையின் மையத்தில் ‘கொச்சு கேசவன்’ என்ற யானை உற்சவமூர்த்தியைச் சுமந்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. எல்லோரது கவனமும் திருவிழா பார்ப்பதிலேயே இருந்தது. அப்போது முன்பின் பார்த்தறியாத யாரோ ஒருவர், யாருக்கும் தெரியாமல் யானை வரிசையை நெருங்கினார். யானையின் அருகிலிருந்த பாகனிடம் எதையோ கொடுத்துவிட்டு, காதில் எதையோ கிசுகிசுத்தபடி வந்தவர் திரும்பிப் போனார்.

    இரவு மணி பத்தைத் தாண்டியது. திருவிழா முடிந்து, உற்சவரை இறக்கிய பிறகு யானையைக் கட்டிப்போடுவது வலியகுளங்கரை பாஸ்கரக் குறுப்பின் வீட்டுக்கு அருகில் தான். அப்போது யானைக்கு அவரது மகள் விஜயலட்சுமி ஊறவைத்துச் சர்க்கரை போட்டுப் பிசைந்த அவிலையும், பழங்களையும் கொடுப்பது வழக்கம்.

    வழக்கம் போல் அவள் அவிலும் பழமும் கொடுப்பதற்குப் போனாள்.

    சட்டென்று திரும்பிய யானை அவளைத் தும்பிக்கையால் தூக்கி உயர வீசியெறிந்தது.

    அலறல் ஒன்று ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது!

    எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தரத்தில் உயர்ந்த விஜயலட்சுமி, இரண்டு மூன்று தடவை சுழன்று யானையின் முதுகின் மீதே வந்து விழுந்தாள்.

    பரிசோதனையில் யானைக்கு எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

    எதனால் இப்படி நிகழ்ந்ததென்று யாருக்கும் எதுவும் புரியவில்லை.

    என்ன காரணத்தாலோ கொச்சு கேசவன் அதன் பிறகு அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. விஜயலட்சுமிக்குத் தொல்லை கொடுத்ததால் ஏற்பட்ட சாபம்தான் அதற்குக் காரணமாக இருக்கும் என்று ஊரார் நினைத்தனர்.

    நாள்கள் நகர்ந்தன. அதன் பிறகு குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

    வெண்ணிமலை அரண்மனையின் நடன அரங்கம் நிறைந்து வழிந்தது. ஐந்து நிலவிளக்குகள் மண்டபத்துக்குக் கீழே தீபங்களைச் சுமந்து எரிந்து கொண்டிருந்தன.

    மேடை மீது சரிகை வைத்த திரைச்சீலை மடிப்புகளுடன் காற்றிலாடிக் கொண்டிருந்தது. அதன் இருபுறத்திலும் கைகூப்பியபடி இரண்டு நடனப் பெண்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தன.

    மண்டபத்தின் இருபுறமும் இருந்த அறைகளில் நடனப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.

    ***

    மகாமாந்திரீகனான மகேந்திரன் பட்டதிரி ஹோமம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.

    அவருக்கு முன் புறம் இருந்த காளி மற்றும் நாக விக்கிரகங்களின்மீது ரத்தத்தைப் பூசி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

    கறுப்பு நிற சேவல்களின் தலைகளைத் துண்டித்து, சூடான ரத்தத்தை விக்கிரங்களின் மீது சொட்ட விட்டபோது அவற்றிலிருந்து கறுப்பு நிறப் புகை உயர்ந்தது.

    கடைசியில் அவர் தனது வலதுகைச் சுண்டுவிரலை கத்தியால் லேசாக வெட்டிக்கொண்டு, அதிலிருந்து துளிர்த்த ரத்தத்தை நாகவிக்கிரகத்தின் மீது சொட்டுச் சொட்டாக விட்டார்.

    அப்போது அதிசயகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

    நாக விக்கிரகத்தின் கழுத்தில் ரத்தம் விழுந்த பகுதியிலிருந்து நிதானமாக ரத்தத்துளிகள் கீழ்ப்புறமாக வழியத்தொடங்கியது. படிப்படியாக அதற்கு உயிர் ஏற்பட்டது.

    ஒரு சில விநாடிகளுக்குள் இரண்டு கருநாகங்கள் அங்கிருந்து ஊர்ந்து தரைக்கு வந்து பிணைந்து கொண்டு அசைந்தன.

    மகேந்திரன் பட்டதிரி மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு, மறுபடியும் அந்த நாகங்களின் மீது ரத்தத்தை வீழ்த்தினார்.

    சட்டென்று தங்களின் அசைவை நிறுத்திக்கொண்ட கருநாகங்கள் இரண்டும் சலங்கைகளாக உருமாறின.

    யார் பார்த்தாலும் சந்தேகப்பட முடியாத இரண்டு சலங்கைகள்!

    பட்டதிரி அந்தச் சலங்கைகளைக் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்தார்.

    அவை நாதமெழுப்பின. நன்றாக இருக்கிறது! - பட்டதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

    அந்தச் சலங்கைகளுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டார். மகேந்திரன் பட்டதிரி, லட்சுமிக்குட்டி எனும் சாகசக்காரியை வேலைக்காரியாக நியமித்திருந்தார்.

    எதற்கும் தயாரானவள் லட்சுமிக்குட்டி.

    முப்பத்தைந்தைக் கடந்த லட்சுமிக்குட்டி, எப்படிப்பட்டவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவள்; மட்டுமின்றி எல்லாவித வித்தைகளும் கற்றவள்.

    முன்னொரு காலத்தில் அவளும்கூட ஒரு நாட்டியக்காரிதான். எனவே, அவளுக்கு நாட்டியத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தற்போது உடம்பு சற்றுப் பெருத்துவிட்டதால் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை.

    இருப்பினும் நடன நிகழ்ச்சிகளில் உதவச் செல்வதுண்டு.

    அவள் எல்லாவிதத்திலும் மகேந்திரன் பட்டதிரிக்குப் பொருத்தமானவள்தான். அவருக்குச் சமைத்துப் போடுவதும், கவனித்துக் கொள்வதும் லட்சுமிக்குட்டிதான்.

    அங்கிருந்து புறப்படும்போது அவளையும் அழைத்துக் கொண்டு போவதாக பட்டதிரி ஏற்கெனவே வாக்களித்திருந்தார்.

    சலங்கைகளுடன் வந்தார் பட்டதிரி.

    லட்சுமிக்குட்டி! - அழைத்தார்.

    என்னங்க திருமேனி? - அவள் அறைக்குள்ளிருந்து ஓடிவந்தாள்.

    உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை ஒப்படைக்கப் போறேன் - பட்டதிரி அந்தச் சலங்கைகளை ஒரு பையில் போட்டார்.

    என்ன வேணும்னாலும் சொல்லுங்க. தலையே போறதானாலும் நிறைவேத்துறேன்… எதுவா இருந்தாலும் சொல்லுங்க! லட்சுமிக்குட்டி பணிவுடன் கூறினாள்.

    இந்தப் பையில் இரண்டு சலங்கைகள் இருக்கு. இதை விஜயலட்சுமியோட காலில் கட்டணும். ஒருவேளை அதுக்குள்ள அவள் சலங்கை கட்டித் தயாராகியிருந்தாலும் இதை அவள் கால்லே கட்டியே தீரணும்! பட்டதிரி கட்டளையிடுவதுபோல் கூறினார்.

    கண்டிப்பா செய்யுறேன்! - அவள் உறுதியளித்தாள்.

    அப்படின்னா உடனே கிளம்பு! பட்டதிரி விரட்டினார்.

    லட்சுமிக்குட்டி சலங்கைகளுடன் ஒப்பனை அறையை நோக்கி ஓடினாள்.

    அதற்குள் விஜயலட்சுமி ஒப்பனை முடிந்து தயாராகி விட்டிருந்தாள். இறுதிக்கட்டமாகச் சலங்கையை அணிய முற்பட்டாள்.

    என்னம்மா… சலங்கையை நீங்களே தனியா கட்டிக்கிறீங்களா! இது சரியா? கொஞ்சம் இருங்க நானே கட்டி விடுறேன் லட்சுமிக்குட்டி நட்புடன் பேசினாள்.

    ஒரு விநாடி யோசித்த விஜயலட்சுமி அதற்குச் சம்மதித்தவளாக உடனே இருகால்களையும் நீட்டி உட்கார்ந்து கொண்டாள்.

    தனது கழுத்திலும், மார்பிலும் செய்திருந்த மற்ற அலங்காரங்களைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்ட விஜயலட்சுமி திருப்தியடைந்தாள். அந்தக் குறுகிய காலத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்ட லட்சுமிக்குட்டி, பையிலிருக்கும் சலங்கைகளைச் சட்டென்று எடுத்து விஜயலட்சுமியின் கால்களில் கட்டினாள்.

    இந்தச் சலங்கைகள்? சட்டென்று சலங்கை மாறியிருப்பதை உணர்ந்த விஜயலட்சுமி கேட்டாள்.

    நல்ல சலங்கைகள்தான். ரொம்ப அழகா இருக்குது இல்லைங்களா? இதைக் கட்டிக்கிட்டா வெற்றி நிச்சயம் உங்களுக்குத்தான்! லட்சுமிக்குட்டி சிரித்தபடியே கூறினாள்.

    2

    சலங்கைகளைக் கட்டி முடித்ததுமே லட்சுமிக்குட்டி அங்கிருந்து புறப்பட்டாள்.

    காரணம், அவள் திரும்பிப் பார்த்தபோது மிக அருகில் சிற்ப வேலைகள் நிறைந்த தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஜயதேவன்.

    ஜயதேவன், அரண்மனையின் தலைமைக் காரியஸ்தரான ஸ்ரீதர வாரியாரின் நண்பனும் விஜயலட்சுமியின் குருவும் கூட.

    இளைஞன். அழகானவன். கட்டுடல் கொண்டவன்.

    பார்வைக்கு நடனப் பயிற்சி பெற்றவன் என்றே தோன்றாது. சாதாரணமான கிராப் வைத்திருந்தான்.

    கழுத்தில் தாயத்துக் கட்டிய நீளமான தங்க செயின் அணிந்திருந்தான். கூடவே பூணூல்.

    ஜயதேவன் நடனப் பயிற்சி பெற்றதன் பின்னணியில் அற்புதமான ஒரு கதையே இருக்கிறது.

    ஒரு தடவை மலபார் பகுதியிலுள்ள (வடகேரளம்) கோயில் ஒன்றில் ஜயதேவன் பூசாரியாக நியமனம் பெற்றான். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததால்தான் ஜயதேவன் இதற்கு ஒப்புக்கொண்டான்.

    மருமக்கத்தாயம் அமலிலிருந்த குடும்பம் அவர்களுடையது. காரணவர்கள், (குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மாமன் அங்கு குடும்பத்தலைவராக மதிக்கப்படுகிறார்). திருவிழாக்கள் நடத்தியும், ஊர்சுற்றியும் குடும்பச் சொத்துக்களைக் கண்டபடி கரைத்து விட்டிருந்தனர். கடைசியில் அந்தக் குடும்பத்தில் ஜயதேவனும், அவனது பாட்டியும் மட்டுமே மீதமானார்கள். அவனுடைய அம்மா, அவனது சிறு வயதிலேயே இறந்து விட்டார்.

    ஏதாவது வேலை செய்தால்தான் சாப்பிட முடியும் என்கிற நிலை. இப்படித்தான் ஐந்து ஊர்க்காரர்கள் சேர்ந்து நிர்வகிக்கும் சிவன் கோயிலுக்கு ஜயதேவன் பூசாரியாக வந்து சேர்ந்தான்.

    பூஜை வேலைகள் முடிந்த பிறகு ஜயதேவன் அந்தக் கோயிலிலேயே படுத்துக்கொள்வது வழக்கம். வீடு இல்லாத அவன் வேறு எங்கு செல்ல?

    அன்று பெளர்ணமி இரவு. கார்த்திகை மாதத்தின் தெளிந்த ஆகாயம்.

    கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பஜனைக் கூடத்தில்தான் ஜயதேவன் படுப்பான்.

    அங்கு படுத்தால், கிழக்குத் திசையிலுள்ள குன்றின் உச்சியில் பெளர்ணமி நிலவு ஒரு பெரிய தங்கத் தட்டைப் போல் உயர்ந்து வருவது நன்றாகத் தெரியும்.

    அதையே வேடிக்கை பார்த்தபடி ஜயதேவன் படுத்திருந்தான்.

    வானத்தில் ஊர்ந்து கோயிலின் உச்சியிலுள்ள கும்பத்தின் மீது ஒட்டவைத்தது மாதிரி முழுநிலவு வந்து நின்றது. அப்போது சட்டென்று எங்கிருந்தோ கால்சிலம்புகளின் சத்தம் கேட்டது.

    சல்… சலங்… சல்… சலங்…

    நிழலும் வெளிச்சமும் இணைந்து வரைந்திருந்த ஓவியங்கள் உறங்கிக் கிடக்கும் ஆளரவமற்ற அந்தக் குன்றின் உச்சியில், யார் கால்சிலம்பை ஒலிக்கவிட்டு நடக்கிறார்கள்?

    ஜயதேவன் காதைக் கூர்மையாக்கினான். யாரது?

    மறுபடியும் அந்தச் சத்தம் காதில் வந்து மோதியது. அத்துடன் பாலைப்பூவின் மணமும் இணைந்து வந்தது.

    அருகில் எங்கும் பாலை மரம் இல்லை. இருக்கும் ஒரே மரமும் ஆலமரம்தான். ஆலமரத்தின் தளிரிலைகள் ஆயிரம் ஆயிரமாக நெய் விளக்குத்திரிகள் போல் பெளர்ணமி நிலவொளியில் பளபளத்தன.

    சல்… சலங்… சல்… சலங்

    ஜயதேவன் சட்டென்று விழித்து எழுந்து உட்கார்ந்தான். அப்போது கோயிலின் வடபுறமிருந்த குளத்தின் அருகிலிருந்து யாரோ நடந்து வருவதுபோல் தோன்றியது.

    ஆலமரத்தின் கிளைகள் வீழ்த்திய நிழல்களில் மறைந்தும், இலைகளின் இடைவெளிகள் ஏற்படுத்திய வெளிச்சத்தில் தெளிவடைந்தும் தெரிந்த அந்த உருவம், ஜயதேவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இப்போது அவள் பலிக்கல்லைத் தாண்டி வந்து விட்டிருந்தாள்.

    ஜயதேவன் அவளை நிலவொளியில் பார்த்தான்.

    நிலவிலிருந்து பெயர்ந்து விழுந்தது போன்ற ஒரு தேவ கன்னிகை.

    உயிர்பெற்று எழுந்து வந்த ஒரு நடனச்சிலை.

    அவளது நடைக்கே ஒரு தாளலயம் இருந்தது.

    ஜயதேவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

    இந்தக் கோயில் பூசாரிதானே நீங்க? - அவள் கேட்டாள். ஜயதேவன் பதிலளிக்கவில்லை.

    அவளுடைய குரலுக்கே ஒருவிதப் பிரத்தியேகத் தன்மை இருந்தது. அசாதாரணமான ஒரு குரல்.

    நடனம் பிடிக்குமில்லையா? - அவள் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

    ‘இது இவளுக்கு எப்படிப் புரிந்தது?’ ஜயதேவன் வியப்பின் வசப்பட்டான்.

    ம்… - இம்முறை அவன் பதிலளித்தான்..

    நடராஜ குருதானே உங்களுக்கும் குரு? அவள் கேட்டாள்.

    ‘கடவுளே… இதுகூட இவளுக்குத் தெரிந்திருக்கிறதே!’ - அவனது வியப்பு எல்லை கடந்தது.

    அப்பா, வீட்டுக்கு வந்துபோய்க் கொண்டிருந்தபோது ஜயதேவனுக்கு ஏழு வயது.

    அப்பாவுக்கு நடனத்தின் மீது அபாரமான பற்று இருந்தது. அதனால், அவர் தன் மகனை மிகவும் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரான நடராஜ குருவிடம் நடனம் கற்க அனுப்பி வைத்தார். ஆனால், அந்தப் பயிற்சி அதிகநாள் நீடிக்கவில்லை. அதற்குள் அப்பா கிளம்பிவிட்டார். அம்மாவும் இறந்துவிட்டாள். அதன் பிறகு அவனது எதிர்காலமே இருண்டு போனது.

    பின்னர் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கோயிலில் பூசாரித் திருமேனியின் சீடனானான். அவரும் அன்பு நிறைந்தவர். அதனால் அவரிடமிருந்து ஓரளவு மந்திரதந்திரங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுமட்டும் தான் தற்போது ஜயதேவனிடம் உள்ள மொத்தச் சொத்து.

    ஆனால், நான் நடனப் பயிற்சியை முழுவதுமாக முடிக்கவில்லை… - ஜயதேவன் அவளைப் பார்த்தபடியே பேசினான்.

    தெரியும்… எல்லாம் எனக்குத் தெரியும். நடராஜ குரு இங்கே வந்திருக்கிறார். பஜனை நடத்தியிருக்கிறார். அவர் நடனம் கற்றுக்கொண்டதுகூட இங்கிருந்துதான்.

    இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? - ஜயதேவன் கேட்டான்.

    நான் சொன்னதெல்லாம் உண்மைதானே? விசாரித்தாள்.

    உண்மைதான்!

    மேற்கொண்டும் நடனம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அவள் மேலும் சற்று நெருங்கி வந்தாள்.

    ஜயதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாமே ஒரு கனவு மாதிரி இருந்தது.

    அவள், அவனுக்கு முன்பாக நடனம் ஆடத் தொடங்கினாள்.

    அவளது கால் சலங்கைகளின் சத்தம், கோயிலின் கல் சுவர்களிலும், கருங்கல் சலாகைகளிலும் மோதி எதிரொலித்தன.

    எழுந்திருங்கள். அவள் நெருங்கி, அவனது கையைப் பிடித்தாள். ‘எவ்வளவு மென்மையாக இருக்கின்றன அவளது விரல்கள்…’

    அவள் அவனைத் தொட்டபோது என்னவென்று விளக்க முடியாத புத்துணர்வு ஜயதேவனின் ரத்தக் குழாய்களின் ஊடாகப் பாய்ந்தது.

    அவன் எழுந்தான்.

    அவள், அவனது கைவிரல்களை முத்திரைகளின் வடிவத்திலாக்கினாள்.

    ஒவ்வொரு பாவமுத்திரையையும் அவள் அவனுக்குக் கற்பித்தாள்.

    சங்கு, சக்கரம், கதாயுதம், பத்மம் என்று இப்படி எல்லாவற்றையும். கட்டழகு வாய்ந்த அவளது உடலில் அணிந்திருந்த உடைகள் பனிமூட்டம் போல் சன்னமானவையாக இருந்தன.

    மூன்றாம் பிறை போன்ற அவளது நெற்றியும்… இந்திரவில்லை வெல்லக்கூடிய புருவக் கொடிகளும்…

    குறும்பு அலையடித்துக் கொண்டிருக்கும் கோபுர மூக்கு நுனியும்…

    தாமரை இதழ்கள் போன்ற அதரப் பகுதிகளும்…

    ராகம், தாளம், பல்லவி போன்றவை ஊற்றெடுக்கும் அவளது விழிகளிரண்டும்… ஜயதேவனில் ஒன்றிக்கலந்தன.

    "நாளைக்கும் நான் வருவேன்… காத்திருங்கள்…

    Enjoying the preview?
    Page 1 of 1