Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athimalai Devan - Part 2
Athimalai Devan - Part 2
Athimalai Devan - Part 2
Ebook794 pages8 hours

Athimalai Devan - Part 2

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

அத்திமலைத்தேவன் பலரையும் மலைப்பில் ஆழ்த்தி விட்டதை உணருகிறேன். சாணக்கியன் காஞ்சியில் தோன்றியவன் என்பதே பலருக்குத் தெரியவில்லை. சந்திரகுப்தன் ஒரு காட்டுவாசி என்பதும் பலரும் அறிந்திராத விஷயம். Incubator - இல் இன்று குழந்தைகளை வைத்து உயிர் வாழ வைப்பது போன்று, சாணக்கியன் பிந்துசாரனை இயற்கை Incubator - இல் வைத்துக் காப்பாற்றினான் என்பது பிரமிப்பினை ஏற்படுத்தும் விஷயம் என்று பலரும் கூறினார்கள். சாணக்கியன் பொக்கை வாயன். ஆனால் அவன் பற்களை இழந்த விதம் உருக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் தெரிவித்தனர். அத்திமரம், குறிப்பாக தேவ உடும்பர அத்திமரம் குறித்த தகவல்கள், பட்டுப்பூச்சி ஆருடம், என்று பல அறிய விஷயங்களை கற்றோம் என்று பலரும் கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

துர்தரா, திஸ்ஸரக்கா ஆகியோரின் கதாபாத்திரங்களை கண்டு மலைத்துப் போனவர்களும் உண்டு. அசோகன் கலிங்கத்துப் போரில் புரிந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்லை என்று பலரும் சொன்னார்கள். உண்மை. சரித்திரம் என்பது ஒருவரின் குணங்களை நேர்மறையாகவே சித்திரிக்கும். அவரது எதிர் மறை குணங்களை ஒருபோதும் பிரதிபலிக்காது. எனவேதான், சுத்த சத்வமாக சித்திரிக்கப்பட்ட சரித்திர பாத்திரங்களின் உண்மையான குண நலன்களை எனது புதினங்களில் நான் எழுதும் போது பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அசோகன் மரம் நட்டார் என்று நமக்குக் கூறப்பட்டதே தவிர அவன் மனைவி மரத்தை வெட்டினாள் என்று யாரும் நமக்குக் கூறவில்லை .

அத்திமலைத்தேவனில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சில பெண் வாசகர்கள் குறிப்பிட்டனர். நான் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை நிகழ்வுகள். சந்திரகுப்தன், பிபத்த தேவன் இருவரில் யார் மவுரிய மன்னன் என்பதற்காக நடைபெற்ற போட்டியில், சந்திரகுப்தன் பிபத்தனின் தலையை வெட்டியெறிந்த பிறகே மன்னன் ஆனான் என்கிற குறிப்புகள் சரித்திரத்தில் இருந்தன. நந்தன் கொலை, துர்தரா கொலை அனைத்துமே சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். கொலையை நான் சற்று எனது கற்பனை வர்ணனைகளுடன் விவரித்துள்ளேன். கொலைகள் நடந்தது உண்மை.

2018 இறுதியில் சிக்கிம் மாநிலத் தலைநகரில் -- காங்க்டாக் நகரில் உள்ள ரும்டேக் புத்த விகாரத்தில் உள்ள ஒரு புத்த பிக்குவைச் சந்தித்தேன். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்த போதி மரம், அதனை திஸ்ஸரக்கா சிதைத்தது, உரக சூத்ரம், தாமரை சூத்ரம் மற்றும் அத்திமர பெருமைகள் ஆகியவற்றைப் பற்றி நான் கூற, மலைப்பின் உச்சத்தில் அவர் நின்றார். அவர் "இந்த விவரங்களை எல்லாம் இந்த காலத்தில் புத்த பிக்குகளே அறிவதில்லை. வெறும் மனம் குவிதல் மற்றும் தியான பயிற்சிகளைத்தான் போதிக்கின்றோமே தவிர, புத்த தத்துவ சரித்திரங்களை நாங்களே போதிப்பதில்லை” என்றார்.

நான் அத்திமலைத்தேவன் எழுதுவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது, நான் எதிர் கொண்டிருந்த இன்னல்கள் அனைத்தும் அவரது பாராட்டினால் கதிரவனைக் கண்ட பனியாக மறைந்து போனது. அவரது புகழுரைகள் தந்த உத்வேகத்தில், சென்னை வந்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதத் துவங்கினேன்.

கலைமகள் நிர்வாக ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது புதினம் அத்திமலைத்தேவனை அலசுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைத்து, எனது கருத்துகளையும் கூறுவதற்கு என்னை அழைத்தார்.

பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

ஜனவரி, 29 செவ்வாய்க்கிழமை ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் TAG நிறுவன தலைவர் R.T. சாரி, திரு. ரவி தமிழ்வாணன், திரு. R.V.ராஜன் ஆகியோர் முன்னிலையில் திரு. சந்திரமோகன் என்னும் நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் எனது நாவலை விமர்சித்திருந்தார். கிடைக்கப் போவது பூமாலையா அல்லது காமாலையா என்று யோசித்து நின்ற வேளையில் எனக்குப் பாமாலையே சூட்டிவிட்டனர். அவர்களை அத்திமலையான் மிகவும் பாதித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வாசகர் என்னிடம் ரகசியமாக வந்து, இதே டெம்போவில் மற்ற பாகங்களும் இருக்கும் அல்லவா? என்றும் கேட்டார். அதற்கு அத்திமலையான் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.

இன்னும் ஒரு வாசகர், தங்களது பத்திரிகை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் புதினங்களை எழுதுங்கள் என்றார். எனது தாய் தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

முழு திருப்தியுடன் இதோ அடுத்த பாகத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

- 'காலச்சக்கரம்' நரசிம்மா.
'98417 61552

Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580132105343
Athimalai Devan - Part 2

Read more from Kalachakram Narasimha

Related to Athimalai Devan - Part 2

Related ebooks

Related categories

Reviews for Athimalai Devan - Part 2

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athimalai Devan - Part 2 - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    அத்திமலைத் தேவன் - பாகம் 2

    Athimalai Devan - Part 2

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    முதல் பாகத்தில்...

    முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான ஆதார நூல்கள்

    1. நடுநிசியில் மந்திராலோசனை

    2. வீரகொசுவன் கையில் ஒரு தலை

    3. விமோச்சனம் தேடும் லோச்சனம்

    4. உதயமானான் உதயசாகரன்!

    5. முக்கண்ணனும், கரிகாலனும்

    6. என்ன பார்வை உந்தன் பார்வை!

    7. சீற்றம்மிகு வேகவதி! சீர்மிகு காவிரி!

    8. கண்ணாலே கதை பேச வந்தவள்

    9. புனலை எரிக்கும் கனல்கண்ணன்

    10. பிரும்ம ஓலை

    11. சகலகலா சகலைகள்

    12. வண்டுக்கு வண்டு தாவும் மலர்

    13. அகந்தை அழிந்தது

    14. திசை மாறிய நதிகள்

    15. கரிகாலனின் காலணிகள்

    16. காஞ்சி பிறந்தது

    17. உனக்கு அவள்! எனக்கு நீ!

    18. மாப்பிள்ளை... மாயப் பிள்ளை

    19. பாரத புழா! பாதக விழா!

    20. கடிகையில் கலவரம்

    21. ஒரு வசீகரன்... ஒரு வசீகரி

    22. ஆற்று மேடையில் ஒரு அந்திம நடனம்

    23. கேட்டது ஒன்று… பெற்றது மூன்று

    24. குருவுக்கு ஒரு பரீட்சை

    25. கடலைக் கடைந்த காரிகை

    26. மகத வீணையில் மகத்தான ரகசியம்

    27. மாயமான மகுடம்

    28. பிருத்வி பந்தனம்

    29. அரசியின் விபரீத ஆசை

    30. காஞ்சியை நோக்கிப் பாயும் கடற்கோள்

    31. ஊனமாகிய ஹூனம்

    32. முக்கூடலில் இரு குப்தர்கள்

    33. கனவில் கண்டது கையில் கிடைத்தது

    34. கூடல் நகரில் ரகசிய பாதை

    35. மூன்றாம் பிறை உதித்தது

    36. விண்ணில் பாய்ந்த வினோத ஒளி

    37. பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அடப்பாவி ராஜா

    38. பிரக்ஞதாராவின் பொக்கிஷம்

    39. தமையனுக்கு வெற்றிக்கன்னி

    40. களப்பர காடவன்

    41. ஜெயன் - விஜயன்

    42. இலங்கைப் படையினர்

    43. அம்பர வம்பர்கள்

    44. யட்ச நேத்திரங்கள்

    45. சிம்மத்தை அடக்கிய சீனப் புலி

    46. நான்கு ஐந்தானது

    47. மலைகளின் சங்கமம்

    48. உடைந்து போன நவரத்னம்

    49. ஓலையில் அதிர வைக்கும் சேதி

    50. மறுபிறவியை நோக்கி...

    51. புதிய அத்தி

    முன்னுரை

    தெரியாமல் தேனீக்களின் கூட்டினைக் கலைத்து விட்டேன். விளைவு, தேனீக்கள் என்னைக் கொட்டித் தீர்த்துவிட்டன. ஆமாம். அத்திமலைத்தேவன் என்கிற இந்த சரித்திர மர்ம புதினத்தின் நான்கு பாகங்களையும் ஒன்றாக அளித்திருக்கலாமே. எங்களால் அடுத்தது என்ன என்கிற ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டாவது பாகம் எப்போது வரும். என்று வாசகர்கள் என்னைத் துளைத்து எடுத்து விட்டனர். தேனீக்கள் கொட்டினால் வலி ஏற்படும். ஆனால் வாசகர்கள் கொட்டியது மனதுக்கு இதத்தைத் தந்தது. ஒன்பது நாவல்களை எழுதியும், உங்கள் நாவலை வழக்கம் போன்று கீழே வைக்க இயலவில்லை என்று ஒரே மாதிரியான பாராட்டுகளை இன்னமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். தருமனின் இரதத்தின் சக்கரங்கள் பூமியில் பதியவில்லை. அவை பூமியில் பதிந்த அன்று கலியுகம் பிறந்ததாக பாரதம் கூறுகிறது. எனது நாவல்களும் கீழே வைக்கப்படாமல் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. என்று, எனது நாவல்களை உங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருக்க இயலவில்லை என்கிற நிலை வருமோ, அன்று காலச் சக்கரத்தின் அச்சாணியாகிய எனது எழுத்தாணி கீழே வைக்கப்படும். அம்மாதிரி நிலை எந்நாளிலும் தோன்றக் கூடாது என்று அத்திமலையானை வேண்டுகிறேன்.

    அத்திமலைத்தேவன் பலரையும் மலைப்பில் ஆழ்த்தி விட்டதை உணருகிறேன். சாணக்கியன் காஞ்சியில் தோன்றியவன் என்பதே பலருக்குத் தெரியவில்லை. சந்திரகுப்தன் ஒரு காட்டுவாசி என்பதும் பலரும் அறிந்திராத விஷயம். Incubator - இல் இன்று குழந்தைகளை வைத்து உயிர் வாழ வைப்பது போன்று, சாணக்கியன் பிந்துசாரனை இயற்கை Incubator - இல் வைத்துக் காப்பாற்றினான் என்பது பிரமிப்பினை ஏற்படுத்தும் விஷயம் என்று பலரும் கூறினார்கள். சாணக்கியன் பொக்கை வாயன். ஆனால் அவன் பற்களை இழந்த விதம் உருக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் தெரிவித்தனர். அத்திமரம், குறிப்பாக தேவ உடும்பர அத்திமரம் குறித்த தகவல்கள், பட்டுப்பூச்சி ஆருடம், என்று பல அறிய விஷயங்களை கற்றோம் என்று பலரும் கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    துர்தரா, திஸ்ஸரக்கா ஆகியோரின் கதாபாத்திரங்களை கண்டு மலைத்துப் போனவர்களும் உண்டு. அசோகன் கலிங்கத்துப் போரில் புரிந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்லை என்று பலரும் சொன்னார்கள். உண்மை. சரித்திரம் என்பது ஒருவரின் குணங்களை நேர்மறையாகவே சித்திரிக்கும். அவரது எதிர் மறை குணங்களை ஒருபோதும் பிரதிபலிக்காது. எனவேதான், சுத்த சத்வமாக சித்திரிக்கப்பட்ட சரித்திர பாத்திரங்களின் உண்மையான குண நலன்களை எனது புதினங்களில் நான் எழுதும் போது பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அசோகன் மரம் நட்டார் என்று நமக்குக் கூறப்பட்டதே தவிர அவன் மனைவி மரத்தை வெட்டினாள் என்று யாரும் நமக்குக் கூறவில்லை .

    அத்திமலைத்தேவனில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சில பெண் வாசகர்கள் குறிப்பிட்டனர். நான் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை நிகழ்வுகள். சந்திரகுப்தன், பிபத்த தேவன் இருவரில் யார் மவுரிய மன்னன் என்பதற்காக நடைபெற்ற போட்டியில், சந்திரகுப்தன் பிபத்தனின் தலையை வெட்டியெறிந்த பிறகே மன்னன் ஆனான் என்கிற குறிப்புகள் சரித்திரத்தில் இருந்தன. நந்தன் கொலை, துர்தரா கொலை அனைத்துமே சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். கொலையை நான் சற்று எனது கற்பனை வர்ணனைகளுடன் விவரித்துள்ளேன். கொலைகள் நடந்தது உண்மை.

    எனது நாவல்களிலேயே சங்கதாராவுக்குப் பிறகு பலரும் அலைபேசி மூலமாகவும் நேராகவும், என்னிடம் விவாதித்த நாவலாக அத்திமலைத்தேவன் இருக்கிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்போது ஒரு புதினத்தைப் படித்துவிட்டு, வாசகர்கள் அதன் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு அப்படியா... இது உண்மையா? இந்த சம்பவம் உங்கள் கற்பனையா... அல்லது உண்மையா? என்று தங்கள் ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்கின்றனரோ, அப்போது அந்தப் புதினம் அவர்களை மிகவும் பாதித்துவிட்டதாகப் பொருள். அவ்வகையில், சங்கதாராவிற்குப் பிறகு, அத்திமலைத்தேவன் வாசகர்களைப் பெரிதும் பாதித்து இருப்பதை உணர்கிறேன்.

    2018 இறுதியில் சிக்கிம் மாநிலத் தலைநகரில் -- காங்க்டாக் நகரில் உள்ள ரும்டேக் புத்த விகாரத்தில் உள்ள ஒரு புத்த பிக்குவைச் சந்தித்தேன். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்த போதி மரம், அதனை திஸ்ஸரக்கா சிதைத்தது, உரக சூத்ரம், தாமரை சூத்ரம் மற்றும் அத்திமர பெருமைகள் ஆகியவற்றைப் பற்றி நான் கூற, மலைப்பின் உச்சத்தில் அவர் நின்றார். அவர் இந்த விவரங்களை எல்லாம் இந்த காலத்தில் புத்த பிக்குகளே அறிவதில்லை. வெறும் மனம் குவிதல் மற்றும் தியான பயிற்சிகளைத்தான் போதிக்கின்றோமே தவிர, புத்த தத்துவ சரித்திரங்களை நாங்களே போதிப்பதில்லை என்றார்.

    நான் அத்திமலைத்தேவன் எழுதுவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது, நான் எதிர் கொண்டிருந்த இன்னல்கள் அனைத்தும் அவரது பாராட்டினால் கதிரவனைக் கண்ட பனியாக மறைந்து போனது. அவரது புகழுரைகள் தந்த உத்வேகத்தில், சென்னை வந்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதத் துவங்கினேன்.

    கலைமகள் நிர்வாக ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது புதினம் அத்திமலைத்தேவனை அலசுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைத்து, எனது கருத்துகளையும் கூறுவதற்கு என்னை அழைத்தார்.

    பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.

    ஜனவரி, 29 செவ்வாய்க்கிழமை ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் TAG நிறுவன தலைவர் R.T. சாரி, திரு. ரவி தமிழ்வாணன், திரு. R.V.ராஜன் ஆகியோர் முன்னிலையில் திரு. சந்திரமோகன் என்னும் நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் எனது நாவலை விமர்சித்திருந்தார். கிடைக்கப் போவது பூமாலையா அல்லது காமாலையா என்று யோசித்து நின்ற வேளையில் எனக்குப் பாமாலையே சூட்டிவிட்டனர். அவர்களை அத்திமலையான் மிகவும் பாதித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வாசகர் என்னிடம் ரகசியமாக வந்து, இதே டெம்போவில் மற்ற பாகங்களும் இருக்கும் அல்லவா? என்றும் கேட்டார். அதற்கு அத்திமலையான் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.

    இன்னும் ஒரு வாசகர், தங்களது பத்திரிகை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் புதினங்களை எழுதுங்கள் என்றார். எனது தாய் தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அத்திமலைத்தேவன் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதாக இருந்த எழுத்தாளர் சாருகேசி அவர்களால் உடல் நிலை காரணமாக பங்கேற்க இயலவில்லை. மறுநாள் விடியலில் அவர் காலமாகிவிட்டார். அவரது ஆசிகளுடன் எனது பணியினைத் தொடர்கிறேன்.

    முழு திருப்தியுடன் இதோ அடுத்த பாகத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    'காலச்சக்கரம்' நரசிம்மா.

    '98417 61552

    *****

    முதல் பாகத்தில்...

    உபபாண்டவர்களைக் கொன்று கண்ணனின் சாபத்தால் தெற்கே உள்ள அத்திவனத்திற்கு வந்து தவம் செய்கிறான், அஸ்வத்தாமா. நாக சோமா என்கிற சாவக (ஜாவா) நாட்டுப் பெண் ஒருத்தி அவனுக்குப் பணி விடைகளைச் செய்ய, அவளை மணந்து, இரட்டைக் குழந்தைகளைப் பெறுகிறான். குழந்தைகளிடையே அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு குழந்தைக்கு தொண்டை என்கிற பல்லவக் கொடியை மாலையாக அணிவிக்கிறார்கள். மற்றொரு குழந்தைக்கு சந்திரகாந்த கொடியை அணிவிக்கின்றார்கள். மீண்டும் தீர்த்த யாத்திரையைத் தொடர்வதற்காக அஸ்வத்தாமா புறப்பட, நாக சோமா ஒரு மகனையும், அஸ்வத்தாமா பல்லவ மாலை அணிந்த மகனையும் இட்டுச் செல்கிறார்கள். தனது மகனை வேமுல்புரி (கடப்பா)வில் விட்டுவிட்டு, அஸ்வத்தாமா தனது வழியே செல்ல, அங்குள்ள மக்கள் அந்த மகனை புலிவேமு என்று பட்டமிட்டு அவனைத் தங்களது மன்னனாக ஆக்குகின்றனர். அவன் வம்சம் பல்லவ வம்சமாக உருவாகிறது. தொண்டை நாட்டை விரிவு செய்து, காஞ்சி வனம் என்கிற அத்திவனத்தை தனது ஆளுமையின் கீழே கொண்டு வருகிறான் புலிவேமு. தனது சித்தி மகன் பரப்பசுவாமியை அத்திவனத்தின் தலைவனாக நியமிக்கிறான்.

    அத்திவனத்தில் உள்ள அத்திமலைத் தேவனின் ரகசியத்தை (வரதராஜ பெருமாள் கோயில்) அறிவதற்கு பரப்பசுவாமி முற்படுகிறான். ஆலய பொறுப்பாளரும், குருகுலம் நடத்தி வருபவருமான, காஞ்சனகுப்தர் மற்றும் அவர் மனைவி சாநேஸ்வரியை பலவந்தம் செய்ய, அவர்கள் மகன் விஷ்ணுகுப்தன் (கௌடில்யன் என்கிற சாணக்கியன்) அவர்களை ஏமாற்றி மன்னன் புலிவேமுவிடம் சிக்க வைக்க, அவன் அவர்களைத் தண்டிக்கிறான். இதனால் கோபம் கொண்ட, பரப்பசுவாமியின் மைத்துனன், விஷ்ணுகுப்தனின் பெற்றோரைக் கொல்ல, அவர்களுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யும் போது வேகவதி ஆற்றினுள் சக்தி வாய்ந்த அத்திமரத் துண்டுகளைக் கண்டு எடுக்கிறான். அதனை எடுத்துக்கொண்டு மன்னன் ஆகும் எண்ணத்துடன் வடக்கே போகிறான், விஷ்ணுகுப்தன்.

    அஸ்வமேத யாகத்திற்காக நந்த மன்னன் தானநந்தா தேவ உடும்பர சமித்துகளைத் தேட, விஷ்ணுகுப்தன் தன்னிடம் உள்ள தேவ உடும்பரத்தை மன்னனுக்கு அளிப்பதற்காகச் செல்ல, அவனை மன்னர் குடும்பம் அவமானம் செய்து விரட்டுகிறது. அவர்கள் மீது வன்மத்தைக் கொண்ட கவுடில்யன், அவர்களைப் பழி வாங்க காட்டுவாசியான சந்தாவைத் தனது அடிமையாக்கி, நந்தாவை அரியணையில் இருந்து இறக்கி, சந்திரகுப்தனை மவுரிய மன்னன் ஆக அமர வைக்கிறான். அதற்கு முன்பாக, பட்டத்து இளவரசனை போட்டியில் கொல்கிறான் சந்திரகுப்தன். கவுடில்யனுக்குத் தெரியாமல், சந்திரகுப்தன் தானநந்தாவின் மகள் துர்தராவை மணக்க, அதனைக் கண்டு கவுடில்யன் எரிச்சல் அடைகிறான். துர்தராவுக்கும், கவுடில்யனுக்கும் கடும் பகை தோன்றுகிறது.

    கவுடில்யனுக்காகப் பானத்தில் கலக்கப்பட்டிருந்த நஞ்சை, தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டி துர்தரா குடிக்க, விஷம் அவளைக் கொல்ல, அவள் வயிற்றில் உள்ள சிசுவை ஆட்டு கர்ப்பப்பையினில் (incubator) வைத்துக் காப்பாற்றி அந்த குழந்தைக்கு பிந்து சாரன் என்று பெயரிடுகிறான். பிந்துசாரன்

    அந்தப்புர சுகங்களில் நாட்டம் செலுத்த, அவனது மகன் அசோகனை எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறான், கவுடில்யன். பிந்துசாரனுக்கு சாணக்கியன் தனது தாயை வஞ்சித்துக் கொன்றான் என்பது தெரிய வர, அவனை நாடு கடத்துகிறான்.

    அசோகன் கொடுங்கோலனாக வளர்ந்து பெண் பித்தனாகத் திகழ்கிறான். பட்டத்து இளவரசனைக் கொன்று ஆட்சியைப் பிடிக்கும் அசோகன், நான்கு மனைவியரைக் கொண்டிருக்கிறான். கலிங்கத்து இளவரசி திஸ்ஸரக்காவின் மீது மையல் கொண்டு அவளை அடைய போர் தொடுத்து ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று, அவளைக் கடத்துகிறான்.

    அசோகனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறக்க, தனது வாழ்வை சீர்குலைத்த அசோகனை பழி வாங்க எண்ணிய திஸ்ஸரக்கா, போதி மரத்தினை ஆயிரம் விஷ முட்களால் சிதைத்துவிட, தேவ உடும்பரம் மடிகிறது. பௌத்தர்கள் தெற்கே உள்ள மற்றொரு தேவ உடும்பர மரத்தைத் தேடத் துவங்குகின்றனர். அசோகன் தனது மகள் சங்கமித்தாவையும், மகன் மகிந்தாவையும் தெற்கே உள்ள அத்தி வனத்திற்கு அனுப்ப, அவர்கள் அங்கே மரம் உள்ளதை அறிந்து தந்தை அசோகனுக்கு தகவல் அனுப்ப, தகவலை எடுத்துச் சென்றவர்களும், தகவலைப் பெற்ற தலைமை புத்த குரு புத்த மந்தாவும் கொல்லப்பட ரகசியம் போதி மரத்தினிலேயே கிடக்கிறது.

    அசோகன் வழி வந்த மவுரிய மன்னன் பிருகதத்தனை அவன் தளபதி புஷ்ய மித்ராவே கொன்று அரியணையைக் கைப்பற்றுகிறான். போதி மரத்தை அடியோடு எரிக்கும் அவனது மாமியாரின் கையில் அத்திவனத்தைப் பற்றிய ரகசிய ஓலை கிடைக்க, அவள் தனது மகர வீணையில் ஓலையை பதுக்கி வைக்க, அவள் பரம்பரையில் உதித்த சமுத்திர குப்தனிடம் அந்த ஓலை கிடைக்கப் போகிறது.

    அதனால்தான் அத்திமலை பற்றிய ரகசியம் வெளிவந்தது என்கிற குற்ற உணர்வுடன், பல்லவ மன்னன் திருலோச்சனனை எச்சரித்துவிட்டு, சாணக்கியன் வேகவதி நதியில் இறங்கி விடுகிறான்.

    அத்திமலைத் தேவனுக்கு இனி வடபுலத்து மன்னர்களால் ஆபத்து வரும் என்கிற குறிப்பினை உணர்கிறான், பல்லவன்.

    இனி...

    *****

    நிகழும் காலம்

    கி.மு. 70 சதவாகனர் காலம்

    தொடங்கி கிபி 500

    சிம்மவிஷ்ணு காலம்

    வரையிலான

    காஞ்சியினைப் படம்பிடித்துக்

    காட்டுகிறது.

    *****

    முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான ஆதார நூல்கள்

    தொல்லியல் கையேடுகள்:

    * வரதராஜர் கோயில் கல்வெட்டுகள்

    * ஏகாம்பரர் கோயில் கல்வெட்டுகள்

    * திருவெக்கா கோயில் குறிப்புகள்

    * காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு

    * 'வேலூர் மாவட்ட தொல்லியல் கையேடு

    * பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை

    * (பரிபாடல் 10: 129 - 131)

    * கோயில் கோயிலொழுகு: டி.ஏ.ராஜகோபாலன்

    * Chanakya biography (www.thefamouspeople.com

    * Outline of South Asian History

    * சிம்ம விஷ்ணு - sarasvatam.in/en/tag/simhavishnu

    * The Pallavas - (Page 25) books.googleco.in.

    * மத்தவிலாச Mattavilasa Prahasana The Cambodians who ruled Tamil Nadu (sharmalanthevar.blogspot.com)

    * Majumdar, Ramesh Chandra (2003). Ancient India. Delhi: Motilal Banarsidass.

    * நந்திவர்மன் வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி.

    * The Kalabras and their impact on Life (M Arunachalm, UOM).

    * சங்க காலம் சோழர் வரலாறு ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.

    *****

    1. நடுநிசியில் மந்திராலோசனை

    முக்கூடல் கடிகை –--

    பரந்து விரிந்த முக்கூடல் கடிகைதான் தொண்டை மண்டலத்தின் பெருமையின் சின்னமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. வேறு எந்த நாட்டிலும், இத்தகைய கடிகை இல்லை. பல்கலைகளையும் போதித்து எல்லா நாடுகளுக்கும் மன்னர்களை தயார் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது முக்கூடல் கடிகை. தொண்டை நாடு சான்றோர் உடைத்து - என்று கூறுமளவுக்கு அறிஞர்களையும், கற்றவர்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது கடிகை. காணும் போதே அனைவருக்கும் பரவசத்தை ஏற்படுத்தும், கடிகை. பழமுதிர்சோலை மலை என்னும் மாலிருஞ்சோலை [1] மலையின் அடிவாரத்தில் தொடங்கி, கிழக்கில் முக்கூடல் சங்கமத்தின் அருகே உள்ள திருவேங்கடவன் கோயில் வரை விஸ்தீரணமாகப் பரவிக்கிடந்தது, முக்கூடல் கடிகை.

    மாலிருஞ்சோலை மலையின் அடிவாரத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட தோரணவாயில் ஒன்று காணப்படும். அதன் உள்ளே வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் தொடர்ந்தால் இருமருங்கிலும் அடர்ந்த காடுகள் காணப்படும். தொடர்ந்து சென்றால், முக்கூடல் கடிகையைப் பராமரிக்கும் அதிகாரிகளின் மாளிகை முதலில் தென்படும். அதுவே ஒரு சிறிய

    அரண்மனையை ஒத்திருக்கும். தொடர்ந்து சென்றால், முக்கூடல் கடிகையின் பிரதான கட்டிடம் வரும்.

    அங்கேதான் பாடங்கள் போதிக்கப்பட்டன. ராஜாங்க விஷயங்களை போதிக்கும் அரசியல் தந்திரப் பாடங்கள், கஜானா கல்வியின் கணக்கு வழக்குகள், போர்முறைகள், சரித்திர பாடங்கள், பூகோளக் கல்வி, பிரபஞ்சக் கல்வி, மீமாம்ச ஆராய்ச்சி, வைணவம், சைவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம், சாக்கியம், பௌத்தம் என்று சமயக் கல்விகள் ஆகியவை பிரதான கட்டிடத்தில் போதிக்கப்பட்டன.

    மரங்களின் அடியில் ஆங்காங்கே வேத முழக்கமும், ஆகம போதனைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இலக்கண, இலக்கியத்திற்கும் தனித்தனியாக பாட சாலைகள். கலை, இன்னிசை, நாடகம் ஆகியவற்றிற்குத் தனியாக பட்டறைகள் அமைக்கப்பட்டிருந்தன. பிரதான கட்டிடத்திற்குப் பின்பாக ஒரு பரந்த மைதானம் அமைக்கப்பட்டு, அதன் நடுவே வட்டவடிவில் கட்டிடம் ஒன்று காணப்படும். அதுவே வீரவிளையாட்டுகளைக் கற்கும் களரி. மற்போர், வாட்சண்டை, மான்கொம்பு சுழற்றுதல், தண்டம் சுழற்றுதல், குத்துச்சண்டை என்று மிடுக்கும், வீரமும் கொண்ட இளைஞர்கள் அங்கே எப்போதும் பயிற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

    களரியின் பின்பாக ஒரு பாதை புலப்படும். அதன் வழியே செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை. ஒத்தாடை அரண்மனையிலிருந்து வரும் காவலர்கள் இருவர் அந்த பாதையின் துவக்கத்தில் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். அத்திமலை ஆலய அதிகாரிகளும், பட்டர்களும், அரண்மனை காவலதிகாரிகளும் மட்டுமே அந்த பாதையில் செல்வதற்கு அனுமதி உண்டு. அதுவும், ஒவ்வொரு திங்களும் அஸ்த நட்சத்திரத்தின் போது மட்டுமே, அவர்களாலும் அந்தப் பாதையில் செல்ல முடியும். அந்த பாதைக்கே குபேர ரகசியப் பாதை என்றுதான் பெயர்.

    அந்த பாதையின் முடிவில்தான் வரங்குளம் என்னும் குளம் ஒன்று உண்டு. அருகில் உள்ள மாலிருஞ்சோலை மலையின் உச்சியில் உள்ள வரதநாராயணப் பெருமாள் ஆலயத்தின் அருகே இருந்த சுனையில் பொங்கும் நீர் வழிந்து அருவியாக பொழிந்து முக்கூடல் கடிகையின் உள்ளே பெருகி வரங்குளமாகத் தேங்கி நிற்கும். வரங்குளத்தின் மையத்தில் பாறைகளால் இயற்கையே அமைத்த திட்டு ஒன்று உண்டு. திட்டின் மையத்தில் உள்ள போஷண மண்டபத்தில்தான் அத்தியூரானின் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரம்மனின் அஸ்வமேத யாகத்தில் தோன்றிய அத்திமலைத் தேவனுக்கு தேகம் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பிரம்மன் உத்தரவிட, விஸ்வகர்மா தேவ உடும்பர மரத்தில் அவனுக்கு திருமேனி அமைத்துக் கொடுத்தான் அல்லவா? அப்போது குபேரன் தன்னிடம் இருந்த ஒப்பவரில்லா ஸ்ரீதள மணியை [2] அத்திமலைத் தேவனுக்கு சமர்ப்பித்திருந்தானே! அந்த ஸ்ரீதள மணிதான் அங்கே பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அஸ்த நட்சத்திரத்தன்று மட்டுமே ஸ்ரீதள மணியை அத்தியூரானுக்குச் சாற்றுவார்கள். அன்று அவனது தேககாந்தி எட்டுத் திக்கிலும் பரவும். சாணக்கியன் பாலகனாக வேகவதி ஆற்றங்கரையில் ஒரு நடுநிசியில் நின்றிருந்த போதில் அத்திமலையிலிருந்து ஒரு ஒளிவட்டம் தோன்றியதைக் கண்டான் அல்லவா? பதின்மூன்றாம் தாரகை சாங்கியம் என்று அவனது தாய் சானேஷ்வரியும் குறிப்பிட்டிருந்தாளே, அது ஸ்ரீதள மணியைக் குறித்துதான். அந்த மணியை அணிந்த அன்று அத்திமலையானை ஆராதித்தால், சகல சௌபாக்கியங்களும், வெற்றிகளும் சித்திக்கும் என்று அஸ்திகிரி தந்திரம் குறிப்பிடுகிறது.

    முக்கூடல் கடிகையின் வரங்குளம் பக்கம் யாரும் போகாத காரணத்தால், அங்கே ஸ்ரீதள மணியைப் பாதுகாப்புடன் வைத்திருந்தார்கள். குபேரப்பாதையின் துவக்கத்தில் நின்றிருந்த இரு காவலர்களும் சுவாரசியம் இல்லாமல் தொலைவில் தெரிந்த ஓலைக்குடிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்தக் குடிலினில் மாணவர்களுக்கு இலக்கிய பாடங்களை போதித்துக்கொண்டிருந்தார் அரண்மனையின் ராஜகுரு பரத்வாஜ சதகரணி. அரண்மனைப் பணியில் இருந்தாலும், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் பெரும் நாட்டத்தைக் கொண்டவர். கடிகை அவர் மனதிற்கு மிகவும் உகந்த இடம்.

    கதிரவன் முக்கூடல் மாலிருஞ்சோலை மலையின் பின்பாக மறைய, சந்தியாகால கடமைகள் அழைப்பதை உணர்ந்து, இனியும் பாடம் நடத்தக் கூடாது என்று நினைத்து, தனது மாணாக்கர்களை அன்புடன் நோக்கினார்.

    சீடர்களே! இன்று நான் போதித்த பரிபாடல் செய்யுளின் விளக்கத்தை மனதில் வாங்கிக் கொண்டீர்கள் அல்லவா? உங்கள் கையில் இருக்கும் சுவடியில் நான் போதித்ததை எழுதி அதோ அந்தத் திண்ணையின் மீது வைத்துவிட்டு செல்லுங்கள். நான் சந்தியா ஆராதனத்தை செய்யச் செல்கிறேன் என்றபடி வரங்குளத்தினை நோக்கி ஓடையாக பாய்ந்து கொண்டிருந்த அந்தச் சுனைநீரை நோக்கி நடந்தார். மாணவர்களும், மௌனமாக அமர்ந்து சுவடியில், தாங்கள் அன்று கற்ற பாடத்தின் விளக்கத்தை பதித்து, ஆசான் குறிப்பிட்டிருந்த மேடையின் மீது வைத்துவிட்டு அகன்றார்கள்.

    சந்தியா ஆராதனையை முடித்துவிட்டு, மீண்டும் தனது தமிழ் இலக்கணத் துறையைச் சார்ந்த குடிலுக்கு வந்த சதகரணி, மாணவர்கள் வைத்துச் சென்ற சுவடிகளைச் சேகரித்தார்.

    அவரிடம் பன்னிரண்டு மாணாக்கர்கள் தமிழ் இலக்கணம் பயின்றனர். மொத்தம் பன்னிரண்டு சுவடிகள் உள்ளனவா என்று கையில் சேகரித்திருந்த சுவடிகளை எண்ணத் துவங்கினார். ஆனால் அவரது கரத்தில் மொத்தம் பதின்மூன்று சுவடிகள் இருந்தன. அவர் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. தவறாக எண்ணி விட்டோமோ என்று மீண்டும் ஒருமுறை எண்ணத் துவங்கினார். மீண்டும் எண்ணி முடித்த போது அவர் முகம் திகைப்பில் ஆழ்ந்திருந்தது. யாரோ ஒரு மாணாக்கன் இருமுறை சுவடிகளில் பதிவுகளைச் செய்திருக்கிறான் போலும். சீடர்களின் பெயர்களை கவனித்தார். ஒரு சுவடியில் கிருஷ்ண பாதன் என்கிற பெயர் காணப்பட, அவரது நெற்றியில் சுருக்கங்கள் தோன்றின. கிருஷ்ண பாதன் என்கிற பெயரில் அவரிடம் எந்தச் சீடனும் பயிலவில்லை. அப்படியென்றால், இந்த சுவடியினை யார் அங்கே வைத்திருப்பார்கள்?

    குழப்பத்துடன் சுற்றுமுற்றும் நோக்கினார். யார் இந்த கிருஷ்ண பாதன்? வேறு ஏதாவது வகுப்பறையைச் சேர்ந்த மாணவன் தவறுதலாக இங்கே தனது சுவடியை வைத்துவிட்டானா? அந்தச் சுவடியை வாசித்தார் சதகரணி. இல்லையே...! இவர் போதித்திருந்த பாடம் குறித்து தான் சுவடியில் விளக்கப்பட்டிருந்தது. பரிபாடலில் குறிப்பிடப்பட்டிருந்த வைகை ஆறு மற்றும் பாண்டியரின் பெருமைகளை விளக்கும் பாடலைத்தான் அன்று போதித்திருந்தார்.

    'வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்*

    அருங்கறை அறை இசை வயிரியர் உரிமை

    ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே'

    என்று ‘உலக உயிர்கள் எல்லாம் பசி பிணி ஆகியவற்றால் துன்புறாமல் வளத்துடன் வாழ்வதற்காக, வறுமையினால் துன்புற்ற புலவர்கள் ஏந்திய கைகள் நிறையுமாறு கொடை வழங்கும் பாண்டியனைப் போல என்றென்றும் வையை ஓய்வின்றி வர வேண்டும்' என வாழ்த்திப் பாடுகின்றனர்.

    ஆனால் என்ன இது...? பாடல் மாற்றப்பட்டுள்ளதே!

    ‘வருந்தாது வரும் விரிபுனல் விருந்து அயர் புகர்வீர்

    அருங் கறை அறை இசை வயிரியர் உரிமை

    ஒருங்கு அமர் சோழமோடு ஏத்தினர் தொழவே.'

    'உலக உயிர்கள் எல்லாம் பசி பிணி ஆகியவற்றால் துன்புறாமல் வளத்துடன் வாழ்வதற்காக வறுமையினால் துன்புற்ற புலவர்கள் ஏந்திய கைகள் நிறையுமாறு கொடை வழங்கும் சோழனைப் போல என்றென்றும் காவிரி ஓய்வின்றி வர வேண்டும்' என்றல்லவா சுவடியில் காணப்படுகிறது.

    வைகையாற்றையும், பாண்டியரையும் போற்றும் பரிபாடல் விளக்கத்தில், சோழனை வாழ்த்துமாறு சுவடியில் பதித்திருந்த அந்த கிருஷ்ண பாதன் யார்? தனது சிந்தையைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தார், பரத்வாஜ சதகரணி.

    அப்போது அவசரமாக அங்கே வந்தான் கடிகையின் பணியாளன், பாசிலை. சதகரணியின் செவியருகே குனிந்தான்.

    "சுவாமி! உடனே வேங்கடவன் ஆலயத்திற்கு [3] செல்லுங்கள். தங்களுக்காக உள்படுகருமத்தலைவர் [4] அங்கே காத்திருக்கிறார்!" - பாசிலை கூறினான்.

    குழம்பிப்போயிருந்த சதகரணிக்கு இப்போது படபடப்பு அதிகமானது. உள்படுகருமத்தலைவர் காத்திருக்கிறாரா? எதற்கு?

    விரைவாகக் கடிகையைவிட்டு நீங்கி முக்கூடல் வேங்கடவன் ஆலயத்தினுள் நுழைந்தார்.

    உள்படுகருமத்தலைவர் போஜகன் அவருக்காக ஆலய மண்டபத்தில் காத்திருந்தார். உடன் மன்னனின் ரகஸ்யாதிக்ருதன் [5] பரமேஸ்வரனும் நின்றிருந்தான்.

    திருலோச்சன பல்லவனின் ராஜகுருவாகத் திகழ்ந்து வருபவர் பரத்வாஜ சதகரணி. கடைசி சதவாகன மன்னன் புலுமாவி விஜயபரத சதகரணியின் உடன் பிறந்த சகோதரன்தான் இவர். சதவாகனர்களைப் போன்றே பல்லவர்களும் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவர்களைப் போன்றே சதவாகனர்களும் ரிஷபத்தைத் தங்கள் கொடியில் சின்னமாகக் கொண்டிருந்தவர்கள். புலி வேமு, புலி சோமா மன்னர்களுக்குப் பிறகு வேமுலம் சதவாகனர்களின் சிற்றரசாக மாறியது. சிமுகன், கங்கன், சதகரணி, சிவசுவாதி, கௌதமிபுத்திரன், வசிஷ்டபுத்திரன், சிவஸ்கந்தன், யஜன சதகரணி மற்றும் விஜயன் ஆகிய சதவாகன மன்னர்களுக்கு பல்லவம் தொண்டாற்றி வந்தது. சதவாகனப் படைகளின் தளபதியாக பல்லவ மன்னர்களே இருந்தது வழக்கம். மூன்றாம் புலுமாவி விஜய சதகரணி என்கிற மன்னனின் காலத்தில் பிளவுபடத் தொடங்கிய சதவாகன [6] ராஜ்யம், நான்கு பாகங்களாக உடைந்தது. வடபகுதிகள் சதவாகனர்களின் கிளை வம்சத்திடமும், மேற்கு பகுதி அபிரர்களிடம், தெற்குப்பகுதி பனவாசிகளிடமும் (கடம்பர்கள்), கிழக்கு பகுதி ஆந்திர இஷ்வாகு குலத்தவர் வசமும் வந்தன. தென் கிழக்குப் பகுதியை ஆண்ட பல்லவர் சதவாகனர்களிடமிருந்து தாங்கள் விடுதலை பெற்றதாக அறிவித்து, மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை பலப்படுத்தினர். கடைசி சதவாகன மன்னன் புலுமாவி உயிர் துறக்க, அவனது சகோதரன் பரத்வாஜ சதகரணி, பல்லவனிடமே அடைக்கலம் புக, அவருக்கு அத்திமலை இறைபுணம்சேரி கிராமத்தில் நிலங்களை அளித்து அவரைத் தனது ராஜ குருவாக இருத்திக் கொண்டான், பல்லவன்.

    ராஜகுருவைக் கண்டதுமே, போஜகனும், பரமேஸ்வரனும் பணிந்து வரவேற்றனர். போஜகனிடம் இருந்த பணிவு பக்தியாக வெளிப்பட்டது... ஆனால், பரமேஸ்வரன் தலைகுனிந்த போது அதில் முழுவதுமாக போலித்தனம் புலப்பட்டது. மன்னனின் ரகஸ்யாதிக்ருதன் என்பதால், தான் அனைவரையும்விட பெரியவன் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தான் போலும். சதவாகன பிரஜைகளை காஞ்சியிலே வசிப்பவர்கள் வெறுப்பது இயற்கைதான் என்றாலும், பரமேஸ்வரனுக்கு ராஜகுருவின் மீது சற்று அதிகமாகவே துவேஷம் காணப்பட்டது. அதற்குக் காரணம் உண்டு. பரமேஸ்வரனின் செவிகள் மன்னருக்குச் சொந்தமானவை. ஆனால் மன்னரின் செவிகளையே சொந்தமாக்கிக் கொண்டவர், ராஜகுருவன்றோ!

    மன்னரின் உத்தரவு! இன்று நள்ளிரவில் மன்னர் மந்திராலோசனை சபையைக் கூட்டியுள்ளார். அத்திமலையான் ஆலயத்து தலைமை பட்டர் அத்தங்கியை அழைத்துக்கொண்டு மந்திராலோசனைக்கு வந்து சேருங்கள்! - பரமேஸ்வரன் நேரிடையாகத் தகவலைச் சொன்னான்.

    திகைத்துப் போனார், சதகரணி. 'அர்ச்சகர் அத்தங்கியுடனா? மந்திராலோசனைக்கு அர்ச்சகர் எதற்கு?'

    அவரது எண்ண ஓட்டத்தினை உணர்ந்தவராக, போஜகன் அவரை மதிப்புடன் நோக்கினார். சுவாமி! மந்திராலோசனையே அத்தியூரானை பற்றியதுதான். எனவே, அவசியம் ஆலோசனையில் அத்தங்கி சுவாமி இருக்க வேண்டும்! - போஜகன் கூறினார்.

    ராஜகுருவே! மந்திராலோசனையில் விவாதிக்கப்படவுள்ள விஷயம் மிகவும் ரகசியம். நீர் அத்தங்கியிடம் எச்சரிக்கை செய்து அழைத்து வாரும். மந்திராலோசனை விஷயங்களை மந்திரம் உச்சரிப்பது போன்று ஆலயத்திற்கு வருவோரிடமும், போவோரிடமும் கூறிக் கொண்டு இருக்கப் போகிறார்... அத்தங்கி! - கேலியாகக் கூறிய பரமேஸ்வரன், தனது நகைச்சுவையை தானே ரசித்த வண்ணம் சிரித்தான்.

    சதகரணி பதில் கூறவில்லை. அத்தியூரானைப் பற்றிய ரகசிய மந்திராலோசனை என்றதுமே அவருக்கு பிரச்னை விளங்கிவிட்டது. சாணக்கியன் வேகவதியில் இறங்கி உயிர் துறப்பதற்கு முன்பாக தனது தவறினை உணர்ந்து, திருலோச்சன பல்லவனிடம் தேவ உடும்பர அத்தியூரான் சிலைக்கு வடபுல மன்னர்களால் ஏற்படவுள்ள ஆபத்துகளைப் பற்றி எச்சரித்துவிட்டே சென்றிருந்தார். அதன் பிறகு, மன்னன் ஆலயத்தின் பாதுகாப்புகளை அதிகரித்தும் இருக்கிறான். இருப்பினும், அத்தியூரில் இப்போது காணப்படும் பௌத்தர்களின் நடமாட்டம் மன்னரின் மனதைக் கவலைப்படச் செய்துள்ளது. அசோகனின் மகள் சங்கமித்தாவும், மகன் மகிந்தாவும் அத்தியூரிலும், தருமநகரத்திலும், முக்கூடல் கடிகையிலும் அடிக்கடி காணப்படுவதாக ஒற்றர்களின் மூலம் வந்த தகவல்கள் மன்னரை வருத்திக்கொண்டிருக்கின்றன போலும்.

    அவசியம் அத்தங்கியை எச்சரித்து அழைத்து வருகிறேன்! ராஜகுரு சதகரணி கூறினார். உடனே அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, மன்னரின் சார்பாக வேங்கடவனுக்கு பூசனைகளை நடத்துவதற்காக, வேங்கடவனின் சந்நிதிக்குச் சென்றனர், போஜகனும், பரமேஸ்வரனும்.

    இருள் படரத் துவங்கியது. சதகரணி தனது மாட்டு வண்டியில் அத்தியூருக்குப் பயணமானார். அத்திமலை கோவிலின் கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தீபம் சுடர்விட்டு எரிவதை ஐயம்படுகையில் [⁷] இருந்தே காண முடிந்தது.

    நள்ளிரவு -

    அத்தங்கி [8] அத்திமலைத் தேவனின் கிழக்கு வாசல் [9] அருகே காத்திருந்தார். கோவிலில் இரவு ஆராதனை முடிந்து திருகாப்பினை சாற்றிவிட்டார்கள். கோபுரத்தின் உச்சியில் கொழுந்துவிட்டெரிந்த தீபகப்பரையைத் தவிர, ஆலயத்திலும் அதன் இருபுறமும் வரிசையாக நின்ற மனைகளிலும் இருள்தான் தாண்டவமாடியது. அத்தங்கி சுவாமியின் மனைவி லட்சுமி ராஜ்யம் தனது மனையின் திண்ணைத் தூணைப் பற்றிக்கொண்டு, ராஜகுருவின் மாட்டு வண்டியை நோக்கி நடந்து செல்லும், கணவன் அத்தங்கியை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    மந்திரம் சொல்ல அத்திமலையான் ஆலயத்துக்குச் செல்பவர், மந்திராலோசனைக்குச் செல்கிறார் என்றால் மனைவியால் கவலைப்படாமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை, அத்தியூர் ஆலயத்தின் மீது வடபுல மன்னர்கள் யாராவது படை எடுத்து வரப் போகின்றனரா? அடிவயிற்றில் குப்பென்று கிளம்பிய அச்சத்தினால் மேனி நடுங்க, அத்திமலையான் ஆலயத்தினை நோக்கி கைகூப்பிவிட்டு மீண்டும் மனையினுள் நுழைந்தாள்.

    ராஜகுருவும், அத்தங்கியும் மௌனமாகவே பயணித்தனர். தங்களையும் அறியாமல், வண்டி செலுத்துபவன் முன்பாக ராஜாங்க விஷயத்தைப் பேசிவிடப் போகிறோமே என்று தங்கள் வாயை இறுக்கமாக பந்தனம் செய்திருந்தனர். தருமநகரத்தைக் [¹⁰] கடந்து வண்டி ராஜ வீதியில் [¹¹] நுழைந்தது. ஒத்தாடை அரண்மனையினுள் மாட்டு வண்டி நுழைய, அரண்மனை காவல் தலைவன் அவர்கள் இருவரையும் உள்ளே இட்டுச்சென்றான்.

    மழை பெய்ததால் அரண்மனை குளிர்ந்துவிட்டிருந்தது. நள்ளிரவில் கருங்கல் தரையில் பாதரட்சைகள் ஒலிக்க ராஜகுரு சற்றே விரைவாக நடந்தார். மன்னரை தான் காக்க வைக்கக் கூடாது என்கிற பரபரப்பே அந்த விரைவுக்குக் காரணம். அத்தங்கி அவர் பின்பாக சற்றே அச்சத்துடன் தான் நடந்தார். மாலவன் கைங்கரியத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர். போயும் போயும் தன்னை எதற்கு மந்திராலோசனை கூட்டத்திற்கு அழைக்கிறார் மன்னர் என்பதே அவருக்குப் புரியவில்லை. ஒருவேளை பச்சை சார்த்தல் உற்சவம் குறித்து ஏதாவது திட்டமிடுகிறாரோ...?

    அந்த இருளில் தொலைவில் அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்த ஒத்தாடையான் சந்நிதி கோபுரத்தின் மீது சுடர்விட்டுக்கொண்டிருந்த தீபக்கப்பரையினைத் தவிர வேறு ஒளியில்லை. எப்போதுமே மன்னர்கள் காலையில் எழுந்ததும் அருகே இருந்த கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாகத்தான் கண் விழிக்க வேண்டும் என்பது ராஜ நியதி. [12]

    மந்திராலோசனை அறையினுள் நுழைந்த ராஜகுரு, மன்னரின் அருகில் தனக்கு இடப்பட்டிருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்து கொள்ள, தான் எங்கே அமருவது என்று தயக்கத்துடன் அத்தங்கி சுற்றிப் பார்க்க, அவரை போஜகன் தனது ஆசனத்தின் பக்கலில் இருத்திக் கொண்டார். உயரமான தேகத்தை உடைய மன்னன் திருலோச்சனன் நடந்து வரும் போதே கம்பீரமாகக் காணப்படுவான். ஆனால், இன்று அவன் முகத்தில் பிரதிபலித்த கவலை ரேகைகளாலும், நடையில் இருந்த பரபரப்பினாலும், அந்த கம்பீரம் காணப்படவில்லை. தனது இருக்கையில் அமர்ந்து சுற்றி நோக்கிய மன்னனின் பார்வை நேராக அத்தங்கியின் மீதுதான் பதிந்தது.

    அர்ச்சகரே! இன்று அனைத்து ஆராதனைகளையும் செய்து கொண்டானா, அத்தியூரான்? ஆலயத்தில் ஒன்றும் பிரச்னை இல்லையே? - மன்னன் கேட்க, அத்தங்கி மட்டுமல்லாமல், மந்திராலோசனைக்கு வந்திருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருமே, மன்னனின் இந்தக் கேள்வியால் திகைத்துப் போயினர்.

    "ஒரு குறைவும் இல்லை மன்னா? போக்யமாக அனைத்து ஆராதனைகளையும் அத்திமலைத்தேவன் செய்து கொண்டான்! வீரகொசுவன்[¹³] சீவேலியும் நடந்தது. தற்போது ஆலயம் வீரகொசுவன் வசம் உள்ளது."

    அத்தங்கி சுவாமி அத்திமலையான் ஆலயத்தில் பிரச்னை ஒன்றும் இல்லை என்று கூறிய போதிலும், மன்னனின் முகத்தில் சமாதான அறிகுறிகள் தென்படவில்லை. சற்றே குழப்பத்துடன் திருலோச்சனன் ராஜகுருவை நோக்கித் திரும்பினான்.

    ராஜகுருவே, அத்தியூரானுக்கு பச்சை சாற்றுதல் வைபவம் எப்போது நடைபெற உள்ளது? - மன்னன் கேட்டான்.

    வரும் சித்ர மாத ஹஸ்த நட்சத்திரம் கூடிய சுபதினத்தில்! - ராஜகுரு கூறினார்.

    தலைமையமைச்சர் கோலவிக்கிரம ஷர்மரை நோக்கினான், திருலோச்சனன்

    கோலவிக்கிரமரே! இம்முறை பச்சை சாற்றுதல் வைபவத்திற்கு நானும், அரசியார் சுலோச்சனா தேவியும் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தேன் அல்லவா. இப்போது அந்த முடிவினை மாற்றிக்கொண்டேன். அந்த வைபவத்தில் கலந்து கொள்வதை நான் தவிர்க்க நினைக்கிறேன்! ------ பல்லவ மன்னன் கூறியதும், சபையே அதிர்ந்து போனது...

    திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அரசியாரின் வயிற்றில் ஒரு வாரிசும் உருவாகவில்லை. மன்னருக்கு மனக்கவலை அதிகரித்துக் கொண்டே வந்தது. சென்ற ஆண்டு, ராஜகுரு அவரிடம் பச்சை சாற்றுதல் வைபவத்தினில் கலந்து கொண்டு, அத்தி மலைத் தேவனிடம் வேண்டினால், நிச்சயம் ஒரு இளவரசன் பிறப்பான் என்று கூறியிருந்தார். அப்போது அந்தக் கோரிக்கையினை உடனே ஏற்ற மன்னன், தான் அந்த வைபவத்திற்கு தலைமை ஏற்று நடத்துவதாக அறிவித்திருந்தான். இப்போது திருலோச்சனன் தான் அந்த பச்சை சாற்று வைபவத்தை தவிர்க்க நினைப்பதாக கூறியதும், அங்கு கூடியிருந்த அனைவருமே, ஸ்தம்பித்துப் போயினர்.

    அத்தியூரானுக்கு உகந்த நிறம் பச்சை. பச்சை சாற்றுதல் சித்திரை - வைகாசி மாதங்களில் ஹஸ்த நட்சத்திரம் கூடிய நாளில் நிகழ்த்தப்படும் ஒரு சாங்கியம். ஊர் மக்கள் அன்று முழுவதும் பச்சை நிற ஆடைகளை அணிந்து, ஊர்வலமாக அத்திமலைக்குச் சென்று அவனுக்கு பச்சை வண்ண ஆடைகளைச் சாற்றி பூசனை செய்வார்கள். பச்சை பயிறு பொங்கல் இடுவார்கள். வெற்றிலை, துளசி மற்றும் அத்தியிலை ஆகியவற்றை அத்திமலைத் தேவனுக்கு சமர்ப்பணம் செய்வார்கள்.

    இம்முறை மன்னனே பச்சை சாற்றுதல் வைபவத்திற்கு தலைமையேற்கப் போகிறான் என்பதை அறிந்ததும், ராஜகுரு ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் பேசி சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    மன்னவா! தங்கள் முடிவினில் ஏன் இந்த மாற்றம்?! நமது அத்தியூரான் மன்னர்களின் தேவன். அவர்களது அபிலாஷைகளை உடனடியாக நிறைவேற்றுவான். தேவராஜன் என்றுதானே அவனை அழைக்கிறோம். உங்களது மனக்கவலையை கட்டாயம் தீர்த்து வைப்பான். பச்சை சாற்றுதல் வைபவத்திற்குப் பிறகு பாருங்கள். உங்களது மடியில் ஒரு இளவரசன் தவழ்வான். - ராஜகுரு கூறினார்.

    மன்னனுக்கு பெயர் சொல்ல ஒரு பிள்ளை தேவை. மன்னனை மட்டுமல்ல, மக்களையும் வாரிசில்லாத நாடு என்கிற பிரச்னை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு எதற்காக நெய்க்கு அலைய வேண்டும்? கேட்கும் வரங்களை அள்ளித்தரும் அத்திமலையான் இருக்க, மன்னன் ஏன் இன்னும் பிள்ளையை பெற்றுக்கொள்ளவில்லை என்று வீதிகளில் மக்கள் பேசிக்கொண்டிருந்தது ராஜகுருவின் செவிகளை எட்டியது. தனது வீர்யத்திலும் ஆண்மையிலும் அதீத நம்பிக்கையினை கொண்டுதான் இதுகாறும் காத்திருந்த மன்னன், முதன்முறையாக பச்சை சாற்றுதல் வைபவத்தில் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தான். இப்போது அவன் திடீரென்று அதைத் தவிர்க்கப் போவதாக அறிவித்ததும், ராஜகுரு வேதனை அடைந்தார். அவனுக்குத் தொடர்ந்து ஆறுதல் மொழிகளையும் கூறினார்.

    திருலோச்சன பல்லவன், ராஜகுரு சதகரணியை யோசனையுடன் பார்த்தான். "எனது சகதலையன் [14] இளஞ்சேட்சென்னி கூட தனது பெயரைச் சொல்ல ஒரு மகனை ஈன்றுவிட்டுச் சென்றிருக்கிறான். அவனுக்குப் பிறகு அந்த பச்சிளம் பாலகன் பிரதிநிதிகளின் மூலமாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறான். சோழ நாட்டில் கூட மனநிம்மதி நிலவுகின்றது. ஆனால் இங்கே மன்னனாக நான் அரியணையில் அமர்ந்திருந்தும், நாட்டில் குழப்பம் நிலவுகிறது. எனக்கு இன்னும் வாரிசு உருவாகவில்லை என்பது மக்களிடையே பெரும் பேச்சாக உள்ளது. எனவேதான், எனக்காக இல்லாவிட்டாலும், இந்த நாட்டிற்கு ஒரு இளவரசனை அத்திமலைத் தேவன் தந்தே ஆக வேண்டும். ஆனால், பச்சை சாற்றுதல் வைபவத்தில் கலந்து கொண்டால்தான் எனக்கு பிள்ளை பிறக்கும் என்றால், இப்போது அந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை." - திருலோச்சனன் குரலில் ஒருவித அச்சம் புலப்பட்டது.

    தலைமை அமைச்சர் கோலவிக்கிரமர் திகைப்புடன் மன்னனை நோக்கினார்.

    மன்னரே! தங்களது இந்த திடீர் முடிவுக்குக் காரணத்தை நாங்கள் அறியலாமா?

    திருலோச்சனன் சற்றே கண்களை மூடி தனது இருக்கையில் சாய்ந்தான். முந்தைய இரவு தான் கண்ட கனவினை இவர்களிடம் எப்படிச் சொல்வான்? அந்தக் கனவு கலைந்ததும் உறக்கம் பிடிக்காமல் ஒத்தாடை அரண்மனையின் உப்பரிகையில் நடுநிசியில் உலவிக் கொண்டிருந்தானே! அந்தக் கனவை எண்ணிய போது தன்னையும் அறியாமல் மன்னனின் தேகத்தில் ஒரு நடுக்கம் பரவியது.

    திருலோச்சனனும் அவன் மனைவி லோச்சனா தேவியும் அத்திமலையான் கோயில் சன்னிதியில் உள்ளனர். ஆனைமலையின் மீது ஏறி சன்னிதியின் முன்பாக நிற்கின்றனர். சன்னிதியின் கதவுகள் திறக்கப்படவில்லை. எங்கும் மக்கள் பச்சையாடையை தரித்து, அத்திமலையான் தரிசனத்திற்காகக் காத்திருக்க, திடீரென்று டமாரங்கள் ஒலிக்க, மணிகள் முழங்க, அத்திமலையானின் சந்நிதிக் கதவுகள் திறக்கின்றன. தூப புகையின் ஊடே, மன்னன் அத்திமலையானை நோக்க, 'ஆ' என்கிற அலறல் அவனிடம் இருந்து எழுகிறது. உள்ளே அத்திமலையானின் சிலை காணப்படவில்லை.

    திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்க, தொலைவில் அத்திமலையான் நடந்து செல்கிறான். ஓடிச்சென்று அவரை அணுகி, தேவராஜனே! எங்கு செல்கிறீர்? பச்சை சாற்றுதலுக்காக நான் வந்திருக்கிறேன்! - மன்னன் கூறுகிறான்.

    அத்திமலையானின் குரல் உக்கிரமாக ஒலிக்கிறது. என்னைக் காக்கத் தவறிவிட்டாய், திருலோச்சனா...! என்னை அடைய பேராசைமிக்கவர்கள் காத்திருக்கிறார்கள். இனியும் உன் ராஜ்யத்தில் இருக்கமாட்டேன்! - அத்திமலையான் கூறுகிறார்.

    திருலோச்சன பல்லவன் அலறியபடி கண்விழித்திருந்தான். அதன் பின்னர் உறக்கம் வராமல் உப்பரிகையில் உலாவிக்கொண்டிருந்தான்.

    தான் கண்ட கனவினை நினைத்து சற்று நேரம் அமைதியைக் கடைப்பிடித்தவன், பின்பு தனது ராஜ குருவையும், தலைமை அமைச்சரையும் மாற்றி மாற்றி நோக்கினான்.

    எனது சிந்தையை குழப்பும் ஒரு கனாவினை நேற்று கண்டேன். பச்சை சாற்றும் வைபவத்தின் போது, அத்தியூரானை தரிசிக்க அவனது சன்னிதி வாயிலில் நிற்க, கதவுகள் திறக்கின்றன. ஆனால், உள்ளே அத்தியூரானின் சிலை காணப்படவில்லை. சற்று தள்ளி அவன் நிற்பதை காண்கிறேன். 'நீ என்னை காக்கத் தவறி விட்டாய். இனி உன் ராஜ்யத்தில் இருக்கமாட்டேன்!' என்றபடி அத்திமலைத் தேவன் மறைந்து போகிறான். எனவேதான், பச்சை சாற்றும் வைபவத்தில் கலந்து கொள்ள தயங்குகிறேன்! மன்னனின் குரலில் சற்றே நடுக்கம் காணப்பட்ட து.

    ராஜகுரு உரத்த குரலில் சிரித்தார். 'போயும் போயும் இந்த கனவுதானா தங்களது மனக்குழப்பத்திற்கு காரணம்' என்கிற தொனியில் அவரது நகைப்பு ஒலித்தது.

    "அத்தியூரான் பெரும் ஆற்றலைக் கொண்டவன். தன்னிடம் தீய எண்ணத்துடன் வருபவர்களை அப்போதைக்கு அப்போதே தண்டிப்பான். தன்னை பக்தியுடன் நாடிய மன்னர்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டான். மன்னர்களின் மன்னன் அவன் என்பதாலேயே அவனை தேவாதிராஜன் என்று அழைக்கிறோம். மன்னா! நான் தங்களுக்கு இமயத்தை கைப்பற்றிய சேரன் செங்குட்டுவன் வரலாற்றினை கூறியிருக்கிறேன் அல்லவா? இமயத்திற்குச் செல்லும் வழியில் காஞ்சிக்கு வந்த அவனது படைகள் தங்குவதற்கு கூடாரங்களை அமைத்துத் தந்து, அவன் கங்கையை கடப்பதற்கு கலங்களைக் கொடுத்து உதவிய சதகரணியின் [¹⁵] வழித்தோன்றல்தான் நான். செங்குட்டுவனை அத்தி மலைக்கு அழைத்துச் சென்று அவனது அருளைப் பெற்றுத் தந்ததோடு, தனது நண்பனான மகத தேசத்து சஞ்சார்யரிடம் கூறி கனக - விஜயன் உள்ளிட்ட பன்னிருவரின் கூட்டணியை வீழ்த்த உதவியதை நினைவுபடுத்துகிறேன்." பரத்வாஜ சதகரணி மன்னருக்கு தைரியம் சொன்னார்.

    வெறும் கனவு என்று இதனை ஒதுக்கிவிட முடியாது, ராஜகுருவே! ஒற்றர்கள் மூலம் நான் அறிந்த சேதியை சொல்கிறேன். மவுரிய குல அசோகனின் மகன் தசரதன் புத்த கயையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ எண்ணியிருக்கிறான். அதன் பொருட்டு தேவ உடும்பர அத்திமரத்தைத் தேடி வருகிறான். பௌத்தர்களுக்கு தேவ உடும்பரம் மிகவும் புனிதமானது. அசோகனின் மனைவியால் சிதைக்கப்பட்ட புத்த கயையில் இருந்த தேவ உடும்பர மரத்திற்கு மாற்றாக ஒரு தேவ உடும்பரத்தில் வடிக்கப்பட்ட புத்தர் சிலையை நிறுவ எண்ணியிருக்கிறான் தசரதன். அவனுக்கு ஆலோசனையை வழங்குபவர் புத்த கயையின் தலைமை பிக்கு, இங்கேதான் பிரச்சனை துவங்குகிறது. நமது அத்திமலையானை பற்றிய விவரங்கள் கசிந்துவிடப் போகிறதே என்கிற கவலைதான் என்னை வாட்டுகிறது. --- மன்னர் சொல்ல, அந்த அறையில் அமைதி நிலவியது.

    தலைமையமைச்சர் கோலவிக்கிரமர் பணிவுடன் எழுந்து நின்றார். கவலைப்படத் தேவையில்லை அரசே! வீரகொசுவனைக் கடந்து ஒருவன் அத்திமலையானை நெருங்குவது என்பது இயலாத காரியம்! -- தலைமை அமைச்சர் கூறினார்.

    தலைமை அமைச்சர் மன்னருக்கு தைரியம் கூறிக் கொண்டிருந்த அதே நடுநிசி வேளையில், மூன்று பேர் [¹⁶] அத்தியூரான் ஆலயத்தின் கிழக்கு வாசல் பொற்றாமரை குளத்தின் கரையில் இருந்த மாமரத்தின் அடர்த்தியான கிளைகளின் பின்பாக அமர்ந்திருந்தனர்... நடுநிசி என்பதால், ஆலயமே காரிருளில் மூழ்கியிருந்தது. திவ்ய தாமாவின் கட்டளைப்படி மகிந்தா, அமரஜோதி மற்றும் தேவசேனன் மூவரும் முன்னிரவே, குளத்தருகே இருந்த மரத்தில் ஏறி பதுங்கியிருந்தனர். காஞ்சியில் உள்ள தேவ உடும்பர மரம், அந்த ஆலயத்தில்தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் யூகித்திருந்தனர். புத்த துறவிகளாக இவர்கள் ஆலயத்தினுள் நுழைந்தால், மற்றவர்கள் ஐயம் கொள்வார்கள் என்பதாலேயே இரவில் யாரும் அறியாமல் மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தனர்.

    எச்சரிக்கை இளவரசே! கோயில் கதவினை அடைப்பதற்கு முன்பாக வீரகொசுவன் என்பவனிடம் ஆலயத்தின் திறவுகோல் ஒப்படைக்கப்படும். திறவு கோலைப் பெறுவதற்காக வீரகொசுவன் சீவேலி என்று ஒரு சாங்கியம் நடைபெறும். அவன் உக்கிர ஆட்டம் ஆடும் வேளையில் யாரும் அவன் கண்களில் படமாட்டார்கள். காரணம், யார் என்ன என்று விசாரிக்காமல் அவர்களை வெட்டி சாய்த்துவிட்டு அவன் ஆடிக் கொண்டே போவான். தனது சுயநினைவில் அவன் இருக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது. நடுநிசி வரை அத்திமலையில்தான் சுற்றிக்கொண்டு இருப்பான். நடுநிசியில்தான் மலையிறங்கி கோவிலின் பிரகாரங்களை வலம் வருவான். விடியும்வரை, கோயில் பிரகாரங்களையே சுற்றிக்கொண்டு இருப்பான். இன்னும் சற்று பொறுத்து அவன் இந்த பக்கமாகத்தான் வருவான். நாம் அவன் கண்களில் படக்கூடாது. நமது சுவாசக் காற்றின் நுட்பமான ஒலிகூட அவனது செவிகளில் விழக்கூடாது. அமரஜோதி கூற, மகிந்தாவுக்கும், தேவசேனனுக்கும் அவரது கூற்று சற்றே விந்தையாக இருந்தது.

    நாம் பின்பற்றும் பௌத்தத்தில் உக்கிரம் என்னும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அனல் ஓம்பும் வைதீக மார்கத்தில்தான் உக்கிர தெய்வங்கள் இருக்கின்றன போலும். மகிந்தா கூற, அந்த இருளின் ஊடே பிராகாரங்களை கூர்ந்து கவனித்தார், அமரஜோதி.

    இளவரசே! தேவசேனா! நான் கூறப்போவதை கவனமாக கேளுங்கள். இப்போதே நாம் மரத்தைவிட்டு இறங்கி, தேவ உடும்பர மரத்தைத் தேடத்துவங்கினால் வீரக்கொசுவனிடம் சிக்கிக்கொள்வோம். அவனுக்குத் தெரியாமல்தான் நாம் வந்த காரியத்தை கவனிக்க வேண்டும். வீரகொசுவனும் நம்மை கண்டுவிடக் கூடாது. நாமும் வந்த வேலையை கவனிக்க வேண்டும். அதற்கு ஓர் உபாயத்தை வைத்திருக்கிறேன். கிசுகிசுத்த குரலில் அமரஜோதி கூறினார்.

    என்ன உபாயம் குருவே? மகிந்தா கேட்டான்.

    "எனது திட்டம் இதுதான். இன்னும் சற்று நேரத்தில் நாம் ஒளிந்திருக்கும் பொற்றாமரை குளம் [17] இருக்கும் பகுதியை நோக்கி, வடக்கு பிரகாரம் வழியாக வந்து, கிழக்கு பிரகாரத்தில் திரும்புவான், வீரகொசுவன். அவன் கிழக்கு பிரகாரத்தினை கடந்து தெற்கு பிராகாரத்தில் திரும்பியவுடன், நாம் மரத்தில் இருந்து குதித்து தேவ உடும்பரத்தைத் தேட வேண்டும். அவன் தெற்கு பிரகாரத்தைக் கடந்து மேற்கு பிராகாரத்தில் திரும்பும் போது நாம் தெற்கு பிரகாரத்தில் தேடுவோம். இப்படியே அவன் அடுத்த சுற்று வருவதற்குள் நாம் ஒவ்வொரு பிராகாரமாகத் தேடுவோம். உக்கிரத்துடன் செல்லும் வீரகொசுவன் வந்த வழியே திரும்பி வரும் வழக்கமில்லை என்று நான் அறிந்திருக்கிறேன். ஆக, நாம் மூவரும் அவன் பின்பாகவே அவன் அறியாதபடி சென்று, தேவ உடும்பர மரத்தினை தேடுவோம். புரிந்ததா?" - அமரஜோதி இருவரையும் எச்சரிக்கையுடன் நோக்கினார்.

    தேவசேனன் அமரஜோதியை இடுங்கிய கண்களினால் பார்த்தான். சுவாமி! எதற்கு இவ்வளவு எச்சரிக்கையினை மேற்கொள்ள வேண்டும்? இதோ நான் இடையினில் சொருகியுள்ள எனது வாளினால், வீரகொசுவனின் கதையை முடித்துவிடுகிறேன். அதன் பிறகு நாம் எவ்வித அச்சமும் இன்றி நமது பணியை கவனிக்கலாம் அல்லவா?

    அமரஜோதி சிரித்தார். அவனது உடலில் இருக்கும் சக்தி உறையினில் இருந்து உனது வாளை உருவுவதற்குக் கூட காத்திருக்காது. க்ஷண நேரத்தில் அவனது வெட்டரிவாள் உனது தலையை கொய்துவிடும். திவ்ய தாமாவின் கட்டளையை ஏற்று நாம் வந்திருக்கிறோம். வீரகொசுவனை கொன்றால் நாட்டிலே பதற்றம் அதிகரிக்கும். நமது சங்கத்தின் காரியத்தை கெடுத்து நமது குருவுக்கு பிரச்னையை உண்டு பண்ணக்கூடாது, தேவசேனா! நான் சொல்லுவது போல் நடப்பதே உத்தமம்! அமரஜோதி கூற, மகிந்தா தேவசேனனை கண்களாலேயே அடக்கினான். அமரஜோதியின் கண்கள் வடக்கு பிராகாரத்தின் மறுகோடியில் நிலைகுத்தி இருந்தன.

    எச்சரிக்கையுடன் இருங்கள்! அவன் நம்மை கடந்து செல்லும் வரை ஆடாமல், அசையாமல் கற்சிலைகளாக இருங்கள். அவன் கிழக்கு பிரகாரத்தை கடந்து தெற்கில் திரும்பியதும், நாம் மரத்தில் இருந்து இறங்குவோம்! என்று மீண்டும் கூறியவர், இருளின் ஊடே கவனித்துக் கொண்டிருந்தார். மகிந்தாவும், தேவசேனாவும் கூட அவர் நோக்கிக் கொண்டிருந்த திக்கிலே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

    எங்கும் பூரண அமைதி நிலவிக் கொண்டிருக்க, திடீரென்று அமரஜோதியின் உடல் விறைத்தது. காற்றின் அலைகள் தொலைவில் இசைக்கப்படும் உடுக்கையின் ஒலியினை சுமந்து வந்து அவர்களது செவிகளில் புகுத்தின.

    அதோ வருகிறான்... வீரகொசுவன்! எச்சரிக்கை...! மீண்டும் கிசுகிசுத்த அமரஜோதியின் குரலில் சற்றே அச்சம் தொனித்தது.

    மகிந்தாவும், தேவசேனனும் நீண்ட வடக்கு பிராகாரத்தின் மறுகோடியைக் கவனித்தனர். முதலில் அவர்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. பிறகு சிறு புள்ளியாக ஒரு வெளிச்சம் தோன்றியதை கவனித்தனர்.

    அந்த வெளிச்சப்புள்ளி இப்படியும் அப்படியுமாக ஆடி அசைவதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1