Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalachakram
Kalachakram
Kalachakram
Ebook413 pages5 hours

Kalachakram

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

ஆலமரத்தடியில் செடிகள் வளராது... ஏன் ஒரு புல் பூண்டுகூட அதனடியில் முளைக்காது என்பார்கள், என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு ஆலமரம் அல்ல... இரண்டு ஆல மரங்களுக்கடியில் முளைக்க முயன்ற செடி எனலாம்.

எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்பட உலகில், கடந்த 50 வருடங்களாக நகைச்சுவைப் படங்களை எழுதி இயக்கி, கொடி கட்டிப் பறக்கிறார். காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா, பாட்டி சொல்லைத் தட்டாதே என்று அவருடைய நகைச்சுவை வசனங்களை இன்றும் சிலாகித்துப் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

இவர் ஒரு ஆலமரம் என்றால், மற்றொரு ஆலமரம் என் தாயார். 'கதவு'. ‘படிகள்', 'சுவர்' என்று இலக்கிய உலகில் பரிசுகளாக வாங்கிக் குவித்து. அந்தப் பரிசுகளையே கடைக்காலாக வைத்து தமிழன்னைக்குக் கோவிலே கட்டியிருக்கிறார் திருமதி. கமலா சடகோபன். அவர்தான் என் அம்மா. 'வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?' என்று பள்ளியாசிரியர்கள் கேட்டபோது, 'எழுத்தாளனாக' என்று கூறியிருக்கிறேன். ஆனால் அப்பா வழியில் திரைப்பட எழுத்தாளனாகவா, அல்லது அம்மா வழியில் இலக்கிய நாவலாசிரியராகவா என்று என் தமிழ் ஆசிரியை கேட்ட போதுதான்... பதில் கூற முடியாமல் விழித்தேன்.

அப்பா வழியா...? அம்மா வழியா...? என்று யோசித்துக் கொண்டே காலத்தை வீணடித்துவிட்ட நான். வேறு வழியில்லாமல் 'என் வழி தனி வழி' என்று பத்திரிகையுலகில் நுழைந்து விட்டேன்.

1986இல் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்த நான். பிறகு ஐந்து வருடங்கள் இந்தியன் எக்ஸ்பிரசில் துணையாசிரியராகப் பணியாற்றினேன். 1992ல் 'தி இந்து' பத்திரிகையில் சேர்ந்த நான், தற்போது அதில் தமிழகப் பிரிவின் செய்தி ஆசிரியராக உள்ளேன்.

அலுக்க சலுக்க கட்டுரைகள் எழுதிய நான் அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன். ஒரு நாள், அந்தப் பேப்பர் 'கட்டிங்கு'களைப் படித்தபோது, அவை எனக்கு 'ஊசிப் போன தின்பண்டங்களைப் போலத் தோன்றியது.

செய்தி என்பது காலையில் தோன்றி மாலையில் வாடிவிடும் மலர் போன்றது. அதை மையமாக வைத்து எழுதப்படும் கட்டுரைகளும். விரைவிலேயே அர்த்தமற்றதாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

'என் வழி தனி வழி' என்று புறப்பட்ட நான்... அது தவறான வழி என்று காலங்கடந்தே புரிந்து கொண்டேன். அந்த நிமிடத்தில், என் அப்பாவைப் போல் நகைச்சுவை வசனங்களை எழுத முடிவு செய்தேன்.

சின்னத்திரையில் நுழைந்த நான். 'கிருஷ்ணா காட்டேஜ்', ‘அனிதா வனிதா' 'வித்யா' போன்ற தொடர்களுக்கு வசனங்கள் எழுதினேன். ஆனாலும் திருப்தி கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் நான் இருந்த சமயத்தில்தான். என் அம்மா என்னை நாவல் ஒன்றை எழுதும்படி யோசனை சொன்னார். முயன்று பார்ப்போமே என்று நான் நினைத்த மறுநிமிடம், என் அடிமனதில் ஒரு குரல் அப்படி நாவல் எழுதுவதாக இருந்தால், உன் மனதில் கடந்த 25 வருடங்களாகத் தேக்கி வைத்திருக்கும் மர்மங்களை மையமாக வைத்தே எழுது' என்று அந்தக் குரல் பணித்தது.

என்ன மர்மங்கள் அவை?

1987ல் நான் இந்தியன் எக்ஸ்பிரசில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு மத்திய இணை அமைச்சரின் காரியதரிசியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பன் ஒருவன், எனக்கு போன் செய்தான் - போனில் ஒரு தகவலைச் சொன்னான்.

அது ஒரு கிசுகிசுதான்!

அந்த ஒரு வரி 'கிசு... கிசு'தான் இந்த நாவலின் கரு. ஒரு குறுநாவலைப் பெரும்நாவலாக எழுதலாம். ஒரு சிறுகதையைக்கூட, நாவலாக எழுதலாம். நான் ஒரு கிசு...கிசுவைத்தான் 400 பக்கங்களுக்கு நாவலாக எழுதியிருக்கிறேன். அந்தக் கிசு...கிசுவிற்கான ஆதாரங்களைத் தேடித் துருவி.... திரட்ட முற்பட்ட எனக்குப் பல அனுபவங்கள். சிலந்தி நூலாம்படை ஒன்றை பின்னுவது போல், அந்தக் கிசுகிசுவை மையமாக வைத்து என் கற்பனை நூலால் வலை ஒன்றைப் பின்னியிருக்கிறேன். அதுவே உங்கள் கைகளில் 'காலச்சக்கரமாக' சுழன்று கொண்டிருக்கிறது.

இந்த நாவல் எழுதி முடித்த உடனேயே, என் மனது நிறைந்துவிட்டது. பத்திரிகை உலகில் 25 வருடங்களாகக் கிடைக்காத நிறைவு இந்த ஒரு நாவலில் எனக்குக் கிடைத்து விட்டது.

அரசியல் விஞ்ஞானம். சட்டம், மருத்துவம். காதல், பக்தி. மாந்த்ரீகம், தாந்த்ரீகம், யோகம், நகைச்சுவை, மர்மம், கலாச்சாரம் என்று இந்தியத் திருநாட்டின் அத்தனை சிறப்பான விஷயங்களும் இந்த நாவலில் உண்டு. மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் பழனி முருகனை வடித்தது போல், நல்ல விஷயங்களைத் திரட்டித்தான் காலச்சக்கரத்தை வடிவமைத்திருக்கிறேன்.

என் தாய் - தந்தைக்கும், இந்த நாவல் எழுதும் போது என்னைத் தனி உலகில் சஞ்சரிக்க அனுமதித்த என் மனைவி, குழந்தைகளுக்கும் நன்றி. இனி 'காலச்சக்கரம்' சுழலட்டும்.

அன்புடன்
நரசிம்மா

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580132105234
Kalachakram

Read more from Kalachakram Narasimha

Related to Kalachakram

Related ebooks

Related categories

Reviews for Kalachakram

Rating: 4.5 out of 5 stars
4.5/5

4 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 3 out of 5 stars
    3/5
    Thrilling, wow, awesome Good and interesting first part.
    Eagerly waiting for the second d part

Book preview

Kalachakram - Kalachakram Narasimha

http://www.pustaka.co.in

காலச்சக்கரம்

Kalachakram

Author:

காலச்சக்கரம் நரசிம்மா

Kalachakram Narasimha

For more books

http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

அத்தியாயம் 45

அத்தியாயம் 46

அத்தியாயம் 47

அத்தியாயம் 48

அத்தியாயம் 49

முன்னுரை

ஆலமரத்தடியில் செடிகள் வளராது... ஏன் ஒரு புல் பூண்டுகூட அதனடியில் முளைக்காது என்பார்கள், என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு ஆலமரம் அல்ல... இரண்டு ஆல மரங்களுக்கடியில் முளைக்க முயன்ற செடி எனலாம்.

எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்பட உலகில், கடந்த 50 வருடங்களாக நகைச்சுவைப் படங்களை எழுதி இயக்கி, கொடி கட்டிப் பறக்கிறார். காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா, பாட்டி சொல்லைத் தட்டாதே என்று அவருடைய நகைச்சுவை வசனங்களை இன்றும் சிலாகித்துப் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

இவர் ஒரு ஆலமரம் என்றால், மற்றொரு ஆலமரம் என் தாயார். 'கதவு'. ‘படிகள்', 'சுவர்' என்று இலக்கிய உலகில் பரிசுகளாக வாங்கிக் குவித்து. அந்தப் பரிசுகளையே கடைக்காலாக வைத்து தமிழன்னைக்குக் கோவிலே கட்டியிருக்கிறார் திருமதி. கமலா சடகோபன். அவர்தான் என் அம்மா.

'வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?' என்று பள்ளியாசிரியர்கள் கேட்டபோது, 'எழுத்தாளனாக' என்று கூறியிருக்கிறேன். ஆனால் அப்பா வழியில் திரைப்பட எழுத்தாளனாகவா, அல்லது அம்மா வழியில் இலக்கிய நாவலாசிரியராகவா என்று என் தமிழ் ஆசிரியை கேட்ட போதுதான்... பதில் கூற முடியாமல் விழித்தேன்.

அப்பா வழியா...? அம்மா வழியா...? என்று யோசித்துக் கொண்டே காலத்தை வீணடித்துவிட்ட நான். வேறு வழியில்லாமல் 'என் வழி தனி வழி' என்று பத்திரிகையுலகில் நுழைந்து விட்டேன்.

1986இல் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்த நான். பிறகு ஐந்து வருடங்கள் இந்தியன் எக்ஸ்பிரசில் துணையாசிரியராகப் பணியாற்றினேன். 1992ல் 'தி இந்து' பத்திரிகையில் சேர்ந்த நான், தற்போது அதில் தமிழகப் பிரிவின் செய்தி ஆசிரியராக உள்ளேன்.

அலுக்க சலுக்க கட்டுரைகள் எழுதிய நான் அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன். ஒரு நாள், அந்தப் பேப்பர் 'கட்டிங்கு'களைப் படித்தபோது, அவை எனக்கு 'ஊசிப் போன தின்பண்டங்களைப் போலத் தோன்றியது.

செய்தி என்பது காலையில் தோன்றி மாலையில் வாடிவிடும் மலர் போன்றது. அதை மையமாக வைத்து எழுதப்படும் கட்டுரைகளும். விரைவிலேயே அர்த்தமற்றதாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

'என் வழி தனி வழி' என்று புறப்பட்ட நான்... அது தவறான வழி என்று காலங்கடந்தே புரிந்து கொண்டேன். அந்த நிமிடத்தில், என் அப்பாவைப் போல் நகைச்சுவை வசனங்களை எழுத முடிவு செய்தேன்.

சின்னத்திரையில் நுழைந்த நான். 'கிருஷ்ணா காட்டேஜ்', ‘அனிதா வனிதா' 'வித்யா' போன்ற தொடர்களுக்கு வசனங்கள் எழுதினேன்.

ஆனாலும் திருப்தி கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் நான் இருந்த சமயத்தில்தான். என் அம்மா என்னை நாவல் ஒன்றை எழுதும்படி யோசனை சொன்னார்.

முயன்று பார்ப்போமே என்று நான் நினைத்த மறுநிமிடம், என் அடிமனதில் ஒரு குரல் அப்படி நாவல் எழுதுவதாக இருந்தால், உன் மனதில் கடந்த 25 வருடங்களாகத் தேக்கி வைத்திருக்கும் மர்மங்களை மையமாக வைத்தே எழுது' என்று அந்தக் குரல் பணித்தது.

என்ன மர்மங்கள் அவை?

1987ல் நான் இந்தியன் எக்ஸ்பிரசில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு மத்திய இணை அமைச்சரின் காரியதரிசியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பன் ஒருவன், எனக்கு போன் செய்தான் - போனில் ஒரு தகவலைச் சொன்னான்.

அது ஒரு கிசுகிசுதான்!

அந்த ஒரு வரி 'கிசு... கிசு'தான் இந்த நாவலின் கரு. ஒரு குறுநாவலைப் பெரும்நாவலாக எழுதலாம். ஒரு சிறுகதையைக்கூட, நாவலாக எழுதலாம்.

நான் ஒரு கிசு...கிசுவைத்தான் 400 பக்கங்களுக்கு நாவலாக எழுதியிருக்கிறேன். அந்தக் கிசு...கிசுவிற்கான ஆதாரங்களைத் தேடித் துருவி.... திரட்ட முற்பட்ட எனக்குப் பல அனுபவங்கள். சிலந்தி நூலாம்படை ஒன்றை பின்னுவது போல், அந்தக் கிசுகிசுவை மையமாக வைத்து என் கற்பனை நூலால் வலை ஒன்றைப் பின்னியிருக்கிறேன். அதுவே உங்கள் கைகளில் 'காலச்சக்கரமாக' சுழன்று கொண்டிருக்கிறது.

இந்த நாவல் எழுதி முடித்த உடனேயே, என் மனது நிறைந்துவிட்டது. பத்திரிகை உலகில் 25 வருடங்களாகக் கிடைக்காத நிறைவு இந்த ஒரு நாவலில் எனக்குக் கிடைத்து விட்டது.

அரசியல் விஞ்ஞானம். சட்டம், மருத்துவம். காதல், பக்தி. மாந்த்ரீகம், தாந்த்ரீகம், யோகம், நகைச்சுவை, மர்மம், கலாச்சாரம் என்று இந்தியத் திருநாட்டின் அத்தனை சிறப்பான விஷயங்களும் இந்த நாவலில் உண்டு. மூலிகைகளைக் கொண்டு சித்தர்கள் பழனி முருகனை வடித்தது போல், நல்ல விஷயங்களைத் திரட்டித்தான் காலச்சக்கரத்தை வடிவமைத்திருக்கிறேன்.

இனி 'காலச்சக்கரம்' சுழலட்டும்.

அன்புடன்

நரசிம்மா

"****

1

1978, புதுதில்லி

அந்தக் காளைமாடு நாலுகால் பாய்ச்சலாக அவரை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது. திறந்த வாய் மூடாமல், திகிலுடன், உறைந்து போய் நின்று கொண்டிருந்தார், திவான் சதுர்வேதி பண்டிட். அபயக்குரல் எழுப்பத்தான் அவர் அவ்வாறு வாய் திறந்திருந்தார். ஆனாலும் வெளிவந்தது என்னவோ காற்றுதான்; தன் கதி அதோ கதிதான் என்று அவர் முடிவே கட்டிவிட்ட நிலையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஓடி வந்த அந்த மாடு சதுர்வேதியின் காலடியில் பணிவாக உட்கார்ந்தது. அப்போதுதான் அந்த மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியை அவர் கவனித்தார். அதன் முதுகில் ஒரு சிவப்புத் துணி போர்த்தப்பட்டிருந்தது. அதில் தங்க நிற சிவலிங்கம் காணப்பட்டது.

சதுர்வேதி ஆச்சரியத்துடன் அந்தக் காளையைப் பார்க்க, அது அமைதியாக எழுந்து நடக்க ஆரம்பித்தது. தன்னையும் அறியாமல் அவரும் அதைப் பின்தொடர ஆரம்பித்தார். அதன் மணியோசை இவரை 'வா…வா' என்று அழைப்பதைப்போல உணர்ந்தார். அந்த மாடு இப்போது ஒரு இருண்ட குகைக்குள் நுழைய, இவரும் அதைப் பின் தொடர்ந்தார். அந்த குகை போகப் போக குறுகிக்கொண்டே போனது. முடிவில் ஒரு சிறு துவாரம். இதனை எப்படி கடக்கப் போகிறோம் என்று அவர் குழப்பத்துடன் பார்க்க....

'படார்' - என்ற சத்தம்.

சதுர்வேதி இப்போது ஒரு பெரிய திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார். எதிரே வெண்மையை வாரிக் கொட்டியபடி இமயமலைச் சாரல்.... இல்லை.... இல்லை...! அது ஒரு பெரிய பனிலிங்கம்.

"டோலக்'கின் ஒலியும், பம்பையின் ஓசையும் கலந்து ஒலிக்க, அந்தப் பிரதேசம் முழுவதும் இனிமையான 'கிண்கிணி' மணியோசையின் நாதம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. யாரோ தீபாராதனை காட்டினார்கள். உணர்ச்சி வசப்பட்டவராக தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்திக் கூப்பினார் சதுர்வேதி. அவர் கண்கள் மூடியிருந்தன. மீண்டும் கண்களைத் திறந்தபோது... அந்த வெண்மையான பனிலிங்கம் காணப்படவில்லை. எங்கும் இருட்டு! ஆனால் அந்த 'கிண்கிணி' மணியோசை மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது'

திடுக்கிட்டு எழுந்தார் சதுர்வேதி! என்ன தெய்வீகமான கனவு. ஆனால் மணியோசை மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறதே... எப்படி?

பிறகுதான் அவருக்கு உறைத்தது, அடிப்பது டெலிபோன் மணி. வியப்புடன் படுக்கையில் சரிந்து தலைப்புறத்தில் இருந்த அலாரம் டைம்பீஸைப் பார்த்தார். மணி ஒன்றரை!

இந்த நடு இரவில் யார் போன் செய்வது? இவர் பெட்ரூமுக்கு பிரத்யேக டெலிபோன் இணைப்பு உண்டு. அந்த நம்பரையும் முக்கியமான சிலருக்கே கொடுத்திருந்தார். 'எடுக்கலாமா வேண்டாமா' - என்பது போல டெலிபோனை வெறித்துப் பார்த்தவர், பிறகு மெதுவாக ரிசீவரை எடுத்தார்.

ராம்... ராம்

சதுர்வேதிக்கு ஹலோ சொல்லும் வழக்கம் கிடையாது. எதிரே ஒலித்த குரலில் இருந்த பதற்றத்தை அவர் கவனிக்கத் தவறவில்லை.

திவான்ஜி! சாகர் பேசறேன்! அம்மாவோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு! உடனே கிளம்பி வாங்க

அவரது பதிலுக்குக் காத்திராமல், எதிர்முனையில் டெலிபோன் துண்டிக்கப்பட்டு விட்டது.

சதுர்வேதி விழித்தார். டெலிபோனில் பேசியது, ஆனந்தபூர் சமஸ்தானத்தின் மகாராணி வசுந்திரா தேவியின் இளைய மகன் யுவராஜ் சாகர்சிங் சக்கரவர்த்தி. எதற்காக இந்த நேரத்தில் இவரைக் கூப்பிடுகிறான்? அம்மாவின் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னானே?

வசுந்திராவுக்கு என்ன ஆயிற்று? அப்படியே கட்டிலில் உட்கார்ந்து கொண்டவர், இன்டர்காமில் தன் உதவியாளன் கேதார்நாத்தை அழைத்தார். சற்று நேரம் கழித்து தூங்கி வழியும் குரலில் அவன் பேசினான்.

பண்டிட்ஜி

கேதார்! நாம உடனே மோதிமகாலுக்குப் போகணும் -

உத்திரவு கொடுத்துவிட்டு அவர் பாத்ரூமை நோக்கி நடந்தார்.

கார் டிரைவரை எழுப்பி கிளம்புவதற்குத் தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு முகத்தை அலம்பிக் கொண்ட கேதார், சமையல் அறைக்குச் சென்று சூடாக 'ஏலக்காய் டீ" தயாரித்தான். அதை வெள்ளி கூஜா ஒன்றில் ஊற்றியவன், வெள்ளி டம்ளர் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தான். அதற்குள் சதுர்வேதியும் கீழே வந்து கொண்டிருந்தார்.

'பஞ்சகச்சம், ஷெர்வானி; அதன் மேல் பரவிக் கிடக்கும் சால்வை; தந்தத்தினால் ஆன வாக்கிங் ஸ்டிக் நெற்றியில் ஜவ்வாது பொட்டு, சதுர்வேதியின் மாமூல் அலங்காரம் இது. முன்பெல்லாம் 'டர்பன்' அவர் தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும். இப்போது காலத்திற்கேற்ப ஒரு காந்தி குல்லாய் மட்டுமே.

போர்டிகோவில் தயாராக நின்று கொண்டிருந்த வெள்ளை அம்பாசடரில் அவசரமாகத் தன்னை நுழைத்துக்கொண்டார். அவர் ஏறிக்கொள்ளும் வரை காத்திருந்த கேதார், தான் காரின் முன் சீட்டில் தொற்றிக்கொண்டான்.

சதுர்வேதி எதுவும் பேசவில்லை. கேதார் நீட்டிய 'ஏலக்காய் டீ'யை யோசனையுடன் வாங்கி உறிஞ்சினார்.

'மோதிமகாலில் என்ன நடந்திருக்கும்?

மோதிமகால்----

ஆனந்தபூர் ராஜவம்சத்தின் புதுதில்லி அரண்மனை. விடுதலைக்கு முன் இந்தியாவை ஆண்ட ஒரு 'வைஸ்ராய்' குடியிருந்த இடம் - ராஜவம்சத்தினர் தில்லி வந்தால் தங்க இடம் வேண்டுமென்று அதை வாங்கி அரண்மனையாக மாற்றி, 'மோதிமகால்' என்று பெயரும் வைக்கப்பட்டிருந்தது. ஆனந்தபூரில் உள்ள அவர்கள் அரண்மனை 'சுந்தரமகால்' அளவு பிரும்மாண்டமானதாக இல்லாவிட்டாலும், விஸ்தாரமாகத்தான் இருந்தது, தில்லி அரண்மனை. ஆனந்தபூர் சமஸ்தானம் பெரியது. எத்தனையோ சமஸ்தானங்களை அடக்கி தங்கள் காலடியில் கதறிக் கொண்டு விழச் செய்த பிரிட்டிஷ்காரர்களுக்கு, இந்த சமஸ்தானத்தின் மீது மட்டும் என்ன காதல் என்று தெரியவில்லை. இப்போது மகாராணியாக இருக்கும் வசுந்திராதேவியின் தாத்தா மோதிசிங் சக்கரவர்த்தி, வெள்ளைக்காரர்களின் பிரியமான தோழர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதிகள் வந்து விட்டால் போதும். ஆனந்தபூர் அரண்மனையில் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான். அதுவும் பிரிட்டிஷ்காரர்களுக்குப் பிடித்தமான அவர்கள் பாணி "பால்' விருந்துகள் அடிக்கடி நடைபெறும்.

மோதிசிங்கின் குடும்பத்தைத் தவிர இந்தியர்கள் வேறு யாரும் அந்த விருந்துகளில் பங்கேற்க முடியாது.

மோதிசிங் சக்கரவர்த்திக்கு இந்திய நாட்டுப் பழக்க வழக்கங்கள் வேப்பங்காயாகக் கசந்தது. அவர் வேட்டி அணிந்ததாக வரலாறே கிடையாது. எப்பவும் பிரின்ஸ்லி சூட்' தான்! சதா துப்பாக்கியும் கையுமாக இருப்பார்.

அவருடைய ஒரே பிள்ளை ஜெயன்சிங் சக்கரவர்த்தியும், மகள்கள் ஜ்யோத்ஸனா, ஜோதிலட்சுமியும் இங்கிலாந்தில் படித்துவிட்டு வந்திருந்தார்கள்.

சுதந்திரப் போராட்டம் உச்சகட்டம் அடைந்ததும் காற்று எதிர்ப்பக்கமாக வீசுவதை உணர்ந்து கொண்ட மோதிசிங், பிரிட்டிஷாருக்கு 'டாட்டா' சொல்லிவிட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு நட்புக்கரம் நீட்டினார். அவர்களை 'சுந்தர மகாலு'க்கு வரவழைத்து ராஜ உபசாரம் செய்தார். அவர்களும் தங்களுக்கு ஒரு மகாராஜாவின் ஆதரவு கிடைத்ததை எண்ணிப் பூரித்தனர்.

விளைவு - விடுதலைக்குப் பிறகு அவர் கொடுத்த ஆதரவுக்கு விலையாக, 'பரிசுமழை' பொழிய ஆரம்பித்தது. ஆனந்தபூர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஜெயன்சிங் சக்கரவர்த்தி, ஆளுங்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு அவர் வெற்றியும் பெற்றார். கையோடு மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு விட்டார்.

தீவிர அரசியலில் குடும்பம் ஈடுபட, புதுதில்லியில் அவர்களின் ஜாகையாக மாறியது மோதிமகால்.

தங்கள் திவான் சதுர்வேதி பண்டிட்டுக்கும் தில்லியிலேயே சகல வசதிகளுடன் ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். ஜெயன்சிங் மறைவுக்குப் பிறகு, வசுந்திரா அவர் வாரிசாக ஆனந்தபூர் தொகுதியின் எம்.பி.யானாள். மந்திரி பதவியும் மறக்காமல் தரப்பட்டுவிட்டது.

கடந்த பொதுத்தேர்தலில், ஆளுங்கட்சி படு தோல்வியை சந்திக்க, வசுந்திராவும் தனது ஆனந்தபூர் தொகுதியில் மண்ணைக் கவ்வி இருந்தாள். மகாராணியான தான் 'தன் சமஸ்தானத்திலேயே தோல்வி அடைந்துவிட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. புதிதாக வந்திருந்த ஆட்சியாளர்கள் வேறு, சமஸ்தான சொத்து விவரங்களைக் குடைந்து கொண்டிருந்தார்கள். இருக்கும் பிரச்னைகள் போதாது என்று இப்போது என்ன புதிதாக முளைத்திருக்கிறதோ? சதுர்வேதி நினைத்தார்.

புதுதில்லியின் 'ஹைலெவல் செக்யூரிட்டி' ஏரியாவில்தான் மோதிமகால் இருந்தது. மோதி சிங்கின் மனைவி ரூபா ராணிதான் இந்த மகாலைத் தேர்ந்தெடுத்து தன் கணவன் பெயரையே அதற்கு வைத்திருந்தாள். அவளுக்கு சாஸ்திரங்களில் ரொம்ப நம்பிக்கை. மோதிமகாலில் பெரிய ‘வாஸ்து ஹோமம்' ஒன்றை திவான் சதுர்வேதியைக் கொண்டு செய்தாள். திவானுக்கும் அரசியல் பொறுப்புகளைவிட இம்மாதிரி மந்திர, தந்திர, யாகங்களில் ஈடுபாடு அதிகம். இதனாலேயே அவர் சமஸ்தானத்தின் 'ராஜகுரு' என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

சதுர்வேதியின் கார் மோதிமகாலின் 'போர்ட்டிகோ'வில் போய் நின்றது. வழக்கமாகக் காணப்படும் 'பாதுகாப்பு' போர்வை இப்போது இல்லை. வசுந்திரா தான் பதவியில் இல்லையே!

அதற்கு பதிலாக பனிப்போர்வை மகாலைச் சுற்றிப் படர்ந்திருந்தது.

திவான் காரிலிருந்து இறங்கினார். இரண்டுபடிகள் ஏறியவர், திரும்பி கேதாரைப் பார்க்க, அவன் அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நாசூக்காக மகாலின் தோட்டங்கள் பக்கமாக ஒதுங்கினான்.

திவான் வசுந்திராவின் படுக்கையறையை நோக்கி நடந்தார். அவருக்கு அந்த மகாலின் மூலை முடுக்கெல்லாம் அத்துபடி.

வசுந்திராவின் அறைக்குள் நுழைந்தவர் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றார். மகாராணியா அது?...

தனது மிடுக்கு நடையாலும், கம்பீரமான பேச்சாலும், கண்டிப்பான பார்வையாலும், ராஜதந்திர நடவடிக்கைகளாலும் எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டிருந்த வசுந்திரா இப்போது அலங்கோலமாய்க் கிடந்தாள். கலைந்த தலையும், வெளிறிப் போன முகமும், கண்களைச் சுற்றிக் கருவளையங்களுமாய், எதையோ பிதற்றிக் கொண்டிருந்தாள்.

சாகர்சிங்கின் மனைவி மந்திரா கையில் சூடான ஓவலுடன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

என்ன ஆச்சு சாகர்?

அம்மா ஏதோ கெட்ட கனவு கண்டிருக்காள்னு நினைக்கிறேன்-

ஆக்ரோஷத்துடன் கண்களைத் திறந்தாள். வசுந்திராதேவி.

எத்தனை தடவை சொல்றது சாகர்? உன் மண்டையில ஏறவே மாட்டேங்கறதே! நான் கண்டது கனவேயில்லை. என்னோட ரெண்டு கண்ணால அந்த லேடியை நான் பார்த்தேன்.

"சரிம்மா! அந்த லேடி உங்க ரூமுக்கு வந்தா! நான் ஒத்துக்கறேன். நீங்க முதல்ல இந்த ஓவலை சாப்பிடுங்க...! மந்திரா மாமியாரை சமாதானப்படுத்தினாள்.

என்ன வசு! என்ன ஆச்சு உனக்கு? மூன்று தலைமுறையாக அந்தக் குடும்பத்தின் விசுவாச ஊழியனாக இருக்கும் உரிமையில், திவான் அவளை ஒருமையில் அழைத்தபடி சோபாவில் அமர்ந்தார்.

வசுந்திரா மௌனம் சாதித்தாள். சாகர்தான் நடந்ததை விவரித்தான்.

திவான்ஜி! அம்மா தூங்கப் போகிறவரையில நல்லாத்தான் இருந்தா. இன்ஃபாக்ட், ரஞ்சன் அண்ணா ஃப்ராங்பர்ட்லேர்ந்து பதினோரு மணிக்கு போன் பண்ணினான். அப்பக்கூட 'எப்ப இந்தியா வரப்போறே'னு சிரிச்சு பேசிண்டிருந்தா. அப்புறமாத் தான் தூங்கப் போனா, பன்னிரெண்டு மணி சுமாருக்கு திடீர்னு அலறிகிட்டு ரூம் ரூமா ஓட ஆரம்பிச்சா... யாரோ தன் ரூமுக்கு வந்ததா சொல்றா! வெறும் கனவுதான்... நிம்மதியா தூங்கு'னா கேட்க மாட்டேங்கிறா...

சாகர் சொன்னதும், வசுந்திரா ஆவேசத்துடன் எகிற, மந்திரா கையில் இருந்த ஓவல் கப் பறந்து சென்று கீழே விழுந்து நொறுங்கியது. அதற்கு மேல் அவள் கோபத்தை எதிர்கொள்ள பயந்து, நைசாக அவள் நழுவினாள்.

இடியட்! திருப்பித் திருப்பி கனவு'னு சொல்லி திவான்ஜி முன்னே என்னை அவமானப்படுத்தறியே...! வசுந்திராவின் முகத்தில் ஆத்திரம் கொப்பளித்தது.

சரி... சரி...! திவான் சாகரின் தோளைத் தட்டி அவனைப் பேசாமல் இருக்கும்படி சமிக்ஞை காட்டினார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் சுவாமி சுக்ரானந்தா உள்ளே நுழைந்தார்.

சுக்ரானந்தா! இருபத்தி ஏழே வயதான பாலயோகி. வேடிக்கை என்னவென்றால், யோகியாக மாறுவதற்கு முன்னால் இவர் பெயர் சஜ்ஜன்.

சஜ்ஜன் சாகர்சிங்கின் உயிர் நண்பன். இருவரும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் யூனிவர்சிடியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் ஒன்றாகப் படித்து மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள். தொடர்ந்து இருவரும் மெகானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார்கள். ஏதோ வேலையாக சஜ்ஜன் இந்தியா வந்தவன், திடீரென்று காணாமல் போனான். சாகர் மட்டும் தொடர்ந்து அமெரிக்காவில் படித்தான். படிப்பு முடிந்து இந்தியா வந்த சாகர், தன் உயிர் நண்பன் சஜ்ஜனை சல்லடை போட்டுத் தேடினான். அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. திடீரென்று, ஒருநாள் மோதிமகாலுக்கு சாகரைத் தேடி ஒரு யோகி வந்தார். அந்த யோகிதான் தன் உயிர் நண்பன் சஜ்ஜன் என்று தெரிந்து கொண்டபோது அவனுக்கு பயங்கர ஷாக். ஆனால் அதற்குப் பிறகு அவனை விட்டுவிட மனம் வரவில்லை. நட்பைப் புதுப்பித்துக் கொண்டான்.

சுக்ரானந்தா சுவாமியாக மாறியிருந்த சஜ்ஜனுக்கு ஒரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்து, தனது குடும்பத்துக்கு 'யோகா' சொல்லிக் கொடுக்கும்படி வேண்டினான். இப்போது வசுந்திரா, சுவாமியின் முக்கியமான சிஷ்யை.

தன் தாயின் டென்ஷனைக் குறைக்க, திவானுக்கு ஃபோன் செய்த கையோடு சுவாமி சுக்ரானந்தாவையும் வரவழைத்திருந்தான் சாகர். சுவாமியின் வருகை வசுந்திராவுக்குத் தெம்பைக் கொடுத்தது.

"என்ன வசுஜி! மனசை ஏன் அலைபாய விடறீங்க...? புன்னகையுடன் கேட்ட சுவாமி, திவானைப் பார்த்து ஒரு 'நமஸ்தே'யை உதிர்த்தார்.

எனக்கு என்ன ஆச்சுனே தெரியலை, சுவாமிஜி! ஐ நோ... மை பிஹேவியர் இஸ் சைல்டிஷ்... - எதையாவது செய்து என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்களேன் - என்ற கெஞ்சல் அவள் குரலில் தொனித்தது.

சுவாமி, திவான் பக்கத்தில் இருந்த இன்னொரு சேரில் அமர்ந்தார். குட்டையான திவான்ஜியும், நெட்டையான சுவாமிஜியும் எல்லாவற்றிலுமே இரு துருவங்கள். முன்னவர் இரட்டை நாடியான சரீரம் கொண்டவர். பின்னவர் ஒட்டடைக் குச்சியைப் போன்ற உடல்வாகு கொண்டவர். திவானுக்குக் கட்டையான குரல், சுவாமிக்கோ பெண்மை கலந்த மயக்கும் குரல். முன்னவர் வைதீகமானவர். பின்னவரோ யோகாப்பியாசம் தவிர வேறு அனுஷ்டானங்கள் தேவையில்லை என்று நினைப்பவர். தேவதைகளை உபாசித்து அவற்றை மகிழ்விப்பதைவிட 'குண்டலினி' சக்தி மூலம் பரப்பிரும்மத்தை அடையலாம் என்று நம்புகிறவர்.

திவான் தாடி மீசை எல்லாவற்றையும் மழித்துவிட்டு, பளிச்சென்று 'தக்காளிப் பழம் போல் சிவப்பாக இருப்பார். காதுகளில் மட்டும் மலைக்குகையிலிருந்து வெளிப்பட்டு விழும் நீர் வீழ்ச்சியைப் போல வெள்ளி முடிக்கற்றை கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். ஆனால் சுவாமி நீண்ட ஜடாமுடி வைத்திருப்பவர். இளம் கருப்பு நிறத்தில் அவர் மார்பு வரை நீண்டிருக்கும் தாடி, அவர் போர்த்தியிருக்கும் வெள்ளை 'சாடின்' துணி மீது இப்படியும் அப்படியும் காற்றில் அலையும் போது பாற்கடலில் வாசுகிப் பாம்பு ஊர்ந்து செல்வதுபோல இருக்கும்.

திவான் அறுபதைக் கடந்துவிட்டவர். சுவாமி இன்னும் முப்பதையே எட்டிப் பிடிக்காதவர். மொத்தத்தில் ஒரு பூசணிக்காயும், முருங்கைக்காயும் அருகருகே வைத்திருப்பது போல இருந்தது, அவர்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்திருந்தது.

துருவங்கள் தான் வேறு! ஆனால் இருவருமே வசுந்திராவுக்கு இரண்டு கண்கள். போட்டி போட்டுக் கொண்டு அவள் குடும்பத்தின் மீது விசுவாசத்தை பொழிந்தனர்.

வசுந்திராதான் மீண்டும் மௌனத்தைக் கலைத்தாள்.

ரஞ்சன்கிட்டே போன் பேசிவிட்டு என் பெட்ரூமுக்குப் போனேன்... அப்புறம்-

நடந்ததைச் சொல்ல விருப்பம் இல்லாதவள் போல், கண்களை மூடி, ஒரு சிறு இடைவெளி விட்டாள்.

ரஞ்சன்சிங் சக்கரவர்த்திதான் ஆனந்தபூர் சமஸ்தானத்தின் வருங்கால ராஜா. ஆனால் அவனுக்கு அதில் எல்லாம் அவ்வளவு நாட்டம் கிடையாது. ஃப்ராங்பர்ட்டில் தன் குடும்பத்துடன் வசிக்கிறான்.

வசுந்திரா மீண்டும் தொடரும் வரை சுவாமியும். திவானும் ஒன்றும் பேசவில்லை.

ரஞ்சனுக்கு குட் நைட் சொல்லிவிட்டு, ரூமுக்குப் போனேன். கொஞ்ச நேரம் யோகா பண்ணிட்டு விளக்கை அணைச்சுட்டுப் படுத்துட்டேன். அரை மணி நேரம்தான் தூங்கியிருப்பேன். திடீர்னு தூக்கிவாரிப் போட்டது. அறையில நைட் லேம்ப் எரியலை. ஃபேன் ஓடற சத்தமும் கேட்கலை. ரூம் நிசப்தமா இருந்தது. அப்போ ... ஒரு கிசுகிசுத்த குரல்'ல யாரோ 'வசுந்திரா... வசுந்திரா'னு சொல்லி கூப்பிடற மாதிரி இருந்தது. என் தலைப்புறம் யாரோ நிக்கிற மாதிரி ஒரு உணர்ச்சி! யாரு.... யாரு'னு கேட்டேன்! பதில் இல்லை! ஆனா யாரோ நடந்து போகிற மாதிரி காலடி ஓசை மட்டும் கேட்டுது.... 'யார் அங்கே'னு திருப்பிக் கேட்டேன்.

திடீர்'னு ஒரு குட்டி வெளிச்சம்! பென்சில் டார்ச்சை ஆட்டிண்டு யாரோ என் பக்கத்துல வந்தாங்க...

பயத்துல என் நாக்கு உலர்ந்து போச்சு! யார் நீனு தைரியத்தை வரவழைச்சுட்டு கேட்டேன். அப்ப என் முகத்துகிட்டே ஒரு பெண்ணோட முகம். அவ வயசானவனு முகத்தைப் பார்த்ததும் தெரிஞ்சுண்டேன். அவ நெத்தியிலே ஒரு பெரிய குங்குமப் பொட்டு! என்னைக் குரோதத்தோட பார்த்தவ இடி இடியினு சிரிக்க ஆரம்பிச்சா! உன்னைக் கொன்னுடுவேன்! உன் குடும்பத்தை அழிச்சிடுவேன்'னு என்னை மிரட்டினா! திரும்பி சிரிச்சுக்கிட்டே நடந்து போய் ரூம் கதவைத் திறந்துட்டு வெளியே போயிட்டா. நான் அப்படியே கை கால் எல்லாம் கட்டிப்போட்டிருந்த மாதிரி கிடந்தேன்.

அப்புறம் மெதுவா எழுந்து போய் ரூம் ரூமா அவளைத் தேடினேன். அவளைக் காணோம். அவ யாரு... எங்கிருந்து வந்தா...? எதுக்கு என்னை பயமுறுத்தினா... எதுவுமே புரியலை. வசுந்திராவின் உடல் நடுங்கியது.

திவானும், சுவாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். திவானுக்கு நிச்சயம் அவள் ஏதோ கனவு கண்டு பிதற்றுகிறாள் என்று தோன்றியது. இருப்பினும், அதைச் சொல்லி வசுந்திராவின் கோபத்தை மேலும் கிளற விருப்பப்படவில்லை.

நீங்களே எதையாவது சொல்லி அவளை சமாதானப்படுத்துங்கள் என்ற ரீதியில் சுவாமியைப் பார்த்தார்.

வசுஜி! நேத்து டின்னருக்கு என்ன சாப்பிட்டீங்க? - சுவாமி கேட்க, அவள் உடனே அவர் கேள்வியில் தொனித்த அர்த்தத்தை சூட்சுமமாகப் புரிந்து கொண்டாள்.

Enjoying the preview?
Page 1 of 1