Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karna Parambarai
Karna Parambarai
Karna Parambarai
Ebook546 pages5 hours

Karna Parambarai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

'பஞ்ச நாராயண கோட்டம்' நாவலைப் படித்து விட்டு என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், கோடை விடுமுறையில் அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லப் போவதாகச் சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே பஞ்ச நாராயண கோட்டத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை என்னால் உணர முடிகிறது. சங்கதாராவையும் பஞ்சநாராயண கோட்டத்தையும் மீண்டும் மீண்டும் படித்து வருகிறோம் என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். உங்களது அமோக ஆதரவுக்கு நன்றி.

புக்ஸ் இந்தியா - வெளியிட்டுள்ள ‘தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை,' என்கிற களஞ்சியத்தில், முக்கிய சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை குறிப்பு தந்துள்ளனர். கல்கி, புதுமை பித்தன், அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிவசங்கரி வரிசையில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரமித்துப் போய் நின்றுவிட்டேன். என் தாய் உள்பட பெரிய எழுத்தாளர்கள் பலர் இருக்கும் போது, என் பெயர் எதனால் குறிப்பிடப்பட்டது என்று குழம்பினேன். பிறகு என் வாழ்க்கைக் குறிப்பில், நான்கே நாவல்கள் எழுதி, தனக்கென்று ஒரு தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டிருப்பவர் என்று என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. எனது இந்தப் பெருமைக்கு முழு காரணம் இருவர்.

முதலில் எனது தாய் கமலா சடகோபன். எனது தமிழ் ஆர்வத்திற்கு அவரே வித்திட்டவர்.

ஐந்து நாவல்களை எழுதி முடித்துவிட்ட நிலையில், எனக்கு வாசகர்களின் பாராட்டுகள் பயத்தையே தருகின்றன.

"என்ன சார்...! வழக்கமான... உங்க நாவல் போல இது இல்லையே... ஜவ்வா இழுக்குதே...” என்கிற ஒரு சொல்லை என்றாவது கேட்டுவிடப் போகிறோமே என்று, ஒவ்வொரு நாவல் வெளிவரும் பொழுதும், மனதினில் சிறு அச்சம். ஒரு நாவலில் ஏற்படும் டெம்போவை எல்லா நாவல்களிலும் ஏற்படுத்த முயல்வது என்பது மிகவும் கஷ்டம். இதுவரை எனது ஐந்து நாவல்களைப் படித்து முடித்த அனைவரும், கோரஸ் ஆகச் சொல்லும் ஒரே கருத்து, "கையிலே எடுத்தா... கீழே வைக்க முடியவில்லை...” என்பதுதான்.

ஒரு பெண்மணி, "இன்னைக்கு நான் சமைக்காமல் உங்கள் நாவலைப் படித்துக்கொண்டு இருந்தேன். சாப்பாட்டை வெளியில் இருந்து வரவழைத்தேன்..." என்றார். அதில் ஆழ்ந்து விடவே, விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்" என்றார், இன்னொருவர்.

இதுவரை நான் எழுதியுள்ள காலச்சக்கரம் (முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை என்று ஒரு ப்ளாக் கூறியுள்ளது), ரங்கராட்டினம், சங்கதாரா, குபேரவன காவல் மற்றும் தற்போதைய பஞ்ச நாராயண கோட்டம் வரை ஒன்றையொன்று மிஞ்சுவதாக உள்ளன என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்றே எழுதுங்கள் என்று சிலரும், இல்லை சரித்திரம் எழுதத் தான் ஆள் இல்லை, நீங்கள் சரித்திரம் எழுதுங்கள் என்று சிலரும், உங்கள் மாடர்ன் தாட்ஸ்சை (தற்காலத்துக்குத் தேவையான கற்பனைகள்) வீணாக்காதீர்கள், சமூக நாவல்களை எழுதுங்கள் என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரே ஒரு வாசகர், திருச்சி விஸ்வநாதன் என்பவர், எனது நாவல்கள் பலரால் விரும்பிப் படிக்கப்படுவதற்குக் காரணமே, நான் சமூகம், சரித்திரம், அரசியல், நகைச்சுவை, ஆன்மீகம், புதிய சிந்தனைகள் போன்றவற்றை ‘காக் டெயில்' செய்து தருவதால், அவை படிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கின்றன என்று சொன்னார். சரித்திர எழுத்தாளர் என்கிற முத்திரையைக் குத்திக் கொள்ளாமல், எல்லாவற்றைப் பற்றியும் எழுதுங்கள் என்று கூறியுள்ளார் விஸ்வநாதன்.

நான் முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். 1000 நாவல்கள் எழுதி நூலகங்களில் அடுக்கப் பட்டு அவை புழுதி படிந்து கிடப்பதைக் காட்டிலும், நான்கு புத்தகங்கள் எழுதினாலும், அவை வருங்காலத் தலைமுறையினரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எனது பத்திரிகைப் பணியில் மிகவும் பொறுப்பான பதவியை வகித்துக் கொண்டிருப்பதால், என்னால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை மட்டுமே எழுத முடிகிறது. ஆங்கில நீரையும், தமிழ்ப் பாலையும் கலந்து பருகிக் கொண்டிருக்கும் அன்னப்பறவையாக உழல்கிறேன். வெறும் பாலை மட்டுமே குடித்துக்கொண்டு, நீரை உமிழும் காலம் விரைவில் வரும்.

இதோ –

எனது அடுத்த நாவல் – ‘கர்ணபரம்பரை'

இதுவும் ஒரு வித்தியாசமான நாவல்தான். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று கூறுபவர்களை இது ஏமாற்றாது. ஆனால் அப்படிக் கூறுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இந்த நாவலைப் படிக்க உங்களுக்கு நான்கு கைகள் தேவை.

புத்தகத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு கை, பக்கங்களைப் புரட்ட மற்றொரு கை, உங்கள் இரு காதுகளையும் மூடிக்கொள்ள இரு கைகள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது நாவலைப் படித்ததும் உங்களுக்கு விளங்கும்.

நமது தமிழ் மண்ணில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இன்ன

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580132105562
Karna Parambarai

Read more from Kalachakram Narasimha

Related to Karna Parambarai

Related ebooks

Related categories

Reviews for Karna Parambarai

Rating: 4.6 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karna Parambarai - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    கர்ணபரம்பரை

    Karna Parambarai

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கரணம் தப்பினால் மரணம்

    2. பிரண்டை சொன்ன சேதி

    3. நளனை விரட்டும் சனி

    4. உயிர் வாங்கிய உபதேசம்

    5. பறவைகள் பலவிதம்

    6. சுக்ரதசை

    7. சித்தரின் சாபம்

    8. பெயரைச் சொல்லவா?

    9. குருவி தலையில் பனங்காய்

    10. கொல்லைப் பக்கம் போகாதே!

    11. ஆவணி முதல் லாவணி!

    12. கிணற்றங்கரையிலே...

    13. காணாமல் போன கலுவம்

    14. கதை முடிந்தது

    15. பஞ்சாட்சரம் பராக் பராக்!

    16. மனம் திறந்த சுமனா

    17. ஊமையின் உரை

    18. மதுரைவீரன் பெண்டாட்டி

    19. மாண்டு போன பாண்டு

    20. சாம்பார் சாம்ராஜ்யம்

    21. திடீர் திருப்பம்

    22. கதை கதையாம்... காரணமாம்!

    23. சூரியகாந்தி மறைந்தது

    24. குறுங்குடியில் கேட்ட குரல்!

    25. வளையத்துக்குள் வனதாயி!

    26. கோட்டையில் கோட்டான்

    27. யாத்திரைக்கு ஒப்பனை

    28. கொலைகாரன் போடும் புள்ளிக் கோலம்

    29. இரத்த நாளம் போடும் தாளம்

    30. சுவடு தெரியாமல் மறைந்த சுவடி

    31. செல்லி பார்த்த படம்

    32. அதிர வைத்த புதிர்வெடி

    33. பங்குனியின் பங்கு இனி...

    34. கபினி அழைக்கிறது

    35. குற்றம் புரிந்த குன்றம்

    36. மரண மசாஜ்!

    37. கும்மியடிக்கும் பொம்மி

    38. ஒரு தாயின் சபதம்

    39. வெற்றி மீது வெற்றி...

    40. பேடை சக்தி

    41. சுகந்தா சிக்கினாள்

    42. கப்பரைக்கு கல்லறை

    43. பிரம்மாஸ்திரம்

    44. எரிமலை வெடித்தது

    45. மீண்டும் கலகலப்பு

    46. அதிரடி ரூபா

    47. பாரம் இறங்கியது

    என்னுரை

    'பஞ்ச நாராயண கோட்டம்' நாவலைப் படித்து விட்டு என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், கோடை விடுமுறையில் அந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லப் போவதாகச் சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே பஞ்ச நாராயண கோட்டத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை என்னால் உணர முடிகிறது. சங்கதாராவையும் பஞ்சநாராயண கோட்டத்தையும் மீண்டும் மீண்டும் படித்து வருகிறோம் என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். உங்களது அமோக ஆதரவுக்கு நன்றி.

    புக்ஸ் இந்தியா - வெளியிட்டுள்ள ‘தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை,' என்கிற களஞ்சியத்தில், முக்கிய சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை குறிப்பு தந்துள்ளனர். கல்கி, புதுமை பித்தன், அகிலன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிவசங்கரி வரிசையில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரமித்துப் போய் நின்றுவிட்டேன். என் தாய் உள்பட பெரிய எழுத்தாளர்கள் பலர் இருக்கும் போது, என் பெயர் எதனால் குறிப்பிடப்பட்டது என்று குழம்பினேன். பிறகு என் வாழ்க்கைக் குறிப்பில், நான்கே நாவல்கள் எழுதி, தனக்கென்று ஒரு தனி வாசகர் வட்டத்தை அமைத்துக் கொண்டிருப்பவர் என்று என்னைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. எனது இந்தப் பெருமைக்கு முழு காரணம் இருவர்.

    முதலில் எனது தாய் கமலா சடகோபன். எனது தமிழ் ஆர்வத்திற்கு அவரே வித்திட்டவர்.

    ஐந்து நாவல்களை எழுதி முடித்துவிட்ட நிலையில், எனக்கு வாசகர்களின் பாராட்டுகள் பயத்தையே தருகின்றன.

    என்ன சார்...! வழக்கமான... உங்க நாவல் போல இது இல்லையே... ஜவ்வா இழுக்குதே... என்கிற ஒரு சொல்லை என்றாவது கேட்டுவிடப் போகிறோமே என்று, ஒவ்வொரு நாவல் வெளிவரும் பொழுதும், மனதினில் சிறு அச்சம். ஒரு நாவலில் ஏற்படும் டெம்போவை எல்லா நாவல்களிலும் ஏற்படுத்த முயல்வது என்பது மிகவும் கஷ்டம். இதுவரை எனது ஐந்து நாவல்களைப் படித்து முடித்த அனைவரும், கோரஸ் ஆகச் சொல்லும் ஒரே கருத்து, கையிலே எடுத்தா... கீழே வைக்க முடியவில்லை... என்பதுதான்.

    ஒரு பெண்மணி, இன்னைக்கு நான் சமைக்காமல் உங்கள் நாவலைப் படித்துக்கொண்டு இருந்தேன். சாப்பாட்டை வெளியில் இருந்து வரவழைத்தேன்... என்றார். அதில் ஆழ்ந்து விடவே, விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்" என்றார், இன்னொருவர்.

    இதுவரை நான் எழுதியுள்ள காலச்சக்கரம் (முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை என்று ஒரு ப்ளாக் கூறியுள்ளது), ரங்கராட்டினம், சங்கதாரா, குபேரவன காவல் மற்றும் தற்போதைய பஞ்ச நாராயண கோட்டம் வரை ஒன்றையொன்று மிஞ்சுவதாக உள்ளன என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்றே எழுதுங்கள் என்று சிலரும், இல்லை சரித்திரம் எழுதத் தான் ஆள் இல்லை, நீங்கள் சரித்திரம் எழுதுங்கள் என்று சிலரும், உங்கள் மாடர்ன் தாட்ஸ்சை (தற்காலத்துக்குத் தேவையான கற்பனைகள்) வீணாக்காதீர்கள், சமூக நாவல்களை எழுதுங்கள் என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரே ஒரு வாசகர், திருச்சி விஸ்வநாதன் என்பவர், எனது நாவல்கள் பலரால் விரும்பிப் படிக்கப்படுவதற்குக் காரணமே, நான் சமூகம், சரித்திரம், அரசியல், நகைச்சுவை, ஆன்மீகம், புதிய சிந்தனைகள் போன்றவற்றை ‘காக் டெயில்' செய்து தருவதால், அவை படிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கின்றன என்று சொன்னார். சரித்திர எழுத்தாளர் என்கிற முத்திரையைக் குத்திக் கொள்ளாமல், எல்லாவற்றைப் பற்றியும் எழுதுங்கள் என்று கூறியுள்ளார் விஸ்வநாதன்.

    நான் முன்பு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். 1000 நாவல்கள் எழுதி நூலகங்களில் அடுக்கப் பட்டு அவை புழுதி படிந்து கிடப்பதைக் காட்டிலும், நான்கு புத்தகங்கள் எழுதினாலும், அவை வருங்காலத் தலைமுறையினரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். எனது பத்திரிகைப் பணியில் மிகவும் பொறுப்பான பதவியை வகித்துக் கொண்டிருப்பதால், என்னால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்களை மட்டுமே எழுத முடிகிறது. ஆங்கில நீரையும், தமிழ்ப் பாலையும் கலந்து பருகிக் கொண்டிருக்கும் அன்னப்பறவையாக உழல்கிறேன். வெறும் பாலை மட்டுமே குடித்துக்கொண்டு, நீரை உமிழும் காலம் விரைவில் வரும்.

    இதோ –

    எனது அடுத்த நாவல் – ‘கர்ணபரம்பரை'

    இதுவும் ஒரு வித்தியாசமான நாவல்தான். விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று கூறுபவர்களை இது ஏமாற்றாது. ஆனால் அப்படிக் கூறுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இந்த நாவலைப் படிக்க உங்களுக்கு நான்கு கைகள் தேவை.

    புத்தகத்தைப் பிடித்துக் கொள்ள ஒரு கை, பக்கங்களைப் புரட்ட மற்றொரு கை, உங்கள் இரு காதுகளையும் மூடிக்கொள்ள இரு கைகள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது நாவலைப் படித்ததும் உங்களுக்கு விளங்கும்.

    நமது தமிழ் மண்ணில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் மனிதர்களின் கால் படாத பகுதிகளும் இருக்கின்றன. உணர்வுகளால் இந்த பிரபஞ்சத்தையே அளந்த பல பெரிய மகான்கள் இங்கே வாசம் செய்துள்ளனர். சிவனாரும் உமையவளும் திருமணம் செய்து கொண்டபோது, பாரம் தாங்காமல் பூமி சரிய, அதை சமன்படுத்த வேண்டி அகத்திய மாமுனிவர் தெற்கே அனுப்பப்படுகிறார். அவர் கால் வைத்த மண் தமிழ் மண். அவரையே பிரமிக்க வைத்த பல விஷயங்கள், அவர் கால் பதித்த வேளையில் நமது தமிழ் மண்ணில் இருந்தன. அவை இப்போதும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எப்போது அந்த இரகசியங்கள் வெளியிடப்படுகின்றதோ, அப்போது அவற்றால் பல ஆபத்துகள் உண்டாகும். செந்தீ, புவி, கால், நீர், விண் என்கிற பஞ்ச பூதங்களையும் சுரண்டி விற்கும் இன்றைய அரசியல்வாதிகள், இந்த இரகசியங்களையும் துஷ்பிரயோகம் செய்தோ அல்லது, நமது எதிரிகளுக்கு விற்றோ பணம் பண்ணக்கூடும் என்பதாலேயே, சில இரகசியங்களை சித்தர்கள் மனிதர்களின் கைக்கு எட்டாவண்ணம் மறைத்து வைத்திருக்கின்றனர்.

    அப்படி ஒரு இரகசியம் தான் களவாடப்படுகிறது. அந்த இரகசியத்தை மீட்பதற்கு நடக்கும் போராட்டம் தான், கர்ணபரம்பரை. இந்தக் கதையின் நாயகி, வயது முதிர்ந்த, கண்பார்வை இல்லாத ஒரு பெண் என்பதே ஒரு வியப்பை ஏற்படுத்தும் விஷயம். இந்த நாவலைப் படித்து முடித்தபின், இப்படியும் கூட நடக்குமா? என்று எனக்கு ஃபோன் செய்பவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன்.

    இதுபோல் அல்ல, இதைவிட இன்னும் பல பெரிய மற்றும் அற்புதமான விஷயங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கின்றன. இரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் அந்த மேன்மையான விஷயங்கள், இந்த பிரபஞ்சத்தையே கட்டிப்போட வைக்கும் ஆற்றல் உடையவை. அந்த இரகசியங்கள் மர்மங்களாக இருக்கும் வரை அனைவருக்குமே நல்லது. எப்போது அவற்றை நாம் கையாளுகின்றோமோ, அப்போது நமது அழிவு நிச்சயம்.

    பீடிகையை இத்துடன் நிறுத்தி விடுகிறேன். நீங்கள் கர்ணபரம்பரையைப் படிக்கத் துவங்கலாம்.

    இந்த நாவலுக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர், எனது பாட்டி பொப்பிலி கமலா தான். அவருக்கு கண்பார்வை கிடையாது. இருப்பினும், சென்னை வாசத்தை விரும்பாமல், காஞ்சிபுரத்தில் தனது வீட்டில் தனியாக வாழ்ந்தவர். அவரது தந்தையார் பொப்பிலி சமஸ்தானத்தில் ராஜ குருவாக பதவி வகித்தவர். அவர் பல அற்புத விஷயங்களை எனது பாட்டியிடம் தெரிவித்து இருக்கிறார். என் பாட்டி அவற்றை எனது மனதில் விதைக்க, அந்த விதைகள் தான் தற்போது எனது நாவல் மரங்களாக உங்கள் முன் நிற்கின்றன. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வீட்டில் பல அரிய சுவடிகள் கிடைத்தன. அவற்றைப் படித்த பலன் தான் இன்று உங்கள் முன் ‘காலச்சக்கரம்' நரசிம்மாவாக உலவுகிறேன்.

    அன்புடன்,

    'காலச்சக்கரம்' நரசிம்மா

    கைபேசி: 9841761552

    மின்: tanthehindu@gmail.com

    *****

    1. கரணம் தப்பினால் மரணம்

    கரணம் தப்பினால் மரணம்!

    இந்தப் பழமொழியைப் பற்றி அனைவருமே தெரிந்து கொண்டிருப்பீர்கள்! இதன் உட்பொருள் மட்டும் அநேகம் பேருக்குத் தெரியாது. குட்டிக்கரணம் போன்ற மிகவும் ஆபத்தான வீரதீரச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிய வழக்கில் உள்ள ஒரு பழமொழி என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பழமொழியை முதன் முதலில் பிரயோகித்தவர், அகத்திய மாமுனிவர். இந்த எச்சரிக்கையை தன் சீடர் புலஸ்தியரிடம் விடுகிறார்! எப்போது? எதற்காக?

    அகத்தியரின் ரண சிகிச்சை நூலான ‘அகத்தியர் 12,000' உருவாகிக் கொண்டிருந்த சமயம் அது! கண்களை மூடி தனது அகக்கண்ணை நாசியின் முனையில் நிறுத்தி, மூலிகை மருத்துவத்தின் மகத்துவத்தைப் பாடல்கள் வடிவில் புலஸ்தியருக்கு உபதேசித்துக் கொண்டிருக்க, அவரும் பயபக்தியுடன் அப்பாடல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

    இன்ன உபாதைகளுக்கு இன்ன மூலிகைகளை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பாடிய அகத்தியர், தொடர்ந்து ‘பஞ்சகரணி’ - என்கிற ஐந்து மூலிகை இரத்தினங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார்:

    ம்ருத சஞ்சீவ கரணி:- இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது!

    சந்தான கரணி:- துண்டிக்கப்பட்ட கை கால் உறுப்புகளை மறுபடியும் உடலுடன் இணைக்க வல்லது.

    விசல்ய கரணி:- உடலின் உட்புறத்தை சுத்தம் செய்ய வல்லது.

    சாவர்ண கரணி:- தோல் வியாதிகளை குணம் செய்து, தீயினால் கருகிய தோலை, மீண்டும் வளரச் செய்வது.

    என்று நான்கு மூலிகை ரத்தினங்களைப் பற்றி விலாவாரியாகக் கூறிய அகத்தியர், திடீரென மௌனமாகிவிட்டார்.

    அவர் பாடிய பாடல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த புலஸ்தியர், வியப்புடன் அவரை நிமிர்ந்து பார்க்க, அகத்தியர் அவரை ஆழமாகப் பார்த்தார்!

    "பாடு திறனுடைய புலத்தியனே

    கேட்பாய் பஞ்சம கரணியின் தன்மை

    விந்தைமிகு மூல விதையப்பா

    சிந்தைக்கு மிக உகந்ததுவே

    கரணம் தப்பினால் மரணம் தான்!

    மகர வேரால் மட்டுமே மீட்சியாம்

    கிட்டினால் உலகுன் உள்ளங் கையில்

    நாடினால் நமனுலகு நிச்சயமப்பா!

    நிலவுமிடத்தில் கருங்கோட்டான் கூவிடுமே!

    பாடுகின்ற இச்சித்தன் கூற்று

    பரிபாசையறியாத பாவியோர்க் கில்லை!

    வஞ்சக தீயோர்க்கின்னூல் ஈயாதே!

    பாவியாவாய், அவர்கட்கு ஈந்தால்!

    மூர்க்கமுள்ள வெகுமூடர் கலியிலுண்டு

    அவர்தமால் மானுடவர்க்கம் அழிவை நாடும்

    சித்தருக்கே இவ்வுபதேசம் சொன்னேன்!

    மூலிகை ஞானியருக்கே இந்நூலுரைத்தேன்!

    மட்டற்ற ஆய்குருவுக்கு தொண்டு பண்ணி,

    கற்றோம் என்றறிந்த மானிடர்க்கும்

    தொண்டுள்ளத்தோர்க்கும் ஈயலாகும்!

    மற்றுளோர்க்கு இரகசியந் தன்னை ஈந்தால்

    மாண்டிடுவாய், மகத்தான சாபம் எய்தே!"

    என்று அகத்தியர் எச்சரிக்க, புலஸ்தியர் பயபக்தியுடன் சுவடிகளையும், எழுத்தாணியையும் கீழே வைத்தார்.

    அபூர்வ கரணியைப் பற்றி புலஸ்தியரிடம் எச்சரிக்கை செய்த பின்னர், அதன் இரகசியத்தை உபதேசிக்கத் தொடங்கினார்.

    அகத்தியர் கூறுவதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார், புலஸ்தியர்.

    அகத்தியர் பாடலின் பொருள்:

    "கவிதை புனையும் திறனுடைய புலஸ்தியனே! ஐந்தாவது கரணியான அபூர்வ கரணியின் தன்மையைப் பற்றிக் கேள்! விசித்திரமான மூலிகையான அபூர்வகரணி, மனிதரின் சிந்தனையாற்றலை அதிகப்படுத்தக் கூடியது. ஆனால், இதை பறிப்பதற்குச் சென்றால் மரணம் நிச்சயம்! இந்த மூலிகை கிடைத்தால் ஒருவன் உலகையே வெல்லலாம்! இந்த மூலிகை இருக்கும் இடத்தில் கருங்கோட்டான் சுற்றி வரும்! காரணம், அதற்கு பிரியமான உணவு இந்த மூலிகை!

    நான் கூறப்போகும் அபூர்வகரணி இரகசியம் மூலிகை தன்மைகளைப் பற்றி அறியாத தீயவர்களுக்குத் தெரியவரக் கூடாது! அவர்களுக்கு இதன் இரகசியத்தைக் கூறுபவர்கள் பாவியாவார்கள்."

    ஆகவே, இந்த அபூர்வகரணி இரகசியத்தைப் போற்றி பாதுகாப்பது அவசியம்! கலியின் பிடியில் உள்ள இவ்வுலகில் அநியாயங்கள் தலைவிரித்து ஆடுவதால், அவர்கள் கையில் இந்த இரகசியம் சிக்கினால், மனித வர்க்கமே அழிந்து போகும்! நான் சொல்லும் இரகசியம் சித்தர்களை மட்டுமே சேரவேண்டும்! குரு ஒருவரை நாடி அவருக்கு சேவை புரிந்து, மூலிகை வைத்தியத்தை அறிபவருக்கே, இந்த இரகசியம் உரைக்கப்பட வேண்டும்! மற்றவர்களுக்கு இதைத் தருபவன், மரணத்தைத் தழுவுவான்! என்பது இந்தப் பாட்டின் பொருள்.

    அபூர்வ ஆற்றலைக் கொண்ட இக்கரணம் செவி மூலமாகவே வைத்தியர்களிடையே சென்று சேர வேண்டும்! இந்த கரணியை, கர்ணத்தின் (காதுகள்) மூலமாக, ஓராண் வழியாகப் பாதுகாக்கும் கர்ண பரம்பரை ஒன்றை உருவாக்கு...!

    என்று உத்தரவிட்டபின், அகத்தியர் தொடர்ந்து அபூர்வகரணி இரகசியத்தை புலஸ்தியருக்கு உபதேசித்தார்.

    தனது ஆசான் கூறிய இரகசியத்தைக் கேட்டதும், புலஸ்தியரின் முகம் வியப்பால் விரிந்தது! அந்த மூலிகையின் ஆற்றல் குறித்து அவர் கூறிய தகவல்களைக் கேட்டதும் புல்லரித்துப் போன புலஸ்தியரின் புருவங்கள் பிரமிப்பால் உயர்ந்தன.

    இறுதியாக -

    அபூர்வகரணி மூலிகையால் மனித சமுதாயத்திற்கு எத்தகைய ஆபத்துகள் எல்லாம் விளையக் கூடும் என்று அகஸ்தியர் குறிப்பிட்டவுடன், பதைபதைத்துப் போன புலஸ்தியர், தன் இரு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டார்.

    அகத்தியர் 12,000 - நூலைத் தொகுத்த புலஸ்தியர், அபூர்வகரணி இரகசியத்தை மட்டும் மனதினுள் தேக்கி வைத்துக் கொண்டார்!

    காலம் கனிந்தது -

    நம்பகமான ஒருவரிடம் அபூர்வகரணி இரகசியத்தைக் கூறிவிட புலஸ்தியர் தீர்மானித்தார்...

    நீண்ட யோசனைக்குப் பிறகு, திருக்குறுங்குடி அருகே உள்ள சப்தமாதா மலையில் தவம் செய்து வந்த சப்த மாதா பிள்ளானிடம் அந்த இரகசியத்தை உபதேசித்தார். சப்தமாதா பிள்ளான், தன் சீடரான ஜபமாலை சித்தருக்கு அபூர்வகரணி இரகசியத்தைத் தந்தார்! அவர் தன் சீடரான உரகபூஷண சித்தரிடம் மூலிகை இரகசியத்தைச் சொன்னார்.

    இப்படியாக அபூர்வகரணி இரகசியம் ஓராண்வழி உபதேசமாகவே பரம்பரையாகத் தொடர்ந்தது!

    கடைசியாக -

    இந்த இரகசியத்தை அறிந்திருந்த தொன்னைக்காது சித்தர், தனது சீடரான துளசி ஐயாவிடம் அதனை உபதேசித்துவிட்டு, பல வருடங்களுக்கு முன்பாக யோக நிலைக்குச் சென்றிருந்தார்.

    அபூர்வகரணி இரகசியம் இப்போது துளசி ஐயாவின் சிந்தையில் பத்திரமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அபூர்வகரணத்தின் இரகசியம் வெளிப்பட்டால், அழிவு நிச்சயம் என்பதைக் குறிக்கத்தான், 'கரணம் தப்பினால் மரணம்!' என்கிற எச்சரிக்கையை அகத்தியர் விடுத்தார்.

    இனி –

    *****

    2. பிரண்டை சொன்ன சேதி

    திருக்குறுங்குடி கிராமம் -

    தன் வீட்டு சமையலறையில் தட்டுத் தடுமாறிச் சமைத்துக் கொண்டிருந்தாள், வனதாயி! கண்கள் தான் மனித உடலின் சன்னல்கள் என்று கூறப்படுவது உண்மையானால், அவளது இரண்டு சன்னல்களையும் நிரந்தரமாக மூடி, அவற்றின் மீது ‘அந்தகம்’ என்னும் சிமெண்ட் கலவையினால் பூசி மெழுகியிருந்தான், இறைவன்! பிறவிக் குருடியல்ல! திடீரென தாக்கிய வைசூரி நோய்க்குத் தன் பார்வையை பலியாகத் தந்திருந்தாள்.

    கண்பார்வையை இழந்து விட்டதால் அவளுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. தவமிருந்து பெற்றிருந்த ஒரே பையன், நம்பிராஜன், நன்றாகப் படித்து, 'நளபவன்' ஹோட்டலதிபர் சந்திர சேகரின் மானேஜராக அமர்ந்து அவரது பிரியத்தைச் சம்பாதித்து, அவரது இரண்டாவது மருமகனாக பதவி உயர்வு பெற்று, பட்டணத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக ராஜபோகத்தை அனுபவித்து வருகிறான்.

    துளசி ஐயாவிடம் மூலிகை வைத்தியம் கற்ற வனதாயியின் கணவன் நல்லம்ம செட்டியாரும், அவளது கண்ணுக்குக் கண்ணாக விளங்கி, வழிகாட்டியாக கவனித்து வருகிறார் என்கிற போது, அவளுக்கு என்ன குறைதான் இருக்க முடியும்?

    வனதாயி தன் கைவிரல்களை அடுப்புக்கு அருகே கொண்டு சென்றாள். குமட்டி அடுப்பு பற்றிக் கொண்டதா என்பதை தொட்டுப் பார்த்து, கையைச் சுட்டுக்கொண்ட பிறகே அடுப்பில் உலையை ஏற்றுவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.

    தன் கை சுட்டுவிடப் போகிறதே என்கிற எச்சரிக்கை உணர்வு இல்லாமல், ஏதோ கரண்டி ஒன்றை அடுப்பில் நீட்டுவது போல் காட்டி, அடுப்பு எரியத் தொடங்கி விட்டது என்பதைப் புரிந்து கொண்டு, களைந்து வைத்திருந்த அரிசியுடன் கூடிய வெண்கலப்பானையை அதன் மீது ஏற்றினாள்.

    நாளை சித்ரா பெளர்ணமி!

    நல்லம்ம செட்டியாரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். துளசி ஐயா அவருக்கு அபூர்வகரணி இரகசியத்தை உபதேசிக்கப் போகும் நாள்! சப்தமாதா கோவில் மற்றும் அதன் மலையில் தோன்றும் மூலிகை இரத்தினங்களுக்கு, துளசி ஐயாவின் வைத்தியசாலைக்கு, அவரது குடிலுக்கு பொறுப்பாளராக நல்லம்மர் பதவியேற்கப் போகும் நாள்!

    வனதாயி கையிலிருந்த அகப்பையின் பிடியை சட்டியில் இறக்கி தான் ஊற்றிய தண்ணீரின் அளவு போதுமானதாக இருக்கிறதா என்று தடவிப் பார்த்தாள்! அகப்பையின் பிடியில் ஈரப்பதம் முக்கால்வாசி வரை இருக்க, ‘அளவு போதும்' என்று மனதிற்குள் கூறியபடி, கொல்லைப்புறமாகச் சென்றாள்.

    கொல்லைப்புறக் கதவைத் திறந்ததும் சில்லென்ற காற்று உடலைத் தழுவியது. சரியாக பக்கத்து வீட்டு நாமகிரி மாமியின் குரல் ஒலித்தது.

    என்னடி இது வனதாயி? ஆச்சரியமா இருக்கே! சாயரட்சைல கொல்லைப்பக்கக் கதவைத் திறக்கவே மாட்டியே! இன்னைக்கு என்ன வந்தது...?

    நாமகிரி தன்னிடம் தான் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொள்வதற்கே வனதாயிக்கு சிறிது நேரம் பிடித்தது.

    என்கிட்டேயா பேசறீங்க மாமி...

    ஆமா! இந்நேரத்துல கொல்லைப்பக்கம் என்ன பண்ணறே? -- மாமி மறுநாள் பூஜைக்காக, பவழ மல்லியை ஒவ்வொன்றாகப் பறித்தபடி, வனதாயியைத் திரும்பிப் பார்த்தாள்.

    வீட்டுக்கு விருந்தாளி வர்றாங்க மாமி! ராத்திரி சாப்பாடு நம்மூட்லதான்! அவங்களுக்கு கீரை மசிச்சு வக்கலாமுனுதான் கீரை பறிக்க வந்திருக்கேன்... வனதாயி சொன்னாள்.

    சூரியன் அஸ்தமிச்சுடுத்தே வனதாயி! இனிமேலா கீரை பறிக்கப் போறே?- நாமகிரி பூக்கூடையுடன் வேலி ஓரமாக வந்து நின்றாள்.

    ‘சூரியன் மறைந்த பிறகு கீரை பறிக்கக்கூடாது' என்கிற சாஸ்திரத்தை மாமி நினைவுப்படுத்த, வனதாயி திகைத்தாள்.

    பொழுது சாய்ஞ்சு போச்சா? வேலை மும்முரத்துல கீரை பறிக்க மறந்துட்டேன்! இப்ப என்ன செய்யறது மாமி? வீட்டுல காய் எதுவும் இல்லையே! - வனதாயி குழம்பினாள்.

    இதுக்கு ஏண்டி மண்டையப் போட்டு உடைச்சுக்கறே! எங்காத்துலதான் பிரண்டை கொட்டி கிடக்கிறதே! ரெண்டு கட்டு தரேன்! பேசாம துவையல் அரைச்சுடு! நாமகிரி யோசனை கூற, வனதாயி தயக்கத்துடன் நின்றாள்.

    விருந்தாளிங்களுக்கு பிரண்டை துவையல் செஞ்சா... தப்பா நினைக்க மாட்டாங்களா? நீங்களே உங்க வூட்டுல, திதி காரியம் வர்றப்பதானே பிரண்டை துவையல் செய்வீங்க? - வனதாயி சந்தேகத்துடன் வினவினாள்.

    மூலிகை வைத்தியரோட பெண்டாட்டியா இருந்துண்டு இப்படிக் கேட்கறியே! போய்... உன் செட்டியாரைக் கேளு! அவரே சொல்லுவார்... பிரண்டையோட பெருமையை! வரப்போற விருந்தாளி யாரு? நாமகிரி கேட்டாள்.

    செட்டியாரோட சிநேகிதங்க, மாமி! அவங்களும் மூலிகை வைத்தியருங்கதான்! - வனதாயி சொல்ல, மாமி சிரித்தாள்.

    பின்னே என்னடி! பேஷா பண்ணலாம்! எங்காத்துக்கு யாராவது விருந்தாளி சாப்பிட வர்றதா இருந்தா, என் மாமியார் முதலுல பிரண்டை துவையலை அரைச்சுடுவா! நான் கூட விருந்தாளியை அவமானப் படுத்தத்தான் அப்படிச் செய்யறான்னு முதலுல நினைச்சேன் அப்புறம்தான் என் மாமியார் இரகசியத்தை என்கிட்டே சொன்னா...!

    பிரண்டை மனசுல கெட்ட எண்ணத்தோட ஆத்துக்கு வர்றவாளை அடையாளம் காட்டிக் கொடுத்துடுமாம்! அண்டி வாற மனுஷா நல்ல எண்ணத்தோட இல்லைனா பிரண்டை அவா உடம்புல தங்கவே தங்காதாம்! உடனே வாந்தி எடுத்துடுவா! பிறரை அண்ட விடலாமா கூடாதானு நமக்கு எடுத்துச் சொல்றதாலேயே அந்த மூலிகைக்கு பிரண்டைனு பெயர் வந்துதாம்! தெவசத்துக்கு சாப்பிட வர்ற பிராமணா, சுத்தமான மனசோட இருக்கணும்! இறந்து போன ஆத்மாவின் சார்பா அவா சாப்பிட வந்திருக்கறதாலே மனசையும், உடம்பையும் சுத்தமா வச்சுக்கணும்! அவ - மனசுல கெட்ட எண்ணம் எதுவும் இல்லையானு கண்டுபிடிக்கத் தான் பிரண்டை துவையலை செஞ்சு அவளுக்கு போடுவாளாம்...! - விளக்கியபடி, தான் ஏற்கெனவே பறித்து வைத்திருந்த பிரண்டையில் இரண்டு கட்டுகளை எடுத்து வனதாயியிடம் நீட்டினாள், நாமகிரி.

    பிரண்டையில் இவ்வளவு சமாச்சாரம் இருக்கா...? வியப்புடன் கேட்டபடி, வனதாயி சமையலறையை நோக்கி நடந்தாள்.

    குமட்டி அடுப்பில் கரித்துண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு, அடுப்பு நன்றாகப் பற்றிக் கொண்டு விட்டதை உணர்ந்தாள்! வெண்கல சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த சாதத்திலிருந்து, அகப்பையின் மூலம் சிறிது எடுத்துப் பதம் பார்த்தாள்.

    இவள் பிரண்டையை அரிவதற்குள் சாதம் தயாராகி விடும்! அரிவாள்மணையில், கழுவிய பிரண்டைகளைச் சிறிய துண்டங்களாக அரிந்தவள், சாதம் தயாரானதும் உலையை அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, பிரண்டை துண்டங்களை வேக வைத்தாள்.

    வேக வைத்த துண்டங்களோடு, புளி, உளுத்தம் பருப்பு, எள்ளு, மிளகாய், தேங்காய், உப்பு ஆகியவற்றை அம்மியில் வைத்து, துவையலரைத்தாள். துவையல் விழுதை ஒரு கிண்ணத்தில் வழித்தெடுத்தவள், கைகளைக் கழுவிக் கொண்டு, பால் பாயசம் தயாரிக்கும் வேலையில் இறங்கினாள்.

    நல்லம்மர் துளசி ஐயாவிடம் ‘அபூர்வகரணி' இரகசியத்தை உபதேசம் பெறப் போகிறார் என்பதைக் கேள்விப் பட்டதுமே, மூலிகை வைத்தியர்களிடையே பெரும் பரபரப்பு. அவரை பாராட்டுவதற்காகப் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். நல்லம்மரின் சிநேகிதரான இலுப்பைப்பூ வைத்தியர் தனது நண்பர்கள் சிலருடன், அவருக்கு வாழ்த்துச் சொல்ல வரப்போவதாகச் செய்தி அனுப்பியிருந்தார்.

    இரவு சாப்பாட்டை இவர்கள் வீட்டிலேயே முடித்துக் கொள்ளும்படி நல்லம்மரும் சொல்லிவிடவே, வருபவர்களுக்கு பிரண்டை துவையலும், தயிர் சாதமும், பால் பாயசமும் போதும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள் வனதாயி! பொதுவாக மூலிகை வைத்தியர்கள் இரவில் அதிகம் சாப்பிட மாட்டார்கள்.

    உறியில் ஊசலாடிக் கொண்டிருந்த பால் சொம்பை எடுப்பதற்காக மூலையை நோக்கி நடக்க, சரியாக வனதாயியின் நெற்றியை உறி பதம் பார்த்தது.

    அம்மாடி! - வலித்த தன் நெற்றியை தேய்த்துக் கொண்டபடி, பால் சொம்பை கையில் எடுத்தாள்.

    உள்ளங்கையினால் நெற்றியை தேய்த்தபோது, அவளுடைய அகன்ற குங்குமப் பொட்டு கலைந்து போனதை அவள் உணரவில்லை.

    அதே சமயம் –

    வாசலில் பரபரப்பு! நல்லம்மரின் சிநேகிதர்கள் வந்து விட்டார்கள்.

    செட்டியாரே! வாழ்த்துகள்! கும்பமுனிவர் சொன்ன இரகசியத்தை உபதேசமா பெறப் போறீங்க! எவ்வளவு பெரிய பாக்கியத்தை செஞ்சிருக்கீங்க!

    இலுப்பைப்பூ வைத்தியர் என்கிற சோமநாத பண்டரை, தான் கையோடு கொண்டு வந்திருந்த 'நம சிவாய' சால்வையை செட்டியார் கழுத்தில் அணிவித்தார்.

    மற்றொருவர் தான் கையோடு கொண்டு வந்திருந்த சம்பங்கி மாலையைச் செட்டியாரின் கழுத்தில் போட்டார். இன்னொருவரோ, தன் கையிலிருந்த வெள்ளிமணி மாலையைச் செட்டியாருக்கு அணிவித்தார்.

    செட்டியாரே! கேதாரத்திலிருந்து தருவிக்கப்பட்ட விசேஷ மணிமாலை இது! இதோ... பாருங்கோ! நுனியில் எவ்வளவு பெரிய ருத்திராட்சம்! இதைப் போட்டுக் கிட்டாலே கீர்த்திதான்! நீங்க வேணுமினா பாருங்க! உபதேசம் வாங்கின பெறகு, நீங்க சித்தராவே மாறிடுவீங்க...!

    நல்லம்ம செட்டியார் நெகிழ்ச்சியுடன் மணி மாலையை ஏற்றார்!

    வந்திருந்த நால்வரில் ஒருவர் ஒன்றும் பேசாமல், செட்டியாரின் காலில் விழுந்து வணங்கினார்! தன்னால் பேச முடியாது என்று கைஜாடை காட்டினார்!

    செட்டியாரே! - இலுப்பைப்பூ வைத்தியர் மற்றவர்களை அறிமுகப்படுத்தினார்!

    இவர் பெயர் புஷ்பமலை! சென்னையில் இருந்து வந்திருக்காரு! இவரு இராமலிங்கம். ஊரு திருவண்ணாமலை! பேச முடியாத இவரு மதுரைலேர்ந்து வந்திருக்காரு! அவரு பெயரு பாண்டுரங்கனாம்! டான்ஸ் ஆடி இடுப்பில் கைவச்சு சொன்னாரு... இலுப்பைப்பூ சிரித்தார்.

    எல்லோருமே நீங்க உபதேசம் வாங்கப் போறீங்கனு கேள்விப்பட்டு, உங்களை கௌரவிக்கணும்னு வந்திருக்காங்க! இலுப்பைப்பூ கூறி முடிக்க, செட்டியார் உணர்ச்சிவசப்பட்டார்.

    உங்க பாராட்டு வார்த்தையெல்லாம் கேட்க ஆனந்தமாயிருக்கு... எனக்கு இந்த பாக்கியம் கிடைச்சதுக்கு, என் குரு துளசி ஐயாதான் காரணம்! அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. அபூர்வகரணி இரகசியத்தை என்கிட்டே சொல்லப் போறார்...னா, என்மேல அவரு எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கணும்...! எவ்வளவு பெரிய பொறுப்பை என் மேல் சுமத்தியிருக்காரு! சப்தமாதா மலை மூலிகை இரகசியங்களைப் பாதுகாக்க நீங்க எல்லோரும் எனக்கு உதவணும்...

    அதுக்கென்ன சாமி! உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம்... இராமலிங்கம் கூற, ஊமை பாண்டு ரங்கன், செட்டியாரின் இரு கைகளையும் பற்றி குனிந்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

    எங்க எல்லோரையும் நீங்க சிஷ்யர்களா ஏத்துக்கணும்! புஷ்பமலையும் மற்றவர்களும் ஏகக் குரலில் கூற, சமையலறையில் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வனதாயிக்குப் பெருமை பிடிபடவில்லை.

    உண்மையிலேயே துளசி ஐயா நல்லம்ம செட்டியாரை மிகவும் கௌரவப்படுத்தி விட்டார். பிள்ளை இல்லாத இவர்களுக்குப் பிள்ளை வரம் கிடைக்கச் செய்ததோடு, இப்போது செட்டியாரையே தன் வாரிசாகவும் நியமித்து விட்டாரே!

    இந்தப் பெருமையைக் காண, பிள்ளை நம்பிராஜனும், மருமகள் சுகந்தமணியும் வரப்போவதில்லை! செட்டியார் உபதேசம் பெறப்போவதைப் பற்றி நம்பிராஜனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள்! ஆனால் பட்டணத்து ஹோட்டல் வேலையின் மும்முரத்தில், அவனுக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை போலும். தான் சித்ரா பௌர்ணமிக்கு வர இயலாது என்று சொல்லி பதில் அனுப்பிவிட்டான். அவர்களது 'நளபவன்' ஹோட்டல் கிளையை துபாயில் துவக்கும் வேலைகள் இருப்பதால், வரமுடியாதாம்.

    கூடத்தில் செட்டியாரும், மற்றவர்களும் மூலிகைகளைப் பற்றிப் பேச, அதைக் கேட்டுக்கொண்டே சமையலை ஒரு வழியாக முடித்தாள் வனதாயி.

    சமையல் தயார்!

    வனதாயி குரல் கொடுத்தாள்.

    அம்மாவுக்கு கண்பார்வை இல்லையா? அட கடவுளே...! எதுக்குமா... உங்களை சிரமப்படுத்திக்கிட்டு சமையல் செஞ்சீங்க...? - இராமலிங்கம்தான் கேட்டார்!

    இதுல என்னங்க சிரமம்! பெரிசா விருந்து ஒண்ணும் சமைக்கலை! ஏதோ... இந்த குருட்டு ஜன்மத்தால முடிஞ்சுது...! என்றபடி வெளியேறி தாழ்வாரம் பக்கமாக நகர்ந்து, முற்றத்துத் தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

    செட்டியாரே வந்திருந்தவர்களுக்கு இலையைப் போட்டு, தண்ணீரை வைத்து, உணவைப் பரிமாறினார்.

    சாதத்தைப் போட்டு, பிரண்டை துவையலை உருட்டி, சாத குவியலின் உச்சியில் வைத்து நெய்யை தாராளமாக விட்டார்.

    ஆஹா! பனிமலை உச்சியில் லிங்கத்தை வச்சு... நெய்யால அபிஷேகம் செய்யறாப்பல இருக்கு... நீங்க... பரிமாறுற அழகு! இலுப்பைப்பூ வைத்தியர் சிரித்தார்.

    பிரண்டை துவையலை சிறிது எடுத்து நாக்கில் வைத்து ருசி பார்த்தார் இராமலிங்கம்.

    இது என்ன துவையல், செட்டியாரே? - நல்லம்மரிடம் கேட்டார்.

    பிரண்டை துவையல்

    வைத்தியர்கள் சாப்பிட ஆரம்பித்தனர்.

    ஆஹா! பிரண்டை துவையல் சாதம் படுஜோர்...! இலுப்பைப்பூ சொன்னார்.

    அமிர்தமா இருக்கு! - சப்பு கொட்டியபடி சாப்பிட்டார்கள் வைத்தியர்கள்.

    என் வீட்டுல கூட பிரண்டை கொட்டி கிடக்குது... ஆனால், என் பெண்டாட்டி ஒரு நாள் கூட துவையல் செஞ்சதில்லை! இராமலிங்கம் குறைப்பட்டார்.

    வனதாயி புன்முறுவலுடன் அவர்களது பாராட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது கணீரென்று அவள் காதில் ஒலித்தது, ஒரு வெண்கலக் குரல்.

    சித்தர்களே சொல்லியிருக்காங்க! ‘பிரண்டையை உண்டால் உருண்டையை வெல்லலாம்னு!’ அதாவது... பிரண்டைய சாப்பிட்டா நீண்ட நாள், இந்த உலகத்துல வாழலாம்னு அர்த்தம்!

    இலுப்பைப்பூ வைத்தியர் சிரித்தார்.

    பிரண்டைய உண்டா ரொம்ப நாள் வாழலாம்! சரிதான்! ஆனா... அதை செத்தவங்களோட திதியில் தானே செய்யறாங்க! இருக்கச்சே செய்யாம, செத்தப்புறம் செய்யறதால், என்ன பிரயோசனம்?

    இலுப்பைப்பூ வைத்தியர் சொன்னதைக் கேட்டு, அனைவரும் சிரித்தபடி உணவை உண்டு முடித்தனர்.

    நல்லம்மர் அனைவருக்கும் சுடச்சுட பால்பாயசத்தை விநியோகித்தார். வைத்தியர்கள் திருப்தியுடன் அதைக் குடித்தனர்.

    அப்ப நாங்க கிளம்பறோம்...! இப்ப கிளம்பினாதான் பஸ் கிடைக்கும். அம்மா! போயிட்டு வர்றோம்! சமையல் ரொம்ப நல்லா இருந்தது...!

    முற்றத்தின் தூணைப் பற்றிக் கொண்டு நின்றிருந்த வனதாயியிடம் விடைபெற்றனர், வைத்தியர்கள்.

    அவர்களை நோக்கி கும்பிடு ஒன்றைப் போட்டாள், வனதாயி!

    ஒரு நிமிஷம்! - திடீரென்று ஒரு குரல் பரபரப்புடன் ஒலித்தது.

    முற்றத்தில் நின்றிருந்த தன்னைக் கடந்து யாரோ வேகமாக கொல்லைப்புறத்தை நோக்கி ஓடுவதை உணர்ந்தாள், வனதாயி. குழப்பத்துடன் காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தாள்.

    'உவ்வேக்...!’ - கொல்லையில் யாரோ வாந்தி எடுத்தார்கள்.

    என்னங்க...! என்னாச்சு...? யாரு வாயிலெடுக்கிறாங்க? - நல்லம்மரிடம் கேட்டாள்.

    நல்லம்மர் சொம்பு ஒன்றில் நீரை மொண்டு கொண்டே, அவளுக்கு பதிலளித்தார்.

    வைத்தியர் ஒருத்தர் வாந்தி எடுக்கிறாரு, வனதாயி! சிலபேருக்கு மலைச்சாரல் காத்து ஒத்துக்காது...!

    வாந்தி எடுத்த வைத்தியரை நோக்கி சொம்பு நீருடன் நடந்தார், நல்லம்மர்.

    வனதாயிக்கு சுருக்கென்றது. மௌனமாகச் சமையலறைக்குள் நுழைந்தவள், பிரண்டை துவையல் வைத்திருந்த கிண்ணத்தின் உள்ளே கைவிட்டாள்.

    வந்திருந்த விருந்தினர்கள் சாப்பிட்டது போக, கொஞ்சம் துவையலே எஞ்சியிருந்தது.

    சற்றுமுன் கொல்லையில், பக்கத்து வீட்டு நாமகிரி மாமி பிரண்டைக் கட்டுகளை கொடுக்கும் போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

    'கெட்ட எண்ணத்தோட வந்திருக்கிற விருந்தாளிங்க, வயத்துல பிரண்டை தங்காது! அவங்களை வாந்தி எடுக்க வச்சுடும்'னு சொன்னாளே!

    வைத்தியர்கள் கிளம்பிப் போன பிறகு, தானும் செட்டியாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மெதுவாக இதைப் பற்றிக் கேட்டாள்.

    ஏங்க! பிரண்டைய தின்னவங்க வாந்தியெடுத்தா... அவங்க வந்த நோக்கம் கெட்டதா இருக்கும்னு, பக்கத்து வீட்டு மாமி சொன்னாங்களே!

    யாரு... நாமகிரி மாமியா? குடாக்கு! அதெல்லாம் ஒண்ணுமில்லை! அந்த வைத்தியருக்கு பிரயாணக் களைப்பு! காலையில் தின்ன சாப்பாடே செரிக்கலை! அவ்வளவு தான்!

    சாப்பிட்டுவிட்டு இரவே சப்தமாதா மலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த செட்டியார், சட்டென்று அந்த பேச்சைக் கத்தரித்துவிட, வனதாயியினால், தான் அடுத்து கேட்க இருந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போனது.

    வாந்தி எடுத்த வைத்தியர் யார்? - என்கிற இந்தக் கேள்விக்கான பதிலை மட்டும் வனதாயி வாங்கியிருந்தால், நடக்கவிருந்த பல மரணங்களைத் தடுத்து இருக்கலாம்! பல தவறுகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்!

    வந்திருந்த வைத்தியர்கள் நல்லவர்களா இல்லை கெட்ட நோக்கம் கொண்டவர்களா என்கிற குழப்பத்துடன் தான் நல்லம்ம செட்டியாருடன், மாட்டுவண்டியில் சப்தமாதா மலைக்கு பயணம் செய்து கொண்டிருந்தாள், வனதாயி!

    *****

    3. நளனை விரட்டும் சனி

    நள பவன் -

    திருநெல்வேலியில் பெட்டிக் கடையாகத் துவங்கிய இந்தச் சிறு உணவகம், இன்று சென்னையில் 'நள பவன் செயின் ஆஃப் ஹோட்டல்ஸ்' என்கிற பெருமையுடன் விளங்குவதற்குக் காரணம், அதன் உரிமையாளரும், ஸ்தாபகருமான சிவக்கொழுந்தின் கடின உழைப்பு என்று பத்திரிகை பேட்டிகளில் அவர் மகன் சந்திரசேகர் கூறி வந்தாலும், அந்த ஹோட்டலின் கீர்த்திக்கும், பெருமைக்கும் காரணமே, அங்கு தயாரிக்கப்படும் சாம்பார் இட்லிதான்! திருப்பதி கோவில் க்யூ வரிசையைப் போன்று, ‘நளபவன்' சாம்பார் இட்லியை ருசிக்க பலர் படையெடுத்து வருவது வழக்கம். இரண்டே இரண்டு இட்லிகளுக்கு ஆர்டர் தந்துவிட்டு, குடம் குடமாகச் சாம்பாரை அருந்துவார்கள், வாடிக்கையாளர்கள்.

    'நள பவன்' ஹோட்டலின் சாம்பார் ‘ரெசிபி' இதுவரை இரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எத்தனையோ பேர் அந்த சாம்பார் தயாரிக்கும் முறையைப்

    Enjoying the preview?
    Page 1 of 1